search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செங்கல்"

    • பிரிட்டனைச் சேர்ந்த 39 வயதாகும் பாட்ரிஸ் பெஞ்சமின் டேஸ்ட் நன்றாக இருக்கிறதென சிமிண்ட் செங்கலை நொறுக்குதீனியாக தினமும் சாப்பிட்டு வருகிறார்.
    • இதனால் தனது உடலில் ஏற்படும் பாதிப்புகள் தெரிந்தும் தனது பழக்கத்தை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதற்கு அடிமையாகியுள்ளார் பாட்ரிஸ்.

    மனிதர்கள் பல்வேறு விஷயங்களுக்கு அடிமையாக இருப்பது தெரிந்ததே. வினோதமான விஷயங்களை செய்பவர்களைக் குறித்து நாம் கேள்விப்படும்போது அது நமக்கு ஆச்சரியம் அளிக்கத் தவறுவதில்லை. அந்த வகையில் பெண் ஒருவர் கடந்த 20 வருடங்களாக சிமெண்ட், செங்கல், கல், மண் ஆகியவற்றை தின்பண்டமாக தினமும் சாப்பிட்டு வருகிறார் என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா? ஆம், பிரிட்டனைச் சேர்ந்த 39 வயதாகும் பாட்ரிஸ் பெஞ்சமின் டேஸ்ட் நன்றாக இருக்கிறதென சிமிண்ட் செங்கலை நொறுக்குதீனியாக தினமும் சாப்பிட்டு வருகிறார்.

    இவைகளை உண்பது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவிக்கும் பாட்ரிஸ், வீட்டில் உள்ள சுவர்களை உடைத்து அதில் உள்ள செங்கல் சிமெண்ட் உதிரிகளையும் சாப்பிட்டு வருகிறாராம். அவரது கணவர் எவ்வளவோ கெஞ்சியும் பாட்ரிஸால் இந்த பழக்கத்தை கைவிட முடியவில்லை.

     

    இதனால் தனது உடலில் ஏற்படும் பாதிப்புகள் தெரிந்தும் தனது பழக்கத்தை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதற்கு அடிமையாகியுள்ளார் பாட்ரிஸ். சாப்பிடக் கூடாதவற்றை சாப்பிடத்தூண்டும் இந்த குறைபாட்டுக்கு பிக்கா என்பது மருத்துவப்பெயர். தனது 18 வது வயதில் பிக்கா குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பாட்ரிஸ் கடந்த 20 ஆண்டுகளாக இந்த பழக்கத்தில் இருந்து விடுபடமுடியாமல் தவித்து வருகிறார். 

     

    தமிழில் சரத்குமார் நடித்த 'ஏய்' படத்தில் வரும் ஒரு காமெடி சீனில் டியூப்லைட்டை உடைத்து சாப்பிடும் ஒருவரிடம் வடிவேலு மாட்டிக்கொளவார். காலை, மதியம், இரவு என மூன்று வேலையும் அவர் லைட் பல்புகளை சாப்பிடுவதாக சொல்வது காமெடியாக நாம் எடுத்துக்கொண்ட நிலையில் உண்மையிலேயே அதுபோன்ற நபர்கள் உலகத்தில் இருப்பது ஆச்சரியமளிப்பதாக உள்ளது. 

    • கும்பகோணத்தில் தொடர்ந்து 2 நாட்களாக மழை பெய்தது.
    • மழைபெய்ய தொடங்கியதும் பணியாளர்கள் செங்கற்களை தார்ப்பாய் கொண்டு மூடினர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பகலில் வெயில் அடிப்பதும், மாலையில் மழைபெய்வதுமாக இருந்து வருகிறது.

    கும்பகோணத்தில் தொடர்ந்து 2 நாட்களாக மழை பெய்தது.

    இதனால் வெயிலை நம்பி செங்கல் உற்பத்தியில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு இந்த மழை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தயார் செய்து சூடுபடுத்த அடுக்கி வைக்கப்பட்டிருந்த செங்கற்கள் அனைத்தும் தண்ணீரில் நனைந்து வீணாக தொடங்கியது.

    இதனால் செங்கல் காலவாயில் தங்கியிருந்து வேலைபார்க்கும் பணியாளர்கள் மழைபெய்ய தொடங்கியதும் செங்கற்களை தார்ப்பாய் கொண்டு மூடினர்.

    உற்பத்திக்காக வைக்கப்பட்டிருந்த மண் மழைநீரில் கரைந்து ஓடியது. பல இடங்களில் சூளைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. காய வைக்கப்பட்டிருந்த செங்கற்கள் மழையில் நனைந்து சேதமடைந்து வருகின்றன.

