என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ரவுண்டானா"
- நான்கு வழி சந்திப்பு பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரவுண்டானா அமைக்க வேண்டும்.
- அங்காளம்மன் கோவில் இடமானது குன்னத்தூர் பேரூராட்சிக்கு சொந்தமானதாகும்.
ஊத்துக்குளி:
குன்னத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் கொமரசாமி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஜோதிமணி சோமசுந்தரம், செயல் அலுவலர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குன்னத்தூர் பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள நான்கு வழி சந்திப்பு பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரவுண்டானா அமைக்க வேண்டும். இதற்கு இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அங்காளம்மன் கோவில் இடமானது குன்னத்தூர் பேரூராட்சிக்கு சொந்தமானதாகும்.
அந்த நிலத்தில் ஊத்துக்குளி சாலையையொட்டி மேற்புறம் 4 மீட்டர் அகலத்திலும், கோவிலில் வடபுறம் பெருமாநல்லூர் சாலையை ஒட்டி 4 மீட்டர் அகலத்தில் சாலை விரிவாக்கம் மற்றும் ரவுண்டானா அமைப்பதற்கு ஏதுவாக நெடுஞ்சாலைத்துறைக்கு ஒப்படைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
- அடிக்கடி சாலை விபத்துகளும் நடந்து வந்தது.
- நினைவு தூணுடன் கூடிய ரவுண்டானாவில் ஒரு பகுதியும் நேற்று முன்தினம் இடிக்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் ஆற்றுப்பாலம் பகுதியில் ஏற்கெனவே உள்ள ரவுண்டானாவில் ஒரு பகுதி இடிக்கப்பட்டு, மாலை புதிதாக தற்காலிக ரவுண்டானா அமைக்கப்பட்டது.
தஞ்சாவூர் காந்தி - இர்வீன் ஆற்றுப்பாலம் அருகே காந்திஜி சாலை - நீதிமன்றச் சாலை சந்திப்பில் கடக்கும்போது வாகன ஓட்டுநர்களிடையே குழப்பம் நிலவி வந்தது. இதனால், அடிக்கடி விபத்துகளும் நிகழ்ந்து வந்ததால், அதைத் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதைத்தொடர்ந்து, ஏற்கெனவே நீதிமன்றச் சாலை நுழைவு பகுதியில் இடது புறம் இருந்த ரவுண்டானா முழுவதுமாகவும், வலது புறம் நினைவுத் தூணுடன் கூடிய ரவுண்டானாவில் ஒரு பகுதியும் நேற்று முன்தினம் இடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் புதிதாக தற்காலிக ரவுண்டானா நேற்று மாலை அமைக்கப்பட்டது.
இந்தத் தற்காலிக ரவுண்டானா சில நாள்களுக்கு தொடரும் என்றும், இதிலுள்ள நிறை, குறைகளை அறிந்து நிரந்தரமான ரவுண்டானா அமைக்கப்படும் என போக்குவரத்து ஒழுங்கு காவல் பிரிவினர் தெரிவித்தனர்.
- போக்குவரத்து நெரிசல், காத்திருப்பு குறைந்தது
- போக்குவரத்து சுலபமாக இருப்பதாக வாகன ஓட்டிகள் கருத்து தெரிவித்தனர்.
கோவை,
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து பெரிய நகரமாக கோவை உள்ளது.
இங்கு நாளுக்கு நாள் வாகன நெரிசல் அதிகரித்து வருகிறது.
போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடி–க்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது மாநகரில் முக்கிய சாலைகளில் உள்ள போக்குவரத்து சிக்னல்க–ளை அகற்றிவிட்டு அங்கு ரவுண்டானா அமைத்து போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பணியை தொடங்கி உள்ளனர் கோவை மாநகர போலீசார்.
இந்த பணிகளை போக்குவரத்து துணை கமிஷனர் மதிவாணன் முன்னின்று தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, கோவையில் அதிக போக்குவரத்து நெரிசலும், அதிக நேரம் சிக்னல்காக காத்திருக்க வேண்டி உள்ள லாலி ரோடு சந்திப்பு, மேட்டுப்பாளையம் சாலையில் சிந்தாமணி சந்திப்பு மற்றும் புரூக் பாண்டு சாலையில் கிக்கானி பள்ளி சந்திப்பு ஆகிய பகுதிகளில் இருந்த போக்குவரத்து சிக்னல்களை முழுவதுமாக அகற்றி விட்டனர்.
