என் மலர்
நீங்கள் தேடியது "ஆய்வில் தகவல்"
- ஆண், பெண் பாலினங்களுக்கு இடையே செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பில் வேறுபாடுகள் கண்டறியப்பட்டன.
- ஆண்களுடன் ஒப்பிடும் போது பெண்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.
செல்போன்கள் தற்போது வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் செல்போன்களில் திரையை தள்ளிக்கொண்டே இருக்கிறார்கள்.
ரீல்ஸ் வீடியோக்கள் சமூக வலைதளங்கள் என எப்போது பார்த்தாலும் அதிக அளவில் இளைஞர்கள் இதில் மூழ்கிக் கிடக்கின்றனர்.
இதில் யாருக்கு அதிக அளவில் ஆபத்து மற்றும் மன அளவில் பதட்டத்தை அனுபவிக்கும் வாய்ப்பு உள்ளது என்பது குறித்து சமீபத்தில் ஸ்பெயின் நாட்டில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.
இதில் 25 வயது உடைய 104 ஆண்கள் 293 பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தை சேர்ந்த சிலரை இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனர். அவர்கள் அனைவரும் 100 சதவீதம் தொடர்ந்து ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வந்தனர் .
இந்த ஆய்வின் முடிவில் ஆண், பெண் பாலினங்களுக்கு இடையே செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பில் வேறுபாடுகள் கண்டறியப்பட்டன.
அதிக அளவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் இளம்பெண்கள் மனம் நலம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது தெரியவந்துள்ளது.
ஸ்மார்ட்போன் அதிக அளவில் பயன்படுத்தும் பெண்கள் அதிக துன்பங்களை எதிர்கொள்ள கூடும். ஆண்களுடன் ஒப்பிடும் போது பெண்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு நாளும் போன் பயன்படுத்துவதால் சமூகப் பதட்டத்தை அனுபவிக்கும் வாய்ப்புகள் அதிக அளவில் ஏற்படுவது இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மேலும் மன உளைச்சல், தீங்கு விளைவிக்கும் நடத்தை, தற்கொலை எண்ணம் அதிகரிப்பதற்கு இந்த ஸ்மார்ட்போன் பயன்பாடு காரணங்களாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.
சிக்கலான ஸ்மார்ட்போன் பயன்பாடு இளைய தலைமுறையினர் இடையே உள்ள பிரச்சனையை தீர்ப்பதற்கும் அதன் காரணம் மற்றும் விளவுகளை கண்டறிய தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொள்ள இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
- சி.எச்.ஆர்.ஐ.ஆல் கணக்கெடுக்கப்பட்ட 22 கட்சிகளில் மொத்தம் 1,595 வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன.
- பொதுக்கூட்ட ஏற்பாடுகளுக்காக ரூ.130 கோடி செலவிடப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
கடந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதையொட்டி அரசியல் கட்சிகள் பெற்ற நிதி விபரங்கள் மற்றும் பிரசாரம், விளம்பரம் உள்ளிட்ட பல்வேறு செலவுகள் குறித்த விபரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தன.
இதில் பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க., தெலுங்கு தேசம், மார்சிஸ்ட் கம்யூனிஸ்டு, எல்.ஜே.பி. (ராம்விலாஸ்), சிக்கிம் ஜனநாயக முன்னணி (எஸ்.டி.எப்) மற்றும் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏ.ஐ.யூ.டி.எப்.) ஆகிய 6 கட்சிகளிடம் ரூ.4,300 கோடி அதிகமாக நிதி இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக காமன்வெல்த் மனித உரிமைகள் முன் முயற்சி (சி.எச்.ஆர்.ஐ.) அமைப்பின் இயக்குனர் வெங்கடேஷ் நாயக் ஒரு ஆய்வை நடத்தி உள்ளார். அதில் தேசிய கட்சிகளான பா.ஜ.க, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க., தெலுங்கு தேசம் கட்சி, ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, ஜனதா தளம் உள்ளிட்ட 17 மாநில கட்சிகள் என 22 கட்சிகள் 2024-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் மற்றும் 4 மாநில சட்டமன்ற பொதுத்தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட போது ரூ.11,326 கோடி தொடக்க இருப்பு வைத்திருந்தது தெரியவந்துள்ளது.
தேர்தல் செயல்பாட்டின் போது ரூ.7,416 கோடி திரட்டி உள்ளன. அதில் ரூ.3,861.6 கோடி செலவு செய்துள்ளனர். தேர்தல் முடிந்த நாளில் ரூ.14,848 கோடி மொத்த இறுதி இருப்பு தொகை இருப்பது தெரியவந்துள்ளது. ஆய்வின்படி பா.ஜ.க. அதிகபட்சமாக ரூ.5,921.8 கோடி தொடக்க இருப்பு தொகையுடன் முதல் இடத்தில் உள்ளது. காங்கிரஸ் தொடக்க இருப்பு தொகையை அடிப்படையில் 22 கட்சிகளில் 9-வது இடத்தை பிடித்தது. இறுதி இருப்பு தொகை பொறுத்த வரை காங்கிரஸ் 12-வது இடத்தில் உள்ளது.
