என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்சோவில் கைது"

    • பள்ளி சீருடைக்கு அளவெடுப்பதற்காக ஒரு ஆண் டெய்லரும், பெண் டெய்லரும் பள்ளிக்கு வந்தனர்.
    • இந்த சம்பவம் குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவிதா விசாரணை நடத்தினார்.

    மதுரை நகர் அனைத்து மகளிர் போலீசில் மாணவி ஒருவர் புகார் அளித்து இருந்தார். அந்த புகாரில், நான் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறேன். பள்ளி சீருடைக்கு அளவெடுப்பதற்காக ஒரு ஆண் டெய்லரும், பெண் டெய்லரும் பள்ளிக்கு வந்தனர். அவர்களிடம் அளவு எடுப்பதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். இதுதொடர்பாக வகுப்பு ஆசிரியையிடம் கூறினேன். ஆனால், அவர் கண்டிப்பாக சீருடைக்கு அளவெடுக்க வேண்டும் என கூறிவிட்டார். இதுபற்றி பள்ளி நிர்வாகத்தினரிடம் புகார் கூறினேன். அவர்களும் அது பற்றி கண்டுகொள்ளவில்லை.

    பள்ளிக்கு வந்த ஆண் டெய்லர் அளவெடுத்தபோது என்னிடம் அத்துமீறினார். உடல் பாகங்களை தொட்டு, பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். எனவே, அவர் மீதும் அவருக்கு உடந்தையாக இருந்த ஆசிரியை மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

    இந்த சம்பவம் குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவிதா விசாரணை நடத்தினார்.

    இதில், பள்ளிக்கு வந்து சீருடைக்காக அளவெடுத்தபோது மாணவியிடம் அத்துமீறியதாக 60 வயதுடைய டெய்லர் மற்றும் அவரது சகோதரியான மற்றொரு டெய்லர், இதற்கு உடந்தையாக இருந்ததாக ஆசிரியை ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து மாணவியிடமும், அந்த 3 பேரிடமும் விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் மாணவிகளுக்கு சீருடை அளவெடுத்த விவகாரம் தொடர்பாக 3 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 டெய்லர்கள், அளவெடுக்க வைத்த ஆசிரியை உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மாணவி அளித்த புகாரின் பேரில் டெய்லர்கள் பாரதி மோகன், கலாதேவி, மாணவியை கட்டாயப்படுத்தியதாக ஆசிரியை சாராவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • விக்னேஷ் பள்ளி மாணவியை திருமணம் செய்தது தெரியவந்தது.
    • விக்னேஷை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    காரிமங்கலம்,

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி காரிமங்கலம் அரசு பெண்கள் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த அண்ணாதுரை என்பவரின் மகன் விக்னேஷ் (வயது 23). இவர் காரிமங்கலத்தில் பானி பூரி கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கும் பள்ளி மாணவிக்கும் இடையே பழக்க வழக்கம் இருந்து வந்துள்ளது.

    இந்நிலையில் கடந்த மாதம் 8-ம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பாத நிலையில் அவரது குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தேனி மாவட்டத்தில் இருவரையும் போலீசார் கண்டுபிடித்து அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் விக்னேஷ் பள்ளி மாணவியை திருமணம் செய்தது தெரியவந்தது.

    இதை அடுத்து பாலக்கோடு மகளிர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்த தாக விக்னேஷை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மாணவிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    • மாணவன்(வயது12) ஒருவரை, தனியாக அழைத்துசென்று, பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததார்.
    • பெற்றோர்கள் காரைக்கால் கோட்டுச்சேரி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

    காரைக்கால், நவ.16-

    காரைக்கால் கோட்டுச்சேரி அருகே உள்ள இராயன்பாளையத்தில், மத்திய அரசின் நவோதயா பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் மாணவர்கள் பலர் அங்கேயே தங்கி படித்து வருகின்றனர். பள்ளி காவலாளியாக, நாகை மாவட்டம் தரங்கம்பாடியைச்சேர்ந்த முகம்மது அலி(வயது54) என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார்.

    நேற்று முன்தினம் மாலை, பள்ளி விடுதியில் இருந்த 8-ம் வகுப்பு மாணவன்(வயது12) ஒருவரை, தனியாக அழைத்துசென்று, பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததார். இது குறித்து, மாணவன் தன் பெற்றோரிடம் போன் மூலம் தெரிவித்துள்ளார். பெற்றோர்கள் காரைக்கால் கோட்டுச்சேரி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார், முகம்மது அலி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • 9-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார்.
    • கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை ரோடு பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் 9-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார்.

