search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிரோன்"

    • இரண்டு ரெயில்களின் பெட்டிகளும் தடம்புரண்டு மற்ற தண்டவாளங்களை ஆக்கிரமித்துள்ளன.
    • தடம்புரண்ட பெட்டிகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் விடிய விடிய தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    மைசூரிலிருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (12578) வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தது.

    அப்போது சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. சிக்னல் கோளாறு காரணமாக இவ்விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    இந்த விபத்தில், இரண்டு ரெயில்களின் பெட்டிகளும் தடம்புரண்டு மற்ற தண்டவாளங்களை ஆக்கிரமித்துள்ளன. இதனால், தடம்புரண்ட பெட்டிகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் விடிய விடிய தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், கவரப்பேட்டையில் ஏற்பட்ட ரெயில் விபத்து தொடர்பான ட்ரோன் காட்சிகள் வெளியாகியுள்ளது.

    • போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
    • அதிநவீன டிரோனை ஏவுகணை மூலம் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

    காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

    மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.

    இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 117 பணய கைதிகளை உயிருடன் மீட்டுள்ளது.

    அதேபோல், ஹமாஸ் ஆயுதக்குழுவினர்களால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பணய கைதிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. ஆனால், இன்னும் 100க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் ஹமாஸ் வசம் பணய கைதிகளாக உள்ளனர்.

    அதேவேளை, இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    இதனிடையே, இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

    ஹமாசுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அரபிக்கடல், செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும், இஸ்ரேல் மீதும் அவ்வப்போது ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதேபோல், செங்கடல் பகுதியில் பாதுகாப்பு, ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அமெரிக்க டிரோன்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், செங்கடலில் அமெரிக்காவுக்கு சொந்தமான டிரோனை ஹவுதி கிளர்ச்சியளர்கள் சுட்டு வீழ்த்தினர். எம்.கியூ-9 என்ற அதிநவீன டிரோனை ஏவுகணை மூலம் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

    • முருங்கப்பாக்கம் சந்திப்பு பகுதிகளில் டிரோனை பறக்க விட்டு ஆய்வு நடத்தினார்.
    • டிரோன் காட்சிகளை கொண்டு முடிவு செய்ய உள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி நகரப்பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருகிறது. பல இடங்களில் சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்ட போதிலும் பிரச்சனை தீர்ந்தபாடில்லை.

    குறிப்பாக மரப்பாலம் சந்திப்பு முதல் முருங்கப்பாக்கம் சந்திப்பு வரை உள்ள இ.சி.ஆர். சாலையில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை வேளைகளில் கடுமையான வாகன நெரிசல் ஏற்படுகிறது.

    இந்த பகுதியை கடக்க குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் ஆகிறது. அதற்கு காரணம், சாலையின் இருபுறமும் உள்ள குறுகலான தெருக்களுக்கு பொது மக்கள் கார் மற்றும் இருச்சக்கர வாகனங்களை குறுக்காக ரோட்டை மறித்து கடந்து செல்வதுதான்.

    இதனிடையே சமீபத்தில் அரியாங்குப்பம், முருங்கப்பாக்கம் பகுதியில் ஆய்வு நடத்திய கவர்னரின் கார் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதை தொடர்ந்து போக்குவரத்து போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர். இங்கு சாலை விரிவாக்கம் தான் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க ஒரே வழி என்ற போதிலும் தற்காலிகமாக மாற்று ஏற்பாடுகள் செய்ய வழி உள்ளதா? என்ற ஆய்விலும் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    இதுதொடர்பாக நேற்று இரவு 7 மணிக்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ், சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் மரப்பாலம் சந்திப்பு, முருங்கப்பாக்கம் சந்திப்பு பகுதிகளில் டிரோனை பறக்க விட்டு ஆய்வு நடத்தினார்.

    அந்த வழியாக வரும் வாகனங்கள், எங்கிருந்து எங்கு நோக்கி செல்கின்றன? என்பன போன்ற விவரத்தை அவர்கள் பதிவு செய்தனர்.

