search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓய்வூதியம்"

    • பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தி, முக அடையாளம் வைத்தும், டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது.
    • சேவை கட்டணமாக ரூ.70 தபால்காரரிடம் செலுத்த வேண்டும்.

    சென்னை:

    ஓய்வூதியர்கள் தொடர்ந்து ஓய்வூதியம் பெற தங்கள் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டி உள்ளது. இதற்காக 'இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி' திட்டத்தின் கீழ் ஓய்வூதியர்களின் வீட்டு வாசலிலேயே, பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தி, முக அடையாளம் வைத்தும், டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது.

    ஓய்வூதியர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார், செல்போன் எண், பி.பி.ஓ.எண் மற்றும் ஓய்வூதிய வங்கி கணக்கு விவரங்களை தெரிவித்து, கைவிரல் ரேகை பதிவு செய்தால், ஒரு சில நிமிடங்களில் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும். இதற்கு சேவை கட்டணமாக ரூ.70 தபால்காரரிடம் செலுத்த வேண்டும்.

    அதேபோல் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சுயநிதி பள்ளிகளில் மாநில பாடதிட்டத்தில் தமிழ் வழியில் 3 முதல் பிளஸ்-2 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, மத்திய, மாநில அரசுகள் வழங்கும் கல்வி உதவித் தொகைகள், ஊக்கத்தொகைகள் பெறுவதற்கு ஆதார் எண் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு அவசியமாகும்.

    5-ம் வகுப்பு வரை படிப்பவர்களுக்கு தபால் துறை கணக்கும், 6 முதல் பிளஸ்-2 வரை படிப்பவர்களுக்கு தபால் துறை வங்கி கணக்கும் தொடங்க தமிழக பள்ளிக்கல்வி துறையுடன் தபால் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. எனவே பள்ளிகளிலோ அல்லது தபால் நிலையங்களில் கணக்குகளை தொடங்கலாம் என்று முதன்மை தபால் துறை தலைவர் சுவாதி மதுரிமா தெரிவித்துள்ளார்.

    • ஓய்வு பெற்ற ஊழியர்களது பணிக்கால பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்.
    • ஓய்வு பெற்ற ஊழியர்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகி உள்ளனர்.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு போக்கு வரத்து ஊழியர் சம்மேளன மாநில நிர்வாகிகள் கூட்டம் விழுப்புரத்தில் சம்மேளன தலைவர் சவுந்தரராசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    போக்குவரத்துக் கழகங்களின் நிதிப்பற்றாக் குறையை 2022-ம் ஆண்டு முதல் ஈடுசெய்வது என அரசாணை வெளியிடப்பட்டு அதற்கான பரிந்துரைகளும் அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. ஆனால் இதுவரை உரிய நிதி ஒதுக்கப்படவில்லை. அதை அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

    போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட தொகைகள் சுமார் ரூ.15 ஆயிரம் கோடியை போக்குவரத்துக் கழகம் செலவு செய்துவிட்டது.

    இதன் காரணமாக பணி ஓய்வின் போது தொழிலாளர்கள் வெறும் கையோடு வீட்டுக்கு அனுப்பப்படுகின்றனர். கடந்த 2022 டிசம்பர் மாதத்தில் இருந்து பணி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணிக்கால பலன்கள் வழங்கப்படவில்லை. சுமார் 18 மாதங்களாக 6000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். எனவே ஓய்வு பெற்ற ஊழியர்களது பணிக்கால பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்.

    மேலும் கடந்த 102 மாதங்களாக அகவிலைப்படி உயர்வும் மறுக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஓய்வூதியமும் உயர்த்தப்படவில்லை. இந்நிலையில் 90 ஆயிரம் ஓய்வு பெற்ற ஊழியர்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகி உள்ளனர். அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும்.

    புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

    போக்குவரத்துக் கழகங்களில் கடந்த பல ஆண்டுகளாக வாரிசு வேலை முறையாக வழங்கப்படவில்லை. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாரிசுதாரர்கள் அனைவருக்கும் வாரிசு வேலை வழங்கப்பட வேண்டும்.

    ஊதிய ஒப்பங்நதம் நிறைவு பெற்று 9 மாத காலம் முடிந்துவிட்டது. எனவே ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை துவக்க வேண்டும்.

    பணியாளர்களை காண்ட்ராக்ட் முறையில் நியமனம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது.

    இவற்றை தொழிலா ளர்கள் மத்தியில் விளக்கி சொல்லும் அடிப்படையில் ஜூன் 10-ந் தேதி முதல் 15-ந் தேதி முடிய வாயிற்கூட்டங்கள் நடத்துவது என்றும் ஜூன் 24-ந் தேதி காலை 10 மணி முதல் 25-ந் தேதி காலை 10 மணி வரை தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் 24 மணிநேரம் உண்ணா விரதம் மேற்கொள்வது என முடிவு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    • மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியமாக பெற்று வந்தேன். ஆனால் கடந்த 2 மாதங்களாக அது எனக்கு வரவில்லை.
    • பஸ், ஆட்டோ ரிக்ஷாவில் செல்ல பணம் இல்லாததால் 2 கிலோ மீட்டர் தூரம் ஊர்ந்து செல்ல முடிவு செய்தேன் என்று கண்ணீருடன் கூறினார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் தாவனகரே ஹரிஹார் தாலுக்காவை சேர்ந்தவர் கிரிஜாம்மா (77). இவர் பிறவியிலேயே உடல் ஊனமுற்றவர். இவர் தபால் அலுவலகம் மூலம் கடந்த 2012-ம் ஆண்டு முதல் மாதம் தோறும் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் திடீரென கிரிஜம்மாவுக்கு ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது வீட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குனிபெலேகெரே கிராமத்தில் உள்ள தபால் அலுவலகத்திற்கு கிரிஜம்மா கால்கள் செயல்படாத நிலையில் 2 கைகள் மூலம் ஊர்ந்து வந்தார்.

    அங்கிருந்த அதிகாரிகளிடம் ஓய்வூதியம் வரவில்லை என்று கூறியுள்ளார். ஆனால் அவர்கள் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. 2 கிலோ மீட்டர் தூரம் ஊர்ந்து வந்ததால் அவரின் கால்களில் கொப்பளங்கள் இருந்தது.

    இது குறித்து கிரிஜம்மா கூறும்போது:- மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியமாக பெற்று வந்தேன். ஆனால் கடந்த 2 மாதங்களாக அது எனக்கு வரவில்லை. பஸ், ஆட்டோ ரிக்ஷாவில் செல்ல பணம் இல்லாததால் 2 கிலோ மீட்டர் தூரம் ஊர்ந்து செல்ல முடிவு செய்தேன் என்று கண்ணீருடன் கூறினார்.

    இதையடுத்து குனேபெலேகெரேவை சேர்ந்த ஒரு ஆஷா பணியாளர் அவரது நிலையை உள்ளூர் தாசில்தாரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். பின்னர் கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் கிரிஜம்மாவை சிகிச்சைக்காக ஹரிஹர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். இது கர்நாடக மாநிலம் முழுவதும் வைரலாக பரவியது.

    • ஓய்வூதியத்தை அரசே பொறுப்பேற்று வழங்க வேண்டும்.
    • 15-வது ஊதிய ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை தொடங்கி புதிய சம்பளம் வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அரசு போக்குவரத்துக் கழகங்கள் தனது சேவையில் 50 ஆண்டுகால பொன்விழாவை கண்டுள்ளது.

    போக்குவரத்து தொழிலாளர்கள் பணி ஓய்வு பெற்று சுமார் 90 ஆயிரம் பேர் உள்ளனர்.

