என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவ-மாணவிகள்"

    • சமூக வலை தளங்களில் வைரலாகும் வீடியோ
    • வெளியூர் நிகழ்ச்சிக்கு மாணவ-மாணவிகளை அழைத்து சென்ற போது நடனம்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    இந்த பள்ளியில் உள்ள மாணவ-மாணவிகள் மதுரை அருகே உள்ள பள்ளி ஒன்றில் நடந்த பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்வதற்காக தயாரானார்கள். இதையடுத்து பள்ளியி லிருந்து வேனில் மாணவ- மாணவிகள் மதுரைக்கு புறப்பட்டனர்.

    மாணவ-மாணவிகளுடன் ஆசிரியைகளும் சென்றிருந்தனர்‌. மதுரை அருகே ஓட்டல் ஒன்றில் உணவு அருந்துவதற்காக வேன் நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது மாணவ மாணவிகள் குத்தாட்ட பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடினர். மாணவ-மாணவி களு டன் ஆசிரியை ஒருவரும் நடனம் ஆடினார். மாணவ மாணவிகள் கூச்சல் சத்தத்துடன் நடனம் ஆடி கொண்டிருந்ததை ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.

    இந்த வீடியோ தற்பொ ழுது சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியுள்ளது. அந்த வீடியோவில் ஆசிரியை மாணவர் ஒரு வரின் கையைப் பிடித்துக் கொண்டு நடனம் ஆடுவது போன்று உள்ளது. மேலும் மாணவ மாணவிகள் நடன மாடும் வீடியோவும் வைர லாகி உள்ளது.

    வெளியூர் நிகழ்ச்சிக்கு மாணவ-மாணவிகளை அழைத்து சென்ற போது நடு ரோட்டில் மாணவர்களு டன் ஆசிரியை நடன மாடும் சம்பவம் பெற்றோர் கள் மத்தியில் பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக அதிகா ரிகள் விசாரணை மேற் கொண்டு வருகிறார்கள்.

    • வளர்ந்த நாடாக உருவாக்க ஊழலற்ற இந்தியா என்ற தலைப்பில் நடந்த பேரணி நாகர்கோவில் டதி பள்ளியில் இருந்து தொடங்கியது
    • மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு பங்கேற்றனர்

    நாகர்கோவில் :

    ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை சார்பில் நாகர்கோவிலில் விழிப்புணர்வு பேரணி இன்று நடந்தது. வளர்ந்த நாடாக உருவாக்க ஊழலற்ற இந்தியா என்ற தலைப்பில் நடந்த பேரணி நாகர்கோவில் டதி பள்ளியில் இருந்து தொடங்கியது. அமைச்சர் மனோ தங்கராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு பங்கேற்றனர். விழிப்புணர்வு பேரணி மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலை, மணி மேடை,வேப்ப மூடு வழியாக மீண்டும் டதி பள்ளியை வந்தடைந்தது.

    நிகழ்ச்சியில் கலெக்டர் அரவிந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகரன் பிரசாத்,லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு பீட்டர் பால், முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • போட்டியில் கிராமிய நடனம், நாட்டுப்புற நடனம், கரகாட்டம் என பல்வேறு பிரிவின் கீழ் போட்டிகள் நடைபெற்றன.
    • மாணவ- மாணவிகள் 1492 பேர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிகாட்டினர்.

    தஞ்சாவூர்:

    அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கலை திறன்களை வெளி கொண்டு வரும் விதமாக பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத் திருவிழா நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    அதன்படி தஞ்சை மாவட்டத்தில் பள்ளி அளவில் கலைத் திருவிழா கடந்த நவம்பர் 23 முதல் 28-ம் தேதி வரை நடைபெற்றது. வட்டார அளவில் நவம்பர் 29 முதல் கடந்த 5-ந் தேதி வரை நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் தஞ்சையில் இன்று தொடங்கியது.
    வருகிற 12-ஆம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெறும்.

    இன்று நடந்த கலைத் திருவிழா போட்டியை டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சிவகுமார் ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

    தஞ்சை மாவட்ட அளவில் நடந்த இந்த போட்டியில் கிராமிய நடனம், நாட்டுப்புற நடனம், கரகாட்டம், நவீன ஓவியம், புகைப்படம் எடுத்தல், தனிநபர் நடிப்பு உன்கிட்ட பல்வேறு பிரிவின் கீழ் போட்டிகள் நடைபெற்றன.

    இதேபோல் தஞ்சை தூய அந்தோனியார் மேல்நிலைப்பள்ளி, யாகப்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களிலும் கலை திருவிழா போட்டிகள் நடைபெற்றது.

    இதில் ஏற்கனவே வட்டார அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் 1492 பேர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிகாட்டினர்.

    தொடர்ந்து வருகிற 12-ம் தேதி வரை இந்த கலை திருவிழா போட்டிகள் நடைபெறும். இதில் வெற்றி பெறும்
    மாணவ-மாணவிகள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்வர்.