சி.எச்.ஆர்.ஐ.ஆல் கணக்கெடுக்கப்பட்ட 22 கட்சிகளில் மொத்தம் 1,595 வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. அவர்களில் 480 பேர் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆய்வின்படி 22 கட்சிகள் பெற்ற மொத்த தொகையில் 84.5 சதவீதம் பாஜ.க. திரட்டியுள்ளது. அந்த கட்சியின் மொத்த தேர்தல் செலவு ரூ.1,738 கோடி என்று அந்த கட்சி தெரிவித்துள்ளது.
இது 22 கட்சிகளில் மொத்த பிரசார செலவில் 45 சதவீதமாகும். ஊடக விளம்பரங்களுக்காக 22 கட்சிகளும் சேர்ந்து ரூ.992.4 கோடிக்கு மேல் செலவிட்டன. பொதுக்கூட்ட ஏற்பாடுகளுக்காக ரூ.130 கோடி செலவிடப்பட்டுள்ளது.
- அதிகப்படியான டீ பதட்டத்தை அதிகரிக்கும்.
- வெறும் வயிற்றில் அதிகமாக டீ குடிப்பது வாயு மற்றும் அமிலத்தன்மையை ஏற்படுத்தும்.
டீ குடிப்பது உற்சாகமாக உணர வைக்கிறது. உடலில் ஏற்படும் சோர்வைக் குறைக்க பலர் டீ அருந்துகிறார்கள். அவர்கள் பலமுறை டீ பருகுவதை ரசிக்கிறார்கள்.
ஆனால் அதிகமாக டீ குடிப்பதால் உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டு, பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதிகமாக டீ, காபி குடித்தால் பிரச்சனைகள் உங்களுக்குத் தெரியாமலேயே உங்களைச் சூழ்ந்து கொள்ளலாம்.
ஒரு நாளைக்கு 2-3 கப் டீ, காபி (200-300 மிலி) குடிப்பது பாதுகாப்பானது. ஆற்றலை அதிகரிக்கிறது. மேலும் ஆக்ஸிஜனேற்றிகள் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இந்த அளவை பரிந்துரைக்கிறது.
தேசிய சுகாதார நிறுவனங்கள் ஒரு நாளைக்கு 4-5 கப், 400 மி.கி.க்கு மேல் டீ உட்கொண்டால் தூக்கத்தைக் கெடுக்கும் என்று கூறுகிறது. அதிகப்படியான டீ பதட்டத்தை அதிகரிக்கும்.

வெறும் வயிற்றில் அதிகமாக டீ குடிப்பது வாயு மற்றும் அமிலத்தன்மையை ஏற்படுத்தும்.
டீ, காபியில் உள்ள டானின்கள் இரும்பு உறிஞ்சுதலைத் தடுக்கின்றன. ஒரு நாளைக்கு 5 கப் அளவுக்கு மேல் குடிப்பது இரத்த சோகை அபாயத்தை அதிகரிக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது.
அதிகப்படியான டீ உட்கொள்வது ஒழுங்கற்ற இதயத் துடிப்புகளை ஏற்படுத்தும். அமெரிக்க இதய சங்கம் இதை உறுதிப்படுத்தியுள்ளது.
உணவுக்கு பிறகு டீ, காபி குடிக்கவும், ஒரு நாளைக்கு 3 கப் அளவுக்கு அதிகமாக குடிக்க வேண்டாம். அது அதிகமாக இருந்தால், மூலிகை டீக்களுக்கு மாறுங்கள். இது ஆரோக்கியத்தை பேணுவதற்கு பயனுள்ளதாக இருக்கும் என அறிவுறுத்தியுள்ளனர்.
- ஒரு நாளைக்கு 3 மணி நேரத்திற்கு ஒருமுறை டீ, காபி, குளிர்பானம் வழங்கப்பட்டது.
- குளிர்பானங்களை அறவே தவிர்ப்பது நல்லது என தெரிவித்தனர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள டாட்டா இன்ஸ்டியூட் ஆப் பண்டமென்டல் ரிசர்ச் நிலைய ஆராய்ச்சியாளர்கள் சில எலிகள் மூலம் சர்க்கரை நோய் குறித்து ஆராய்ச்சி செய்தனர்.
அப்போது சில எலிகளுக்கு ஒரு நாளைக்கு 4 முதல் 5 தடவை 100 மில்லி லிட்டர் அளவுள்ள சர்க்கரை கலந்த இனிப்பான டீ, காபி மற்றும் குளிர்பானங்களை கொடுத்தனர்.
ஒரு நாளைக்கு 3 மணி நேரத்திற்கு ஒருமுறை டீ, காபி, குளிர்பானம் வழங்கப்பட்டது. 2 ஆண்டுகள் நடந்த ஆராய்ச்சி முடிவில் அனைத்து எலிகளுக்கும் சர்க்கரை நோய் மற்றும் உடல் பருமன் ஏற்பட்டது தெரியவந்தது.
