என் மலர்
நீங்கள் தேடியது "அச்சம்"
- கடைவீதி பகுதிகளில் மக்கள் அதிக அளவில் பொருட்கள் வாங்க வருவது வழக்கம்.
- இருசக்கர வாகனத்தில் செல்வோரை விரட்டுவதால் விபத்து ஏற்படும் அபாயம்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் கடைவீதி மற்றும் தோப்புத்துறை இலந்தையடி ரஸ்தா நகர் பகுதிகள் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அதிகமாக கூடும் இடங்களாகும்.
நாள்தோறும், கடைவீதி பகுதிகளில் மக்கள் அதிக அளவில் பொருட்கள் வாங்க வருவது வழக்கம். நகரின் முக்கிய பகுதியாக காணப்படும் இந்த இடங்களில் நாய்கள் அதிக அளவில் காணப்படுகிறது. நடந்து செல்வோரை சில நாய்கள் கடித்துவிடுகிறது.
மேலும், இருசக்கர வாகனத்தில் செல்வோரை விரட்டுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
இதனால், பொதுமக்கள் தினமும் அச்சத்துடனே செல்லும் அவல நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மின்விளக்குகள் சரிவர எரியாததால் பொதுமக்கள் அச்சம்.
- மழைநீர் வடிகால் வசதி செய்து தர வேண்டும்.
சீர்காழி:
சீர்காழி வாணி விலாஸ் தொடக்கப்பள்ளியில் 14 வது வார்டு சார்பில் வார்டு குழு பகுதி சபா கூட்டம் நடைபெற்றது கவுன்சிலர் ஜெயந்தி பாபு தலைமை வைத்தார் வருவாய் ஆய்வாளர் சார்லஸ் கணக்கர் ராஜகணேஷ் முன்னிலை வகித்தனர்
கூட்டத்தில் சீர்காழி நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார் பின்பு பொதுமக்கள் வழங்கிய மனுக்களை பெற்றுக்கொண்டார் கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் 14வது வார்டில் மழை நீர் வடிகால் வசதி செய்து தர வேண்டும்.
மின்விளக்குகள் சரிவர எரியாததால் இருளில் மது பிரியர்கள் மது குடித்து வருவதால் அந்த வழியாக பொதுமக்கள் அச்சத்துடன் செல்கின்றனர்.
எனவே அனைத்து மின் விளக்குகளும் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் பொதுமக்கள் சார்பில் வைக்கப்பட்டன கூட்டத்தில் 14 வது வார்டு பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொண்டனர்.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகரிக்கும் விபத்தால் பொதுமக்கள் அச்சத்தில் பயணம் செய்து வருகின்றனர்.
- இந்த வழித் தடத்தில் குடி போதையில் வாகனங்களை ஓட்டிச் செல்வோரின் எண்ணிக்கையும் அதி கரித்து வருகிறது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், தேவிபட்டினம், ஏர்வாடி, உத்தரகோசமங்கை, திருப்புல்லாணி, சேதுக்கரை ஆகிய இடங்களில் புண்ணிய தலங்கள் உள்ளன. இதன் காரணமாக வெளி மாநி லங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
ராமநாதபுரம் மாவட்ட நெடுஞ்சாலையில் நடக்கும் விபத்துக்களை தவிர்ப்பதற்காக தொடங்கப்பட்ட ''ஹைவே பேட்ரோல்'' போலீசார் பணியை முறையாக மேற்கொள்ளாததால் வாகனங்களின் விதி மீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த வழியாக செல்லும் லாரிகள் அசுர வேகத்தில் செல்வதால் ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த வழித் தடத்தில் குடி போதையில் வாகனங்களை ஓட்டிச் செல்வோரின் எண்ணிக்கையும் அதி கரித்து வருகிறது. செக் போஸ்ட்டில் போலீசார் இல்லாதால் விபத்துகளை ஏற்படுத்தும் டிரைவர்கள் எளிதில் தப்பிச் சென்று விடுகின்றனர்.
இரவில் நடந்து செல்ப வர்கள் மீது வாகனம் மோதுவதும், அதி வேகத்தில் செல்லும் வாகனங்கள் தலை குப்புற கவிழ்வதும், அசுர வேகத்தில் வாகனங்கள் செல்வதும், இந்த சாலையில் தொடர்கதையாக உள்ளது. நெடுஞ்சாலையில் நடக்கும் விபத்துக்களை தவிர்ப்பதற்காக தொடங்கப்பட்ட ரோந்து போலீசார் தலை காட்டுவதே கிடையாது.
