search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தெரு நாய்கள் தொல்லையால் மாணவ-மாணவிகள் அச்சம்
    X

    சாலையில் நாய்கள் கூட்டமாக திரிந்த காட்சி.

    தெரு நாய்கள் தொல்லையால் மாணவ-மாணவிகள் அச்சம்

    • தெரு நாய்கள் தொல்லையால் மாணவ-மாணவிகள் அச்சப்படுகின்றனர்.
    • அரசு மருத்துவமனைகளில் பொதுமக்கள் மாதத்திற்கு பெரும் அளவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான தெரு நாய்கள் சுற்றி திரிகின்றது. இதில் பல நாய்கள் வெறிபிடித்த நிலையில் இருப்பதால் பொதுமக்கள் குறிப்பாக வயதானவர்கள், குழந்தைகள் நாய் கடியால் தினமும் பாதிக்கப்படுகின்றார்கள். இந்த நாய் கடியால் கீழக்கரை மற்றும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைகளில் பொதுமக்கள் மாதத்திற்கு பெரும் அளவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தெரு நாய்களை பிடித்து அப்புறபடுத்த கோரி கீழக்கரை நகராட்சி நிர்வாகத்திற்கு அரசியல் கட்சியினர், சமூக நல அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைக்கப்பட்டும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    2 நாட்களில் மட்டும் தெருக்களில் நடந்து சென்ற 12 பேரை வெறிபிடித்த நாய்கள் பல்வேறு இடங்களில் கடித்துள்ளது. இதன் காரணமாக பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள், வயதானவர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் சாலைகளில் நடந்துசெல்ல அச்சமடைந்துள்ளனர்.

    இந்நிலையில் கீழக்கரை நகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு தொடந்து அச்சுறுத்தலாக இருக்கும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நகராட்சி கூட்ட அரங்கில் கலந்தாய்வு கூட்டம் நடத்த உள்ளதாக கீழக் கரை நகர்மன்ற தலைவர் தெரிவித்துள்ளார்.

    இந்த கலந்தாய்வு கூட்டம் வழக்கம் போல் கண் துடைப்பு கூட்டமாக இல்லா மல் கீழக்கரை நகரில் வெறி நாய்களை அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர். கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து வலைதளங்களில் பொதுமக்களின் கண்டனம் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×