இதன் மூலம் ஒரு நாளைக்கு தினமும் 2 வேளை இனிப்பான டீ காபி குடிப்பவர்களுக்கு டைப்-2 சக்கரை வியாதி வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய ஆராய்ச்சி அமெரிக்கா தேசிய சுகாதார நிறுவன ஆய்வு மூலம் உலகளாவிய உணவு முறை தளர்வுகளுடன் ஒப்பிடப்பட்டன. டீ, காபியில் உள்ள சுக்ரோஸ் என்ற அமிலம் கல்லீரல் தசைகள் மற்றும் சிறுகுடல்களில் கடுமையான விளைவுகள் ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.
சர்க்கரை இல்லாத டீ, காபி குடிக்க முயற்சி செய்யுங்கள். குளிர்பானங்களை அறவே தவிர்ப்பது நல்லது என அவர்கள் தெரிவித்தனர்.
- வெண்ணெய் எப்படி சமையலில் அதிக அளவு புகுகிறது?
- பாரம்பரிய சமையலை புறந்தள்ளி யூடியூப் பார்த்து சமையல் செய்வதே இப்போது அதிகம்.
வெண்ணெய்! ஆரோக்கியமான உணவுதான். ஆனால் அதே வெண்ணெயை அன்றாடம் 10 கிராம் அளவுக்கு சேர்த்தாலே உயிருக்கு உலை வைத்து விடும் என்ற ஆராய்ச்சி முடிவுகள் தான் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
2.21 லட்சம் பேரிடம் கடந்த 33 வருடங்களாக ஆராய்ச்சி செய்து உள்ளார்கள். அவர்களின் உணவு முறைகளில் வெண்ணெய் பயன்பாட்டை பகுத்து பார்த்ததில்தான் இதை கண்டுபிடித்து உள்ளார்கள்.
வெண்ணெயில் நிறைய கொழுப்பு சத்து அடங்கி உள்ளது. அதிலும் குறிப்பாக லிப்போ புரோட்டீன் மற்றும் கெட்ட கொழுப்பு மிகுந்து உள்ளது. இவைகள் இதயத்துக்கு செல்லும் ரத்த நாளங்களில் படர்ந்து ரத்த குழாய்களில் அடைப்பை உருவாக்கி மாரடைப்பை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு 10 கிராம் வெண்ணெய் உடலுக்குள் தினமும் சென்றால் 7 சதவீதம் இதய நோய்க்கான வாய்ப்பு அதிகரிப்பதாக கண்டுபிடித்து உள்ளார்கள்.

இதற்கு நேர்மாறாக சமையலுக்கும், உணவிலும் தாவர எண்ணைகளை பயன்படுத்தினால் இதய நோய்க்கான வாய்ப்பு 6 சதவீதம் குறைவதாக தெரிய வந்து உள்ளது. அமெரிக்காவில் ஆலிவ் எண்ணெய், சோயா எண்ணெய், கனோலா போன்ற எண்ணெய் வகைகளை பயன்படுத்துகிறார்கள். வட இந்தியாவிலும் கடுகு எண்ணெயை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். இதில் ஆபத்து குறைவு என்கிறார்கள்.
நம்ம வீடுகளில் வெண்ணெய் பயன்பாடு குறைவுதானே? சமையல் எண்ணெய் தானே அதிகமாக பயன்படுத்தப்படுகிறது என்று நினைக்க தோன்றும்.
சுத்தமான 'ரீபைன்டு சூரிய காந்தி எண்ணெய் என்று பிரபலமான நிறுவனங்களின் தயாரிப்புகள் நம் கண்ணில் படுகின்றன. நம்பிக்கையோடு மாதம் தோறும் வாங்கி வருகிறோம்.

வெண்ணை கலந்த உணவு வகைகள்
ஆனால் இந்த எண்ணெயும் சுத்தமானது இல்லை. நாட்டில் விளையும் சூரிய காந்தி விதையின் அளவையும் தயாராகும் எண்ணெயின் அளவையும் ஒப்பிட்டால் இந்த உண்மை தெரிய வரும். இந்த எண்ணெயை பயன்படுத்தும் போது அதிக அளவு ஆல்டிஹைடுகளை அதாவது நச்சு கலவைகளை வெளியிடுவதாக கண்டறிந்து உள்ளனர். இது உடலின் டி.என்.ஏ. மற்றும் செல்களை சேதப்படுத்தும். இதய நோய்களை ஏற்படுத்தும் என்பது தனிக்கதை.
இனி, வெண்ணெய்க்கு வருவோம்... வெண்ணெய் எப்படி சமையலில் அதிக அளவு புகுகிறது? பாரம்பரிய சமையலை புறந்தள்ளி யூடியூப் பார்த்து சமையல் செய்வதே இப்போது அதிகம். நூடுல்ஸ், பாஸ்தா செய்யும் போது சுவைக்காக வெண்ணெய் சேர்க்கிறார்கள். கேக், பிரட் ஆம்லெட், பட்டர்நான், பன்னீர்பட்டர் மசாலா, பட்டர் சிக்கன் உள்பட சைவம் மற்றும் அசைவ உணவு வகைகளில் சுமார் 95 விதமான உணவு பொருட்கள் என்று அதிக அளவு வெண்ணெய் கலந்த உணவு வகைகளை விரும்பி சாப்பிடுகிறார்கள். இதன் மூலம் நமக்கு தெரியாமலே வெண்ணெய் அதிக அளவில் நம் உடலுக்குள் சென்று கொண்டிருக்கின்றன என்பது தான் உண்மை.