    இவர்களுக்கு அரசு பொறுப்பேற்று வழங்கும் ஓய்வூதியம் கிடையாது. பிஎப் டிரஸ்ட் மூலம் வழங்கப்படும் ஓய்வூதியத்தை தான் பெற்று வருகின்றனர்.

    இவர்களின் ஓய்வூதியத்தை அரசே பொறுப்பே ற்று வழங்க வேண்டும்.

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 15- வது ஊதிய ஒப்ப ந்தம் குறித்து பேச்சுவார்த்தை தொடங்கி புதிய சம்பளம் வழங்க வேண்டும்.

    ஓட்டுனர், நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர் உள்ளிட்ட காலி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (வியாழக்கிழமை) மாநிலந்தழுவிய தொடர் முழக்க போராட்டம் திருச்சி போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பு நடைபெறுகிறது.

    இந்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திட கும்பகோணம், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, நாகப்பட்டினம் ஆகிய கழகங்களில் பணிபுரிந்து வரும் அனைத்து தொழிலாளர்களும், ஓய்வு பெற்ற அனைத்து ஓய்வூதியர்களும் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அகில இந்திய மாநாட்டில் வலியுறுத்தல்
    • தீபாவளி போனஸ் வழங்க தமிழக அரசை கேட்டுக் கொள்ளப்பட்டது

    கன்னியாகுமரி :

    அகில இந்திய கட்டுமான உழைக்கும் பெண்கள் மாநாடு கன்னியாகுமரியில் நடந்தது. அகில இந்திய தலைவர் ஹேமலதா தலை மை தாங்கி, மாநாட்டை தொடங்கி வைத்து பேசி னார். மாநில பொருளா ளர் ரூபி கொடியேற்றி வைத்தார். இந்த மாநாட்டில் அகில இந்திய பொதுச்செய லாளர் ஜோசப், முன்னாள் எம்.பி. பெல்லார்மின், முன்னாள் எம்.எல்.ஏ. லீமாரோஸ் உள்பட பலர் கலந்துகொண்டு பேசினர். முடிவில் மாநாட்டு வர வேற்பு குழு பொருளாளர் வேலம் நன்றி கூறினார்.

    மாநாட்டில் கட்டுமான பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க அரசை கேட்டுக் கொள்ளப்பட்டது. கட்டுமான பெண் தொழிலா ளர்களுக்கு பணியிடத்தில் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். கட்டுமான பெண் தொழிலாளர்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க தமிழக அரசை கேட்டுக் கொள்ளப்பட்டது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன

    • செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
    • குடும்ப ஓய்வூதியத்தை 30 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும்

    கன்னியாகுமரி :

    பொது இன்சூரன்சு ஓய்வு பெற்ற ஊழியர்கள் கூட்ட மைப்பின் அகில இந்திய செயற்குழு கூட்டம் கன்னியா குமரியில் 2 நாட்கள் நடந்தது. அகில இந்திய பொதுச் செயலாளர் பானர்ஜி தலைமை தாங்கினார். மண்டல மேலாளர் கோபி சங்கர், ஊழியர்கள் சங்க மதுரை மண்டல தலைவர் ஆறுமுக நயினார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓய்வு பெற்ற இந்தியன் வங்கி மேலாளர் பாரதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

    ஓய்வு பெற்ற ஊழியர்களின் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியத்தை 30 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். "மெடிக் கிளைம் பாலிசி"க்கான பிரிமியத்தை மாத சந்தாவாக பெற்று கொள்ள வேண்டும். அதற்கான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும். ஓய்வூதிய புத்தகம் வழங்க வேண்டும். மெடிக்கிளைம் காப்பீட்டு தொகையை உயர்த்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத் தில் நிறைவேற்றப்பட்டன.

