என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு ரெயில்"

    • 20 பெட்டிகளுடன் இந்த சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
    • பயணிகள் கூட்ட நெரிசல் இன்றி முன் பதிவு செய்து பயணம் மேற்கொள்ள கேட்டு கொள்ளப்படுகிறது.

    சேலம்:

    சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது-

    கோடை விடுமுறையையொட்டி சேலம், நாமக்கல் கரூர் வழியாக பெங்களூரு-மதுரை இடையே நாளை (30-ந் தேதி) சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

    இந்த ரெயில் பெங்களூருவில் இருந்து நாளை இரவு 7 மணிக்கு புறப்பட்டு கிருஷ்ணராஜபுரம் பங்காரு பேட்டை வழியாக இரவு 10.30 மணிக்கு சேலத்திற்கு வந்தடையும். கரூருக்கு அதிகாலை 1.43 மணிக்கும், மதுரைக்கு காலை 6.15 மணிக்கும் வந்தடையும். மறு மார்க்கத்தில் மே மாதம் 1-ந் தேதி காலை 9,10 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு சேலத்திற்கு மதியம் 2.20 மணிக்கு வந்தடையும் இந்த இரவு 7. 30 மணிக்கு பெங்களூருக்கு சென்றடையும். 2 அடுக்கு ஏ.சி. பெட்டி 2, 3 அடுக்கு ஏ.சி. பெட்டி 16, லக்கேஜ் பெட்டி உள்பட மொத்தம் 20 பெட்டிகளுடன் இந்த சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

    இதற்கான முன்பதிவு தொடங்கி உள்ளது. பயணிகள் கூட்ட நெரிசல் இன்றி முன் பதிவு செய்து பயணம் மேற்கொள்ள கேட்டு கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நெல்லையில் இருந்து நாளை இரவு 10.15 மணிக்கு டெல்லிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
    • இந்த ரெயில்களுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    சென்னை சென்ட்ரலில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் பகத் கீ கோதிக்கு இன்றும், மதுரையில் இருந்து நாளை (21-ந்தேதி) யும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று இரவு 7.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண். 06057), வருகிற செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12.30 மணிக்கு ராஜஸ்தான் மாநிலம் பகத் கீ கோதி சென்றடையும். மறுமாா்க்கமாக பகத் கீ கோதியில் இருந்து வருகிற 23-ந்தேதி அதிகாலை 5.30-க்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண். 06058), மறுநாள் இரவு 11.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

    இதில் 3 ஏ.சி. வகுப்பு பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட 16 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரெயில் சூலூா்பேட்டை, கூடூா், நெல்லூா், ஓங்கோல், விஜயவாடா, வாராங்கல், சந்திரபூா், வா்தா, அகோலா, ஜல்கான், நந்தூா்பாா், உத்னா (சூரத்), வடோதரா, சபா்மதி பிஜி, ஜலோா், லூனி வழியாக இயக்கப்படும்.

    மதுரையில் இருந்து நாளை (திங்கட்கிழமை) காலை 10.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண். 06067) 23-ந்தேதி பிற்பகல் 12.30 மணிக்கு பகத் கீ கோதி சென்றடையும். மறுமாா்க்கமாக பகத் கீ கோதியில் இருந்து 24-ந்தேதியில் அதிகாலை 5.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண். 06068), 26-ந்தேதி காலை 8.30 மணிக்கு மதுரை வந்தடையும்.

    இதில் 12 மூன்றடுக்கு ஏ.சி. வகுப்பு பெட்டிகள், 6 எக்கனாமிக் ஏ.சி. வகுப்பு பெட்டிகள் இணைக்கப்படும். இந்த ரெயில் திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூா், சூலூா்பேட்டை, கூடூா், நெல்லூா், ஓங்கோல், விஜயவாடா, வாராங்கல், சந்திரபூா், வா்தா, அகோலா, ஜல் கான், நந்தூா்பாா், உத்னா (சூரத்), வடோதரா, சபா்மதி பிஜி, ஜலோா், லூனி வழியாக இயக்கப்படும்.

