என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு முகாம்"

    • சிறப்பு முகாம் அடுத்த மாதம் 12, 13, 26, 27-ந்தேதி ஆகிய 4 நாட்கள் நடைபெற உள்ளது.
    • மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குசாவடி மையங்களில் வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், தொகுதிக்கு உள்ளேயே முகவரி மாற்றம் செய்தல் ஆகியவற்றுக்கான படிவங்களை பூர்த்தி செய்து அளிக்கலாம்.

    இதற்கான சிறப்பு முகாம் அடுத்த மாதம் 12, 13, 26, 27-ந்தேதி ஆகிய 4 நாட்கள் நடைபெற உள்ளது. அந்த மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குசாவடி மையங்களில் வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    இந்த சிறப்பு முகாம் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கடிதம் அனுப்பி உள்ளார்.

    • கலெக்டர், எம்.எல்.ஏ. பங்கேற்பு
    • நலத்திட்ட உதவிகள் வழங்கினார்

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து விதமான மறுவாழ்வு உதவிகள் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்யவும், அரசின் மற்ற துறைகளின் நலத் திட்டங்களை மாற்றுத்திறனாளிகள் அறிந்து கொள்ளவும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

    அதன்படி சோளிங்கர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திற னாளிகளுக்கான ஒருங்கிணைந்த நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

    இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் கலைக்குமார் தலைமை தாங்கினார். நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் முன்னிலை வகித்தனர். கலெக்டர் பாஸ்கர பாண்டியன், சோளிங்கர் முனிரத்தினம் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்து பேசினர்.

    இதில் ஒன்றிய துணை தலைவர் பூங்கொடி ஆனந்தன், மாவட்ட குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் தகரகுப்பம் முனியம்மாள் பிச்சாண்டி, வெங்குப்பட்டு ராமன், புலிவலம் நதியாமதன்குமார், சோளிங்கர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரன், மண்டல துணை தாசில்தார் வெங்கடேசன், விஏஓ ராஜகோபால், ஒன்றிய குழு உறுப்பினர் முனியம்மாள் பிச்சாண்டி மற்றும் சண்முகம், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைத்திட படிவம்-6ல் பூர்த்தி செய்து வழங்கலாம்.
    • இந்த மாதம் 12, 13, 26, 27 சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் சிறப்பு முகாமில் விண்ணப்பத்தை நேரில் வழங்கலாம்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளிலும் வரும் 2023 ஜனவரி 1-ந்தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த பணி தற்போது நடந்து வருகிறது.

    அன்றையதினம் 18 வயது பூர்த்தி அடையும் ஒவ்வொருவரும் புதிதாக பெயர் சேர்ப்பதற்கு படிவம்-6, பெயர்நீக்கம் செய்ய படிவம்-7ல் பூர்த்தி செய்யவும். வாக்காளர் பட்டியலில் உள்ள எழுத்து பிழை மற்றும் முகவரி மாற்றம் மற்றும் ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் ஒரே பாகத்தில் இருந்து மற்றொரு பாகத்திற்கு விலாசம் மாற்றி பதிவு செய்ய விரும்புவோர் படிவம்-8 போன்றவற்றை பூர்த்தி செய்து தங்களது குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள வாக்குச்சாவடிகளில், வரும் 9-ந்தேதி முதல் படிவம் வழங்கலாம். மேலும் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைத்திட படிவம்-6ல் பூர்த்தி செய்து வழங்கலாம். மேலும் இந்த மாதம் 12, 13, 26, 27 சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் சிறப்பு முகாமில் விண்ணப்பத்தை நேரில் வழங்கலாம்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழக அரசின் “நான்முதல்வன்” திட்டத்தின் கீழ் எச்.சி.எல். தொழில் நுட்பநிறுவனம் மூலம் பயிற்சி வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது.
    • சிறப்பு முகாம் காலை 10மணிக்கு தொடங்கும்.

    திருப்பூர் :

    தமிழக அரசால் அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில், 2021 மற்றும் 2021 -2022 ம் கல்வியாண்டில் 12 ம் வகுப்பு முடித்த மாணவர்களில் கணிதம் மற்றும் வணிக கணிதத்தில் 60 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தமிழக அரசின் "நான்முதல்வன்" திட்டத்தின் கீழ் எச்.சி.எல். தொழில் நுட்பநிறுவனம் 'Tech Bee"- Early Career Training Programமூலம் பயிற்சி அளித்து முழுநேர பணிவாய்ப்பு மற்றும் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி வாய்ப்பினை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது.

