என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ் நிலையம்"

    • கைதிகள் உரிமைகள் மீறப்பட்டதாக கடுமையான குற்றசாட்டுகள்.
    • சர்ச்சைக்கு போலீசார் இதுவரை பதில் அளிக்கவில்லை.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத், போதன் நகரை சேர்ந்த வாலிபர் மீது அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் குற்றம் சாட்டப்பட்ட நபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட நபரை போலீஸ் நிலையத்தில் உள்ள அறையில் அடைக்க வேண்டும். அதற்கு பதிலாக போலீசார் அந்த நபரின் கை கால்களில் கனமான இரும்பு சங்கிலியால் பிணைத்தனர்.

    பின்னர் அந்த வாலிபரிடம் போலீஸ் நிலையம் முழுவதையும் சுத்தப்படுத்த வேண்டும் என கட்டாயப்படுத்தினர். இரும்பு சங்கிலியால் பிணைக்கப்பட்ட வாலிபர் துடைப்பத்தை கையால் பிடித்துக் கொண்டு மெதுவாக ஊர்ந்து ஊர்ந்து போலீஸ் நிலையம் முழுவதையும் தூய்மைப்படுத்தினார்.

    அப்போது போலீஸ் நிலையத்திற்கு வந்த ஒருவர் அதனை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். இந்த காட்சிகளை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.

    கைதிகள் உரிமைகள் மீறப்பட்டதாக கடுமையான குற்றசாட்டுகள் எழுந்துள்ளன.

    இது தெலுங்கானாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சைக்கு போலீசார் இதுவரை பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • செந்தில் நகர் பகுதி பொதுமக்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
    • வெடிகுண்டு வீசுவதாக பேசிய வீடியோ பதிவு காட்சிகள், வாட்ஸ் அப்பில் வைரல் ஆகி வந்தது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் ஊராட்சி செந்தில் நகரில் வசிப்பவர்கள் நாகப்பட்டினம் மாவட்டம் திருமணஞ்சேரியை சேர்ந்த சந்தானகிருஷ்ணன் மகன்கள் வீரமணி(வயது 23) மற்றும் அன்புமணி(20). இவர்கள் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் பல வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 18 ந்தேதி, நீலகிரி மாவட்டம் மசனகுடி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் திருமலை ராஜன் என்பவரின் மகன் பூபாலகிருஷ்ணன் கோவையில் இருந்து தாராபுரம் நோக்கி சென்ற போது அவரை வழிமறித்து, ரூ.20 ஆயிரம்,செல்போன் ஆகியவற்றை வீரமணி, அன்புமணி, மேலும் 2 கூட்டாளிகளுடன் சேர்ந்து வழிப்பறி செய்துள்ளனர்.

    இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வந்துள்ளனர். இந்த நிலையில், செந்தில் நகர் பகுதியில் இவர்களால் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாகவும், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என செந்தில் நகர் பகுதி பொதுமக்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில், புகார் அளித்தவர்களை கொலை செய்வதாகவும், போலீஸ் நிலையத்தின் மீது வெடிகுண்டு வீசுவதாகவும் இவர்கள் பேசிய வீடியோ பதிவு காட்சிகள், வாட்ஸ் அப்பில் வைரல் ஆகி வந்தது. இதையடுத்து இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கோவை எம்.பி., நடராஜன், திட்ட பணிகள் குறித்த ஆய்வை மேற்கொண்டு வருகிறார்.
    • இப்பகுதிகளில் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிக அளவில் நடக்கின்றன.

    திருப்பூர் :

    பல்லடம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கோவை எம்.பி., நடராஜன், திட்ட பணிகள் குறித்த ஆய்வை மேற்கொண்டு வருகிறார். அதன்படி பல்லடம் ஒன்றியம், கரைப்புதூர் ஊராட்சியில் நடந்த ஆய்வு கூட்டத்தில், கரைப்புதூர், கணபதிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.

    அப்போது பொதுமக்கள் சார்பில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது :- திருப்பூர் மாநகராட்சியை ஒட்டியுள்ள கரைப்புதூர், கணபதிபாளையம் ஊராட்சிகளை சார்ந்து ஏறத்தாழ ஒரு லட்சம் மக்கள் வசிக்கின்றனர். தினசரி வேலை நிமித்தமாக வந்து செல்பவரின் எண்ணிக்கையும் அதிகம்.

