என் மலர்
நீங்கள் தேடியது "நிதிஉதவி"
- உணவு பொருள் உற்பத்தி சார்ந்த தொழிலுக்கு நிதி உதவி வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- ஒரு குடும்பத்தில் ஒரு நபர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பிரதமரின் உணவுப் பதப்படுத்தும் குறு சிறு நிறுவனங்களுக்கான திட்டம் 2020-2021 ம் ஆண்டு முதல் 2024-2025ம் ஆண்டு வரை 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்பட உள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மூலம் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தலைமையின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஏற்கனவே உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு நிறுவ னங்களை வலுப்படுத்துதல் அல்லது புதிய நிறுவனங்கள் தொடங்குதல், குழு அடிப்படையில் பொது உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தருதல், வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதல் தொழில் நுட்ப பயிற்சிகள் போன்ற இனங்களுக்கு நிதி உதவி வழங்கப்படும்.
மேலும் தனி நபர், உணவு பதப்படுத்தும் தொழிலில் புதிதாக ஈடுபடும் குறு, சிறு தொழில் நிறுவனங்கள், சுய உதவி குழுக்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் போன்றவைகளுக்கும் நிதி உதவி வழங்கப்படும். ராமநாதபுரம் மாவட்டத்தில் உணவு பொருள் உற்பத்தி சார்ந்த தொழிலில் ஈடுபட விருப்பம் உள்ள நபர்கள் குறைந்த பட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
ஒரு குடும்பத்தில் ஒரு நபர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தகுதியான திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியம் பெற்று பயனடைய வழிவகை உள்ளது. இத்திட்டத்தின் கீழ் சுயதொழில் தொடங்கி பயன்பெற விரும்புவோர், https://pmfme.mofpi.gov.in என்ற இணைய தளம் வாயிலாக விண்ணப்பித்து பயனடையலாம்.
மேலும் விபரங்கள் அறிய பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், ராமநாதபுரம் என்ற முகவரியை அணுகவும். தகுதியுடைய பயனாளிகள் இத்திட்டத்தில் பயனடையலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- கல்வி பயிலும் வகையில் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கினாா்.
- நகராட்சி சுகாதார ஆய்வாளா் செல்வராஜ், வருவாய் ஆய்வாளா் செல்வகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனர்.
காங்கயம்:
காங்கயம், காா்மல் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருபவா் சி.அருள்ஜோதி. குடும்பத்தைவிட்டு தந்தை பிரிந்து சென்ற நிலையில் உடல் நலிவுற்ற தாயுடன் வசித்து வருகிறாா். வறுமை காரணமாக இவரால் கல்வியைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த காங்கயம் நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன், மாணவி தொடா்ந்து கல்வி பயிலும் வகையில் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கினாா்.
காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் காா்மல் மகளிா் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் சாந்தி அமலோா், நகராட்சி சுகாதார ஆய்வாளா் செல்வராஜ், வருவாய் ஆய்வாளா் செல்வகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனர்.
- மாற்றுதிறனாளி கிரிக்கெட்டில் இந்திய அணி சார்பில் களமிறங்கும் வீரருக்கு அமைச்சர் சார்பில் நிதிஉதவி வழங்கப்பட்டது.
- தற்போது இந்திய அணியின் கேப்டனாக உள்ளார்.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா கீழசெல்வனூர் கிராமத்தை சேர்ந்தவர் வினோத்பாபு(29). இவர் சிறுவயது முதல் மாற்றுத்திறனாளிக்கான சக்கர நாற்காலியில் கிரிக்கெட் விளையாடும் ஆர்வம் கொண்டு தமிழக அளவில் விளையாடி பல பரிசுகளை பெற்றுள்ளார். தற்போது இந்திய அணியின் கேப்டனாக உள்ளார். வருகிற 26-ந் தேதி லண்டனில் நடைபெற உள்ள உலகக்கோப்பை சக்கர நாற்காலி போட்டியில் இந்தியா, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் அணிகள் கலந்து கொள்கின்றன. இதில் இந்தியா சார்பில் வினோத்பாபு தலைமையில் இந்திய அணி கலந்து கொள்கிறது. வறுமையில் வாடும் வினோத்பாபுவுக்கு லண்டன் செல்ல முதுகுளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான ராஜகண்ணப்பனிடம் உதவி கேட்டார்.
