என் மலர்
நீங்கள் தேடியது "விவேகானந்தர்"
- ன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது
- கடற்கரைப் பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்
கன்னியாகுமரி :
கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துஇருந்தனர்.
கன்னியாகுமரி கடலில் இன்றுஅதிகாலையில் சூரியன் உதயமான காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து பரவசம் அடைந்தனர். அதன்பிறகு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலாபயணிகள் ஆனந்த குளியல் போட்டனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
கன்னியாகுமரி கடல்நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்டகியூவில் காத்திருந்தனர்.அவர்கள் காலை 8 மணியிலிருந்து படகில் ஆர்வத்துடன்பயணம்செய்துவிவேகானந்தர்மண்டபத்தைபார்வையிட்டுவந்தனர்.மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இதனால் சுற்றுலாதலங்கள் களை கட்டியது. இந்தசுற்றுலாதலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுஇருந்தது.கடற்கரைப் பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்புபணியில் ஈடுபட்டு வந்தனர். கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துஉள்ள விவேகானந்தர்நினைவு மண்டபத்தை சபரிமலை சீசன் தொடங்கிய கடந்த 1 7-ந்தேதி முதல்நேற்றுவரை கடந்த10நாட்களில் மட்டும் 73ஆயிரத்து14சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்வையிட்டுஉள்ளனர். கடந்த 17-ந்தேதி 5630 பேரும் 18-ந்தேதி 6725 பேரும் 19-ந்தேதி 8590 பேரும்20-ந்தேதி 8722 பேரும் 21-ந்தேதி 6597 பேரும் 22-ந்தேதி 6507 பேரும் 23-ந்தேதி 6969 பேரும் 24-ந்தேதி 7324 பேரும் 25-ந்தேதி 7052 பேரும் 26-ந்தேதியான நேற்று 8898 பேரும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்வையிட்டு உள்ளனர்.
- மன்னார்குடியில் சுவாமி விவேகானந்தர் பிறந்தநாளை முன்னிட்டு தேசிய இளைஞர் தினம் கொண்டாடப்பட்டது.
- பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சுவாமி விவேகானந்தரை பற்றி சிறப்புரை ஆற்றினார்கள்.
மன்னார்குடி:
மன்னார்குடியில் சுவாமி விவேகானந்தர் பிறந்தநாளை முன்னிட்டு தேசிய இளைஞர் தினம் கொண்டாடப்பட்டது.
இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சுவாமி விவேகானந்தரை பற்றி சிறப்புரை ஆற்றினார்கள்.
இதில் சிறப்பாக உரையாற்றிய மாணவ- மாணவிகளுக்கு பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் ராகவன், மாவட்டத் தலைவர் பாஸ்கர், மாவட்ட அரசு தொடர்பு பிரிவு தலைவர் மருத்துவர் வி.பாலகிருஷ்ணன், மாவட்ட ஓ.பி.சி. அணி தலைவர் பாஸ்கர், மாவட்ட சிறுபான்மை அணி தலைவர் கமாலுதீன், மாவட்ட வெளிநாடு பிரிவு தலைவர் செந்தில் பாலன், நகர தலைவர் ரகுராமன் ஆகியோர் மாணவர்களுக்கு சான்றிதழும் பரிசுகளும் வழங்கினர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட மகளிர் அணி செயலாளர் இலக்கியா, நகர செயலாளர் செந்தில் ராஜ்குமார், நகர இளைஞரணி தலைவர் மனோஜ் குமார் ஆகியோர் செய்து இருந்தனர்.
- சூரியன் உதயமாகும் காட்சியை காண இன்று அதிகாலையில் கடற் கரையில் திரண்ட கூட்டம்
- திருவள்ளுவர் சிலையை 25 ஆயிரத்து 400 சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்வையிட்டு உள்ளனர்.
கன்னியாகுமரி :
சர்வதேச சுற்றுலாதலமான கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது.
இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். கடந்த 29 மற்றும் 30-ந் தேதி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தொடர்விடுமுறை இன்று மே தின விடுமுறை என 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளது. இந்த தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதுகிறது. சுற்றுலாப்பயணிகள் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை படகில் ஆர்வமுடன் சென்று பார்வையிட்டு வருகின்றனர். இந்த தொடர் விடுமுறையை யொட்டி கடந்த 29-ந்தேதி முதல்-இன்றுவரை 3 நாட்கள் தொடர் விடுமுறையில் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை 25 ஆயிரத்து 400 சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்வையிட்டு உள்ளனர்.