    தொழிலாளர்கள் நிறைந்த இப்பகுதிகளில் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிக அளவில் நடக்கின்றன.புகார் அளித்து போலீசார் பல்லடத்தில் இருந்து வருவதற்குள் சம்பவங்களின் போக்கு மாறிவிடும். இப்பகுதியில், சமூக விரோத செயல்கள் நடக்காத நாட்களே கிடையாது என்று கூறலாம்.இதனால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் அதிகரித்துள்ளது. குற்ற சம்பவங்களை தடுக்க போலீசாரின் கூடுதல் கண்காணிப்பு அவசியமாகிறது.எனவே, அருள்புரத்தை மையமாக கொண்டு கூடுதல் போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும் என, நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறோம். பொதுமக்கள் அமைதியுடன், பாதுகாப்புடன் வசிக்கஇக்கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டும்.இவ்வாறு அதில் அவர்கள் கூறினர்.மனுவை பெற்று கொண்ட எம்.பி., நடராஜன், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    • பல்லடம் அருகே கரைப்புதூரில் புதிய போலீஸ் நிலையம் அமைக்கவேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
    • வெளி மாவட்ட, மாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் பல்லடத்தில் வசிக்கின்றனர்.

    திருப்பூர் : 

    பல்லடம் அருகே கரைப்புதூரில் புதிய போலீஸ் நிலையம் அமைக்கவேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

    இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு தலைவர் அண்ணாதுரை கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- பல்லடம் போலீஸ் எல்லை திருப்பூர், நொச்சிபாளையம் பிரிவிலிருந்து காரணம்பேட்டை வரை பரந்து விரித்துள்ளது. வெளி மாவட்ட, மாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் பல்லடத்தில் வசிக்கின்றனர்.

    திருட்டு, கொலை, கொள்ளை, போதைப்பொருட்கள் விற்பனை, சட்டஒழுங்கு பிரச்சினைகள் அதிகளவில் நடைபெறுவதால் பல்லடம் போலீசார் மிகவும் சிரமப்படுகின்றனர். ஆறுமுத்தாம்பாளையம், கரைப்புதூர், கணபதிபாளையம் ஊராட்சிகளில் மட்டும் ஒருலட்சத்துக்கும்மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.இந்த 3 ஊராட்சி பகுதிகளிலும் குற்ற செயல்கள் அதிக அளவில் நடக்கின்றன. எனவே, கரைப்புதூர் ஊராட்சியில் புதிய போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • தக்கலையில் காவடி கட்டத் தடை-அனுமதியால் பரபரப்பு
    • இன்று காலை தாமதமாக தொடங்கியது ஊர்வலம்

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று தக்கலை குமார கோவிலில் அமைந்துள்ள வேளிமலை முருகன் கோவில்.

    இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடன் நிறைவேற்ற விரதம் இருந்து காவடி எடுத்துச் செல்வது வழக்கமாக உள்ளது. இந்த ஊர்வலத்தில் போலீஸ், பொதுப்பணி என அரசு துறைகள் சார்பிலும் காவடி எடுப்பது உண்டு.

    காவடி கட்டிய பின்னர் அதனை யானை மீது வைத்து ஊர்வலம் நடைபெறும். இந்த ஆண்டு ஊர்வலம் கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமையான இன்று காலை நடை பெற்றது.முன்னதாக ஊர்வலம் செல்லும் சாலையோரம் காவடிகளை வரவேற்கும் விதமாக வாழைக்குலை தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தன.

    ஊர்வலத்தில் பங்கேற்ப தற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று காவடி கட்டும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன. தக்கலை போலீஸ் நிலையத்திலும் காவடி கட்டுவதற்கான பணிகள் மற்றும் பூஜை ஏற்பாடுகள் நேற்று மாலை யில் தொடங்கியது.

    ஆனால் இரவு 9 மணிக்கு மேல் பணிகள் எதுவும் நடைபெறாமல் ேபாலீஸ் நிலையம் களையிழந்து காணப்பட்டது. இந்த சூழலில் போலீஸ் நிலையம் அனைத்து மதத்தினருக்கும் பொதுவானது. இங்கு வைத்து காவடி கட்டக் கூடாது என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தர விட்டுள்ளதாக தகவல் வெளியானது.

