search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கண்டமங்கலம் அருகே இலவச ரேஷன் அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலந்துள்ளதா? பொதுமக்களிடையே அச்சம்
    X

    இலவச ரேஷன் அரிசியில் கலந்துள்ள பளீர் வெள்ளை நிறத்திலான அரிசியை படத்தில் காணலாம்.

    கண்டமங்கலம் அருகே இலவச ரேஷன் அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலந்துள்ளதா? பொதுமக்களிடையே அச்சம்

    • கடந்த சில தினங்களாக இலவச அரசி ரேஷன் கடைகள் மூலமாக விநியோகிக்கப்பட்டு வருகிறது.
    • குறைந்த எண்ணிக்கையிலான அரிசிகள் பளீரென வெள்ளை நிறத்திலும் இருந்தது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியில் கடந்த சில தினங்களாக இலவச அரசி ரேஷன் கடைகள் மூலமாக விநியோகிக்கப்பட்டு வருகிறது. இன்று காலை கண்டமங்கலம் அடுத்த நவமால் காப்பேர் ரேஷன் கடையில் இலவச அரிசி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.அப்போது ரேஷன் கடையில் வழங்கப்பட்ட இலவச அரிசியில் 2 வகை யான அரிசிகள் இருந்தன. பெரும்பாலான அரிசிகள் பழுப்பு நிறத்திலும், குறைந்த எண்ணிக்கையிலான அரிசிகள் பளீரென வெள்ளை நிறத்திலும் இருந்தது.

    இதனால் அதிர்ச்சி யடைந்த நவமால்காப்பேர் மக்கள் இலவச அரிசியை வீட்டிற்கு எடுத்து வந்து தனித்தனியே பிரித்தனர். இதில் ஒரு கிலோவிற்கு 100 கிராம் அளவிற்கு வெள்ளி நிற அரிசி கலந்திருந்தது. இதனை தனியே பொருக்கி எடுத்த ஒரு சிலர், இதனை நீரில் ஊறவைத்தனர். அப்போது இந்த வெள்ளை நிற அரிசி உப்பலாகி நீண்டது.

    இதனைக் கண்ட பொது மக்கள் இது குறித்து ரேஷன் கடை ஊழியர்களிடம் புகார் அளித்தனர். நாங்கள் என்ன செய்வோம்? அரசு அனுப்பி வைக்கும் அரிசிைய தங்களுக்கு வழங்குகிறோம் என்று கூறினர். இத்தகவல் காட்டுத் தீ போல கண்டமங்கலம் பகுதியில் பரவியது. இதையடுத்து இலவச அரிசியை வாங்கிய அனைவரும் மூட்டையை பிரித்து பார்த்தனர். அனை வருக்கும் வழங்கப்பட்ட அரிசிகளில் வெள்ளை நிற அரிசி கலந்திருந்தது. இதனை அவர்களும் தனியே பிரித்து நீரில் ஊறவைத்தனர். இதுவும் உப்பலாகி நீண்டது. இது கண்டமங்கலம் பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசால் இலவசமாக வழங்கப்படும் அரிசியில் வெள்ளை நிற அரிசி பிளாஸ்டிக் அரிசி கலந்துள்ளது என்ற தகவல் கண்டமங்கலம் பகுதி மக்களிடையே வேக மாக பரவிவருகிறது. இதை யடுத்து அங்காங்கே வசிக்கும் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி பிரிதிநிதிகளிடம் புகார் அளித்துள்ளனர். உணவு பாதுகாப்பு அதிகாரிகள் வந்து சோதனை செய்தால் மட்டுமே, இது சாப்பிடு வதற்கு உகந்ததா? அல்லது பிளாஸ்டிக் அரிசியா? என்பது தெரியவரும்.

    Next Story
    ×