என் மலர்
நீங்கள் தேடியது "கூலி தொழிலாளி"
- சம்பவத்தன்று அய்யப்பன் தனியார் பஸ்சில் மேல்பட்டாம்பாக்கத்திற்கு வந்தார்.
- இது குறித்து நெல்லிக்குப்பம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி சொர்ணாவூர் சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 33). கூலி தொழிலாளி. இவருக்கு காமாட்சி என்கிற மனைவி, ஒரு மகன் உள்ளனர் சம்பவத்தன்று அய்யப்பன் தனியார் பஸ்சில் மேல்பட்டாம்பாக்கத்திற்கு வந்தார். அப்போது சந்தத்தோப்பு திடலில் குடிபோதையில் மயங்கி கிடந்தார். இதனை தொடர்ந்து அய்யப்பனை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அய்யப்பன் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து நெல்லிக்குப்பம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆனந்தன் கருக்கம்பாளையம் மாகாளியம்மன் கோவில் முன்பு விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
- இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
பெரம்பலூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் (40). கூலி தொழிலாளி. இவரது மனைவி கீதா (36). இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். ஆனந்தன் வெளியூரில் தங்கி வேலை செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது.
இதனால் சரியாக வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு சுற்றி வந்துள்ளார். மேலும் வீட்டு செலவுக்கு பணம் தராமல் இருந்துள்ளார். வெளியூரிலிருந்து எப்போதாவது வீட்டுக்கு வரும் ஆனந்தன் குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று அதே ஊரை சேர்ந்த ஒருவரிடம் ரூ.300 கடன் பெற்று கொண்டு வெளியூர் சென்று விட்டார். இந்நிலையில் ஆனந்தன் ஈரோடு மாவட்டம் லக்காபுரம் அடுத்த கருக்கம்பாளையம் மாகாளியம்மன் கோவில் முன்பு விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஆனந்தன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது குறித்து ஆனந்தன் மனைவி கீதாவுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
- தொழிலாளி வீட்டில் நகை கொள்ளையடிக்கப்பட்டது
- மதிவாணன் வேலைக்காக வெளியில் சென்று விட்டார்
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள பார்வதிநகர் பகுதியை சேர்ந்தவர் மணிவேல்.
இவருடைய மகன் மதிவாணன்.
கூலி தொழிலாளி. இவர் கடந்த 24-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார்.
பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் வீட்டின் உள்ளே சென்ற பார்த்தபோது அங்கிருந்த பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிமணிகள் சிதறிக்கிடந்தது.
பீரோவில் இருந்த 7½ பவுன் நகைகளையும் காணவில்லை.
வீட்டில் ஆள் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் பூட்டை உடைத்து நகைகளை திருடிச்சென்றது தெரிய வந்தது.
திருட்டு போன நகைகளின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
இதுகுறித்து மதிவாணன் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
- மதுபோதையில் அந்தியூர் பஸ் நிலையத்திலேயே இருசப்பன் படுத்து தூங்கியுள்ளார்.
- இந்த நிலையில் காலையில் பஸ் நிலையத்திலேயே இறந்து கிடந்தார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் குருவரெட்டியூர் அருகே உள்ள விளாமரத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் இருசப்பன் (40). இவருக்கு திருமணமாகி 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 வருடங்களாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இருசப்பன் விவசாய கூலி வேலைகள் செய்து வந்தார்.
அதிக வயிற்று வலிக்காக கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று பப்பாளி பறிக்கும் வேலைக்காக உடுமலைக்கு சென்றவர் மீண்டும் வீட்டுக்கு செல்ல அந்தியூர் வந்துள்ளார். இரவு மதுபோதையில் அந்தியூர் பஸ் நிலையத்திலேயே இருசப்பன் படுத்து தூங்கியுள்ளார்.
இந்த நிலையில் காலையில் பஸ் நிலையத்திலேயே இறந்து கிடந்தார். இதுகுறித்து அங்கிருந்தவர்கள் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் வந்து இருசப்பனை ஆம்புலன்ஸ் மூலமாக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் இருசப்பன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- கூலி தொழிலாளி-முதியவர் தற்கொலை செய்து கொண்டனர்.
- மேலவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை சொக்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் தனபாலகிருஷ்ணன் (45). கூலித் தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. அவர் எந்நேரமும் குடித்து விட்டு ஊர் சுற்றினார். இதை மனைவி தட்டி கேட்டார். இதன் காரணமாக கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. வாழ்க்கையில் விரக்தி அடைந்த தனபால கிருஷ்ணன், சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மதுரை புலிப்பட்டியை சேர்ந்தவர் பூசாரி (வயது 70). இவருக்கு நீரிழிவு நோய் இருந்து வந்தது. இதனால் அவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரை உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து நோயின் பாதிப்பு அதிகரித்து வந்ததால் அவர் மனமுடைந்தார். இதைத்தொடர்ந்து பூசாரி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றிய புகாரின் பேரில் மேலவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெண்-கூலி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
- சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மதுரை
வாடிப்பட்டியைச் சேர்ந்தவர் பூப்பாண்டி அம்மாள் (27). இவர் மதுரை ஐராவதநல்லூர், அந்தோணியார் தெருவை சேர்ந்த வாலிபருடன், திருமணம் செய்யாமல் வாழ்க்கை நடத்தினார். நேற்று அவர் கள்ளக்காதலன் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது அவருக்கு வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டது. அங்கு பூப்பாண்டி அம்மாள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பைக்காரா, வயக்காட்டு தெருவை சேர்ந்தவர் ஆனந்த் (41). இவர் கூலி வேலை பார்த்து பிழைப்பு நடத்தி வந்தார். அவருக்கு வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டது. சம்பவத்தன்று நள்ளிரவு ஆனந்த் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
- பிக்கப் வேன் மோட்டார் சைக்கிளில் வந்த சஞ்சீவி மீது மோதியது.
- இதில் தலை மற்றும் காலில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டது.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் அடுத்த கள்ளிப்பட்டி அருகே உள்ள பெருமுகை ஊராட்சி வரப்பள்ளம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சஞ்சீவி (40). கூலி தொழிலாளி.
இந்நிலையில் சஞ்சீவி தனது சொந்த வேலை காரணமாக வெளியே சென்று விட்டு மீண்டும் அத்தாணியில் இருந்து சத்தியமங்கலம் சாலையில் தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது எதிரே சத்தியமங்கலம் சாலையில் இருந்து அத்தாணி சாலை நோக்கி மேட்டுப்பாளையம் காட்டூரை சேர்ந்த சதாம் உசேன் என்பவர் பிக்கப் வேனை ஓட்டி வந்தார்.
வரப்பள்ளம் சிதம்பரம் தோட்டம் அருகே முன்னே சென்ற வாகன ஓட்டி ஒருவரை பிக்கப் வேனை ஓட்டி வந்த சதாம் உசேன் வேகமாக முந்தி செல்ல முயன்ற போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த சஞ்சீவி மீது மோதியது.
இதில் தலை மற்றும் காலில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சஞ்சீவி மனைவி சாந்தா ரத்த காயங்களுடன் கீழே கிடந்த சஞ்சீவியை அருகில் இருந்தோர் உதவியுடன் ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சஞ்சீவி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வேனை ஓட்டி வந்த சதாம் உசேன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கிணற்றின் அருகில் அமர்ந்து மது குடித்ததாக கூறப்படுகிறது.
- அவர் குடிபோதையில் தவறி கிணற்றில் விழுந்தார்.
ஈரோடு,
ஈரோடு அடுத்துள்ள பெரியசேமூர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (52). கூலித்தொழிலாளியான இவர் நேற்று மாலை அங்குள்ள விவசாய தோட்டத்து கிணற்றின் அருகில் அமர்ந்து மது குடித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவர் குடிபோதையில் தவறி கிணற்றில் விழுந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் இது குறித்து ஈரோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 1 மணி நேரம் போராடி முருகனின் உடலை மீட்டனர்.
இது குறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மூர்த்தி தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.
- பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
பெருந்துறை அடுத்த துடுப்பதி, கருமாண்டி செல்லிபாளையம், சமாதானபுரம் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (32). இவரது மனைவி பரிமளா (32). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இருவரும் கூலி வேலைக்கு சென்று வந்தனர்.
