என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "காந்தி"
- அம்பேத்கர் சாலையில் வாழ்ந்தாலும் சாதிப் பாகுபாடுகள் பற்றி எனக்கு போதிய அளவிற்கு தெரியாது.
- அம்பேத்கருக்கும் காந்திக்கும் இடையே நடக்கும் விவாதத்தைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.
மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையாக உள்ளார். அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி ஜான்வி கபூர் பிஸியாக நடித்து வருகிறார்.
அண்மையில் ஜான்வி கபூர் நடிப்பில் வெளியான Mr & Mrs மஹி படம் மக்களிடையே வரவேற்பை பெற்றது.
தி லாலன்டோப் சினிமா யூட்யூப் சேனலில் Mr & Mrs மஹி படம் தொடர்பாக ஜான்வி கபூர் பேட்டி அளித்திருந்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அப்போது வைரலானது.
அந்தப் பேட்டியில் பேசிய ஜான்வி கபூர் தனக்கு வரலாற்றில் அதிக ஆர்வம் இருப்பதாக கூற, உடனே நெறியாளர், 'வரலாற்றின் எந்த காலக்கட்டத்துக்கு செல்ல விரும்புகிறீர்கள்' என்று கேட்கிறார். அதற்கு அவர், "மகாத்மா காந்திக்கும், அம்பேத்கருக்கும் இடையில் 'சாதி' குறித்து அவர்களின் பார்வையையும், கருத்துகளையும், விவாதங்களையும் அறிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.
அம்பேத்கருக்கும் காந்திக்கும் இடையே நடக்கும் விவாதத்தைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும். அவர்களின் சித்தாந்தங்களுக்கு இடையிலான உரையாடலையும், பல்வேறு விஷயங்களில் அவர்கள் கொண்டிருந்த பார்வையையும் அறிந்துகொள்ளலாம்.
சாதி குறித்த தன்னுடைய நிலைப்பாட்டில் தொடக்கத்திலிருந்தே அம்பேத்கர், தெளிவாகவும், கடுமையாகவும் இருந்தார் என நினைக்கிறேன். ஆனால் காந்தியின் பார்வை தொடர்ந்து வளர்ந்து வந்தது என்று நான் நினைக்கிறேன்.
நம் சமூகத்தில் இருக்கும் இந்த சாதிய பிரச்சினை பொறுத்தவரை, மூன்றாவது நபரின் கண்ணோட்டத்திலிருந்து அதை பார்ப்பதற்கும், அந்த வாழ்க்கையை வாழ்வதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது" என்றார்.
ஜான்வி ஒரு நடிகை என்பதை தாண்டி சமூகத்தைப் பற்றிய அவரது பரந்த புரிதல் பெரும்பாலான மக்களை கவர்ந்தது.
அதே சமயம் பட ப்ரோமோஷனுக்காக ஜான்வி கபூர் செய்த PR ஸ்டண்ட் இதுவென சமூக வலைத்தளங்களில் சிலர் குற்றம் சாட்டினர்.
தற்போது அம்பேத்கர் - காந்தி தொடர்பாக பேசியது பற்றி ஜான்வி கபூர் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், "அம்பேத்கர் - காந்தி தொடர்பாக பேட்டி கொடுத்ததற்கு அடுத்து என்னுடைய PR டீமிடம் ஏதாவது தவறாக பேசி விட்டேனா என்று கேட்டேன். அவர்கள் அம்பேத்கர் - காந்தி பற்றி பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும். என்ன நடக்கிறதென்று பொறுத்திருந்து பார்ப்போம் என்று தெரிவித்தனர். பின்னர் நானும் அதை நினைத்து பதற்றமடைந்தேன். பட வெளியீட்டிற்கு முன்பு எந்த சர்ச்சையும் வேண்டாம் என்று நினைத்து பேட்டியின் அந்த குறிப்பிட்ட பகுதியை நீக்க வேண்டும் என்று யூட்யூப் சேனல் நிர்வாகியிடம் தெரிவித்தேன். ஆனால் அவர் அதனை மறுத்து விட்டார்.
அம்பேத்கர் சாலையில் வாழ்ந்தாலும் சாதிப் பாகுபாடுகள் பற்றி எனக்கு போதிய அளவிற்கு தெரியாது. அம்பேத்கர் எழுதிய சாதியை அழித்தொழித்தல் புத்தகத்தை படித்தது எனது சிந்தனைகளை மாற்றியமைத்தது.
