search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிக்கன்"

    • சமையலுக்கு தேவையான பொருட்களை திருச்சியில் இருந்து கொண்டு வந்துள்ளனர்.
    • மற்றொரு அறையிலிருந்த நண்பர்கள் காலை வந்து எழுப்பியபோது இருவரும் இறந்து கிடந்துள்ளனர்.

    கொடைக்கானல் அருகே 'பார்பிகியூ' சிக்கன் சமைத்துவிட்டு அடுப்பை அணைக்காததால் வெளியேறிய புகையில் மூச்சுத்திணறி 2 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    திருச்சி மற்றும் சென்னையை சேர்ந்த 4 இளைஞர்கள் கொடைக்கானல் அருகே சின்னபள்ளம் செல்லும் சாலையில் உள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தனர்.

    அப்போது, ஜெயகண்ணன், ஆனந்த் பாபு ஆகியோர் மது அருந்திக்கொண்டே பார்பிகியூ சிக்கன் சமைத்து சாப்பிட்டுள்ளார். சமையலுக்கு தேவையான பொருட்களை திருச்சியில் இருந்து இவர்கள் கொண்டு வந்துள்ளனர்.

    அப்போது அடுப்பை அணைக்காமல் இருவரும் தூங்கச் சென்றுள்ளனர். மற்றொரு அறையிலிருந்த நண்பர்கள் காலை வந்து எழுப்பியபோது இருவரும் இறந்து கிடந்துள்ளனர்.

    சிக்கன் சமைத்த அடுப்பை அணைக்காததால் எழுந்த புகை காரணமாக இருவரும் மரணம் அடைந்ததாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிந்துள்ள காவல்துறை விசாரித்து வருகின்றனர்.

    • சிக்கன் 65-க்குள் கருகிய நிலையில் வண்டு.
    • உணவு பாதுகாப்பு துறைக்கு வாட்ஸ் அப்பில் புகார்.

    மதுரை:

    மதுரை அருகே உள்ள கே.கே.நகர் பகுதியில் பிரசித்தி பெற்ற தனியார் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று இரவு சட்டக் கல்லூரி மாணவிகள் சிலர் நேற்று இரவு பார்சலில் சிக்கன் வாங்கியுள்ளனர்.

    பின்னர் அவர்கள் அதனை எடுத்துசென்று சாப்பிடுவதற்காக பிரித்துப் பார்த்தபோது அந்த சிக்கன் 65-க்குள் கருகிய நிலையில் வண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து அவர்கள் உடனடியாக பார்சல் வாங்கிய உணவகத்திற்கு சென்றனர். மேலும் சிக்கனில் வண்டு இருந்ததாக கூறி அதனை உணவக ஊழியர்களிடம் காண்பித்து விளக்கம் கேட்டனர். ஆனால் உணவக ஊழியர்கள் முறையான பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் அதிருப்தி அடைந்த சட்டக்கல்லூரி மாணவிகள் சிக்கனில் வண்டு இருப்பது தொடர்பான வீடியோ ஆதாரத்துடன் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கு வாட்ஸ் அப் செயலின் மூலமாக புகார் அளித்தனர். அதில் உணவக ஊழியர்கள் அளித்த விளக்கம் தொடர்பாகவும் பதிவிட்டு உள்ளனர்.

    இந்த புகாரை ஏற்றுக் கொண்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் இன்று உணவகத்தில் சோதனை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் உணவகத்தில் நேரடியாக விசாரணை மேற்கொள்ளும் போது வண்டு இருப்பது உறுதியானால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்கள் கூறினர்.

    • தர்பூசணி துண்டுகளின் மீது சிக்கன் மாவு பூசி எண்ணெயில் நன்றாக வறுக்கும் காட்சிகள் உள்ளது.
    • வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பயனர்கள் தங்களது விமர்சன கருத்துக்களை பதிவிட்டனர்.

    உணவு பிரியர்களை கவர்வதற்காக சமூக வலைதளங்களில் புதிய உணவு வகைகள் தயாரிப்பு குறித்த வீடியோக்கள் அதிகளவில் வெளியாகின்றன. அவற்றில் சில வீடியோக்கள் வரவேற்பையும், சில வீடியோக்கள் கடும் விமர்சனங்களையும் சந்திக்கிறது.

