என் மலர்
நீங்கள் தேடியது "பூமி பூஜை"
- வருவாய் திட்டத்தின் கீழ் தமிழக அரசு ரூ.3 கோடியே 45 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது.
- ஒன்றிய அலுவலர்கள் குடியிருப்பு பகுதியில் புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள பொங்கலூரில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு இட பற்றாக்குறை உள்ளதால், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் கீழ் தமிழக அரசு ரூ.3 கோடியே 45 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது.
இதையடுத்து கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பொங்கலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் உள்ள ஒன்றிய அலுவலர்கள் குடியிருப்பு பகுதியில் புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் புதிய கட்டட பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் வக்கீல் எஸ். குமார் தலைமை வகித்து புதிய அலுவலகம் கட்டுவதற்கான பணிகளை தொடங்கி வைத்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் இணை இயக்குனர் மற்றும் திட்ட இயக்குனர் லட்சுமணன், ஒன்றிய குழு துணை தலைவர் அபிராமி அசோகன், வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஒன்றிய ஆணையாளர் விஜயகுமார் வரவேற்றார்.இந்த விழாவில்,ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத் தலைவர்கள், ஒன்றிய அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- கூட்டுறவு வங்கி இயக்குனர் வலுப்பூரசாமி,சுகாதார ஆய்வாளர் கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவர் சண்முகம், மாவட்ட கவுன்சிலர் பழனிசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள பொங்கலூரில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சிகிச்சைக்கு வரும் புற நோயாளிகள் தங்குவதற்காக மாவட்ட ஊராட்சி நிதியில் இருந்து ரூ.7 லட்சத்து 92 ஆயிரம் மதிப்பில் காத்திருப்போர் அறைஅமைக்க பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை பொங்கலூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். சுந்தரவேல் வரவேற்றார். இந்த பூமி பூஜை நிகழ்ச்சியின்போது காத்திருப்போர் அறை அமைக்கும் பணியை ஒன்றிய குழு தலைவர் வக்கீல் எஸ். குமார், மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவர் சண்முகம், மாவட்ட கவுன்சிலர் பழனிசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதை தொடர்ந்து உகாயனூர் ஊராட்சியில் ரூ.6 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலும், சேமலைக்கவுண்டம்பாளையத்தில் ரூ.3 லட்சம் மதிப்பிலும் கான்கிரீட் சாலை அமைப்பிற்கான பூமி பூஜையும் நடைபெற்றது. மேலும் நாச்சிபாளையம், பெருந்தொழுவு, மசநல்லாம்பாளையம் ஆகிய அரசு பள்ளிகளுக்கு ரூ. 4லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் மாணவர்களுக்கான இருக்கைகளும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி தலைவர்கள் பாலசுப்ரமணியம், செல்வராஜ், மதிவதநேசன், தர்மராஜ், வலுப்பூர் அம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் சிதம்பரம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் அனந்த கிருஷ்ணன், சந்திரன், சின்னச்சாமி மற்றும் ஆவின் இயக்குனர் குமார், கூட்டுறவு வங்கி இயக்குனர் வலுப்பூரசாமி,சுகாதார ஆய்வாளர் கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அசனார் நகரில் பம்ப் அறை கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெற்றது.
- பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார்.
கயத்தாறு:
கயத்தாறு பேரூராட்சி பகுதியில் உள்ள கன்னியம்மன் கோவில் தெருவில் மின் மோட்டார் இணைப்புடன் கூடிய புதிய பம்ப் அறை கட்டி சின்டெக்ஸ் டேங்க் அமைக்கவும், அசனார் நகரில் பம்ப் அறை கட்டுவதற்கும், அரசங்குளம் வார்டில் சுடுகாடு பகுதியில் புதிய கொட்டகை அமைப்பதற்கும் பூமி பூஜை நடைபெற்றது.
பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார். இதில் கயத்தாறு கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சின்னப்பாண்டியன், வழக்கறிஞர் மாரியப்பன், பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் நயினார் பாண்டியன், வெயிலாட்சி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை அமைப்பாளர் ராஜதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- வாராப்பூர் ஊராட்சியில் புதிய பள்ளி கட்டிடத்திற்கான பூமி பூஜை நடந்தது.
- கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டு முற்றிலுமாக சேதமடைந்துள்ளதால் உடனடியாக கலெக்டர் ஆய்வு செய்து கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்டார்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் வாராப்பூர் ஊராட்சியில் சுமார் 100 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட நடு நிலைப்பள்ளி செயல்பட்டு வந்தது. இந்த பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடர் மழையின் காரணமாக இந்த பள்ளி யின் கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டு முற்றிலுமாக சேதமடைந்தது. உடனடியாக மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்து கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்டார். அதன்படி கட்டிடம் இடிக்கப்பட்டது.