அம்பேத்கரின் இந்த புத்தகம் தான் நம் சமூகத்தில் வர்க்க பாகுபாடும் சாதிப் பாகுபாடும் எவ்வாறு வேரூன்றியுள்ளது என்பதை எனக்கு உணர்த்தியது. நாம் அதை பற்றி பேசுவது இல்லை. அதற்காக நாம் வெட்கப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- காந்தி வழி வந்தேன் என்று நாடகமாடினால் செய்த குற்றங்கள் இல்லை என்று ஆகிவிடுமா?
- குண்டாஸ் வழக்கில் செல்வப்பெருந்தகை கைது செய்யப்பட்டிருந்ததை இல்லை என்கிறாரா?
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளபதிவில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை அவர்களை, குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர் என்று குறிப்பிட்டதற்கு, மகாத்மா காந்தி வழி வந்த தன்னை, நான் அவமானப்படுத்தி விட்டதாக செல்வப்பெருந்தகை மிகவும் வருத்தப்பட்டிருக்கிறார்.
மகாத்மா காந்தி வழி வந்த செல்வப்பெருந்தகை கடந்து வந்த பாதை.
ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கு - முக்கிய குற்றவாளி
2001 வழக்கு எண் 24(A)/2001. சிபிஐ வழக்கு ஊழல் தடுப்புச் சட்டம் 1988, பிரிவு 13(2) r/w 13(1) (e)
2003வழக்கு எண் 136/2003இபிகோ 307 – கொலைமுயற்சி
2003வழக்கு எண் 138/2003 – தாக்குதல்
2003வழக்கு எண் 277/03 – கொலை மிரட்டல்
2003வழக்கு எண் 451/2003இபிகோ 324 – பயங்கர ஆயுதங்களால் தாக்குதல், இபிகோ 506 – கொலை மிரட்டல், வெடிபொருள்கள், 1908.
இந்த வழக்கில், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
2008வழக்கு எண் 1464/2003 இபிகோ 147 – கலவரம் செய்தல், இபிகோ 148 – பயங்கர ஆயுதங்களால் கலவரம் செய்தல், இபிகோ 506 – கொலைமிரட்டல்
கொலைமுயற்சி வழக்கு, கொலை மிரட்டல் வழக்கு, பயங்கர ஆயுதங்களால் தாக்கிய வழக்கு, பயங்கர ஆயுதங்களைப் பயன்படுத்திக் கலவரம் செய்த வழக்கு, வெடிபொருள்கள் வழக்கு, கொலை வழக்கு என பல வழக்குகள், சமூகத்தில் மோசமான குற்ற வழக்குகள்தான். குறிப்பாக, கொலை மிரட்டல் வழக்குகள் மட்டுமே மூன்று வழக்குகள் அவர் மீது தொடரப்பட்டிருந்தன. இது தவிர, ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கு.
குண்டாஸ் வழக்கில் அவர் கைது செய்யப்பட்டிருந்ததை இல்லை என்கிறாரா? இவரை வேறு எப்படிக் குறிப்பிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்? வாழும் மகாத்மா என்றா? அரசியல் லாபங்களுக்காகவும், தன் மீதுள்ள குற்ற வழக்குகளில் இருந்து தப்பிக்கவும், தனது கொள்கைக்கு நேரெதிர் கட்சியில் இணைந்து, காந்தி வழி வந்தேன் என்று நாடகமாடினால் செய்த குற்றங்கள் இல்லை என்று ஆகிவிடுமா?
செல்வப்பெருந்தகை குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர் என்ற கருத்தில் இருந்து நான் பின்வாங்கப் போவதில்லை. செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்கும் வழக்கமும் எனக்கில்லை. செல்வப்பெருந்தகை எங்கு வேண்டுமானாலும் வழக்கு தொடரட்டும். அவரை நீதிமன்றத்தில் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
- எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற அவையின் மொத்த இடங்களில் 10 சதவீத தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும்.
- நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 328 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 99 தொகுதிகளில் வெற்றிபெற்றது.
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சி கடந்த 10 ஆண்டாக பல தோல்விகளைச் சந்தித்து வந்தது. இதனால் நாடுமுழுவதும் காங்கிரஸ்காரர்கள் சோர்வில் இருந்தனர்.