உடனடியாக அவர், முதுகுளத்தூர் சட்ட மன்ற அலுவலகம் மூலம் வினோத்பாபுவின் ஊருக்கு சென்று நிதி உதவி வழங்க உத்தரவிட்டார். இதையடுத்து வினோத்பாபுவிற்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் சார்பில் நிதியுதவியை தி.மு.க. கடலாடி வடக்கு ஒன்றிய செயலாளர் ஆறுமுகவேல் வழங்கி விளையாட்டில் வெற்றி பெற வாழ்த்தினார். அப்போது முதுகுளத்தூர் சட்டமன்ற அலுவலக ஊழியர்கள் சத்தியேந்திரன், டோனி, ரஞ்சித் ஆகியோர் உடனிருந்தனர்.
- தேவாலயங்களில் கூடுதல் வசதிகள் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- நிதி உதவி மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும்.
ஈரோடு:
தமிழ்நாட்டில் சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்துவ தேவால யங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு 2016-17-ம் ஆண்டு முதல் நிதியுதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது.
மேலும் கூடுதல் பணி மேற்கொள்ளவும், கட்டிடத்தின் வயதிற்கேற்ப மானியத்தொகை உயர்த்தியும் அரசு ஆணையிட்டுள்ளது.
அதன்படி தேவாலயங்களில் பீடம் கட்டுதல், கழிவறை வசதி அமைத்தல், குடிநீர் வசதிகள் உருவாக்கு தல் போன்ற வசதிகள் கூடுதலாக மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தேவாலய கட்டிடத்தின் வயதிற்கேற்ப மானியதொகையும் உயர்த்தப்பட்டுள்ளது. 10-15 வருடம் வரை இருப்பின் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
15-20 வருடம் வரை இருப்பின் ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாக உயர்த்தப்ப ட்டுள்ளது. 20 வருடங்க ளுக்கு மேலி ருப்பின் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழு பெறப்படும் விண்ணப்பங்களை அனைத்து உரிய ஆவணங்களுடன் பரிசீலித்து, கிறிஸ்துவ தேவாலயங்களை ஆய்வு மேற்கொள்ளப்படும்.
கட்டிடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மை யினர் நல இயக்குநருக்கு நிதி உதவி வேண்டி பரிந்துரை செய்யப்படும்.
நிதி உதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கிக்கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும்.
மேலும் விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் அலு வலக கூடுதல் கட்டிடத்தில் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அனுகலாம் என
ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
- விபத்தில் இறந்த 108 ஆம்புலன்ஸ் டிரைவருக்கு தொழிற்சங்க நிர்வாகிகள் நிதி உதவி வழங்கினர்.
- காளிதாஸ் குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர்.
மதுரை
கோவை மாவட்டம் வால்பாறை அரசு ஆஸ்பத்திரி முன்பு 108 ஆம்புலன்ஸ் டிரைவர் காளிதாஸ் (27) நேற்று உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். அவருக்கு மனைவி கீதா (24), மகன்கள் புகழ்அறிவு (3), கவி (1) ஆகியோர் உள்ளனர்.
விபத்தில் கணவனை பறிகொடுத்து நிற்கதியற்று நின்ற குடும்பத்திற்கு தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கம் முடிவு செய்தது. மாநில பொது செயலாளர் இருளாண்டி, பொருளாளர் கணேசன், துணை செயலாளர் உதய குமார், துணைத்தலைவர் குணா ஆகியோர் உடனடி யாக வால்பாறைக்கு புறப்பட்டுசென்றனர்.
