என் மலர்
நீங்கள் தேடியது "முதலிடம்"
- துளிர் அறிவியல் வினாடி-வினா போட்டியில் 13 பள்ளிகள் பங்கேற்றன.
- மாணவர்கள் சான்றிதழ்களையும், பரிசுகளையும் வென்று வந்துள்ளனர்.
சீர்காழி:
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆண்டு தோறும் நடத்தும் ஒன்றிய அளவிலான துளிர் அறிவியல் வினாடி -வினா போட்டி சீர்காழியில் நடைபெற்றது.
13 பள்ளிகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர். இதில் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மெட்ரிக் பள்ளி மாணவர்கள் மதன்ராஜ், ஜெய் சபரிவாசன், சந்தோஷ்குமார் ஆகியோர் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான பிரிவில் முதலிடமும், யோஷ்வின், கீர்த்திவாசன், ஸ்ரீவர்சன் ஆகியோர் 9,10-ம் வகுப்பு மாணவர்களுக்கான போட்டியில் முதலிடமும் பெற்று சான்றிதழ்களையும், பரிசுகளையும் வென்று வந்துள்ளனர்.
இவர்களை பள்ளிச் செயலர் ராமகிருஷ்ண முதலியார், நிர்வாக அலுவலர் தங்கவேலு, முதல்வர் தங்கதுரை, வழிகாட்டி ஆசிரியர் தமிழ்வாணன் மற்றும் துணை முதல்வர்கள் தமிழரசன், கிரிஜாபாய் ஆகியோர் பாராட்டினர்.
- பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
- மாணவர்கள் அனைவரும் சிறப்பான முறையில் விளையாடி மாநில அளவில் 3-ம் இடம் பிடித்தனர்.
சுவாமிமலை:
இரண்டாவது ஜூனியர், மாநில அளவிலான சூட்டிங்பால் சாம்பியன்ஷிப் 2022- க்கான போட்டி சேலத்தில் நடைபெற்றது. இப்போட்டியானது சேலம் ஷூட்டிங் பால் அசோசியேஷனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
போட்டியில் நாமக்கல், சேலம், கன்னியாகுமரி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியானது மாணவ- மாணவிகளுக்கு என தனித்தனி பிரிவுகளாகவும், 18 வயதிற்குட்பட்ட, மேற்பட்ட மாணவ- மாணவிகளுக்கு தனித்தனி பிரிவுகளாகவும் நடைபெற்றது.
போட்டியில் கும்பகோணம் கார்த்தி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த நவீன், தமிழ்,அப்துல் ரகுமான், ஈஸ்வர், மாதேஷ் ஆகிய 12-ம் வகுப்பு மாணவர்களும், லுக்மன்,நரேன், வெங்கடேஷ்,கைலாஷ் ஆகிய 11-ம் வகுப்பு மாணவர்களும் கலந்து கொண்டனர்.
மாணவர்கள் அனைவரும் சிறப்பான முறையில் விளையாடி மாநில அளவில் 3-ம் இடம் பிடித்தனர்.
மேலும், சேலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கிராஸ் பேட்மிட்டன் போட்டி நடைபெற்றது.
போட்டியானது மாணவ- மாணவிகளுக்கு தனி பிரிவுகளாகவும், 8, 10, 12, 14, 16, 18 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு தனித்தனி பிரிவுகளாகவும் நடைபெற்றது.
போட்டியில் கார்த்தி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவர்கள் முகமது பிலால்,அப்துல் ரகுமான் ஆகியோர் சிறப்பாக விளையாடி மாநில அளவில் முதலிடம் பிடித்தனர்.
மாணவர்கள் அனைவரும் மேலும் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடுமாறு பள்ளி நிறுவனர் கார்த்திகேயன், தாளாளர் பூர்ணிமா கார்த்திகேயன், பள்ளி முதல்வர் அம்பிகாபதி ஆகியோர் மாணவர்களை பாராட்டினர்.
மேலும், மாணவர்களுக்கு சிறப்பாக பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியரை பாராட்டினர்.
