என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 210770"

    • நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
    • இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101 அடியாக உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் கொள்ளளவு 105 அடி ஆகும். அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

    நேற்று 4, 169 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 6,521 கன அடியாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101 அடியாக உள்ளது.

    பாசனத்திற்காக கீழ் பவானி வாய்க்காலில் 2,100 கன அடி தண்ணீரும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் 2,200 கன அடி வீதம் தண்ணீர் வெளியே ற்றப்பட்டு வருகிறது. காலி ங்கராயன் பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் இன்று முதல் நிறுத்தப்ப ட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் மற்ற அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. 41.75 அடி கொண்ட குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 37.75 அடியாக உள்ளது.

    இதேபோல் 33.50 அடி கொண்ட வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 33.46 அடியாக உள்ளது. 30 அடி கொண்ட பெரும் பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.10 அடியாக உள்ளது.

    • கடந்த சில நாட்களாக ஆந்திராவில் சாத்துக்குடி விளைச்சல் அதிகரித்துள்ளது.
    • இதன் காரணமாக சேலம் மாவட்டத்தில் உள்ள சந்தைகளுக்கு சாத்துக்குடி ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    சேலம்:

    ஆந்திராவில் ராஜமுந்திரி, புலிவேந்தலா, கடப்பா, நந்திமண்டல், நெல்லூர் உள்ளிட்ட இடங்களில் சாத்துக்குடி அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் சாத்துக்குடி இந்தியா முழுவதும் அனுப்பப்படுகிறது. கடந்த சில நாட்களாக ஆந்திராவில் சாத்துக்குடி விளைச்சல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சேலம் மாவட்டத்தில் உள்ள சந்தைகளுக்கு வழக்கத்தை விட, வரத்து அதிகரித்துள்ளது.

    ஆந்திராவில் கடந்த ஒரு மாதமாக சாத்துக்குடி விளைச்சல் அதிகரித்துள்ளது. சேலத்திற்கு வழக்கமாக 30 டன் சாத்துக்குடி விற்பனைக்கு வரும். ஆனால் சில நாட்களாக 50 டன்னுக்கு மேல் விற்பனைக்கு வருகிறது. ஆயுதபூைஜக்கு முந்தைய நாள் இதன் வரத்து 70 முதல் 80 டன்னாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    தற்போது அளவு பொறுத்து சாத்துக்குடி ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    • சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, கரூர், விழுப்புரம் உள்பட பல்வேறு பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது.
    • ஆலைகளில் நாள் ஒன்றுக்கு 100 டன் அளவில் வெல்லம் உற்பத்தி செய்யப்படுகிறது.


    சேலம்:


    தமிழகத்தில் சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, கரூர், விழுப்புரம் உள்பட பல்வேறு பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதிகளில் அறுவடை செய்யப்படும் கரும்பு அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கும், இதைத்தவிர தனியார் சர்க்கரை ஆலைகளுக்கும், கரும்பு வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கும் விவசாயிகள் அனுப்புகின்றனர்.


    சேலம், நாமக்கல், தருமபுரி மாவட்டங்களில் மட்டும் நூற்றுக்கணக்கான வெல்லம் உற்பத்தி செய்யும் ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் நாள் ஒன்றுக்கு 100 டன் அளவில் வெல்லம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் வெல்லம் தமிழகம் முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் பண்டிகையின்போது வெல்லம் தேவை அதிகரிக்கும்.


    இந்த நிலையில் வருகிற 4-ம் தேதி ஆயுதபூைஜ விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின்போது பெரும்பாலான வீடுகளில் சாமிக்கு படையலிட்டு பூஜை ெசய்து வழிபடுவார்கள். இதையொட்டி வெல்லத்தின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் வழக்கமாக நடக்கும் விற்பனையில் இருந்து 30 சதவீதம் வெல்லத்தின் விற்பனை அதிகரித்துள்ளது.


    சேலத்தில் தற்போது 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் ரூ.1300 முதல் ரூ.1350 என விற்பனை செய்யப்பட்டது. வருகிற தீபாவளி பண்டிகையின்போது இனிப்பு தயாரிக்க வெல்லத்தின் தேவை அதிகரிக்கக்கூடும் என்பதால் உற்பத்தியாளர்கள் உற்பத்தியை அதிகப்படுத்தி உள்ளனர்.


    • மாணவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது
    • 52 வார்டுகளிலும் சுகாதார பணியாளர்கள் கொசு மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார்கள். ஒரு வீட்டில் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டால் அடுத்தடுத்து உள்ளவர்களும் காய்ச்சலால் அவதிப்படும் நிலை உள்ளது.

    இந்த காய்ச்சல் பாதிப்பில் பள்ளி மாணவர்கள் பலரும் தற்போது பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். தற்போது பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில் மாணவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சில மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் தவித்து வருகிறார்கள்.

    காய்ச்சல் பாதிப்பின் காரணமாக ஆஸ்பத்திரி களுக்கு வருபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தனியார் ஆஸ்பத்திரி கள் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் தினமும் வழக்கமாக 1500 பேருக்கு மேற்பட்டோர் புற நோயாளி யாக வந்து மருந்து வாங்கி வருகிறார்கள். ஆனால் சமீப காலமாக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு மருந்து வாங்க வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது தினமும் 2000-க்கும் மேற்பட்டவர்கள் மருந்து வாங்கி செல்கிறார்கள்.

    இதில் ஏராளமானோர் காய்ச்சல் பாதிப்புடன் வந்து செல்கின்றன. டெங்கு காய்ச்சல் பாதிப்புடனும் ஆஸ்பத்திரியில் சிலர் சிகிச்சை பெற்று வரு கிறார்கள். அவர்களுக்கு டாக்டர் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். கன்னியா குமரி, குளச்சல், குழித்துறை அரசு ஆஸ்பத்திரிகள் மட்டுமின்றி ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தினமும் காய்ச்சல் பாதிப்பால் மருந்து வாங்க வருபவர்கள் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. நாகர்கோவில் மாநகரப் பகுதியில் காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் கொசு அடிக்கும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சிக்கு உட்பட்ட 52 வார்டுகளிலும் சுகாதார பணியாளர்கள் கொசு மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    • இன்று காலை பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது.
    • அணைக்கு வரும் தண்ணீரும், பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரும் ஒரே அளவில் இருப்பதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியில் நீடித்து வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் கொள்ளளவு 105 அடி ஆகும். அணையின் நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் கடந்த மாதம் 5 -ந் தேதி பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இன்று காலை பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது.

    பாசனத்திற்காக கீழ் பவானி வாய்க்காலில் 2,300 கன அடி தண்ணீரும், பவானி ஆற்றில் 600 கன அடி தண்ணீரும் என மொத்தம் 2,900 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அணைக்கு வரும் தண்ணீரும், பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரும் ஒரே அளவில் இருப்பதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியில் நீடித்து வருகிறது.

    • 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சுண்டட்டி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.
    • சுண்டட்டி நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் உள்ள கோடநாடு காட்சி முனையும் கண்டு களிக்கின்றனர்.

    அரவேணு

    கோத்தகிரியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சுண்டட்டி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.

    தற்போது விடுமுறை நாள் என்பதால் இயற்கை எழில் சூழ மிதமான காலம் வெப்பநிலை கொண்டு இருப்பதாலும் ஞாயிறு விடுமுறை நாள் என்பதாலும் தற்போது இப்பகுதியில் வெகுவாக சுற்றுலாப் பயணிகள் வந்து கண்டு களித்து ரசித்து வருகின்றனர்.

    சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்துள்ளதால் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து சுற்றுலா ்தலங்களையும் இயற்கைகளையும் கண்டு ரசிக்கும் காட்சியை காண முடிகிறது. சுண்டட்டி நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் உள்ள கோடநாடு காட்சி முனையும் கண்டு களிக்கின்றனர்.

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 102 அடியாக இருந்தது. அணைக்கு 9 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
    • கொடிவேரி தடுப்பணையில் தணணீர் அதிகளவில் கொட்டுவதால் இன்று 25-வது நாளாக பொதுமக்கள் அணையில் குளிப்பதற்கும், சுற்றி பார்ப்பதற்கும் தொடர்ந்து தடை விதிப்பட்டு உள்ளது.

    ஈரோடு:

    பவானிசாகர் அணை 105 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் பாதுகாப்பு கருதி அணையில் 102 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு வரு கிறது.