இதில் கடந்த 29-ந்தேதி சனிக்கிழமை அன்று 8 ஆயிரத்து 600 பேரும் ஞாயிற்றுகிழமை விடுமுறை நாளான நேற்று 9 ஆயிரத்து 800 பேரும் மே தின தினமான இன்று இதுவரை 7 ஆயிரம் பேரும் படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். தற்போது கோடை காலம் என்பதால் கன்னியாகுமரியில் சூரியன் உதயமாகும் காட்சி தெள்ளத்தெளிவாக தெரிகிறது. இதனால் கோடை கன்னியாகுமரியில் கோடை விடுமுறை சீசன்களை கட்டி உள்ளது. கன்னியா குமரி கடலில் இன்று அதிகாலை சூரியன் உதயமாகும் காட்சியை காண முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டு இருந்தனர்
- பகவதி அம்மன் கோவில் தேரோட்டத்தில் சுற்றுலா பயணிகள் பங்கேற்க ஏற்பாடு
- கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாகத்திரு விழாவை யொட்டி நாளை தேரோட்டம் நடக்கிறது.
கன்னியாகுமரி. மே.31-
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாகத்திரு விழாவை யொட்டி நாளை தேரோட்டம் நடக்கிறது. காலை 8-30 மணிக்கு மேல் 9 மணிக்குள் திருத்தேர் வடம் தொட்டு இழுத்து தேரோட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது.
இந்த தேரோட்டத்தில் விவேகானந்தர் நினைவுமண்டபம் மற்றும் விவேகானந்த கேந்திர தொழிலாளர்கள் குடும்பத்துட ன்பங்கேற்பதற்கு வசதியாகவும் சுற்றுலாப் பயணிகள் இந்த தேர் திருவிழாவில் கலந்து கொண்டு தேர் இழுப்பதற்கு வசதியாகவும் நாளை காலை 8 மணிக்கு கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகுபோக்கு வரத்து தொடங்குவதற்கு பதிலாக 2 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கு கிறது. இந்த தகவலை கன்னியா குமரி விவேகானந்த கேந்திர நிர்வாக அதிகாரி அனந்தஸ்ரீ பத்மநாபன் தெரிவித்து உள்ளார்.
- கடல் உள்வாங்கி காணப்படுகிறது.
- விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து 1 மணி நேரம் தாமதமாக தொடக்கம்
கன்னியாகுமரி:
அமாவாசை தினம் என்பதால் கன்னியாகுமரியில் ஒரு புறம் கடல் சீற்றமாகவும், கொந்தளிப்பாகவும் காணப்படுகிறது.
இன்னொரு புறம் கடல் உள்வாங்கி காணப்படுகிறது. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள வங்க கடல் பகுதி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது. அதே வேளையில் இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக் கடல் பகுதியில் கடல் கொந்தளிப்புடனும் சீற்றமாகவும் காணப்பட்டது. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை.
இதற்கிடையில் காலை 9 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது. இதைத்தொடர்ந்து 1 மணி நேரம் தாமதமாக காலை 9 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.
அதன்பிறகு சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று ஆர்வமுடன் பார்த்து வந்தனர். கன்னியாகுமரி முக்கடல் சங்கத்தில் கடல்சீற்றம் காரணமாக சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க சுற்றுலா போலீசார் தடை விதித்தனர். மேலும் கன்னி யாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங் களில் கடல் சீற்றமாக காணப்பட்டது.
இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி ஆக்ரோஷமாக வீசின. இத னால் இந்த கடற்கரை கிரா மங்களில் பெரும்பாலான கட்டுமரம் மற்றும் வள்ளம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
- முதன் முதலாக வந்து இறங்கிய சுற்றுலா பயணிக்கு விவேகானந்தா கேந்திரா நிறுவனம் சார்பில் நினைவுபரிசு
- 7 கோடியே 20 லட்சத்து 7ஆயிரத்து 571 பேர் பார்வையிட்டு உள்ளனர்
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள பாறையில் பகவதி அம்மன், சிவபெருமானை வேண்டி ஒற்றைக்காலில் நின்று தவம் புரிந்ததாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. இதனால் அந்தப் பாறையில் பகவதி அம்மனின் ஒற்றைக் கால் பாதம் இயற்கையாகவே பதிந்து இருந்தது. இந்தக் கால் பாதத்தை பார்த்து சுவாமி விவேகானந்தர் 1892-ம் ஆண்டு தியானம் செய்தார். அதன் பிறகு அவர் அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகருக்கு சென்று பேசினார். இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்து உள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் தவமிருந்ததை நினைவு கூறும் வகையில் அவரது பெயரால் நினைவு மண்டபம் கட்டப்பட்டது. 1970-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ந் தேதி சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், அப்போதைய ஜனாதிபதி வி.வி.கிரியால் திறந்து வைக்கப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணி க்கப்பட்டது. அன்றுமுதல் இந்த மண்ட பத்தை தினமும் ஆயிர க்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்க ள். இந்த மண்டபம் நிறுவி 52 ஆண்டுகள் நிறைவடைந்து இன்று 53-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி இன்று காலை கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிடுவதற்காக படகில் முதன் முதலாக வந்து இறங்கிய சுற்றுலா பயணிக்கு விவேகானந்தா கேந்திரா நிறுவனம் சார்பில் நினைவுபரிசு வழங்கப்பட்டது.
