என் மலர்
நீங்கள் தேடியது "பயிற்சி முகாம்"
- 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் வாயிலாக இலவச ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி முகாம்.
- தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய சிந்தனைகளுக்கு, இப்பயிற்சி முகாம் செயல்வடிவம் கொடுப்பதாக அமையும்.
நம்மவர் படிப்பகங்கள் மூலம் கோடை விடுமுறையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆங்கிலப் பேச்சு பயிற்சி முகாம் நடத்த ஏற்பாது செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நீதி மய்யம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
எதிர்காலத் தலைமுறையின் நலன்களை முன்னிறுத்திச் செயல்பட்டு வரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பள்ளி மாணவ, மாணவிகளின் திறன் மேம்பாட்டை வளர்ப்பதில் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறார்.
இதன் ஒரு பகுதியாக தற்போது நம்மவர் படிப்பகங்களில் கோடைகால இலவச ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது.
தற்போது மதுரை, அருப்புக்கோட்டை, பரமக்குடி ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் நம்மவர் படிப்பகங்கள் மூலம் குழந்தைகள், மாணவ, மாணவிகள், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்கள் என ஏராளமானோர் பெரிதும் பயனடைந்து வருகின்றனர்.
கமல் பண்பாட்டு மையம் சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் நம்மவர் படிப்பகங்களில் புத்தகங்களுடன், இலவச வை-பை வசதியுடன் கூடிய கணினிகளும் நிறுவப்பட்டுள்ளதால், தினமும் நூற்றுக்கணக்கானோர் இங்கு வருகை புரிகின்றனர்.
அமெரிக்காவில் உயர் நிலைப்பள்ளி மாணவர்கள் மூலம் செயல்படும் லீப் என்ற அமைப்பு, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு ஆங்கிலப் பேச்சுப் பயிற்சியை அளித்து வருகிறது. இந்நிறுவனத்துடன் இணைந்து நம்மவர் படிப்பகங்களில் கோடை விடுமுறையில் ஆங்கிலப் பேச்சு பயிற்சி முகாம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் வாயிலாக இலவச ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி முகாம் ஏப்ரல் முதல் ஜூன் வரை 6 வாரங்களுக்கு நடத்தப்பட உள்ளது.
அமெரிக்காவில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் அமெரிக்க மற்றும் இந்திய மாணவர்கள், ஆன்லைன் வாயிலாக நம்மவர் படிப்பகங்களில் பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆங்கிலப் பேச்சு பயிற்சி அளிக்க உள்ளனர்.
ஆங்கிலத்தில் பேசுவதற்கு உள்ள தயக்கத்தைப் போக்கி, மாணவ, மாணவிகள் சரளமாக ஆங்கிலத்தில் பேசுவதற்கு இந்தப் பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய சிந்தனைகளுக்கு, இப்பயிற்சி முகாம் செயல்வடிவம் கொடுப்பதாக அமையும்.
குறிப்பாக, கிராமப்புற மாணவர்களின் தகுதியை மேம்படுத்தி, அவர்களது திறனை வளர்த்துக் கொள்ள உதவும். மாணவர்கள், மகளிர் ஆகியோரது மேம்பாட்டுக்கானப் பணிகளில் மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து ஈடுபடும்.
சமத்துவச் சமுதாயத்தை உருவாக்கி, கல்வியும், திறன் மேம்பாடும் அனைத்துத் தரப்பு மாணவர்களுக்கும் கிடைக்கச் செய்வதே மக்கள் நீதி மய்யத்தின் பிரதான நோக்கமாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 3 நாள்கள் மேற்கு மண்டலம் பாரத சாரண, சாரணியா் பயிற்சி முகாம் நடக்கிறது.
- 300 சாரணா், 300 சாரணியா்கள் பயிற்சி பெற உள்ளனா்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் குன்னூா் ஓட்டுபட்டரை ஸ்டான்லி பாா்க் பகுதியில் 3 நாள்கள் மேற்கு மண்டலம் பாரத சாரண, சாரணியா் பயிற்சி முகாம் நடக்கிறது.