    அந்த வகையில் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் சமையல் கலைஞர் ஒருவர் தர்பூசணியை சிக்கன் மாவில் பூசி, வறுத்த கோழி தர்பூசணி தயாரிக்கும் காட்சிகள் உள்ளது. அதில், சமையல் கலைஞர் ஒரு முழு தர்பூசணியை சிறு, சிறு துண்டுகளாக வெட்டுகிறார். பின்னர் அந்த தர்பூசணி துண்டுகளின் மீது சிக்கன் மாவு பூசி எண்ணெயில் நன்றாக வறுக்கும் காட்சிகள் உள்ளது.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பயனர்கள் தங்களது விமர்சன கருத்துக்களை பதிவிட்டனர். ஒரு பயனர், நரகத்தில் யார் இந்த கொடூரத்தை சாப்பிடுவார்கள் என பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனர், இது நான் நாள் முழுவதும் பார்த்த அமெரிக்கா விஷயம் என பதிவிட்டுள்ளார். அதே நேரம் சில பயனர்கள், இது அற்புதம், நான் பார்த்ததிலேயே மிகவும் சுவையான உணவு என பதிவிட்டுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மீன் வகைகளின் 36 மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பினர்.
    • வண்ண பொடிகளை பயன்படுத்தினால் அத்தகைய கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    பெங்களூர்:

    கர்நாடகாவில் சிக்கன் கபாப் உள்ளிட்ட எண்ணெயில் பொறிக்கப்படும் சிக்கன் துண்டுகள், மீன் வறுவலுக்கு பயன்படுத்தப்படும் வண்ண பொடியில் உடல் நலத்திற்கு கேடு ஏற்படுத்தக் கூடிய வண்ண பொடி பயன்படுத்துவதாக புகார் எழுந்தது.

    இதையடுத்து கர்நாடக அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தர துறையினர், சில மாதங்களுக்கு முன்பு சிக்கன் கபாப், எண்ணையில் பொறிக்கப்பட்ட மீன் வகைகளின் 36 மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பினர்.


    அதில் பயன்படுத்தப்படும் வண்ண பொடியில் சன்செட் எல்லோ, கார்மோசின் ஆகிய உடல் நலத்திற்கு கேடு ஏற்படுத்தும் ரசாயனம் கலந்துள்ளது உறுதியானது. இத்தகைய உணவுகளை சாப்பிடுவதால் புற்றுநோய் ஏற்படும் என்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து சிக்கன் கபாப், மீன் வறுவல்களில் இந்த உடல் நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பொடிகளை பயன்படுத்த தடை விதித்து கர்நாடக அரசின் உணவு பாதுகாப்புத்துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி தடை செய்யப்பட்டுள்ள அந்த வண்ண பொடிகளை பயன்படுத்தினால் அத்தகைய கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    • அடுப்பில் வாணலியை வைத்து முட்டையை நன்கு அடித்து ஊற்றவும்.
    • இறுதியாக வினிகர், மிளகுத்தூள் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.

    தேவையான பொருட்கள்:

    ஸ்வீட் கார்ன் - 1/2 கப்

    சிக்கன் - 100 கிராம்

    கார்ன்ஃப்ளார் மாவு - 2 ஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    முட்டை - 1

    வினிகர் - 1ஸ்பூன்

    மிளகு தூள் - தேவையான அளவு

    வெங்காய தாள் - சிறிதளவு

     செய்முறை:

    • 100 கிராம் எலும்பு இல்லாத சிக்கன் துண்டுகளை ஒரு குக்கரில் போட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.

    • வேகவைத்த சிக்கன் துண்டுகளை சிறு சிறு துண்டுகளாக பிய்த்து வைத்துக் கொள்ளவும்.

    • ஒரு பாத்திரத்தில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி 2 ஸ்பூன் கார்ன்ஃப்ளார் மாவு போட்டு கட்டிகள் இல்லாமல் கரைத்து வைத்துக் கொள்ளவும்.

    • 1/2 கப் ஸ்வீட் கார்னில் பாதி அளவை எடுத்து ஒரு மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

    • அடுப்பில் வாணலியை வைத்து முட்டையை நன்கு அடித்து ஊற்றவும்.

    • பின்னர் வெங்காய தாளை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி போடவும்.

    • இதனுடன் அரைத்து வைத்திருந்த ஸ்வீட் கார்ன், சிறிதாக பிய்த்து வைத்திருந்த சிக்கன், 3 டம்பளர் தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

    • நன்கு கொதித்தவுடன் கரைத்து வைத்திருந்த கார்ன் ஃப்ளார் மாவு கரைசலை ஊற்றவும்.

    • இதனுடன் மீதம் உள்ள ஸ்வீர் கார்னையும், தேவையான அளவு உப்பும் சேர்த்து ஒரு 5 நிமிடம் இவை அனைத்தையும் கொதிக்க விடவும்.

    • இறுதியாக வினிகர், மிளகுத்தூள் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.

    • இப்போ சுவையான விடுமுறையில் சூடாக சாப்பிட சுவீட் கார்ன் சிக்கன் சூப் ரெடி.

    • வீட்டிலேயே உடலுக்கு எந்த விதி பாதிப்பும் ஏற்படாமல் சுவையான சிக்கன் பிரைடு ரைஸ் எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்
    • பொடியாக நறுக்கிய பூண்டை சேர்த்து நன்றாக 3 நிமிடம் வதக்கவும்.

    அலுவலகம் சென்று வரும் பெண்களும், ஆண்களுக்கும் மிகவும் சவாலாக இருப்பது சாப்பாடுதான். சில நேரங்களில் வேலை பளு காரணமாக ஹோட்டல்களில் சாப்பிடும் சூழ்நிலை ஏற்படுகிறது. ஆனால் ஹோட்டல்களில் உபயோகிக்கும் மசாலா, சிக்கன், எண்ணெய் போன்றவற்றால் உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படும் என்று கவலையும் அடைகிறார்கள். உங்களுக்காக ஈஸியா வீட்டிலேயே உடலுக்கு எந்த விதி பாதிப்பும் ஏற்படாமல் சுவையான சிக்கன் பிரைடு ரைஸ் எப்படி செய்யலாம் என்று பார்ப்போம் வாங்க...

    தேவையான பொருட்கள்:

    முட்டை - 3

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

    பூண்டு பொடியாக நறுக்கியது - ஒரு டேபிள் ஸ்பூன்

    எலும்பில்லாத சிக்கன் - 100 கிராம்

    மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

    சோயா சாஸ் - 3 டீஸ்பூன்

    வினிகர் - ஒரு டீஸ்பூன்

    கேரட் - 1

    குடைமிளகாய் சிகப்பு மற்றும் மஞ்சள் - 1 ஒன்று

    வடித்த சாதம் - 2 கப்

    வெங்காயத்தாள் - 2 டேபிள்ஸ்பூன்


    செய்முறை:

    • முதலில் scramble egg செய்ய ஒரு கடாயில் எண்ணெய் முட்டை உப்பு சேர்த்து ஒரு நிமிடம் நன்றாக கலக்கவும். பின்னர் அதை தனியாக ஒரு பக்கம் எடுத்து வைத்து கொள்ளவும்.

    • சிக்கனை 65 மசாலா சேர்ந்து பொரித்து எடுத்துக் கொள்ளவும். பொரித்த சிக்கன்களை சிறுசிறு துண்டுகலாக வெட்டிக் கொள்ளவும்.

    • கடாயில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய சிக்கன் சேர்த்து வதக்கவும். இதனுடன் பொடியாக நறுக்கிய பூண்டை சேர்த்து நன்றாக 3 நிமிடம் வதக்கவும்.

    • அதனுடன் சோயா சாஸ், கேரட், குடமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

    • குடைமிளகாய் கேரட் வெந்ததும் வடித்த சாதம் சேர்த்து உப்பு மிளகுத்தூள் சோயா சாஸ் சேர்த்து நன்றாக கலக்கவும்

    • பின் scramble egg வெங்காயத்தாள் சேர்த்து நன்றாக கலக்கவும்.

    • இதோ சுவையான சிக்கன் பிரைடு ரைஸ் வீட்டிலே ரெடி.

    இதுபோல் வீட்டிலேயே நாம் கண்ணெதிரே செய்து சாப்பிடும் உணவுகளால் நமது உடலுக்கு எந்த தீங்கும் ஏற்படாது.

    • சிக்கன் முக்கால் பாகம் வெந்த பிறகு வாணலியை இறக்கிவிடவும்.
    • சிக்கன் மஷ்ரூமை சப்பாத்தி, பரோட்டா என அனைத்திற்கு சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

    தேவையான பொருட்கள்:

    சிக்கன் - 1 கிலோ

    மஷ்ரூம் - 1/2 கிலோ

    சோள மாவு - 100 கிராம்

    மிளகு தூள் - காரத்திற்கு ஏற்ப

    உப்பு - தேவையான அளவு

    நல்லெண்ணெய் - தேவையான அளவு

    வெண்ணெய் - தேவையான அளவு

    வெங்காயம் - 2

    பூண்டு - 2 முழுஅளவு

    பிரெஷ் கிரீம் - தேவையான அளவு

    செய்முறை:

    முதலில் சிக்கன், சோளமாவு, மிளகு தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து அவற்றை 30 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் வெங்காயம், பூண்டு இரண்டையும் சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். மஷ்ரூம்களை உங்களுக்கு தேவைப்படும் வடிவில் கட் செய்து வைத்துக் கொள்ளவும்.

    ஒரு வாணலியில் தேவையான அளவு நல்லெண்ணெய் சேர்த்து அதனுடன் ஊற வைத்துள்ள சிக்கன் கலவையை போட்டு நன்கு வதக்கவும். சிக்கன் முக்கால் பாகம் வெந்த பிறகு வாணலியை இறக்கிவிடவும்.

    பின்னர் ஒரு வாணலியில் வெண்ணெய் சேர்த்து அதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கிய பிறகு கட் செய்து வைத்துள்ள மஷ்ரூம்களை சேர்க்கவும், அதனுடன் சிறிதாக நறுக்கி வைத்துள்ள பூண்டு அதற்கு தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.

    அதனை தொடர்ந்து ஏற்கனவே பொரித்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்துக் கொள்ளவும். இவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து ஒரு கலவையாக வரும் நேரத்தில் பிரெஷ் கிரீமை அதனுடன் சேர்த்து ஒரு 10 நிமிடங்கள் மிதமான தீயில் வைக்கவும். பின்னர் கொத்தமல்லி இலைகளை சேர்த்து பரிமாறவும்.

    சிக்கன் மஷ்ரூம் கிரேவி சப்பாத்தி, பரோட்டா என அனைத்திற்கு சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

    • மாலை வந்ததும் என்ன ஸ்நாக்ஸ் செய்வது என்று ஒரு மிக பெரிய குழப்பம் ஏற்படுகிறது.
    • வாங்க சிக்கன் நக்கெட்ஸ் எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

    வீட்டில் அம்மாக்களுக்கு மாலை வந்ததும் என்ன ஸ்நாக்ஸ் செய்வது என்று ஒரு மிக பெரிய குழப்பம் ஏற்படுகிறது. அதுவும் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் ஏற்றதாகவும் இருக்க வேண்டும். அதற்கு தான் நாங்க ஒரு சிம்பில் ஸ்நாக்ஸ் ரெடி பண்ணியிருக்கோம் வாங்க சிக்கன் நக்கெட்ஸ் எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

    தேவையானவை:

    போன்லெஸ் சிக்கன் - 1/2 கிலோ

    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - சிறிது

    உப்பு - தேவையான அளவு

    மைதா - 2 டீஸ்பூன்

    முட்டை - 2

    ப்ரெட் க்ரம்ஸ் - தேவையான அளவு

    எண்ணெய் - பொரிக்க

    செய்முறை:

    * சிக்கனை சுத்தம் செய்துவிட்டு மிகவும் மெல்லியத் துண்டுகளாகப் போடவும்.

    * ஒரு கடாயை அடுப்பில் ஏற்றி சிறிது எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் சிக்கன் துண்டுகளைப் போட்டு வதக்கவும்.

    * வதங்கியதும் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கிளறிவிட்டு மூடி மிதமானத் தீயில் வேக வைக்கவும்.

    * தண்ணீர் ஊற்ற வேண்டாம். சிக்கனில் உள்ள தண்ணீரிலேயே வெந்துவிடும்.

    * அடிப்பிடிக்காமல் சிக்கன் துண்டுகளை இரண்டு அல்லது மூன்று முறை திருப்பிவிட்டு வேக வைக்கவும்.

    * தண்ணீர் முழுவதும் சுண்டி, சிக்கன் வெந்ததும் இறக்கி ஆற வைக்கவும்.

    * மைதா, ப்ரெட் தூள் இரண்டையும் தனித்தனி கிண்ணங்களில் எடுத்துக்கொள்ளவும்.

    * முட்டையைத் தனியாக ஒரு கிண்ணத்தில் ஊற்றி அடித்து வைத்துக்கொள்ளவும்.

    * ஒரு சிக்கன் துண்டை எடுத்து மைதாவில் முழுவதும் புரட்டி, அடுத்து முட்டையில் முழுவதும் தோய்த்து, உடனே ப்ரெட் தூளில் போட்டு புரட்டி ஒரு தட்டில் வைக்கவும்.

    * இதுபோல் எல்லா சிக்கன் துண்டுகளையும் செய்து வைக்கவும்.

    * ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் ஒவ்வொன்றாகவோ போட்டு ஒரு பக்கம் வெந்து சிவந்ததும் மறுபக்கம் திருப்பிவிட்டு வெந்ததும் எடுத்துவிடவும்.

    * இதனை தக்காளி கெச்சப்புடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

    • இப்படி செய்து கொடுத்தால் இன்னும் அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள்.
    • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றிக் கொள்ளவும்.

    சிக்கன் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். அதுவும் இப்படி செய்து கொடுத்தால் இன்னும் அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள். வாங்க சிக்கன் பாப்கார்ன் எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்:

    எலும்பில்லாத சிக்கன் - 250 கிராம்

    பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

    எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்

    உப்பு - சுவைக்கேற்ப

    சீரகப் பொடி - 1 டீஸ்பூன்

    கரம் மசாலா - 1 டீஸ்பூன்

    பிரட் - 4

    முட்டை - 1

    பால் - 1 டேபிள் ஸ்பூன்

    மைதா - 1/2 கப்

    செய்முறை:

    * முதலில் சிக்கனை சிறு துண்டுகளாக வெட்டி, நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் கழுவிய சிக்கனை ஒரு பெளலில் போட்டு, அத்துடன் பூண்டு விழுது, எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.


    * பின்பு பிரட் துண்டுகளை நன்கு பொன்னிறமாக டோஸ்ட் செய்து, மிக்சர் ஜாரில் போட்டு பொடி செய்து, ஒரு தட்டில் போட்டுக் கொள்ள வேண்டும். அதன் பின் பிரட் தூளுடன் சீரகப் பொடி மற்றும் கரம் மசாலா சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

    * பிறகு ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி, அதனுடன் பாலை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

    * பின் ஒரு தட்டில் மைதாவை போட்டுக் கொள்ள வேண்டும்.

    * இப்போது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றிக் கொள்ளவும்.

    * பின்னர் ஒரு சிக்கன் துண்டை எடுத்து, முதலில் முட்டை கலவையில் பிரட்டி, பின் மைதாவில் பிரட்டி, அதன் பின் மீண்டும் முட்டையில் பிரட்டி, இறுதியாக பிரட் தூளில் பிரட்டி பின்னர் அதனை எண்ணெயில் போட வேண்டும்.

    * இப்படி அனைத்து சிக்கனையும் பொன்னிறமாக பொரித்து எடுத்தால், கிரிஸ்பியான சிக்கன் பாப்கார்ன் ரெடி.

    • கடந்த 1½ வருடங்களுக்கு மேலாக 23 ஆயிரத்து 500 கிலோ சிக்கன் சப்ளை செய்தோம்.
    • புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் செந்தில்மோகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை அரசு கலைக்கல்லூரி ரோட்டில் உள்ள சிக்கன் கடையில் மேலாளராக வேலை பார்த்து வருபவர் பாலமுருகன்(வயது39).

    இவர் கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    நான் கோவை அரசு கலைக்கல்லூரி ரோட்டில் உள்ள சிக்கன் கடையில் மேலாளராக வேலை பார்த்து வருகிறேன்.

    கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு எங்கள் கடைக்கு சென்னை குறுக்குபேட்டையை சேர்ந்த செந்தில்மோகன் என்பவர் வந்தார்.

    அவர் தான் சென்னையில் சிக்கன் கடை வைத்து நடத்தி வருவதாகவும், எனக்கு மொத்தமாக சிக்கன் சப்ளை செய்ய வேண்டும் என கேட்டு கொண்டார். அதற்கான பணத்தை உரிய தவணையில் செலுத்தி விடுவதாகவும் தெரிவித்தார்.

    இதனை நம்பி நாங்கள் கடந்த 1½ வருடங்களுக்கு மேலாக 23 ஆயிரத்து 500 கிலோ சிக்கன் சப்ளை செய்தோம்.

    இதுவரை சப்ளை செய்த சிக்கனுக்கு ரூ.47 லட்சத்து 37 ஆயிரத்து 999 செந்தில்மோகன் தர வேண்டும். ஆனால் அவர் இதுவரை பணத்தை தரவில்லை.

    இதுகுறித்து அவரிடம் கேட்டால் விரைவில் தருகிறேன் என்றார்.

    இந்நிலையில், கடந்த 10 மாதமாக செந்தில்மோகன் சிக்கன் வாங்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த நான் சென்னைக்கு சென்று அவர் கூறிய இடத்திற்கு சென்றேன்.

    அப்போது அங்கு அவர் சொல்லிய சிக்கன் கடை இல்லை. மேலும் அவரை செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவர் போனை எடுக்கவில்லை. அப்போது தான் அவர் ஏமாற்றி மோசடி செய்தது தெரியவந்தது.

    எனவே சிக்கன் வாங்கி விட்டு ரூ.47.37 லட்சம் மோசடி செய்த செந்தில்மோகன் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தர வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் செந்தில்மோகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டிப்-டாப் வாலிபர் சிறுவனை தன்னுடன் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.
    • தப்பி சென்ற வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போரூர்:

    கே.கே. நகர் பகுதியில் ஓட்டல் நடத்தி வருபவர் மோகன்ராஜ். இவரது கடைக்கு நேற்று இரவு வந்த "டிப் டாப்" வாலிபர் ஒருவர் ரூ.760-க்கு பரோட்டா, பிரைட் ரைஸ், சிக்கன் உள்ளிட்ட டிபன் வகைகளை பார்சல் வாங்கினார் அப்போது பணத்தை வீட்டிலேயே மறந்து வைத்து விட்டதாக கூறிய வாலிபர் கடை ஊழியரை அனுப்பி வைத்தால் பணம் கொடுத்து அனுப்புகிறேன் என்று தெரிவித்தார்.

    இதையடுத்து மோகன் ராஜ், கடையில் வேலை பார்த்து வரும் சிறுவனை அனுப்பி வைத்தார். டிப்-டாப் வாலிபர் சிறுவனை தன்னுடன் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.

    கடையின் அருகில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவிற்குள் சென்று ஒரு வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திய வாலிபர் ஓட்டல் ஊழியரின் செல்போனை கேட்டு வாங்கினார்.

    மேலும் 2-வது தளத்தில் உள்ள நண்பரிடம் கூறி விட்டேன். போய் பணத்தை வாங்கி கொண்டு வா" என்று கூறி அனுப்பி வைத்தார். இதை உண்மை என்று நம்பிய ஓட்டல் ஊழியர் அந்த வீட்டின மேல் தளத்திற்கு சென்றபோது அங்கு யாரும் இல்லை.

    அவர் கீழே இறங்கி வருவதற்குள் டிப்-டாப் வாலிபர் அங்கிருந்து செல்போனுடன் தப்பி சென்றுவிட்டார். சினிமா பாணியில் அவர் ஏமாற்றி டிபன் வாங்கி சென்று இருப்பது தெரிந்தது.

    டிபன் பார்சல் வாங்கிக் கொண்டு நூதனமான முறையில் செல்போனையும் பறித்து தப்பி சென்ற வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • குமாரபாளையம் பள்ளிபாளையம் பிரிவு சாலை அருகே மும்பை சவர்மா என்ற சிக்கன் வறுவல் கடையில் நேற்று இரவு சிலர் சிக்கன் சாப்பிட சென்றுள்ளனர்.
    • 30லிருந்து 40 கிலோவிற்கும் அதிகமாக பழைய சிக்கன் குளிர்சாதன பெட்டியில் இருந்ததை கண்டு பிடித்தனர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் பள்ளிபாளையம் பிரிவு சாலை அருகே மும்பை சவர்மா என்ற சிக்கன் வறுவல் கடையில் நேற்று இரவு சிலர் சிக்கன் சாப்பிட சென்றுள்ளனர்.

    அது சாப்பிட முடியாத நிலையில் துர்நாற்றம் வீசவே,இது பற்றி கடை பணியாளர்களிடம் கேட்க, அவர்கள் மொழி தெரியாமல் எதையும் கண்டுகொள்ளாமல் வேலை செய்து கொண்டிருந்தனர்.

    இது குறித்து உணவு பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சோதனை செய்ததில் 30லிருந்து 40 கிலோவிற்கும் அதிகமாக பழைய சிக்கன் குளிர்சாதன பெட்டியில் இருந்ததை கண்டு பிடித்தனர்.

    அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது போன்று நகரில் உள்ள அனைத்து சில்லி சிக்கன் கடைகளை ஆய்வு செய்ய வேண்டும் என உணவு பாதுகாப்புத்துறையிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×