என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நலத்திட்ட உதவி"

    • முதியவர்களுக்கு புத்தாடை, இனிப்பு மற்றும் இரவு உணவு வழங்கும் விழா நடைபெற்றது.
    • திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    திருப்பூர் :

    விஜய் மக்கள் இயக்கத்தின் திருப்பூர் மத்திய மாவட்ட இளைஞரணி சார்பில் தீபாவளி பண்டிகையையொட்டி ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் சிவ ஷர்மிளா அறக்கட்டளை ஒருங்கிணைந்த வளாகத்தில் முதியவர்களுக்கு புத்தாடை, இனிப்பு மற்றும் இரவு உணவு வழங்கும் விழா நடைபெற்றது.

    திருப்பூர் மத்திய மாவட்ட இளைஞர் அணி தலைவர் ஆர். சுகுமார் தலைமையில் நடந்த இந்த விழாவில் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ஜி.கே. சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட நிர்வாகிகள் அப்பாஸ், சதீஸ், லோகு, சிவா, அஸ்வின், மணி, பசபுகழ் மற்றும் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் காளிமுத்து, போஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்பூர் மாவட்ட சப் - கலெக்டர் சுருதன் ஜெய் நாராயணன் தலைமையில் நடைபெற்றது.
    • முகாமில் 41 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் புதூர் ஊராட்சி தனியார் திருமண மண்டபத்தில் மக்கள் தொடர்பு நாள் முகாம் திருப்பூர் மாவட்ட சப் - கலெக்டர் சுருதன் ஜெய் நாராயணன் தலைமையில் நடைபெற்றது.

    பல்லடம் தாசில்தார் நந்தகோபால், வடுகபாளையம்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் புனிதா சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் 41 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது. இதில் 24 மனுக்கள் உடனடியாக பரிசீலனை செய்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.17 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. நிகழ்ச்சியில் பல்லடம் நகராட்சி ஆணையாளர் விநாயகம், பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ், வில்சன்,அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர்டாக்டர் ராமசாமி, மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிகள் மூலம் கடன்கள் வழங்கப்படுகிறது.
    • 10 அல்லது 12-க்கு மேற்பட்டவர்கள் குழுவாக சேர்ந்து வங்கிகளுக்கு விண்ணப்பம் அளித்தால், கடன் வழங்கப்பட்டு வருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் கரடிவாவி ரங்கசாமிகவுண்டர் மண்டபத்தில், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறையின் சார்பில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் 194 பயனாளிகளுக்கு ரூ.41 லட்சத்து 79 ஆயிரத்து 479 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வினீத் வழங்கினார். விழாவில் கலெக்டர் வினீத் பேசியதாவது:-

    சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிகள் மூலம் கடன்கள் வழங்கப்படுகிறது. 10 அல்லது 12-க்கு மேற்பட்டவர்கள் குழுவாக சேர்ந்து வங்கிகளுக்கு விண்ணப்பம் அளித்தால், கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் சுயஉதவிக்குழுக்கள் குறைவாக உள்ளதால், மேலும், சுய உதவிக்குழுக்கள் அதிகளவில் சேர்ந்து பயன்பெற வேண்டும். அந்த வகையில் கரடிவாவியில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் 62 பயனாளிகளுக்கு ரூ.18 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டா, 11 பேருக்கு ரூ.1.32 லட்சம் மதிப்பில் முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை, 5 பேருக்கு ரூ.21 ஆயிரத்து 250 மதிப்பில் கணினி புதிய குடும்ப மின்னணு அட்டை, 20 பேருக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பில் ஊட்டச்சத்து பெட்டகம், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில், 5 பேருக்கு ரூ.1 லட்சத்து 64 ஆயிரத்து 207 மதிப்பீட்டில் இடுபொருட்கள், வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் 15 பேருக்கு ரூ.2 லட்சத்து 66 ஆயிரத்து 452 மதிப்பீட்டில் வேளாண் உபகரணங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு துறையின் சார்பில், 3 பேருக்கு ரூ.75 ஆயரம் மதிப்பிலும், இலங்கை தமிழர் நல்வாழ்வுத்துறையின் சார்பில் ஒருவருக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிலும், ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 12 பேருக்கு ரூ.90 ஆயிரத்து 570 மதிப்பில் என மொத்தம் 194 பயனாளிகளுக்கு ரூ.41 லட்சத்து 79 ஆயிரத்து 479 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராமநாதபுரத்தில் த.மு.மு.க. சார்பில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
    • தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. அறிவுரையின் பேரில் வழங்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. அறிவுரையின் பேரில் மாநில துணை பொதுச் செயலாளர் சலிமுல்லா கான் ஆலோசனையின் பேரில் ராமநாதபுரம் மாவட்டத்தில் த.மு.மு.க. சார்பில் ஏழை எளிய மக்களுக்கு கல்வி, மருத்துவ சிகிச்சை மற்றும் சிறு தொழில் செய்வதற்கு நிதி உதவி அளித்து வருகின்றனர். ராமநாதபுரம் பாரதிநகர் பாலமுருகனுக்கு ரூ.10 ஆயிரம், புவனேஸ்வரனுக்கு ரூ.5 ஆயிரம், மண்டபம் பாத்திமாவிற்கு ரூ.10 ஆயிரம், ஏர்வாடி சகுபர் சாதிக் ரூ.10ஆயிரம், நாகநாதபுரம் அமீர் ரூ.5 ஆயிரம், முதுகுளத்தூர் இப்ராஹிம் குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காக ரூ.50 ஆயிரம், ராமநாதபுரம் நகர் பகுதி, மண்டபம் பேரூர் பகுதியில் வசிக்கும் 2 விதவைப் பெண்களுக்கு வாழ்வாதார உதவியாக ரூ.1.40 லட்சம் என மொத்தம் ரூ.2.30 லட்சத்தை மாநில துணை பொதுச் செயலாளர் சலிமுல்லாஹ்கான் வழங்கினார். இதில் மாவட்டத் தலைவர் பிரிமியர் இப்ராஹிம், நகர் தலைவர் முகம்மது அமீன், மாவட்டச் செயலாளர் அப்துல் ரஹீம், 15-வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் காதர் பிச்சை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் அரவிந்த் தகவல்
    • மாற்றுத்திறனாளிகள் தங்களை பராமரித்து கொள்ள ஏதுவாக ரூ.1,000-ம் வீதம் 54 பயனாளிகளுக்கு ரூ.54 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக அரசு மாற்றுத்திற னாளிகள் நலனுக்காக பல் வேறு நலத்திட்டங்களை அறி வித்து செயல்படுத்தி வரு கிறது. குமரி மாவட்டத்தில் மனவளர்ச்சி குன்றியோர், கடுமையாக உடல் இயக்கம் பாதிக்கப்பட்டோர், தொழு நோயால் பாதிக்கப்பட் டோர், தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர், முதுகு தண்டுவடம் மற்றும் தண்டு வட மரபு நோய் உள்ளிட்ட நாட்பட்ட நரம்பியல் நோயினால் பாதிக்கப்பட் டோர் ஆகியோருக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை கடந்த அக்டோபர் மாதம் வரை ரூ.8 லட்சத்து 73 ஆயிரத்து 48 வழங்கப்பட்டுள்ளது. அதிக உதவி தேவைப் படும் மாற்றுத்திறனாளிகள் தங்களை பராமரித்து கொள்ள ஏதுவாக ரூ.1,000-ம் வீதம் 54 பயனாளி களுக்கு ரூ.54 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

    மாற்றுத்திறனாளிகளுக் கான திருமண நிதியுதவி திட் டத்தின் கீழ் பட்ட படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.50 ஆயி ரம் வீதம் 2 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சமும், இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் 25 பய னாளிகளுக்கு ரூ.21 லட்சத்து 81 ஆயிரத்து 75 மதிப்பிலும், பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்கா லிகள் 13 பயனாளிகளுக்கு ரூ.12 லட்சத்து 87 ஆயி ரம் மதிப்பிலும், வாய்பேச இயலாதசெவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் பார்வையற் றோர் மாற்றுத் திறனாளிகளுக்கு தக்க செயலிகளுடன் கூடிய கைபேசிகள் 97 பயனா ளிகளுக்கு ரூ.11 லட்சத்து 64 ஆயிரம் மதிப்பிலும் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் விலையில்லா இலவச மோட்டார் பொருத்தப்பட்ட தையல் எந்திரம் 41 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 46 ஆயிரத்து 450 மதிப்பிலும், சக்கர நாற்காலி 8 பயனாளிகளுக்கும், சி.பி.சக்கர நாற்காலி 12 பயனாளிகளுக்கும், ஊன்றுகோல் 20 பயனாளிகளுக்கும், பிரைலி கைகெடிகாரம் 8 பயனாளிகளுக்கும், மடக்கு குச்சி 'மற்றும் கண் கண்ணாடி 30 பயனாளிகளுக்கும், காலிபர் 11 பயனாளிகளுக்கும், காதொலி கருவி 40 பயனாளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதோடு, இலவச பஸ் பயண அட்டை 2029 மாற்றுத் திறனாளிகளுக்கும், ஏப்ரல் 2022 முதல் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை 1337 நபர்களுக்கும், மத்திய அரசின் யு.டி.ஐ.டி. அட்டை 10 ஆயிரத்து 53 மாற்றுத்திறன் பயனாளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இளையான்குடி அருகே ரூ.31 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • முதல்-அமைச்சர் பொதுமக்களின் நலனை கருத்திதல் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள அ.நெடுங்குளத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி கலந்து கொண்டு பல்வேறு துறைகள் சார்பில் ரூ.30.92 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 194 பயனாளிகளுக்கு வழங்கி னார். பின்னர் அவர் பேசிய தாவது:-