இந்த முகாமினை பள்ளி கல்வி துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தாா். இந்த முகாமில் கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூா் மற்றும் கரூா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 300 சாரணா், 300 சாரணியா்கள் பயிற்சி பெற உள்ளனா்.
முகாமை தொடங்கிவைத்து அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், மாநிலங்களின் பண்பாடு, நாட்டுப்பற்று, பிறருக்கு உதவி புரிவது, நட்பு வட்டாரங்களை விரிவுபடுத்துவது, சாரண, சாரணியா்கள் எவ்வாறு அணிவகுப்பு மரியாதை செய்வது போன்று பயிற்சிகள் முகாமில் அளிக்கப்படும். இவற்றை முறையாக கற்று சாரண, சாரணியா் பினபற்ற வேண்டும் என்றாா்.
இதில் வனத் துறை அமைச்சா் க.ராமசந்திரன், மாவட்ட கலெக்டா் அம்ரித் உள்பட பலர் கலந்து கொண்டனா்.
- பென்னாகரம் தனியார் மண்டபத்தில் சுய வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.
- இதில் 15 நிறுவனங்கள் கலந்து கொண்டன.
பென்னாகரம்,
தருமபுரி மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கத்தின் சார்பில் தீனதயாள் உபத்யாய கிராமின் கவுசல் யோஜனா மகளிர் திட்டத்தின் கீழ் பென்னாகரம் தனியார் மண்டபத்தில் சுய வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.
இதில் 15 நிறுவனங்கள் கலந்து கொண்டன. பென்னாகரம் ஒன்றியத்தைச் சார்ந்த சுற்றுவட்டார பகுதியில் இருந்து 202 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் 66 நபர்களை தேர்வு செய்தனர். அவர்களுக்கு மாவட்ட திட்ட இயக்குனர் பாபு பயிற்சி ஆணைகளை வழங்கினார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வடிவேலன், ரங்கநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். இறுதியாக ராமன் நன்றி கூறினார்.
- 200 தேனீ வளர்க்கும் பெட்டிகள் வழங்கப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
திருப்பத்தூர்:
சென்னை கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம், மாநில அலுவலகம், மற்றும் திருப்பத்தூர் சர்வேதாய சங்கம் சார்பில் கலாசிபாளையம், சித்தேரி மலைவாழ் பெண்களின் மேம்பாட்டிற்காக தேனீ வளர்ப்பு பயிற்சி முகாம் சித்தேரி மலை கிராமத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் சர்வதேச சங்க செயலாளர் சி.லோகேஸ்வரர் தலைமை வகித்தார், கதர் மற்றும் கிராம தொழில்கள் ஆணைய மாநில இயக்குனர் பி.என்.சுரேஷ், அனைவரையும் வரவேற்றார்.
தொடக்க நிகழ்ச்சியாக காந்தி திருவுருப்படத்திற்கு கதர் மாலை அணிவித்து, குத்துவிளக்கு ஏற்றி தேனி வளர்ப்பு முகமை தொடங்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தென் மண்டல துணை தலைமை நிர்வாக அலுவலர் ஆர்.எஸ் பாண்டே தேனி வளர்ப்பு பற்றி விளக்கி பேசினார், சிறப்பு அழைப்பாளராக கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின்தலைவர்.
மனோஜ் குமார் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற 20 பெண்களுக்கு ஒவ்வொருவருக்கும் 10 பெட்டிகள் வீதம் 200 தேனீ வளர்க்கும் பெட்டிகள் மற்றும் உபகரணங்கள் வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் அருர் தொகுதி சம்பத் எம்.எல்.ஏ. உப்பட ஏராளமார் கலந்து கொண்டு பேசினார்கள்.
நிகழ்ச்சியில் சர்வதே சங்க அலுவலர்கள் மலைவாழ் மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம், உதவி இயக்குனர் சித்ரா மதன் நன்றி கூறினார்.
- தீ விபத்துக்களை தடுத்தல் மற்றும் மீட்பு குறித்து, தீயணைப்புத்துறை மற்றும் வனத்துறை சார்பில், செயல்விளக்க பயிற்சி நடந்தது.