இதனால் இந்த பகுதியில் உயிர்பலி எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டில் செப்டம்பர் மாதம் வரை 262 வாகன விபத்துகள் ஏற்பட்டு, அதன் மூலம் 281 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் 123 விபத்துகள் இருசக்கர வாகனங்களால் ஏற்பட்டு 126 பேர் உயிரிழந்துள்ளனர். கண் துடைப்பு நடவடிக்கையாக மாதத்திற்கு ஒரு முறை போக்குவரத்து போலீசார் ஆய்வு என்ற பெயரில் இரண்டொரு வழக்குப் பதிவு செய்து 'சாதனை' செய்கின்றனர்.
இதை தடுக்க ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
- நேற்று இரவு வழக்கம் போல கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
- கோவிலின் கேட் திறக்கப்பட்டு உட்புற கதவு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் வானூரைஅடுத்த தென்திருவலூர் கிராமத்தில் பெருமாள் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவில் ஊரின் நடுவில் இருக்கிறது. இங்கு பூசாரியாக பணிசெய்து வரும் ஸ்ரீதர் நேற்று இரவு வழக்கம் போல கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். இன்று காலை கோவிலை திறப்பதற்காக வந்தார். அப்போது கோவிலின் கேட் திறக்கப்பட்டு உட்புற கதவு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அக்கம் பக்கத்தினருடன் கோவிலுக்குள் சென்று பார்த்தார். கோவில் பிரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 2 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டி ருந்தது. உடனடியாக கோவிலின் கருவறைக்கு சென்று பார்த்த போது பெருமாளின் காலடியில் வைக்கப்பட்டிருந்த 5 கிராம் தங்க நாணயமும் திருடப்பட்டிருந்தது. துகுறித்து கிளியனூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த கிளியனூர் இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையிலான போலீசார் தென்திருவலூர் கிராமத்திற்கு விரைந்து வந்தனர். மேலும், விழுப்புரம் மாவட்ட தடயவியல் நிபுணர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் கைரேகை நிபுணர் ஸ்ரீதர் தலைமை யிலான குழுவினர் விரைந்து வந்து கோவிலு க்குள் இருக்கும் தடயங்களை ஆய்வு செய்து வருகின்றனர். ஊரின் நடுவில் இருக்கும் கோவிலில் நள்ளிரவில் கொள்ளை சம்பவம் நடந்தது அக்கிராமத்தினரிடையே அச்சத்தையும், பரபர ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
- கடந்த ஒரு வாரமாக பகல் நேரத்தில் கரடியின் நடமாட்டத்தை விவசாயிகள் பார்த்தனர்.
- கரடி ஆடு, கன்றுகளை கடித்து காயப்படுத்தியது,
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த முட்டுக்காடு, சிறுவாடி, பாக்கம் காப்புக்காடுகளில் 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு காரைக்காப்பு காட்டில் கரடிகள் இருந்தன. நாளடைவில் கரடிகள் இல்லாமல் போனது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக முட்டுக்காடு வனப்பகுதியில் கோனை ஊராட்சி சோமசமுத்திரம், கோனைபுதூர், வடகால் மற்றும் எம்.ஜி.ஆர் நகர் பகுதிகளில் பகல் நேரத்தில் கரடியின் நடமாட்டத்தை விவசாயிகள் பார்த்தனர். இந்த கரடி ஆடு, கன்றுகளை கடித்து காயப்படுத்தியது. நேற்று மாலை கோனைப்புதூர் கிராமத்தில் விவசாய நிலத்தில் கரடி உலா வந்தது.
இதைனை விவசாயிகள் வீடியோவாக பதிவு செய்து சமூக வளைதளங்களில் பதி விட்டனர். இது வைரலாக பரவியது. இது குறித்து வனத்துறை யை தொடர்பு கொண்ட போது வனச்சரகர் வெங்க டேசன் கூறியதாவது:- செஞ்சி அருகே காட்டிலிருந்து ஊருக்குள் கரடி வந்துள்ளது, இதனை பிடிப்பதற்காக கோனை புதூர் மலை அடிவாரத்தில் கூண்டு வைத்துள்ளோம். இதனை பிடிக்கும் வரை பொதுமக்கள் காட்டுப்ப குதிக்கு தனியாக செல்ல வேண்டாம் என எச்சரிக்கை செய்துள்ளோம். கூண்டில் கரடி சிக்கவில்லை எனில், அடுத்த கட்டமாக மயக்க ஊசி செலுத்தி கரடியை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பல ஆண்டுகளுக்கு பிறகு கரடி ஊருக்குள் வந்தது செஞ்சி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி யுள்ளது.