    நெல்லையில் இருந்து நாளை இரவு 10.15 மணிக்கு டெல்லிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரெயில் (எண். 06161), வருகிற 24-ந்தேதி அதிகாலை 2 மணிக்கு டெல்லி ஹசரத் நிஜா முதீனுக்கு சென்றடையும். இதில் படுக்கை வசதி கொண்ட 20 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

    இந்த ரெயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், மேல்மரு வத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர், கூடூர், நெல்லூர், ஓங்கோல், விஜயவாடா, வாராங்கல், நாக்பூர், போ பால், குவாலியர், ஆக்ரா, மதுரா வழியாக இயக்கப்படும்.

    இந்த ரெயில்களுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.

    • படுக்கை வசதி கொண்ட 12 பெட்டிகள், 6 பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
    • மங்களூரில் இருந்து இன்று 17 ஆகிய தேதிகளில் மாலை 6 மணிக்கு புறப்படும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை சென்ட்ரலில் இருந்து இன்றும் வருகிற 17-ந்தேதியும் இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06089) மறுநாள் காலை 10 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். மறுமாா்க்கமாக கன்னியாகுமரியில் இருந்து நாளை (11-ந்தேதி) மற்றும் 18-ந்தேதிகளில் இரவு 8 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06090) மறுநாள் காலை 11 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

    இதில், படுக்கை வசதி கொண்ட 12 பெட்டிகள், 6 பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரெயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூா், திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, நெல்லை, நாகா்கோவில் வழியாக இயக்கப்படும்.

    கொல்லம்

    சென்னை சென்ட்ரலில் இருந்து வருகிற 12, 19 ஆகிய தேதிகளில் இரவு 11.20-க்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06113) மறுநாள் பிற்பகல் 3.30-க்கு கொல்லம் சென்றடையும். மறுமாா்க்கமாக கொல்லத்தில் இருந்து வருகிற 13, 20 ஆகிய தேதிகளில் இரவு 7.10-க்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06114) மறுநாள் காலை 11.10-க்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

    இந்த ரெயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்த

    னூா், பாலக்காடு, திருச்சூா், எா்ணாகுளம், கோட்டயம், செங்கனூா், மாவேலிக்கரா வழியாக இயக்கப்படும்.

    போத்தனூா்

    சென்னை சென்ட்ரலில் இருந்து நாளை (11-ந்தேதி) இரவு 11.50-க்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06027) மறுநாள் காலை 8.30-க்கு கோவையை அடுத்த போத்தனூா் சென்றடையும். மறுமாா்க்கமாக போத்தனூரில் இருந்து 14-ந்தேதி இரவு 11.30-க்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06027) மறுநாள் காலை 8.20-க்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

    இந்த ரெயில் பெரம்பூா், திருவள்ளூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக இயக்கப்படும்.

    தாம்பரத்தில் இருந்து 11, 18, 25, மே 2 ஆகிய தேதிகளில் மாலை 5.05-க்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06185) மறுநாள் காலை 7.45-க்கு போத்தனூா் சென்றடையும். மறுமாா்க்கமாக போத்தனூரில் இருந்து 13, 20, 27, மே 4 ஆகிய தேதிகளில் இரவு 11.55-க்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06186) மறுநாள் பகல் 12.15-க்கு தாம்பரம் வந்தடையும்.

    இந்த ரெயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாதிரி

    புலியூா், சிதம்பரம், சீா்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூா், திருச்சி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு வழியாக இயக்கப்படும்.

    மங்களூரு - திருவனந்தபுரம்

    மங்களூரில் இருந்து இன்று (10-ந்தேதி), 17 ஆகிய தேதிகளில் மாலை 6 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06051) மறுநாள் காலை 6.35-க்கு திருவனந்தபுரம் சென்றடையும். மறுமாா்க்கமாக திருவனந்தபுரத்தில் இருந்து நாளை (11-ந்தேதி), 18 ஆகிய தேதிகளில் மாலை 6.40-க்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06052) மறுநாள் காலை 7 மணிக்கு மங்களூரு சென்றடையும்.

