என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மேல்நிலைப்பள்ளி"
- ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் பணி நிரவல் செய்யப்பட உள்ளன.
- மாணவ-மாணவிகளின் எண்ணிக்கையின்படி, நடத்தப்பட வேண்டும்.
சென்னை:
சென்னை, மதுரை, கோவை மாநகராட்சி பள்ளிகளை தவிர, அரசு, நகராட்சி, மாநகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் பணி நிரவல் செய்யப்பட உள்ளன.
அதன்படி, பணி நிரவல் கலந்தாய்வு கடந்த ஆகஸ்டு மாதம் 1-ம்தேதி பள்ளியில் உள்ள மாணவ-மாணவிகளின் எண்ணிக்கையின்படி, நடத்தப்பட வேண்டும்.
அதாவது, மேல்நிலைப் பள்ளிகளில் 1,500 மாணவ-மாணவிகள் உள்ள பள்ளிகளுக்கு ஒரு ஆய்வக உதவியாளர், 1,501 முதல் 3,000 வரை 2 பேர், 3,001 முதல் அதற்கு மேல் 3 பேர் என்ற அடிப்படையிலும், உயர்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு பணியிடம் என்ற அடிப்படையிலும் ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் பணிநிரவல் செய்ய கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
பணிநிரவல் மேற்கொள்ளும்போது உபரி என கண்டறியப்பட்ட ஆய்வக உதவியாளரில் மூத்தவர் முதலில் பணிநிரவல் செய்யப்படவேண்டும் என்பது போன்ற வழிகாட்டு நெறிமுறைகளையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
- பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் வழங்கினார்
- போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியில் 102-வது ஆண்டு விழா, இலக்கிய மன்ற விழா மற்றும் விளையாட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது. விழாவுக்கு கன்னியாகுமரி புனித அலங்கார உபகார மாதா திருத்தல அதிபரான பங்கு தந்தையும், பள்ளி தாளாளருமான உபால்டு தலைமை தாங்கினார். விழாவில் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விளையாட்டு போட்டி உள்பட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் முன்னாள் விஞ்ஞானியும், இணை இயக்குனருமான குமார், பள்ளி தலைமை ஆசிரியை பிரசன்னா, உதவி தலைமை ஆசிரியர் ஜாண் சுகிலன், முன்னாள் தலைமை ஆசிரியர் டாக்டர் ரெம்ஜியூஸ் பரதராஜ், நாகர்கோவில் மாவட்ட கல்வி அலுவலர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
விழாவில் கடந்த கல்வியாண்டில் அதிக தேர்ச்சி சதவீதம் காட்டிய ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளை உதவி தலைமை ஆசிரியர் சாந்தா ஜெயராணி விஜயா, இடைநிலை ஆசிரியர் டீபர் ஆகியோர் தொகுத்து வழங்கினர். முடிவில் ஆசிரியர் அஜாஸ் நன்றி கூறினார். விழாவில் பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
- இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தி மனித வாழ்வுக்கு ஓர் இலக்கணமாக திகழ்ந்தார்
- மையச் சிந்தனையின் அடிப்படையில் கவிதை, நோக்கவுரை போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன.
மார்த்தாண்டம் :
கருங்கல் பாலூரில் இயங்கி வரும் பெஸ்ட் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச அகிம்சை தினமாக கொண்டாடப்படும் மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளி தலைவர் டாக்டர் தங்கசுவாமி தலைமை தாங்கினார். முதுநிலை முதல்வர், முதல்வர் மற்றும் துணை முதல்வர் முன்னிலை வகித்தனர்.
இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தி மனித வாழ்வுக்கு ஓர் இலக்கணமாக திகழ்ந்தார் என்னும் மையச் சிந்தனையின் அடிப்படையில் கவிதை, நோக்கவுரை போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன.
மேலும் மழலையர்கள் காந்தியடிகள் போன்று வேடமணிந்து வந்திருந்தனர். மேல்வகுப்பு மாணாக்கர்களில் சிலர் மகாத்மா காந்தியடிகள் போன்று வேடமணிந்து அவரின் கொள்கைகளை எடுத்துரைத்தது குறிப்பிடத்தக்கது. அதில் சிறப்பாக பங்களித்த மாணாக்கர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்தின் வழிகாட்டுதலில் ஆசிரியர்கள், மாணாக்கர்கள் மற்றும் இதர பணியாளர்கள் செய்திருந்தனர்.
- தேவகோட்டையில் அரசு மேல்நிலைப்பள்ளியை உடனடியாக அமைக்க வேண்டும் என நகர்மன்ற தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
- கிராமங்களுக்கு சென்று படித்து வருகின்றனர்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டத்தின் பழமையான நகராட்சி தேவகோட்டை நகராட்சி ஆகும். நகரில் 27 வார்டுகள் உள்ளன. சுமார் ஒரு லட்சத்திற்கு மேல் வாக்கா ளர்களை கொண்ட நகராட்சியில் அரசு மேல் நிலைப்பள்ளி வேண்டும் என தமிழக அரசுக்கு நகர மன்ற தலைவர் சுந்தரலிங்கம் கோரிக்கை வைத்தார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:-
தேவகோட்டை நகராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி இல்லா ததால் பொதுமக்களும் மாணவ மாணவிகளும் மிகுந்த சிரமப்படுகிறார்கள். நகரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் போதுமான இடவசதியும் எந்நேரத்திலும் மேல்நிலைப்பள்ளி இங்கு வரலாம் என எதிர் பார்ப்போடு 2 வகுப்பு வரை கட்டிடங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன.
மேலும் கட்டிடங்கள் பற்றாக்குறை ஏற்படுமாயின் அதனை சரி செய்ய நகராட்சி நிர்வாகம் கட்டிடங்களை கட்டித் தர தயாராக உள்ளது.அரசு மேல்நிலைப்பள்ளி வருவதற்கு ரூபாய் 2 லட்சம் நகராட்சி நிர்வாகம் பணம் கட்டியுள்ளது. ஆனால் இதுவரை மேல்நிலைப் பள்ளி வரவில்லை. இதனால் பொதுமக்கள் ஆதங்கப்படுகிறார்கள். முதல் நகர்மன்ற கூட்டத்தி லேயே நகருக்கு அரசு மேல்நிலைப்பள்ளி வர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அதனை அனுப்பி வைத்துள்ளோம். ஆனால் இதுவரை வரவில்லை. இங்கு மாணவ-மாணவிகள் 11 மற்றும் 12 வகுப்புகளுக்கு பயில அருகில் உள்ள அனுமந்தகுடி, பெரியகாரை கிராமங்களுக்கு சென்று படித்து வருகின்றனர்.
எல்லா பகுதிகளிலும் கிராமத்தில் இருந்து மேல்நிலை படிப்பிற்காக நகரங்களுக்கு வந்து செல்கின்றனர். ஆனால் தேவகோட்டை நகராட்சியில் மாணவ-மாணவிகள் தங்களின் மேல்நிலைப் படிப்புக்காக கிராமங் களுக்கு செல்கின்றனர்.
தேவகோட்டை நகருக்கு அரசு மேல்நிலைப்பள்ளி வர அரசு உடனே உத்தரவு விட்டு செயல்படுத்தினால் நகர் மன்றமும் தேவ கோட்டை மக்களும் மாணவ செல்வங்களும் மகிழ்ச்சி அடைவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அம்மாண்டிவிளை அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான்
- மகன் எடுத்துச்சென்ற செல்போனில் ரிங் சென்றதாகவும், அதன்பிறகு சுவிட்ச் ஆப் ஆகி உள்ளது
ராஜாக்கமங்கலம் :
வெள்ளிச்சந்தை அருகே உள்ள வெள்ளமோடி பகுதியை சேர்ந்தவர் சுயம்பு லிங்கம், கட்டிட தொழிலாளி. இவரது மகன் சுதன் (வயது 15). இவன் அம்மாண்டிவிளை அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரு கிறான்.
கடந்த 2 நாட்களாக சுதன் பள்ளிக்கு செல்லவில்லையாம். இதனை அறிந்த சுயம்புலிங்கம் கண்டித்துள் ளார். இந்த நிலையில் நேற்று காலை சுதன் திடீரென மாயமாகி விட்டான். அவர் தனது தந்தையின் செல் போனையும் எடுத்துச் சென்றுள்ளான்.
மகனை பல இடங்களில் தேடியும் தகவல் கிடைக்கா ததால் வெள்ளிச்சந்தை போலீசில் சுயம்புலிங்கம் புகார் செய தார். அதில் மதியம் வரை மகன் எடுத்துச்சென்ற செல்போனில் ரிங் சென்றதாகவும், அதன்பிறகு சுவிட்ச் ஆப் ஆகி உள்ளதாகவும் குறிப் பிட்டுள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 1972-ம் ஆண்டு முதல் 1978-ம் ஆண்டு வரை ஏ வகுப்பில் படித்த முன்னாள் மாணவர்கள் இன்று ஒன்று கூடும் நிகழ்வு நடந்தது.
- தாங்கள் படித்த பள்ளிக்கு 50 ஆண்டுகளுக்கு பிறகு வந்தவர்கள் பள்ளியில் தாங்கள் படித்த வகுப்பறை மற்றும் தங்களுக்கு பாடம் சொல்லி கொடுத்த ஆசிரியர்களில் சிலரையும் அழைத்து அவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.
நாகர்கோவில் :
நாகர்கோவிலில் உள்ள கார்மல் மேல் நிலைப்பள்ளி தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் ஆகிறது.
இப்பள்ளியின் நூற்றாண்டு விழா நடைபெற உள்ள நிலையில் இப்பள்ளியில் கடந்த 1972-ம் ஆண்டு முதல் 1978-ம் ஆண்டு வரை ஏ வகுப்பில் படித்த முன்னாள் மாணவர்கள் இன்று ஒன்று கூடும் நிகழ்வு நடந்தது.
இதில் ஒரே வகுப்பில் படித்த சுமார் 35 முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.இதில் பலர் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் தங்கி இருந்தனர்.
இவர்களில் சிலர் வாட்ஸ் அப் குரூப் மூலம் ஒன்றிணைந்தனர். கார்மல் மேல் நிலைப்பள்ளியில் படித்து முடித்து பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வந்த இவர்கள் 50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதே பள்ளியில் ஒன்று சேர முடிவு செய்தனர்.
இதையடுத்து இன்று காலை அவர்கள் கார்மல் மேல்நிலைப்பள்ளியில் ஒன்று கூடினர். அவர்களில் சிலர் தங்கள் குடும்பத்தினரையும் அழைத்து வந்திருந்தனர்.
தாங்கள் படித்த பள்ளிக்கு 50 ஆண்டுகளுக்கு பிறகு வந்தவர்கள் பள்ளியில் தாங்கள் படித்த வகுப்பறை மற்றும் தங்களுக்கு பாடம் சொல்லி கொடுத்த ஆசிரியர்களில் சிலரையும் அழைத்து அவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட்பணி மரிய பாஸ்டின் துரை, அருட்பணி ஏசுநேசன் மற்றும் உதவி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அப்போது படிக்கும் போது நடந்த பல்வேறு சுவையான சம்பவங்களை பலரும் பகிர்ந்து கொண்டனர். இன்று ஒன்று கூடிய பலரும் சுமார் 60 வயதை எட்டியிருந்தனர். ஆனால் அவர்கள் பள்ளி பருவத்தை பற்றி பகிர்ந்து கொண்ட போது அவர்களின் கண்ணில் இளமையும், பூரிப்பும் தென்பட்டது. சிலர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட போது கண்கலங்கினர்.
இன்றைய நிகழ்வுக்கு வந்தவர்களில் பலர் மலேசியா, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் இருந்தும் வந்திருந்தனர். இது தவிர மும்பை, பெங்களூரூ, திருவனந்தபுரம் உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்தும் பலர் தங்கள் குடும்பத்துடன் வந்து பங்கேற்றனர்.
முன்னாள் மாணவர்கள் அனைவரும் குரூப் போட்டோ எடுத்துக் ெகாண்டனர். தொடர்ந்து தங்களது உறவுகளை ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து மகிழ்ந்தனர். இது பற்றி முன்னாள் மாணவரும், ஓய்வு பெற்ற திருவனந்தபுரம் ஐ.எஸ்.ஆர்.ஓ. கூடுதல் இயக்குனருமான ஜெகன்லால் கூறுகையில், என்னுடன் படித்த பலரை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இது எங்களது பொன்விழா ஆண்டு.
தற்போது பணி ஓய்வு பெற்ற நாங்கள் இங்கு குடும்பத்துடன் வந்துள்ளோம். மாலையில் அனைவரும் சங்குத்துறை பீச் சென்று பேச்சு, கட்டுரை, பீச் வாக் போன்ற போட்டிகளில் பங்கேற்க உள்ளோம் என்றார்.
- பள்ளி தலைமை ஆசிரியர் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பேசினார்.
- அரசுப் பள்ளியின் பெருமைகளை விளக்கும் வகையில் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
ஆத்தூர்:
ஆத்தூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது.
ஆத்தூர் பேரூராட்சி மன்றத் தலைவர் கமால்தீன் , பேரூராட்சி செயல் அலுவலர் முருகன், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் முத்துலட்சுமி, முன்னாள் ஆசிரியர் நாராயணன், வார்டு உறுப்பினர்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பேரூராட்சி மன்றத் தலைவர் ஊரின் அனைத்து பகுதிகளும் தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும் என்றும், சிறந்த மாணவர்களை உருவாக்குவதில் பெற்றோர்களின் பங்கு மிகவும் முக்கியம் என்பதையும் எடுத்துக் கூறினார்.
பள்ளி தலைமை ஆசிரியர் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி, பள்ளி மேலாண்மை குழுவின் நோக்கம் மற்றும் செயல் பாடுகள் பள்ளியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்க வேண்டும் என்பதை விளக்கிக் கூறினார். அரசுப் பள்ளியின் பெருமைகளை விளக்கும் வகையில் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.விழா ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
- அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அனைத்து பள்ளி மாணவா்களுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன.
- முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரம், 3-ம்ப பரிசாக ரூ.5 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளதாக தமிழ் வளா்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
நாமக்கல்:
தமிழ்நாடு தினத்தை யொட்டிமாவட்ட அளவில் அனைத்து பள்ளி மாணவா்களுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றன. 2 போட்டிகளிலும் மொத்தம் 53 போ் கலந்து கொண்டனா்.
தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் வே.ஜோதி தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் இரா.பெரியண்ணன், உதவி தலைமை ஆசிரியா் இல. ஜெகதீசன் முன்னிலை வகித்தனா். அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளைச் சோ்ந்த 6 ஆசிரியா்கள் நடு வா்களாகச் செயல்பட்டனர்.
பேச்சுப் போட்டியில் நாமக்கல் அரசு மகளிா் பள்ளியின் 11-ம் வகுப்பு மாணவி கோபிகா முதலி டத்தையும், எா்ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி 6-ம் வகுப்பு மாணவி மிது னாஸ்ரீநிதி 2-ம் இடத்தையும், பாண்டமங்கலம் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி 11-ம் வகுப்பு மாணவி வித்யாஸ்ரீ 3-ம் இடத்தையும் பிடித்தனர்.
கட்டுரைப் போட்டியில், வெண்ணந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 11-ஆம் வகுப்பு மாணவா் சுனில்குமாா் முதலிடம், எலச்சிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி 12-ஆம் வகுப்பு மாணவி பவித்ரா 2-ம் இடம், பீச்சாம்பா ளையம் விஐபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜனனி 3-ம்இடம் பிடித்தனர்.முதலிடம் பிடித்த மாணவா்கள் மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனா்.
மாவட்ட அளவில் இவா்களுக்கு விரைவில் முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரம், 3-ம்ப பரிசாக ரூ.5 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளதாக தமிழ் வளா்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
- பூதலூர் வட்டாரத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் இந்த பயிற்சியில் கலந்து கொண்டனர்.
- வட்டார வள மைய பயிற்சி மையத்தில் ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்று வருகிறது
பூதலூர்:
பூதலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வட்டார வள மைய பயிற்சி மையத்தில் ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்று வருகிறது. பூதலூர் வட்டாரத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் இந்த பயிற்சியில் கலந்து கொண்டனர்.
பயிற்சியில் தஞ்சை மாவட்ட கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மைய முதுநிலை விரிவுரையாளர் ஜெயராஜ், பூதலூர் ஒன்றிய எண்ணும் எழுத்தும் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் பால்ராஜ், வட்டார வள மைய மேற்பார்வையாளர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.
இந்த பயிற்சி முகாமை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் முதல்வர் செங்குட்டுவன், பூதலூர் வட்டார கல்வி அலுவலர் ரமாபிரபா, உதவி பேராசிரியர் இளையராணி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்