    இதன்படி, பள்ளி மாணவர்கள் பயன்பெறும் பொருட்டு கீழ்க்கண்ட பட்டியல் படி சிறப்பு முகாம் பள்ளி மாணவர்களுக்கு நடைபெறவுள்ளது.வருகிற 7-ந்தேதி திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் பள்ளி, 8-ந்தேதி பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 9-ந்தேதி தாராபுரம் என்.சி.பி.நகரவை மேல்நிலைப்பள்ளி, 10-ந்தேதி உடுமலை பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் சிறப்பு முகாம் நடக்கிறது. காலை 10மணிக்கு முகாம் தொடங்கும். இத்தகவலை கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார். 

    • காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கடன் திட்டங்கள் குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது.
    • கல்விச் சான்றிதழ் நகல், திட்ட அறிக்கை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட முன்னோடி வங்கி, மாவட்ட தொழில் மையம், தாட்கோ அலுவலகம் மூலம் திருப்பூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் குறிப்பிட்ட தினங்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஒன்றிய மற்றும் மாநில அரசின் சுயவேலைவாய்ப்பிற்கான கடன் திட்டங்கள், சமூக பாதுகாப்பு திட்டங்கள், மானியத்துடன் கூடிய சிறு குறு தொழிற் கடன்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின் தொழில் முனைவோருக்கான அரசின் கடனுதவி திட்டங்கள், உணவு பதப்படுத்துதல் குறித்த தொழில் விபரங்கள், ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது.

    இந்த சிறப்பு முகாம்கள் வருகிற 11-ந் தேதி தாராபுரம் , 14-ந் தேதி பல்லடம், 15-ந் தேதி உடுமலைப்பேட்டை, 16-ந் தேதி பொங்கலூர், 19-ந் தேதி அவிநாசி, 21-ந் தேதி மடத்துக்குளம், 23-ந் தேதி, வெள்ளகோவில், 24-ந் தேதி குண்டடம், 25-ந் தேதி காங்கேயம், 28-ந் தேதி ஊத்துக்குளி, 29-ந் தேதி மூலனூர், 30-ந் தேதி குடிமங்கலம் ஆகிய வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் நடைபெற உள்ளது.

    மாவட்ட தொழில் மையம், தாட்கோ மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலமாக அரசு மானியத்துடன் கடன் பெற விரும்புவோர் ஆதார் கார்டு நகல், சாதிச் சான்றிதழ் நகல், கல்விச் சான்றிதழ் நகல், திட்ட அறிக்கை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். தொழில் முனைவோர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர், வர்த்தகப் பெருமக்கள், மற்றும் பொதுமக்கள் அனைவரும் மேற்படி முகாமில் கலந்து கொண்டு பயனடையும்படி மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.  

    • சிறப்பு முகாம் வருகின்ற 12, 13, 26 மற்றும் 27-ந்தேதி ஆகிய நாட்களில் நடைபெறுகின்றது.
    • வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகள், தொகுதி மாற்றம் மற்றும் முகவரி மாற்றம் செய்ய படிவம் 8-ம் பதிவு செய்து வாக்குச்சாவடிகளில் அளிக்கலாம்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணி நடைபெற்று வருகிறது. இதனால் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதியன்று 18 வயது பூர்த்தி அடையும் ஒவ்வொருவரும் இதுவரையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் இருந்தால் புதியதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

    அதன்படி பெயர் சேர்க்க படிவம் 6-ம், பெயர் நீக்கம் செய்ய படிவம் 7-ம், வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகள், தொகுதி மாற்றம் மற்றும் முகவரி மாற்றம் செய்ய படிவம் 8-ம் பதிவு செய்தும் வாக்குச்சாவடிகளில் அளிக்கலாம்.