    இதில் ஒரு ஏசி வகுப்பு பெட்டி, படுக்கை வசதி கொண்ட 12 பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

    இந்த ரெயில் காசா்கோடு, கண்ணூா், கோழிக்கோடு, ஷொரனூா், திருச்சூா், எா்ணாகுளம், ஆலப்புழை, கொல்லம் வழியாக இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • போத்தனூருக்கு மறுநாள் காலை 7.45 மணிக்கு வந்தடைகிறது.
    • ரெயில் மே மாதம் 2-ந்தேதிவரை வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இயக்கப்படுகிறது.

    கோவை:

    தென் இந்திய ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 11.50 மணிக்கு புறப்படும் 06027 என்ற எண்ணுள்ள ரெயில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக மறுநாள் காலை 8.30 மணிக்கு போத்தனூர் ரெயில் நிலையத்தை வந்தடைகிறது.

    போத்தனூரில் இருந்து வருகிற 14-ந்தேதி இரவு 11.30 மணிக்கு புறப்படும் 06028 என்ற எண்ணுள்ள ரெயில் மறுநாள் காலை 8.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தைசென்றடைகிறது.

    தாம்பரத்தில் இருந்து 06185 என்ற எண்ணுள்ள ரெயில் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5.05 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பக்கோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு வழியாக போத்தனூருக்கு மறுநாள் காலை 7.45 மணிக்கு வந்தடைகிறது. இந்த ரெயில் மே மாதம் 2-ந்தேதிவரை வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இயக்கப்படுகிறது.

    போத்தனூரில் இருந்து 06186 என்ற ரெயில் ஞாயிறுதோறும் இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பகல் 12.15 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது. வருகிற 13-ந்தேதி முதல் அடுத்த மாதம் 4-ந்தேதிவரை இந்த ரெயில் இயக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மதுரையில் இருந்து புறப்பட்டு காச்சிகுடா செல்லும் சிறப்பு ரெயில், வரும் ஏப்ரல் 9-ந்தேதி முதல் மே 7-ந்தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு சார்லபள்ளி செல்லும் சிறப்பு ரெயில், வரும் ஏப்ரல் 4-ந்தேதி முதல் மே 2-ந்தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    கோடை காலத்தை முன்னிட்டு பயணிகள் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரெயில்கள் சேவை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    * தெலுங்கானா மாநிலம் காச்சிகுடாவில் இருந்து புறப்பட்டு மதுரை வரும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.07191), வரும் ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 5-ந்தேதி வரையிலும் (திங்கட்கிழமை மட்டும்), மறுமார்க்கமாக, மதுரையில் இருந்து புறப்பட்டு காச்சிகுடா செல்லும் சிறப்பு ரெயில் (07192), வரும் ஏப்ரல் 9-ந்தேதி முதல் மே 7-ந்தேதி வரையிலும் (புதன்கிழமை மட்டும்) நீட்டிக்கப்பட்டுள்ளது.

    * மகாராஷ்டிர மாநிலம் நாந்தேட்டில் இருந்து புறப்பட்டு ஈரோடு வரும் சிறப்பு ரெயில் (07189), வரும் ஏப்ரல் 4-ந்தேதி முதல் மே 2-ந்தேதி வரையிலும் (வெள்ளிக்கிழமை மட்டும்), மறுமார்க்கமாக, ஈரோட்டில் இருந்து புறப்பட்டு நாந்தேட் செல்லும் சிறப்பு ரெயில் (07190), வரும் ஏப்ரல் 6-ந்தேதி முதல் மே 4-ந்தேதி வரையிலும் (ஞாயிற்றுக்கிழமை மட்டும்) நீட்டிக்கப்பட்டுள்ளது.

