என் மலர்
நீங்கள் தேடியது "வேலைநிறுத்தம்"
- தண்ணீர் நிரப்பும் நிலையங்கள் தொடர்பான பிரச்சினையால் வேலைநிறுத்தம் போராட்டம் அறிவிப்பு.
- கோரிக்கைகள் ஏற்கப்பட்டதால் தண்ணீர் லாரிகள் நாளை வழக்கம் போல் இயங்கும் என அறிவிப்பு.
சென்னையில் தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் நடத்த இருந்த நிலையில், அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
வள்ளுவர் கோட்டத்தில் உள்ள தண்ணீர் நிரப்பும் நிலையங்கள் தொடர்பான பிரச்சினையால் நாளை தண்ணீர் லாரிகள் இயங்காது என தண்ணீர் லாரிகள் உரிமையாளர்கள் அறிவித்திருந்தனர்.
கோரிக்கைகள் ஏற்கப்பட்டதால் தண்ணீர் லாரிகள் நாளை வழக்கம் போல் இயங்கும் என அதன் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
மேலும், செயல்படாமல் இருந்த தண்ணீர் நிரப்பும் நிலையத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து சரி செய்ததால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
- பத்திர எழுத்தர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
- லஞ்சம் கொடுப்பவர்களுக்கு முன்னுரிமை தரப்படுகிறது.
பல்லடம் :
பல்லடத்தில் பத்திர எழுத்தர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பல்லடம் சார் -பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடுகள் நடப்பதாகவும் இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் வரும் ஜூன் 12-ந் தேதி முதல் 17-ந்தேதி வரை வேலை நிறுத்தம் செய்வதாக முடிவு எடுக்கப்பட்டது. இது குறித்து பல்லடம் பத்திர எழுத்தர்கள் சங்க நிர்வாகிகள் ஜெகதீசன், பாலசுப்பிரமணியம்,வழக்கறிஞர் சக்திவேல் ஆகியோர் கூறியதாவது:- பல்லடம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் முறைகேடுகள் நடைபெறுகிறது. லஞ்சம் பெறுவதற்காக, பல்வேறு காரணங்களை கூறி பத்திரப்பதிவுகளை தாமதப்படுத்து கின்றனர்.மேலும் லஞ்சம் கொடுப்பவர்களுக்கு முன்னுரிமை தரப்படுகிறது. கொடுக்க மறுப்பவர்களுக்கு உரிய நேரத்தில் பத்திரங்களை பதிவு செய்யாமல் வேண்டுமென்றே இழுத்தடிப்பதும், பொருத்தம் இல்லாத காரணங்களை கூறி நிராகரிப்பதும் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து நியாயம் கேட்டால், பத்திர எழுத்தர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதுகுறித்து பலமுறை மேல் அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே பல்லடம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் முறையாக பத்திரப்பதிவு மேற்கொள்ள வேண்டும். லஞ்சம், முறைகேடுகள் களையப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிற 12-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து பத்திரப்பதிவு அலுவலர்கள் கூறியதாவது :- முறையாக ஆவணங்கள் வைத்தால் கண்டிப்பாக பத்திரப்பதிவு செய்து தரப்படுகிறது. கோவில் நிலம், மூலப் பத்திரம் இல்லாமல் இருப்பது. பட்டா மாறுதல் செய்யாமல் இருப்பது போன்ற தவறுகள் உள்ள ஆவணங்கள் மட்டுமே திருப்பி அனுப்பப்படுகிறது. அதுவும் ஒரு சிலர் மட்டும் அதுபோன்ற பத்திரங்களை தாக்கல் செய்கின்றனர். தவறு உள்ள பத்திரங்களை பதிவு செய்தால், எங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். எனவே தவறு இல்லாமல் பத்திரங்கள் வரும் பட்சத்தில் பத்திரப்பதிவு நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக பழைய மகாபலிபுரம் சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் கழிவுநீர் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடுகிறது.
- லாரி உரிமையாளர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.