    இதனால் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக சூளை உரிமையாளர்கள் வேதனையுடன் கூறினர்.

    • 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து சரமாரியாக குத்தி கொலை செய்தனர்.
    • சென்னையில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களை கைது செய்தனர்.

    கன்னியாகுமரி:

    ஆரல்வாய்மொழி கிறிஸ்து நகர் பகுதியை சேர்ந்தவர் ஏசுதாசன் (வயது 62). இவர் அந்த பகுதியில் செங்கல் சூளை நடத்தி வந்தார்.

    இவர் கடந்த 9-ந்தேதி மிஷின் காம்பவுண்ட் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்தபோது 4 பேர் கொண்ட கும்பல் இவரை வழிமறித்து சரமாரியாக குத்தி கொலை செய்தனர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டது.

    இது பற்றிய தகவல் அறிந்ததும் ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். ஏசுதாசின் மனைவி ஜெயா கொடுத்த புகாரின் பேரில் ஆரல்வாய்மொழியை சேர்ந்த அன்பு என்ற அன்பழகன், கிறிஸ்து நகரை சேர்ந்த விஜயன், திருப்பதி சாரத்தை சேர்ந்த மணிகண்டன், மிஷின் காம்பவுண்ட்டை சேர்ந்த தங்க ஜோஸ் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர்களை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் தங்கஜோஸ் (25) என்பவரை கைது செய்தனர். மற்ற 3 பேரை தேடி வந்தனர். இந்த நிலையில் 3 பேரும் சென்னையில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட அன்பு போலீசாரிடம் அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:-

    எனது உறவுக்கார பெண்ணுக்கும், ஏசுதாசனுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்தது. இது தொடர்பாக எனக்கும், அவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.

    இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஏசுதாசனும், அவரது மகனும் என்னை தாக்கி னார்கள். இது எனக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் எனது நண்பர்களுடன் சேர்ந்து ஏசுதாசனை பழிக்குப்பழியாக குத்தி கொலை செய்தோம். கொலை செய்த பிறகு சென்னைக்கு ரயிலில் தப்பி சென்றோம். பின்னர் அங்குள்ள இரும்பு கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தோம். போலீசார் எங்களை கைது செய்து விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கைது செய்யப்பட்ட அன்பு, விஜயன், மணிகண் டன் ஆகிய 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர். ஜெயிலில் அடைக்கப்பட்ட 3 பேர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளது. மேலும் இவர்களது பெயர் ரவுடிகள் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    • ஒரு செங்கல் சூளை அமைக்க ரூ.40 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை செலவாகும் என்று கூறப்படுகிறது.
    • செங்கல் தயாரிக்க பயன்படும் மண்ணை சுமார் 40 கி.மீட்டர் தூரம் வரை சென்று வாங்கி வருகின்றனர். 1 யூனிட் மண் சுமார் ரூ.2,500-க்கு வாங்கி வருவதாக அதன் உரிமை யாளர்கள் தெரிவித்த னர்.

    அன்னதானப்பட்டி:

    சிறிய கட்டிடங்கள், பெரிய கட்டிடங்கள், மாட மாளிகை, கோவில்கள் போன்ற எந்தவொரு கட்டிடமும் கட்டுவதற்கு அந்த காலம் முதல் இந்த காலம் வரை முக்கிய மூலப்பொருளாக இருந்து வருவது செங்கல் தான். தற்போது 'ஹாலோ பிரிக்ஸ்' கற்கள் பயன்பாட்டுக்கு வந்து வர்த்தக ரீதியாக கடும் போட்டியை ஏற்படுத்தி இருந்தாலும் செங்கலின் பயன்பாடும், மவுசும் இன்னமும் குறையாமல் இருந்து வருவதை பார்க்க முடிகிறது.

    ஒரு செங்கல் சூளை அமைக்க 1 ஏக்கர் பரப்பளவுக்கு இடம் தேவை. சேலம், நாமக்கல் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் உள்ள ஓமலூர், மேச்சேரி, மல்லூர், அத்தனூர், கிழக்குவலசு, குருசாமிபாளையம், வடுகம், சங்ககிரி, திருச்செங்கோடு, காளப்பநாயக்கன்பட்டி, சேந்தமங்கலம், பேளுக்கு றிச்சி, குமாரபாளையம், அரூர், தொப்பூர் உள்பட பல இடங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன.

