search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 211384"

    • குற்றாலம் சீசனை நம்பி குற்றாலம், காசிமேஜர்புரம், குடியிருப்பு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரம் வியாபாரிகள் வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர்.
    • அருவிக்கரைகள் வெறிச்சோடி கிடக்கிறது. அருவிகளில் வெறும் பாறைகள் மட்டுமே காட்சியளிக்கின்றன.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த மாதங்களில் சாரல் மழை விட்டு விட்டு பெய்யும். மேலும் குளிர்ந்த காற்று வீசும்.

    கேரள மாநிலம் மூணாறு போன்று இங்கு குளுகுளு சீசன் நிலவும். இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, சிற்றருவி, புலியருவி மற்றும் குளிக்க அனுமதி இல்லாத செண்பகாதேவி அருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டும்.

    இந்த அருவிகளில் குளித்து சீசனை அனுபவிக்க தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான கேரளா மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குற்றாலம் வந்து செல்வார்கள். இங்குள்ள அருவிகளின் தண்ணீர் மூலிகை குணம் நிறைந்தது. இதனால் எவ்வளவு நேரம் அருவியில் குளித்தாலும் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.

    எத்தனையோ சுற்றுலா தலங்கள் இருந்தாலும் சுற்றுலா பயணிகள் 24 மணி நேரமும் வந்து குளிக்கும் ஒரே இடமாக குற்றாலம் திகழ்கிறது. இந்த குற்றாலம் சீசனை நம்பி குற்றாலம், காசிமேஜர்புரம், குடியிருப்பு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரம் வியாபாரிகள் வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர்.

    இதே போல் தங்கும் விடுதி உரிமையாளர்கள், ஆட்டோ டிரைவர்கள் மூலமாக பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோடிக்கணக்கில் வருவாய் கிடைக்கும். ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரத்தில் சீசன் அறிகுறிகள் தொடங்கும்.

    தொடர்ந்து கேரளா மாநிலத்தில் மழை பெய்ய தொடங்கியதும் குற்றாலத்திலும் மழை பெய்ய தொடங்கும். இதனால் தென்காசி மாவட்டம் முழுவதும் தென்மேற்கு பருவக்காற்று வீசத்தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு இதுவரை சீசனுக்கான அறிகுறிகள் தென்படவில்லை. அருவிக்கரைகள் வெறிச்சோடி கிடக்கிறது. அருவிகளில் வெறும் பாறைகள் மட்டுமே காட்சியளிக்கின்றன.

    ஆனாலும் சீசன் இந்த மாதத்தில் தொடங்கிவிடும் என்ற நம்பிக்கையில் அருவிக்கரைகளில் உள்ள கடைகளை சீரமைக்கும் பணியில் வியாபாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். சீசன் காலத்தில் குற்றாலத்தில் மட்டும் தினமும் ரூ. 20 லட்சம் வரை பணப்புழக்கம் இருக்கும். இதனால் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அதுமட்டுமல்லாது குற்றாலம் அருவியில் நீர்வரத்தை பொறுத்தே தென்காசி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட குளங்களுக்கு தண்ணீர் வரத்து இருக்கும். அதனை நம்பியும் ஏராளமான விவசாயிகள் உள்ளனர். இதனால் அந்த மாவட்டத்தில் உள்ள மக்கள் அனைவரும் குற்றாலம் சீசன் எப்போது தொடங்கும் என்று எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

    • தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம்.
    • ஊராட்சி மற்றும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கடைகள் ஏலம் விடப்பட்டு வியாபாரிகள் கடைகளை அமைப்பதற்கான பணிகளை தொடங்குவர்.

    தென்காசி:

    தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள குற்றால அருவிகளான மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களும் சீசன் காலமாக இருக்கும்.

    தென்மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரமாக இருக்கும்போது அதனை ஒட்டிய பகுதி தென்காசி மாவட்டம் என்பதால் அங்கும் 3 மாதங்களும் சாரல் மழை பொழியும். இதனால் குற்றால அருவிகள் அனைத்திலும் தண்ணீர் கொட்ட தொடங்கும்.