    * காச்சிக்குடாவில் இருந்து புறப்பட்டு நாகர்கோவில் வரும் சிறப்பு ரெயில் (07435), வரும் ஏப்ரல் 4-ந்தேதி முதல் மே 2-ந்தேதி வரையிலும் (வெள்ளிக்கிழமை மட்டும்), மறுமார்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு காச்சிக்குடா செல்லும் சிறப்பு ரெயில் (07436), வரும் ஏப்ரல் 6-ந்தேதி முதல் மே 4-ந்தேதி வரையிலும் (ஞாயிற்றுக்கிழமை) நீட்டிக்கப்பட்டுள்ளது.

    * ஐதராபாத் சார்லபள்ளியில் இருந்து புறப்பட்டு விழுப்புரம் வரும் சிறப்பு ரெயில் (07601), வரும் ஏப்ரல் 3-ந்தேதி முதல் மே 1-ந்தேதி வரையிலும் (வியாழக்கிழமை மட்டும்), மறுமார்க்கமாக, விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு சார்லபள்ளி செல்லும் சிறப்பு ரெயில் (07602), வரும் ஏப்ரல் 4-ந்தேதி முதல் மே 2-ந்தேதி வரையிலும் (வெள்ளிக்கிழமை மட்டும்) நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருச்சி-தாம்பரம் இடையே 29-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை சிறப்பு ரெயில்
    • படுக்கை வசதி கொண்ட 14 பெட்டிகள், இரு பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ரம்ஜான் பண்டிகையை யொட்டி தாம்பரத்தில் இருந்து மாா்ச் 28-ந்தேதி மாலை 6 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06037) மறுநாள் காலை 8 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.

    மறுமாா்க்கமாக கன்னியாகுமரியில் இருந்து 31-ந் தேதி இரவு 8.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06038) மறுநாள் காலை 8.55 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இதில் படுக்கை வசதி கொண்ட 14 பெட்டிகள், இரு பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

    இந்த ரெயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூா், நாகா்கோவில் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    திருச்சி-தாம்பரம் இடையே 29-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை சிறப்பு ரெயில் இயக்கப்படும். திருச்சியில் இருந்து காலை 5.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06048) பகல் 12.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

    மறுமாா்க்கமாக தாம்பரத்தில் இருந்து பிற்பகல் 3.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06047) இரவு 10.40 மணிக்கு திருச்சி சென்றடையும். இதில் இருக்கை வசதி கொண்ட இரு ஏசி வகுப்பு பெட்டிகள் மற்றும் 10 சாதாரண பெட்டிகள், 6 பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

    இந்த ரெயில் தஞ்சாவூா், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீா்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்பு லியூா், பண்ருட்டி, விழுப்புரம், திண்டிவனம், மேல்மரு வத்தூா், செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    சென்னை-பெங்களூரு

    பெங்களூரில் இருந்து 28-ந்தேதி முதல் காலை 8.05 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 07319) பிற்பகல் 2.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். மறுமாா்க்கமாக சென்னை சென்ட்ரலில் இருந்து பிற்பகல் 3.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 07320) இரவு 10.50 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.

    இதில் 3 ஏசி வகுப்பு பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட 11 பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரெயில் யஷ்வந்த்பூா், கிருஷ்ணராஜபுரம், பங்காருப்பேட்டை, ஜோலார் பேட்டை, ஆம்பூா், குடியாத்தம், காட்பாடி, சோளிங்கபுரம், அரக்கோணம், திருவள்ளூா், பெரம்பூா் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மைசூருவில் இருந்து கார்வாருக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்க தென்மேற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது.
    • ரெயில்கள் இருமார்க்கமாகவும் மண்டியா, யஷ்வந்தபுரம், குனிகல், ஹாசன், ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    யுகாதி, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் பெங்களூருவில் இருந்து சென்னை, கலபுரகிக்கும், மைசூருவில் இருந்து கார்வாருக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்க தென்மேற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    * கே.எஸ்.ஆர். பெங்களூரு-டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 07319) வருகிற 28-ந்தேதி காலை 8.05 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு மதியம் 2.40 மணிக்கு சென்னையை சென்றடையும்.

    * டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல்-கே.எஸ்.ஆர். பெங்களூரு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (07320) அதே நாளில் பகல் 3.40 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு இரவு 10.50 மணிக்கு பெங்களூருவை வந்தடையும். இந்த ரெயில்கள் இருமார்க்கமாகவும் யஷ்வந்தபுரம், கே.ஆர்.புரம், பங்காருபேட்டை, ஜோலார்பேட்டை, ஆம்பூர், குடியாத்தம், காட்பாடி, சோளிங்கர், அரக்கோணம், திருவள்ளூர், பெரம்பூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    * எஸ்.எம்.வி.டி. பெங்களூரு-கலபுரகி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (06519) வருகிற 28-ந்தேதி இரவு 9.15 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7.40 மணிக்கு கலபுரகியை சென்றடையும்.

    * கலபுரகி-எஸ்.எம்.வி.டி. பெங்களூரு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (06520) வருகிற 29-ந்தேதி காலை 9.35 மணிக்கு கலபுரகியில் இருந்து புறப்பட்டு அதே நாள் இரவு 8 மணிக்கு பெங்களூருவை வந்தடையும்.

    இந்த ரெயில்கள் இருமார்க்கமாகவும் எலகங்கா, தர்மாவரம், அனந்தபூர், குண்டக்கல், அதோனி, மந்த்ராலயம் ரோடு, ராய்ச்சூர், கிருஷ்ணா, யாதகிரி, சகாபாத் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    * மைசூரு-கார்வார் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (06203) வருகிற 28-ந்தேதி இரவு 9.35 மணிக்கு மைசூருவில் இருந்து புறப்பட்டு மறுநாள் மாலை 4.15 மணிக்கு கார்வாரை சென்றடையும்.

    * கார்வார்-மைசூரு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (06204) வருகிற 29-ந்தேதி இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மாலை 4.40 மணிக்கு மைசூருவுக்கு செல்லும்.

    இந்த ரெயில்கள் இருமார்க்கமாகவும், மண்டியா, கே.எஸ்.ஆர். பெங்களூரு, யஷ்வந்தபுரம், குனிகல், ஹாசன், சக்லேஷ்புரா, சுப்பிரமணியா ரோடு, கபகாபுத்தூர், பண்ட்வால், சூரத்கல், முல்கி, உடுப்பி, பர்கூர், குந்தாபுரா, பைந்தூர், பட்கல், முருடேஸ்வர், ஒன்னாவர், குமட்டா, கோகர்ணா, அங்கோலா ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் 22, 26, 29, ஏப்ரல் 2 ஆகிய தேதிகளில் இரவு 11.45 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்படும்.
    • ஷாலிமரில் இருந்து சென்னைக்கு வருகிற 31-ந்தேதி, எப்ரல் 7-ந்தேதிகளில் பிற்பகல் 2.20 மணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும்.

    ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் கூட்ட நெரிசலை குறைக்க சென்னை சென்ட்ரல் - போத்தனூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

    இந்த ரெயில் வருகிற 30-ந்தேதி இரவு 11.20 மணிக்கு புறப்பட்டு பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியே மறுநாள் காலை 8 மணிக்கு போத்தனுாரை அடையும். மறுமார்க்க ரெயில் வருகிற 31-ந்தேதி இரவு 11.20 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 8.20 மணிக்கு சென்னையை வந்தடையும்.

    சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் 22, 26, 29, ஏப்ரல் 2 ஆகிய தேதிகளில் இரவு 11.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில், அடுத்த 3-வது நாளில் காலை 7.15 மணிக்கு மேற்கு வங்காள மாநிலம் சந்திரகாச்சிக்கு செல்லும்.