பசும் பாலை காய்ச்சி உறைய வைத்து கடைந்து எடுப்பது தானே வெண்ணெய்... அதிலும் இவ்வளவு ஆபத்தா? இதற்கு அரசு இயற்கை மருத்துவ கல்லூரி பேராசிரியை டாக்டர் தீபா கூறியதாவது:-
மில்க் புரோட்டீன் நல்லதுதான். ஆனால் அவ்வாறு சுத்தமாக கடைந்து எடுக்கப்படும் வெண்ணெய் மார்க்கெட்டில் தற்போது கிடைக்கும் விலைக்கு நிச்சயம் கொடுக்க முடியாது.
குறைந்த விலைக்கு கொடுக்க வேண்டும். சுவையும் அதிகம் இருக்க வேண்டும் என்பதற்காக வெண்ணையில் சல்பர், விலங்கு கொழுப்புகள், மாக்ரைன் கலப்பது கண்டுபிடிக்கப்பட்டதுதான். இதனால் தான் உடலுக்கு தீங்கை ஏற்படுத்துகிறது. சீஸ், மயோனைஸ் போன்ற உணவு பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். தாவர எண்ணெய்களை சமையலுக்கு பயன்படுத்துவது நல்லது தான். அதையும் குறைந்த அளவு பயன்படுத்தலாம்.
பொதுவாக ஒரே எண்ணெயை நீண்ட நாள்கள் பயன்படுத்தக் கூடாது. வெவ்வேறு எண்ணெய்களை பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும் என்றார்.
- பஞ்சாயத்து மூலம் வழங்கப்படும் குடிநீர் மிகவும் மோசம் என்று 5 சதவீதம் பேரும், மோசம் என்று 15 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
- 5 சதவீதம் பேர் குடிநீர் இணைப்பு இல்லை என்று கூறியுள்ளளனர்.
இந்திய தண்ணீர் வாரத்தையொட்டி நடத்தப்பட்ட ஆய்வில் கூறி இருப்பதாவது:-
2 சதவீதம் இந்திய குடும்பங்கள் மட்டுமே தங்கள் நகராட்சிகள் உள்ளிட்ட உள்ளூர் அமைப்புகளில் இருந்து தரமான குடிநீரை பெறுகின்றன. மேலும் 65 சதவீதம் பேர் நவீன வடிகட்டுதல் செயல்முறையை பயன்படுத்துகின்றனர்.
பஞ்சாயத்து மூலம் வழங்கப்படும் குடிநீர் மிகவும் மோசம் என்று 5 சதவீதம் பேரும், மோசம் என்று 15 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். 5 சதவீதம் பேர் குடிநீர் இணைப்பு இல்லை என்று கூறியுள்ளளனர்.
குடிப்பதற்கும், சமைப்பதற்கும் சுத்தமான குடிநீரை பெற 34 சதவீதம் பேர் நீர் சுத்திகரிப்பு எந்திரத்தை பயன்படுத்துகின்றனர். 31 சதவீதம் பேர் ஆர்.ஓ. அமைப்பை பயன்படுத்துகிறார்கள். 14 சதவீதம் பேர் கொதிக்க வைத்து பயன்படுத்துகிறார்கள். 5 சதவீதம் பேர் மண்பானைகளை பயன்படுத்துகிறார்கள். 1 சதவீதம் பேர் குளோரினேஷன், படிகாரம் மற்றும் பிற கனிமங்களை பயன்படுத்துகின்றனர். 7 சதவீதம் குடும்பங்கள் சுத்திகரித்து பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரை வாங்குவதில்லை.
இவ்வாறு ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
- நீர்மட்ட உயர்வில் பிராந்திய அளவில் காணப்படும் வேறுபாடுகளால் நீர் மட்ட அளவும் மாறுபடும்.
- சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் மிக அதிகமான நீர் இடப்பெயர்வாகும்.
சென்னை:
காலநிலை மாற்றம் மற்றும் இயற்கை சார்ந்த காலநிலை மாறுபாடு ஆகிய இரண்டின் கூட்டுவிளைவு பூமிக்கு மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக ஆய்வுகள் செய்துவரும் விஞ்ஞானிகள் தங்கள் ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டுள்ளார்கள். அதில் இந்தியாவில் உள்ள பெருநகரங்களான சென்னை, கொல்கத்தாவுக்கு மிகப்பெரிய ஆபத்து வரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வெப்பநிலை அதிகரிப்பால் நீர் விரிவடைந்து கடல் நீர்மட்டம் உயர்கிறது. இதுதவிர துருவ பாறைகளால் அதிக அளவு கடலில் சேரும் தண்ணீரால் கடல் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது.
இந்த நீர்மட்ட உயர்வில் பிராந்திய அளவில் காணப்படும் வேறுபாடுகளால் நீர் மட்ட அளவும் மாறுபடும். சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் மிக அதிகமான நீர் இடப்பெயர்வாகும்.
இதன் காரணமாக கடற்கரையை ஒட்டியிருக்கும் நகரங்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்கும் என்று அந்த ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.