    இந்த நிலையில் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பலத்த மழை பெய்தது. இதனால் பாவனிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    இதனால் அணையின் நீர்மட்டம் 102 அடி எட்டியதால் அணை யில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறக்க ப்பட்டது. இதையடுத்து மழை குறைந்த தால் அணைக்கு வரும் நீர் குறைந்தது.

    இந்த நிலையில் கேரளாவில் மழை பெய்து வருவ தால் பில்லூர் அணை நிரம்பியது. இதனால் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே திறந்து விட ப்பட்டு வருகிறது. மேலும் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதனால் பவானிசாகர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்தது. கடந்த 2 நாட்களாக அணைக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

    இது படிப்படியாக உயர்ந்து இன்று 9500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் அணை கடல் போல் காட்சி அளித்து வருகிறது.

    மேலும் அணையில் இருந்து 9500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படு கிறது. இதனால் பவானி ஆற்றில் தண்ணீர் ஆர்ப் பரித்து செல்கிறது.

    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 102 அடியாக இருந்தது. அணைக்கு 9 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    அணையில் இருந்து காளிங்க ராயன் வாய்க்காலுக்கு 300 கனஅடியும், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க் காலுக்கு 1750 கனஅடியும், ஆற்றில் 7450 கனஅடி தண்ணீர் என மொத்தம் 9500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வரு கிறது.

    தண்ணீர் அதிகம் திறப்பதால் ஆற்றின் கரையோர பகுதிகளை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    அணையில் இருந்து அதி களவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் ஆற்றில் தண்ணீர் இருகரைகளையும் தொட்டப்படி செல்கிறது.

    இதையொட்டி கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் பொதுமக்கள் குளிக்கும் இடத்திலும் தண்ணீர் அதிகளவு செல்கிறது. இதனால் தடுப்பணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதையொட்டி கொடிவேரி தடுப்பணையில் தணணீர் அதிகளவில் கொட்டுவதால் இன்று 25-வது நாளாக பொதுமக்கள் அணையில் குளிப்பதற்கும், சுற்றி பார்ப்பதற்கும் தொடர்ந்து தடை விதிப்பட்டு உள்ளது.

    இதையொட்டி அணைக்கு செல்லும் வழி அடைக்கப்பட்டு கண்காணி க்கப்பட்டு வருகிறது. இதனால் அணைக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    • சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காடையாம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் அதிக அளவில் விவசாயம் சார்ந்த பகுதியாக உள்ளது.
    • இதைத் தொடர்ந்து இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் சீத்தா பழங்களை அறுவடை செய்து பழ மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காடையாம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் அதிக அளவில் விவசாயம் சார்ந்த பகுதியாக உள்ளது. மேலும் இங்கு சிறு கரடுகள் குன்றுகள் மலைகள் நிறைந்த பகுதியாக உள்ளது. கரடு பகுதியில் சிறு குன்று பகுதியில் மற்றும் தோட்டங்களில் ஓரங்களில் அதிகளவில் சீத்தா மரங்கள் உள்ளன.

    இதில் இந்த ஆண்டு நல்ல மழை பெய்துள்ளதால் அதிகளவில் சீத்தாப்பழம் விளைச்சல் கண்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் சீத்தா பழங்களை அறுவடை செய்து சின்ன திருப்பதி பழ மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

    ஒரு கிரேடு 200 முதல் 250 ரூபாய் வரை விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து இங்கு அறுவடை செய்யப்படும் சீத்தா பழங்களை மொத்தமாக வியாபாரிகள் வாங்கி கேரளா மாநிலத்திற்கு அனுப்பி வைத்து விற்பனை செய்கின்றனர். இந்த ஆண்டு சீதாப்பழம் விற்பனை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • கேரட் கொள்முதல் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
    • கடந்த சில வாரங்களாக தொடர் மழை பெய்து வருகிறது.

