என் மலர்
நீங்கள் தேடியது "விபசாரம்"
- போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையில் போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டை தீவிரமாக கண்காணித்தனர்.
- வீட்டில் நடத்திய சோதனையின்போது விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது.
அனுப்பர்பாளையம்:
திருப்பூர் திருமுருகன்பூண்டியை அடுத்த அணைபுதூர் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் மசாஜ் சென்டர் செயல்பட்டு வந்தது. இதை ஜோசப் என்பவர் நடத்தி வந்தார். ஆனால் மசாஜ் சென்டர் பெயரில் அங்கு விபசாரம் நடப்பதாக திருமுருகன்பூண்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையில் போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டை தீவிரமாக கண்காணித்தனர். மேலும் அங்கு நடத்திய சோதனையின்போது விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அங்கிருந்த புரோக்கர்கள் கேரளாவை சேர்ந்த ஜித்தன் (வயது20), ஊழியர்கள் ஸ்ரீஜித் ( 21), ஸ்ரீஜேஸ் (26) உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட கர்நாடகாவை சேர்ந்த 2 பேர் உள்பட 3 அழகிகளை போலீசார் அங்கிருந்து மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
- வாடகைக்கு எடுத்து பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
- 7 பெண்களை மீட்டு அனுப்பி வைத்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததின் பேரில் சந்தேகத்திற்குரிய இடத்தில் சோதனை நடத்தினர்.
விழுப்புரம் தாலுகா காவல் ஆய்வாளர் ஆனந்தன் தலைமையிலான போலீசார், விழுப்புரம் சாலாமேடு என்.ஜி.ஜி.ஓ. நகரில் ரகசியமாக நோட்டமிட்டனர். அப்போது கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த சொரத்தூரை சேர்ந்த வினோ(28) மற்றும் மரகதபுரம் சத்தியா(34) ஆகிய இருவரும் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அதேபோல் விழுப்புரம் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் போலீசார் பூந்தோட்டம் பாதை என்ற பகுதியில் விபச்சாரம் நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சோதனை நடத்தியதில் ஒரு பெண் வாடகை வீடு எடுத்து பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது பெண்ணுடன் விபச்சாரத்தில் ஈடுபட்ட பனையபுரம் பகுதியை சேர்ந்த அபுல்ஹசன் என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரத்தில் இருவெவ்வேறு இடங்களில் வாடகை வீடு எடுத்து விபச்சாரத்தில் ஈடுபட்ட 3 நபர்களை போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர். மேலும் 7 பெண்களை மீட்டு அனுப்பி வைத்தனர்.
- வாடிக்கையாளர்கள் சிலர் அழகிகளுடன் விபசாரத்தில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
- கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 2 அழகிகள் உள்பட 3 இளம்பெண்களை போலீசார் மீட்டு மைலாப்பூரில் உள்ள அரசு காப்பகத்தில் சேர்த்தனர்.
போரூர்:
சென்னை சாலிகிராமம் பாஸ்கர் காலனி பகுதியில் விபசாரம் நடப்பதாக வளசரவாக்கம் உதவி கமிஷனர் கவுதமனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் நேற்று மாலை அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் ஆட்கள் நடமாட்டம் சந்தேகப்படும்படி இருந்தது.
இதையடுத்து போலீசார் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள அறையில் வாடிக்கையாளர்கள் சிலர் அழகிகளுடன் விபசாரத்தில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு எடுத்து விபசாரம் நடத்தி வந்த ஜாபர்கான்பேட்டை பகுதியை சேர்ந்த வெஸ்லி கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மேலாளர் மணிகண்டன் பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஊழியர் காட்சன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5 ஆயிரம் ரொக்கம், 5 செல்போன்கள், ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 2 அழகிகள் உள்பட 3 இளம்பெண்களை போலீசார் மீட்டு மைலாப்பூரில் உள்ள அரசு காப்பகத்தில் சேர்த்தனர்.