    இவருக்கு உடல் நிலை சரியில்லாததால் படிப்பை தொடராமல் வீட்டில் இருந்து வருவதாக தெரிகிறது. இந்த நிலையில் சிறுமியின் வீட்டின் அருகே அவரது தாயாரின் அக்கா வசித்து வருகிறார். அவரின் கணவர் அடிக்கடி சிறுமியின் வீட்டுக்கு சென்று வந்துள்ளார்.

    பெரியப்பா என்பதால் யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை. இதனை பயன்படுத்தி கொண்ட அவர் சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வந்து சிறுமியை கடந்த 5 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    மேலும் இதுகுறித்து வெளியில் சொன்னால் கொன்றுவிடுவதாக சிறுமியை மிரட்டி உள்ளார். இதனால் பயந்து போன சிறுமி யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டது.

    இதனால் சிறுமியின் பெற்றோர் அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தனர். அப்போது சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் அவரிடம் விசாரித்தனர். அப்போது அவர் பெரியப்பா பாலியல் பலாத்காரம் செய்ததை கூறினார்.

    இதுகுறித்து சிறுமியின் தாயார் மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சிறுமியின் பெரியப்பா மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை ேகார்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    • 16 வயது சிறுமி பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
    • சிறுமி கூடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த கூலி வேலை செய்து வரும் பிரியதர்ஷன் (25) என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நட்பாக பழகி வந்தனர்.

    இது நாளடைவில் காதலாக மாறியது. ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் பிரியதர்ஷன் சிறுமியிடம் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என ஆசைவார்த்தை கூறி பாலியல் பலத்காரம் செய்தார்.

    இதனால் அந்த சிறுமி 5 மாதம் கர்ப்பமானார். இது நாளடைவில் சிறுமியின் குடும்பத்திற்கு தெரியவந்தது. இதில் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது சிறுமி நடந்தவற்றை கூறினார்.பின்னர் இதுகுறித்து சிறுமி கூடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பிரியதர்ஷனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
    • அவரை வாலிபர் பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.

    அன்னூர்,

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள குப்பம் பாளையத்தை சேர்ந்தவர் 21 வயது வாலிபர்.

    கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். இந்தநிலையில் சிறுமியின் பெற்றோர் காதலுக்கு எதிப்பு தெரிவித்தனர். அவர்களது எதிர்ப்பை மீறி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22-ந் தேதி சிறுமியை வாலிபர் திருமணம் செய்தார். பின்னர் தனது வீட்டிற்கு அழைத்து சென்று அவருடன் குடும்பம் நடத்தி வந்தார்.

    தற்போது சிறுமிக்கு 17 வயது ஆகிறது. இந்த நிலையில் சிறுமி கர்ப்பமானார். அவரை வாலிபர் பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அப்போது டாக்டர்கள் சிறுமியை பரிசோதனை செய்த போது அவர் 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. சிறுமியின் வயதை டாக்டர்கள் ஆய்வு செய்த போது அவர் 17 வயதில் கர்ப்பமானது தெரிய வந்தது.

    இது குறித்து அவர்கள் அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் வாலிபர் சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கியது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.  

    • 8 வயது சிறுமி சம்பவத்தன்று தனது வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தார்.
    • சிறுமிக்கு சாக்லெட் வாங்கி கொடுத்து விட்டு, தனது வீட்டிற்கு அழைத்து சென்றார்.

    ஊட்டி,

    ஊட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 8 வயது சிறுமி. சிறுமி சம்பவத்தன்று தனது வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தார்.

    அப்போது சிறுமி வீட்டின் அருகே வசிக்கும் அஜித்குமார்(21) என்ற வாலிபர், சிறுமியிடம் சென்று நைசாக பேச்சு கொடுத்தார்.

    சிறுமியிடம், சாக்லெட் வாங்கி தருவதாக கூறி அருகே உள்ள கடைக்கு அழைத்து சென்றார். அங்கு சிறுமிக்கு சாக்லெட் வாங்கி கொடுத்து விட்டு, தனது வீட்டிற்கு அழைத்து சென்றார்.

    அங்கு வீட்டில் யாரும் இல்லாததால் சிறுமிக்கு, அஜித்குமார் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் இந்த விஷயத்தை வெளியில் கூறினால் உன்னை கொன்று விடுவேன் என மிரட்டலும் விடுத்தார்.

    இதனால் அதிர்ச்சியான சிறுமி அவரிடம் இருந்து தப்பித்து தனது வீட்டிற்கு அழுது கொண்டே சென்றார். சிறுமியிடம் அவர் தாயார் விசாரித்தார்.

    அப்போது சிறுமி தனக்கு நடந்தசம்பவங்களை பெற்றோரிடம் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர்கள் ஊட்டி புதுமந்து போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அஜித்குமார் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது.

    இதையடுத்து போலீசார் அஜித்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சிறுமி வேலைக்கு செல்லாமல் தனது காதலனுடன் சென்றார்.
    • கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    பொள்ளாச்சி,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோவில்பாளையத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வந்தார்.

    இந்தநிலையில் சிறுமிக்கு நெகமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளியான 17 வயது சிறுவனுடன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் 2 பேருடைய பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் வயதை காரணம் காட்டி காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலர்கள் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டனர்.

    சம்பவத்தன்று சிறுமி தனது பெற்றோரிடம் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் சிறுமி வேலைக்கு செல்லாமல் தனது காதலனுடன் சென்றார். பின்னர் 2 பேரும் அந்த பகுதியில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர் சிறுவன், சிறுமியை அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார்.

    வேலைக்கு சென்ற சிறுமி நீண்ட நேரமாக வீட்டிற்கு திரும்பி வராததால் அவரை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது சிறுவன் அவரை திருமணம் செய்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் இது குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் திருமணம் செய்து கொண்ட சிறுவன், சிறுமியை அழைத்து விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து சிறுமியை போலீசார் அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். சிறுமியை திருமணம் செய்த சிறுவன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.   

    • சிறுமியிடம் ஸ்ரீதர் ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
    • போலீசார் விசாரணை நடத்தி ஸ்ரீதர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (24). இவர் மொடக்குறிச்சியை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் நட்பாக பழகினார்.

    இந்த பழக்கம் நாள டைவில் காதலாக மாறியது. இதன்பேரில் சிறுமியிடம் ஸ்ரீதர் ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    இந்நிலையில் சிறுமியின் நடவடிக்கையில் மாற்றத்தை அறிந்த பெற்றோர் அவரிடம் விசாரிக்க அவர் நடந்ததை தெரிவித்து ள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    போலீசார் விசாரணை நடத்தி ஸ்ரீதர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

    • சில தினங்களுக்கு முன்பு இருவரும் காணாமல் போனார்கள்.
    • கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    பல்லடம் :

    மதுரையைச் சேர்ந்த நாகராஜ் என்பவரது மகன் கோபாலகிருஷ்ணன்(வயது 24). இவர் பல்லடம் பனப்பாளையத்தில் தனியார் பனியன் நிறுவனத்தில் தங்கி வேலைப் பார்த்து வருகிறார். இந்த நிலையில் அவருடன் பணியாற்றும் 17 வயது சிறுமியை காதலித்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இருவரும் காணாமல் போனார்கள்.

    இந்த நிலையில் சிறுமியை காணவில்லை என அவரது பெற்றோர் பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் இதுகுறித்து விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில், இருவரும் மதுரையில் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அங்கு சென்ற போலீசார் இருவரையும் விசாரணைக்காக பல்லடம் போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர்.

    விசாரணையின் போது சிறுமியை கோபாலகிருஷ்ணன் திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து அந்த வழக்கு பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. சிறுமியை திருமணம் செய்ததால் கோபாலகிருஷ்ணன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • 17 வயது சிறுவன் ஒருவன் காதலிக்க சொல்லி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
    • சிறுவன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சேலம் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டான்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்த மாணவி பள்ளிக்கு செல்லும் போது, பக்கத்து கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் காதலிக்க சொல்லி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் பாலக்கோடு போலீசில் புகார் அளித்தனர்.

    அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிறுவனை கைது செய்தனர்.

    பின்னர் அந்த சிறுவன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சேலம் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டான்.

    • பண்ருட்டி அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவன் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
    • தனது வீட்டு பிரிட்ஜில் உள்ள மீனை எடுத்து வரச்சொல்லி சிறுமியிடம் கூறி உள்ளார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 10 வயதுசிறுமி இவர்அதேபகுதியி ல்உள்ளதொடக்க பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 22-ந் தேதி வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த சிறுமியின் பக்கத்து வீட்டில் உள்ள ஒருவர் தனது வீட்டு பிரிட்ஜில் உள்ள மீனை எடுத்து வரச்சொல்லி சிறுமியிடம் கூறி உள்ளார். வீட்டுக்குள் மீன் எடுக்கச் சென்ற சிறுமியை 17 வயது சிறுவன், பின் தொடர்ந்து சென்று சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளார் உடனே சிறுமி சத்தம் போட்டார்.இந்த சத்தம் கேட்டு சிறுமியின் தாய் அங்கு ஓடி வந்தார். அவரை பார்த்ததும் சிறுவன் தப்பி ஒடி விட்டான்.

    இது குறித்து பண்ருட்டி மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் வள்ளி போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சிறுவனை கைது செய்தார். பின்னர் சிறுவர் சீர் திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.

    ×