    சுற்றுலா பயணிகள் அனைவரையும் சுண்டி இழுக்கும் வண்ணம் அருவிகள் அனைத்திலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் என்பதால் வியாபாரிகள் பலர் அருவி பகுதிகளை சுற்றிலும் அரசு அனுமதியுடன் தற்காலிக கடைகளை அமைத்து வியாபாரங்களை மேற்கொள்வர்.

    ஒவ்வொரு ஆண்டும் சீசன் தொடங்குவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட ஊராட்சி மற்றும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கடைகள் ஏலம் விடப்பட்டு வியாபாரிகள் கடைகளை அமைப்பதற்கான பணிகளை தொடங்குவர். தென்காசி மாவட்டத்தில் தற்போது கோடை காலம் என்பதால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் இன்றி வறட்சியாக காணப்படுகிறது.

    கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து குற்றால சீசன் தொடங்குவதற்கு முன்பாக குளிர்ந்த காற்று வீசத் தொடங்கும் அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதால் சீசன் தொடங்க வாய்ப்புள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையமும் வருகிற 4-ந்தேதி முதல் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது என அறிவித்துள்ளதால் குற்றாலம் சீசனும் இன்னும் ஒரு சில தினங்களில் சாரல் மழையுடன் தொடங்கும் எனும் எதிர்பார்ப்பில் வியாபாரிகள் அனைவரும் தற்காலிக கடைகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட தொடங்கியுள்ளனர். கடந்த ஆண்டை போன்று குற்றால சாரல் திருவிழா இந்த ஆண்டும் மிகப் பிரமாண்டமாக அரசு சார்பில் நடத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் தென்காசி மாவட்ட மக்க ளிடையே ஏற்பட்டுள்ளது.

    • குற்றால அருவி பகுதிகளில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளபட உள்ளது.
    • தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மூலம் பணிகள் செயல் படுத்தப்படும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவி பகுதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என 2022- 2023-ம் ஆண்டு மானிய கோரிக்கை அறிவிப்புகளில் சுற்றுலாத்துறை அமைச்சர் அறிவித்திருந்தார்.

    ரூ. 11 கோடியில் வளர்ச்சி பணி

    அதன்படி குற்றாலத்தில் உள்ள பழைய குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி மற்றும் புலி அருவி ஆகிய பகுதிகளில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளபட உள்ளது. அந்த வகையில் ரூ. 11 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகளுக்கு கலெக்டர் ரவிச்சந்திரன் அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் பேசும்போது, தற்போது பிரதான அருவிப் பகுதிகளில் பணிகள் தொடங்கப்பட உள்ளது.

    அப்பகுதியில் ஆண்கள் மற்றும் பெண்கள் உடை மாற்றும் அறை, கழிப்பறை, தோரணவாயில் புதுப்பித்தல், பாதை சீரமைத்தல், சிறுவர் பூங்கா மேம்பாடு மற்றும் குற்றாலம் பேரூராட்சி ஆலோ சனையுடன் அடிப்படை தேவை பூர்த்தி செய்தல் ஆகிய பணிகள் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மூலம் செயல் படுத்தப்படும். தொடர்ந்து மற்ற பகுதிகளி லும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுற்றுலா பயணிகள் பயன்பெறு வார்கள் என்றார்.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலாளர் டேவிட் பிரபாகரன், உதவி செயற்பொ றியாளர் சீனிவா சன், சுற்றுலா அலுவலர் சீதாராமன், மண்டல சுற்றுலா வளர்ச்சிக்குழு உறுப்பினர் டாக்டர் கார்த்திக்குமார், தலைமை செயல் அதிகாரி திருமலை நம்பிராஜன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிர மணியன், உதவி சுற்றுலா அலுவலர் சந்திர குமார் மற்றும் அரசு அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.

    • மாரிமுத்து, முப்புடாதி ஆகியோர் கடந்த 4 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
    • மாரிமுத்து காட்டுப்பகுதியில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    நெல்லை:

    குற்றாலம் அருகே நன்னகரம் பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 33). தொழிலாளி. இவரது மனைவி முப்புடாதி. இவர்கள் 2 பேருக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினையில் 2 பேரும் கடந்த 4 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் மனவேதனையில் இருந்து வந்த மாரிமுத்து கடந்த 26-ந்தேதி அதிகாலை நன்னகரம்-ஆயிரப்பேரி சாலையில் உள்ள காட்டுப்பகுதியில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அவரை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்த நிலையில், நேற்று அவர் இறந்தார்.

    இது குறித்து குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கூட்டத்திற்கு மாநில தலைவர் செல்லப்பாண்டியன் தலைமை தாங்கினார்.
    • கலைஞர் சமாதியில் காத்திருக்கும் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

    தென்காசி:

    தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தென்காசி மாவட்டம் குற்றாலம் சேனைத்தலைவர் மண்டபத்தில் நடந்தது.தமிழ்நாடு மக்கள் நலப் பணியாளர் சங்க மாநில தலைவர் செல்லப்பாண்டியன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் புதியவன், மாநில பொருளாளர் ரெங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் வாசுதேவநல்லூர் முருகன் வரவேற்றார்.

    சென்னை உயர்நீதிமன்ற தீர்மானத்தின்படி மக்கள் நலப் பணியாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க வேண்டும். என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 29-ந் தேதி முதல் சென்னை மெரினா கடற்கரை கலைஞர் சமாதியில் காத்திருக்கும் போராட்டத்தினை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மக்கள் நலப் பணியாளர் சங்கத்தின் தூத்துக்குடி ராமசுப்பு, நெல்லை சங்கர், தென்காசி மாவட்ட பொரு ளாளர் அருணாசலம் மற்றும் நிர்வாகிகள், செங்கோட்டை பண்டார சிவன், கடையநல்லூர் ராஜேந்திரன், சங்கரன்கோவில் மாரியப்பன், தென்காசி முத்துக்குமார், அந்தோணி செல்லத்துரைச்சி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் முத்துசாமி நன்றி கூறினார்.

    • பிரதான அணையான பாபநாசம் அணை நீர்பிடிப்பு பகுதியில் 3 மில்லிமீட்டர் மழை பெய்தது.
    • காலை முதல் பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள அணைப்பகுதிகளில் இன்று காலை வரையிலும் மழை விட்டு விட்டு பெய்தது.

    பிரதான அணையான பாபநாசம் அணை நீர்பிடிப்பு பகுதியில் 3 மில்லிமீட்டர் மழை பெய்தது. அணைக்கு தற்போது 367 கனஅடிநீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் தற்போது 45.90 அடி நீர் இருப்பு உள்ளது. சேர்வலாறு அணையில் 59 அடி நீர் உள்ளது. மாஞ்சோலை வனப்பகுதியில் பலத்த மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக நாலுமுக்கு எஸ்டேட்டில் 26 மில்லிமீட்டரும், காக்காச்சியில் 19 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் அம்பை, சேரன்மகாதேவி, கொடுமுடியாறு, நம்பியாறு, பாபநாசம், பாளை உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. இன்று காலை முதல் பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

    கொடுமுடியாறு அணை பகுதியில் 10 மில்லிமீட்டரும், நம்பியாறில் 7 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    தென்காசி மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மிதமான மழை பெய்தாலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் போதிய மழை இல்லாததால் குற்றாலம் அருவிகளுக்கு போதிய நீர்வரத்து இல்லாமல் அருவிகள் அனைத்தும் பாறைகளாகவே காட்சியளிக்கின்றன.

    • நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக இன்று காலை நிலவரப்படி சேரன்மகாதேவியில் 8.4 மில்லிமீட்டரும், அம்பையில் 7 மில்லிமீட்டரும் மழை பெய்ததது.
    • அணை பகுதிகளை பொறுத்தவரை பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை பகுதியில் 11 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தைவிட குறைவாகவே பெய்தது. இதனால் பெரும்பாலான இடங்களில் குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு போய்விட்டது.

    இந்நிலையில் நேற்று இந்த மாவட்டங்களில் திடீரென மழை பெய்தது. காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், மதியத்திற்கு பிறகு லேசான சாரல் பெய்தது.

    நெல்லை மாவட்டத்தில் சேரன்மகாதேவி, களக்காடு, கன்னடியன், அம்பை, ராதாபுரம், நாங்குநேரி உள்ளிட்ட இடங்களில் திடீரென பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த பகுதிகளில் ஏராளமான ஏக்கர் நிலங்களில் நெல் நடவு செய்யப்பட்டு உள்ளது.

    வடகிழக்கு பருவமழையை நம்பி அவர்கள் பயிரிட்ட நிலையில், மழை குறைந்ததால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இந்நிலையில் தற்போது பெய்த சாரல் மழையால் அவர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

    நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக இன்று காலை நிலவரப்படி சேரன்மகாதேவியில் 8.4 மில்லிமீட்டரும், அம்பையில் 7 மில்லிமீட்டரும் மழை பெய்ததது. அணை பகுதிகளை பொறுத்தவரை பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை பகுதியில் 11 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    சேர்வலாறில் 6 மில்லிமீட்டரும், மணிமுத்தாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் 10.8 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. இன்றும் காலை முதலே அணை பகுதியில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முதல் இன்று காலை வரை தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக காக்காச்சியில் 48 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. இதுதவிர நாலுமுக்கில் 41 மில்லிமீட்டரும், ஊத்து, மாஞ்சோலையில் தலா 32 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    மாநகர பகுதியில் பெய்த திடீர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிக்கப்பட்டது. இன்றும் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு, குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. மாநகரில் பேட்டை முதல் தொண்டர் சன்னதி, நயினார் குளம் சாலை, எஸ்.என். ஹைரோடு வரையிலும் சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.

    இதனால் சேறும், சகதியுமாக காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். இதுதவிர திருவனந்தபுரம் சாலை உள்ளிட்ட சில இடங்களில் சாலையோர பள்ளங்களில் தண்ணீர் தேங்கி கிடந்தது.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவிகளில் குறைந்த அளவில் தண்ணீர் கொட்டி வந்த நிலையில் நேற்று பெய்த திடீர் மழையினால் மெயினருவிக்கு தண்ணீர் அதிகரித்தது.

    இன்று காலை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அங்கு குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. அதே நேரத்தில் பழைய குற்றாலம், ஐந்தருவியில் கொட்டிய தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆய்க்குடி பகுதியில் 30 மில்லிமீட்டரும், தென்காசியில் 13 மில்லிமீட்டரும் மழை பெய்தது. இதுதவிர ராமநதி, குண்டாறு, சங்கரன்கோவில், சிவகிரி உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு சாரல் பெய்தது. ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இரவு முழுவதும் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கழுகுமலை, சாத்தான்குளம், திருச்செந்தூர், காயல்பட்டினம், குலசேகரப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. வைப்பரில் அதிகபட்சமாக 7 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம், எட்டையபுரம், விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் விட்டு விட்டு பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சில இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கி கிடந்தது. தூத்துக்குடி மாநகர பகுதியில் 8.2 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    • குழந்தையை மீட்டவுடனே அந்த சிறுமியின் பெற்றோர் குழந்தையை பெற்றுக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுவிட்டனர்.
    • விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் சிறுமியை மீட்ட வாலிபருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் போலீஸ் லைன் தெருவை சேர்ந்த செல்வராஜ் என்பது மகன் விஜயகுமார் (வயது24).

    இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று விஜயகுமார் தனது காரில் சவாரி ஏற்றிக்கொண்டு பழைய குற்றாலத்திற்கு சென்றார்.

    அங்கு காரை நிறுத்திவிட்டு விஜயகுமார் சுற்றுலா பயணிகள் குளிக்கும் இடத்திற்கு சென்று கொண்டிருந்தாா்.

    அப்போது அங்கு குளித்துக் கொண்டிருந்த கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த ஹரிணி என்ற 4 வயது சிறுமி திடீரென தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு 50 அடி பள்ளத்தில் சிக்கிக் தவித்துக் கொண்டிருந்தார்.

    அதைப் பார்த்த விஜயகுமார் தனது உயிரையும் பொருட்படுத்தாமல், கருங்கல் பாறை வழியாக 50 அடி பள்ளத்தில் உடனடியாக இறங்கி துரிதமாக செயல்பட்டு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமி ஹரிணியை பத்திரமாக மீட்டார்.

    குழந்தையை மீட்டவுடனே அந்த சிறுமியின் பெற்றோர் குழந்தையை பெற்றுக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுவிட்டனர்.

    தன்னுடைய உயிரை பொருட்படுத்தாத 50 அடி பள்ளத்தில் உடனடியாக இறங்கி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமியை விளாத்திகுளத்தை சேர்ந்த வாலிபர் விஜயகுமார் காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    மேலும் விஜயகுமாருக்கு பொது மக்களின் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.

    தனது உயிரை பணயம் வைத்து சிறுமியை காப்பாற்றிய அசாத்திய இளைஞர் விஜயகுமாரின் மன தைரியத்தை பாராட்டுகிறேன் என விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

    • ஐந்தருவி, பழைய குற்றாலம், மெயின் அருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சீரான தண்ணீர் விழுகிறது.
    • குற்றாலநாதர் கோவிலில் ஐயப்ப பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி, பழைய குற்றாலம், மெயின் அருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சீரான தண்ணீர் விழுகிறது. இந்நிலையில் விடுமுறை நாளான இன்று காலை முதல் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    குற்றாலநாதர் கோவிலில் ஐயப்ப பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்து வருகின்றனர். இன்று விடுமுறை தினம் என்பதாலும் சுற்றுலா பயணிகளின் வருகையும் சற்று அதிகரித்து காணப்பட்டது.

    • திருக்குற்றாலநாத சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • இவ்விழாவானது 10 நாட்கள் நடைபெறுகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் புகழ்பெற்ற குற்றாலம் திருக்குற்றாலநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐப்பசி விசு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் தொடக்க நாளில் மகா தீபாராதனை நடைபெற்றது. இன்று கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவானது 10 நாட்கள் நடைபெறுகிறது. கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு திருக்குற்றாலநாதசுவாமியை தரிசனம் செய்தனர்.

    • அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து இன்று அனைத்து அருவிகளிலும் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    • தமிழக சுற்றுலா பயணிகளும் விடுமுறை தினம் என்பதால் அதிகளவில் குற்றால அருவிகளில் குளிக்க குவிந்து வருகின்றனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அவ்வப்போது பெய்த மழையின் காரணமாக குற்றாலத்தின் பிரதான அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி உள்ளிட்டவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க கடந்த 4 நாட்களுக்கு மேலாக தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் நேற்றும், இன்றும் விடுமுறை தினம் என்பதாலும், கேரளாவில் ஓணம் பண்டிகை விடுமுறை என்பதாலும் அங்கிருந்து குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்காக கேரள சுற்றுலா பயணிகள் அதிக அளவில் படையெடுத்து வருகின்றனர்.

    தற்போது அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து இன்று அனைத்து அருவிகளிலும் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    கேரளா மட்டுமின்றி தமிழக சுற்றுலா பயணிகளும் விடுமுறை தினம் என்பதால் அதிகளவில் குற்றால அருவிகளில் குளிக்க குவிந்து வருகின்றனர்.

    இன்று காலையில் பழைய குற்றாலத்தில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. பழைய குற்றாலம் அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளிய லிட்டு மகிழ்ந்தனர்.

    • குற்றாலத்தில் உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வந்தது.
    • சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டிருந்தது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வந்தது.

    இந்நிலையில் நேற்று மதியம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் ஐந்தருவி,மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டிருந்தது. இன்று காலையில் ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு குறைந்ததை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.இருப்பினும் மெயினருவியில் தொடர்ந்து தண்ணீர் அதிகளவில் விழுந்ததால் அங்கு மட்டும் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தொடர்ந்து தடை நீடித்து வருகிறது.

    ×