    குறிப்பாக முருங்கப்பாக்கத்தில் இருந்து கொம்பாக்கம் நோக்கி செல்லும் வாகனங்கள், மரப்பாலம் சந்திப்பில் இருந்து கொம்பாக்கம் நோக்கி வாகனங்களை மாற்று வழியில் செல்ல ஏற்பாடு செய்ய முடியுமா? என்பது தொடர்பாக அவர்கள் டிரோன் காட்சிகளை கொண்டு முடிவு செய்ய உள்ளனர்.

    • குகி- மெய்தி சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டு ஒரு வருடத்திற்கு மேல் அமைதி நிலை திரும்பவில்லை.
    • முதலமைச்சர் தொடர்பான ஆடியோ வெளியான நிலையில் தாக்குதல் என குகி சமூகத்தினர் குற்றச்சாட்டு.

    மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு சமூகத்தினருக்கு இடையிலான சண்டை கடந்த வருடம் தொடங்கிய நிலையில் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. மணிப்பூர் மாநிலத்தில் ஒரு அசாதாரண சூழ்நிலைதான் நிலவி வருகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள் மீண்டும் அமைதி நிலை திரும்ப முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

    இந்த நிலையில்தான் ஆயுதம் ஏந்தி போராடி வரும் குகி கிளர்ச்சிக்குழுவைச் சேர்ந்தவர்கள் நேற்று மக்கள் நிறைந்த இடத்தில் டிரோன்களை பயன்படுத்தி அதன்மூலம் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இல்லாத அளவில் டிரோன் பயன்படுத்தப்பட்டுள்ளதால் புலனாய்வுக்குழு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.

    மேலும், இந்த தாக்குதலில் ஈடுபட்ட நபர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. நேற்று நடைபெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒரு பெண் கொல்லப்பட்டுள்ளார். அவரது 12 வயது மகள், இரண்டு போலீசார் உள்ளிட்ட 9 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    டிரோன் ஒரு இடத்தில் பறந்ததாகவும் சிறிது நேரத்தில் அந்த இடத்தில் குண்டுகள் வெடிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    ஆயுதங்களுடன் இரண்டு டிரோன்கள் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீசார் தரப்பில் கூறப்படும் நிலையில், இந்த தாக்குதல் மேற்கு இம்பாலில் கங்போக்பியில் உள்ள நகுஜங் கிராமத்தில் இருந்து கடங்பாண்ட் வரை நடைபெற்றதாக தகவல் தெரிவிக்னின்றன.

    கடங்பாண்ட் பகுதியில் வசித்து வரும் மக்கள், வீடுகள் உள்ள பகுதியில் டிரோன் ஒன்று வெடிகுண்டுகளை போட்டதாக தெரிவித்துள்ளனர். குகி கிளர்ச்சியாளர்கள் உயர்தொழில் நுட்பம் ஆர்.பி.ஜி. (RPGs) டிரோன்களை பயன்படுத்துவதாக குற்றம்சாட்டப்படுகிறது. பொதுவாக டிரோன்கள் போர்களத்தில்தான் பயன்படுத்தப்படும். தற்போது மக்கள் வசிக்கும் இடத்தில் ஒரு கிளர்ச்சி குழுவால் பயன்படுத்தப்படுவது அதிகரிக்கப்பட்டு வருகிறது.

    கங்போக்பியை சேர்ந்த கங்பம் சுர்பாலா (வயது 31) என்ற பெண்மணி படுகாயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிக்கை பலனின்றி உயிரிழந்தார்.

    கங்போக்பி குகி சமூகத்தினர் அதிகமாக வாழும் பகுதி. மேற்கு இம்பால் மெய்தி சமூகத்தினர் அதிகமாக வாழும் பள்ளத்தாக்காகும்.