கார்த்தி வித்யாலயா கல்வி குழுமம் சார்பில் அனைத்து மாணவர்களுக்கும் ஆசிரியர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
- ஜூனியர் பிரிவில் நித்யஸ்ரீ மற்றும் ரோகித் முதலிடமும், சப்-ஜூனியர் பிரிவில் கிருத்திக் 3-ம் இடமும் பிடித்தனர்.
- தமிழ் கலை வளர்ச்சி அடைய அரசு உதவ வேண்டும்.
தஞ்சாவூர்:
நான்காவது தேசிய அளவிலான சிலம்ப போட்டி ஆந்திராவில் நடைபெற்றது. சிலம்பம் இந்திய சங்கம் சார்பில் நடைபெற்ற இப்போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 250-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் தமிழ்நாடு முதலிடமும், புதுச்சேரி இரண்டாமிடமும், கர்நாடக மூன்றாமிடமும் பிடித்தது.
மாநில போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகள் மட்டுமே தேசிய போட்டிக்கு தேர்வானவர்கள்.
தஞ்சை மாவட்ட செயலாளர் லோக கலாஸ்ரீ ராஜேஷ் கண்ணா தலைமையில் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டில் இருந்து மாநில வெற்றியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில், தஞ்சை வின்னர் அகாடமி மாணவர்கள் ஜூனியர் பிரிவில் நித்யஸ்ரீ மற்றும் ரோகித் முதலிடமும், சப்-ஜூனியர் பிரிவில் கிருத்திக் 3-ம் இடமும் பிடித்தார்.
வெற்றி பெற்ற மாணவர்களை சிலம்பம் தமிழ்நாடு சங்க தலைவர் சந்திரமோகன், துணை தலைவர் பொன் ராமர், செயல் தலைவர் கண்ணதாசன் மற்றும் சிலம்பம் தஞ்சை மாவட்ட சங்க நிர்வாகிகள் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இதுகுறித்து, பயிற்சியாளர் ராஜேஷ் கண்ணா கூறுகையில்:- மாணவர்கள் சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற தயாராகி வருகின்றனர்.
அவர்களுக்கு மலேசியாவில் நடைபெறும் சிலம்பம் சர்வதேச போட்டியில் பங்கு பெற அரசு நிதியுதவி அளித்தால் வெற்றி பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பர். தமிழ் கலை வளர்ச்சி அடைய அரசு உதவ வேண்டும் என்றார்.
- பல்வேறு போட்டிகளில் வட்டார அளவில் முதல் இரண்டாம் இடம் மற்றும் மூன்றாம் இடம் என பல்வேறு பரிசுகளை வென்றனர்
- மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான செவ்வியல் குழு பரதநாட்டியப் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்த னர்
பவானி,
பவானி வர்ணபுரம் ஒன்றாவது வீதியில் நகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் பலர் கல்வி பயின்று வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன் தமிழக அரசு நடத்திய கலை திருவிழா போட்டியில் இப்பள்ளியில் பயிலும் ஆறாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவ மாணவிகள் செவ்வியல் குழு, செவ்வியல் தனி நடனம், மனிதநேயப் பாடல், வில்லுப்பாட்டு, ஓவியம் இயற்கைக்காட்சி, களிமண்சுதை செய்தல், கதை சொல்லுதல், நாட்டுப்புறப்பாடல் என பல்வேறு போட்டிகளில் வட்டார அளவில் முதல் இரண்டாம் இடம் மற்றும் மூன்றாம் இடம் என பல்வேறு பரிசுகளை வென்றனர்.
இதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்று செவ்வியல் (பரதநாட்டியம்) குழு நடன போட்டியில் முதலி டம் பெற்றது.
பின்னர் மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான செவ்வியல் குழு பரதநாட்டியப் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்த னர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் பாராட்டு தெரிவித்தனர்.
- போட்டியில் மோகன்பிரவீன் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தார்.
- நான்காம் இடத்தை பிரகாஷ் அர்ஜுன் பிடித்தார்.