    இதனால் பாரதிய ஜனதா வினர் அதிருப்தி அடைந்த னர். அவர்களும், இந்து முன்னணி அமைப்பினரும் நள்ளிரவு 12 மணிக்கு தக்கலை போலீஸ் நிலை யத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

    இன்று அதிகாலை 2 மணி வரை அவர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் சமர சம் செய்ய முயன்றனர். ஆனால் இதில் உடன்பாடு ஏற்படவில்லை. அதே நேரம் போலீஸ் நிலையத்தில் காவடி கட்டும் பணியும் நடைபெறவில்லை. இத னால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.

    இதற்கிடையில் போலீஸ் காவடி இல்லாமல், வேளி மலை முருகன் கோவிலுக்கு காவடி ஊர்வலம் செல்லக் கூடாது. நாளை (இன்று) காலை அனைத்து பகுதி களில் இருந்து எடுக்கப்படும் காவடிகளும் தக்கலை போலீஸ் நிலையம் முன்பு வரவேண்டும் என போரா ட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

    இந்த சூழலில் இன்று காலை பல்வேறு பகுதிகளில் இருந்து யானையுடன் காவடி ஊர்வலங்கள் புறப்பட்டன. அவை தக்கலை போலீஸ் முன்பு வரக்கூடும் என்பதால் பல இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு நடவடிக்கையாக குவிக்கப்பட்டனர்.

    இது தொடர்பாக பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், காலங் காலமாக செந்தூர் முருகன் காவடி, தக்கலை காவல் நிலையத்தில் இருந்து ஆரம்பித்து வேளிமலை முருகன் சந்நிதியில் நிறைவு பெறும். ஆனால் இந்த ஆண்டு ஏற்பட்ட பிரச்சி னையால் இன்று அதிகாலை தொடங்க வேண்டிய பூஜை சடங்குகள் திட்டமிட்டபடி ஆரம்பிக்கப்படவில்லை.

    எனவே அனைத்து முருக பக்தர்களும், பாரதிய ஜனதா நிர்வாகிகளும், பொது மக்களும் தக்கலை காவல் நிலையம் முன்பு நியாயம் கேட்க திரள வேண்டும் எனக் குறிப்பிட்டு இருந்தார்.

    ஆண்டு தோறும் காலை 7 மணிக்கு தொடங்க வேண்டிய காவடி ஊர்வலம் இன்று தொடங்கப்படாதது குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் காலை 9.30 மணியளவில் போலீஸ் காவடிக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் காவடி கட்டும் பணிகள் தொடங்கின.

    இதனை தொடர்ந்து மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் புறப்பட்ட காவடிகள், வேளிமலை முருகன் கோவிலை நோக்கி ஊர்வலமாகச் சென்றன.

    இந்த நிலையில் தக்கலைக்கு வந்த முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதா கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில் பாரம்பரியமாக தக்கலை காவல் நிலையத்தில் இருந்து ்பொதுப்பணித்துறை உட்பட பல்வேறு அரசு அமைப்புகள் சார்பில் குமாரகோவிலுக்கு காவடிக்கட்டு செல்வது பாரம்பரியமாக நடை பெற்று வருகிறது

    ஆனால் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் மனோ தங்கராஜ் மேடைகளிலும் பொது வெளியிலும் மத ஒற்றுமையை பற்றி பேசி விட்டு இது போன்ற பாரம்பரியமான நிகழ்ச்சி களுக்கு திட்டமிட்டு தடை ஏற்படுத்தி வருகிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட நிர்வாகமும் ஆளும் கட்சிக்கு ஒத்துழைப்பு கொடுத்து செயல் படுகின்றனர். மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு போன்ற அதிகாரிகள் குறைந்த கால கட்டங்களில் மாவட்டத்தில் பணிபுரிவார்கள். ஆனால் உள்ளூர் அமைச்சர் அதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றார்.

    • மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
    • துணை போலீஸ் சூப்பிரண்டு தெய்வம் தலைமையில் மனித உரிமைகள் தின உறுதிமொழியை போலீசார் எடுத்துக் கொண்டனர்.