இதன் காரணமாக அங்கு படித்த பள்ளி மாணவ-மாணவிகள் அருகாமையில் உள்ள எஸ்.புதூர், சிங்கம்புணரி, பொன்னமராவதி போன்ற பகுதிகளுக்கு சென்று கல்வி பயிலக்கக்கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் இப்பள்ளி யில் கல்வி பயின்ற முன்னாள் மாணவரும், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் நிறுவனருமான டாக்டர் சேதுராமன் பார்வைக்கு இதுகுறித்து வாராப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி நாகராஜன் கொண்டு சென்றார். அதன் அடிப்படையில் அந்த நிறுவனத்தின் சார்பில் ரூ.1 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடை பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் டாக்டர் சேதுராமன், டாக்டர் குரு சங்கர் மனைவி காமினி, சந்திரசேகர், மீனாட்சி மிஷன் பொறியாளர் கோபால், ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி நாகராஜன், கட்டிட பொறியாளர் நாகராஜன், தலைமை ஆசிரியர் அலமேலுமங்கை, அரசு அதிகாரிகள், வகுப்பு ஆசிரியர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் ஊர் பொதுமக்கள் உள்பட பலர் பங்கேற்றனர்
- சின்ன அம்மாபாளையத்தில் அங்கன்வாடி கட்டிடம் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்தது.
- தற்போது பொதுக் கழிப்பிடம் அருகில் உள்ள வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது.
சேலம்:
சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 19-வது கோட்டம், சூரமங்கலம் பகுதி சின்ன அம்மாபாளையத்தில் அங்கன்வாடி கட்டிடம் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்தது. இதையடுத்து, தற்போது பொதுக் கழிப்பிடம் அருகில் உள்ள வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இதனால் குழந்தைகளுக்கு நோய்தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
இதனால் பாழடைந்த பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அருள் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர்.
அந்த கோரிக்கையை ஏற்று மேற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.14.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான பூமி பூஜையை அருள் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். பின்னர் அப்பகுதி மக்களிடம் எம்.எல்.ஏ குறைகேட்டார்.
இந்த நிகழ்ச்சியில் சூரமங்கலம் பகுதி தலைவர் ஈஸ்வரன், பகுதி செயலாளர் சிவக்குமார், 23-வது டிவிசன் செயலாளர் கணேசன், சேகர், சேட்டு, அய்யப்பன், அருணாச்சலம், மாது, சக்தி, சந்தோஷ்குமார், சூர்யா, ரங்கநாதன், சுந்தர்ராஜன், கார்த்திக், சந்தோஷ்குமார், அங்கப்பன், ஜேசுதாஸ் மற்றும் அப்பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- ரூ.13.5 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிட பணிக்கான பூமி பூஜையும் நடந்தது.
- சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார்.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே உள்ள மன்னாடிமங்கலம் ஊராட்சியில் உள்ள கண்ணுடையாள்புரம் கிராமத்தில் மாவட்ட கனிமவளத்துறை நிதி ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி கட்டிட பணிக்கான பூமி பூஜையும், மன்னாடிமங்கலம் கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.13.5 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிட பணிக்கான பூமி பூஜையும் நடந்தது. சோழவந்தான் சட்டம ன்ற உறுப்பினர் வெங்கடேசன் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் கதிரவன், உதவி பொறியாளர் பூப்பாண்டி, பேரூராட்சி தலைவர் ஜெயராமன், கவுன்சிலர் சத்தியபிரகாஷ், ஊராட்சி தலைவர் பவுன்முருகன், துணைதலைவர் பாக்கியம்செல்வம், ஒன்றிய கவுன்சிலர்கள் பசும்பொன்மாறன், ரேகா வீரபாண்டி, சுப்பிரமணி, ஊராட்சி துணைதலைவர் கேபிள்ராஜா, ரிசபம் ஊராட்சிதலைவர் சிறுமணி, திருவேடகம் ராஜா, பேட்டை பெரியசாமி, மாணவரணி தவமணி, ஊராட்சி செயலர் திருசெந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு ரூ.3 கோடியே 90 லட்சத்தில் புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை நடந்தது.