இந்நிலையில் மூர்த்தி அடிக்கடி குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். குடிப்ப ழக்கம் காரணமாக மூர்த்தி க்கு வயிற்று வலி இருந்து வந்துள்ளது. வயிற்று வலி வரும்போதெல்லாம் தான் இறந்து விட போவதாக மூர்த்தி கூறிவந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மூர்த்தி தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே மூர்த்தி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.
- முருகாத்தாள் கணவரிடம் மது அருந்தி வந்ததற்காக சத்தம் போட்டார்.
- முருகாத்தாள் வீட்டுக்கு வந்து கதவை தட்டியுள்ளார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர் அடுத்த அரக்கன் கோட்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ரங்கசாமி (33). கட்டிட கூலித் தொழிலாளி. இவரது மனைவி முருகாத்தாள் (27). இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகன் உள்ளார். ரங்கசாமிக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.
இந்நிலையில் ஊரில் கோவில் திருவிழாவை ஒட்டி நேற்று முருகாத்தாள் அம்மாவும், அவரது தம்பியும் முருகாத்தாள் வீட்டுக்கு வந்துள்ளனர்.
அப்போது அரங்கசாமி மது அருந்து வீட்டுக்கு வந்து வாந்தி எடுத்துள்ளார். இதனால் முருகாத்தாள் கணவரிடம் மது அருந்தி வந்ததற்காக சத்தம் போட்டார்.
பின்னர் ஒரு குடம் தண்ணீரை எடுத்து ஒரு ரங்கசாமி மீது ஊற்றினார். இதனால் ஆத்திரமடைந்த ரங்கசாமி தான் எங்கேயாவது போய் விடுகிறேன் என்று கூறியுள்ளார். பின்னர் முருகாத்தாள் அவரது தாய் மற்றும் தம்பி கோவில் திருவிழாவுக்கு சென்று விட்டனர்.
வீட்டில் ரங்கசாமி இருந்துள்ளார். பின்னர் முருகாத்தாள் வீட்டுக்கு வந்து கதவை தட்டியுள்ளார். ஆனால் பதில் ஏதும் வரவில்லை. கதவு உள் தாழ்பால் போடப்பட்டிருந்தது. ஜன்னல் வழியாக பார்த்தபோது ரங்கசாமி வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அக்கம், பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர் . அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே ரங்கசாமி இறந்துவிட்டதாக தெரிவித்தார். இது குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முரளிபாபு கூலித் தொழிலாளி திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
- மனமுடைந்த முரளிபாபு வீட்டிலிருந்த மின் விசிறியில் தூக்கு மாட்டிக்கொண்டு இறந்து போனார்.
கள்ளக்குறிச்சி:
உளுந்தூர்பேட்டை அடுத்த பாலி கிராமத்தை சேர்ந்தவர் முரளிபாபு (வயது 38). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். முரளிபாபுவிற்கும் அவரது மனைவி அஷ்டலட்சுமிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் அஷ்டலட்சுமி கோபித்துக் கொண்டு அவரது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இதனால் மனமுடைந்த முரளிபாபு குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். வீட்டிலிருந்த மின் விசிறியில் தூக்கு மாட்டிக்கொண்டு இறந்து போனார். இது குறித்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். முரளிபாபுவின் உடலை கைப்பற்றி உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- தினமும் வேலைக்கு சென்றுவிட்டு தன் வீட்டின் அருகில் உள்ள வாய்காலில் குளிக்க செல்வது வழக்கம்.
- உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.
திருவட்டார் :
குலசேகரம் அருகே சேக்கல் பகுதியை சேர்ந்தவர் கிருஸ்துதாஸ் (வயது 55). இவர் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் தன் அம்மாவுடன் வசித்து வருகிறார். தினமும் வேலைக்கு சென்றுவிட்டு தன் வீட்டின் அருகில் உள்ள வாய்காலில் குளிக்க செல்வது வழக்கம்.
சம்பவத்தன்று நேற்று மாலை வேலை முடிந்து வாய்க்காலில் குளிக்க சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அந்த பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் குளிக்க செல்லும் போது முதியவர் ஒருவர் தண்ணீரில் மூழ்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு குலசேகரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இவருடைய அண்ணன் சைமன் கொடுத்த புகாரின் பேரில் குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். கிறிஸ்துதாசின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.