அதில் ஆசிய பகுதியில் உள்ள 6 நகரங்கள் பெரும் பாதிப்பை சந்திக்கலாம். கடல் நீரில் மூழ்கலாம் என்றும் தெரியவந்துள்ளது. அதில் இந்தியாவில் சென்னை, கொல்கத்தா ஆகிய இரு நகரங்களும் ஆபத்தில் உள்ளன.
இதேபோல் தாய்லாந்தில் பாங்காக், இந்தோனேசியாவில் மணிலா, மியான்மரில் யாங்கோன், வியட்நாமில் ஹோசி மின்சிட்டி ஆகிய நகரங்கள் அடங்கி உள்ளன. 2100-ம் ஆண்டுக்குள் இந்த நகரங்கள் அனைத்தும் கடல் நீரால் மூழ்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
- 500 ஆரோக்கியமான பெரியவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் அதிக சத்தத்துடன் கூடிய இசை ஒரு நபரை பலவீனமாக மாற்றும் என கண்டறியப்பட்டுள்ளது.
- மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இதயம் தொடர்பான பாதிப்புகள் 34 சதவீதம் அதிகரிப்பதை கண்டறிந்துள்ளனர்.
புதுடெல்லி:
பீகார் மாநிலத்தில் உள்ள சீதாமர்கி மாவட்டத்தில் கடந்த 4-ந்தேதி நடந்த ஒரு திருமணத்தின் போது அதிக சத்தத்துடன் கூடிய இசை காரணமாக மணமேடையில் மணமகன் சுரேந்திர குமார் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதே போல தெலுங்கானாவில் உறவினர் ஒருவரின் திருமணத்தில் நடனமாடி கொண்டிருந்த 19 வயது இளைஞர் ஒருவரும் நடனமாடி கொண்டிருந்த போதே சுருண்டு விழுந்து இறந்தார்.
கடந்த ஆண்டு நவம்பர் 25-ந்தேதி வாரணாசியில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் நடனமாடி கொண்டிருந்த ஒருவர் சுருண்டு விழுந்து இறந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவின.
இது போன்ற சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில் திருமண விழாக்களில் அதிக சத்தத்துடன் நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகள் இதுபோன்ற உயிரிழப்புகளுக்கு காரணமாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இந்நிலையில் திருமண விழாக்களில் அதிக சத்தத்துடன் நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகளால் மாரடைப்பு ஏற்படலாம் என சில ஆய்வு தகவல்கள் கூறுகின்றன.
இதுதொடர்பாக, ஐரோப்பிய மருத்துவ இதழ் ஆய்வு ஒன்றை கடந்த 2019-ம் ஆண்டு நவம்பரில் தொடங்கியது. 500 ஆரோக்கியமான பெரியவர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் அதிக சத்தத்துடன் கூடிய இசை ஒரு நபரை பலவீனமாக மாற்றும் என கண்டறியப்பட்டுள்ளது. சராசரியாக 24 மணி நேர இரைச்சல் அளவில் ஒவ்வொரு 5 டெசிபல் அதிகரிப்பது இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.
இதனால் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இதயம் தொடர்பான பாதிப்புகள் 34 சதவீதம் அதிகரிப்பதை கண்டறிந்துள்ளனர்.
இதுபோன்ற ஆய்வு ஜெர்மனியில் உள்ள மைன்ஸ் பல்கலைக்கழக மருத்துவ மையத்திலும் நடத்தப்பட்டது. 35 முதல் 74 வயதிற்குட்பட்ட 15 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் அதிக சத்தத்துடன் இசையை கேட்கும் போது இதயத்துடிப்பு வேகமாக அதிகரிக்கிறது என்பதை கண்டறிந்துள்ளனர்.
மேலும் ஒழுங்கற்ற இதயத்துடிப்பு காரணமாக மாரடைப்பு, மூளை பக்கவாதம் மற்றும் ரத்த உறைவு போன்றவை அதிகரிக்கும் எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
- ஸ்வான்சீ பல்கலைக்கழக ஆய்வு குழுவினர் 20 முதல் 25 வயதுடைய 50 பேரிடம் ஆய்வு நடத்தினர்.
- 3 குழுக்களாக பிரித்து 3 மாதங்கள் ஆய்வு நடத்தப்பட்டது.
இன்றைய நவீன உலகில் செல்போனில் வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்வோர்கள் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.
அதிலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினர் சமூக வலைதளங்களில் பல மணிநேரம் மூழ்கி கிடப்பதாகவும் இதனால் அவர்களின் உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் தினமும் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை 15 நிமிடங்கள் குறைத்தால் ஆரோக்கியம் மேம்படும் என ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக ஸ்வான்சீ பல்கலைக்கழக ஆய்வு குழுவினர் 20 முதல் 25 வயதுடைய 50 பேரிடம் ஆய்வு நடத்தினர். 3 குழுக்களாக பிரித்து 3 மாதங்கள் ஆய்வு நடத்தப்பட்டது.
இதில் மக்கள் ஒரு நாளைக்கு 15 நிமிடங்கள் சமூக ஊடக பயன்பாட்டை குறைக்கும்போது உடல் ஆரோக்கியம் மற்றும் உளவியல் செயல்பாடுகளில் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வு குறித்து பல்கலைக்கழக பேராசிரியர் பில் ரீட் வெளியீட்டுள்ள செய்திக்குறிப்பில், மக்கள் சமூக ஊடக பயன்பாட்டை குறைக்கும் போது அவர்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் உளவியல் நல்வாழ்வுக்கான நன்மைகள் உள்பட பல வழிகளில் அவர்களின் வாழ்க்கை மேம்படும் என்பதை இந்த ஆய்வு தகவல்கள் நிருபிக்கின்றன என கூறப்பட்டுள்ளது.
- 2 இளம்பெண்களும் கர்ப்பமாக இருந்த போது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
- ஒரு நபருக்கு லேசான அறிகுறி மட்டுமே இருந்துள்ளது. மற்றொரு பெண்ணுக்கு வைரஸ் பாதிப்பு தீவிரமாக இருந்துள்ளது.
வாஷிங்டன்:
2020-ம் ஆண்டு சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவிய கொரோனா பெரும் உயிரிழப்புகளையும், கோடிக்கணக்கானவர்களை நோயாளிகளாகவும் ஆக்கியது.
இதைத்தொடர்ந்து பல நாடுகளில் கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகளை கண்டு பிடித்து பொதுமக்களுக்கு செலுத்தியதன் பயனாக தற்போது தொற்று பரவல் கட்டுக்குள் வந்து உலகம் முழுவதும் இயல்பு நிலை திரும்பி உள்ளது.
ஆனாலும் அவ்வப்போது தொற்று உருமாற்றம் அடைந்து பல திரிபுகளாக பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் தொற்று பரவல் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதற்காக அச்சப்பட தேவையில்லை என்று ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்.
இதற்கிடையே கொரோனா ஏற்படுத்தும் நீண்ட கால பாதிப்புகள் குறித்தும் ஆய்வுகள் தீவிரமாக நடந்து வருகிறது. கொரோனா காரணமாக கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு மூளையில் பாதிக்கப்படுவது அமெரிக்க ஆய்வாளர்களின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து மியாமி பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய விரிவான ஆய்வு குறித்து அமெரிக்காவில் பீடியாட்ரிக்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கு முன்பு, டெல்டா வகை தொற்று பரவல் உச்சத்தில் இருந்த போது கர்ப்பமாக இருந்த 2 இளம்பெண்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. அவர்கள் 3-6 மாதங்கள் கர்ப்பமாக இருந்த போது அவர்களுக்கு தொற்று உறுதியாகி உள்ளது.
அந்த பெண்களுக்கு பிறந்த இரு குழந்தைகளுக்கும் பிறந்த அன்றே வலிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் முறையான வளர்ச்சி இல்லாமல் இருந்துள்ளது. அதில் ஒரு குழந்தை 13 மாதங்களில் உயிரிழந்த நிலையில், மற்றொரு குழந்தை மருத்துவர்கள் பராமரிப்பில் வைக்கப்பட்டது.
ஆனால் பரிசோதனையில் 2 குழந்தைகளுக்கும் கொரோனா உறுதியாகவில்லை. இருந்த போதும் அவர்களது ரத்தத்தில் அதிகமான ஆன்டிபாடிகள் இருந்தது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டதாக மியாமி பல்கலைக்கழகத்தில் குழந்தை மருத்துவர் மற்றும் உதவி பேராசிரியரான டாக்டர் மெர்லைன் பென்னி கூறினார். அதாவது கொரோனா முதலில் தாயிடம் இருந்து நஞ்சுக்கொடிக்கு வந்துள்ளது. அதன் பிறகு அது குழந்தைக்கு பரவியதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த இரு குழந்தைகளின் தாய்களின் நஞ்சுக்கொடிகளிலும் வைரஸ் இருப்பதற்கான சான்றுகளை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். 13 மாதங்களில் உயிரிழந்த குழந்தையின் பிரேத பரிசோதனையிலும் அக்குழந்தையின் மூளையில் வைரசின் தடயங்களையும், நேரடி தொற்று காயங்களையும் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.
2 இளம்பெண்களுக்கும் கர்ப்பமாக இருந்த போது தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் ஒரு நபருக்கு லேசான அறிகுறி மட்டுமே இருந்துள்ளது. மற்றொரு பெண்ணுக்கு வைரஸ் பாதிப்பு தீவிரமாக இருந்துள்ளது.
இதனால் 32 வாரங்களில் குழந்தையை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது மிகவும் அரியான வழக்காக இருக்கும் என்று கூறிய ஆய்வாளர்கள், கர்ப்பமாக இருக்கும் போது கொரோனா பாதிப்பு இருந்தால் வளர்ச்சி தாமதங்கள் குறித்து ஆய்வு செய்யும்படி மருத்துவர்களிடம் அறிவுறுத்தி உள்ளனர்.
குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் வரை அதாவது 7 அல்லது 8 வயது வரை தொடர்ந்து கவனிக்க வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தி இருந்தனர்.