    முதல்-அமைச்சர் பொதுமக்களின் நலனை கருத்திதல் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார். பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு மாதமும் ஒரு வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தினை தேர்ந்தெடுத்து அதில் உள்ள கடைக்கோடி கிராமத்திற்கு சென்று பொதுமக்களின் கோரிக்கைகளை பெற்று நலத்திட்ட உதவிகள் வழங்க மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) காமாட்சி, இணை இயக்குநர்கள் தனபாலன் (வேளாண்மைத்துறை), நாகநாதன் (கால்நடைப் பராமரிப்புத்துறை, துணை இயக்குநர் (சுகாதாரம்) விஜய்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானதை முன்னிட்டு தூய்மை காவலர்களுக்கு சேலைகள், இனிப்புகள் வழங்கப்பட்டது.
    • மாவட்ட கவுன்சிலர் கரைப்புதூர் ராஜேந்திரன், மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம் : 

    பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானதை முன்னிட்டு, ஒன்றியத்தில் பணியாற்றும் தூய்மை காவலர்களுக்கு சேலைகள், இனிப்புகள் வழங்கப்பட்டது.

    பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவரும், இளைஞர் அணி அமைப்பாளருமான பாலசுப்பிரமணியம் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி, மாவட்ட கவுன்சிலர் கரைப்புதூர் ராஜேந்திரன், மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கடையநல்லூரில் நகர தி.மு.க. சார்பில் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் கொடியேற்றினார்.
    • நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூரில் நகர தி.மு.க. சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 45-வது பிறந்த நாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் கொடியேற்றி, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கடையநல்லூரில் நகர தி.மு.க. சார்பில் மெகராஜ் நகர் , மேலக்கடையநல்லூர் பார்க், ரஹ்மானியாபுரம் 4-வது தெரு, கிருஷ்ணாபுரம் பஸ் நிலையம் பகுதிகளில் நடந்த நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் அப்பாஸ் தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் செல்லத்துரை, நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், துணைத்தலைவர் ராசையா முன்னிலை வகித்தனர். அவைத்தலைவர் பெட்டி முருகையா, கவுன்சிலர்கள் முகையதீன்கனி, முருகன், வரவேற்றனர். மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் கொடியேற்றி இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

    • 60 பயனாளிகளுக்கு ரூ.6.57 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ராஜகண்ணப்பபன் வழங்கினார்.
    • அரசு வழங்கும் திட்டங்களை அவர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழா கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது.

    நவாஸ்கனி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன் முன்னிலை வகித்தனர். இதில் அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 82 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்று மற்றும் நினைவுப் பரிசு, 60 பயனாளிகளுக்கு ரூ. 6.57 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி மாற்றுத்திறனாளிகள் என பெயர் வைத்து தனியாக அரசுத் துறை உருவாக்கினார். நம்மில் ஒருவர்களான மாற்றுத்திறனாளிகள் மிகவும் திறமை மிக்கவர்கள். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்துறை உள்ளிட்ட துறைகளோடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை கூடுதல் கவனம் செலுத்தி அவர்களது நலனில் அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறார்.

    மாற்று த்திறனாளிகளுக்கு அரசு அலுவலகங்களில் ஆவின் பாலகம் அமைக்க தேவையான வாடகைத்தொகை செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் தெருவோர தள்ளுவண்டி கடை நடத்துவதற்கான சான்றிதழ்களை நகர விற்பனைக்குழுவின் விதிமுறைகளுக்கிணங்க முன்னுரிமைவழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    முதல்-அமைச்சர் தாயுள்ளத்தோடு ஒரு மாற்றுத்திறனாளியும் மனவருத்தம் அடைந்து விடக்கூடாது என்ற நோக்கத்துடன் கருணை உள்ளத்தோடு அவர்களது நலன்களை காக்க பாடுபட்டு வருகிறார்.

    மாற்றுத்திறனாளி மாணவர்கள் விளையா ட்டிலும் சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் விளையாட்டுத் துறையில் எண்ணற்ற திட்டங்களை முதல்-அமைச்சர் அறிவித்து செயல்படுத்தி வருகிறார். மாற்றுத் திறனாளிகளுக்கு தனித்திறமை உண்டு. எனவே அரசு வழங்கும் திட்டங்களை அவர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயணசர்மா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கதிர்வேல், முடநீக்கு வல்லுனர் ஜெய்சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மாநிலத் துணை தலைவர் இ.எஸ்.எஸ் ராமன் கபடி விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் இரவு நேரங்களிலும் விளையாட மின்விளக்குகள் வழங்கினார்.
    • பிறந்தநாள் விழாவில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசனின் பிறந்தநாள் விழா காஞ்சிபுரம் சங்கரமடம் அருகில் கட்சியின் மாவட்ட தலைவர் மலையூர் புருஷோத்தம்மன் தலைமையில் நடந்தது.

    காஞ்சிபுரம் மாநகர தலைவர் சுகுமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாநிலத் துணை தலைவர் இ.எஸ்.எஸ் ராமன் கலந்து கொண்டு பள்ளி மாணவனுக்கு மிதிவண்டி, மாற்று திறனாளிகள் 3 பேருக்கு வண்டி, கபடி விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் இரவு நேரங்களிலும் விளையாட மின்விளக்குகள்,தொழில் செய்ய முனைவோருக்கு அவர்கள் விரும்பிய தொழில் செய்ய உதவும் உபகரணங்கள், சலவை தொழிலாளர்களுக்கு இஸ்திரி பெட்டி, ஏழை பெண்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டது. இதில் மாநில இளைஞரணி செயலாளர் சங்கர், நகர தலைவர் சுகுமார், வட்டார தலைவர் முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    • மாணவிக்கு பாராட்டு சான்றிதழ் கேடயம் வழங்கப்பட்டது
    • கலெக்டர் தகவல்

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி நலத்துறையின் சார்பாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை, திருமண உதவித்தொகை, இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், மாற்றுத்திறனாளிகள் நல வாரிய சமூக பாதுகாப்பு திட்டம், முதலமைச்சரின் விரிவாக மருத்துவ காப்பீடு திட்டம், வங்கி கடன் மானியம், 6 வயதுடைய மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான ஆரம்ப கால பயிற்சி மையங்கள் செவிதிறன் குறைவு உடைய குழந்தைகளுக்கான பயிற்சி மையம், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு ஆரம்ப கால பயிற்சி மையம் உள்ளிட்ட திட்டங்கள் மாற்றுத்திறனாளி நலத்துறை மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    வேலூர் மாவட்டத்தில் மாற்றுத்திற னாளிகளுக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் நீளம் தாண்டுதலில் 3-ம் இடம் பிடித்து சாதனை செய்த ஹோலி கிராஸ் செவித்திறன் குறைவு உடையோர் பள்ளி மாணவிக்கு பாராட்டு சான்றிதழ் கேடயம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    வேலூர் மாவட்டத்தில் 5579 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.9 கோடியே 35 லட்சத்து 84 ஆயிரத்து 769 மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

    • மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
    • மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லட்சுமணன், துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அம்பாயிரநாதன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் 

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்றது. பொதுமக்கள், வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, புதிய ரேஷன் கார்டு, சாலைவசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பாக 496 மனுக்கள் அளித்தனர். அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    பின்னர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 21 பேருக்கு ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் மூன்று சக்கர சைக்கிள்கள், பிச்சம்பாளையம் புதூர் உயர்நிலைப்பள்ளி சத்துணவு மையத்–தில் அமைப்பாளராக பணிபுரிந்து இறந்தவரின் வாரிசுக்கு கருணை அடிப்படையில் சத்துணவு அமைப்பாளராக பணி நியமன ஆணையை கலெக்டர் வழங்கினார்.

    இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லட்சுமணன், துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அம்பாயிரநாதன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    ×