என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பட்டமளிப்பு"
- அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
- 537 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
திருமங்கலம்
திருமங்கலம் காமராஜர் பல்கலைக்கழகத்தின் உறுப்பு அரசு கலைக் கல்லூரியில் முதலாவது பட்டமளிப்பு விழா நடை பெற்றது. கல்லூரி முதல்வர் லட்சுமி வரவேற்றார். விருது நகர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூர் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தமிழ், ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட துறை களை சேர்ந்த 537 மாணவ, மாணவிகளுக்கு பட்டங் களை வழங்கினார்.அப்போது அவர் பேசு கையில், பட்டம் பெற்றதன் மூலம் அறிவை மேம்படுத்திக் கொண்டு நாட்டிற்கு மாணவ, மாணவிகள் தங்களுடைய செயல்பாடு களை அளிக்க வேண்டும் என்றார்.
பட்டமளிப்பு விழாவில் முன்னாள் முதல்வர் புவனேஸ்வரன், காங்கிரஸ் நிர்வாகி உலகநாதன், வட்டார தலைவர் முருகேசன், கவுன்சிலர் அமுதா சரவணன், நகர மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், நகரச் செய லாளர் ஸ்ரீதர் துணைத் தலைவர் ஆதவன் அதியமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் சத்யா வித்யாலயா பள்ளியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
- பாலர் வகுப்பு மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் பிள்ளையர்குளம் சத்யா வித்யாலயா சி.பி.எஸ்.இ. மேல்நிலைப்பள்ளியில் பாலர் வகுப்பு மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடந்தது. மாணவி கவியாழினி வரவேற்றார். பள்ளி குழுமத்தலைவர் குமரேசன், மேனேஜிங் டிரஸ்டி டாக்டர் சித்ரா குமரேசன் ஆகியோர் தலைமை தாங்கினர். முதல்வர் அனுசியா, துணை முதல்வர் சவுந்திரபாண்டி என்ற சவுந்தரி, ஆலோசகர் பாரதி, நிர்வாக அதிகாரி அமுதா முன்னிலை வகித்னர். சிறப்பு விருந்தினராக ராஜபாளையம் நகர் மன்ற தலைவி பவித்ரா ஷியாம் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினரை ஆங்கிலத்துறை ஆசிரியை இந்திரா ரவீந்திரன் அறிமுகம் செய்து வைத்தார். பள்ளி குழுமத்தலைவர் குமரேசன் விருந்தினர்களை கவுரவித்தார். பாலர் வகுப்பு மாணவி தீபிகா திருக்குறள் ஒப்பிவித்தார். ஆசிரியை கற்பகமாரி, மாணவி ஸ்ரீஷா ஆகியோர் பேசினர். பாலர் வகுப்பு மாணவர்கள் பாடல்கள் பாடியும், நடனமாடியும் மகிழவித்தனர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் சிறப்பு விருந்தினர் வழங்கி பேசினார். பாலர் வகுப்பு மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. மாணவர் சித்தார் நன்றி கூறினார்.
- ஏ.ஆர்.ஜெ பொறியியல் கல்லூரி, மேலாண்மை கல்லூரி மற்றும் தொழில்நுட்ப கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களில் பட்டமளிப்பு விழா கல்லூரி அரங்கில் நடந்தது.
- கல்லூரி உங்களுக்கு சிறந்த கல்வியை மட்டுமல்ல சிறந்த வாய்ப்புகளையும் உருவாக்கி தந்துள்ளது.
தஞ்சாவூர்:
மன்னார்குடி ஏ.ஆர்.ஜெ பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் மாணவர்களுக்கு தஞ்சை தழிழ்ப்பல்கலை கழக துணை வேந்தர் திருவள்ளுவன் பட்டங்களை வழங்கினார்.
பட்டமளிப்பு விழா
மன்னார்குடி அருகே இடையர்நத்தத்தில் உள்ள ஏ.ஆர்.ஜெ பொறியியல் கல்லூரி, மேலாண்மை கல்லூரி மற்றும் தொழில்நுட்ப கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களில் பட்டமளிப்பு விழா கல்லூரி அரங்கில் நடந்தது.
விழாவிற்கு ஏ.ஆர்.ஜெ கல்வி குழும தலைவி ராஜகுமாரி தலைமை தாங்கினார்.
துணைதலைவர் மற்றும் தாளாளர் டாக்டர்.ஜீவகன் அய்யநாதன் முன்னிலை வகித்தார்.
முன்னதாக பொறியியல் கல்லூரி முதல்வர் டி. வெங்கடேசன் வரவேற்றார்.
விழாவில் தஞ்சை தமிழ்ப்பல்கலைகழக துணைவேந்தர் திருவள்ளுவன் கலந்து கொண்டு அண்ணா பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள் உள்பட 475 பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள், 75 நிர்வாக மேலாண்மை கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் 380 பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:-
கிராமப்புறங்கள் சூழ்ந்த இந்த பகுதியில் சாதாரண கிராமத்து மக்களின் பிள்ளைகளும் பொறியியல் கல்வி கற்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் இந்த கல்வி நிறுவனத்தை தொடங்கி
சிறப்பாக நடத்தி வரும் தாளாளர் மற்றும் நிர்வாகத்தினருக்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.
மேகம் கீழே உள்ள நீரை எடுத்து மேலே கொண்டு சென்று மழையாக பொழிவது தனக்காக அல்ல.
அதே போல தாங்கள் கற்கும் கல்வியும், அறிவும் தங்களுக்கு மட்டுமல்லாது நாட்டிற்கும் சமூகத்திற்கும் பயன்படும் வகையில் நீங்கள் உங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த கல்லூரி உங்களுக்கு சிறந்த கல்வியை மட்டுமல்ல சிறந்த வாய்ப்புகளையும் உருவாக்கி தந்துள்ளது.
அதனை நீங்கள் நல்ல முறையின் பயன்படுத்தி வாழ்க்கையில் உயர வேண்டும். அதே நேரத்தில் சமூக ஊடகங்களில் உங்கள் நேரத்தை விரயம் செய்யாமல் பயனுள்ள வகையில் நேரத்தை செலவிட்டு திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
நம்மால் முடியும் என்ற நம்பிக்கையை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். முடிவுகள் எடுக்கும் திறனை வளர்த்து கொள்ள வேண்டும்.
போட்டிகள் நிறைந்த தற்போதைய உலக சூழலில் உங்கள் திறன் மேம்பட்டு இருந்தால் மட்டும் தான் நீங்கள் சிறந்த இடத்தை அடைய முடியும்.
அதற்கு நீங்கள் தொடர்ந்து கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். கல்வி சார்ந்த விஷயங்களை தொடர்ந்து கற்பதற்கு முயற்சிக்க வேண்டும். புத்தக வாசிப்பு நல்ல மனிதனை உருவாக்குகிறது.
மிகச் சிரமமான சூழ்நிலையில் வளர்த்து கல்வி கொடுத்து ஆளக்கிய பெற்றோருக்கும், சிறந்த கல்வி தந்து உங்களை பொறியியல் பட்டதாரியாக்கிய இந்த கல்வி நிறுவனத்திற்கும் பெருமை சேர்க்கும் வகையில் நீங்கள் வளர்ந்து வாழ்வில் மேம்பாடு அடைய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மேலாண்மை நிறுவன இயக்குனர் கே. செல்வராஜ், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஆர். கமலக்கண்ணன் மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
- காரைக்குடி கல்லூரியில் பட்டமளிப்பு-விருது வழங்கும் விழா நடந்தது.
- கல்லூரி இயக்குனர் கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி விசாலயன்கோட்டையில் அமைந்துள்ள சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 2016-2022ம் ஆண்டில் படித்த மாணவர்களுக்கான பட்டமளிப்பு மற்றும் விருது வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது.
கல்லூரி நிறுவனர்- தலைவர் சேதுகுமணன் தொடங்கி வைத்தார்.கல்லூரி முதல்வர் கருணாநிதி வரவேற்றார்.
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி, முன்னாள் காவல்துறை இயக்குனர் ரவி ஆகியோர் தலைமை விருந்தினர்களாக கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர். 41 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.
விழாவில் ஓய்வுபெற்ற காவல்துறை இயக்குநர் ரவி, அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுப்பையா ஆகியோர் மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவது குறித்து பேசினர்.
விழாவில் பெங்களூரு அறிவியல் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் செங்கப்பா, புளோரிடா பல்கலைக்கழக இளைஞர் நலன் மற்றும் சமுதாய அறிவியல் துறை பேராசிரியர் முத்துசாமி குமரன் சிறப்புரையாற்றினர்.
கல்லூரி இயக்குனர் கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர். பேராசிரியை விஷ்ணுபிரியா நன்றி கூறினார்.
- குதிரையேற்றம், மலையேற்றம், படகு சவாரி, உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படும்.
- 77 -வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், குன்னூா் வெலிங்டனில் முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரி உள்ளது.
சா்வதேச அளவில் புகழ்பெற்ற இக்கல்லூரியில் அமெரிக்கா, கென்யா, பிரிட்டன், பாகிஸ்தான் உள்பட பல வெளிநாட்டு முப்படை அதிகாரிகள் பயிற்சி பெறுகின்றனா்.
கடந்த ஏப்ரல் மாதம் 77 -வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் 479 அதிகாரிகள் பட்டங்கள் பெற்றனர். இந்தநிலையில் 78 -வது பயிற்சி வகுப்புகள் நேற்று தொடங்கின. பயிற்சி வகுப்புகளை கல்லூரி முதல்வா் கமாண்டென்ட் லெப்டினன்ட் ஜெனரல் எஸ்.மோகன் தொடங்கிவைத்தாா்.
இதில் இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையைச் சோ்ந்த 439 அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அமை ச்சகத்தின் தொடா்புடைய சேவைகளைச் சோ்ந்த அதிகாரிகள் சோ்ந்துள்ளனா். 11 மாதங்கள் நடைபெறும் இந்த பயிற்சி வகுப்புகள் நிறைவடைந்ததும் சென்னை பல்கலைக்கழகத்தின் சாா்பில் எம்எஸ்சி டிபன்ஸ் பட்டம் வழங்கப்படும்.
பயிற்சி வகுப்பில் பங்கேற்றுள்ள அதிகாரிகளுக்கு பாடத் திட்டம் மட்டுமல்லாமல், குதிரையேற்றம், மலையேற்றம், படகு சவாரி, சைக்கிள் சவாரி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்