    இந்த கூட்டத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஓய்வூதியர்களின் நலனுக்காக சிறப்பாக செயலாற்றியதற்காக மதுரை மண்டல செயல் தலைவர் சோமசுந்தரத்துக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மதுரை மண்டல செயலாளர் ரெங்கா, அமைப்பு செயலாளர் ராம சுப்பிரமணியன் உள்பட நாடு முழுவதும் இருந்து 100-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
    • 21 மாத ஊதிய மாற்ற நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அன்பழகன், சரவணன் மற்றும் சி.முத்துசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். கூட்டத்தில் ரமேஷ் , சரவணன், கணே சன், செந்தில்குமார் , செல்வ ம் , ரவிச்சந்திரன், பாலசு ப்ரமணியன், சித்ரா, வளர்மாலா, ராணி , அந்துவன்சேரல்ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் ஜாக்டோ-ஜியோ மாநில உயர்ம ட்டக்குழு முடிவின்படி, புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு பழைய பென்சன் திட்டத்தை கொண்டு வர வேண்டும் , சரண் விடுப்பு ஒப்படைப்பு மீண்டும் வழங்கிட வேண்டும்,

    உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும், அரசுத் துறைகளில் காலியாக உள்ள காலிப் பணியி டங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும், 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும், 2002 முதல் 2004 தொகுப்புஊதியத்தில் நியமனம் செய்யப்பட்ட பணிக்காலத்தை வரண்முறைசெய்திட வேண்டும் என்பது உள்ளி ட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி 1.11.23 அன்று நாகப்பட்டினம் அவுரி த்திடலில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்து வது என்று முடிவெ டுக்க ப்பட்டது. முடிவில் சத்து ணவு ஊழியர் சங்க மாவ ட்டச் செயலாளர் அருளே ந்திரன் நன்றி கூறினார்.

    • அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ரயில் நிலையம் முன்பு இன்று தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு மாவட்ட அமைப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    நிர்வாகிகள் உமா, லோகநாதன் ஜீவா, வீராச்சாமி, சோமு, அன்னையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் குமாரவேல், தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்கம் மாநில செயற்குழு சோமலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் கள வாக்குறுதி படி முறையான காலமுறை ஊதியம், முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் நிர்வாகிகள் அன்பழகன், லூர்து சாமி, ஜார்ஜ் ஸ்டீபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 70 வயது நிறைவு பெற்றவர்களுக்கு 10 சதவீத ஓய்வூதியத்தை உடன் வழங்க வேண்டும்.
    • ஏழை பயணிகளின் நலனை கருதி இலவச கழிவறை கட்ட வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட மூத்த குடிமக்கள் பேரவையின் 37-வது ஆண்டு விழா தஞ்சாவூர் பெசண்ட் அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மூத்த குடிமக்கள் பேரவை மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார்.

    முன்னதாக பேரவை துணைத்தலைவர் பழனி வேலு அனை வரையும் வரவேற்றார்.

    சங்கத்தின் சட்ட ஆலோசகர் வக்கீல் கோ.அன்பரசன், இணை செய லாளர் குருநாதன், பேரவை நிறுவனர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் 75 வயது நிரம்பியவர்களுக்கு மாவட்ட கருவூல அதிகாரி கணேஷ் குமார் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்.

    தொடர்ந்து, விளை யாட்டு போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பாரத் கல்விக்குழும நிர்வாக இயக்குநர் புனிதா கணேசன் பரிசுகள் வழங்கினார்.

    சிறப்பு விருந்தினராக தஞ்சை மருத்துக்கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன் கலந்து கொண்டார்.

