என் மலர்
நீங்கள் தேடியது "உயர்வு"
- பரமத்தி வேலூர் பகுதியில் பூக்களின் வரத்து குறைவாலும், ஐப்பசி மாத வளர்பிறையை முன்னிட்டு கோவில் மற்றும் திருமண விசேஷங்கள் இருப்பதால் பூக்களின் விலை உயர்வடைந்துள்ளது.
- பச்சை முல்லை ரூ.1000-க்கும், செவ்வந்திப்பூ ரூ.250-க்கும் வியாபாரிகள் வாங்கிச் சென்றனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுக்கா ஆனங்கூர், பாகம்பாளையம், பெரியமருதூர், சின்ன மருதூர், தண்ணீர் பந்தல், நகப்பாளையம், செல்லப்பம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில், மல்லிகை, சம்பங்கி, செவந்தி, அரளி, முல்லை, ரோஜா உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டு உள்ளது. இங்கு விளையும் பூக்களை கூலி ஆட்கள் மூலம் பறித்து விவசாயிகள் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும் பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் பூ ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
பூ வியாபாரிகள் வாங்கிய உதிரிபூக்களை பல்வேறு ரகமான மாலைகளாகவும், தோரணங்களாகவும் கட்டி விற்பனை செய்து வரு கின்றனர். அதேபோல் சில வியாபாரிகள் பிளாஸ்டிக் கவரில் போட்டு பாக்கெட்டுகளாக உள்ளூர் பகுதிகளுக்கு கொண்டு சென்று உதிரிப்பூக்களை விற்பனை செய்து வருகின்றனர். கடந்த வாரம் மல்லிகை ரூ.400-க்கும், சம்பங்கி கிலோ ரூ.50-க்கும், அரளி கிலோ ரூ.120-க்கும், ரோஜா கிலோ ரூ.150-க்கும், முல்லைப் பூ ரூ.400-க்கும், பச்சை முல்லை 400-க்கும், செவ்வந்திப்பூ ரூ.150-க்கும் வியாபாரிகள் வாங்கிச் சென்றனர்.
நேற்று மல்லிகை கிலோ ரூ.1000-க்கும், சம்பங்கி கிலோ ரூ150-க்கும், அரளி கிலோ ரூ.180-க்கும், ரோஜா கிலோ ரூ.250-க்கும், முல்லைப் பூ கிலோ ரூ.1000-க்கும், பச்சை முல்லை ரூ.1000-க்கும், செவ்வந்திப்பூ ரூ.250-க்கும் வியாபாரிகள் வாங்கிச் சென்றனர். பூக்களின் வரத்து குறைவாலும், ஐப்பசி மாத வளர்பிறையை முன்னிட்டு கோவில் மற்றும் திருமண விசேஷங்கள் இருப்பதால் பூக்களின் விலை உயர்வடைந்துள்ளது.
- விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.
- பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது.
தஞ்சாவூர்:
தஞ்சையில் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தின் 103-வது ஆண்டு அமைப்பு நாள் நிகழ்ச்சி மாவட்டத்தில் அனைத்து சங்க கிளைகள் முன்பாகவும் கொடியேற்றி கொண்டாடப்பட்டது.
தஞ்சையில் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர்சேவையா தலைமை வகித்தார். மாநில செயலாளர்சந்திரகுமார் அமைப்பு நாள் கொடி ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து கீழவாசல் கட்டுமான சங்க கொடியினை அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் அன்பழகன் ஏற்றி வைத்து சிறப்பித்தார்.
அரசு போக்குவரத்துக் கழகம் கரந்தை புறநகர் பணிமனை, அரசு போக்குவரத்து கழகம் ஜெபமாலைபுரம் தஞ்சை நகர கிளை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏ. ஐ .டி. யூ. சி. அமைப்பு நாள் கொடியேற்றப்பட்டது.
இதில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது என்று வலியுறுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் துரை மதிவாணன், மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜன், ஓய்வு பெற்றோர் சங்க பொதுச் செயலாளர் அப்பாதுரை, தலைவர் மல்லி ஜி.தியாகராஜன், அரசு போக்குவரத்து கழக சங்க பொதுச் செயலாள ர்தாமரைச்செல்வன், பொருளாளர்ராஜமன்னன்,
- பரமத்திவேலூர் வட்டாரத்தில் மரவள்ளி கிழங்கின் விலை டன் ஒன்றுக்கு ரூ. 1000 வரை உயர்வு அடைந்துள்ளதால் மரவள்ளி பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டாரத்தில் மரவள்ளி கிழங்கின் விலை டன் ஒன்றுக்கு ரூ. 1000 வரை உயர்வு அடைந்துள்ளதால் மரவள்ளி பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூர், கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது.
இப் பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதி களில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர். கிழங்கு ஆலைகளில் மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர்.
மரவள்ளி கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமை யாளர்கள் மரவள்ளி கிழங்கில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப் படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர். கடந்த வாரம் மரவள்ளிகிழங்கு டன் ஒன்று ரூ.7 ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்பொழுது டன் ஒன்றுக்கு ரூ.ஆயிரம் வரை உயர்வடைந்து ரூ.8 ஆயிரத்திற்கு விற்பனை யாகிறது.
அதே போல் சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளி கிழங்கு கடந்த வாரம் டன் ஒன்று ரூ.8 ஆயிரத்து 500 விற்பனையானது. தற்போது டன் ஒன்றுக்கு ரூ.ஆயிரம் வரை உயர்வடைந்து ரூ.9 ஆயிரத்து 500-க்கு விற்பனையாகிறது. மரவள்ளி கிழங்கு விலை உயர்வடைந்துள்ளதால் மரவள்ளி கிழங்கு பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- விவரங்களுக்கு உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நல அலுவலகம், நாகர்கோவில் என்ற முகவரியை தொடர்பு கொள்ளலாம்.
- குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தகவல்
நாகர்கோவில்:
குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
போர் மற்றும் போரை யொத்த நடவடிக்கைகளில் உயிரிழந்தோரைச் சார்ந்தோர் (மனைவி, பெற்றோர்) மற்றும் ஊன முற்ற படை வீரர்களுக்கு 23.9.2022 முதல் தொகுப்பு நிதியிலிருந்து வழங்கப்படும் கருணைத் தொகை உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
அதாவது போர் மற்றும் போரையொத்த நடவடிக்கை களில் உயிரிழந்தோரைச் சார்ந்தோர்(மனைவி, பெற்றோர்) ரூ.1 லட்சத்தில் இருந்து (ஒருமுறை மட்டும்) ரூ.2 லட்சமாக உயர்த்த ப்பட்டு உள்ளது.
போர் மற்றும் போரை யொத்த நடவடிக்கைகளில் ஊனமுற்ற முன்னாள் படை வீரர்கள் ரூ.50 ஆயிரத்தில் (ஒருமுறை மட்டும) இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்ப ட்டு உள்ளது.
மேலும் விவரங்க ளுக்கு உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நல அலுவலகம், நாகர்கோவில் என்ற முகவரியை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க வினர் கலந்து கொண்டனர்.
- தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
நாகர்கோவில்:
பால் விலை, மின் கட்டணம், சொத்து வரி, வீட்டு வரி உயர்வை கண்டித்து பாரதிய ஜனதா வினர் தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தி னர். குமரி மாவட்டத்தில் 26 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய பா.ஜ.க சார்பில் அகஸ்தீஸ்வரம் சந்திப்பில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் சுயம்பு தலைமை வகித்தார். அகஸ்தீஸ்வரம் ஒருங்கிணைந்த ஒன்றிய பார்வையாளர் சுபாஷ், தென்தாமரைகுளம் பேரூராட்சி தலைவி கார்த்திகா பிரதாப், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வளையாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தி னராக மாநில செயலாளர் மீனாதேவ் கலந்து கொண்டு பேசினார்.
அகஸ்தீஸ்வரம் பேரூர் தலைவர் பாரத் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் திர ளான பா.ஜ.கவினர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் நிறை வில் தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
தக்கலை தெற்கு ஒன்றிய பாஜக சார்பில் இரணியல் சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது பேரூர் பாஜக தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார் ஒன்றிய தலைவர் பத்மநாபன் பேரூர் தலைவர் ஸ்ரீகலாமுருகன் மாவட்ட செயலாளர் பிரியா சதீஷ் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன் கலந்து கொண்டார்.ஒன்றிய துணை தலைவர் கிருஷ்ணகுமார் மாவட்ட பார்வையாளர் குமார் தாஸ் பொது செயலாளர் வக்கீல் பத்மகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர் கூட்டத்தில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ராஜாக்கமங்கலம் சந்திப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய பாஜக தலைவர் பொன் சுரேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய பொதுச் செயலாளர் செந்தில் அதிபன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட் டத்திற்கு குமரி பா. ரமேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.மாவட்ட கல்வியாளர் பிரிவு தலைவர் டாக்டர் சிவக்குமார், ராஜக்கமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீஸ்வரி சுகுமார், கணபதிபுரம் பஞ்சாயத்து தலைவர் ஜெயஸ்ரீ, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஹேமா, பாஜக ஒன்றிய செயலாளர் ஜெயஸ்ரீ, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன் ஒன்றிய செயலாளர் தாமோதரன் ஊராட்சி மன்ற துணை தலைவர்கள் செல்லத்துரை, ரமேஷ் முன்னாள் வந்திய கவுன்சிலர் சுகுமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆசாரிபள்ளம் சந்திப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு மேற்கு மாநகர பாஜக தலைவர் சிவசீலன் தலைமை தாங்கினார்.மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயராம் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் மோகன்ராஜ், மாமன்ற உறுப்பினர் ஆன்றோடைல்ஸ்டைனா ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
போராட்டத்தில் மாநகர பொதுச்செயலாளர்கள் வேலானந்தன், பிரஜாபதி, பொருளாளர் ராஜுவ் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவ பிரசாத் மாநகர தொழில் பிரிவு தலைவர் முத்துகிருஷ்ணன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜெயந்தி உட்பட நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
குளச்சல் காமராஜர் பஸ் ஸ்டாண்டில் நகர தலைவர் கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர் குமாரதாஸ், நகர பார்வையாளர் சிவகுமார் பிரபு, மாவட்ட பிரசார அணி முன்னாள் தலைவர் ஜெயபிரகாஷ், நகர பொதுச்செயலாளர் ஜெனோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர பொதுச்செயலாளர் பிரதீப்குமார் வரவேற்று பேசினார்.மாவட்ட முன்னாள் தலைவர் பொன் ரெத்தினமணி, கவுன்சிலர்கள் சுரேஷ்குமார், சுஜித்திரா, முன்னாள் கவுன்சிலர் விஜயராணி மற்றும் ஜஸ்டின் செல்வகுமார், பகவதியப்பன், ஜெயச்சந்திரன், ராஜன், சூர்யா முருகன், அல்போன்ஸ், ஜாண்சன், டிக்சன், பெருமாள், துரைராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகின்றன.
- முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது என ஆளுநர் தலைமையில் நடைபெற்ற மேலாண்மை குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: -
சேலம் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்கள் அறிவது, தொகுப்பு நிதியின் மாநில மேலாண்மை குழுக் கூட்டத்தில் தமிழக ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் 2022-2023-ம் கல்வியாண்டு முதல் முன்னாள் படைவீரர் குழந்தைகளுக்கு கல்வி மேம்பாட்டு நிதியுதவியாக (கல்வியுதவி தொகை) 1 முதல் 5-ம் வகுப்பு வரை ரூ.2,000-மும், 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு ரூ.4,000-மும், 9 முதல் 10-ம் வகுப்பு வரை ரூ.5,000-மும், 11 முதல் 12-ம் வகுப்பு வரை ரூ.6,000-மும் உயர்த்தி வழங்கிட முடிவு செய்யப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
- கடும் பனிப்பொழிவால் வரத்து குறைவு
- தோவாளை சந்தையில் விற்பனை அமோகம்
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் மலர் சந்தை செயல்பட்டு வருகிறது.
இந்த சந்தைக்கு தோவாளை, ஆரல்வாய் மொழி, காவல்கிணறு, புதியம்புத்தூர், மாடநாடார் குடியிருப்பு பகுதிகளில் இருந்து பிச்சிப்பூவும், மதுரை, மானாமதுரை, கொடைரோடு, திண்டுக்கல், சங்கரன்ேகாவில், ராஜ பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து மல்லிகைப் பூவும் வருகின்றன.
இதேபோல், சேலத்தில் இருந்து அரளிப்பூ, பெங்களூரூவில் இருந்து மஞ்சள் கேந்தி, பட்டர் ரோஸ் போன்றவையும், திருக்குறுங்குடி, அம்பாசமுத்திரம், தென்காசி, புளியங்குடி பகுதிகளில் இருந்து பச்சை, துளசி போன்றவையும், ஆரல்வாய்மொழி, தோவாளை, ராஜாவூர், மருங்கூர் பகுதிகளில் இருந்து கோழிப்பூ, அரளி உள்ளிட்ட மற்ற பூக்களும் தினமும் விற்பனைக்கு வரு கின்றன. அவை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு மட்டுமின்றி, கேரள மாநிலத்துக்கும் அனுப்பி வைக்கப்படு கின்றன.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக தோவளை சந்தைக்கு பூக்களின் வரத்து குறைந்து உள்ளது. பனிப்பொழிவு காரணமாக பூக்கள் வரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் நாகர்கோவில் சவேரியார் ஆலய திருவிழா மற்றும் சுபமுகூர்த்த தினம் போன்றவை காரணமாக பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் வரத்து குறைவாக இருப்பது பூக்களின் விலை உயர்வை ஏற்படுத்தி உள்ளது.
இன்று தோவாளை சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ. 4 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. பிச்சிப்பூ ரூ.ஆயிரத்து 750-க்கும், சம்பங்கி ரூ.250க்கும், சேலம் அரளி ரூ.220-க்கும், உள்ளூர் அரளி ரூ.200-க்கும், பட்டர் ரோஸ் ரூ. 200-க்கும், முல்லைப்பூ ரூ. ஆயிரத்து 700-க்கும், கனகாம்பரம் ரூ.700-க்கும், கோழிப்பூ ரூ.80-க்கும்,மஞ்சக் சேந்தி ரூ.60-க்கும், சிகப்பு கேந்தி ரூ.80-க்கும் விற்பனையானது.
இதேபோல், மரிக்கொழுந்து, தாமரை, அருகம்புல் போன்றவற்றின் விலையும் உயர்ந்துள்ளது.
- கடும் பனிப்பொழிவு-முகூர்த்தம் காரணமாக உயர்வு
- ஒரு கிலோ மல்லிகை ரூ.3 ஆயிரம்
கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை மலர் சந்தை மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தச் சந்தைக்கு தோவாளை, ஆரல்வாய்மொழி,காவல் கிணறு,புதியம்புத்தூர், மாடநாடார் குடியிருப்பு பகுதிகளில் இருந்து பிச்சிப்பூவும், மானாமதுரை, மதுரை, கொடைரோடு, திண்டுக்கல், சங்கரன் கோவில், ராஜபாளையம் பகுதிகளில் இருந்து மல்லி கைப்பூவும் வருகின்றன.
சேலத்தில் இருந்து அரளி, பெங்களூரூவில் இருந்து மஞ்சள் கேந்தி, பட்டர் ரோஸ், திருக்குறுங்குடி, அம்பாசமுத்திரம், தென்காசி, புளியங்குடி பகுதிகளில் இருந்து பச்சை, துளசி போன்றவையும், ஆரல்வாய்மொழி, தோவாளை, ராஜாவூர், மருங்கூர் பகுதிகளில் இருந்து கோழிப்பூ, அரளி உள்ளிட்ட பூக்களும் தினமும் விற்பனைக்கு வருகின்றன.
இங்கிருந்து மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு மட்டுமின்றி, கேரளாவுக்கும் பூக்கள் அனுப்பப்படுகின்றன. எனவே தோவாளை சந்தை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இங்கு பூக்கள் வரத்து குறைவாக உள்ளது. கடும் பனிப்பொழிவு காரணமாக சந்தைக்கு பூக்களின் வரத்து குறைந்தி ருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர். அதே நேரம் தேவை அதிகமாக உள்ள தால் பூக்களின் விலை கிடு கிடு உயர்வை சந்தித்து உள்ளது.
தோவாளை சந்தையில் இன்று மல்லிகைப் பூ கிலோ ரூ. 3 ஆயிரத்துக்கும், பிச்சிப்பூ ரூ.1750-க்கும் விற்கப்பட்டது.அரளிப் பூ கிலோ ரூ.250, சேலம் அரளி ரூ.220, சம்பங்கி ரூ.125-க்கு விற்கப்பட்டன.
மஞ்சள் கேந்தி ரூ.60, சிகப்பு கேந்தி ரூ.70, மரிக்கொழுந்து ரூ.150, பட்டர் ரோஸ் ரூ.150,கோழிப்பூ ரூ.50, துளசி ரூ.50 என விற்கப்படுகிறது. இந்த விலையேற்றத்திற்கு பூக்களின் வரத்து குறைவும், அதிக அளவிலான முகூர்த்த ங்கள் நாளை இருப்பதுமே காரணம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
- மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்.
- கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீடாமங்கலம்:
வலங்கைமானில் அ.தி.மு.க. சார்பில், சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் முன்னாள் அமைச்சர் இரா. காமராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்ப செயலாளர் ராஜராஜன், வலங்கைமான் ஒன்றிய தலைவர் குமாரமங்கலம் சங்கர், கிழக்கு ஒன்றிய செயலாளர் சாத்தனூர் இளவரசன், வலங்கைமான் நகர செயலாளர் குணசேகரன், முன்னாள் பேரூராட்சி தலைவர் மாஸ்டர் ஜெயபால், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ராணி துரைராஜ், மாவட்ட கவுன்சிலர் சாந்தி தேவராஜன், ஒன்றிய துணை தலைவர் வாசுதேவன், மாவட்ட மாணவரணி இணை செயலாளர் இளங்கோவன், வர்த்தக அணி துணை செயலாளர் பாலா, ஒன்றிய துணை செயலாளர் மாத்தூர் குருமாணிக்கையா மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்.
- கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பூதலூர்:
பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வை கண்டித்து பூதலூர் ஒன்றிய திருக்காட்டுப்பள்ளி நகர அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருக்காட்டுப்பள்ளி கடைவீதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பூதலூர் ஒன்றிய செயலாளர், முன்னாள் எம்.எல்.ஏ ரெத்தினசாமி தலைமை தாங்கினார்.
இதில் தஞ்சை மாவட்ட இளைஞரணி செயலாளர் நடுக்காவிரி ராஜா, திருக்காட்டுப்பள்ளி நகர தலைவர் கேசியர்ராஜாங்கம், பூதலூர் ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் கலியமூர்த்தி, தலைமை பேச்சாளர் அன்பு முருகன், திருவையாறு ஒன்றிய செயலாளர் இளங்கோவன், நகர பேரவை செயலாளர் கோவி கார்த்திகேயன், நகர பொருளாளர் செல்வராஜ், பூதலூர் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் காமராஜ், நகர இளைஞர் பாசறை செயலாளர் பிரபு, ஒன்பத்துவேலி கிருஷ்ணமூர்த்தி, நகர மகளிரணி செயலாளர் நேவிஸ், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் சாவித்திரி, முன்னாள் ஒன்றிய செயலாளர் அய்யாராசு, ஒன்றிய பொருளாளர் எழிலரசன், பூதலூர் ஒன்றிய துணை செயலாளர் மாரியய்யா மற்றும் நகர நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், ஒன்றிய நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு கூட்டுறவு சங்க முன்னாள் மற்றும் தற்போதைய நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு கண்டித்து திருத்துறைப்பூண்டி காமராஜர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம்.
- அ.தி.மு.க. கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி நகர அ.தி.மு.க சார்பில் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை கண்டித்து திருத்துறைப்பூண்டி காமராஜர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் அருணாச்சலம் தலைமை தாங்கினார்.
மாவட்ட மகளிரணி செயலாளர் சுதா அன்புச்செல்வன்,தெற்கு ஒன்றிய செயலாளர் சிங்காரவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகர செயலாளர் சண்முகசுந்தர் அனைவ ரையும் வரவேற்றார்.
மேலும், வடக்கு ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன், முன்னாள் நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரி கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் சுரேஷ் குமார், மாவட்ட மாணவரணி செயலாளர் சுரேந்தர்,முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் வெற்றிவேல், மதிவாணன், லதா ஆசைத்தம்பி, சீதாலட்சுமி, குகநாதன், கார்த்தி, கலைமணி, மின்னல் கொடி, பாலகிருஷ்ணன், பாலதண்டாயுதம், நுணக்காடு ஊராட்சி மன்ற தலைவர் சின்னையன், முருகதாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- தேங்காய் பருப்பு எடுத்த பின் தேங்காய் சிரட்டைகளை குவித்து வைத்து அப்பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு கிலோ கணக்கில் விற்பனை செய்கின்றனர்.
- கடந்த வாரத்தில் ஒரு கிலோ தேங்காய் சிரட்டை ரூ.10-க்கு விலைபோனது. இந்த வாரம் ஒரு கிலோ தேங்காய் சிரட்டை ரூ.12-க்கு விற்பனையானது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பெருங்குறிச்சி, குப்பரிக்காபாளையம், மணியனூர், கந்தம்பாளையம், சுள்ளிப்பாளையம், மாரப்பம்பாளையம், சோழசிராமணி, ஜமீன் இளம் பள்ளி, குரும்பல மகாதேவி, கொத்தமங்கலம், சிறுநல்லிக்கோவில், திடுமல், தி.கவுண்டம்பாளையம், வடகரையாத்தூர், ஆனங்கூர், அய்யம்பாளையம், பிலிக்கல்பாளையம், சேளூர், அண்ணா நகர், கபிலக்குறிச்சி, பெரியசோளிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை பயிரிட்டுள்ளனர்.
தேங்காய் பருப்பு எடுத்த பின் தேங்காய் சிரட்டைகளை குவித்து வைத்து அப்பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு கிலோ கணக்கில் விற்பனை செய்கின்றனர். கடந்த வாரத்தில் ஒரு கிலோ தேங்காய் சிரட்டை ரூ.10-க்கு விலைபோனது. இந்த வாரம் ஒரு கிலோ தேங்காய் சிரட்டை ரூ.12-க்கு விற்பனையானது. தேங்காய் சிரட்டை விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.