    இந்த தொழிலில் மறைமுக மாகவும், நேரிடையாகவும் ஏறக்குறைய 60 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. மாதந்தோறும் சுமார் 1 கோடி அளவுக்கு செங்கல் உற்பத்தி செய்யப்படுகிறது. சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் செங்கல்கள் நல்ல தரமான மண் கொண்டு தயாரிக்கப்படுவதால் செங்கலின் தரமும் உயர்ந்து காணப்படுகிறது. 

    மேலும் இந்த பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் செங்கல் கோவை மாவட்ட பகுதியில் உற்பத்தி செய்யப்படும் செங்கலை விட தரமானதாக இருப்ப தாலும், விலை சற்று குறைந்து விற்கப்படுவதாலும் திருப்பூர், திருச்சி, அரியலூர், சென்னை, ஓசூர், பெங்களூரு போன்ற இடங்களில் இருந்து வந்து வாங்கி செல்கின்றனர்.

    ஒரு செங்கல் சூளை அமைக்க ரூ.40 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை செலவாகும் என்று கூறப்படுகிறது. செங்கல் தயாரிக்க பயன்படும் மண்ணை சுமார் 40 கி.மீட்டர் தூரம் வரை சென்று வாங்கி வருகின்றனர். 1 யூனிட் மண் சுமார் ரூ.2,500-க்கு வாங்கி வருவதாக அதன் உரிமை யாளர்கள் தெரிவித்த னர். செங்கல் சூளை களில் வேலை செய்யும் தொழி லாளர்க ளுக்கு 6, 7 மாதங்கள் மட்டும் தான் வேலையும், வருமானமும் கிடைக்கிறது. அதேபோல் உரிமையாளர்களுக்கும் அதே நிலைதான். மழை இல்லாத காலங்களில் தான் செங்கல் உற்பத்தியும், விற்பனையும் நடக்கிறது.

    இது குறித்து செங்கல் உற்பத்தி யாளர்கள் கூறுகையில், " தமிழகத்தி லேயே சேலத்தில் தான் செங்கல் உற்பத்தி அதிகளவில் நடைபெறு கிறது. ஏனெனில் இங்கு தரமான செங்கல்கள் உற்பத்தி செய்யப்ப ட்டு வருகி ன்றன. ஆயி ரக்க ணக்கான தொழி லாளர்கள் இத்தொ ழிலை நம்பி உள்ளனர். கடந்த சில மாதங்களாக பெய்த மழையால் செங்கல் உற்பத்தி 60 சதவீதம் வரை சரிந்தது. தற்போது நல்ல வெயில் அடித்து வருவதால், செங்கல் உற்பத்தியை அதிகப்படுத்தி உள்ளோம்.  

    வருகிற ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்கள் வரை செங்கல் உற்பத்தி நல்ல முறையில் நடைபெறும். தற்போது உற்பத்தி பணிகள் சூடு பிடித்துள்ளதால் கட்டுமானப் பணிகளுக்கு உடனுக்குடன் செங்கல்கள் அனுப்பி வைத்து வருகிறோம்.". இவ்வாறு அவர்கள் கூறினர்.

    மணிப்பூர் மாநிலத்தில் தண்டவாள கட்டுமானப்பணியின் போது கிடைக்கும் தேவையற்ற மண்ணை செங்கலாக மாற்றும் திட்டத்தை ரெயில்வே தொடங்கியுள்ளது.
    புதுடெல்லி:

    மணிப்பூர் மாநிலத்தில் ஜிரிபாம்-இம்பால் இடையே புதிய ரெயில்வே பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இது மிகப்பெரிய திட்டமாகும். பொதுவாக மலைப்பாதையில் ரெயில்வே பாதை அமைக்கப்படும் போது ஏராளமான மண் வீணாக்கப்படுகிறது.

    இந்த மண்ணானது தாழ்வான பகுதிகள் அல்லது நீர் ஆதாரங்களினுள் நிரப்படுகின்றன. இதனால் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. மாசுபாட்டை குறைக்கும் வகையில் வடகிழக்கு எல்லைப்புற ரெயில்வேயானது. சில்சார் என்.ஐ.டி.யுடன் இணைந்து புதிய திட்டத்தை செயல்படுத்தி உள்ளது.



     இதன் மூலம், வீணாகும் மண்ணுடன், சிறிதளவு சிமெண்ட் சேர்க்கப்பட்டு செங்கல் தயாரிக்கப்பட்டது. நாள் ஒன்றுக்கு 3 ஆயிரத்து 500 செங்கல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவை மிகவும் உறுதியாகவும், விலை குறைவாகவும் உள்ளதால் பொதுமக்கள் பெரியளவில் பயனடைந்துள்ளனர்.
    ×