சென்னை:
வீடு மற்றும் வணிக நிறுவனங்கள், 14420 என்ற எண்ணை பயன்படுத்தி கழிவுநீரை லாரி மூலம் வெளியேற்றும் திட்டத்தையும் குடிநீர் வாரியம் செயல்படுத்த திட்டமிட்டது. இனி இந்த எண் மூலம் வரும் அழைப்புகளின் படி மட்டுமே கழிவு நீர் அகற்றும் பணியை மேற்கொள்ள வேண்டும் என தனியார் லாரிகளுக்கு குடிநீர் வடிகால் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை திரும்ப பெறக்கோரி லாரி உரிமையாளர்கள் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று 3-வது நாளாக அவர்களின் போராட்டம் நீடிக்கிறது. இதனால் சென்னை பெருங்குடி, நெசப்பாக்கம், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட கழிவு நீர் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு உள்ளன. சென்னை பழைய மகாபலிபுரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலை, கோவிலம்பாக்கம், பள்ளிக்கரணை, மடிப்பக்கம் பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகள், தனியார் நிறுவனங்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் கழிவுநீரை அகற்ற லாரிகளையே நம்பி இருக்கிறார்கள்.
இங்கிருந்து அகற்றப்படும் கழிவுநீர் 1000-க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் பெருங்குடி மற்று சோழிங்கநல்லூர் பகுதிகளில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. தற்போது லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக பழைய மகாபலிபுரம் சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் கழிவுநீர் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இதையடுத்து லாரி உரிமையாளர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.
- பணி நியமனம் செய்யக்கோரி 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- கொரோனா காலங்களில் உயிரை பணயம் வைத்து குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்தோம்
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சியில் பணியாற்றி வரும் தற்காலிக துப்புரவு பணியாளர்களில் 50 வயதிற்கு மேல் உள்ளவர்களை பணி நீக்கம் செய்ததற்கு கண்டனம் தெரிவித்தும், மீண்டும் அவர்களை பணி நியமனம் செய்யக்கோரி 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் இன்று காலை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தை கை விடுமாறு நகராட்சி ஆணையாளர் விநாயகம் பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் சுமூக முடிவு ஏற்படாததால் தூய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலக வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தற்காலிக தூய்மை பணியாளர்கள் கூறுகையில்,
கொரோனா காலங்களில் உயிரை பணயம் வைத்து குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்தோம். தற்போது திடீரென ஆட்குறைப்பு என்ற பெயரில் எங்களை வேலைக்கு வர வேண்டாம் என சொன்னால் எங்களின் குடும்பம் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
எனவே தூய்மைப் பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கக்கூடாது. தொடர்ந்து பணி வழங்க வேண்டும் என்றனர். இதையடுத்து அவர்களுடன் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
தூய்மைபணியாளர்கள் ஸ்டிரைக் காரணமாக பல்லடம் நகராட்சி பகுதியில் இன்று காலை குப்பைகள் அகற்றும் பணி பாதிக்கப்பட்டது. இதனால் பல இடங்களில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடந்தது.
- எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி 22 மீனவர்களையும், 4 விசைப்படகுகளையும் சிறைபிடித்து சென்றனர்.
- நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் ராமேசுவரம், பாம்பன் பகுதி மீனவர்களை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்துவோம்.
ராமநாதபுரம்:
தமிழகத்தில் 60 நாட்கள் மீன்பிடி தடை காலம் முடிந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக மீனவர்கள் கடலுக்கு சென்று வருகின்றனர். ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் ஆர்வத்துடன் மீன்பிடிக்க சென்றனர்.
ஆனால் கடந்த வாரம் இலங்கை கடற்படையினரின் அச்சுறுத்தல் காரணமாக ராமேசுவரம் மீனவர்கள் பாதியிலேயே கரை திரும்பும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 22-ந்தேதி புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் நெடுந் தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி ஜெகதாபட்டினம் மற்றும் மண்டபம் பகுதிகளை சேர்ந்த 22 மீனவர்களையும், 4 விசைப்படகுகளையும் சிறைபிடித்து சென்றனர். அவர்கள் இலங்கை ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இலங்கை அரசிடம் பேசி மீனவர்களை மீட்க மத்திய-மாநில அரசு கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அந்த கோரிக்கையை வலியுறுத்தி மண்டபம் பகுதியில் உள்ள கோவில்வாடி கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
இதன் காரணமாக மண்டபம் இறங்குபிடி தளத்தில் 150-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து மீனவர்கள் கூறியதாவது:-
கடந்த 22-ந்தேதி இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களில் மண்டபம் பகுதியை சேர்ந்தவர்களும் அடங்குவர். மண்டபம் பகுதி மீனவர்கள் உள்பட 22 பேரை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதனை வலியுறுத்தி இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். இதன் பின்பும் நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் ராமேசுவரம், பாம்பன் பகுதி மீனவர்களை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- தமிழகம் முழுவதும் கடந்த 5 நாட்களாக கல்குவாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர்:
தமிழகம் முழுவதும் கடந்த 5 நாட்களாக கல்குவாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து ஹாலோ பிளாக் உற்பத்தியாளா்கள் கூறியதாவது:-
ஹாலோ பிளாக் உற்பத்தியாளா்கள் சங்கத்தினரின் போராட்டத்தால் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 400 ஹாலோ பிளாக் உற்பத்திக் கூடங்களில் தினசரி ரூ.1.50 கோடி மதிப்பிலான உற்பத்தி இழப்பு ஏற்படும். இந்தத் தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 ஆயிரம் போ் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனா். உற்பத்தி நிறுத்த அறிவிப்பால் அவா்களுக்கு வேலை இழப்பு ஏற்படும்.