    இது தொடர்பாக மணிப்பூர் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஆயுதம் ஏதும் இல்லாத கிராம மக்கள் மீது டிரோன்கள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது துரதிருஷ்டவசமானது. குகி கிளர்ச்சியாளர்கள் தாக்கியதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். அமைதிக்கான அனைத்து முயற்சிகளையும் மாநில அரசு எடுத்து வரும் நிலையில், ஆயுதம் இல்லாத கிராம மக்கள் மீது இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல் மாநில அரசால் மிகவும் தீவிரமாக பார்க்கப்படுகிறது.

    இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குகி பயங்கரவாதிகள் பெண்ணை கொலை செய்துவிடட்னர் என மெய்தி சமூகத்தினர் குற்றம்சாட்டிய நிலையில், மெய்தி சமூகத்தினரைச் சேர்ந்தவர்கள் கங்போப்கியில் உள்ள கிராமத்தில் தாக்குதல் நடத்தினர்.

    உள்துறை அமைச்சகத்தின் குழு விசாரணை நடத்தியது. அதில் மணிப்பூர் நெருக்கடியை முதல்வர்தான் தொடங்கினார் என்பது நிரூபணம் ஆனது என்ற ஆடியோ வெளியானது. அதில் இருந்துதான் தாக்குதல் தொடங்கியதாக குகி சமூகத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இதற்கிடையே இந்த ஆடியோ தவறாக சித்தரிக்கப்பட்டது என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • உக்ரைன் பகுதிகள் மீது ரஷியா விடாமல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.
    • ரஷியாவின் ரோன்களின் தாக்குதலை முறியடிக்க 70 உக்ரைன் பெண்கள் பாதுகாப்பு படையில் சேர்ந்துள்ளனர்.

    ரஷியா - உக்ரைன் போர் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அண்மையில் உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷிய ராணுவம் டிரோன் தாக்குதலை ரஷியா நடத்தியது. இந்த டிரோன்களை தங்களின் ராணுவம் தாக்கி அழித்ததாக உக்ரைன் தெரிவித்திருந்தது.

    இந்த தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ரஷியாவின் சராதோவ் [Saratov] பகுதியில் உக்ரைன் டிரோன்களை ஏவி சரமாரியாகத் தாக்குதல் நடத்தியது. உக்ரைனின் 20 டிரோன்களை தாக்கி அழித்துள்ளதாக ரஷிய ராணுவம் தெரிவித்தது. டிரோன் விழுந்து சராதோவ் பகுதியில் உள்ள 38 மாடி குடியிருப்பு கட்டடம் தீப்பற்றி எரிந்தது.

    உக்ரைன் பகுதிகள் மீது ரஷியா விடாமல் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. ராட்சத மிசைல்கள் மற்றும் டிரோன்களை உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைன் பகுதிகள் மீது தாக்குதல்கள் நடந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் ரஷியாவின் டிரோன் தாக்குதலை முறியடிக்க உக்ரைன் பெண்கள் போர்க்களத்திற்கு வந்துள்ளனர். இந்த பெண்கள் குழு ரஷியாவின் டிரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

    ரஷியாவின் தாக்குதலை சமாளிக்க ஒவ்வொரு மாதமும் 10 ஆயிரம் உக்ரைன் ஆண்கள் ராணுவத்தில் சேர்க்கப்படுகின்றனர். அவர்கள் உக்ரைன் எல்லையை பாதுகாத்து வருகின்றனர். ஆண்களோடு கைகோர்த்து தற்போது பெண்களும் நாட்டை பாதுகாக்க முன்வந்துள்ளனர். ரஷியாவின் டிரோன் தாக்குதலை முறியடிக்க முதற்கட்டமாக 70 பெண்கள் பாதுகாப்புப் படையில் சேர்ந்துள்ளனர்.

    • ரஷியா நேற்று இரவு, பல கட்டங்களாக உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷிய ராணுவம் டிரோன் தாக்குதலை நடத்தி வருகிறது
    • மின்சார ஆற்றல் உள்கட்டமைப்பைக் குறிவைத்து ரஷியா மிசைல்களை ஏவி வருகிறது.