- திருப்புவனத்தில் சாலைகளில் திரியும் மாடுகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
- அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் பெரிய பேரூராட்சி ஆகும். இங்குள்ள வைகைஆற்றின் மற்றொரு கரையில் மடப்புரம் காளிஅம்மன் மற்றும் முன்னோர்கள் திதி கொடுத்து வழிபடும் புஷ்பவனேசுவரர் கோவில்கள் உள்ளன.
கோவிலுக்கு வரும் வெளியூர் பக்தர்கள் மற்றும் திருப்புவனத்தை சுற்றி உள்ள ஏராளமான கிராம மக்கள் இங்கு வந்து பொருட்கள் வாங்கி செல்கின்றனர். இங்கு எப்போதும் மக்கள் கூட்டம் இருக்கும். அடிக்கடி போக்கு வரத்து நெருக்கடியும் ஏற்படும்.
தற்போது சாலைகளிலும், பஸ்நிறுத்தம் மற்றும் மக்கள் கூட்டமாக இருக்கும் இடங்களிலும் ஏராளமான மாடுகள் சுற்றி திரிகின்றன. இதனால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இரவு-பகலாக சாலையில் சுற்றி திரியும் மாடுகள் முட்டி பலர் காயம டைந்துள்ளனர்.
சிலநேரங்களில் மாடுகளுக்கிடையே ஏற்படும் சண்டையால் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்கள் மீது முட்டி மோதி ஏராளமான வாகனங்கள் சேதமடை கின்றன.
மாடுகள் நிற்பதை அறியாத வெளியூர் பயணிகள் அவை முட்டி காயமடைந்துள்ளனர். திருப்புவனத்திற்கு பஸ்நிலையம் இல்லாததால் கோவிலுக்கு வரும் வெளியூர் பக்தர்கள் சாலைகளில் திரியும் மாடுகளால் அச்சமடை கின்றனர்.
சாலையில் திரியும் மாடுகளை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
- வடகானந்தல் பேரூராட்சிக்கு உட்பட்ட கச்சிராயபாளையத்தில்வாய்க்கால்களில் சாக்கடை நீர் தேங்கி தெருக்களில் வெளியேறுகிறது. இதனால் கொசு அதிக அளவில் உற்பத்தியாகிறது.
- இதனால்,பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா, சிக்கன் குனியா போன்ற நோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது.
கள்ளக்குறிச்சி:
சின்னசேலம் அருகே உள்ள வடகானந்தல் பேரூராட்சிக்கு உட்பட்ட கச்சிராயபாளையம் மின்சார அலுவலக வீதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இங்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட வாய்க்கால்களில் சாக்கடை நீர் தேங்கி தெருக்களில் வெளியேறுகிறது. இதனால் கொசு அதிக அளவில் உற்பத்தியாகிறது. இதன் மூலம் பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா, சிக்கன் குனியா போன்ற நோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது.
இது குறித்து பேரூராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டிகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக சாக்கடை நீரை அப்புறப்படுத்த வேண்டும். வாய்க்கால்களில் சாக்கடை நீர் தங்கு தடையின்றி செல்ல தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்
- அபிராமத்தில் சாலைகளில் விபத்து ஏற்படுத்தும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
- கால்நடைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
அபிராமம்
ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் மற்றும் பார்த்தி பனூர், கமுதி வழியாக சாயல்குடி, தூத்துக்குடி, திருச்செந்தூர் செல்லும் பிரதான சாலை உள்ளது. இந்த சாலையை நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.