    சந்திரகாச்சியில் இருந்து வருகிற 24, 28, 31, ஏப்ரல் 4-ந்தேதிகளில் காலை 9 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில், மறுநாள் மாலை 3.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வரும்.

    இதேபோல் ஷாலிமரில் இருந்து சென்னைக்கு வருகிற 31-ந்தேதி, எப்ரல் 7-ந்தேதிகளில் பிற்பகல் 2.20 மணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும்.

    • கோடை விடுமுறை கூட்ட நெரிசலை சமாளிக்க சரலபள்ளியில் இருந்து மதுரை வழியாக கன்னியாகுமரிக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
    • ஜூன் மாதம் 6, 13, 20, 27-ந் தேதிகளில் வெள்ளிக்கிழமை தோறும் அதிகாலை 5.15 மணிக்கு புறப்பட்டு காலை 9.50 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது.

    மதுரை:

    தென்மத்திய ரெயில்வே மண்டலம் சார்பில், கோடை விடுமுறை கூட்ட நெரிசலை சமாளிக்க தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் அருகில் உள்ள சரலபள்ளியில் இருந்து மதுரை வழியாக கன்னியாகுமரிக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அதன்படி, இந்த ரெயில் (வ.எண்.07230) சரலபள்ளியில் இருந்து அடுத்த மாதம் 2-ந் தேதி, 9, 16, 23, 30-ந் தேதி, மே மாதம் 7-ந் தேதி, 14, 21, 28-ந் தேதி, ஜூன் மாதம் 4, 11, 18, 25-ந் தேதிகளில் புதன்கிழமை தோறும் இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு வியாழக்கிழமை இரவு 9.45 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வருகிறது.

    நள்ளிரவு 2.30 மணிக்கு கன்னியாகுமரி சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் இந்த சிறப்பு ரெயில் (வ.எண்.07229) கன்னியாகுமரியில் இருந்து அடுத்த மாதம் 4, 11, 18, 25-ந் தேதி, மே மாதம் 2, 9, 16, 23, 30-ந் தேதி, ஜூன் மாதம் 6, 13, 20, 27-ந் தேதிகளில் வெள்ளிக்கிழமை தோறும் அதிகாலை 5.15 மணிக்கு புறப்பட்டு காலை 9.50 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. சனிக்கிழமை பகல் 11.40 மணிக்கு சரலப்பள்ளி சென்றடைகிறது.

    இந்த ரெயில்கள் நளகொண்டா, மிரியால்குடா, நடிக்குடே, சட்டெனபள்ளி, குண்டூர், தெனாலி, சிராலா, ஓங்கோல், நெல்லூர், ரேணிகுண்டா, திருத்தணி, காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்), சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர், நாகர்கோவில் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இதில் ஒரு 2-அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி, 5 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 2 பொது பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும்.

    • சனிக்கிழமைதோறும் புறப்படும் இந்த ெரயில் திங்கட்கிழமை சென்று சேரும். முன்னதாக நவம்பர் 4-ந் தேதி, ஹஸூர்
    • நடப்பாண்டு டிசம்பர் 30-ந் தேதி வரை இரு மார்க்கத்திலும் இந்த ெரயில் இயக்கம் தொடருமென அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    பயணிகள் கூட்ட நெரிசலை சமாளிக்க எர்ணாகுளம் - ஹஸூர் சாஹிப் நாந்தேட் இடையே வாராந்திர சிறப்பு ெரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    நவம்பர் 5-ந் தேதி கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் ஹஸூர் சாஹிப் நாந்தேட்க்கு சிறப்பு ெரயில் புறப்படுகிறது. எர்ணாகுளத்தில் புறப்படும் ெரயில் ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ரேணிகுண்டா, குண்டூர், நெல்லூர் உள்ளிட்ட ெரயில் நிலையங்களில் நின்று வடமாநிலங்கள் வழியாக பயணித்து, மகாராஷ்டிரா மாநிலம் ஹஸூர் சாஹிப் நாந்தேட் சென்றடையும். சனிக்கிழமைதோறும் புறப்படும் இந்த ெரயில் திங்கட்கிழமை சென்று சேரும்.