அதே போல கட்டட கட்டுமானம் மற்றும் கட்டட பராமரிப்புப் பணிக்கு சில்லறை விலையில் கிடைக்கக்கூடிய எம்.சான்ட், பி. சான்ட், சிமென்ட், சிலாப், செங்கல், ஜல்லி போன்றவை கிடைப்பது தடைபடும். போராட்டம் நீடித்தால் கட்டடப் பணிகள் முழுமையாக முடங்கும் அபாயம் ஏற்படும் என்றனா்.
- சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட கல்குவாரி, மற்றும் கிரஷர்கள் இயங்கி வருகிறது.
- சென்னையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதால் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
பல்லடம்:
பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட கல்குவாரி, மற்றும் கிரஷர்கள் இயங்கி வருகிறது. இந்த நிலையில் கல்குவாரி தொழிலுக்கு உரிய முறையில் அனுமதி வழங்கவும், லைசன்ஸ் வழிமுறைகளை எளிதாக்கவும், சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் ஏற்படும் அச்சுறுத்தல்களை தடுக்கவும் வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த ஜூன்.26 ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் கல்குவாரிகள், கிரஷர்கள், டிப்பர் லாரிகள் ஆகியவற்றின் உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த 9 நாட்களாக பல்லடம் பகுதியில் பல கல்குவாரிகள், கிரஷர்கள், டிப்பர் லாரிகள் இயங்கவில்லை. பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் ஒரே இடத்தில் 700 க்கும் மேற்பட்ட லாரிகளை நிறுத்தி வைத்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த போராட்டத்தால் சுமார் ரூ.1600 கோடி அளவிற்கு உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதால் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக கல்குவாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர். வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து பல்லடத்தில் கல்குவாரிக ள் கிரசர்கள் வழக்கம் போல் இயங்க தொடங்கின.
- இலங்கை கடற்படையின் அத்துமீறலை கண்டித்து இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதென முடிவு செய்தனர்.
- ராமேசுவரம் பகுதியில் மட்டும் ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை வர்த்தகம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ராமேசுவரம்:
வங்கக்கடலில் மீன் பிடிக்க செல்லும் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை உள்ளிட்ட தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். எல்லை தாண்டி வந்ததாக கூறி மீனவர்களின் படகுகளையும், மீனவர்களையும் சிறைப்பிடித்து செல்லும் சம்பவம் சமீப காலமாக அதிகரித்துள்ளது.
அவ்வாறு சிறைப்பிடிக்கப்படும் மீனவர்கள் இலங்கை கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்படுகிறார்கள். மத்திய, மாநில அரசுகளின் பேச்சுவார்த்தை அடிப்படையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டபோதிலும், மீனவர்களின் படகுகளை இலங்கை நாட்டுடமையாக்கி வருகிறது.
இதனால் விடுதலையானபோதும், வெறும் கையுடன் தாயகம் திரும்பும் மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்து மாற்று தொழிலை தேடி வருகிறார்கள். இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்ற கோரிக்கை பன்னெடுங்காலமாக நீடித்து வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் ராமேசுவரத்தில் இருந்து ராமேசுவரம், தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த 1,800-க்கும் மேற்பட்ட மீனவர்கள் 420 விசைப்படகுகளில் மீன்துறை அலுவலக அனுமதியுடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
அவர்கள் இந்திய கடல் எல்லையான கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே வலைகளை விரித்து மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி பாலா, கிரீம்ஸ் ஆகியோருக்கு சொந்தமான படகுகளில் சென்ற 15 மீனவர்களை சிறைப்பிடித்தனர்.
அவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த மீன்களையும் அபகரித்துக் கொண்டதோடு, மீனவர்களை காங்கேசன்துறை முகாம் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையே மீன்பிடி தடை காலம் முடிந்து ஒரு மாதம் ஆவதற்குள் இரண்டு முறை மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் சக மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காலம் காலமாய் நடக்கும் இதுபோன்ற இலங்கை கடற்படையின் அத்துமீறலை கண்டித்து இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதென முடிவு செய்தனர்.
அதன்படி இன்று ராமேசுவரம், தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த 820 விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதன் காரணமாக 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலையிழந்து உள்ளனர்.
அதேபோல் மீன்பிடி தொழிலை சார்ந்த ஐஸ் பேக்டரிகள், மீன்கூடை தூக்கும் தொழிலாளர்கள், டீசல் விநியோக நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் என சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியின்றி வீடுகளுக்குள் முடங்கினர்.
இன்று ஒருநாள் மீனவர்கள் வேலைநிறுத்தம் காரணமாக ராமேசுவரம் பகுதியில் மட்டும் ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை வர்த்தகம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
- வேலைநிறுத்தம் 2-வது நாளாக தொடருகிறது
- தினமும் ரூ.90 கோடி வர்த்தகம் பாதிப்பு மற்றும் 10 லட்சம் பேருக்கு வேலையிழப்பு
கருமத்தம்பட்டி,
தமிழகத்தில் 1000-க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் இயங்கி வருகின்றன. அங்கு பஞ்சில் இருந்து நூல் எடுத்து ஆடைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் பஞ்சு இறக்குமதி வரி, மின்கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் நுாற்பா லைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே துணி களை ஏற்றுமதி செய்வதிலும் சிக்கல் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இயங்கி வரும் நுாற்பாலைகள் பஞ்சு இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும், மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும், வங்கி கடன் வட்டி விகி தங்களை 7.5 சதவீதமாக குறைக்க வேண்டும், துணி வகைகள் ஏற்றுமதியை மத்திய அரசு ஊக்குவிக்க வேண்டும், அந்நிய துணிகள், நூல் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக நூற்பாலை சங்கங்கள் ஏற்கெனவே அறிவித்து இருந்தன. அதன்படி இந்த வேலை நிறுத்தம் நேற்று முதல் தொடங்கி நடந்து வருகிறது. இன்று 2-வது நாளாக நீடித்து வருகிறது.
தமிழகத்தில் 700-க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் உண்டு. அவற்றில் 500 ஆலைகள் கோவை மாவட்டத்தில் உள்ளன. அவை நேற்று முதல் காலவரையறையின்றி மூடப்பட்டு உள்ளன. இத னால் அங்கு நாளொன் றுக்கு 35 லட்சம் கிலோ நூல் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே அங்கு தினமும் ரூ.90 கோடி வர்த்த கம் பாதிக்கப் பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் நூற்பாலை களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகி ன்றனர்.
இந்த நிலையில் நூற் பாலை களின் வேலைநி றுத்தம் காரண மாக அவர்க ளுக்கும் வேலையிழப்பு ஏற்பட்டு உள்ளது.
- பொது மக்களும், சுற்றுலா பயணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
- விமான நிலையங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
ரோம்:
இத்தாலியில் ஊதிய உயர்வு கோரியும், ஒப்பந்தத்தை நீட்டிக்க வலியுறுத்தியும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமான நிலைய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இதனால் ரோம், வெனிஸ், மிலன் நகரங்களின் விமான நிலையங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
இதனால் பொது மக்களும், சுற்றுலா பயணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். கோடை விடுமுறை காலத்தில் சுற்றுலா பயணிகள் அதிகமாக கூடும் ரோம், வெனிஸ் போன்ற நகரங்களில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதால், சுற்றுலா பயணிகளும் சுற்றுலாவை நம்பி தொழில் செய்பவர்களும் சோகத்தில் உள்ளனர்.
இதற்கிடையே இத்தாலியில் 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் விமானத்தில் பயணம் செய்ய முடியாமல் தவித்து வருகிறார்கள்.
ரோம் நகரில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட விமானங்களும் மிலன் நகரில் 150-க்கும் மேற்பட்ட விமானங்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அந்நாட்டின் போக்குவரத்து துறை மந்திரி கூறும்போது, விமான நிலைய பணியாளர்கள் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகளையும், மக்களையும் சிரமப்படுத்தாமல் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்றார்.
- தமிழகத்தில் பஞ்சாலைகளுக்கான மூலப்பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.