- போலீசார், பெண் காவலர்களுடன் சென்று வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
- சோதனையில் அழகிகளை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் உள்ள பங்களா ஒன்றில் விபசாரம் நடப்பதாக டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் அந்த வீட்டை கண்காணித்து வந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக சிலர் செல்வது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார், பெண் காவலர்களுடன் சென்று அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு அழகிகளை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.
அங்கிருந்த ஒரு பெண்ணை மீட்ட போலீசார், அழகிகளை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த வாசுதேவநல்லூரை சேர்ந்த மகேஸ்வரியை (வயது 32) கைது செய்தனர்.
விசாரணையில் அவர் கடந்த சில மாதங்களாக இந்த வீட்டை வாடகைக்கு எடுத்து விபசாரம் நடத்தியது தெரிய வந்தது.
மேலும் அங்கிருந்த வாசுதேவநல்லூரை சேர்ந்த மாரித்துரை (24), சங்கரன்கோவிலை சேர்ந்த சுதாகர் ஆகியோரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காரைக்குடி பெரியார் சிலை அருகே உள்ள மசாஜ் சென்டரிலும் விபசாரத்திலும் ஈடுபடுத்தப்பட்ட 2 பெண்களை போலீசார் மீட்டனர்.
- காரைக்குடியில் கடந்த சில மாதங்களாகவே மசாஜ் சென்டர்கள் புற்றீசல்கள் போல் அதிகரித்துள்ளன.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செயல்படும் மசாஜ் சென்டர்களில் விபசாரம் நடைபெறுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாள் ஸ்டாலின் உத்தரவின்பேரில் காரைக்குடி பகுதியில் உள்ள மசாஜ் சென்டர்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
கல்லூரி சாலையில் உள்ள மசாஜ் சென்டரில் போலீசார் ஆய்வு செய்தபோது அங்கு விபசாரம் நடப்பது தெரியவந்தது. விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 2 பெண்களை மீட்டனர்.
தொடர்ந்து விபசாரம் நடத்திய மசாஜ் சென்டர் உரிமையாளர் மதுரை அண்ணாநகரை சேர்ந்த அருட்செல்வன் மனைவி நித்யஸ்ரீ என்ற மங்கையர்கரசி(வயது 38). வாடிக்கையாளர்கள் ஏகலைவன்(42), காரைக்குடி ராஜேசுவரன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 3 செல்போன்கள், ரூ.3 ஆயிரத்து 500 ரொக்கம், மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் காரைக்குடி பெரியார் சிலை அருகே உள்ள மசாஜ் சென்டரிலும் விபசாரத்திலும் ஈடுபடுத்தப்பட்ட 2 பெண்களை போலீசார் மீட்டனர். விபசாரம் நடத்திய மசாஜ் சென்டர் மேலாளர் கண்டனூரை சேர்ந்த பூமதி(36), வாடிக்கையாளர் காமராஜ்(41) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள உரிமயைாளர் சந்தோஷ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இவர்களிடம் இருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
காரைக்குடியில் கடந்த சில மாதங்களாகவே மசாஜ் சென்டர்கள் புற்றீசல்கள் போல் அதிகரித்துள்ளன. வறுமையை பயன்படுத்தி பெண்களை விபசாரத்தில் மசாஜ் சென்டர்கள் பயன்படுத்தி வருகிறது. தற்போது 2 மசாஜ் சென்டர்களின் உரிமையாளர்களிடம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள செல்போன்களை போலீசார் ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளனர்.
அதில் முக்கிய பிரமுகர்களின் செல்போன் எண்கள் இருப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காரைக்குடி பகுதியில் மசாஜ் சென்டர் பெயரில் விபசாரம் நடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- விருதுநகரில் விபசாரம் நடத்திய அ.தி.மு.க. பெண் நிர்வாகி கணவருடன் கைது செய்யப்பட்டார்.