    முன்னதாக நவம்பர் 4-ந் தேதி, ஹஸூர் சாஹிப் நாந்தேட்டில் இருந்து எர்ணாகுளத்துக்கு சிறப்பு ெரயில் புறப்படும். நடப்பாண்டு டிசம்பர் 30-ந் தேதி வரை இரு மார்க்கத்திலும் இந்த ெரயில் இயக்கம் தொடருமென அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு ெரயிலில்7 ஏ.சி., 7படுக்கை வசதி, இரண்டு பொது பெட்டி உள்ளிட்ட 20 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் என சேலம் கோட்ட ெரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை
    • குமரி மாவட்ட ரெயில்வே இருப்புப் பாதைகள் அனைத்தும் திருவனந்தபுரம் கோட்டத்தில் உள்ளது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரியில் இருந்து திருநெல்வேலி, மதுரை வழியாக வட மாவட்டங்களுக்கு கூடுதல் ரெயில்கள் இயக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்தக் கோரிக்கை புறக்கணி க்கப்பட்டு விடப்படும் புதிய ரெயில்கள், வழக்கம் போல் கேரளாவை மையப்ப டுத்தியே அறிவிக்கப்ப டுகின்றன. இதற்கான காரணம் குறித்து கன்னியாகுமரி மாவட்ட ரெயில்வே உபயோகிப்பாளர் சங்கத்தினர் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு மாநிலத்தின் கீழ் உள்ளது. இதனால் இங்குள்ள மக்கள் தங்கள் மாநி லத்திற் குட்பட்ட பகுதிகள் வழியாக ரெயில்கள் இயக்க வேண்டும் என்று விரும்பு கிறார்கள்.

    ஆனால் குமரி மாவட்ட ரெயில்வே இருப்புப் பாதைகள் அனைத்தும் திருவனந்தபுரம் கோட்டத்தில் உள்ளது.

    தெற்கு ரெயில்வே மண்ட லத்தில் பொது மேலாளர், ரெயில்கள் இயக்கம் அதிகாரி, முதன்மை வணிக அதிகாரி பயணிகள் பிரிவு என முக்கிய பொறுப்புகளில் கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் முழுக்க முழுக்க பணிபுரிந்து வருகின்றனர். இதனால் தான் வட மாநில ரெயில்கள் கேரளா வழியாக இயக்கப்படுகின்றன.

    தற்போது அசாம் மாநிலம் கவுகாத்தியை தலைமை யிடமாக கொண்ட வட கிழக்கு எல்லை ரெயில்வே மண்டலம் சார்பாக திப்ருகர்-கன்னியாகுமரி அறிவிக்கப்பட்ட வாராந்திர சிறப்பு ரெயிலும் கேரளா வழியாகத் தான் செல்கிறது.

    இந்த ரெயிலை திருநெல்வேலி, மதுரை வழியாக இயக்க வேண்டும் என்பதே தற்போதைய கோரிக்கை. இந்த ரெயிலுக்கு 2-ம் கட்ட பிட்லைன் பராமரிப்பு, நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் தான் செய்யப்படுகிறது. இதனால் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் பிட்லைன் பராமரிப்பு இட நெருக்கடி ஏற்படுகிறது.இதன் காரணமாக தென் மாவட்ட பயணிகள் பயன்படுத்தும் விதமாக புதிய ரெயில்கள் இயக்க முடியாத நிலை ஏற்படும். மேலும் கன்னியாகுமரியில் இருந்து தற்போது வாராந்திர ரெயில்களாக இயக்கப்படும் திருக்குறள், ஹவுரா, மும்பை போன்ற ரெயில்களை தினசரி ரெயில்களாக மாற்றம் செய்து இயக்க முயற்சிகள் மேற்கொள்ளும் போது பிட்லைன் இட நெருக்கடியை காரணம் காட்டி இயக்க முடியாமல் போகும் நிலை ஏற்படலாம்.