    இதற்கான முகாம் பகுதிகளில் அமைந்துள்ள கல்வி நிலையங்களில் வருகின்ற 12, 13,26 மற்றும் 27-ந் தேதி ஆகிய நாட்களில் நடைபெறுகின்றது. இதையொட்டி, முகாம்களுக்கு நேரில் வந்து மேற்கூரிய உரிய படிவத்தினை பெற்று பூர்த்தி செய்து உரிய சான்று ஆவணங்களுடன் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் சமர்பிக்க வேண்டும் இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    மேற்கண்ட தகவலை காஞ்சிபுரம் கலெக்டர் மா.ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    • வாக்குச் சாவடிகளில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் செய்ய, ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைக்க சிறப்பு முகாம்
    • புதிய வாக்களர் சேர்ப்பதில் எவருடைய பெயரும் விட்டு விடாத வகையில் அ.தி.மு.க.வினர் தனி கவனம் செலுத்த வேண்டும்

    நாகர்கோவில் :

    அ.தி.மு.க. அமைப்பு செய லாளர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்திய தேர்தல் ஆணை யத்தின் உத்தரவுபடி 1-1-2023 தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது நிறைவ டைந்தவர்கள், 18 வயது நிறைவடைந்து இது வரை வாக்காளர் பட்டி யலில் பெயர் சேர்க்காத வர்கள் 17 வயது பூர்த்தி யடைந்த இளம் வாக்கா ளர்கள் வாக்காளர் பட்டி யலில் தங்கள் பெயரை சேர்த்துக் கொள்ளும் வகையில் இன்று 9-ந்தேதி முதல் டிசம்பர் 8-ந்தேதி வரை சிறப்பு சுருக்கமுறை திருத்தம் முகாம்கள் நடக்க உள்ளது.

    அதன்படி இம்மாதம் (நவம்பர்) 12-ந்தேதி சனிக்கிழமை, 13-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை 26-ந்தேதி சனிக்கிழமை, 27-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் வாக்க ளிக்க கூடிய வாக்குச் சாவடிகளில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் செய்ய, ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைக்க சிறப்பு முகாம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெற உள்ளது.

    இந்த சிறப்பு முகாமில் தகுதியான நபர்கள் அருகில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்க படிவம் 6-ஐ வழங்கியும், ஏற்கனவே வாக்காளர்களாக பதிவு செய்துள்ளவர்கள் முகவரி மாற்றம், பெயர் திருத்தம், வேறு தொகுதிக்கு மாற விரும்பினால் படிவம் 8-ஐ பூர்த்தி செய்தும், ஆதார் எண்ணெய் வாக்காளர் பட்டியல் என இணைத்திட படிவம் 6பி-ஐ பூர்த்தி செய்தும் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் வழங்க லாம்.

    4 நாட்கள் நடக்கும் இச்சிறப்பு முகாம்களில் குமரி மாவட்டத்தை சார்ந்த ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி கிளைக் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் தங்கள் பகுதிகளில் உள்ள 18 வயது நிரம்பிய வர்களையும், வாக்கா ளர் பட்டி யலில் இதுவரை பெயர் சேர்க்காத வரையும் அடையாளம் கண்டு வாக்காளர் பட்டியலை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் இதில் புதிய வாக்களர் சேர்ப்பதில் எவருடைய பெயரும் விட்டு விடாத வகையில் அ.தி.மு.க.வினர் தனி கவனம் செலுத்த வேண்டும்

    இவ்வாறு அந்த அறிக்கை யில் கூறியுள்ளார்.

    • 1.1.2023-ஐ தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் நடைபெற்று வருகிறது
    • 12, 13 மற்றும் 26, 27 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிக்காட்டுத லின்படி 1.1.2023-ஐ தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் நடைபெற்று வருவதன் தொடர்ச்சியாக தொகுதி வாரியான வரைவு வாக்காளர் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

    எனவே சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தில் 18 வயது பூர்த்தியானவர்கள் தங்களது பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், பெயர் நீக்கம், தொகுதி- முகவரி மாற்றம் மற்றும் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்தல் தொடர்பாக 8-12-2022 வரை கோரிக்கை மற்றும் ஆட்சேபனைகளுக்கான படிவங்களான 6, 6ஏ, 6பி, 7 மற்றும் 8 வழங்கலாம்.

    மேலும் தங்களது பகுதியில் அமைந்துள்ள வாக்குச் சாவடிகளில் 12, 13 மற்றும் 26, 27 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. எனவே இந்த முகாமை குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆதார் எண் இணைப்பதிலும் வாக்காளர்கள் ஆர்வம்
    • வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 8-ந் தேதி வெளியிடப்பட்டது.

    நாகர்கோவில்:

    தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் தொடர் திருத்தம் பணி கள் முடிவ டைந்ததை தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டி யல் கடந்த 8-ந் தேதி வெளியிடப்பட்டது.

    குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர் கோவில், குளச்சல், விளவங் கோடு, பத்மநாப புரம், கிள்ளியூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில், இங்கு மொத்தமாக 15 லட்சத்து 50 ஆயிரத்து 776 வாக்காளர்கள் இருப்பதாக வரைவு வாக்காளர் பட்டியலில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    தொடர்ந்து 1.1.2023 அன்று 18 வயது பூர்த்தியாகும் புதிய வாக்காளர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் சிறப்பு முகாம் 12 மற்றும் 13-ந் தேதிகளில் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

    மாவட்டத்தில் 1695 வாக்குச்சாவடிகளிலும் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. பெயர் சேர்த்தல் மட்டுமின்றி நீக்கம் செய்தல் திருத்தம் போன்ற பணிகளும் முகாமில் செய்யப்பட்டன. எனவே பலரும் முகாமில் பங்கேற்றனர்.

    புதிய வாக்காளர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இணைக்க ஆர்வத்துடன் வந்தனர். இதனால் அனைத்து முகாம்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.

    வாக்காளர் பட்டியலை ஆதார் எண்ணுடன் இணைக்க ஏற்கனவே அறிவு றுத்தப்பட்டு உள்ளது. அதன்படி பலரும் ஆதார் எண்ணை இணைத்து வரு கின்றனர். குமரி மாவட் டத்தில் இதுவரை 69 சதவீதம் பேரே வாக்கா ளர் பட்டி யலுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

    சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைப்ப திலும் பொதுமக்கள் ஆர்வம் காட்டினர். நாளை(13-ந் தேதி)யும் இந்த முகாம் நடக்கிறது,

    • சிவகிரி சுற்றியுள்ள பகுதிகளில் ரத்ததான விழிப்புணர்வு முகாம் போன்ற பல்வேறு முகாம்களில் மாணவர்கள் ஈடுபட்டனர்,
    • நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சுபஜோதி நன்றி கூறினார்.

    சிவகிரி:

    சிவகிரி சேனைத் தலைவர் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் தொடக்க விழா நடைபெற்றது.

    தொடர்ந்து சிவகிரி மலைக்கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் உழவாரப்பணி, ரத்ததான விழிப்புணர்வு முகாம், உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு முகாம், தகவல் தொழில்நுட்ப விழிப்புணர்வு முகாம், வழிகாட்டுதல் பற்றிய விழிப்புணர்வு முகாம், சட்டம் ஒழுங்கு விழிப்புணர்வு முகாம், மரம் நடுதல் ஆகிய பணிகளில் மாணவர்கள் ஈடுபட்டு வந்தனர். பள்ளியின் வளாகத்தில் நிறைவு விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு சேனைத் தலைவர் மகாஜன சங்கத்தின் தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் தங்கேஸ்வரன், துணைத் தலைவர் மூக்கையா என்ற கலைஞர், பொருளாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் சக்திவேலு வரவேற்று பேசினார்.

    நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சுபஜோதி நன்றி கூறினார்.இந்நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணித் திட்ட உதவி அலுவலர் பாண்டி, கல்விக்குழு மற்றும் அறப்பணிக்குழு உறுப்பி னர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • புதிதாக பெயர் சேர்க்கவும், பெயர் மற்றும் முகவரி திருத்தம் செய்யவும் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற்றது.
    • தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் தலைமையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

    சிவகிரி:

    சிவகிரி பேரூராட்சி பகுதியில் 24 மையங்களில் வாக்காளர் பெயர் பட்டியலில் விடுபட்டவர்கள், புதிதாக பெயர் சேர்க்கவும், பெயர் மற்றும் முகவரி திருத்தம் செய்யவும் நடைபெறும் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற்றது.

    முகாம்களில் நடக்கும் பணிகளையும், வாக்குசாவடி முகவர்கள் மேற்கொண்டு வரும் பணிகளையும் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் தலைமையில், மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளரும் சிவகிரி பேரூர் செயலாளருமான செண்பகவிநாயகம் முன்னிலையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் இறப்பு, இரட்டை பதிவுகள், இடம் மாறியவர்கள் விபரம் முக்கியமாக அறிவுறுத்தப்பட்டது.

    முகாமில் அவைத்தலைவர் துரைராஜ், வாக்கு சாவடி முகவர்கள் வீரமணி, ரூபன் குமார், கணேசன், பிச்சை மணி, மாரித்துரை, ராமசந்திரன், இளையராஜா, மதுரை வீரன், வீரபாண்டியன், திருமலைக்குமாரசாமி, அனந்தபிள்ளை, கவுன்சிலர்கள் கிருஷ்ணலீலா, முத்துலெட்சுமி தங்கராஜ், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் கார்த்திக், வார்டு செயலாளர்கள், நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • திருப்பூர் மாநகராட்சி 60 வார்டுகள் கொண்ட நான்கு மண்டலங்களாக, மண்டலம் ஒன்றுக்கு 15 வார்டுகளாக செயல்பட்டு வருகிறது.
    • கணினி வரி வசூல் மையங்களில் பணமாகவோ அல்லது காசோலை மூலமாகவோ வரி மற்றும் கட்டணங்கள் செலுத்தலாம்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாநகராட்சி 60 வார்டுகள் கொண்ட நான்கு மண்டலங்களாக, மண்டலம் ஒன்றுக்கு 15 வார்டுகளாக செயல்பட்டு வருகிறது. 4 மண்டலங்களிலும் கீழ்கண்டவாறு சொத்துவரி, காலியிட வரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, பாதாள சாக்கடை கட்டணம், திடக்கழிவு மேலாண்மை கட்டணம், மற்றும் குத்தகை இனங்கள் ஆகியவை ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து வார நாட்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மைய அலுவலக கணிணி வரி வசூல் மையம், நான்கு மண்டல அலுவலகங்கள், குமரன் வணிக வளாகம், செட்டிபாளையம், தொட்டிபாளையம், நெருப்பெரிச்சல், மண்ணரை முத்தணம்பாளையம், வீரபாண்டி, முருகம்பாளையம், ஆகிய கணினி வரி வசூல் மையங்களில் பணமாகவோ அல்லது காசோலை மூலமாகவோ வரி மற்றும் கட்டணங்கள் செலுத்தலாம்.

    மேலும் எளிய முறையில் இணையதளம் வழியாக வரி மற்றும் கட்டணங்கள் செலுத்தலாம். இணையதள முகவரி Use Quick Payment" or Register & Login" to. https://tnurbanepay.tn.gov.in.

    இவற்றில் சொத்துவரி இனத்தில் 2022-23ம் ஆண்டுக்கு நிலுவை நடப்பு மொத்த கேட்பு ரூ.92.16 கோடியும், காலியிட வரி இனத்தில் 2022-23ம் ஆண்டுக்கு நிலுவை நடப்பு மொத்த கேட்பு ரூ.7.82 கோடியும், தொழில் வரி இனத்தில் 2022-23ம் ஆண்டுக்கு நிலுவை நடப்பு மொத்த கேட்பு ரூ.2.32 கோடியும், குடிநீர் கட்டண இனத்தில் 2022-23ம் ஆண்டுக்கு நிலுவை நடப்பு மொத்த கேட்பு ரூ.18.44 கோடியும். குத்தகை இனத்தில் 2022-23ம் ஆண்டுக்குநிலுவை நடப்பு மொத்த கேட்பு ரூ.8 கோடியும் திடக்கழிவு மேலாண்மை கட்டண இனத்தில் 2022-23ம் ஆண்டுக்கு நிலுவை நடப்பு மொத்த கேட்பு ரூ.5.14 கோடியும், பாதாள சாக்கடை கட்டண இனத்தில் 2022-23ம் ஆண்டுக்கு நிலுவை நடப்பு மொத்த கேட்பு ரூ.1.75 கோடியும் வசூல் நிலுவையாக உள்ளது.

    திடக்கழிவு மேலாண்மை கட்டண இனத்தில் வரி திருத்தம் செய்யப்பட்டு கேட்புகள் சரி செய்யப்பட்டு வருவதால் நிலுவை தொகையை செலுத்தவும்.மேலும் 17.11.2022 அன்று அனைத்து மண்டலங்களிலும் நடக்கவிருக்கும் சிறப்பு முகாம்களில் சொத்துவரி மற்றும் காலியிடவரி வரி விதித்தல் தொடர்பிலும், பெயர் மாறுதல்கள் செய்தல் தொடர்பிலும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, உரிய காலகெடுவிற்குள் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதால், பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

    ×