இந்த சாலையில் உள்ள அச்சங்குளம், அகத்தாரிருப்பு, நத்தம், கமுதி, பசும்பொன் அபிராமம் உள்ளிட்ட பகுதிகளில் ரோட்டில் அதிக அளவில் ஆடு, மாடுகள் சுற்றி திரிகின்றன. இதனால் அடிக்கடி விபத்ததுக்கள் ஏற்படுகிறது. சாலையின் குறுக்கே மாடுகள் அமர்ந்து விடுவதாலும், போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமமடைகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், இந்த நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் 85 கி.மீ வேகத்திற்கும் மேலாக செல்லும் நிலை உள்ளது. இந்த சூழ்நிலையில் கால்நடைகள் திடீரென ரோட்டின் குறுக்கே செல்வ தால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் நிலை உள்ளது. சில நேரங்களில் உயிர் சேதமும் பொருட் சேதமும் ஏற்படுகின்றன.
எனவே முக்கிய சாலையான இப்பகுதியில் கால்நடைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றனர்.
- கரூர் மாநகர பகுதியில் அதிகரித்து வரும் தெருநாய்களால் பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்
- நிர்வாகம் கட்டுப்படுத்த கோரிக்கை வைத்துள்ளனர்
கரூர்,
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பெரும்பாலான பகுதிகளில் தற்போது எண்ணிலடங்காத வகையில் தெரு நாய்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. தொழில் நகரம் என்பதால் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கானோர் வேலைக்கு சென்று வருகின்றனர். இவ்வாறு தங்களின் குடியிருப்புகளை நோக்கி செல்லும் பொதுமக்கள் முதல், பள்ளி மாணவ, மாணவிகள் வரை தெரு நாய்களின் நடமாட்டம் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மாநகராட்சிக்குட்பட்ட சில பகுதிகளில் சம்பந்தப்பட்ட துறையினர் நாய்களை மொத்தமாக பிடித்துச் சென்று, திரும்பவும் இதே பகு திகளில் இறக்கி விட்டு செல்லும் நிகழ்வும் தாந்தோணிமலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இதற்கும் இந்த பகுதியினர் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். எனவே, ஒட்டுமொத் தமாக தெரு நாய்களின் நடமாட்டத்தையும், அதன் வளர்ச்சியையும் கட்டுப்படுத்த தேவை யான அனைத்து ஏற்பா டுகளையும் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பொதுநல ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வரு கின்றனர் என்பது குறிப் பிடத்தக்கது.
- கடந்த சில தினங்களாக இலவச அரசி ரேஷன் கடைகள் மூலமாக விநியோகிக்கப்பட்டு வருகிறது.
- குறைந்த எண்ணிக்கையிலான அரிசிகள் பளீரென வெள்ளை நிறத்திலும் இருந்தது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியில் கடந்த சில தினங்களாக இலவச அரசி ரேஷன் கடைகள் மூலமாக விநியோகிக்கப்பட்டு வருகிறது. இன்று காலை கண்டமங்கலம் அடுத்த நவமால் காப்பேர் ரேஷன் கடையில் இலவச அரிசி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.அப்போது ரேஷன் கடையில் வழங்கப்பட்ட இலவச அரிசியில் 2 வகை யான அரிசிகள் இருந்தன. பெரும்பாலான அரிசிகள் பழுப்பு நிறத்திலும், குறைந்த எண்ணிக்கையிலான அரிசிகள் பளீரென வெள்ளை நிறத்திலும் இருந்தது.
இதனால் அதிர்ச்சி யடைந்த நவமால்காப்பேர் மக்கள் இலவச அரிசியை வீட்டிற்கு எடுத்து வந்து தனித்தனியே பிரித்தனர். இதில் ஒரு கிலோவிற்கு 100 கிராம் அளவிற்கு வெள்ளி நிற அரிசி கலந்திருந்தது. இதனை தனியே பொருக்கி எடுத்த ஒரு சிலர், இதனை நீரில் ஊறவைத்தனர். அப்போது இந்த வெள்ளை நிற அரிசி உப்பலாகி நீண்டது.