கடந்த 53 வருடங்களில் இன்று வரை விவேகானந்தர் நினைவு மண்டபத்தை 7 கோடியே 20 லட்சத்து 7ஆயிரத்து 571 பேர் பார்வையிட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
- விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்வையிட்டனர்
- கன்னியாகுமரியில் இருந்து கார் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றனர்.
கன்னியாகுமரி :
மத்திய பாராளுமன்ற நுகர்வோர், உணவு மற்றும் பொது விநியோகத்துறை குழு அதன் தலைவர் லாக்கட் சட்டர் ஜி தலைமையில் திருவனந்தபுரத்தில் இருந்து கார் மூலம் புறப்பட்டு நேற்று மாலை கன்னியாகுமரி வந்தது.
இந்த குழுவில் மொத்தம் 30 எம்.பி.க்கள் மற்றும் அதிகாரிகள் இடம் பெற்று இருந்தனர். இந்த குழுவினர் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை தனிப்படகில் சென்று பார்வையிட்டனர்.
முன்னதாக இந்த பாராளுமன்ற குழுவினரை விவேகானந்தர் பாறை நினைவாலய பொறுப்பாளர் ஆர்.சி.தாணு வரவேற்று மண்டபத்தை சுற்றி காண்பித்து விளக்கி கூறினார்.
அப்போது எம்.பி.க்கள் குழுவினர் விவேகானந்தர் பாறையில் உள்ள ஸ்ரீபாத மண்டபத்தில் பகவதி அம்மனின் கால் பாதம் பதிந்து இருந்த இடத்தை பார்த்து வணங்கினர். மேலும் அங்கு உள்ள தியான மண்டபத்தில் எம்.பி.க்கள் தரையில் அமர்ந்து தியானம் செய்தனர். அதன் பின்னர் இந்த பாராளுமன்ற குழுவினர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு எம்.பி.க்கள் குழுவினரை கோவில் மேலாளர் ஆனந்த் தலைமையில் கோவில் நிர்வாகத்தினர் வரவேற்றனர்.
பின்னர் பாராளுமன்ற குழுவினர் பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். அதன்பிறகு கன்னியாகுமரியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களையும் சுற்றி பார்வையிட்டனர். பின்னர் பாராளுமன்ற குழுவினர் கன்னியாகுமரியில் இருந்து கார் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றனர்.
- 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய ஊழியர்களுக்கு நினைவு பரிசு
- சிக்காகோவில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய சொற்பொழிவை நினைவு கூறும் உலக சகோதரத்துவ தினவிழா
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரம் மற்றும் விவேகானந்த கேந்திர வித்யாலயா சார்பில் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை நாட்டுக்கு அர்ப்பணித்த 53-வது ஆண்டு விழா, 1893-ம் ஆண்டு சிக்காகோவில் நடைபெற்ற சர்வ தர்ம சபையில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய சொற்பொழிவை நினைவு கூறும் உலக சகோதரத்துவ தினவிழா ஆகிய இருபெரும்விழா விவேகானந்தபுரம் விவேகானந்தகேந்திர வளாகத்தில் நடந்தது. கேந்திர உதவித்தலைவர் அனுமந்த ராவ் தலைமை தாங்கினார். விவேகானந்த கேந்திர வித்யாலயா பள்ளி முதல்வர் சரிகா வரவேற்றுப் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துஉள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் விவேகானந்த கேந்திராவில்10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய ஊழியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலும் கேந்திர வித்யாலயா பள்ளியில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் விவேகானந்தர் கேந்திர வித்யாலயா பள்ளி உதவி முதல்வர் சஞ்சீவி ராஜன் நன்றி கூறினார். பின்னர் பள்ளி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது
- மழையினால் நேற்று ஒரே நாளில் 3800 பேர் பார்த்தனர்.
- சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
கன்னியாகுமரி:
சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இருப்பினும் சீசன் காலங்களிலும் வாரத்தின் இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களிலும் பண்டிகை கால தொடர்விடுமுறை நாட்களிலும் வழக்கத்தை விட அதிகமான அளவு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
இந்த நிலையில் பள்ளி களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டதாலும், மிலாடி நபி விடுமுறை நாளான கடந்த மாதம் 28-ந்தேதி முதல் காந்தி ஜெயந்தி யான கடந்த 2-ந்தேதி வரை தொடர் விடுமுறை என்ப தால் கன்னியாகுமரிக்கு தமிழ்நாடு மட்டும் இன்றி வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து குவிந்த வண்ணமாக இருந்தனர்.
தொடர் விடுமுறையை யொட்டி கடந்த மாதம் 28-ந்தேதி முதல் இந்த மாதம் 3-ந்தேதி வரை 6 நாட்களில் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை 37 ஆயிரத்து 660 சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்வை யிட்டு வந்து உள்ளனர். மழையின் காரணமாக நேற்று விடுமுறை விடப்பட்டி ருந்தாலும் 3,800 பேர் மட்டுமே விவேகா னந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்வையிட்டு உள்ளனர். இதன் மூலம் பூம்புகார் கப்பல் போக்கு வரத்து கழக நிறுவனத்துக்கு சுமார் ரூ.50 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.
- வட்டகோட்டைக்கு 4 ஆயிரம் பேர் உல்லாச படகு சவாரி
- சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் வழக்கத்தை விட அதிகமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். இந்த 3 மாத காலமும் இங்கு சீசன் காலமாக கருதப்படுகிறது. இதேபோல ஏப்ரல், மே கோடை விடுமுறை சீசன் காலங்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு படையெடுப்பார்கள்.
இந்த நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வாரவிடுமுறை நாட்கள் மற்றும் ஆயுதபூஜை, விஜயதசமி தொடர் விடுமுறையையொட்டி கடந்த 4 நாட்களாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமானதால் கன்னியாகுமரி களை கட்டியது. இந்த 4 நாட்கள் தொடர் விடுமுறையிலும் சுற்றுலா தலங்களுக்கு மக்கள் படை எடுத்துச்சென்ற வண்ணமாக இருந்தனர்.
அந்த அடிப்படையில் கன்னியாகுமரியிலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாட்கள் மற்றும் ஆயுத பூஜை தொடர் விடுமுறை நாட்களில் பல்லா யிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இன்றும் கன்னியாகுமரி யில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கி லித்துறை கடற்கரை பகுதியில் அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர். கன்னியாகுமரி கடலில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமான காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். அதன்பிறகு கன்னி யாகுமரி முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. கன்னியாகு மரி கடல்நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட கியூவில் காத்திருந்தனர். அவர்கள் காலை 8 மணியில் இருந்து படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகா னந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.
மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவு பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுது போக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன் காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இதனால் விடுமுறை இல்லாத நாட்களிலும் சுற்றுலா தலங்கள் களை கட்டியது. இந்த சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. கடற்கரை பகுதியில் சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை ஆயுத பூஜை தொடர் விடுமுறையில் கடந்த 4 நாட்களில் மட்டும் 34 ஆயிரத்து 175 சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்வையிட்டுள்ளனர். வாரத்தின் இறுதி விடுமுறை நாளான கடந்த 21-ந்தேதி சனிக்கிழமை அன்று 8 ஆயிரத்து 100 பேரும், 22-ந்தேதி 9 ஆயிரத்து 925 பேரும், ஆயுத பூஜை தினமான 23-ந்தேதி 10 ஆயிரத்து 100 பேரும், விஜயதசமியான நேற்று பரிவேட்டையை யொட்டி மதியம் 12 மணியுடன் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால் பகல் 12 மணி வரை 6 ஆயிரத்து 50 பேரும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்வையிட்டு உள்ளனர்.
அதேபோல கடந்த 4 நாட்களாக வட்ட கோட்டைக்கு 4 ஆயிரம் சுற்றுலா பயணிகள் உல்லாச படகு சவாரிசெய்து உள்ளனர். ஆயுத பூஜைதொடர் விடுமுறையையொட்டி பட்டுக்கோட்டைக்கு கடந்த 4 நாட்களாக திருவள்ளுவர், தாமிரபரணி ஆகிய 2 சொகுசு படகுகளும் இயக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
- நாளை மறுநாள் ஏற்றப்படுகிறது
- கடற்கரையில் இருந்தவாரே சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் விவேகானந்தர் பாறையில் ஏற்றப்படும் மகா தீபத்தை பார்த்து வணங்கி வழிபடுவார்கள்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறையில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி நாளை மறுநாள் (26-ந்தேதி) மாலை மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதையொட்டி நாளை மறுநாள் மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறைக்கு பகவதி அம்மன் கோவில் மேல்சாந்தி தனிப்படகில் சென்று பாறையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.
இதையொட்டி அங்கு ஸ்ரீபாத மண்டபத்தில் உள்ள பாறையில் இயற்கையாகவே அமைந்துள்ள பகவதி அம்மன் கால் தடம் பதிந்து இருந்த இடத்தில் எண்ணெய், பால், பன்னீர், தயிர், இளநீர், மஞ்சள் பொடி, சந்தனம், குங்குமம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. அதன் பின்னர் அம்மனின் பாதத்திற்கு விசேஷ பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்படுகிறது.
இதைத்தொடர்ந்து ஸ்ரீபாத மண்டபத்தில் இருந்து கோவில் மேல்சாந்தி கார்த்திகை தீபத்தை மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து ஸ்ரீபாதமண்டபத்தின் மேற்கு பக்கம் கடற்கரையில் உள்ள பகவதி அம்மன் கோவில் கிழக்கு வாசலை நோக்கி மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. விவேகானந்தர் பாறையில் ஏற்றப்படும் கார்த்திகை மகா தீபம் விடியவிடிய எரிந்து கொண்டே இருக்கும். கடற்கரையில் இருந்தவாரே சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் விவேகானந்தர் பாறையில் ஏற்றப்படும் மகா தீபத்தை பார்த்து வணங்கி வழிபடுவார்கள்.
- விவேகானந்தர் அமெரிக்க நாட்டில் உள்ள சிகாகோ சென்று ஆன்மீக சொற்பொழிவாற்ற அனுமதி கிடைத்தது.
- கடைசியில் ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதியை விவேகானந்தர் சந்தித்தார்.
18ம் நூற்றாண்டில் விவேகானந்தர் அமெரிக்க நாட்டில் உள்ள சிகாகோ சென்று ஆன்மீக சொற்பொழிவாற்ற அனுமதி கிடைத்தது.
விவேகானந்தர் இந்திய மன்னர்கள் பலரை சந்தித்து பேசி உதவி கேட்டார். ஆனால் யாரும் உதவி செய்யவில்லை.
கடைசியில் ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதியை விவேகானந்தர் சந்தித்தார்.
சிகாகோவில் சொற்பொழிவு ஆற்ற செல்வதற்கு வேண்டி உதவி கேட்டார்.
அவர் உதவியும் செய்தார். சேதுபதி சிவபக்தர். ஆங்கிலத்தில் புலமை பெற்றவர்.
பாஸ்கர சேதுபதி, உத்திரகோச மங்கை திருத்தலத்தில் தனது குலதெய்வமான ஈசன் ஈஸ்வரியிடம் அருள் பெற்று சிகாகோவுக்கு செல்லும்படி விவேகானந்தரிடம் கேட்டுக்கொண்டார்.
அதன்படி விவேகானந்தர் உத்திரகோசமங்கை சென்று பூஜைகள் செய்து பெற்றார்.
பிறகு பாஸ்கர சேதுபதி, சுவாமி விவேகானந்தரை இராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை சீனா வழியாக சிகாக்கோவிற்கு சுவாமியை அனுப்பி வைத்தார்.
விவேகானந்தர் சிகாகோ மேடையில் சகோதர, சகோதரிகளே என்று ஆரம்பித்து சொற்பொழிவாற்றத் தொடங்கினார்.
சுவாமியை பற்றி உலகம் முழுவதும் தெரியவந்தது.
உலக நாடுகள் முழுவதும் சுவாமிக்கு வரவேற்பு கொடுத்து வெற்றி விழா கொண்டாட அழைத்தார்கள். ஆனால் சுவாமி எந்த நாட்டுக்கும் செல்லவில்லை.
உலகப்புகழ் பெறும் வகையில் தனக்கு காரணமாக இருந்த உத்திரகோச மங்கை திருத்தலத்தில் உள்ள ஈசன், ஈஸ்வரி மற்றும்பாஸ்கர சேதுபதியைபார்க்க வேண்டும் என்று சுவாமி விவேகானந்தர் கடித வரைவு ஒன்றை மன்னர் சேதுபதிக்கு எழுதினார்.
இதன்மூலம் விவேகானந்தரின் பேரும் புகழும் உலகம் முழுவதும் பெருகக் காரணமாக இருந்தது உத்திரகோச மங்கை ஈசன் ஈஸ்வரி தான் என்பது தெளிவாகிறது.