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெறுவதற்கு அவையின் மொத்த இடங்களில் குறைந்தபட்சம் 10 சதவீத இடங்களில், அதாவது சுமார் 55 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும்.
நடந்து முடிந்த 18-வது பாராளுமன்ற தேர்தலில் 328 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 99 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனால் அக்கட்சிக்கு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்தது.
இந்நிலையில், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரான ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், சத்ரபதி சிவாஜி மகாராஜ், மகாத்மா காந்தி, டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஆகியோரின் சிலைகள் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள முக்கிய இடங்களில் இருந்து அகற்றப்பட்டுள்ளன. இது கொடுமையானது என பதிவிட்டுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.
- மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையாக உள்ளார்.
- ஜான்வி கபூர், கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் மாகி (Mr & Mrs Mahi) என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
ஜான்வி கபூர் நடித்துள்ள Mr & Mrs மஹி படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையாக உள்ளார். அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வரும் ஜான்வி கபூர், கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் மாகி (Mr & Mrs Mahi) என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். ராஜ்குமார் ராவ் நடித்துள்ள இந்தப் படம் வரும் மே 31 ஆம் தேதி வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.
இந்நிலையில், தி லாலன்டோப் சினிமா யூட்யூப் சேனலில் படம் தொடர்பாக ஜான்வி கபூர் பேட்டியளித்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
அந்தப் பேட்டியில் பேசிய ஜான்வி கபூர் தனக்கு வரலாற்றில் அதிக ஆர்வம் இருப்பதாக கூற, உடனே நெறியாளர், 'வரலாற்றின் எந்த காலக்கட்டத்துக்கு செல்ல விரும்புகிறீர்கள்' என்று கேட்கிறார். அதற்கு அவர், "மகாத்மா காந்திக்கும், அம்பேத்கருக்கும் இடையில் 'சாதி' குறித்து அவர்களின் பார்வையையும், கருத்துகளையும், விவாதங்களையும் அறிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.
அம்பேத்கருக்கும் காந்திக்கும் இடையே நடக்கும் விவாதத்தைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும். அவர்களின் சித்தாந்தங்களுக்கு இடையிலான உரையாடலையும், பல்வேறு விஷயங்களில் அவர்கள் கொண்டிருந்த பார்வையையும் அறிந்துகொள்ளலாம்.
சாதி குறித்த தன்னுடைய நிலைப்பாட்டில் தொடக்கத்திலிருந்தே அம்பேத்கர், தெளிவாகவும், கடுமையாகவும் இருந்தார் என நினைக்கிறேன். ஆனால் காந்தியின் பார்வை தொடர்ந்து வளர்ந்து வந்தது என்று நான் நினைக்கிறேன்.
நம் சமூகத்தில் இருக்கும் இந்த சாதிய பிரச்சினை பொறுத்தவரை, மூன்றாவது நபரின் கண்ணோட்டத்திலிருந்து அதை பார்ப்பதற்கும், அந்த வாழ்க்கையை வாழ்வதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது" என்றார்.
அவரிடம், "உங்கள் பள்ளியில் சாதி குறித்து விவாதம் நடக்குமா?" என நெறியாளர் கேட்க, "பள்ளி மட்டுமல்ல, எனது வீட்டிலும் கூட அது தொடர்பான விவாதம் நடந்தது கிடையாது" என்றார்.
ஜான்வி ஒரு நடிகை என்பதை தாண்டி சமூகத்தைப் பற்றிய அவரது பரந்த புரிதல் பெரும்பாலான மக்களை கவர்ந்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்போவதாக கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
- தமிழக ஆளுநராக பொறுப்பேற்றது முதல் தமிழ் மக்களின் பண்பாட்டை சிறுமைப்படுத்துகிற வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
ஆங்கிலேயர்களிடம் இருந்து நாடு சுதந்திரம் பெறுவதற்கு காந்தியின் போராட்டம் பலன் அளிக்கவில்லை என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியது, சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்போவதாக அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"இந்திய விடுதலை போராட்டத்துக்காக சத்தியம், அகிம்சை ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் ஒத்துழையாமை இயக்கம், சட்ட மறுப்பு இயக்கம் ஆகியவற்றின் மூலம் பல்வேறு போராட்டங்களை நடத்தி, இந்திய விடுதலையைப் பெற்றுத் தருவதற்கு தமது வாழ்நாளையே அர்ப்பணித்தவர் தேசப்பிதா மகாத்மா காந்தியடிகள்.பல்வேறு மதம், மொழி, சாதி, இன வேறுபாடுகளைக் கடந்து அனைத்து இந்தியர்களையும் ஒன்று திரட்டி, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை நடத்தி இந்திய தேசிய காங்கிரசை வழிநடத்தியவர் மகாத்மா காந்தி. அவரது விடுதலைப் போராட்ட பங்களிப்பை கொச்சைப்படுத்துகிற வகையில், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கருத்து கூறியிருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.
