என் மலர்
நீங்கள் தேடியது "திறப்பு விழா"
- திருப்பூர் தெற்கு மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும் .
- தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும், 4-வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் அழைப்பு விடுத்துள்ளார்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் நாளை அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள் உள்ளிட்டவைகளை திறக்க மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வருகிறார். இதில் திருப்பூர் தெற்கு மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும் என தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் மாநகராட்சியின் 4-வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நாளை (சனிக்கிழமை) மதியம் 12 மணிக்கு திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் நகராட்சிக்கு உட்பட்ட கரட்டுப்பாளையத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திருப்பூர் மாவட்டத்தில் 12 இடங்களில் கட்டப்பட்டுள்ள அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையங்கள், பிரசவ காத்திருப்பு அறை மற்றும் சித்தா பிரிவு ஆகிய கட்டிடங்களை திறந்து வைக்க உள்ளார்.
அதன்படி உடுமலை தாலுகாவில் எரிசனம்பட்டி, வெங்கிட்டாபுரம், மானுப்பட்டி, சோமவாரப்பட்டி, ஆண்டியூர், கே.வல்லகொண்டாபுரம், அவினாசி தாலுகாவில் முறியாண்டம்பாளையம், தாராபுரம் தாலுகாவில் டி.ஆலம்பாளையம், வெள்ளகோவில் கரட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் ஆரம்ப துணை சுகாதார நிலையங்கள் திறக்கப்படுகிறது.
உடுமலை தாலுகாவில் அமராவதிநகரில் பிரசவ காத்திருப்பு அறை மற்றும் மடத்துக்குளம், சாவடிபாளையத்தில் சித்தா பிரிவு கட்டிடங்கள் திறக்கப்படுகிறது. இதில் திருப்பூர் தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், வார்டு, கிளை நிர்வாகிகள், இன்னாள், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள்,மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட பிரதிநிதிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், செயல்வீரர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- புதிய நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழாவில் பரமக்குடி எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
- அ.புத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி கார்த்திக்பாண்டியன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
பரமக்குடி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட போகலூர் ஒன்றியம் அரியகுடி புத்தூரில் ரூ.6.87 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய நெல் கொள்முதல் நிலையத்தை பரமக்குடி எம்.எல்.ஏ முருகேசன் திறந்து வைத்தார்.
அதேபோல் அரியகுடி புத்தூரில் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் தேசிய கால்நடை இயக்கத்தின் கீழ் விவசாயிகளுக்கு பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் தலைமை தாங்கி 30 பேருக்கு விலையில்லா ஆடுகளை வழங்கினார்.இந்த விழாவிற்கு ஒன்றியக்குழு துணை தலைவர் பூமிநாதன், மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், கிழக்கு ஒன்றிய செயலாளர் கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அ.புத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி கார்த்திக்பாண்டியன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் போகலூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சிவசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) இளங்கோ மற்றும் அரியகுடி புத்தூர் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- காரைக்குடியில் சிலம்பாயி ஹோமியோபதி மருத்துவமனை திறப்பு விழா நடந்தது.
- நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கி மருத்துவமனையை திறந்து வைத்து பேசினார்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருணா நகரில் புதிதாக கட்டப்பட்ட சிலம்பாயி ஹோமியோபதி மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது.
நாம் தமிழர் கட்சியின் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி செயலாளர் கரு.சாயல்ராம் வரவேற்றார்.நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கி மருத்துவமனையை திறந்து வைத்து பேசினார்.
மாநில ஒருங்கிணைப்பா ளர்கள் வெற்றிக்குமரன், கோட்டைக்குமார், ஹீமா யூன் கபீர், சாட்டை துரை முருகன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். இதில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அமுதா நம்பி, தென்சென்னை மாவட்ட செயலாளர் புகழேந்தி, மாநில கொள்கை பரப்புச் செயலாளர்கள் செயசீலன், ராவணன் சுரேஷ், திருச்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் வழக்கறிஞர் திருச்சி பிரபு, மாநில ஒருங்கிணைப்பாளர் இசை மதிவாணன், மாநில மருத்துவ பாசறை ஒருங்கி ணைப்பாளர் மருத்துவர் பிரபாகரன், சிவகங்கை வடக்கு மாவட்ட தலைவர் ராமசெயம் உள்பட மாநில, மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், இளஞ்சியமங்களம் கிராம மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மருத்துவர் சாரா ராமு நன்றி கூறினார்.
- விநாயகர் கோவில் வீதி மற்றும் கோகுல் கார்டன் பகுதிகளில் கிளை மன்றம் பெயர் பலகை திறப்பு விழா நடந்தது.
- கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
திருப்பூர் :
திருப்பூர் தெற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை சார்பாக தெற்கு மாவட்ட தலைவர் ஜி.கே.சங்கர் தலைமையில் பல்லடம் தொகுதி பூமலூர் பகுதியில் விநாயகர் கோவில் வீதி மற்றும் கோகுல் கார்டன் பகுதிகளில் கிளை மன்றம் பெயர் பலகை திறப்பு விழா நடந்தது.தொடர்ந்து கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
விழாவில் தெற்கு மாவட்ட பொருளாளர் கிருஷ்ணன், தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் முத்துக்குமார், தெற்கு மாவட்ட ஆலோசகர் முருகானந்தம், தெற்கு மாவட்ட துணை அமைப்பாளர் போஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவில் மங்கலம் பகுதி தலைவர் பாலசுப்பிரமணியன், பகுதிச் செயலாளர் சம்சுதீன், துணை தலைவர் விக்னேஷ், பொருளாளர் நவீன், இளைஞரணி தலைவர் மணிகண்டன், இளைஞரணி செயலாளர் விஜய் மற்றும் திருப்பூர் மேற்கு பகுதி தலைவர் விஜய், பல்லடம் வடக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் பகவத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- தேனியில் மதுரை ஸ்ரீ கிருஷ்ணா நகை மாளிகையின் 4-வது கிளை திறப்பு விழா கோலாகலமாக நடந்தது.
- வாடிக்கையாளர்களுக்கு நிர்வாக இயக்குனர்கள் வெள்ளி நாணயத்தை பரிசாக வழங்கினர்.
மதுரை
தேனியில் மதுரை ஸ்ரீ கிருஷ்ணா நகை மாளிகையின் 4-வது கிளை திறப்பு விழா கோலாகலமாக நடந்தது.
மதுரையில் 1990-ல் முதல் கிளையை ஆரம்பித்த ஸ்ரீகிருஷ்ணா தங்க மாளிகை அயராத உழைப்பின் மூலம் தரமான தங்க நகைகள் மற்றும் வைர நகைகளை புதுப்புது கலெக்சன்களை வழங்கிவந்த நிலையில் வாடிக்கையாளர்களின் ஆதரவினாலும், தேனியில் ஸ்ரீ கிருஷ்ணா நகை மாளிகையின் 4-வது கிளை திறந்து வைக்கப்பட்டது.
தேனி-மதுரை ரோட்டில் பிரமாண்ட ஷோரூமை நிர்வாக இயக்குனர்கள் செல்வம், ஜெகதீசன், மணிவாசகம், சங்கர் ஆகியோர் முன்னிலையில் தேனி ஏ.எம்.ஆர்.ஆர். குழுமத்தலைவர்-தொழிலதிபர் சந்திரகுமார் திறந்து வைத்தார். அகிலாகுமார் குத்து விளக்கு ஏற்றி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
திறப்பு விழா சலுகையாக தங்கம் பவுனுக்கு ரூ. 400 தள்ளுபடியாகவும், வைரம் கேரட்டிற்கு ரூ. 15 ஆயிரம் தள்ளுபடியாகவும், வெள்ளி பொருட்களுக்கு செய்கூலி சேதாரம் இலவசமாகவும், திறப்பு விழாவிற்கு வந்த வாடிக்கையாளர்களுக்கு நிர்வாக இயக்குனர்கள் பாலாஜி, நந்தகிருஷ்ணன், ஸ்ரீராம், கோகுல்நாத் ஆகியோர் வெள்ளி நாணயத்தை பரிசாக வழங்கினர்.
- உசிலம்பட்டி நாடார் சரசுவதி தொடக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளியில் சத்துணவு கூடங்கள் திறப்பு நடந்தது.
- இதனை அய்யப்பன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
உசிலம்பட்டி
உசிலம்பட்டி நாடார் சரசுவதி தொடக்கப்பள்ளி, நாடார் சரசுவதி மேல்நிலைப் பள்ளியில் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்ட 2 சத்துணவு கூடங்களை அய்யப்பன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
தலைமை ஆசிரியர்கள் மதன்பிரபு, பரமசிவம் முன்னிலை வகித்தனர். ஓ.பி.எஸ். அணி அ.தி.மு.க. நிர்வாகிகள் சசிகுமார், பிரபு, உசிலம்பட்டி ஒன்றியம் ஜான்சன், செல்லம்பட்டி ஜெயக்குமார், போத்திராஜ், சேடப்பட்டி அய்யர் என்ற ராமகிருஷ்ணன், டி.கல்லுப்பட்டி கண்ணன், சரவணன் சவுந்தரபாண்டி, செல்வம், மீனவரணி ஜெயக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- ராமநாதபுரம் அருகே உள்ள வழுதூர் கிராண்ட் ஜாமியா மஸ்ஜித் திறப்பு விழாவில் அல்பரிதா குரூப் நிறுவனங்களின் சேர்மன் அபுல்கலாம் கலந்து கொண்டு வாழ்த்தினார்.
- ஜாமியா மஸ்ஜித் விழா கமிட்டி மேலாளர் சகுபர் அலி நன்றி கூறினார்.
பனைக்குளம்
ராமநாதபுரம் மாவட்டம் வழுதூர் கிராமத்தில் கிராண்ட் ஜாமியா மஸ்ஜித் பிரமாண்டமாக கட்டப்ப ட்டுள்ளது. இந்த இறையில்ல கட்டுமான பணிக்கு பெரும் முயற்சி மேற்கொண்ட முன்னாள் ஜமாத் தலை வர்கள், அல்பரிதா குரூப் நிறுவனங்களின் நிறுவனம் ஹாக்கி ஜமால் முகமது, முன்னாள் ஜமாத் தலைவர் துல்கருணை சேட், முன்னாள் பொருளாளர் அபு ஹனிபா வழுதூர், முன்னாள் இமாம் அப்துல் காதர் ஆலி, முன்னாள் ஜமாத் தலைவர் அப்துல் ரஹீம் மற்றும் வழுதூர் குலாம் முகமது ஆகியோர் முன்னோர்களின் துவா பரக்கத்தாலும் இறைவனின் நாட்டப்படி இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.
வழுதூர் கிராம மக்களின் முயற்சியால் கட்டப்பட்டு அதற்கான திறப்பு விழா இன்று காலை 9 மணிக்கு தொடங்கப்பட்டு மாலை 2 மணி வரை சிறப்பாக நடந்தது. விழாவை முன்னிட்டு உலக நாடுகளில் ராமநாதபுரம் மாவட்ட மக்களின் நலனுக்காக தொடங்கப்பட்ட அல்பரிதா அல்நஜ்மா குரூப் நிறுவனங்களின் சேர்மன் அபுல்கலாம், அவரது சகோதரர்கள் பகுருதீன் ஹாஜா ஜமால் நசுருதீன் ஆகியோர் நிர்வாக கமிட்டியினருடன் இணைந்து பள்ளிவாசல் திறப்பு விழாவுக்காக ஒரு மாதமாக முக்கிய பிரமுகர்களை சந்தித்து சிறப்பு அழைப்பிதழ் வழங்கி விழாவில் கலந்து கொள்ள அழைத்தனர்.
அதன்படி மாவட்ட த்தில் மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
முன்னதாக திறப்பு விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த அனைவருக்கும் அல் நஜ்மா அல்பரிதா குழுமத்தின் சார்பிலும், வழுதூர் கிராம மக்கள் வழுதூர் இளைஞர் சங்கத்தினர் சார்பிலும் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.
நேற்று இரவு பள்ளி வாசல் முழுவதும் அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டு திறப்பு விழாவை காண ஏற்பாடுகளை வழுதூர் கிராம மக்கள் சார்பில் செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஜமாத் தலைவர் கமாலுதீன், தற்பொழுது நிர்வாகத்தில் உள்ள ஜமாத் நிர்வாகிகள், இளைஞர் சங்கத்தினர் விழா கமிட்டியினர் ஏற்பாட்டில் இணைந்து இதற்கான திறப்பு விழா ஏற்பாடுகளை செய்தனர்.
திறப்பு விழாவுக்கு வழு தூர் ஜமாத் தலைவர் முகம்மது மன்சூர் தலைமை தாங்கினார். வழுதூர் ஜமாத் செயலாளர் அப்துல் ஹக்கீம், மலேசியா ஜமாத் தலைவர் லியாக்கத் அலி, மலேசியா ஜமாத் செயலாளர் சிராஜூதீன், துபாய் ஜமாத் தலைவர் சேகு ஜெய்னுலாப்தீன், துபாய் ஜமாத் செயலாளர் தாவுத் இப்ராஹிம் முன்னிலை வகித்தனர். விழா கமிட்டி செயலாளர் முஸ்தபா கமால் வரவேற்றார். தலைமை இமாம் ரஹ்மத்துல்லா மிஸ்பாகி கிராஅத் ஓதினார்.
வி.எஸ்.எம். அமானுல்லா, ஓ.எம்.எஸ்.அன்சாரி, அபுஹனி, சீனி அகமது, ஆகியோர் பள்ளிவாசலை திறந்துவைத்தனர்.
முகம்மது ஹாருன், முகம்மது சஜருதீன் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.
இறை இல்லத்தைக் கட்டிக் கொடுத்த வசந்தா கன்ஸ்ட்ரக்சன்ஸ் தலைமைப் பொறியாளர் ராஜேஷ் கண்ணா, இல்ல வடிவமைப்பாளர் ரத்னா பில்டர்ஸ் தலைமைப் பொறியாளர் பால்பாண்டி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.
ஜாமியா மஸ்ஜித் விழா கமிட்டி மேலாளர் சகுபர் அலி நன்றி கூறினார்.
அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், நாசர், நவாஸ்கனி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், ஆளூர் ஷா நவாஸ், பரமக்குடி முருகேசன், திருவாடனை கரு.மாணிக்கம், ஐ.யு.எம்.எல். மாநில பொதுச் செயலாளர் முகம்மது அபூபக்கர், மனித நேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லா, முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா, மனித நேய ஜன நாயக கட்சி பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
- காரைக்குடி கே.எம்.சி மருத்துவமனையில் அதிநவீன சிறுநீரக சுத்திகரிப்பு-லேசர் சிகிச்சை மையங்கள் திறப்பு விழா நடந்தது.
- தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிக்கு தொடர்ச்சியான டயாலிசிஸ் சிகிச்சை அளித்து உயிர் காப்பாற்றப்படும்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டத்தில் முதல்முறையாக காரைக்குடி கே.எம்.சி. மருத்துவமனையில் தொடர்ச்சியான அதிநவீன சிறுநீரக சுத்திகரிப்பு சிகிச்சை சி.ஆர்.ஆர்.டி மற்றும் அதிநவீன லேசர் சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இதனை காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.சிறுநீரக மருத்துவ நிபுணர் சரவணகுமார் முன்னிலை வகித்தார். இந்த தொடர்ச்சியான சிறுநீரக சுத்திகரிப்பு சிகிச்சை முக்கியமாக கடுமையான சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்ட மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
இந்த செயல்முறை மாற்றாக ஹீமோடியா பில்ட்ரேஷன் என்று அழைக்கப்படுகிறது. கிட்டத்தட்ட தொடர்ச்சியாக, ஒரு நாளைக்கு 12 முதல் 24 மணி நேரம் நீடிக்கும்.தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிக்கு தொடர்ச்சியான டயாலிசிஸ் சிகிச்சை அளித்து உயிர் காப்பாற்றப்படும்.
சிவகங்கை மாவட்டத்தில் முதன் முறையாக கே.எம்.சி.மருத்துவமனையில் அறுவை சிகிச்சை இல்லாமல் லேசர் சிகிச்சை முறையில் மருத்துவம் செய்யும் துறையும் தொடங்கப்பட்டுள்ளது.வெரிகோஸ் வெயின் உலகளவில் வயது வந்தோரில் 23 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஒவ்வொரு ஆண்டும் இந்த நோயால் பாதிக்கப்படுவதாக கருதப்படுகிறது. வெரிகோஸ் வெயின் பொதுவாக கால்களை பாதிக்கிறது.
நீண்டநேரம் நின்று கொண்டிருப்பதால் கால்களில் ஏற்படும் அழுத்தம் காரணமாக கால்கள் இந்த நோயால் பாதிப்பு ஏற்படும். கே.எம்.சி.மருத்துவமனையில் வெரிகோஸ் வெயின் சிகிச்சைகளை வழங்குகி றார்கள். வெரிகோஸ் வெயினை குணப்படுத்துவதற்கு தொந்தரவில்லாத அனுபவத்தையும், சிறந்த வகையில் லேசர் அறுவை சிகிச்சையையும் வழங்க கே.எம்.சி. குழு தயாராக இருக்கிறது.
இதன் மூலம் பொது மக்களுக்கு உயர்தர சிகிச்சையை காரைக்குடி பகுதியில் வழங்க முடியும் என்று கே.எம்.சி. மருத்துவமனை தலைமை மருத்துவர் காமாட்சி சந்திரன் தெரிவித்தார். இந்த நிகழ்வில் கே.எம்.சி மருத்துவமனை தலைமை மருத்துவர் சலீம் ஆர்த்தோ மற்றும் மருத்துவர்கள், காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
- கொடியேற்றும் நிகழ்ச்சி நகர சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது.
- பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அம்மாபேட்டை:
அம்மாபேட்டை அருகே மெலட்டூர் நகர வணிகர் நல சங்க அலுவலக திறப்பு மற்றும்கொடியேற்றும் நிகழ்ச்சி நகர சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. இதில் சங்க ஆலோசகர் வழக்கறிஞர் நேதாஜி, துணைத் தலைவர்கள்துரைராஜ், உதயகுமார், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவரும், தேசிய முதன்மை துணைத் தலைவருமாகிய ஏ.எம்.விக்கிரமராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மெலட்டூர் கடை வீதியில் சங்க கொடியை ஏற்றி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து சங்க அலுவலகத்தை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார். மேலும் மெலட்டூர் நகர சங்க வியாபாரிகளுக்கு தினசரி நாட்காட்டி வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர்கள் சுப்பு, சோழா, தெற்கு மாவட்டசெயலாளர் சத்தியநாராயணன், மகேந்திரன், கோவிந்தராஜ், பாபநாசம் தொகுதி தலைவர் ஜெயராமன், மற்றும் மாநில, மாவட்ட, பொறுப்பாளர்களும் மெலட்டூர் நகர செயலாளர் பாலாஜி, துணைத் தலைவர்கள், துணைச் செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் வணிகர்கள் அப்பகுதி பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக மெலட்டூர் நகர நிர்வாகி மணிமாறன் நன்றி கூறினார்.
- மெர்க்கன்டைல் வங்கியின் 510-வது கிளை சேலம் மாவட்டம் தேவூரில் அமைக்கப்பட்டு உள்ளது.
- சென்னை கோயம்பேட்டில் மெர்க்கன்டைல் வங்கியின் 511-வது கிளை திறக்கப்பட்டது.
தூத்துக்குடி:
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பங்கு சந்தையில், தனது பங்கை பட்டியலிட்டதை தொடர்ந்து, இந்தியா முழுவதும் விரிவாக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த வங்கி 509 கிளைகளுடன் செயல்பட்டு வந்தது.
இந்த நிலையில் புதிதாக 2 வங்கி கிளைகள் நேற்று திறக்கப்பட்டு உள்ளன. அதன்படி 510-வது கிளையானது சேலம் மாவட்டம் தேவூரில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கிளை அலுவலகத்தை தேவூர் பேரூராட்சி தலைவர் என்.தங்கவேல் திறந்து வைத்தார். 511-வது கிளை சென்னை கோயம்பேட்டில் அமைக்கப்பட்டு உள்ளது. இதை கோயம்பேடு மொத்த காய்கனி, பூ மற்றும் உணவு தானியங்கள் சந்தைகள் தலைவர் டி.ராஜசேகரன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் வங்கி உயர் அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து வங்கி நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான எஸ்.கிருஷ்ணன் கூறும் போது, 'பங்குசந்தையில் பட்டியலிட்ட பிறகு, வங்கியானது நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யும் வகையில் செயல்பட்டு வருகிறது. அதன் தொடக்கமாக தமிழகத்தில் 510, 511-வது புதிய வங்கி கிளைகளை திறந்து உள்ளோம். இன்னும் அதிக கிளைகளை இந்தியா முழுவதும் திறக்க திட்டமிட்டு உள்ளோம். இந்த கிளைகள் தொடக்க விழாவின் மகிழ்ச்சியை வங்கியின் அனைத்து உடமைதாரர்களுக்கும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்' என்றார்.
- காரைக்குடியில் சூரியா ஜூவல்லரி மார்ட் திறப்பு விழா நாளை நடக்கிறது
- முதல் விற்பனையை அரிமா முன்னாள் மாவட்ட ஆளுநர்- தொழில்அதிபர் தங்கராஜ் தொடங்கி வைக்கிறார்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள புதுவயல் நருவிழி அம்பாள் மாடர்ன் ரைஸ்மில் உரிமை யாளரும், வித்யாகிரி கல்வி குழும தலைவருமான தொழில் அதிபர் லயன்கிருஷ்ணன் குடும்பத்தினரின் புதிய நிறுவனமான ''சூரியா ஜூவல்லரி மார்ட்'' காரைக்குடியில்
நாளை (26-ந்தேதி) திறக்கப்படுகிறது.
காரைக்குடி கல்லூரி சாலையில் உள்ள நருவிழி காம்ப்ளக்சில் நாளை திறப்பு விழா நடக்கிறது. இங்கு தங்கம், வைரம், வெள்ளி நகைகள் விற்பனை செய்யப் படுகிறது.
தங்க நகை பிரிவை தொழில்அதிபர் படிக்காசும், வைரம் மற்றும் வெள்ளி விற்பனை பிரிவை சிங்கப்பூர் தொழில்அதிபர் செல்லப்பனும் திறந்து வைக்கிறார்கள். முதல் விற்பனையை அரிமா முன்னாள் மாவட்ட ஆளுநர்- தொழில்அதிபர் தங்கராஜ் தொடங்கி வைக்கிறார்.
இதில் காரைக்குடி மற்றும் சுற்று வட்டார தொழில்அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், அரிமா சங்க நிர்வாகிகள் கலந்துகொள்கிறார்கள்.திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை லயன்.கிருஷ்ணன் மற்றும் லயன் அருணகிரி குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.
- புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டு பணிகள் நிறைவடைந்தது.
- ஊராட்சி செயலாளர் கவிதா, மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள புளியம்பட்டி ஊராட்சியில், ரூ.19 லட்சம் மதிப்பில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டு பணிகள் நிறைவடைந்தது. இதனையடுத்து ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு புளியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் உத்தமராஜ் தலைமை வகித்தார். இந்த விழாவில் பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி, தி.மு.க.பல்லடம் மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட கவுன்சிலர் ஜெயந்தி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜேஷ் குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நடராஜன்,ஊராட்சி செயலாளர் கவிதா, மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.