    நிகழ்ச்சியில் மீனாட்சி ஆஸ்ப த்திரியின் மக்கள் தொடர்பு அலுவலர் மணிவாசகம், பொதுச்செயலாளர் சேதுராமன், பொருளாளர் சுப்ரமணியன், துணை தலைவர் திருமலை மற்றும் சங்க நிர்வாகிகள் எஸ்தர்தாஸ், துரைராஜன், அறிவழகன், அரிமா செல்வராசு, ஞானசேகர், தங்கவேலு, கோபாலகிருட்டிணன், அய்யனார், செண்பக லெட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் 70 வயது நிறைவு பெற்ற ஓய்வூதியர்களுக்கு 10 சதவீத ஓய்வூதியத்தை உடன் வழங்க வேண்டும், மூத்த குடிமக்களுக்கு கொரோனா காலத்திற்கு முன்பு வழங்கப்பட்டு வந்த ரெயில் பயண கட்டண சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும்,

    தஞ்சை மருத்துக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அரசு அலுவலர்களுக்கும், ஓய்வூதிய மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கும் தனி புற நோயாளிகள் பகுதியும், தனி உள் நோயாளிகள் பிரிவும் ஏற்படுத்த வேண்டும், புதிய, பழைய பஸ் நிலையங்களில் கட்டண கழிப்பிடம் மட்டுமே உள்ளது. ஏழை பயணிகளின் நலன் கருதி இலவச கழிவறை கட்டுவதுடன் அவற்றை சுகாதாரமாக பராமரிக்க பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
    • தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    நாகப்பட்டினம்:

    திருமருகலில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு திருமருகல் ஒன்றிய தலைவர் சவுந்தரராஜன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், தலைவர் குமார், பொருளாளர் திருவருட்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முன்னதாக மாவட்ட மகளிர் அணி நிர்வாகி ஜெயலட்சுமி வரவேற்றார்.

    மாநில தலைமை நிலை செயலர் ரமேஷ் கொள்கைகளை விளக்கி பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை சரி செய்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.

    பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

    இதில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • போக்குவரத்து தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.21 ஆயிரமாக வழங்க வேண்டும்.
    • பழைய, புதிய அகவிலைப்படி உயர்வுகள் ஓய்வூதியத்துடன் இணைத்து உயர்த்தி வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு கும்பகோணம் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனரிடம் ஏ.ஐ.டி.யூ.சி நிர்வாகிகள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    போக்குவரத்து தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளம் ரூ. 21ஆயிரமாக வழங்க வேண்டும். அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு 15 -வது ஊதிய ஒப்பந்தத்தில் அரசு ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்களுக்கு இணையாக தற்போது தொழிலாளர்கள் பெற்று வரும் அடிப்படைச் சம்பளத்தில் 25 சதவீத உயர்வு அளித்து, அடிப்படைச் சம்பளம் நிர்ணயம் செய்ய வேண்டும்.

    தொழிலாளர்களின் பணி நேரங்கள் சட்டப்படி வரைமுறை செய்ய வேண்டும். அரசு போக்குவரத்து கழகங்களுக்கு டோல்கேட் சுங்கவரி, டீசல் , இருகைவரி, வாகன வரிகள் ரத்து செய்ய வேண்டும். பழைய, புதிய அகவிலைப்படி உயர்வுகள் ஓய்வூதியத்துடன் இணைத்து உயர்த்தி வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

    இந்த நிகழ்வில் மாநிலச் செயலாளர் தில்லைவனம், மாநில துணைதலைவர் துரை.மதிவாணன், கும்பகோணம் கழக பொதுச் செயலாளர் தாமரைச்செல்வன், மாநில குழு உறுப்பினர் கஸ்தூரி, பொருளாளர் ராஜா மன்னன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
    • சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், பணிக்கொடை ஆகியவை வழங்க வேண்டும்.

    கும்பகோணம்:

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், ஓய்வூதியம், பணிக்கொடை ஆகியவை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்ட துணை தலைவர் ராமநாதன் தலைமையில் கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் சண்முகம், மாநில துணை தலைவர் நடராஜன், மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி, மாவட்ட பொருளாளர் அய்யப்பன், மாவட்ட துணை தலைவர் பாலசுப்பிரமணியன், வட்ட தலைவர் முருகையன், முகம்மது ஜாக்கீர், வட்ட துணை தலைவர் கீதா, வட்ட செயலாளர் சந்தானம், மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ×