என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆணையர்"
- தமிழக அரசு ஆணையர் கண்ணனை கோவை மாவட்டத்தில் உள்ள நகரியல் பயிற்சி மைய இயக்குனராக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டது.
- முன்னதாக பொறியாளர் கணேசன், சுகாதார அலுவலர் அருள்நம்பி உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையராக கண்ணன் பணியாற்றி வந்தார். இந்நிலையில் தமிழக அரசு ஆணையர் கண்ணனை கோவை மாவட்டத்தில் உள்ள நகரியல் பயிற்சி மைய இயக்குனராக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டது. மேலும் தாம்பரம் மாநகராட்சியின் துணை ஆணையராக பணி புரிந்து வந்த செந்தில்முருகனை காஞ்சிபுரம் மாநகராட்சியின் ஆணையராக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டது.
இதன் பேரில் காஞ்சிபுரம் மாநகராட்சியின் 3-வது ஆணையராக செந்தில் முருகன் மாநராட்சி ஆணையரக அலுவலகத்தில் நேற்று முறைப்படி பதிவேட்டில் கையெழுத்திட்டு பணி பொறுப்பேற்றார். முன்னதாக பொறியாளர் கணேசன், சுகாதார அலுவலர் அருள்நம்பி உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
- கோவிலுக்கு நன்கொடை அளித்தவருக்கு சிறப்பு மரியாதை வேண்டுமா? என்பது பற்றி இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பதிலளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
- பொது நலன் கருதி ஒரு விசயத்தை தெளிவுபடுத்த வேண்டும்.
மதுரை
சிவகங்கை மாவட்டம் கண்டனூர் கிராமத்தை சேர்ந்த சின்னன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில் கூறியிருப்பதாவது:-
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை, கண்டனூர் கிராமத்தில் உள்ள செல்லாயி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. இதை முன்னிட்டும், திருவிழாக்காலங்களிலும் தனி நபருக்கு எந்த விதமான சிறப்பு மரியாதை கோவில் சார்பில் வழங்கக்கூடாது என்பதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி தனது உத்தரவில் கோவில் நிர்வாக நடைமுறையில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தான் முடிவு செய்ய வேண்டும். அதே வேளையில், பொது நலன் கருதி ஒரு விசயத்தை தெளிவு படுத்த வேண்டும்.
ஒரு நபர் கோவிலுக்கு தனது பங்களிப்பை, நன்கொடையாக வழங்கியிருந்தால் அவர்களுக்கு, கோவில் சார்பில் சிறப்பு மரியாதை வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்து சிவகங்கை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற 21-ந்தேதி நீதிபதி ஒத்தி வைத்தார்.
- திடக்கழிவு மேலாண்மை பணிகள் மேற்கொள்ள ரூ. 3.90 லட்சத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- இந்தத்திட்டத்தில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளதாக நாங்கள் சந்தேகிக்கிறோம்.
பல்லடம் :
பல்லடம் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று நகர்மன்ற உறுப்பினர்கள் ஈஸ்வரமூர்த்தி, சௌந்தர்ராஜன், பாலகிருஷ்ணன், ராஜசேகரன், ருக்மணி சேகர், விஜயலட்சுமி, சுகன்யா ஜெகதீஷ், பாமிதா கயாஸ், சசிரேகா ரமேஷ், ஈஸ்வரி உள்ளிட்ட 10 நகர்மன்ற உறுப்பினர்கள் நகராட்சி ஆணையாளரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- கடந்த மே 30ந்தேதி நடைபெற்ற நகர் மன்ற கூட்டத்தில், தீர்மானம் எண் 20ன் படி திடக்கழிவு மேலாண்மை பணிகள் மற்றும் அதன் தொடர்பான பணிகள் மேற்கொள்ள ரூ. 3.90 லட்சத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தில் பல்வேறு குளறுபடிகள் உள்ளது தற்போது தெரிய வருகிறது. திடக்கழிவு மேலாண்மை பணிகளை ஒப்பந்தம் விடுவதற்கு மிக அவசரம் காட்டியது, ஒப்பந்ததாரரின் உரிய விபரங்கள் இல்லாதது போன்ற குளறுபடிகள் உள்ளதால், இந்தத்திட்டத்தில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளதாக நாங்கள் சந்தேகிக்கிறோம்.
எனவே நகராட்சி நிர்வாகம் சட்ட விதி 164ன் படி பெரும்பான்மையான நகர் மன்ற உறுப்பினர்கள் இந்த தீர்மானத்தை எதிர்க்கிறோம். எனவே அந்த தீர்மானத்தை ரத்து செய்து மீண்டும் நகர் மன்ற கூட்டத்தை நடத்தி அந்தத் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தி, உரிய விளக்கம் அளித்து பின்னர் நிறைவேற்றலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆக்கிரமிப்பால் தண்ணீர் சீராக செல்வது இல்லை என பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டினர்.
- 11-வது வார்டு பகுதியில் ஆணையர் ஆனந்த மோகன் ஆய்வு மேற்கொண்டார்.
நாகர்கோவில் :
நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன் 13-வது வார்டு பகுதியான தழுவியபுரம் ஒற்றைதெரு, ரவிவர்மன்தெரு, புளியவிளை தெரு உள்ளிட்ட பகுதியில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது கழிவுநீர் ஓடைகளில் அடைப்பு, ஆக்கிரமிப்பால் தண்ணீர் சீராக செல்வது இல்லை என பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டினர்.
மேலும் குடிநீர் சரியாக வருவது இல்லை. வசதி படைத்தவர்கள் வீட்டில் பெரிய தொட்டி அமைத்து, குடிநீர் பிடிக்கின்றனர். இதனால் மற்ற வீடுகளுக்கு தண்ணீர் கிடைப்பது சிக்கலாக உள்ளது. இதனை சரிசெய்து, போதிய அளவு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து ஆணையர் கழிவுநீர் ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலும் கழிவுநீர் ஓடையின் மீது பெரிய அளவில் போடப்பட்டு இருக்கும் காங்கீரிட் பாதைகளை அகற்ற வேண்டும். மேலும் அனைத்து வீடுகளுக்கும் ஒரே மாதிரி குடிநீர் கிடைக்கும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதனை தொடர்ந்து 11-வது வார்டு பகுதியில் ஆணையர் ஆனந்த மோகன் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது சுகாதார ஆய்வாளர் மாதவன்பிள்ளை, கவுன்சிலர் ஆச்சியம்மாள் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.
- அனைத்து வரிவசூல் மையங்களும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்.
- ரூ.9,81,994 ஊக்கத்தொகையான 5 சதவீதத்தின்படி வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன்குமார் கிரியப்பனவர் வெளியிட்டு ள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாநகராட்சிக்கு செலுத்தவேண்டிய நடப்பு 2023-24ம் நிதியாண்டின் முதல் அரையாண்டிற்கான சொத்து வரியினை 30.4.2023க்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு தங்களது சொத்துவரி தொகையில் 5 சதவீதம் ஊக்கத்தொகை நாளை 29 ,30-ந்தேதி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்மாநகராட்சியின் அனைத்து வரிவசூல் மையங்களும் காலை 9 மணி முதல் மாலை6 மணி வரை செயல்படும்.மைய அலுவலக கணிணி வரி வசூல் மையம், நான்கு மண்டல அலுவ லகங்கள்,குமரன் வணிக வளாகம், செட்டிபாளையம், தொட்டிபாளையம், நெருப்பெரிச்சல், மண்ணரை முத்தண ம்பாளையம், வீரபாண்டி, முருகம்பா ளையம், ஆகிய கணிணி வரிவசூல் மையங்களில் பணமாகவோ அல்லது காசோலை மூலமாகவோ செலுத்தலாம்.எளிய முறையில் இணையதளம் வழியாக வரி செலுத்தும் சேவையைபயன்படுத்த Use "Quick Payment" or "Register &, Login" to https://tnurbanepay.tn.gov.in வழியாக செலுத்தலாம். தொடர்ந்து நேற்று வரை 5,130 நபர்கள் வரிகளை செலுத்தி, சுமார்ரூ.9,81,994 ஊக்கத்தொகையான 5 சதவீதத்தின் படி வழங்க ப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் இந்த வசதியினை பயன்படுத்தி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய நடப்பு 2023-24 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்துவரையினை செலு த்தி மாநகராட்சி வளர்ச்சி பணிகளுக்கு தங்களது பங்களிப்பினைவழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- பல்வேறு திட்ட பணிகள் குறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் தாரேஸ் அகமது ஆய்வு செய்தார்.
- ரூ.46.57 லட்சம் மதிப்பீட்டில் 1,200 மீட்டர் சாலை அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், தில்லையேந்தல் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகள் குறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் தாரேஸ் அகமது, கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சாலை, குடிநீர், தெருவிளக்கு வசதி, முதியோர் உதவித்தொகை மற்றும் அடிப்படை வசதி குறித்து ஆய்வு செய்ததுடன் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆணையர் தாரேஸ் அகமது பொதுமக்களிடம் வீடு, வீடாக சென்று கேட்டறிந்தார்.
முன்னதாக மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பார்த்திபனூர் பகுதியில் பயனாளிகளுக்கு நடமாடும் வாகனம் மூலம் சிகிச்சைகள் மற்றும் மருந்து, மாத்திரைகள் அளிக்கப்படுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பரமக்குடி ஊராட்சி ஒன்றியம் அரியனேந்தல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய பொது நிதி திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பீட்டில் மாசு நீர் சுத்திகரிப்பு பணி நடைபெற்று வருவதையும், அரியனேந்தல் ஆதிதிராவிடர் காலனியில் 15-வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் மகளிர் சுகாதார வளாகம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதையும், இந்திரா நகர் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சத்து 41 ஆயிரம் மதிப்பீட்டில் செங்குத்து உறிஞ்சிக்குழி பணிகள் நடைபெறுவதையும் பார்வையிட்டார்.
நெல்மடுவலூர் ஊராட்சியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வட்டார பொது சுகாதார மையத்தின் கட்டுமான பணிகளையும், போகலூர் ஊராட்சி ஒன்றியம், பூவிளத்தூர் கிராமத்தில் தமிழ்நாடு கிராம சாலைகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் ரூ.46.57 லட்சம் மதிப்பீட்டில் 1,200 மீட்டர் தொலைவில் வணங்கானேந்தல் வழியாக பூவிளத்தூர் வரை சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரவீன் குமார், பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பரமசிவன், உதவி இயக்குநர் (தணிக்கை) அருள் சேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரமோகன், ரவி, போகலூர் செயற்பொ றியாளர் சுந்தரேசன், உதவி செயற்பொறியாளர்கள் அழகேசன், கல்யாண சுந்தரம், தில்லையேந்தல் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- மதுரை - திருமங்கலம் இரட்டை பாதை பணி: ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் 13-ந் தேதி ஆய்வு செய்கிறார.
- அந்தப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ரெயில்பாதையை நெருங்கவோ, கடக்கவே வேண்டாம் என ரெயில்வே அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.
மதுரை
மதுரை - திருமங்கலம் இடையே 17.32 கி.மீ. தொலைவுக்கு இரட்டை ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதனை பெங்களூரு தென் சரக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் நாளை மறுநாள் (13-ந் தேதி) ஆய்வு செய்கிறார். அப்போது மதுரை-திருமங்கலம் இடையே காலை 9.30 மணி முதல் மதியம் 2 மணி வரை மோட்டார் டிராலி மூலம் ஆய்வு நடக்கிறது. அதன்பிறகு மாலை 3 மணி முதல் 6 மணி வரை அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நடக்கிறது. இதனைத் தொடர்ந்து மதுரை-திருமங்கலம் இரட்டை பாதையில், மின்மயமாக்கல் ஏற்பாடுகளை தெற்கு ரெயில்வே தலைமை முதன்மை மின் பொறியாளர் சித்தார்த்தா 14-ந் தேதி ஆய்வு செய்ய உள்ளார். இதற்காக அந்த பகுதியில் சிறப்பு ஆய்வு ரெயில் மூலம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஆய்வு நடக்கிறது. இதனைத் தொடர்ந்து மதுரை- திருமங்கலம் இடையேயான புதிய இரட்டை ரெயில் பாதை மின்தடத்தில் 25 ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ச்சப்பட்டு சிறப்பு ஆய்வு ரெயில் மூலம் சோதனை நடத்தப்படுகிறது. எனவே அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இரட்டை ரெயில் பாதையை நெருங்கவோ, கடக்கவே வேண்டாம் என்று மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.
- சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து ஓமலூர் வரை டிராலி மூலம் அகல ரெயில் பாதையை ஆய்வு செய்தார்.
- அப்போது புதிதாக அமைக்கப்பட்ட ரெயில் பாதையில் பாதையின் தண்டவாள அமைப்பு எவ்வாறு உள்ளது? மேலும் பாலங்கள், சிக்னல்கள், சண்டிங் பகுதிகள், ஆகியவற்றை டிராலியில் இருந்து இறங்கி அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
சேலம்:
சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் முதல் ஓமலூர் ரெயில் நிலையம் வரை உள்ள 12 கிலோமீட்டர் தூரத்தில் ஒரு வழி ரெயில் பாதை பாதையாக இருந்தது. இதனை அடுத்து சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் முதல் ஓமலூர் வரை உள்ள ஏற்கனவே கடந்த 20 வருடமாக கிடப்பில் இருந்த மீட்டர் கேஜ் பாதையை அகல ரெயில் பாதையாக மாற்ற ரெயில்வே நிர்வாகம் சுமார் ரூ 50 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருந்தது.
இதனைத் தொடர்ந்து கடந்த 2 வருடங்களாக புதிய அகல ரெயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அகல ரெயில் பாதை அமைக்கும் பணி நிறைவடைந்ததை அடுத்து அந்த ரெயில் பாதையை ஆய்வு செய்யவும் மேலும் அந்த பாதையில் அதிவிரைவு ரெயில் சோதனை ஓட்ட நடத்தவும் திட்டமிடப்பட்டது.
அதன்படி அந்தப் பாதையில் ஆய்வு செய்வதற்காக தெற்கு ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.கே.ராய் இன்று காலை சிறப்பு ரெயிலில் சேலம் வந்தார், இதனை அடுத்து இன்று காலை சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து ஓமலூர் வரை டிராலி மூலம் அகல ரெயில் பாதையை ஆய்வு செய்தார்.
அப்போது புதிதாக அமைக்கப்பட்ட ரெயில் பாதையில் பாதையின் தண்டவாள அமைப்பு எவ்வாறு உள்ளது? மேலும் பாலங்கள், சிக்னல்கள், சண்டிங் பகுதிகள், ஆகியவற்றை டிராலியில் இருந்து இறங்கி அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது தலைமை கட்டுமான நிர்வாக அதிகாரி சி. கே .குப்தா, சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் கவுதம் ஸ்ரீநிவாஸ்,கோட்ட தலைமை பொறியாளர் ராம் கிஷோர், ஒப்பந்ததாரர்கள் கவுதமன், அன்பு அரசு,கட்டுமான துணை முதன்மை அதிகாரி கமல்ராஜ் உள்ளிட்ட ரெயில்வே அதிகாரிகள் உடன் இருந்தனர்,
- மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து பொதுமக்களிடமிருந்து தூய்மை பணியாளர்கள் குப்பைகளை சேகரித்து வருகிறார்கள்
- குப்பைகள் சரியான முறையில் வாங்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து மாநகராட்சி வண்டியின் மேல் ஏறி ஆய்வு செய்தார்.
நாகர்கோவில் :
நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 52 வார்டுகளிலும் உள்ள வீடுகளில் இருந்து குப்பைகள் தரம் பிரித்து வாங்கப்பட்டு வருகிறது. மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து பொதுமக்களிடமிருந்து தூய்மை பணியாளர்கள் குப்பைகளை சேகரித்து வருகிறார்கள். தினமும் சுகாதார ஆய்வாளர்கள் அந்தந்த பகுதிகளில் தூய்மை பணியாளர்கள் சேகரிக்கும் குப்பைகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று நாகர்கோவில் வாத்தியார்விளை பகுதியில் சுகாதாரப் பணியாளர்கள் குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.சேகரிக்கப்பட்ட குப்பைகளை மாநகராட்சி வண்டியில் ஏற்றினார்கள். இதை ஆணையாளர் ஆனந்த மோகன் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தரம் பிரித்து வாங்கப்பட்ட குப்பைகள் சரியான முறையில் வாங்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து மாநகராட்சி வண்டியின் மேல் ஏறி ஆய்வு செய்தார்.
- 13ந் தேதி முதல் 15 ந் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும்.
- 18 ஆயிரம் கொடிகள் தயாரிக்கப்பட்டு வீடு வீடாக சென்று வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பல்லடம் :
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகளில் தேசியக் கொடி ஏற்றி கொண்டாட வேண்டும் என பல்லடம் நகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து பல்லடம் நகராட்சி ஆணையாளர் விநாயகம் கூறியதாவது:-
சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் வரும் 13ந் தேதி முதல் 15 ந் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி என்ற கருத்தியல் படி ஏற்றி கொண்டாடுமாறு அரசுகள் அறிவுறுத்தியுள்ளது.இதன்படி பல்லடம் நகராட்சியில் உள்ள 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவைகளுக்கு தேசிய கொடியை ஏற்ற வைக்கும் நோக்கில் 18 ஆயிரம் கொடிகள் தயாரிக்கப்பட்டு நகராட்சி பணியாளர்கள் வீடு வீடாக சென்று தேசியக்கொடி வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பணியில், நகராட்சி ஊழியர்கள், தற்காலிகபணியாளர்கள், மற்றும் கவுன்சிலர்களும் ஈடுபட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தேசியக்கொடிகளை பெற்றுக் கொண்டு அதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள் படி வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி வைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் வீடுவீடாக தேசியக்கொடி வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
- நகராட்சி ஆணையர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
- திட்டப்பணிகளையும் ஆய்வு செய்தார்
பெரம்பலூர்:
பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட அரணாரையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சாலை அமைக்கும் பணி நகராட்சி நிர்வாகம் சார்பில் நடந்து வருகிறது. இந்த பணிகளை பெரம்பலூர் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) மனோகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது 16, 17-வது வார்டு பகுதிகளில் காவிரி குடிநீர் வினியோகம், தெருவிளக்குகள் பராமரிப்பு உள்ளிட்டவைகளில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா? என்பது குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது 17-வது நகர்மன்ற வார்டு உறுப்பினர் துரை காமராஜ் உடனிருந்தார். மேலும் வார்டுகளில் உள்ள குறைகளை பொதுமக்களிடம் கேட்டறிந்து அதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்."
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்