- மரத்தின் கிளைகள், இலைகளை கொண்டு அணைப்பது மற்றும் மேலும் பரவாமல் தடுப்பது குறித்தும் பயிற்சியளிக்கப்பட்டது.
உடுமலை:
ஆனைமலை புலிகள் காப்பகம் அமராவதி வனச்சரகத்திற்குட்பட்ட கரட்டுபதி மலைவாழ் மக்கள் குடியிருப்பில் வசிக்கும் மக்களுக்கு, வனத்தீ ஏற்படுவதை தடுத்தல், தீ விபத்துக்களை தடுத்தல் மற்றும் மீட்பு குறித்து, தீயணைப்புத்துறை மற்றும் வனத்துறை சார்பில், செயல்விளக்க பயிற்சி நடந்தது.
அமராவதி வனச்சரக அலுவலர் சுரேஷ், உடுமலை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலைய அலுவலர் மூர்த்தி தலைமையிலா தீயணைப்புத்துறை வீரர்கள், தீத்தடுப்பு குறித்தும், வனத்தீ ஏற்படுவது மற்றும் அதனை தடுப்பது குறித்தும் வனப்பகுதிகளில் தீத்தடுப்புக்கோடு அமைப்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
மேலும் வனத்தில் அடிபட்ட நபர்களை மீட்கும் முறைகள் குறித்தும், செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.பின்னர் தீயணைப்புத்துறையினரால், வனத்தில் செயற்கையான தீ விபத்து உருவாக்கப்பட்டு, வனப்பாதுகாவலர்களைக்கொண்டு, மரத்தின் கிளைகள், இலைகளை கொண்டு அணைப்பது மற்றும் மேலும் பரவாமல் தடுப்பது குறித்தும் பயிற்சியளிக்கப்பட்டது.
- குறு வள மைய அளவிலான பயிற்சி முகாம் நடைபெற்றது.
- இல்லம் தேடி கல்வி திட்டத்தின் தொடக்க நிலை தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
மொரப்பூர்,
தருமபுரி மாவட்டம், மொரப்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தமிழக அரசின் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் சார்பில் தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கு குறு வள மைய அளவிலான பயிற்சி முகாம் நடைபெற்றது.இப்பயிற்சி முகாமில் ஆசிரிய பயிற்றுநர்கள் சாரதி,விமலன், ஆசிரி யைகள் சரண்யா,சுகாசினி ஆகியோர் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கு குறைதீர் கற்பித்தல் தொடர்பான பயிற்சி அளித்தனர்.
இப்பயிற்சியில் 1 -ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ,மாணவியர்களுக்கு அடிப்படை எழுத்தறி வித்தல், எழுதுதல்,எண்கள் ஆகியவை எளிதாக புரியும் வண்ணம் வகுப்புகள் நடத்தும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டது.இப்பயிற்சி முகாமில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் தொடக்க நிலை தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
- ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது
- அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் ஒன்றியத்தில் உள்ள 34 ஊராட்சிக்குட்பட்ட பொது மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் மூலம் மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி, மினிடேங்க் உள்ளிட்டவைகள் மூலமாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. சில ஊராட்சிகளில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
குடிநீரை பரிசோதனை செய்து வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். அதன்படி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் சார்பில் திருப்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் பணியாற்றும் ஊராட்சி செயலாளர்கள், பம்ப் ஆபரேட்டர்கள், சுகாதார குழு உறுப் பினர்களுக்கான குடிநீர் பரிசோதனை பயிற்சி முகாம் திருப் பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் என்.சங்கர், ஜே.மணவாளன் தலைமை வகித்தனர். ஐ.ஆர்.டி.டீ. நிறுவன செயலாளர் மனோ ரஞ்ஜிதம் வரவேற்றார்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய திருப்பத்தூர் மாவட்ட நிர்வாக பொறியாளர் பி.லதா பயிற்சி முகாமை தொடங்கி வைத்து பேசினார். துணை நிர்வாக பொறியாளர் பர்குணன் கலந்து கொண்டு பயிற்சி அளித்தார். கிராம குடிநீர் மற்றும் சுகாதாரக்குழு உறுப்பினர்களுக்கு குடிநீர் பரிேசாதனை பயிற்சி கையேடும் வழங்கப்பட்டது.
துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜி.ராஜா, மற்றும் பரிசோதனை குழுவினர் மஞ்சுநாதன், திலகவதி, சர்மிளா, பாக்யா, மற்றும் உராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
- வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுவது வழக்கம்.
- செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
ஊட்டி,
முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பருவ மழைக்கு முன்பு மற்றும் பின்பு வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபடுவது வழக்கம். நடப்பாண்டில் பருவ மழைக்குப் பிந்தைய வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்குகிறது. இதையொட்டி வன ஊழியர்களுக்கு தெப்பக்காடு முகாமில் பயிற்சி அளிக்கப்பட்டது. வனச்சரகர்கள் மனோகரன், விஜயன், மனோஜ் உள்ளிட்டோர் பயிற்சி அளித்தனர். முகாமில் வன விலங்குகளை நேரில் காணுதல், கால் தடயங்கள் மற்றும் எச்சங்களை கொண்டு கணக்கெடுப்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஜி.பி.எஸ். மற்றும் தொலைநோக்கு கருவிகள் கொண்டு கணக்கெடுப்பது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் வன ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
- மாநில துணைப் பொதுச் செயலாளா் யு.கே.சிவஞானம் பயிற்சி முகாமைத் தொடங்கிவைத்தாா்.
- திருப்பூா் ஒன்றிய கிராம கூட்டமைப்பின் தலைவா் கணேசன் நன்றி கூறினாா்.
திருப்பூர்:
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள தலித் ஊராட்சித் தலைவா்களுக்காக உள்ளாட்சி நிா்வாகத்தில் சமூகநீதி என்ற தலைப்பிலான பயிற்சி முகாம் அரிமா சங்க அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
இந்த பயிற்சி முகாமுக்கு மாவட்டத் தலைவா்நந்தகோபால் தலைமை வகித்தாா், மாவட்டப் பொருளாளா்பஞ்சலிங்கம் வரவேற்றாா். மாநில துணைப் பொதுச் செயலாளா் யு.கே.சிவஞானம் பயிற்சி முகாமைத் தொடங்கிவைத்தாா்.
இதில் தமிழ்நாடு உள்ளாட்சிகள் சட்டம், கிராம சபையின் முக்கிய அம்சங்கள் தொடா்பாக மாநிலக் குழு உறுப்பினா் வேணியும், தலித் மற்றும் பழங்குடியின ஊராட்சித் தலைவா்கள் மீதான பாகுபாடுகளும்-தடுப்பதற்கான வழிமுறைகளும் தொடா்பாக மாநிலத் தலைவா் செல்லக்கண்ணு பேசினாா்.இதில் பங்கேற்ற ஊராட்சித் தலைவா்கள் தங்களது அனுபவங்களை பகிா்ந்து கொண்டனா்.முடிவில் திருப்பூா் ஒன்றிய கிராம கூட்டமைப்பின் தலைவா் கணேசன் நன்றி கூறினாா்.
- சுற்றுச்சூழல் மன்றங்களின் செயல்பாடுகள் மற்றும் மிஷன் இயற்கை செயல்பாடுகள் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
- அரசின் விருது கிடைக்க பரிந்துரை செய்யப்படும். ஆசிரியர்கள் எதிர்காலத்தின் நன்மையை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், சுற்றுச்சூழல் மன்றம் மற்றும் தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்களுக்கான பயிற்சி முகாம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். மாவட்டக் கல்வி அலுவலர் மணிமேகலை, தலைமை ஆசிரியர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிருஷ்ணகிரி சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் தீர்த்தகிரி வரவேற்றார்.
பள்ளிகளில் தேசிய பசுமைப் படை மற்றும் சுற்றுச்சூழல் மன்றங்களின் செயல்பாடுகள் மற்றும் மிஷன் இயற்கை செயல்பாடுகள் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ஆசிரியர்களுக்கு, மாணவர்கள் ஆர்வத்துடன் செடிகளை நட்டு வைப்பது குறித்த விழிப்புணர்வை கார்ட்டூன் மூலம் விளக்கும் காணொளிக் காட்சி ஒளிபரப்பப்பட்டது.