குழந்தையை பெற்றுக்கொள்ள விரும்பும் பெண்கள் முன்கூட்டியே தடுப்பூசி எடுத்து கொள்ளும் படியும் அறிவுறுத்தி உள்ளனர். ஆனால் பச்சிளம் குழந்தைகளின் மூளையில் ஏற்படும் பாதிப்பு டெல்டா தொற்றால் மட்டுமே ஏற்படுகிறதா? அல்லது அனைத்து வகையான கொரோனாவாலும் ஏற்படுமா என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.
முன்னதாகவே இதுபோல நடக்க வாய்ப்புள்ளதாக ஆய் ளர்கள் எச்சரித்து இருந்தனர். இப்போது 2 குழந்தைகளின் மூளையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு என்பது ஆய்வாளர்களின் எச்சரிக்கையை உறுதி செய்துள்ளது.
இதுகுறித்து மியாமி பல்கலைக்கழகத்தின் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ துறையின் தலைவர் டாக்டர் மைக்கேல் பைடாஸ் கூறுகையில், இடமாற்றம் செய்யப்பட்ட கருவின் உறுப்புகளின் வைரசை நிரூபிக்க முடிந்தது இதுவே முதல் முறை. அதனால் தான் இது மிகவும் முக்கியமானது என்று நினைக்கிறோம் என தெரிவித்தார்.
- உலகின் 40 நாடுகளைச் சேர்ந்த 18 முதல் 24 வயதுடைய 27 ஆயிரத்து 969 பேரை ஆய்வுக்கு உட்படுத்தினர்.
- இந்தியாவைச் சேர்ந்த 4000 பேரும் இடம் பெற்றிருந்தனர்.
வாஷிங்டன்:
இன்றைய டிஜிட்டல் உலகில் ஆண்ட்ராய்டு செல்போன்கள் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி உள்ளது. அதே நேரம் நாளும், பொழுதும் செல்போன்களில் மூழ்கி விடுவதால் பேராபத்துகளும் எதிர்கால சந்ததியினருக்கு சூழ்ந்துள்ளன.
அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கி வரும் லாப நோக்கம் இல்லாத சாப்பியன் எனும் தனியார் ஆய்வகம் ஆண்ட்ராய்டு செல்போன்கள் அதிகம் பயன்படுத்தும் இளம் வயதினரிடையே ஒரு ஆய்வினை மேற்கொண்டது. உலகின் 40 நாடுகளைச் சேர்ந்த 18 முதல் 24 வயதுடைய 27 ஆயிரத்து 969 பேரை ஆய்வுக்கு உட்படுத்தினர். இதில் இந்தியாவைச் சேர்ந்த 4000 பேரும் இடம் பெற்றிருந்தனர்.
இதில் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்துள்ளன. ஆய்வு முடிவுகள் தொடர்பாக அவர்கள் கூறும் போது, தற்போது குழந்தைகளிடம் ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட்டை கொடுப்பது நாகரீகமாகவும், கவுரவமாகவும் ஆகிவிட்டது. இதன் மூலம் தமது குழந்தைகள் டிஜிட்டல் அறிவை பெறுவார்கள் என பெற்றோர்கள் நம்புகின்றனர்.
ஆனால் அவர்களின் எதிர்காலத்தை நீங்கள் சூனியம் ஆக்கிக் கொள்கிறீர்கள் என்பதையே இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஒரு குழந்தைக்கு எவ்வளவு முன்னதாக ஸ்மார்ட்போன் கொடுக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு இளம் வயதிலேயே மனநல பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
சிறுவயதிலேயே ஸ்மார்ட்போன்கள் வைத்திருந்த இளைஞர்கள் அதிக தற்கொலை எண்ணங்களுடனும், யதார்த்தத்தில் இருந்து விலகி இருப்பது போன்ற உணர்வுகளுடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அன்றாட வாழ்க்கை பிரச்சனைகளிலிருந்து அவர்கள் ஒதுங்கி இருக்க நினைக்கிறார்கள். வாழ்க்கையில் எதிர் நீச்சல் போடும் எண்ணங்கள் அவர்களுக்கு குறைந்திருந்தது. இதில் ஆண்களை விட பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
6 வயது முதல் ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் இளம்பெண்களில் 74 சதவீதம் பேருக்கு மன அழுத்தம் இருப்பதும், கடுமையான மனநல சவால்களை அவர்கள் எதிர்கொண்டு வருவதும் கண்டறியப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக நரம்பியல் நிபுணர் தியாகராஜன் கூறும்போது, குழந்தைகள் ஒரு நாளைக்கு 5 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை ஆன்லைனில் செலவிடுகிறார்கள் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
இது வருடத்திற்கு 2,950 மணி நேரம் ஆகும். ஸ்மார்ட் போன் வருவதற்கு முன்பு இந்த நேரத்தில் நிறைய நேரம் குடும்பத்தினருடன் நண்பர்களுடனும் ஏதோ ஒரு விதத்தில் ஈடுபட்டு இருப்பார்கள்.
இவ்வாறு இருக்கும் போது குழந்தைகள் சமூகம் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் சவால்களை எதிர்கொள்ள இயல்பாகவே கற்றுக்கொள்ள முடிகிறது. ஆகவே குழந்தைகளிடம் செல்போன்களை கொடுத்துவிட்டு பெற்றோர்கள் தங்கள் வேலையில் ஈடுபடாமல், குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிட வேண்டும் என்றார்.