    தென்காசி:

    மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் போலீஸ் அதிகாரிகள், போலீஸ் ஆளிநர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்கள், மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு தெய்வம் தலைமையில் மனித உரிமைகள் தின உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.

    இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்ட போலீஸ் நிலையங்களிலும் மனித உரிமைகள் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    • அவர் யார்? எந்த ஊர்? பெயர் என்ன? எப்படி இறந்தார்? என்பன போன்ற விவரம் எதுவும் தெரியவில்லை.
    • பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பில் போலீஸ் நிலையம் அருகே இன்று காலை சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியோர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் யார்? எந்த ஊர்? பெயர் என்ன? எப்படி இறந்தார்? என்பன போன்ற விவரம் எதுவும் தெரியவில்லை. இது பற்றி கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    • ரூ.1கோடியே 30 லட்சம் மதிப்பில் புதிதாக காவல் நிலையம் கட்டப்பட்டுள்ளது.
    • அமைச்சர்.மு.பெ.சாமிநாதன் காவல் நிலையத்தில் குத்துவிளக்கினை ஏற்றினார்.

     திருப்பூர் :

    திருப்பூர் மாநகர காவல் நிலையத்திற்கு உட்பட்ட திருமுருகன் பூண்டி,ராக்கியாபாளையம் பகுதியில் தமிழ்நாடு காவல்துறை வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் ரூ.1கோடியே 30 லட்சம் மதிப்பில் புதிதாக காவல் நிலையம் கட்டப்பட்டுள்ளது.

    இந்த புதிய காவல் நிலையத்தினை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். திருமுருகன்பூண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்.மு.பெ. சாமிநாதன் காவல் நிலையத்தில் குத்துவிளக்கினை ஏற்றினார். நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார்,மாநகர காவல் ஆணையர் பிரபாகரன்,மாநகர துணை காவல் ஆணையர்கள் அபினவ் குமார்,வனிதா மற்றும் காவல் துறை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • மார்த்தாண்டம் தொழிலாளியை இரும்பு கம்பியால் குத்திய உறவினர்
    • தடுத்த சப்-இன்ஸ்பெக்டரும் படுகாயம்

    நெல்லை:

    குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் உள்ள கருப்புக் கட்டி தொழிற்சாலையில் வேலை பார்ப்பவர் கோகுல் சந்திரசேகர்

    (வயது 23).

    இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டினம். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த நர்சிங் மாணவி பவானி (20) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இவர்க ளது காதலுக்கு பவானியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் கடந்த 3-ந் தேதி பவானி வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் காதல் ஜோடி, நாகர்கோவில் சென்று அங்குள்ள கோவி லில் திருமணம் செய்து கொண்டனர்.

    இந்த நிலையில் பவானியை காணவில்லை என அவரது குடும்பத்தினர் குலசேகரன்பட்டினம் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இது பற்றிய தகவல் கிடைத்ததும் காதல் ஜோடி யான பவானி-கோகுல் சந்திரசேகர் போலீஸ் நிலையம் சென்றனர். அங்கு அவர்களிடமும் பவானி குடும்பத்தினரிடமும் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் ரவிச்சந்திரன் விசாரணை நடத்தினார்.

    அப்போது பவானியின் அண்ணன் முத்துப்பாண்டி, தான் மறைத்து வைத்திருந்த ஸ்குரு டிரைவரை எடுத்து கோகுல் சந்திரசேகரின் கழுத்தில் குத்தினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    போலீஸ் நிலையத்தில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விசாரணையின் போது காதல் திருமணம் செய்த வாலிபர் குத்தப்பட்டதை கண்ட, சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் அதிர்ச்சி அடைந்தார்.

    அவர் மேலும் அசம் பாவித சம்பவம் ஏற்படாத வகையில் தடுக்க முயன்றார். அப்போது அவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ரவிச்சந்திரன் சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். கோகுல் சந்திரசேகர் தனியார் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு உள்ளார்.