- கருப்பசாமி நகர் பகுதியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
விருதுநகர்
விருதுநகர் பகுதியில் விபசாரம் நடப்பதாக பாண்டியன் நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கருப்பசாமி நகர் பகுதியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்குள்ள வீட்டில் விபசாரம் நடந்தது தெரியவந்தது. அங்கிருந்த 30 வயதுடைய பெண்ணை போலீசார் மீட்டனர்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் விபசாரம் செய்தது பாத்திமா நகரை சேர்ந்த சந்திரசேகரன் (வயது42), அவரது மனைவி அமல்ராணி (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
விபசாரத்துக்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் அமல்ராணி மாவட்ட அ.தி.மு.க. மகளிர் அணி துணைத்தலைவியாக உள்ளார் என்பது குறிப்பி டத்தக்கது.
அமல்ராணி மற்றும் அவரது கணவர் கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் கருப்பசாமி நகரில் உள்ள வீட்டை வாடகைக்கு எடுத்து விபசாரம் நடத்தி வந்தது தெரியவந்தது.
விபசார வழக்கில் அ.தி.மு.க. பெண் நிர்வாகி கண வருடன் கைது செய்யப்பட்ட சம்பவம் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- விபசாரம் செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- பிரகாஷ் (வயது 46) என்பவரிடம் விசாரணை நடத்திய போலீசார் அவரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் அழகு நிலையம் என்ற பெயரில் இளம்பெண்களை வைத்து விபசாரம் செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஓசூர் வைஷ்ணவி நகர் பகுதியிலும், மாருதி நகர் பகுதியிலும் செயல்பட்டு வரும் 2 அழகு நிலையங்களில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த அழகு நிலையங்களை நடத்தி வரும் ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (வயது 46) என்பவரிடம் விசாரணை நடத்திய போலீசார் அவரை கைது செய்தனர்.
பிரகாசுக்கு உடந்தையாக இருந்த கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகேயுள்ள நா கசெட்டிஹள்ளி பகுதியை சேர்ந்த தீபிகா (32) என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அழகு நிலையம் என்ற பெயரில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தி வந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பிரகாசுக்கு உடந்தையாக இருந்த கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகேயுள்ள நாகசெட்டிஹள்ளி பகுதியை சேர்ந்த தீபிகா என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
- அழகு நிலையம் என்ற பெயரில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தி வந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் அழகு நிலையம் என்ற பெயரில் இளம்பெண்களை வைத்து விபசாரம் செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது ஓசூர் வைஷ்ணவி நகர் பகுதியிலும், மாருதி நகர் பகுதியிலும் செயல்பட்டு வரும் 2 அழகு நிலையங்களில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த அழகு நிலையங்களை நடத்தி வந்த ஆந்திர மாநிலம், குப்பம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (வயது 46) என்பவரை போலீசார் அவரை கைது செய்தனர்.
பிரகாசுக்கு உடந்தையாக இருந்த கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகேயுள்ள நாகசெட்டிஹள்ளி பகுதியை சேர்ந்த தீபிகா (32) என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அழகு நிலையம் என்ற பெயரில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தி வந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- வாடகைக்கு வீடு எடுத்து விபசாரத்தில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
- ஒரு கார், 4 இருசக்கர வாகனங்கள் மற்றும் ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் சஞ்சீவி மலை கிழக்கு அடிவாரம், ஜெய் நகர் வேட்டை பெருமாள் கோயில் தெருவில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள் தமிழ்ச்செல்வி, ராம்குமார், முத்துராஜ் ஆகியோர் நேற்று இரவு அந்தப் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அந்த தெருவில் உள்ள பிச்சைக்கனி என்பவருக்கு சொந்தமான வீட்டில் விபசாரம் நடப்பது தெரிய வந்தது. அதில் ராஜபாளையத்தைச் சேர்ந்த சுகந்தி (வயது 45) என்பவர் தனியாக வீடு எடுத்து அந்த பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியதும்,அவருக்கு உதவியாக ராஜபாளை யத்தைச் சேர்ந்த முத்துக்கு மார் (36), கரிவலம் வந்த நல்லூரைச் சேர்ந்த பால்ராஜ் (46), கொல்லத்தைச் சேர்ந்த உதயகுமார் ஆகியோர் புரோக்கர்களாக செயல்பட்டதும் தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அங்கிருந்த ஒரு கார், 4 இருசக்கர வாகனங்கள் மற்றும் ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் வீட்டின் உரிமையாளர் பிச்சைக்க னியும் கைது செய்யப்பட்டார்.