அதற்கு பதிலாக வாகனங்கள் செல்வதற்கு ஏற்ற வகையில் ரவுண்டானா அமைத்துள்ளனர்.
இதன் காரணமாக அந்த வழியாகச் செல்லும் வாகனங்கள் போக்குவரத்து சிக்னல்களில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் சுலபமாக சென்று வருகின்றன. இந்த 3 இடங்களிலும் வாகன நெரிசல் கணிசமாக குறைந்துள்ளது.
இதில் புரூக் பாண்டு சாலையில் கிக்கானி பள்ளி சந்திப்பு பகுதியில் தற்போது நிரந்தரமாக ரவுண்டானா அமைக்கப்பட்டது. இந்த பணியினை நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொண்டனர். இந்த ரவுண்டானா காரணமாக போக்குவரத்து சுலபமாகி உள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர். ஆனாலும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரவுண்டானா பகுதியில் புழுதி மண் பரப்பதால் சற்று அவதி அடைந்து வருகின்றனர்.
இதேபோன்று புரூக் பாண்டு சாலையில் மற்றொரு சிக்னலில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கவும், சிக்னலுக்காக காத்திருக்கும் நேரத்தை குறைப்ப–தற்காகவும் கோட்டப் பொறியாளா், சாலைப் பாதுகாப்பு பிரிவை சோ்ந்த அலுவலா்களுடன் இணைந்து புரூக் பாண்டு சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதில், புரூக் பாண்டு சாலையில் இருந்து தேவாங்கர் பள்ளி சிக்னலில் வலதுபுறம் வாகனங்கள் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.எனவே, புரூக் பாண்டு சாலையில் இருந்து பூ மாா்கெட், ஆா்.எஸ்.புரம், சிந்தாமணி, காந்திபுரம், மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள், தேவாங்கர் பள்ளி சிக்னலில் வலதுபுறம் திரும்பாமல் நேராக சென்று, சிரியன் சா்ச் ரோட்டில் வலதுபுறம் திரும்பி பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.
அதேபோன்று, புரூக் பாண்டு சாலை வழியாக அவினாசி சாலை பழைய மேம்பாலத்துக்கு செல்லும் வாகனங்கள், தேவாங்க–பேட்டை சிக்னலுக்காக காத்திருக்காமல் தொடா்ந்து பயணம் செய்யலாம்.
தேவாங்கர் பள்ளி சாலை மற்றும் அவினாசி சாலை பழைய மேம்பாலத்தில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் வழக்கம்போல் பயணத்தை மேற்கொள்ளலாம்.
- வி.இ.ரோட்டில் புதிதாக ரவுண்டானா அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
- பணிகள் துரிதமாக நடைபெற அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சியில் போக்கு வரத்து நெருக்கடிக்கு தீர்வு கண்டு,சீரான போக்கு வரத்தை ஏற்படுத்தும் வகையில் அதிகாரிகள் மற்றும் அனுபவம் வாய்ந்தவர்களுடன் ஆலோசனைகள் மேற்கொண்டு மேயர் ஜெகன் பெரியசாமி, சாலை அமைக்கும் பணிகள் மற்றும் சாலையோர பகுதிகளில் நடை பாதைகள், வடி கால்கள் உள்ளிட்ட திட்டப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
போக்குவரத்து சீராக நடைபெற பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கும்படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் தாமோதரன்நகர் சந்திப்பு வி.இ.ரோட்டில் போக்கு வரத்து அதிகமாக இருப்பதாக வந்த தகவலை யடுத்து அந்தப் பகுதியில் புதிதாக ரவுண்டானா அமைக்க முடிவு எடுக்கப்பட்டு ள்ளது. இதைத்தொடர்ந்து ரவுண்டானா அமைய உள்ள இடத்தினை மேயர் ஜெகன் பெரியசாமி நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து பணிகள் துரிதமாக நடைபெற உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார். ஆய்வின்போது மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், பிரபாகரன், ஜாஸ்பர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் உடன் இருந்தனர்.
- மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
- கலெக்டர் அலுவலக சந்திப்பு பகுதியில் ரவுண்டானா அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் நகரை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
நாகர்கோவிலில் போக்குவரத்து நெருக்க டியை குறைக்கும் வகையில் ரவுண்டானா அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.கலெக்டர் அலுவலக சந்திப்பு பகுதியில் ரவுண் டானா அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதைத் தொடர்ந்து செட்டி குளம் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி முன்புறம் உட்பட ஒரு சில இடங்களில் ரவுண் டானா அமைக்க மாநக ராட்சி அதிகாரிகள் நடவ டிக்கை மேற்கொண்டு வரு கிறார்கள்.
மகளிர் கிறிஸ்தவ கல்லூரி முன்புறம் ரவுண்டானா அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பூர்வாங்க பணிகள் மேற் கொள்ளப்பட்டது. இந்த நிலையில் இன்று அந்த பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து மேயர் மகேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாகர்கோவில் மாநகர பகுதியில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க பல்வேறு அதிரடி நடவ டிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது. சாலை கள் அனைத்தும் இருவழிச் சாலைகளாக மாற்ற நடவ டிக்கை மேற்கொண்டு உள்ளோம். இது தொடர் பாக பட்டா நிலம் வைத்தி ருப்பவர்களிடமும் பேசி யுள்ளோம். விரைவில் அனைத்து சாலைகளும் இருவழி சாலைகளாக மாற் றப்படும். இருவழிச் சாலை களாக மாற்றப்படும் பட்சத் தில் நாகர்கோவில் நகரில் போக்குவரத்து நெருக்கடி குறையும்.
கலெக்டர் அலுவல கத்தின் முன் பகுதியில் ரவுண்டானா பணி இறுதிக்கட்டத்தை எட்டி யுள்ளது. அந்த ரவுண்டா னாவில் நினைவு ஸ்தூபி வைப்பது குறித்து ஆலோ சனை நடத்தப்பட்டு வரு கிறது. மகளிர் கிறிஸ்தவ கல்லூரியின் முன்புறம் ரவுண்டானா அமைக்க ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகள் இன்று தொடங்கி இரண்டு வார காலத்திற்குள் முடிக்கப்படும்.
ஆக்கிரமிப்புகள் பார பட்ச மின்றி அகற்ற வும் நடவடிக்கை மேற் கொண்டு வருகிறோம். அனைத்து பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும்.கழிவு நீர் ஒடைகள் சீரமைக்கும் பணியும் நடந்து வருகிறது. அனைத்து வார்டுக்கு உட்பட்ட பகுதிகளிலும் கழிவு நீர் ஒடைகள் அனைத் தும் சுத்தம் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து 23 வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் நடந்து சென்றும் மோட்டார் சைக்கிளில் சென்றும் ஆய்வு மேற்கொண்டார். செல்ல கண் தெரு, கோர்ட் ரோடு, டதி பள்ளி ரோடு, பால் டேனியல் தெரு, வாட்டர் டேங்க் ரோடு, கே.பி. ரோடு, கலைமகள் தெரு, பர்வத வர்த்தினி தெரு, பெரிய நாடார் தெரு, ராமன் பிள்ளை தெரு, சகோதரர் தெரு, சாந்தான் செட்டிவிளை ரோடு உள்பட அனைத்து பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டார்.
சில இடங்களில் பொது மக்கள் மேயர் மகேஷை சந்தித்து சாலை சீரமைக்க வேண்டும், குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று தெரிவித்தனர். இது தொடர் பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.
ஆய்வின் போது ஒரு சில இடங்களில் ஆக்கிரமிப்புகள் இருந்ததை அகற்றுவதற்கும் அதிகாரிகளுக்கு உத்தர விட்டார். மாநக ராட்சி என்ஜினீயர் பால சுப்பிர மணியன், மண்டல தலைவர் ஜவகர் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரவுண்டானா அமைக்க முடிவு
- பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையின் நடுவே தடுப்புகள் அமைக்கப்பட்டு இருவழிப்பாதையாக மாற்றப்பட இருக்கிறது
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக போக்குவரத்து நெரிசலை குறைக்க கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
கலெக்டர் அலுவலக சாலை, வடசேரி சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் சாலையின் நடுவே கற்களால் ஆன தடுப்புகள் அமைத்து இருபுறமும் வாகனங்கள் செல்லும் அளவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் குறுகிய சாலைகள் விரிவாக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதோடு முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரவுண்டானா அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கலெக்டர் அலுவலக சந்திப்பில் ரவுண்டானா அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதே போல பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சந்திப்பு மற்றும் செட்டிகுளம் சந்திப்பிலும் ரவுண்டானா அமைக்கப்படும் என்று மாநகராட்சி மேயர் மகேஷ் கூறினார்.