தமிழக ஆளுநராக பொறுப்பேற்றது முதற்கொண்டு, தமிழக நலன்களுக்கு விரோதமாகவும், தமிழ் மக்களின் பண்பாட்டை சிறுமைப்படுத்துகிற வகையிலும் அவர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இந்தியாவுக்கு விடுதலையை பெற்றுத் தந்தது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தான் என்றும், மகாத்மா காந்தி அல்ல என்றும் கூறியிருப்பது அனைவரையும் கொதிப்படைய வைத்திருக்கிறது. இந்திய விடுதலைப் போராட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பங்கை பெருமையாக பேசுவதற்கு பதிலாக அவரை மகாத்மா காந்தியோடு ஒப்பிட்டு பேசுவது வரலாற்றுத் திரிபுவாதமாகும்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் மகாத்மா காந்தியின் பங்களிப்பை அங்கீகரித்து அவரது வாழ்த்துகளை பெற்றவர் சுபாஷ் சந்திரபோஸ். விடுதலைப் போராட்டத்தில் அகிம்சை முறையை கையாண்டவர் மகாத்மா காந்தி. அதற்கு மாறாக, ஆயுதம் ஏந்திய போராட்டம் நடத்தியவர் சுபாஷ் சந்திரபோஸ். இவர்களது பங்களிப்பை அனைத்து இந்தியர்களும் மனமுவந்து ஏற்றுக் கொண்டு போற்றி பாராட்டி வருகிறார்கள்.
இவ்விருவரிடையே பேதம் கற்பிக்கிற வகையில் கருத்துகளை ஆர்.என். ரவி கூறியிருப்பது வரலாற்றை சரியாக அறிந்தும் அதை திரித்து பேசுவது மலிவான அரசியலாகும். இதை அவர் அரசியல் உள்நோக்கத்தோடு செய்து வருகிறார்.மகாத்மா காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சேவை தியாகி என்று போற்றுகிற பாரம்பரியத்தில் வந்த ஆர்.என். ரவி போன்றவர்கள் இத்தகைய கருத்துகள் கூறுவதை எவரும் அனுமதிக்க முடியாது.
ஆட்டை கடித்து, மாட்டை கடித்து கடைசியாக உலகம் போற்றி மகிழும் மகாத்மாவின் பெருமைகளை சிறுமைப்படுத்த முயலும் ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் வருகிற ஜன. 27 சனிக்கிழமை காலை 11 மணியளவில் சென்னை சைதாப்பேட்டை சின்னமலை ராஜிவ்காந்தி சிலையிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு, ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் எனது தலைமையில் நடைபெறும். இதில், சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் முன்னிலை வகிப்பார்கள். அதேபோல, தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் தங்களது மாவட்டத்துக்குட்பட்ட ஏதாவது ஒரிடத்தில் தமிழக ஆளுநரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
இந்தியாவின் அடையாளமாக உலக நாடுகள் மத்தியில் போற்றத்தக்க வகையில் அனைத்து மக்களாலும் நேசிக்கப்படுபவர் தேசப்பிதா மகாத்மா காந்தி. அவரை கொச்சைப்படுத்துவது 140 கோடி இந்தியர்களையும் அவமானப்படுத்துவதாகும். அதை அனுமதிக்க முடியாத வகையில், ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக நடைபெற மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் தீவிர முனைப்புடன் சிறப்பான ஏற்பாடுகளை செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.
- எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் தலைமையில் காந்திய ஆதரவாளர்கள் சிலை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- பொதுமக்கள் கம்பம் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பம்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் தேரடி என்ற இடத்தில் தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் நின்ற நிலையில் உள்ள சிலை உள்ளது. இந்த சிலைக்கு காந்தி ஜெயந்தி, சுதந்திரதினம், குடியரசு தினம் உள்ளிட்ட நாட்களில் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவர். இந்த சிலையை சுற்றி தற்காலிக கம்பி வேலியும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் காந்தியின் சிலையை உடைத்து சேதப்படுத்தி சென்றுள்ளனர்.
கைத்தடி ஊன்றியது போல இருந்த சிலையின் பாகம் உடைக்கப்பட்டு அகற்றப்பட்டு இருந்தது. இன்று அதிகாலை இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் கம்பம் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் ஏதேனும் பொருத்தப்பட்டுள்ளதா என்றும் அதில் சிலையை உடைத்த நபர்களின் உருவம் பதிவாகியுள்ளதா என்றும் சோதனை செய்து வருகின்றனர்.
இதனிடையே காந்தி சிலை உடைக்கப்பட்ட சம்பவம் அறிந்ததும் த.மா.கா. முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் தலைமையில் காந்திய ஆதரவாளர்கள் சிலை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிலையை சேதப்படுத்திய கும்பலை உடனடியாக கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்ததால் கம்பத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.
அரியலூர்
இந்திரா காந்தி நினைவு நாளையொட்டி அரியலூர் செட்டி ஏரிக்கரையிலுள்ள காந்தி-காமராஜர் சிலை அருகே வைக்கப்பட்டுள்ள இந்திரா காந்தி படத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் ஆ.சங்கர், நகரத் தலைவர் மா.மு.சிவக்குமார், மகளிரணித் தலைவி மாரியம்மாள், இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் புகழ், வட்டாரத் தலைவர்கள் அரியலூர் கண்ணன், திருமானூர் கங்காதுரை, திருநாவுக்கரசு உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் நிர்வாகிகள் அனைவரும் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து, சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளையொட்டி அவரது படத்துக்கு அக்கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
- கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்
- 77-வது சுதந்திரதினத்தையொட்டி நடந்தது
கன்னியாகுமரி :
இந்தியாவின் 77-வது சுதந்திர தின விழாவை யொட்டி கன்னியாகுமரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள காந்தி நினைவு மண்டபம் மற்றும் காமராஜர் மணிமண்டபம் இரவில் மின்னொளியில் ஜொலிக்கும் வகையில் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுஉள்ளது. தேசியக் கொடியில் உள்ள மூவர்ணங்களை பிரதிபலி க்கும் வகையில் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது.
இரவில் மின்னொளியில் ஜொலிக்கும் காந்தி, காமராஜர் மண்டபங்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் சுற்றுலாப்பயணிகள் முன்னொழியில் விழும் காந்தி காமராஜர் மண்ட பங்களை பார்வையிட்டு செல்வதோடு மட்டு மின்றி தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்துச் சென்ற வண்ணமாக உள்ளனர்.
காந்தி நினைவு மண்டபவளாகத்தில் அமைந்துள்ள மூவர்ண கொடியை தாங்கி நிற்கும் பாரத மாதா சிலையும் வர்ணங்கள் பூசப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கு வகையில் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது.
- நாட்டிற்கும், முக்கியமாக கேரளாவிற்கு மிகப்பெரிய இழப்பு- கார்கே
- நாங்கள் அவரை மிகவும் நேசித்தோம், அவரை அன்புடன் நினைவில் கொள்வோம்- ராகுல் காந்தி
கேரள மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி இன்று காலை பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது இறுதிச் சடங்கு வியாழக்கிழமை நடைபெற இருக்கிறது.
உம்மன் சாண்டி மறைவுக்கு பிரதமர் மோடி, கேரள மாநில முதல்வர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா ஆகியோர் கர்நாடகா சென்றுள்ளனர். அவர்கள் உம்மன் சாண்டி உடலுக்கு மலர்வளையம் வைத்து நேரில் அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
மல்லிகார்ஜூன கார்கே தனது இரங்கல் செய்தியில் ''நாட்டிற்கும், முக்கியமாக கேரளாவிற்கு மிகப்பெரிய இழப்பு. சிறந்த தலைவர். காங்கிரஸ் கட்சிக்காக நீண்ட காலம் பணியாற்றியவர். அவர் நேர்மையான கட்சி தலைவர். இன்று அவரை இழந்துள்ளோம். நான் மிகவும் கவலையடைகிறேன். இது மிகப்பெரிய இழப்பு'' என்றார்.