இதனைக் கண்ட பொது மக்கள் இது குறித்து ரேஷன் கடை ஊழியர்களிடம் புகார் அளித்தனர். நாங்கள் என்ன செய்வோம்? அரசு அனுப்பி வைக்கும் அரிசிைய தங்களுக்கு வழங்குகிறோம் என்று கூறினர். இத்தகவல் காட்டுத் தீ போல கண்டமங்கலம் பகுதியில் பரவியது. இதையடுத்து இலவச அரிசியை வாங்கிய அனைவரும் மூட்டையை பிரித்து பார்த்தனர். அனை வருக்கும் வழங்கப்பட்ட அரிசிகளில் வெள்ளை நிற அரிசி கலந்திருந்தது. இதனை அவர்களும் தனியே பிரித்து நீரில் ஊறவைத்தனர். இதுவும் உப்பலாகி நீண்டது. இது கண்டமங்கலம் பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசால் இலவசமாக வழங்கப்படும் அரிசியில் வெள்ளை நிற அரிசி பிளாஸ்டிக் அரிசி கலந்துள்ளது என்ற தகவல் கண்டமங்கலம் பகுதி மக்களிடையே வேக மாக பரவிவருகிறது. இதை யடுத்து அங்காங்கே வசிக்கும் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி பிரிதிநிதிகளிடம் புகார் அளித்துள்ளனர். உணவு பாதுகாப்பு அதிகாரிகள் வந்து சோதனை செய்தால் மட்டுமே, இது சாப்பிடு வதற்கு உகந்ததா? அல்லது பிளாஸ்டிக் அரிசியா? என்பது தெரியவரும்.
- தெரு நாய்கள் தொல்லையால் மாணவ-மாணவிகள் அச்சப்படுகின்றனர்.
- அரசு மருத்துவமனைகளில் பொதுமக்கள் மாதத்திற்கு பெரும் அளவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான தெரு நாய்கள் சுற்றி திரிகின்றது. இதில் பல நாய்கள் வெறிபிடித்த நிலையில் இருப்பதால் பொதுமக்கள் குறிப்பாக வயதானவர்கள், குழந்தைகள் நாய் கடியால் தினமும் பாதிக்கப்படுகின்றார்கள். இந்த நாய் கடியால் கீழக்கரை மற்றும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைகளில் பொதுமக்கள் மாதத்திற்கு பெரும் அளவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தெரு நாய்களை பிடித்து அப்புறபடுத்த கோரி கீழக்கரை நகராட்சி நிர்வாகத்திற்கு அரசியல் கட்சியினர், சமூக நல அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைக்கப்பட்டும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
2 நாட்களில் மட்டும் தெருக்களில் நடந்து சென்ற 12 பேரை வெறிபிடித்த நாய்கள் பல்வேறு இடங்களில் கடித்துள்ளது. இதன் காரணமாக பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள், வயதானவர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் சாலைகளில் நடந்துசெல்ல அச்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில் கீழக்கரை நகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு தொடந்து அச்சுறுத்தலாக இருக்கும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நகராட்சி கூட்ட அரங்கில் கலந்தாய்வு கூட்டம் நடத்த உள்ளதாக கீழக் கரை நகர்மன்ற தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்த கலந்தாய்வு கூட்டம் வழக்கம் போல் கண் துடைப்பு கூட்டமாக இல்லா மல் கீழக்கரை நகரில் வெறி நாய்களை அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர். கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து வலைதளங்களில் பொதுமக்களின் கண்டனம் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
- வீட்டின் வாசலில் காரை நிறுத்திவிட்டு சென்றார். நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் கார் திடீரென தீப்பற்றியது.
- காரை யாரேனும் கொளுத்தி விட்டனரா? அல்லது காருக்குள் ஏற்பட்ட மின்கசிவால் தீப்பிடித்ததா ?
விழுப்புரம்:
விக்கிரவாண்டி போலீஸ் நிலைய வீதியை சேர்ந்தவர் முகமது ஷாலி (வயது 52). பழைய பர்னிச்சர் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான காரில் வியாபாரம் நிமித்தமாக நேற்று காலையில் வெளியில் சென்றார். பணிகளை முடித்துவிட்டு நேற்று இரவு 9 மணிக்கு வீடு திரும்பினார். வீட்டின் வாசலில் காரை நிறுத்திவிட்டு சென்றார். நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் கார் திடீரென தீப்பற்றியது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர், வீட்டிற்குள் உறங்கி கொண்டிருந்த முகமது ஷாலியை எழுப்பி தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் விக்கிரவாண்டி தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். தொடர்ந்து அங்கு வந்த விக்கிவாண்டி போலீசார், காரை யாரேனும் கொளுத்தி விட்டனரா? அல்லது காருக்குள் ஏற்பட்ட மின்கசிவால் தீப்பிடித்ததா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் திடீரென கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.