இந்த நிலையில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அருகே கல்கோவில் முன் ரவுண்டானா அமைக்கும் பணி தொடங்கப்பட உள்ளது. இதற்காக அந்த பகுதியை விரிவாக்கம் செய்யும் பணி இன்று நடந்தது.
முதற்கட்டமாக ரவுண் டானா அமைப்பதற்கு இடையூறாக இருந்த மரங்கள் மற்றும் செடிகள் அப்புறப்படுத்தப்பட்டன. அதன்பிறகு அங்கு அமைக்கப்பட்டு இருந்த இரும்பு கம்பிகளால் ஆன சிறிய அளவிலான வேலி இடித்து அகற்றப்பட்டது.
ஆனால் மாநகராட்சி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு அங்குள்ள சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் தலைமையிலான போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் மாநகராட்சி மேயர் மகேசும் அங்கு வந்து பேசினார். அப்போது, "மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் தான் ரவுண்டானா அமைக்கப்படும். அதற்காக தான் நிலத்தை தயார் செய்யும் பணி நடக்கிறது. தனியாருக்கு சொந்தமான இடத்தில் ரவுண்டானா வராது" என்றார்.
பின்னர் போலீசார் முன்னிலையில் வேலி மற்றும் அங்கிருந்த கற்கள் அகற்றப்பட்டு ரவுண்டானா அமைக்கும் வகையில் அந்த பகுதியை தயார் செய்யும் பணி தொடர்ந்து நடந்தது.
ரவுண்டானா பணிகள் முடிந்ததும் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையின் நடுவே தடுப்புகள் அமைக்கப்பட்டு இருவழிப்பாதையாக மாற்றப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வடசேரி காசி விஸ்வநாதர் கோவில் அருகே கழிவு நீர் ஓடை அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தேங்கி நிற்பதாக கோவில் நிர்வாகிகள் அளித்த புகார் மனுவின் அடிப்படையில் இன்று அப்பகுதிக்கு குமரி கிழக்கு மாவட்ட செய லாளர் மேயர் மகேஷ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு உடனே அதனை சரி செய்ய துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது மாநகராட்சி அதிகா ரிகள், மண்டல தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
- 5 ரோடுகள் சந்திப்பு பகுதியில் இரு ஆண்டுக்கு முன் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.1.50 கோடி செலவில், ரவுண்டானா அமைக்கப்பட்டது.
- புற்கள், செடிகள் அமைத்து அழகுபடுத்தாமல் விடப்பட்டது.
உடுமலை :
உடுமலை பஸ் நிலையம் அருகே, 5 ரோடுகள் சந்திப்பு பகுதியில் இரு ஆண்டுக்கு முன் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.1.50 கோடி செலவில், ரவுண்டானா அமைக்கப்பட்டது.ஆனால் இப்பணிகள் முழுமையாக முடிக்கப்படவில்லை. புற்கள், செடிகள் அமைத்து அழகுபடுத்தாமல் விடப்பட்டது.
போதை ஆசாமிகள் புகலிடமாகவும், பிளக்ஸ்பேனர்கள் வைக்கும் மையமாகவும், அலங்கோலமாக காணப்பட்டது.நகரின் மையத்திலுள்ள ரவுண்டானாவை அழகுபடுத்த வேண்டும் என 2 ஆண்டுகளாக பொதுமக்கள் வலியுறுத்தி வந்த நிலையில் நகராட்சி சார்பில் ரவுண்டானாவை அழகுபடுத்தும் வகையில் செம்மண் கொண்டு வந்து கொட்டப்பட்டுள்ளது.
தொடர்ந்து இங்கு புற்தரை மற்றும் அழகான செடிகள் அமைத்து அழகுபடுத்தவும், சுற்றிலும் கம்பி வேலி அமைத்து பாதுகாக்கவும் நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் ராஜேந்திரா ரோடு மற்றும் பழநி ரோடு மையத்தடுப்புகளிலும் புற்கள், செடிகள் வைத்து பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ரவுண்டானா மற்றும் கழிவு நீர் ஒடை அமைக்க ரூ.1.50 கோடியில் டெண்டர் பிறப்பிக்கப்பட்டது
- கலெக்டர் அரவிந்த், மேயர் மகேஷ் ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்
நாகர்கோவில் :
நாகர்கோவில் கலெக்டர் அலுவலக சாலையில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வந்தது. இதை குறைக்கும் வகையில் அந்த சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு இருவழி பாதையாக மாற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தின் முன் பகுதியில் ரவுண்டானா அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ரவுண்டானா மற்றும் கழிவு நீர் ஒடை அமைக்க ரூ.1.50 கோடியில் டெண்டர் பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பணிகள் தொடங்கப்பட்டது.
பழைய ரவுண்டானா ஜே.சி.பி. எந்திரம் மூல மாக அகற்றப்பட்டது. அதிலிருந்த சுதந்திர தின விழா ஸ்தூபி மற்றும் உயர் கோபுர மின் விளக்குகள் மாற்றி வைக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் இன்று ரவுண்டானா அமைப்பத ற்கான பணிகள் தொடங்க ப்பட்டு உள்ளது. முதற்கட்ட மாக சாக்கு மூடைகளில் மணல் நிரப்பி ரவுண்டா னாவின் மாதிரி தோற்றம் அமைக்கப்பட்டு உள்ளது.பரிட்சார்த்த முறையில் 3 நாட்கள் வாகனங்களை இயக்க நடவடிக்கை எடுக்க ப்பட்டு உள்ளது. அதன் பிறகு ரவுண்டானா அமைக்கப்பட உள்ளது. ரவுண்டானாவின் வடக்கு பக்கத்தில் 10 மீட்டர் நீளத்திற்கும் கிழக்கு பக்கத்தில் 18 மீட்டர் நீளத்திற்கும் மேற்கு பக்கத்தில் 20 மீட்டர் நீளத்திற்கும் வாகனங்கள் எந்த ஒரு நெருக்கடியும் இன்றி செல்லும் வகையில் ஆம்ஸ் (தடுப்பு)அமைக்கவும் நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதிய ரவுண்டானா பணி தொடங்கப்பட்டதையடுத்து அந்த பணியை கலெக்டர் அரவிந்த், மேயர் மகேஷ் ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின் போது ஆணையாளர் ஆனந்த மோகன் மற்றும் கவுன்சிலர்கள் உடன் இருந்தனர்.
- ரூ.1.50 கோடியில் புதியதாக கட்ட நடவடிக்கை
- ஜே.சி.பி. எந்திரம் மூலமாக பொதுமக்களுக்கு இடை யூறு இன்றி பணி மேற்கொள்ளப்பட்டது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் கலெக்டர் அலுவலக சாலையில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இதைத் தொடர்ந்து கலெக்டர் அலுவலக சாலை இருவழி சாலை யாக மாற்றப்பட்டு உள்ளது. கலெக்டர் அலுவலகத்தின் முன் பகுதியில் உள்ள பழைய ரவுண்டானாவை அகற்றிவிட்டு புதிய ரவுண்டானா மற்றும் கழிவுநீர் ஓடை அமைக்க ரூ.1.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
இதற்கான டெண்டர் பிறப்பிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. கலெக்டர் அரவிந்த்தின் துரித நடவடிக்கை காரண மாக முதல் கட்டமாக அந்த பகுதியில் உள்ள கேபிள் வயர்கள் மாற்றப்பட்டு கழிவு நீர் ஓடைகள் கட்டும் பணி நடந்தது. நேற்று முன்தினம் ரவுண்டானாவின் தடுப்புச்சுவர்கள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு அந்த பகுதியில் இருந்த ரவுண்டானா அகற்றும் பணி தொடங்கியது. உதவி கோட்ட பொறியாளர் ஜெகன் செல்வராஜ், உதவி பொறியா ளர்கள் மதன்குமார், வித்யா, ஹெப்சிபாய் ஆகியோரது மேற்பார்வையில் பணி விடிய விடிய நடந்தது. இன்று அதிகாலை முடிவடைந்தது. ஜே.சி.பி. எந்திரம் மூலமாக பொதுமக்களுக்கு இடை யூறு இன்றி இந்த பணி மேற்கொள்ளப்பட்டது.
ரவுண்டானாவில் இருந்த சுதந்திர பொன்விழா நினைவு ஸ்தூபி மற்றும் உயர் கோபுர மின் விளக்குகள் அப்புறப்படுத்தப்பட்டன. இதை தொடர்ந்து அந்த பகுதியில் பள்ளங்கள் தோண்டப்பட்டு கான்கிரீட்டுகள் அமைக்கப் பட்டு உள்ளது.
அந்த பகுதி முழுவதும் தடுப்பு கம்பிகளால் மூடப்பட்டு உள்ளது. இன்று வழக்கம் போல் வாகன போக்குவரத்து நடந்து வருகிறது. பழைய ரவுண்டானா அகற்றப்பட்ட தையடுத்து புதிய ரவுண்டான அமைக்கும் பணி விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான நடவடிக்கைகளை ஆர்.பி.ஆர். நிறுவனத்தினர் செய்து வருகின்றனர். என்ஜினீயர் ஆர்.பி. ராகுல் மேற்பார்வையில் பணி நடக்கிறது.
ரவுண்டானாவின் மாதிரி தோற்றத்தை மணல் மூடைகளால் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. பரீட்சார்த்த முறையில் ரவுண்டானா அமைக்கப்பட்ட பிறகு கட்டுமான பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
- கலெக்டர் அலுவலக சாலை பழைய ரவுண்டானா அகற்றும் பணி தீவிரம்
- ரவுண்டானாவில் உள்ள பொன்விழா ஆண்டு ஸ்தூபியை மாற்றுவதற்கான பணியும் தீவிரம்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் கலெக்டர் அலுவலக சாலையில் கடுமையான போக்கு வரத்து நெருக்கடி ஏட்டதையடுத்து சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
தற்பொழுது சாலை விரிவாக்க பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து கலெக்டர் அலுவலகம் முதல் டெரிக் ஜங்சன் வரை இருவழி சாலையாக மாற்றப்பட்டு உள்ளது. இதையடுத்து கலெக்டர் அலுவலக ரவுண்டானாவை புதுப்பித்து அந்த பகுதியில் உள்ள கழிவுநீரோடை களை சீரமைக்க ரூ. 1.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
இதற்கான டெண்டரை நாகர்கோவிலை சேர்ந்த ஆர்.பி.ஆர். நிறுவனத்தினர் எடுத்திருந்தனர். டெண்டர் பிறப்பிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் பணிகள் தொடங்கப்படாமல் இரு ந்தது. அந்த பகுதியில் உள்ள மின் இணைப்புகள் மற்றும் கேபிள் ஒயர்கள் மாற்றப்படாமல் இருந்த தால் பணிகள் தொடங்கு வதில் தாமதம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து கலெக்டர் அரவிந்த் மேற்கொண்ட நடவடி க்கையின் காரணமாக கலெக்டர் அலுவலக சுற்று சுவர் இடித்து உள்புறமாக கட்டப்பட்டது. மேலும் அந்தப் பகுதியில் இருந்த மின் கம்பமும் மாற்றப்பட்டது.
ஆனால் தொலைபேசி இணைப்புக்கான கேபிள்கள் மாற்றப்படாமல் இருந்தது. இந்த நிலையில் இன்று காலை ரவுண்டானா மற்றும் கழிவுநீர் ஓடை அமைப்ப தற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டது.
அப்போது அந்த பகுதியில் கிடந்த தொலைபேசி கேபிள் வயர்கள் சேதமடைந்தது. இதனால் கலெக்டர் அலுவலகத்திற்குள் இன்டர்நெட் சேவை பாதிக்க ப்பட்டது. இதையடுத்து தொலைதொடப்பு துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து அதை சரி செய்வதற்கான நடவடிக்கை களை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் பழைய ரவுண்டானாவை அகற்று வதற்கான பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகி றது. ரவுண்டானாவின் தடுப்பு சுவர்கள் இடித்து அகற்றப்பட்டு உள்ளது. ரவுண்டானாவில் உள்ள பொன்விழா ஆண்டு ஸ்தூ பியை மாற்றுவதற்கான பணியையும் மேற்கொண்டு உள்ளனர்.
இன்று இரவு ரவுண்டா னாவில் உள்ள ஸ்தூபியை மாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.கழிவு நீர் ஓடை அமைப்பதற்காக அந்த பகுதியில் ஜல்லிகள் கொட்டப்பட்டுள்ளதால் கலெக்டர் அலுவலக சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதனை சமாளிக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்வாரிய ஊழியர்கள், தொலைத் தொடர்பு ஊழியர்களும் இந்த பணி முடிவடைய முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்