ராகுல் காந்தி தனது இரங்கல் செய்தியில் ''இந்திய மற்றும் கேரள உணர்வையும் பிரதிநிதித்துவப்படுத்தியவர். கேரள மக்களின் உண்மையான தலைவராக திகழ்ந்தவர். அவரை நாம் தவற விடுகிறோம். நாங்கள் அவரை மிகவும் நேசித்தோம், அவரை அன்புடன் நினைவில் கொள்வோம். அவரது குடும்பத்தினருக்கும், அவரை இழந்து வாடும் ஒவ்வொருவருக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்'' இவ்வாறு தெரிவித்துள்ளார்.
- அரசு பள்ளிகளுக்கு 9 லட்சம் மீட்டர் சீருடை உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது.
- காட்டன் கார்ப்பரேசன் இந்தியா மாதிரி காட்டன் கார்ப்பரேசன் தமிழ்நாடு ஆரம்பிக்கும் திட்டம் உள்ளது.
கோவை,
கோவை குறிச்சியில் உள்ள சிட்கோவில், தமிழ்நாடு பஞ்சாலைக்கழக தறி கூடத்தை கைத்தறித்துறை அமைச்சர் காந்தி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அரசு பள்ளிகளுக்கு 9 லட்சம் மீட்டர் சீருடை உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. 2 வருடங்களாக இந்த துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கபட்டு வருகிறது.
தற்போது பழைய விசைத்தறி எந்திரங்களை எடுத்து விட்டு ஏர்ஜெட் எந்திரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஏர்ஜெட் எந்திரத்தில் என்னென்ன தேவை இருக்கிறது என ஆய்வு செய்துள்ளோம்.
இப்போது 12 ஏர்ஜெட் எந்திரங்கள் இருக்கிறது. 12 ஏர்ஜெட் எந்திரங்கள் கூடுதலாக அமைக்கப்பட இருக்கிறது.
ஏர்ஜெட் எந்திரம் அமைத்து அதனுடன் சோலார் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் வருங்காலத்தில் இந்த துறை மிகவும் லாபம் இருக்கும் துறையாக மாறும்.
நம்மிடம் இயங்காமல் இருக்கும் 12 மில்லிற்கு மட்டும் 486 ஏக்கர் நிலம் இருக்கிறது. மணல்மேட்டில் உள்ள மில் 20 வருடமாக மூடி இருக்கிறது. 34 ஏக்கர் நிலம் அதற்கு இருக்கின்றது.
5 தேசிய பஞ்சாலை கழக ஆலைகள் மூடி இருக்கிறது. அதை நாம் எடுக்க முடியாது. மொத்தமாக 125 லட்சம் பேல் பஞ்சு தமிழகத்திற்கு தேவை. ஆனால் 15 லட்சம் பேல்கள் மட்டுமே இங்கு உற்பத்தியாகின்றது.
காட்டன் கார்ப்பரேசன் பஞ்சு எல்லாம் வடமாநிலங்களில் உள்ள குடோனில் இருந்து வருகின்றது. மேலும் காட்டன் விலையை நாம் நிர்ணயம் செய்ய முடியாது.
காட்டன் கார்ப்பரேசன் இந்தியா மாதிரி காட்டன் கார்ப்பரேசன் தமிழ்நாடு என ஆரம்பிக்கும் திட்டம் இருக்கிறது. போதிய நிதி இல்லாததால் தொடங்கு வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அது அமைந்து விட்டால் பருத்தியை நாம் வாங்கி இருப்பு வைத்து பருத்தி விலையை நம் கட்டுப்பாட்டில் வைக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறி னார்.ஆய்வின்போது கைத்தறிதுறை அரசு முதன்மை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், துணி நூல் துறை கமிஷனர் வள்ளலார், கைத்தறி துறை கமிஷனர் விவேகானந்தன், துணை மேயர் வெற்றிச்செல்வன் தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி உள்பட பலர் இருந்தனர்.