- பெரும்பாலான கவுன்சிலர்கள் கலந்து கொள்ளவில்லை.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்துக்கு கடந்த 1957-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் காமராஜரால் அடிக்கல் நாட்டப்பட்டது. தொடர்ந்து அப்போதைய அமைச்சர் கக்கன் 1958 ஆம் ஆண்டு இந்த கட்டிடத்தை திறந்து வைத்தார். கட்டிடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் புதிய கட்டிடம் கட்டுவது என தீர்மானம் செய்யப்பட்டது.
இதற்காக அதிகாரிகள் கோரிக்கை விடுத்ததின் அடிப்படையில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு ரூ.3 கோடியே 90 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அலுவலகத்திற்கு பின்பகுதியில் தற்காலிக அலுவலகத்திற்காக ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் கட்டிடம் ஒன்று கட்டப்பட்டது. தற்போது அது செயல்பாட்டுக்கு வந்த நிலையில் ஏற்கனவே இருந்த கட்டிடம் இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் இந்திரா ஜெயக்குமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் உமா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமமூர்த்தி, கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் சுப்புலட்சுமி, உஷாராணி, மாயாண்டி, சாந்தி மற்றும் அலுவலக பணியாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கான புதிய கட்டிடத்திற்கான கட்டுமான பணிக்கான பூமி பூஜையில் தலைவர் வேட்டையன் பங்கேற்காமல் நிகழ்ச்சியை புறக்கணித்தார். திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 27 கவுன்சிலர்கள் உள்ள நிலையில் 4 கவுன்சிலர்கள் மட்டுமே பூமி பூஜையில் கலந்து கொண்டனர். பெரும்பாலான கவுன்சிலர்கள் கலந்து கொள்ளவில்லை.
- வாடிப்பட்டி அருகே ரூ.56.50 லட்சம் மதிப்பீட்டில் சிறு பாலங்கள் கட்டும் பணி பூமி பூஜையுடன் தொடங்கியது.
- கடந்த மாதம் பெய்த பலத்த மழையால் சிறுபாலம் துண்டிக்கப்பட்டது.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே போடிநாயக்கன்பட்டி கோட்டைமேடு செல்லும் சாலையில் கடந்த மாதம் பெய்த பலத்த மழையால் சிறுபாலம் துண்டிக்கப்பட்டது.
இதனால் அந்தவழியாக நாச்சிகுளம் பஞ்சாயத்து உட்பட்ட நரிமேடு கிராமத்திற்கும் கருப்பட்டி, இரும்பாடி, சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வந்தனர். இது பற்றி தகவல் அறிந்த வெங்கடேசன் எம்.எல்.ஏ., இடிந்து விழுந்த அந்த சிறு பாலத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து போர்க்கால அடிப்படையில் விரைந்து கட்டிட நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தார்.
அதன்படி வாடி பட்டி ஊராட்சி ஒன்றியம் கருப்பட்டி பஞ்சாயத்துகுட்பட்ட பொம்மன்பட்டி-கருப்பட்டி இடையே மாவட்ட கலெக்டரின் உத்தரவின்படி மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ரூ.18.50 லட்சம் மதிப்பீட்டில் சிறு பாலமும், நாச்சிகுளம் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் நரிமேடு செல்ல போடிநாயக்கன்பட்டி கோட்டைமேடு சாலையில் ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் சிறுபாலமும் அமைக்க திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது.
இந்த சிறுபாலங்கள் கட்டிட கட்டுமான பணி க்கான பூமி பூஜை நடந்தது.
இந்த பூஜைக்கு வெங்கடேசன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார். இதில் யூனியன் கமிஷனர் கதிரவன், ஒன்றிய பொறியாளர் ராதா, ஒன்றிய செயலாளர்கள் பால. ராஜேந்திரன், பசும்பொன் மாறன், பேரூர் செயலாளரும் பேரூராட்சித் தலைவருமான பால்பா ண்டியன், பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திக், தி.மு.க.நிர்வாகிகள் பிரகாஷ், மோகன், முரளி, வினோத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- ரூ.4.73 கோடி மதிப்பீட்டில் புதிய அலுவலகம் கட்டப்படுகிறது.
- இதற்கான பூமி பூஜை நடந்தது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு ரூ.4.73 கோடி மதிப்பீட்டில் புதிய அலுவலகம் கட்டப்படுகிறது. இதற்கான பூமி பூஜை நடந்தது.
