search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காட்டுயானைகள்"

    • யானை வாகனங்களை மறித்ததை பார்த்ததும் அதில் இருந்த சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • அரைமணி நேரத்திற்கு பிறகு யானைகள் அங்கிருந்து வனத்திற்குள் சென்றன.

    மேட்டுப்பாளையம்,

    மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளான மேட்டுப்பாளையம் பகுதியில் காட்டு யானைகள், கரடி, சிறுத்தை, புள்ளிமான், காட்டெருமை அதிகளவில் வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இப்பகுதியில் யானைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

    தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா காடுகளை இணைக்கும் முக்கிய வழித்தடமாக மேட்டுப்பாளையம் வனப்பகுதி அமைந்துள்ளது.

    இந்த வனப்பகுதி வழியாக கூட்டம் கூட்டமாக யானைகள் செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் 3-வது கொண்டை ஊசி வளைவில் வாகனங்கள் வழக்கம் போல சென்று கொண்டிருந்தன.

    அப்போது 2 காட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியேறி, சாலையில் சுற்றி திரிந்தது. மேலும் அந்த வழியாக வந்த 2 சுற்றுலா வாகனங்களையும் யானைகள் வழிமறித்து நின்றன.

    யானை வாகனங்களை மறித்ததை பார்த்ததும் அதில் இருந்த சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். வாகனத்தையும் அப்படியே நிறுத்தி விட்டனர். அரை மணி நேரத்திற்கும் மேலாக காட்டு யானை நகரமால் அங்கேயே நின்றது.

    அரை மணி நேரத்திற்கு பிறகு யானைகள் அங்கிருந்து வனத்திற்குள் சென்றன. இதனால் மேட்டுப்பாளையம் -குன்னூர் மலைப்பாதையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • காட்டுயானையை பட்டாசு வெடித்து விரட்டினர்.
    • பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என வனத்துறை எச்சரித்துள்ளது.

    கூடலூர்

    கூடலூர் அருகே மேல் கூடலூருக்குள் காட்டுயானை ஒன்று, நேற்று முன்தினம் மாலை 5.30 மணிக்கு நுழைந்தது. உடனே அப்பகுதி மக்கள் காட்டுயானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

    இதனால் கெவிப்பாரா பகுதிக்கு காட்டுயானை இடம் பெயர்ந்தது.

    இதுகுறித்து கூடலூர் வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் வனச்சரகர் ராதாகிருஷ்ணன் உத்தரவின்பேரில் வன ஊழியர்கள் விரைந்து வந்து கெவிப்பாரா பகுதியில் முகாமிட்ட காட்டுயானையை பட்டாசு வெடித்து விரட்டினர். இதனால் கோக்கால் மலைக்கு அந்த காட்டுயானை சென்றது.

    இதற்கிடையில் திருவள்ளுவர் நகர் அருகே உள்ள அட்டி பகுதியில் 2 காட்டுயானைகள் புகுந்தது. மேலும் கூடலூர்-ஓவேலி சாலையில் உள்ள ஒரு தனியார் எஸ்டேட் பகுதிக்குள் சில காட்டுயானைகள் நுழைந்தது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். மேலும் அவர்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என்று வனத்துறை சார்பில் எச்சரிக்கப்பட்டது. மேலும் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல அறிவுறுத்தப்பட்டனர். தொடர்ந்து வனத்துறையினர் காட்டுயானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

    • கடந்த 2 மாதத்தில் இந்த 2 யானைகள் 6 பேரை கொன்றுள்ளன.
    • இரு மாநில வனத்துறையினரும் யானைகளின் நடமாட்டத்தை கண்கா ணித்து வருகிறார்கள்.

    கிருஷ்ணகிரி,

    தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 ஆண் யானைகள் கடந்த 6-ந் தேதி கிருஷ்ணகிரி நகரையொட்டி தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள தேவசமுத்திரம் ஏரியில் முகாமிட்டது. தொடர்ந்து, 7-ந் தேதி அதிகாலை செல்லாண்டி நகர் கிருஷ்ணகிரி நகர், லைன்கொள்ளை வழியாக சாமந்தமலைக்கு சென்றன.