அங்கு கோவை மாவட்ட தலைவர் பொய்யாமொழி மற்றும் தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகி களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
விபத்தில் இறந்த காளிதாசுக்கு தர்மபுரி சொந்த ஊராகும். உடலை அங்கு கொண்டு செல்வது என்று குடும்பத்தினர் முடிவு செய்தனர். இக்கட்டான சூழ்நிலையில் காளிதாஸ் குடும்பத்திற்கு, சங்கம் சார்பில் முதல் கட்டமாக ரூ. 37 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டது.
இதற்கான காசோ லையை நிர்வாகிகள் காளிதாஸ் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். இதனை காளிதாஸ் குடும்பத்தினர் கண்கலங்க பெற்றுக் கொண்டு நன்றி தெரிவித்தனர்.
- மின் கசிவின் காரணமாக வீடு முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது.
- பாதிக்கப்பட்டவர் குடும்பத்திற்கு நிதிஉதவி, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
தரங்கம்பாடி:
செம்பனார்கோயில் ஒன்றியம், இனையாளூர் ஊராட்சி வடகரை புதுத்தெருவை சேர்ந்த விவசாயி எபி. இவரது வீடு மின் கசிவின் காரணமாக வீடு முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட எபி குடும்பத்திற்கு மயிலாடுதுறை மாவட்ட தேசிய சட்ட உரிமை கழகம் சார்பில் நிதி உதவி, மளிகை பொருட்களை மாவட்ட செயலாளர் சங்கரலிங்கம் வழங்கி ஆறுதல் கூறினார்.
அப்போது மாவட்ட இளைஞரணி செயலாளர் ஸ்டாலின், துணை செயலாளர் வெங்கட்ராமன், மகளிர் அணி மாவட்ட செயலாளர் சங்கீதா, மயிலாடுதுறை தெற்கு ஒன்றிய செயலாளர் பாரதி என்கிற பாரதிராஜா, நகர மன்ற செயலாளர் மணி கண்ட பிரபு, சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் லியாத்அலி, செம்பை ஒன்றிய செயலாளர் ஜாபர்சாதிக் , ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- கடந்த 14.3.2023 தேதி ஈரல் புற்றுநோயால் பாதிக்க ப்பட்டு மரணமடைந்தார்.
- ரூ.9 லட்சத்திற்கான காசோலையை போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசு பாதம் வழங்கினார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட காவல்துறையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த செந்தில்குமார் கடந்த 14.3.2023 தேதி ஈரல் புற்றுநோயால் பாதிக்க ப்பட்டு மரணமடைந்தார்.
அவரது குடும்பத்துக்கு உதவிடும் வகையில் இவருடன் 1993-ம் ஆண்டு பணியில் சேர்ந்த மாநில முழுவதும் உள்ள காவலர்கள் அனைவரும் காக்கும் கரங்கள் குழு சார்பாக ரூ.7 லட்சத்து 56 ஆயிரம் நிதி திரட்டினர்.
மேலும் தருமபுரி மாவட்டத்தில் அவருடன் பணியில் சேர்ந்த போலீசார் ரூ.1 லட்சத்து 44 ஆயிரம் நிதி திரட்டினர்.
இவ்வாறு திரட்டப்பட்ட மொத்தம் ரூ.9 லட்சத்திற்கான காசோலையை மறைந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரின் மனைவி மஞ்சு, மகன்கள் சந்திரகுமார், சரண்குமார் ஆகியோரிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசு பாதம் வழங்கினார்.
அப்போது போலீஸ் அதிகாரிகள் மற்றும் செந்தில்குமாருடன் பணியில் சேர்ந்த காவலர்கள் உடன் இருந்தனர்.
- பாரத் கல்வி நிறுவனங்களின் சார்பில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவணுக்கு நிதிஉதவி வழங்கப்பட்டது.
- பாரத் கல்வி நிறுவனங்களில் பயின்ற மாணவன் நீட் தேர்வில் 558 மதிப்பெண்கள் பெற்று நாகப்பட்டிணம் மருத்துவ கல்லூரியில் இடம் பெற்றுள்ளார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற மாணவர் தமிழ்செல்வன். இவர் பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் எல்.கே.ஜி. முதல் பிளஸ்-2 வகுப்பு வரை பயின்று வந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து தமிழ்செல்வன் நீட் தேர்வுக்காக பயின்று வந்தார். தற்போது நடைபெற்று முடிந்த நீட் தேர்வில் 720க்கு 558 மதிப்பெண் பெற்று நாகப்பட்டிணம் மருத்துவ கல்லூரியில் இடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இவருக்கு பாரத் பள்ளியின் சார்பில் சிறப்பு கட்டண சலுகை வழங்கப்பட்டது. தற்போது நீட் தேர்வில் வெற்றி பெற்று நாகப்பட்டிணம் மருத்துவ கல்லூரியில் சேர தகுதி பெற்றுள்ளார்.
மேலும் அந்த மாணவன் தனது தந்தையை இழந்து ஏழ்மை நிலையில் உள்ளதை அறிந்து மாணவனுக்கு கல்லூரியின் சேர்க்கைக்காக பாரத் கல்வி நிறுவனங்களின் சார்பில் நிறுவனர் மணி ரூ.50 ஆயிரம் நிதிஉதவி மற்றும் கேடயம் வழங்கி வாழ்த்தினார்.
மேலும் அவர் பேசுகையில், எதிர்காலத்தில் மருத்துவ படிப்பு முடித்து ஏழை மக்கள், ஊனமுற்றோர் மற்றும் சமுதாயத்திற்கு சிறப்பான சேவை செய்திட வேண்டும் என அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் விஜயகுமார் மற்றும் துணை முதல்வர் நசீர் பாஷா ஆகியோர் உடனிருந்தனர்.
- பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்
- அமைச்சர்கள் எஸ்.எஸ். சிவசங்கர், சி.வி.கணேசன் ஆகியோர் காயமடைந்தோரை மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல்
தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரியலூர் மாவட்டம், வெற்றியூர் மதுரா, விரகாலூர் கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். விபத்து நடைபெற்ற இடத்திற்குச் சென்று. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த, போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகிய இருவரையும் அனுப்பி வைத்துள்ளேன். மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்து, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஐந்து நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு. அவர்களது குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
- ராமநாதபுரத்தில் டீ கடைக்காரருக்கு நிதிஉதவிகளை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்.
- டோனி, ரஞ்சித் மணிகண்டன் உள்பட பலர் உள்ளனர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டைமேடு பகுதியில் டீக்கடை வைத்தி ருப்பவர் சிவலிங்கம். இவர் நேற்று வழக்கமாக கடை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். இரவில் பெய்த கன மழை காரண மாக இவரது கடைக்கு அருகில் இருந்த மரம் ஒன்று சாய்ந்து டீக்கடையில் விழுந்தது.
இதில் இந்த கடை முற்றி லும் சேதமடைந்தது. இது குறித்து முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான ராஜ கண்ணப்பனுக்கு தெரிய வந்ததை அடுத்து பாதிக்க பட்ட சிவலிங்கத் திற்கு நிதிஉதவி வழங்க உத்தரவிட்டார்.
அதன்பேரில் கமுதி வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன், தலைமையில் கமுதி ஒன்றிய தலைவர் தமிழ்செல்வி போஸ் ஆகியோர் அமைச்சர் ராஜகண்ணப்பன் கொடுத்த நிதியுதவியை வழங்கினர்.அருகில் பொதுக்குழு உறுப்பினர் பசும்பொன் தனிக்கோடி, சட்டமன்ற அலுவலக ஊழியர்கள் சத்தியேந்திரன், டோனி, ரஞ்சித் மணிகண்டன் உள்பட பலர் உள்ளனர்.