    ரஷியா நேற்று இரவு, பல கட்டங்களாக உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷிய ராணுவம் டிரோன் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த டிரோன்களை தங்களின் ராணுவம் தாக்கி அழித்ததாக உக்ரைன் தெரிவித்திருந்தது. இந்த தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ரஷியாவின் சராதோவ் [Saratov] பகுதியில் உக்ரைன் டிரோன்களை ஏவி சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைனின் 20 டிரோன்களை தாக்கி அழித்துள்ளதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது. டிரோன் விழுந்து சராதோவ் பகுதியில் உள்ள 38 மாடி குடியிருப்பு கட்டடம் தீப்பற்றி எரிந்தது.

    இந்நிலையில் உக்ரைன் பகுதிகள் மீது ரஷியா விடாமல் தாக்குதல் நடத்தி வருகிறது. ராட்சத மிசைல்கள் மற்றும் டிரோன்களை உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைன் பகுதிகள் மீது தாக்குதல்கள் நடந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

    இந்த தாக்குதல்களில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 37 பேர் காயமடைந்தனர். மேற்கு லுட்ஸ்க், கிழக்கு டினிப்ரோ மற்றும் தெற்கு சபோரிஜியா பகுதிகளில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. மின்சார ஆற்றல் உள்கட்டமைப்பைக் குறிவைத்து மிசைல்கள் ஏவப்பட்டுள்ளன.

    இதனால் நாட்டின் மிகப்பெரிய ஆற்றல் உற்பத்தி நிறுவனம் DTEK கீவ் உள்ளிட்ட தாக்குதலுக்கு உள்ளான 15 நகரங்களில் குறிப்பாக லெவிவ் [lviv] மின்சாரம் சேவைகளை நிறுத்தியுள்ளது. இதனை அந்த மாகாணத்தின் ஆளுநர் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் இந்த தாக்குதலால் தண்ணீர் விநோயாகம் முடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • ரஷியாவின் சராதோவ் [Saratov] பகுதியில் உக்ரைன் டிரோன்களை ஏவி சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளது
    • வானிலேயே தகர்க்கப்பட்ட டிரோன்களின் பாகங்கள் சராதோவ் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டடங்களின் மீது வவிழுந்து நொறுங்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது

    ரஷியா உக்ரைன் போர் கடந்த 2 ஆண்டுகளும் மேலாக நடந்து வரும் நிலையில் சமீபத்தில் உக்ரைன் படைகள் ரஷிய பகுதிகளுக்குள் நுழைந்தது தாக்குதல் நடத்தியது. ரஷியாவின் கூர்க்ஸ் உள்ளிட்ட பிராந்தியங்களை உக்ரைன் படைகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தன. இதனால் ரஷிய ராணுவம் பெரிய அளவிலான தாக்குதலுடன் பதிலடி கொடுக்க திட்டமிட்டுக் கொண்டிருந்தது.

    இந்நிலையில் இன்று அதிகாலை, 2 கட்டங்களாக உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷிய ராணுவம் டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த டிரோன்களை தங்களின் ராணுவம் தாக்கி அழித்ததாக உக்ரைன் தெரிவித்திருந்தது. இந்த சம்பத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ரஷியாவின் சராதோவ் [Saratov] பகுதியில் உக்ரைன் டிரோன்களை ஏவி சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைனின் 20 டிரோன்களை தாக்கி அழித்துள்ளதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது.

    இதனால் வானிலேயே தகர்க்கப்பட்டடிரோன்களின் பாகங்கள் சராதோவ் பகுதியில் உள்ள 38  மாடி குடியிருப்பு கட்டடத்தின் மீது விழுந்து நொறுங்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் பெண் ஒருவர் படுகாயடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.  இதற்கிடையில் சராதோவ் பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சராதோவ் சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் தடைபட்டுள்ளன.

    • அத்துடன் 1000 கி.மீட்டர் தூரம் வரை பறந்து இலக்கை தாக்கக்கூடியது.
    • மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் பறக்கும். மொத்தம் 120 கிலோ எடை கொண்டது.