- இளம்பெண்களை வைத்து விபசாரம் நடைபெறுவதாக ஓசூர் டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- மசாஜ் சென்டர் என்ற பெயரில் இளம்பெண்களை வைத்து விபசார தொழில் செய்து வந்தது போலீசார் சோதனையில் தெரியவந்தது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள லாட்ஜியில் மசாஜ் சென்டர் ஒன்று இயங்கி வருவதாகவும், ஆயுர்வேத மசாஜ் என்ற பெயரில் அங்கு இளம்பெண்களை வைத்து விபசாரம் நடைபெறுவதாக ஓசூர் டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினார்கள்.
அதில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் இளம்பெண்களை வைத்து விபசார தொழில் செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக ஓசூர் முனீஸ்வர் நகர் பகுதியை சேர்ந்த ரதினா(எ) ரத்தினவேணி (35) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
- மேலாளர் கைது
- வாலிபருக்கு எச்சரிக்கை
வேலூர்:
வேலூர் காந்திரோடு, பாபு ராவ் தெருவில் உள்ள தங்கும் விடுதிகளில் விபசாரம் நடப்ப தாக வேலூர் வடக்கு போலீ சாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் அங்குள்ள விடுதி களில் அதிரடியாகசோதனை செய்தனர்.
அப்போது பாபுராவ் தெரு வில் உள்ள தங்கும் விடுதியின் அறை ஒன்றில் இளம்பெண்ணும், வாலிபரும் விபசாரத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
போலீசாரின் விசாரணையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த வாலிபர் ஒருவர் தங்கும் விடுதியை குத்தகை எடுத்து நடத்தி வருவதும், அங்கு மேலாளராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
மேலும் விபசாரத்தில் ஈடுபட்ட இளம்பெண் மற்றும் வாலிபரை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
- பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
- திருமண நிகச்சிக்கு என வீட்டை வாடகைக்கு எடுத்து, அழகிகளை வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்துவதாக புகார்
கன்னியாகுமரி :
குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வீடுகளை வாடகைக்கு எடுத்து அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழிலில் சிலர் ஈடுபடுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.
இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதில் கன்னியாகுமரி பகுதியில் வீட்டில் வைத்து விபசாரம் நடத்தியதாக ஒருவர் கைது செய்யப்பட்டார். அங்கிருந்து பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். சுசீந்திரத்தில் ஒரு வீட்டில் இருந்து 2 பெண்கள் மீட்கப்பட்டனர்.
இதற்கிடையில் மார்த்தாண்டம் அருகே உள்ள பம்மம் ஈடன் கார்டன் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு வீடு எடுத்து விபச்சாரம் நடத்தப்படு வதாக புகார் வந்தது. மார்த்தாண்டம் போலீசார் அந்த வீட்டை சுற்றி வளைத்து அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, குழித்துறை பெரியவிளை பகுதியை சேர்ந்த சுனில் (வயது 45) என்பவர் வெளிமாநில அழகிகளை வரவழைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தி பணம் பறித்தது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், அங்கிருந்த 2 பெண்கள் உள்பட 5 பேரை கைது செய்தனர்.
இதேபோல் ஆரல்வாய்மொழியில் திருமண நிகச்சிக்கு என வீட்டை வாடகைக்கு எடுத்து, அழகிகளை வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்துவதாக புகார்கள் வந்தன. அதன்பேரில் போலீசார் சோதனை நடத்தி ஒருவரை கைது செய்தனர். இதில் மேலும் 2 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வர, அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். அங்கி ருந்த பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப் பட்டனர்.