இதில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
இந்திய நாட்டின் வளர்ச்சி என்பது கிராமப்புறங்களின் வளர்ச்சியை பொறுத்தே அமைகிறது என்ற அடிப்படையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கிராமப்புற மேம்பாட்டிற்கு தனித்துவமளித்து அதற்கான அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
சிவகங்கை மாவட்டத்தில் வருகிற நிதியாண்டில் சாக்கோட்டை, எஸ்.புதூர், சிவகங்கை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கும், புதிய அலுவலக கட்டிடத்திற்கான பணிகள் தொடங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதவிர, சிங்கம்புணரி, திருப்பத்தூர், மானாமதுரை ஆகிய ஊராட்சி ஒன்றி யங்களுக்கும், புதிய அலுவலகக் கட்டிடங்கள் அமைப்பதற்கும் அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று விரைவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
தமிழகத்தில் ஒவ்வொரு ஊராட்சி அளவிலும், ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி செயலகம் அமைப்பதற்கும் முதல்வர் அறிவுறுத்தி உள்ளார். அதன்படி, 600-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சி செயலகம் தமிழகம் முழுவதும் அமைப்பதற்கு ஆணை பிறப்பித்துள்ளார்.
அந்த ஊராட்சி செயல கத்தில் கிராம நிர்வாக அலுவலகம், இணையதள சேவை, ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான அறை, கூட்டரங்கம் மற்றும் அலுவலர்கள் பிரிவிற்கான தனி அறை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
மேலும், கிராம பகுதிகளில் ஆரம்பப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் உள்ள பழமையான கட்டி டங்களை இடிக்கப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்காக ரூ.800 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ், சிங்கம்புணரி வட்டம், உரத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பயனாளிக்கு ரூ.4 லட்சம் நிவாரணத் தொகைக்கான ஆணையைஅமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சண்முகவடிவேல், பேரூராட்சித் தலைவர் கோகிலாராணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் வெண்ணிலா, மானாமதுரை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் லதாஅண்ணாதுரை, நெற்குப்பை பேரூராட்சித் தலைவர் புசலான், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் மீனாள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் ரவி, மதிவாணன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) குமார், வட்டாட்சியர்கள் திருப்பத்தூர் வெங்கடேசன், சிங்கம்புணரி சாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயக்குமார், தென்னரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ரூ.14லட்சம் மதிப்பில் புதிய மேல் நிலை குடிநீர் தொட்டி கட்ட பூமி பூஜை நடைபெற்றது.
- மேல்நிலை குடிநீர் தொட்டி திட்டப்பணியை திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., க.செல்வராஜ் தொடங்கி வைத்தார்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் ஊராட்சி தங்கம்மன் நகரில் ரூ.14லட்சம் மதிப்பில் புதிய மேல் நிலை குடிநீர் தொட்டி கட்ட பூமி பூஜை நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஊராட்சி தலைவர் நாகேஸ்வரி சோமசுந்தரம் தலைமை வகித்தார்.
பல்லடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சோமசுந்தரம் முன்னிலை வகித்தார். ஊராட்சி துணைத்தலைவர் முத்துகுமார் வரவேற்றார்.இதில் மேல்நிலை குடிநீர் தொட்டி திட்டப்பணியை திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., க.செல்வராஜ் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாவட்ட கவுன்சிலர் கரைப்புதூர் ராஜேந்திரன், பொங்கலூர் ஒன்றிய குழு தலைவர் குமார்,பல்லடம் ஒன்றிய குழு துணைத்தலைவர் பாலசுப்பிரமணியம், மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்,பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா முடிவில் ஊராட்சி செயலர் பிரபுசங்கர் நன்றி கூறினார்.
- ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
செய்யாறு:
செய்யாறு அருகே உள்ள மதுரை கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் 24.70 லட்சத்தில் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் தெய்வானை முனியப்பன் தலைமை வகித்தார், செய்யாறு ஒன்றிய குழு தலைவர் பாபு, அனக்காவூர் ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.
ஒ.ஜோதி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையை செய்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், ஒன்றிய செயலாளர் ஞானவேல், பார்த்திபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- நாகை மாவட்ட கூடுதல் கலெக்டர் பிரிதிவிராஜ் தலைமை வகித்தார்.
- தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் கட்டிடம்கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் -நாகை சாலையில் அரசு கலைக் கல்லூரி எதிரே வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு ரூ.3 கோடியே 69 லட்சத்தில்கட்டும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது .
நாகை மாவட்ட கூடுதல் கலெக்டர் பிரிதிவிராஜ் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் கட்டிடம்கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் வேதாரண்யம் கோட்டாட்சியர் (பொ)மதியழகன், நகர மன்ற தலைவர் புகழேந்தி, கூட்டுறவு சங்க இயக்குனர் உதயமுருகையன், நகராட்சி ஆணையர் ஹேமலதா, பொறியாளர் முகமது இப்ராஹிம், ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் ராஜு, பாஸ்கர்மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.