    நவீன காலத்தில் வீரர்கள் நேருக்குநேர் மோதிக்கொள்வது குறைந்து வருகிறது. உக்ரைன்-ரஷியா, இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில் டிரோன்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

    ஆளில்லா விமானமான இதை மிக நீண்ட தூரத்தில் இருந்து ரிமோட் மூலம் இயக்கலாம். எதிரியின் ஒரு இடத்தை இலக்காக வைத்து வெடிப்பொருட்களுடன் டிரோன் அந்த இடத்தை தாக்கும். எதிரி நாடுகள் சுதாரிப்பதற்குள் இந்த தாக்குதலை நடத்தி விடலாம். உக்ரைன்- ரஷியா சண்டையில் இதுதான் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் இந்தியா உள்நாட்டு என்ஜின் உடன் வெடிபொருட்களை சுமந்து சென்று தாக்கும் வல்லமை படைத்த நாசக்கார டிரோனை தயாரிக்க உள்ளது. இந்த டிரோனின் வடிவத்தை தேசிய விண்வெளி ஆய்வுக்கூடம் வெளியிட்டுள்ளது. 78-வது சுதந்திர தினம் நாளை மறுநாள் கொண்டாடப்பட இருக்கும் நிலையில், இது இந்திய பாதுகாப்பின் மிகப்பெரிய மைல் கல்லாக இருக்கும் என்றால் மிகையாகாது.

    இது 2.8 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும். மொத்தம் 120 கிலோ எடை கொண்டது. 25 கிலோ வெடிபொருட்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது. அத்துடன் 1000 கி.மீட்டர் தூரம் வரை பறந்து இலக்கை தாக்கக்கூடியது. மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் பறக்கும்.

    இந்த டிரோனால் 9 மணி நேரம் தொடர்ந்து பறக்க முடியும். ஒரு குறிப்பிட்ட இடத்தில் தொடர்ந்து வட்டமடித்து, இலக்கு எது என்பதை கண்டறிந்தபின், ரிமோட் கன்ட்ரோல் மூலம் அந்த இடத்தில் டிரோன் மோதவிட்டு வெடிக்கச் செய்யலாம்.

    • அமெரிக்க தூதரகத்தின் அருகே இன்று அதிகாலை வான்வழியாக டிரோன் தாக்குதல் நடந்துள்ளது.
    • பாலஸ்தீனம் மெது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 38,848 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 89,459 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

    பாலஸ்தீன நகரங்களின் மீது இஸ்ரேலின் தாக்குதல்கள் அபாயகரமான கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் இஸ்ரேல் நகரமான  டெல் அவிவ் நகரத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் அருகே இன்று அதிகாலை வான்வழியாக டிரோன் தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு ஏமனைச் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.

    இன்று [ஜூலை 19] அதிகாலை 3.15 மணியளவில் டெல் அவிவ் நகரின் மையப்பகுதியில் பென் யகுதா மற்றும் ஸலோம் அலெய்கெம் தெருக்கள் சந்திக்கும் இடத்தில் உள்ள கட்டிடத்தின் மீது டிரோன் மூலம் தாக்குதல் நடந்துள்ளது. இந்த வான்வெளித் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். தாக்குதலுக்குள்ளான கட்டடம் அமெரிக்க  தூதரக கட்டடத்துக்கு வெகு அருகாமையில் உள்ளது.

     

     இதற்கிடையில் காசா நகரில் இயங்கி வரும் அமெரிக்க பள்ளி மீதும், 2 அகதி முகாம்கள் மீதும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக பாலஸ்தீன நகரங்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை  38,848 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 89,459 பேர் படுகாயமடைந்துள்ளனர். அடுத்த வாரம் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவும் சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தனது மனைவிக்கும், வேறு ஒரு நபருக்கும் தொடர்பு இருப்பதை கண்டுபிடிக்க திட்டமிட்ட ஜிங் இதற்காக டிரோன் கேமராவை பயன்படுத்த ஆரம்பித்தார்.
    • டிரோன் வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் மனைவியை விவாகரத்து செய்ய ஜிங் முடிவு செய்துள்ளார்.