    • காதலர்கள் 2 பேரும் வீட்டைவிட்டு வெளியேறி ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
    • இருவரது பெற்றோரையும் வரவழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள பலக்கனூத்தை சேர்ந்த முத்துபாண்டி மகன் சதீஸ்பாண்டி(23). இவரது வீட்டிற்கு அருகே திண்டிவனத்தை சேர்ந்த செல்வன் மகள் மாலினி(22) என்பவர் தனது பாட்டி வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.

    அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மலர்ந்தது. இதுகுறித்த விஷயம் பெண் வீட்டாருக்கு தெரியவரவே அவர்கள் காதலை கண்டித்தனர். மேலும் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்கவும் தொடங்கினர். இதனால் காதலர்கள் 2 பேரும் வீட்டைவிட்டு வெளியேறி ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    தாங்கள் சேர்ந்து வாழ்ந்தால் இருவீட்டாரும் பிரச்சினை செய்வார்கள் என பயந்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்ககோரி ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். போலீசார் இருவரது பெற்றோரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் சேர்ந்து வாழ எவ்வித இடையூறும் செய்யக்கூடாது என இருவீட்டாரிடமும் எழுதி வாங்கி கொண்டனர்.

    இதனைதொடர்ந்து காதல் ஜோடிகள் போலீஸ் நிலையத்தை விட்டு புறப்பட்டு சென்றனர்.

    • போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் 22 பேர் மீது வழக்கு
    • சந்திரனை தாக்கிய போலீசாரை கைது செய்ய வலியுறுத்தல்

    கன்னியாகுமரி:

    ராஜாக்கமங்கலம் அருகே எள்ளுவிளை பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன் (வயது 67). விவசாயியான இவர் தனது மாடுகளை அருகில் உள்ள தென்னந்தோப்பில் மேய்த்து வருவது வழக்கம். இதில் சிலரது தென்னை மரக்கன்றுகளை மாடுகள் கடித்து சேதப்படுத்தியதாக தெரிகிறது. இதனை யடுத்து தோட்டக்காரர்கள் ஈத்தாமொழி பூமி பாதுகாப்பு சங்கத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் பூமி பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் சந்திரனுக்கு அபராதம் விதித்துள்ளனர். இதனை செலுத்திய சந்திர னை பின்னர் போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது.

    இது குறித்து சந்திரன் ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சந்திரனை தாக்கிய போலீசாரை கைது செய்ய வலியுறுத்தி விடுதலை சிறுத்தை கட்சியினர் கட்சி நிர்வாகி திருமாவேந்தன் தலைமையில், மாநில துணை செயலாளர் அல்காலித் உள்பட நிர்வாகிகள் ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கன்னியாகுமரி டி.எஸ்.பி. ராஜா போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் விடுதலை சிறுத்தை கட்சியினர் 2 பெண்கள் உட்பட 22 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். மாலை 7 மணியளவில் விடுவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 22 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர்.

    • முத்துப்பேட்டையில் திருச்சி மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன் ஆய்வு மேற்கொண்டார்.
    • விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கும் பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டைக்கு திருச்சி மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன் வருகை தந்தார்.

    பின்னர் வருடாவருடம் நடைபெறும் விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கும் ஜாம்புவா னோடை சிவன்கோவில், பின்னர் ஊர்வலம் செல்லும் பாதையான தர்கா, சிவராமன் ஸ்தூபி, பதற்றம் நிறைந்த ஆசாத்நகர், திருத்துறைப்பூண்டி சாலை, பழைய பஸ் நிலையம், புது பள்ளிவாசல், கொய்யா முக்கம், பங்களா வாசல், ஓடக்கரை, பட்டுக்கோட்டை சாலை, செம்படவன்காடு, சிலை கரைக்கும் பாமணி ஆற்று படித்துறை ஆகிய பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் லகூன் செல்லும் பாதை, மற்றும் படகுத்துறை ஆகியவைகளை பார்வையிட்டார்.

    தொடர்ந்து முத்துப்பேட்டை போலீஸ் நிலையம் வந்து அங்கு ஆய்வு செய்து அங்கிருந்த கோப்புகளையும் ஆய்வு நடத்தினார்.

    அப்போது தஞ்சை சரக டி.ஐ.ஜி ஜெயசந்திரன், திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் உட்பட காவல்துறை உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    ×