- திருச்சியில் மகாத்மா காந்தி பிறந்தநாள் மற்றும் காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு அவர்களது சிலைகளுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
- திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையம் அருகில் உள்ள மகாத்மா உருவ சிலைக்கும், சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் முழு உருவ சிலைக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் என்.ரவி தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது
திருச்சி:
மகாத்மா காந்தியின் 154-வது பிறந்தநாள் மற்றும் பெருந்தலைவர் காமராஜரின் 47-வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று தெப்பக்குளம் தபால் நிலையம் அருகில் உள்ள மகாத்மா காந்தியின் திருவுருவச்சிலைக்கும், சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள காமராஜர் உருவ சிலைக்கும், கட்சி அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் விச்சு என்கிற லெனின் பிரசாத், மாவட்ட பொருளாளர் ராஜாநசீர், மாநில துணைத்தலைவரும், முன்னாள் மேயருமான சுஜாதா, மாநில பொதுச்செயலாளர் ஜி.கே.முரளி, மாமன்ற உறுப்பினர் ரெக்ஸ், மாநில கலைப்பிரிவு துணைத்தலைவர் பெஞ்சமின் இளங்கோ,
கோட்டத் தலைவர்கள் சிவாஜி சண்முகம், ஜோசப் ஜெரால்ட்டு, ஆனந்தராஜ், ஓவியர் கஸ்பர், மாவட்ட துணைத்தலைவர்கள் வழக்கறிஞர் செந்தில்நாதன், சிக்கல் சண்முகம், வில்ஸ் முத்துக்குமார், மாவட்ட பொதுச்செயலாளர்கள் சிவா, உறையூர் எத்திராஜ், அண்ணா சிலை விக்டர், பட்டேல், அமிர்தவல்லி, ஹெலன், டேவிட், பிரியங்கா பட்டேல், சுந்தர்ராஜன், வழக்கறிஞர் மோகனாம்பாள், அப்துல் குத்தூஸ், ஜெகதீஸ்வரி, மகளிர் அணி ஷீலா செல்ஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் காந்தி பிறந்தநாள், காமராஜ் நிணைவு தினம், முசிறி கைகாட்டியில் நடைபெற்றது. விழாவில் மாவட்ட தலைவர் திருச்சி கலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காந்தி, காமராஜர் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
வட்டார தனலவர் எஸ்.ஆர்.நல்லேந்திரன் தலைமை தாங்கினார். நகர தலைவர் சுந்தர்ராஜ் வரவேற்று பேசினார். மாவட்ட துணைத்தலைவர் காமராஜ், மாவட்ட பொருளாளர் இளையராஜா, மாவட்ட சிறுபாண்மை பிரிவு தலைவர் முகமது ஜான், லால்குடி வட்டார தலைவர் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மகாத்மா காந்தி பிறந்த நாள் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாளையொட்டி இன்று திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையம் அருகில் உள்ள மகாத்மா உருவ சிலைக்கும், சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் முழு உருவ சிலைக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் என்.ரவி தலைமையில், மாநில செயற்குழு உறுப்பினர் தர்மராஜ் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜூ, இளைஞர் அணி சிவகணேசன், திருச்சி மாவட்ட இளைஞர் அணி தலைவர் தனசேகர், மாவட்ட செயலாளர் சரவணன், மருத்துவர் பிரிவு மாவட்ட தலைவர் லட்சுமி நந்தகுமார், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் முகமது உசேன், பாலக்கரை கோட்டத்தலைவர் கண்ணன், தாராநல்லூர் வடிவேலு, காமராஜர் பேரவை மூர்த்தி, முருகேசன், பாண்டியராஜன், ஸ்டீபன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தே.மு.தி.க. சார்பில் மகாத்மா காந்திஜி சிலைக்கு கட்சியின் மாநில தொண்டர் அணி துணை செயலாளர் சாகுல் ஹமீது மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் அலங்கராஜ், மில்டன் குமார், பிரீத்தா விஜய் ஆனந்த், பகுதி செயலாளர் என்.எஸ்.எம்.மணிகண்டன், கலைப்புலி பாண்டியன், மோகன், லோகராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
- உழவாலயத்தில் மகாத்மா காந்தியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
- மகாத்மா காந்தியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பல்லடம் :
பல்லடத்தில் காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பல்லடம் அருகே உள்ள கோடங்கி பாளையத்தில் உழவர் உழைப்பாளர் கட்சி தலைமை அலுவலகமான உழவாலயத்தில் தேசப்பிதா என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கட்சித் தலைவர் செல்லமுத்து தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்