இதில் 250 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முகாமில் முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி பேசுகையில், சுற்றுச்சூழல் பணிகளில் சிறப்பாக செயல்படும் பள்ளிகளுக்கும், மாணவர்களுக்கும், அரசின் விருது கிடைக்க பரிந்துரை செய்யப்படும். ஆசிரியர்கள் எதிர்காலத்தின் நன்மையை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்றார்.
ஓசூர் தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் பாலாஜி நன்றி கூறினார்.
- காபி, குறுமிளகு போன்ற தோட்டக்கலை பயிர்கள் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகின்றன.
- காபி பயிரில் ஏற்படும் தண்டு துளைப்பானை இயற்கை முறையில் கட்டுப்படுத்துவது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
ஊட்டி,
குன்னூர் அருகே உலிக்கல் பேரூராட்சியில் செங்கல்கொம்பை பழங்குடியின கிராமம் உள்ளது. இங்கு காபி, குறுமிளகு போன்ற தோட்டக்கலை பயிர்கள் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் அங்கு, குன்னூர் வட்டார தோட்டக்கலை துறை சார்பில் தேசிய மண் வள இயக்கத்தின் மூலம் மண் வளத்தின் முக்கியத்துவம் மற்றும் மண்வளத்தை பாதுகாப்பது குறித்து பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டவர்களுக்கு காபி பயிரில் ஏற்படும் தண்டு துளைப்பானை இயற்கை முறையில் கட்டுப்படுத்துவது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும் குறுமிளகு செடிகளில் ஏற்படும் வாடல் நோயை கட்டுப்படுத்துவது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கு தேவையான இயற்கை இடுபொருட்கள் தேசிய தோட்டக்கலை இயக்கம் மூலம் பரப்பு விரிவாக்க திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது.
இதுதவிர முதன் முறையாக வெண்ணை பழம் என்று சொல்லப்படும் பட்டர் புரூட் மற்றும் எலுமிச்சை நாற்றுகள் 2 எக்டருக்கு தேவையான அளவில் வழங்கப்பட்டது. இங்கு விளைவிக்கப்படும் காபி மற்றும் குறுமிளகு எந்தவித ரசாயனங்களும் இன்றி இயற்கை முறையிலேயே விளைவிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
எனவே அவர்களுக்கு அங்கக சான்றிதழ் வாங்கி பயன்படுத்த தோட்டக்கலைத்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டது. மேலும் மண் மாதிரி எடுப்பது தொடர்பாக பயிற்சி வழங்கப்பட்டது. இதில் தோட்டக்கலை உதவி அலுவலர்கள், அட்மா திட்ட மேலாளர், தோட்டக்க–லை அலுவலர், குன்னூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் பழங்குடியின விவசா–யிகளும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
- நாகர்கோவில் நீதிமன்ற இலவச சட்ட உதவி மைய செயலாளர் நீதிபதி நம்பிராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
- வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர் மரிய ஸ்டீபன் உள்பட 100-க்கும் மேற்பட்ட இளம் வக்கீல்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
கன்னியாகுமரி :
நாகர்கோவில் வக்கீல் சங்கத்தில் வக்கீல்களுக்கான சட்டப் பயிற்சி முகாம் நடைபெற்றது. வழக்கறிஞர் சங்க தலைவர் அசோக் பத்மராஜ் தலைமை தாங்கினார். நாகர்கோவில் நீதிமன்ற இலவச சட்ட உதவி மைய செயலாளர் நீதிபதி நம்பிராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த வக்கீல்களுக்கான சட்டப் பயிற்சி வகுப்பை நிறைவேற்று மனுக்கள் சம்பந்தமாக என்ற தலைப்பில் நாகர்கோவில் முதலாவது சார்பு நீதிபதி முருகன் அனைத்து வக்கீல்க ளும் தெளிவு பெறும் வண்ணம் விளக்கினார்.
இதில் மூத்த வக்கீல்கள் ரெத்தினசுவாமி, தனிஸ்லாஸ், நாகர்கோவில் வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர் மரிய ஸ்டீபன் உள்பட 100-க்கும் மேற்பட்ட இளம் வக்கீல்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.