- வீட்டில் கற்றல் சூழல் குறித்த கேள்விகளில் 40 சதவீத பெற்றோர்கள் பாடப்புத்தகங்கள் தவிர மற்ற வாசிப்பு பொருட்கள் வீட்டில் இருப்பதாக கூறியுள்ளனர்.
- பள்ளிகளில் நடைபெறும் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு கூட்டங்களில் 84 சதவீத பெற்றோர் தவறாமல் கலந்து கொள்வதாக கூறியுள்ளனர்.
புதுடெல்லி:
கொரோனா காலத்தில் உலகமே பொதுமுடக்கத்தை சந்தித்தது. அந்த நேரத்தில் பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்ட நிலையில், சிறிது காலத்திற்கு பிறகு பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டன.
இதனால் மாணவர்கள் ஸ்மார்ட்போன்களை அதிகளவு பயன்படுத்த தொடங்கினர். ஆரம்பத்தில் மாணவர்களின் கல்விக்காக அதிகளவில் பயன்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்களை தற்போது மாணவர்கள் படிப்பை விட பொழுது போக்கிற்காக அதிகளவில் பயன்படுத்துவது ஆய்வில் தெரியவந்துள்ளது.
மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் கடந்த 8-ந்தேதி புதுடெல்லியில் ரூரல் இந்தியாவில் தொடக்க கல்வி குறித்த ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். கிராமப்புறங்களில் மாணவர்கள் படிப்பிற்காக ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவது தொடர்பான இந்த ஆய்வில் மாணவர்களின் பெற்றோர்களிடமும் பதில்கள் கேட்டு பெற்றுள்ளனர்.
21 மாநிலங்களில் உள்ள கிராமப்புற சமூகங்களில் உள்ள 6 முதல் 16 வயதுடைய பள்ளி மாணவர்களின் பெற்றோர் 6,229 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டு பதில்கள் பெறப்பட்டுள்ளது. இவர்களில் 6,135 பேர் பள்ளிக்கு செல்லும் மாணவர்களை கொண்டிருந்தனர். 56 பேர் பள்ளியை விட்டு வெளியேறிய குழந்தைகள் மற்றும் 36 பேர் பள்ளியை சேராத குழந்தைகளின் பெற்றோர் ஆவர்.
இந்த ஆய்வில் இந்தியாவில் கிராமப்புறங்களில் 49.3 சதவீத மாணவர்கள் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் அதில் 34 சதவீதம் பேர் மட்டுமே அவற்றை படிப்பிற்காக பயன்படுத்துகின்றனர் என்று கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. சுமார் 76 சதவீதம் பேர் தங்கள் குழந்தைகள் வீடியோ கேம்கள் விளையாட மொபைல் போன்களை அதிகம் பயன்படுத்துவதாக கூறி உள்ளனர். 56.6 சதவீதம் பேர் மாணவர்கள் திரைப்படங்களை பதிவிறக்கம் செய்து பார்ப்பதற்கும், 47.3 சதவீதம் பேர் அவற்றை பதிவிறக்கம் செய்து இசையை கேட்க பயன்படுத்துவதாகவும் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
34 சதவீதம் பேர் மட்டுமே ஆய்வு பதிவிறக்கங்களுக்காக மொபைல் போன்களை பயன்படுத்துவதாகவும், 18 சதவீதம் பேர் மட்டும் டூட்டோரியல்கள் மூலம் ஆன்லைன் கற்றலை அணுகி இருப்பதாகவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெண் குழந்தைகளின் பெற்றோர்களில் குறைந்தது 78 சதவீதம் பேரும், ஆண் குழந்தைகளின் பெற்றோர்களில் 82 சதவீதம் பேரும் தங்கள் குழந்தைகளை பட்டப்படிப்பு அல்லது அதற்கு மேல் படிக்க வைக்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர். 8-ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் உள்ள மாணவர்கள் ஸ்மார்ட் போன்களுக்கான பயன்பாட்டை அதிகமாக பெற்றுள்ளனர்.
வீட்டில் கற்றல் சூழல் குறித்த கேள்விகளில் 40 சதவீத பெற்றோர்கள் பாடப்புத்தகங்கள் தவிர மற்ற வாசிப்பு பொருட்கள் வீட்டில் இருப்பதாக கூறியுள்ளனர். ஒவ்வொரு நாளும் 40 சதவீத பெற்றோர்கள் மட்டுமே தங்கள் குழந்தைகளுடன் பள்ளியில் கற்றல் பற்றி தாங்கள் குழந்தைகளுடன் உரையாடுவதும், 32 சதவீதம் பேர் வாரத்தில் சில நாட்கள் மட்டும் தங்கள் குழந்தைகளுடன் கல்வி குறித்து உரையாடுவதாகவும் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
மேலும் பள்ளிகளில் நடைபெறும் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு கூட்டங்களில் 84 சதவீத பெற்றோர் தவறாமல் கலந்து கொள்வதாக கூறியுள்ளனர்.