- தமிழகம் முழுவதும் 600-க்கும் மேற்பட்ட பஞ்சாலைகள் உள்ளன.
கோவை:
தமிழகத்தில் சிறு-குறு நூற்பாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு நூல் பொருட்கள் தயார் செய்யப்பட்டு ஆடை நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இதற்கிடையே நூற்பாலைகளுக்கான மூலப்பொருட்களின் விலையை மத்திய அரசு அதிகரித்தது. இன்னொருபுறம் மாநில அரசு மின்கட்டண உயர்வை அமல்படுத்தியது. இதனால் பஞ்சு மில்கள் செலவை சமாளிக்க முடியாமல் திணறின.
இந்த நிலையில் தமிழகத்தில் பஞ்சாலைகளுக்கான மூலப்பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், துணிகள் ஏற்றுமதிக்கான வரியை குறைக்க வேண்டும், வெளிநாட்டில் இருந்து ஆடைகள் இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்த வேண்டும், வங்கிகளில் கடன்வட்டி உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் பஞ்சாலைகள் கடந்த வாரம் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தன.
எனவே அவர்களுடன் மத்திய-மாநில அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் உடன்பாடு எட்டப்பட வில்லை.
இதனை தொடர்ந்து கோவை, திருப்பூர் உள்பட தமிழகம் முழுவதும் சிறு, குறு நூற்பாலைகள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கின. அவர்களின் போராட்டம் தற்போது 3-வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது.
தமிழகம் முழுவதும் 600-க்கும் மேற்பட்ட பஞ்சாலைகள் உள்ளன. இங்கு சுமார் 1.5 லட்சம் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அங்கு தினமும் சுமார் 35 லட்சம் கிலோ நூல்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன.
இந்த நிலையில் தமிழக பஞ்சாலைகளின் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் காரணமாக, அங்கு வேலை பார்த்த 1.5 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு ஏற்பட்டு உள்ளது. இன்னொருபுறம் பஞ்சாலைகள் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை பார்த்து வந்த சுமார் 10 லட்சம் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழகம் முழுவதும் பஞ்சாலைகளின் காலவரையற்ற வேலைநிறுத்தம் காரணமாக, கடந்த 3 நாளில் மட்டும் சுமார் 10 ஆயிரம் டன் நூல் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அங்கு ரூ.350 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
இதற்கிடையே காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பஞ்சாலை நிறுவனங்களுடன் மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதில் முக்கிய முடிவுகள் எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ஈரோடு பார்க் ரோட்டில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு ஜவுளி, மஞ்சள், எண்ணெய் வகைகள் அனுப்ப முடியாமல் குடோன்களில் தேங்கி இருக்கின்றன.
ஈரோடு:
ஈரோட்டில் உள்ள லாரி புக்கிங் மற்றும் டெலிவரி குடோன்களில் சுமை தூக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கூலி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13-ந் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 6 வருடங்களாக கூலி உயர்வு வழங்கப்படாததை கண்டித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் ஈரோடு பார்க் ரோட்டில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்று வருகின்றனர்.
இந்நிலையில் அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் சரக்கு லாரி புக்கிங் சங்க நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்ற பேச்சுவார்த்தை நேற்று மாலையில் நடைபெற்றது.
இதில் இரு தரப்பினரும் தங்களது தரப்பு விளக்கத்தை அமைச்சரிடம் தெரிவித்தனர். இருதரப்பு விவரங்களையும் கேட்டறிந்த பிறகு லாரி டிரான்ஸ்போர்ட் அலுவலகம் தரப்பில் 6 பேரும், தொழிற்சங்க நிர்வாகிகள் 6 பேரும் பொது நபராக ஒரு வக்கிலும் என 13 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்றும், இந்த குழுவின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
எனினும் இன்று 7-வது நாளாக சுமை தூக்கும் தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. இதன் காரணமாக ஈரோட்டில் இருந்து வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு ஜவுளி, மஞ்சள், எண்ணெய் வகைகள் அனுப்ப முடியாமல் குடோன்களில் தேங்கி இருக்கின்றன.
கிட்டத்தட்ட ரூ.600 கோடி மதிப்பிலான சரக்குகள் தேங்கி கிடப்பதால் லாரி டிரான்ஸ்போர்ட் உரிமையாளர்கள் அவதி அடைந்துள்ளனர்.
பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்ட குழு இன்று மீண்டும் இரு தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு சுமூகமான முடிவு ஏற்படுமா? என எதிர்பார்க்கப்படுகிறது.