    யானைகள் செல்லும் வழியில் தேசிய நெடுஞ்சாலையில் வைக்கப்பட்ட தடுப்பு கம்பிகளையும் உடைத்து சென்றன. அன்று சாமந்தமலை விவசாய நிலத்தில் காவலுக்கு இருந்த விவசாயி பெருமாள் என்பவர் யானைகள் தாக்கியதில் உயிரிழந்தார்.

    தொடர்ந்து கீழ்பூங்குருத்தி அருகே மூலக்காடு பகுதியில் முகாமிட்டிருந்த யானைகளை வனத்துறையினர் விரட்டினார்கள். அப்போது யானைகள் மகராஜகடை சுற்று வட்டார பகுதிகளில் விவசாய பயிர்களை நாசம் செய்து, நாரலப்பள்ளி வழியாக ஆந்திர வனப்பகுதிக்கு சென்றன.

    நேற்று முன்தினம் இரவு ஆந்திர வனப்பகுதியை யொட்டியுள்ள மொட்டுலுசேனு, சிக்கநத்தம், மல்லனூர் கிராமங்களில் புகுந்த இரு யானைகளும் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் பயிர்களை நாசம் செய்தன.

    இவ்விரு யானைகளையும் ஆந்திர வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். மல்லனூர், பைபாளம், குசூர் பகுதி மக்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

    இந்த நிலையில் நேற்று அதிகாலை, 5.30 மணிக்கு பெங்களூருவுக்கு கூலி வேலைக்கு ரெயிலில் செல்வதற்காக மல்லனூர் ரெயில் நிலையம் அருகே சென்ற பருத்திகொல்லையை சேர்ந்த உஷா (வயது34) என்ற பெண்ணை யானைகள் தாக்கி கொன்றது.

    பின்னர் அதே பகுதி வழியாக வனப்பகுதிக்குள் செல்ல முயன்ற யானைகள், இயற்கை உபாதை கழிப்பதற்காக வந்த மல்லனூரை சேர்ந்த சிவலிங்கம் (65) என்பவரையும் தாக்கியது. படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    பலியான இருவர் குடும்பத்திற்கும் தலா, 5 லட்சம் ரூபாய் நிவாரணமாக ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது. தற்போது இந்த யானைகள் கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே தமிழக எல்லையான பச்சூர், ஆந்திர எல்லையான மல்லனூர் அருகே சுற்றுகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இரு மாநில வனத்துறையினரும் யானைகளின் நடமாட்டத்தை கண்கா ணித்து வருகிறார்கள்.

    கடந்த மார்ச் மாதம் 14-ந் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் அருகே காட்டுகொல்லை கிராமத்திற்குள் வந்த இந்த 2 யானைகள் ராம்குமார் (27) என்பவரை தாக்கி கொன்றன. அதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் (ஏப்ரல்) 21-ந் தேதி தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே வட்டகானம்பட்டி ஏரிகொட்டாய் இருளர் காலனியை சேர்ந்த காளியப்பன் (வயது 70) என்பவரை இந்த யானைகள் தாக்கி கொன்றன.

    தொடர்ந்து கடந்த மாதம் (ஏப்ரல்) 27-ந் தேதி தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே முக்குளம் பெரிய மொரசுப்பட்டி யை சேர்ந்த வேடி (55) என்ற விவசாயியை இந்த யானைகள் தாக்கி கொன்றன. இதன் தொடர்ச்சியாக கடந்த 7-ந் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் சாமந்தமலையை சேர்ந்த விவசாயி பெருமாள் இந்த யானைகள் தாக்கியதில் பலியானார்.

    இதன் தொடர்ச்சியாக நேற்று ஆந்திர எல்லைக்கு சென்ற இந்த யானைகள் தாக்கி அந்த பகுதியை சேர்ந்த உஷா, சிவலிங்கம் ஆகிய 2 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 2 மாதத்தில் 6 பேரை இந்த 2 யானைகளும் கொன்றுள்ளன. 

    • பலா மரங்களில் பழங்கள் காய்த்து குலுங்குகின்றன
    • பொதுமக்கள் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம்

    குன்னூர்

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது. இதன் காரணமாக அங்கிருந்து காட்டுயானைகள் இடம்பெயர்ந்து, குன்னூர் வனப்பகுதிக்கு வர தொடங்கியுள்ளன.

    இதற்கிடையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையோரத்தில் உள்ள பலா மரங்களில் காய்கள் காய்த்து குலுங்குகின்றன. இதை சுவைக்க காட்டுயானைகள் படையெடுக்கின்றன. அவை குழுக்களாக பிரிந்து பல்வேறு தோட்ட பகுதியில் உலா வருகின்றனர்.

    குறிப்பாக பர்லியார் பகுதியில் குட்டியுடன் காட்டுயானைகள் முகாமிட்டு உள்ளன. இதனால் அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். அங்குள்ள மரங்களில் இருந்த பலாப்பிஞ்சுகளை காட்டுயானைகள் ருசித்தன. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, காட்டுயானைகளை விரட்டியடித்தனர். மேலும் பொதுமக்கள் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

    • இயற்கை உபாதை கழிக்க வந்தபோது 2 காட்டுயானைகள் சத்தம் போட்டது.
    • காட்டுயானைகள் அகரம் அருகே உள்ள மறுதேரி ஏரியில் உள்ளது

    மத்தூர்:

    தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி வனப்பகுதியில் 2 காட்டுயானைகள் வெளியேறி கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகேயுள்ள மோட்டுப்பட்டி அருகேயுள்ள மலை அடிவாரத்திற்கு இன்று காலை வந்தது.

    அப்போது அந்த பகுதிக்கு பாரூர் அருகே உள்ள காட்டுகொலை கிராமத்தைச் சேர்ந்த எல்லப்பன் என்பவரது மகன் ராம்குமார் (வயது27) என்பவர் இயற்கை உபாதை கழிக்க வந்தபோது 2 காட்டுயானைகள் சத்தம் போட்டது.

    அப்போது அந்த யானைகளுடன் தனது செல்போனில் செல்பி பிடித்து கொண்டிருந்தார். இதனை பார்த்த அந்த காட்டுயானைகள் ராம்குமாரை துரத்தியது. இதில் ஓட முடியாமல் அவர் தவறி விழுந்தார். அதனால் அந்த யானைகள் அவரை காலால் மிதித்து கொன்றது.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பாரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். யானைகள் தாக்கி இறந்த ராம்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து அந்த காட்டுயானைகள் அகரம் அருகே உள்ள மறுதேரி ஏரியில் உள்ளது. மேலும் வனத்துறையினர் அந்த காட்டுயானைகளை விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • விற்பனைக்காக பாக்சில் பறித்து வைத்திருந்த தக்காளிகளை காட்டுயானைகள் மிதித்து துவம்சம் செய்தது.
    • விளைநிலங்களை சேதப்படுத்திய காட்டுயானைகளை வனத்துறையினர் பட்டாசு வெடித்தும், தீ பந்தம் காண்பித்தும் வனப்பகுதிக்குள் விரட்டினர்.

    ராயக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே ஊடேதுர்க்கம் வனப்பகுதியில் 20-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் உள்ளது.

    இந்த யானைகள் நேற்றிரவு வெப்பாளப்பட்டி கிராமத்தில் உள்ள அ.தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் விமலா சண்முகம் என்பவரின் 10 ஏக்கர் விளைநிலத்திற்குள் காட்டு யானைகள் புகுந்த தக்காளி தோட்டத்தை நாசம் செய்தது. பின்னர் விற்பனைக்காக பாக்சில் பறித்து வைத்திருந்த தக்காளிகளை மிதித்து துவம்சம் செய்தது.

    இதுகுறித்து வனசரக பார்த்தசாரதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அவர் தலைமையில் வனவர் நாராயணன் மற்றும் வனத்துறையினர் விரைந்து வந்தனர். விளைநிலங்களை சேதப்படுத்திய காட்டுயானைகளை பட்டாசு வெடித்தும், தீ பந்தம் காண்பித்தும், அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர்.

    ×