    சீனாவில் ஹூபே மாகாணத்தில் உள்ள சியான் நகரை சேர்ந்தவர் ஜிங் (வயது33). இவர் தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்டார். இதனால் மனைவியின் செயல்பாடுகளை கண்காணிக்க தொடங்கினார்.

    அப்போது தனது மனைவிக்கும், வேறு ஒரு நபருக்கும் தொடர்பு இருப்பதை கண்டுபிடிக்க திட்டமிட்ட ஜிங் இதற்காக டிரோன் கேமராவை பயன்படுத்த ஆரம்பித்தார். காரில் அவரது மனைவி வேறு ஒரு ஆணுடன் மலைப்பகுதிக்கு கைகளை பிடித்து கொண்டு ஒரு சிறிய குடிசைக்குள் நுழைந்து 20 நிமிடங்கள் கழித்து அங்கிருந்து வெளியே வந்து அலுவலகம் செல்லும் காட்சிகள் டிரோன் கேமரா மூலம் அம்பலமானது.

    இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஜிங் விசாரணை நடத்தினார். அவரது மனைவி அவரது நிறுவன உரிமையாளருடன் தகாத உறவு இருந்ததும், அவர் தன்னை ஏமாற்றுவதையும் ஜிங் கண்டுபிடித்தார். டிரோன் வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் மனைவியை விவாகரத்து செய்ய ஜிங் முடிவு செய்துள்ளார்.

    • வோரோநெஷ் பகுதிகளில் அவசர நிலையை அமல்படுத்துவதாக அம்மாகாணத்தின் ஆளுநர் அலெக்சாண்டர் குசேவ் தெரிவித்துள்ளார்.
    • நாளை மறுநாள் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரஷியா செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ரஷிய பகுதிகளில் உக்ரைன் நேற்று நாளிரவு நடத்தியுள்ள டிரோன் தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ள ரஷியாவின் வடக்கு பகுதியான வோரோநெஷ் [voronezh] பிராந்தியத்தில் நடந்த இந்த டிரோன் தாக்குதலால் சேமிப்பு கிடங்கு ஒன்று தீப்பற்றி எரிந்து நாசமானது. இந்நிலையில் வோரோநெஷ் பகுதிகளில் அவசர நிலையை அமல்படுத்துவதாக அம்மாகாணத்தின் ஆளுநர் அலெக்சாண்டர் குசேவ் தெரிவித்துள்ளார்.

    இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் சில பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் உக்ரைன் டிரோன்களளில் இருந்து வீசப்பட்ட வெடிகுண்டுகளை செயலிழக்க செய்யும் பணி நடந்துவருகிறது.

    கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து வரும் ரஷிய- உக்ரைன் போரில் இதுவரை சாதகமான தீர்வு எதுவும் எட்டப்படாத நிலையில் மேற்கு நாடுகளில் உதவியுடன் உக்ரைன் ரஷியாவை எதிர்கொண்டு வருகிறது. மறுபுறம் வட கொரியா, சீனா உள்ளிட்ட நாடுகள் ரஷியாவுக்கு ஆதரவு அளித்து வருகிறது. நாளை மறுநாள் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரஷியா செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • ஹமாசுக்கு ஆதரவாக லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கம்.
    • இஸ்ரேல் ராணுவத் தளம் மீது ராக்கெட்டுகள் வீசி தாக்குதல்.

    பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீதான இஸ்ரேல் போரில் ஹமாசுக்கு ஆதரவாக லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கம் உள்ளது.

    அந்த இயக்கத்தினர் அடிக்கடி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.

    இந்த நிலையில் தெற்கு லெபனானில் இஸ்ரேல் ஆளில்லா விமானத்தை(டிரோன்) சுட்டு வீழ்த்தியதாக ஹிஸ்புல்லா இயக்கம் தெரிவித்துள்ளது.

    மேலும் எல்லை நகரமான கிரியாத் ஷ்மோனாவில் உள்ள இஸ்ரேல் ராணுவத் தளம் மீது ராக்கெட்டுகள் வீசப்பட்டதாகவும் தெரிவித்தது.

    ×