தஞ்சாவூர்:
தஞ்சையில் துரோணாஸ் பேட்மிட்டன் கிளப் சார்பில் இன்னர் கிளப் பேட்மிண்டன் போட்டிகள் நடத்தப்பட்டது.
கிளப்பின் உரிமையாளர் ஆனந்த் தலைமை தாங்கினார்.
போட்டியை சந்திரசேகர் வழி நடத்தினார்.
இந்த போட்டியில் மோகன்பிரவீன் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தார்.
இரண்டாம் இடத்தை ஜெயராம் அசோகன், மூன்றாம் இடத்தை உதயன் தீபக் சூர்யா, நான்காம் இடத்தை பிரகாஷ் அர்ஜுன் ஆகியோர் பிடித்தனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு பொறியாளர் சிவப்பிரகாசம் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
இப்போட்டியில் தஞ்சை பகுதியை சுற்றி உள்ள ஏராளமான பேட்மிட்டன் வீரர்கள் பங்கு பெற்றனர்.
- 250-க்கும் அதிகமான மாணவா்கள் கலந்து கொண்டனா்.
- சோழன்குறிச்சி வல்லரசு முதலிடம் பிடித்தார்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூா் தமிழ் பல்கலை கழகத்தில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியைத் துணைவேந்தா் திருவள்ளு வன் கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.
இதில், 250-க்கும் அதிகமான மாணவா்கள் கலந்து கொண்டனா்.
இவா்களில் சோழன்கு றிச்சி வல்லரசு முதலிடமும், ஏலாக்குறிச்சி சதீஷ்குமாா் இரண்டாமிடமும், தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத் துறை மாணவா் தவக்குமாா் மூன்றாமிடமும் பெற்றனா்.
இவா்களுக்கு பதிவாளா் (பொ) தியாகராஜன் பரிசுகள் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் துவாரா கே.ஜி.எப்.எஸ். மண்டலத் தலைவா் மணிராஜ், மக்கள் தொடா்பு அலுவலா் முருகானந்தம், பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளா் பழனிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்.
முன்னதாக, பல்கலை க்கழக மக்கள் தொடா்பு அலுவலா் முருகன் வரவேற்றாா்.
முடிவில் நிறுவன வா்த்தகப் பிரிவு தலைவா் சிவா நன்றி கூறினாா்.
- அகில இந்திய அளவில் வில்வித்தை போட்டியில் பங்கேற்று முதலிடத்தை பெற்று பதக்கங்களை வென்றார்.
- தமிழ்நாட்டிற்கு சிறுவயதிலேயே கைலாஷ் பெருமை சேர்த்துள்ளார்.
சீர்காழி:
தஞ்சாவூர் 39 வார்டு பகுதியை சேர்ந்த கர்ணன் மகன் கைலாஷ்.
இவர் அகில இந்திய அளவில் வில்வித்தை போட்டியில் பங்கேற்று முதலிடத்தை பெற்று பதக்கங்களை வென்றார்.
இந்த சாதனையின் மூலம் தமிழ்நாட்டிற்கு சிறுவயதிலேயே கைலாஷ் பெருமை சேர்த்துள்ளார்.
இதனை அறிந்த சீர்காழி ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், சிறுவனை நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் இந்திய அளவில் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த மாணவனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அழைத்துச் சென்று பாராட்டு பெற வைப்பதாக அப்போது தெரிவித்தார்.
- வேதியியல், கணிதம், உயிரியல் பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.
- தமிழ் வழி கல்வியில் பயின்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கடினல்வயல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி நிவேதிதா பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
மேலும், வேதியியல், கணிதம், உயிரியல் பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.
இந்த மாணவியின் தந்தை வேம்பையன், தாய் திலகா ஆகியோர் அரசு பள்ளி ஆசிரியர்கள் ஆவர்.
மாணவியின் தந்தை வேம்பையன் தான் பணியாற்றும்கடின ல்வயல் அரசு மேல்நிலைப்பள்ளி யிலேயே தனது மகளை சேர்த்து தமிழ் வழி கல்வியில் படிக்க வைத்து மாவட்ட அளவில் முதலிடம் பெற செய்தது குறிப்பிடத்தக்கதாகும்.
முதலிடம் பிடித்த மாண வியை தலைமையாசிரியர் சிவகுருநாதன் சால்வை அணிவித்து பாராட்டி புத்தகத்தை பரிசாக வழங்கினார்.
மேலும், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமலிங்கம், பள்ளி மேலாண்மை குழு தலைவர் வைரவல்லி, ஒன்றிய கவுன்சிலர் ராஜசேகர், ஜி.எச்.சி.எல். உப்பு தொழிற்சாலை மேலாளர் சுந்தர்ராஜன், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளி மேலாண்மை குழுவினர் ஆகியோர் மாணவியை பாராட்டினர்.
- பிளஸ்-2 தேர்வில் கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி முதலிடம் பெற்றது.
- தாளாளர் ஷாஜகான் தலைமை தாங்கினார்.
பரமக்குடி
பிளஸ்-2 பொது தேர்வில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கே.ஜே.கீழ முஸ்லீம் மேல்நிலைப்பள்ளி 99 சதவீத தேர்ச்சி பெற்று நகரில் முதலிடத்தை பெற்றது. இந்த பள்ளி மாணவி தீபிகா முதலிடத்தையும், சபிதா 2-ம் இடத்தையும், கோபிகா 3-ம் இடத்தையும் பெற்றனர். விலங்கியல் பாடத்தில் தீபிகா 100 மதிப்பெண்ணும், கணக்கியல் பாடத்தில் மாணவி கோபிகா 100 மதிப்பெண்ணும் பெற்றனர்.
இவர்களுக்கு பள்ளியின் சார்பில் பாராட்டு விழா நடந்தது. தாளாளர் ஷாஜகான் தலைமை தாங்கினார். கீழ முஸ்லிம் ஜமாத் சபை தலைவர் சாகுல் ஹமீது, செயலர் சாதிக் அலி, பொருளாளர் லியாகத் அலி மற்றும் கல்விக்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் அஜ்மல் கான் வரவேற்றார். முதல் 3 இடங்களை பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு பரிசும், 100 மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டன. உதவி தலைமை ஆசிரியர் புரோஸ்கான் நன்றி கூறினார்.
- சி.பி.எஸ்.இ. தேர்வில் மாவட்ட அளவில் செல்லப்பன் வித்யா மந்திர் சர்வேதச பள்ளி முதலிடம் பிடித்தது.
- ஆசிரியர்கள் பாராட்டினர்.
காரைக்குடி
மத்திய அரசின் இடைநிலைக் கல்வி வாரியம் நடத்திய சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 தேர்வில் காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேசப் பள்ளி மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பிடித்து சாதனை படைத்தது. பிளஸ்-2 மாணவர் லோகேஷ் 483/500 மதிப்பெண்களைப் பெற்று மாவட்ட அளவில் முதல் இடத்தை பெற்றார்.
ஆங்கிலத்தில் 96, கணிதம் 95, உயிரியல் 97, இயற்பியல் 95, வேதியியல் 100 என மதிப்பெண்களை பெற்றார். 2-ம் இடத்தை மாணவர் கவுரிசங்கர நாராயணன் 482/500 மதிப்பெண் பெற்றார். 3-ம் இடத்தை மாணவர் பிரியதர்ஷன் 481/500 மதிப்பெண் பெற்றார்.
10-ம் வகுப்பு தேர்வில் மாணவர் தியாகராஜன் 493/500 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார். அவர் ஆங்கிலம் 99, பிரெஞ்சு 100, கணிதம் 99, அறிவியல் 97, தகவல் தொழில்நுட்பம் 100 என்ற மதிப்பெண்களை பெற்றுள்ளார்.