    கோத்தகிரி,

    கோத்தகிரியில் கேரட் விளைச்சல் அதிகரித்து உள்ளது. அதன் கொள்முதல் விலை உயர்ந்து உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கேரட் பயிர்கள் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. அதற்கு அடுத்தபடியாக விவசாயிகள் காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். தொழிலாளர் பற்றாக்குறை, விதை, இடுபொருட்கள் மற்றும் உரங்களின் விலை ஏற்றம், வனவிலங்குகள் தொல்லை உள்ளிட்டவற்றை எதிர்கொண்டு வங்கி கடன் பெற்று விவசாயிகள் காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். கோத்தகிரி பகுதியில் கடந்த சில வாரங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் காய்கறி பயிர்கள் செழித்து வளர்ந்து பசுமையாக காட்சி அளிக்கின்றன. தற்போது கேரட் விைளச்சல் அதிகரித்து உள்ளது. இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறும்போது,இன்னும் ஓரிரு வாரங்களில் கேரட் பயிர்கள் அறுவடைக்கு தயாராகி விடும். தற்போது கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை காரணமாக மலைகாய்கறிகள் அதிகளவு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளில் கேரட் கிலோ ஒன்று ரூ.90 முதல் ரூ.100 வரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதே கொள்முதல் விலை நீடித்தால் கேரட் பயிரிட்டு உள்ள விவசாயிகளுக்கு லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றார். கேரட் கொள்முதல் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    • நீலகிரி மலை பகுதியில் நேற்று இரவு பரவலாக மழை பெய்ததன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிக்க தொடங்கியது.
    • அணையில் இருந்து பாசனத்திற்காகவும், குடிநீருக்காகவும் 6,200 கன அடி வீதம் தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கன மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது.

    இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து கடந்த மாதம் 5-ந் தேதி 102 அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வந்த நீர் அப்படியே உபரிநீராக பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் நீர்ப்பி டிப்பு பகுதியில் மழை ப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது. எனினும் பவானிசாகர் அணை தொடர்ந்து 102 அடியிலேயே நீடித்து வருகிறது.

    நேற்று 2 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலை பகுதியில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிக்க தொடங்கியது.

    இன்று காலை நிலவரப்படி பவானி சாகர் அணை 102 அடியில் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 6,200 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.அணையில் இருந்து பாசனத்திற்காகவும், குடிநீருக்காகவும் 6,200 கன அடி வீதம் தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. 

    • நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை முதல் அதிகரித்து வருகிறது.
    • அணையில் இருந்து மொத்தம் 5 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    சத்தியமங்கலம்:

    நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை மாவட்டம் பில்லுர் அணை நிரம்பியது. இதனால் அணைக்கு வந்த உபரிநீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    இதன் காரணமாக நீர்வரத்து அதிகரித்து பவானி சாகர் அணையின் நீர்மட்டமும் 102 அடியை எட்டியது. இதனால் அணையின் பாதுகாப்புகருதி உபரி நீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் தண்ணீர் வரத்தும் குறைந்தது.

    இந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை முதல் அதிகரித்து வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம்102 அடியாக இருந்தது.

    அணைக்கு வினாடிக்கு 5400 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில்இருந்து வாய்க்காலில் 1800 கனஅடியும், காலிங்கராயன் வாய்க்காலில் 300 அடியும், தடப்பள்ளி அரக்கன் கோட்டை800 கனஅடியும், பவானி ஆற்றில் 2100 கனஅடியும் என மொத்தம் 5 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • சேலத்தில் ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டுக்கு விடுமுறை என்பதால் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் அதிகளவில் இன்று வந்தனர்.
    • மக்கள் குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

    ஏற்காடு:

    ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டுக்கு சேலம் மட்டுமின்றி பக்கத்து மாவட்டங்களான தருமபுரி, நாமக்கல் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவார்கள்.

    தொடர் விடுமுறை காரணமாக கடந்த 2 நாட்களாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது. இங்குள்ள அண்ணா பூங்கா, ஏரி பூங்கா,

    சேர்வராயன் கோவில், லேடீஸ் சீட், ரோஜா தோட்டம், பக்கோடா பாயிண்ட் போன்ற சுற்றுலா இடங்களில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் காணப்பட்டனர்.

    பொதுவாகவே வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிகமாக வருவார்கள். தற்போது அதி களவில் சுற்றுலா பயணிகள் ஏற்காடு வருவதால் ஏற்காடு களைகட்டியுள்ளது. இங்குள்ள படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் வெகு நேரம் காத்திருந்து குடும்பத்துடன் படகு சவாரி செய்து வருகின்றனர்.

    ×