    நாகர் கோவில்-ஷாலிமார் ரெயிலும் கேரள பயணிகள் வசதிக்காக தான் இயக்கப் படுகிறது. இந்த நிலையை மாற்ற, இந்த ரெயில்களை திருநெல்வேலி, மதுரை, திருச்சி, சென்னை வழியாக இயக்க வேண்டும் என்றும் அவ்வாறு முடியாவிட்டால், அந்த ரெயில்களை கொச்சுவேலியுடன் நிறுத்தி விடலாம் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு திருவனந்தபுரம் கோட்டம் தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறது.

    இந்த வழியில் புதிய ரெயில்களை இயக்கா விட்டாலும் பரவாயில்லை. கேரள பயணிகளுக்கு பயன்படும் வகையில் சுற்று ரெயில்களை நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரியில் இருந்து இயக்காமல் இருந்தால் போதும் என்பது தான் எங்கள் கோரிக்கை.

    மேலும் இது போன்ற ரெயில்கள் இயக்குவதை நிரந்தரமாக தடை செய்ய வேண்டுமானால், நாகர்கோவில் துணை கோட்டத்தின் கீழ் உள்ள கன்னியாகுமரியில் இருந்து பால ராமபுரம் வரை யிலும் நாகர்கோவில்-திருநெல்வேலி வரையிலும் உள்ள இருப்புப் பாதைகளை மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும். இதற்கு தமிழக எம்.பி.க்கள் அழுத்தம் கொடுக்க வேண்டியது அவசியம் என்றனர்.

    • சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர் உள்ளிட்ட நிலையங்கள் வழியாக ரெயில் இயக்கப்படும்.
    • வருகிற 8, 15-ந் தேதிகளில் இச்சிறப்பு ெரயில் இயக்கப்படும்.

    திருப்பூர்:

    வடமாநிலங்களில் தொடர் பண்டிகை எதிரொலியாக வருகிற 6, 13, 20 ஆகிய தேதிகளில், கன்னியாகுமரியில் இருந்து அசாம் மாநிலம் திப்ருகருக்கு வாராந்திர சிறப்பு ெரயில் இயக்கப்படுகிறது. கன்னியாகுமரியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை 5:20 மணிக்கு புறப்படும் ரெயில் (வ.எண்:05905), புதன்கிழமை இரவு 8:50 மணிக்கு திப்ருகர் சென்றடையும்.

    மறுமார்க்கத்தில் செவ்வாய்கிழமைகளில் திப்ருகரில் இருந்து இரவு 7:25மணிக்கு புறப்படும் ெரயில்(05906) வெள்ளிக்கிழமை இரவு 10மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். வருகிற 8, 15-ந் தேதிகளில் இச்சிறப்பு ெரயில் இயக்கப்படும். இந்த ெரயிலில், ஏ.சி., இரண்டடுக்கு 1, மூன்றடுக்கு 5, படுக்கை வசதி 11, பொது இரண்டாம் வகுப்பு 3, சரக்கு பெட்டி ஒன்று என 21 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

    சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர் உள்ளிட்ட நிலையங்கள் வழியாக ெரயில் இயக்கப்படும். கன்னியாகுமரி-திப்ருகர் ரெயில், திங்கட்கிழமை காலை 4:12 மணிக்கு கோவை ரெயில் நிலையம், காலை, 5:03மணிக்கு திருப்பூர் வந்து செல்லும். திப்ருகர்-கன்னியாகுமரி ரெயில் வெள்ளிக்கிழமை அன்று திருப்பூருக்கு காலை 9:43மணிக்கும் கோவைக்கு காலை 10:42மணிக்கும் வந்து செல்லும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ×