search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் போக்குவரத்து நெருக்கடி
    X

    நாகர்கோவிலில் போக்குவரத்து நெருக்கடி

    • கலெக்டர் அலுவலக சாலை பழைய ரவுண்டானா அகற்றும் பணி தீவிரம்
    • ரவுண்டானாவில் உள்ள பொன்விழா ஆண்டு ஸ்தூபியை மாற்றுவதற்கான பணியும் தீவிரம்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலக சாலையில் கடுமையான போக்கு வரத்து நெருக்கடி ஏட்டதையடுத்து சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    தற்பொழுது சாலை விரிவாக்க பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து கலெக்டர் அலுவலகம் முதல் டெரிக் ஜங்சன் வரை இருவழி சாலையாக மாற்றப்பட்டு உள்ளது. இதையடுத்து கலெக்டர் அலுவலக ரவுண்டானாவை புதுப்பித்து அந்த பகுதியில் உள்ள கழிவுநீரோடை களை சீரமைக்க ரூ. 1.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

    இதற்கான டெண்டரை நாகர்கோவிலை சேர்ந்த ஆர்.பி.ஆர். நிறுவனத்தினர் எடுத்திருந்தனர். டெண்டர் பிறப்பிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் பணிகள் தொடங்கப்படாமல் இரு ந்தது. அந்த பகுதியில் உள்ள மின் இணைப்புகள் மற்றும் கேபிள் ஒயர்கள் மாற்றப்படாமல் இருந்த தால் பணிகள் தொடங்கு வதில் தாமதம் ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து கலெக்டர் அரவிந்த் மேற்கொண்ட நடவடி க்கையின் காரணமாக கலெக்டர் அலுவலக சுற்று சுவர் இடித்து உள்புறமாக கட்டப்பட்டது. மேலும் அந்தப் பகுதியில் இருந்த மின் கம்பமும் மாற்றப்பட்டது.

    ஆனால் தொலைபேசி இணைப்புக்கான கேபிள்கள் மாற்றப்படாமல் இருந்தது. இந்த நிலையில் இன்று காலை ரவுண்டானா மற்றும் கழிவுநீர் ஓடை அமைப்ப தற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டது.

    அப்போது அந்த பகுதியில் கிடந்த தொலைபேசி கேபிள் வயர்கள் சேதமடைந்தது. இதனால் கலெக்டர் அலுவலகத்திற்குள் இன்டர்நெட் சேவை பாதிக்க ப்பட்டது. இதையடுத்து தொலைதொடப்பு துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து அதை சரி செய்வதற்கான நடவடிக்கை களை மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் பழைய ரவுண்டானாவை அகற்று வதற்கான பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகி றது. ரவுண்டானாவின் தடுப்பு சுவர்கள் இடித்து அகற்றப்பட்டு உள்ளது. ரவுண்டானாவில் உள்ள பொன்விழா ஆண்டு ஸ்தூ பியை மாற்றுவதற்கான பணியையும் மேற்கொண்டு உள்ளனர்.

    இன்று இரவு ரவுண்டா னாவில் உள்ள ஸ்தூபியை மாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.கழிவு நீர் ஓடை அமைப்பதற்காக அந்த பகுதியில் ஜல்லிகள் கொட்டப்பட்டுள்ளதால் கலெக்டர் அலுவலக சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    இதனை சமாளிக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்வாரிய ஊழியர்கள், தொலைத் தொடர்பு ஊழியர்களும் இந்த பணி முடிவடைய முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×