2-ம் இடத்தை விஷால் 487 மதிப்பெண் பெற்றார். 3-ம் இடத்தை மாணவி சுவாதி 485 மதிப்பெண் பெற்றார். சாதனை படைத்த மாணவ- மாணவிகளை பள்ளியின் நிறுவனர் செல்லப்பன், தாளாளர் செ.சத்தியன், நிர்வாக இயக்குநர் சங்கீதா சத்தியன், கல்வி இயக்குநர் ராஜேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
- சிவகங்கை மாவட்டத்தில் 10-ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த ஆட்டோ டிரைவரின் மகளுக்கு தமிழரசி எம்.எல்.ஏ. பாராட்டு தெரிவித்தார்.
- மாணவி இலக்கியா 593 மதிப்பெண் எடுத்து முதலிடம் பெற்றார்.
மானாமதுரை
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் சிவகங்கை மாவட்டம் மாநிலஅளவில் 2-வது இடத்தை பெற்றது. இது குறித்து கலெக்டர் மதுசூதன்ரெட்டி, மாவடட முதன்மை கல்வி அலுவலர் சாமிநாதன் ஆகியோர் கூறியதாவது:-
தமிழக அளவில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் சிவகங்கை மாவட்டம் 2-ம் இடம் பிடித்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 278 பள்ளிகளில் 17 ஆயிரத்து 732 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியதில் 17 ஆயிரத்து 294 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 97.53 சதவீத தேர்ச்சி ஆகும்.
2017-2018-ம் ஆண்டு 98.50 சதவீத தேர்ச்சி பெற்று மாநிலத்தில் சிவகங்கை மாவட்டம் முதலிடம் பெற்றது. 138 அரசுப் பள்ளிகளில் 68 பள்ளிகள் 100 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு உதவி பெறும் பள்ளிகளில் 58 பள்ளிகளில் 21 பள்ளிகளும், மெட்ரிக் சுயநிதி பள்ளிகளில் 82 பள்ளிகளில் 57பள்ளிகளும், 100 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
மொத்தமுள்ள 278 பள்ளிகளில் 146 பள்ளிகளில் 100 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதில் ஆட்டோ தொழிலாளி விஜயகுமார்-ஜெகதா தம்பதியரின் மகளான மானாமதுரை அரசு மகளிர் பள்ளி மாணவி இலக்கியா 593 மதிப்பெண் எடுத்து முதலிடம் பெற்றார்.
இந்த பள்ளியில் 277 மாணவிகளில் 272 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 98.53 சதவீத தேர்ச்சி ஆகும். இந்த பள்ளியின் முதல் மாணவி இலக்கியா 8-ம் வகுப்பில் மத்திய அரசின் டேலன்ட் எக்ஸாம் தேர்ச்சி பெற்று மாதம் தோறும் ரூ.1000-ம் கல்வி உதவித்தொகை பெற்று வருகிறார். மாணவி இலக்கி யாவை மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி பாராட்டி னார்.
- எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் அரசு பள்ளியில் மாநில அளவில் சிவகங்கை மாவட்டம் முதலிடம் பிடித்தது. இ
- தனை கலெக்டர் கேக் வெட்டி கொண்டாடினார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 8 ஆயிரத்து 702 மாணவர்க ளும், 9 ஆயிரத்து 30 மாணவி களும் என மொத்தம் 17 ஆயிரத்து 732 பேர் தேர்வு எழுதினர். இதில் 8 ஆயிரத்து 390 மாணவர்களும், 8 ஆயிரத்து 904 மாணவிகளும் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 2-ம் இடம் பிடித்து 97.53 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.
அதேபோல் அரசு பள்ளி களில் 3 ஆயிரத்து 493 மாணவர்களும், 4 ஆயிரத்து 105 மாணவிகளும் தேர்வு எழுதினர். இதில் 3 ஆயிரத்து 311 மாணவர்களும், 4 ஆயிரத்து 12 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் அரசு பள்ளி அளவில் மாநில அளவில் 96.38 சதவீதம் பெற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்து உள்ளது.
இதனை கொண்டாடும் விதமாக சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவ லகத்தில் கலெக்டர் மதுசூ தன்ரெட்டி தலைமையில் கல்வி அலுவலர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.