    மேலும் மாநில அளவில் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் , கலையரசன், கலையரசி என்ற விருதுகளும் தமிழக அரசால் வழங்கப்படும். மாநில அளவில் தர வரிசையில் முதன்மைப் பெறும் 20 மாணவர்களை வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவர்.

    தஞ்சையில் நடந்த தொடக்க விழா நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலர்( தொடக்க நிலை) திராவிட செல்வன், தஞ்சாவூர் கல்வி மாவட்ட அலுவலர் (தொடக்கநிலை ) திருநாவுக்கரசு, கும்பகோணம் கல்வி மாவட்ட அலுவலர் (இடைநிலை) ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் ரமேஷ் குமார் நன்றி கூறினார்.

    • பிளாஸ்டிக்கை ஒழிக்க, குப்பை இல்லா குமரியை உருவாக்க வலியுறுத்தி பதாகைகள் ஏந்திச் சென்றனர்
    • நாகர்கோவில் மாநகரப் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் செயலாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தை குப்பை இல்லா மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாகர்கோவில் மாநகரப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள், மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் செயலாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

    திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு பொது மக்களிடம் ஏற்படுத்த ப்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக பார்வதிபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி இன்று பார்வதிபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்தது.

    பேரணியை மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த மோகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பள்ளியில் இருந்து தொடங்கிய பேரணி ராஜ லட்சுமி நகர், பெருவிளை வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தது . பேரணியில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் பிளாஸ்டிக்கை ஒழிப்போம், குப்பை இல்லா குமரியை உருவாக்குவோம் என்பது போன்ற விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு வந்தனர்.

    பேரணியில் மாநகர் நகர அலுவலர் ராம் மோகன், மாநகராட்சி மண்டல தலைவர் செல்வகுமார், சுகாதார ஆய்வாளர் மாதவன் பிள்ளை கவுன்சிலர் கலாராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • போட்டியில் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • வெற்றி பெற்றவர்களுக்கும், கலந்து கொண்டவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழும் வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாவட்ட அளவிலான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வினாடி-வினா போட்டியின் இறுதிச்சுற்று நாகை இலக்கியா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.

    இதில் மாவட்ட தலைவர் எஸ்.எம்.ஆரிப் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு நாகை வருவாய் வட்டாட்சியர் ராஜசேகரன் தலைமை தாங்கினார்.நாகை அஸ்பெயர் அகாடமி நிர்வாக இயக்குனர் பரணிதரன் முன்னிலை வகித்தார்.

    இதில் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் ராஜு, இ.ஜி.எஸ்.பிள்ளை கல்லூரி பேராசிரியர் டாக்டர் அசோக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். போட்டியில்15 பள்ளிகளில் இருந்து 147 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதில் நாகை அமிர்தா வித்யாலயா பள்ளி மாணவி ஹர்னிதா முதலிடம், தேவூர் குழந்தை இயேசு உயர்நிலைப்பள்ளி மாணவி வர்ஷினி 2-ம் இடம், நாகை அமிர்தா வித்யாலயா பள்ளி மாணவி சௌசிதா 3-ம் இடம் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கும், கலந்து கொண்டவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழும் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சி யானது திருமருகல் ஒன்றிய கிளை ஒருங்கிணைப்பில் சிறப்பாக நடைபெற்றது.

    • மாணவர்கள் பாரம்பரிய உடையான வேஷ்டி- சட்டை அணிந்து வந்திருந்தனர். மாணவிகளும் புத்தாடைகள் அணிந்து வந்திருந்தனர்.
    • பொங்கலிட்டும் தங்கள் உற்சாகத்தை வெளிப் படுத்தினார்கள்.பானையில் பால் பொங்கி வரும் போது பொங்கலோ பொங்கல் என்று உற்சாக முழக்கம்

    நாகர்கோவில் :

    தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அரசு அலுவலகங்களில் நாளை ( 13-ந் தேதி) பொங்கல் பண்டிகை கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நாகர்கோவில் கோட்டார் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் மாணவ-மாணவிகள் பொங்கல் விழாவை இன்று உற்சாகமாக கொண்டாடி னார்கள். இதையடுத்து மாணவர்கள் பாரம்பரிய உடையான வேஷ்டி- சட்டை அணிந்து வந்திருந்தனர். மாணவிகளும் புத்தாடைகள் அணிந்து வந்திருந்தனர்.

    இதைத் தொடர்ந்து உறியடி நிகழ்ச்சி நடந்தது.இதில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும் பொங்கலிட்டும் தங்கள் உற்சாகத்தை வெளிப் படுத்தினார்கள்.பானையில் பால் பொங்கி வரும் போது பொங்கலோ பொங்கல் என்று உற்சாக முழக்கமிட்டு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினார்கள்.

    • பர்கூர் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளி சார்பாக சாலை பாதுகாப்பு வாரம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • பேரணியில் மாணவ-மாணவிகள் சாலை பாதுகாப்பு விதிகள் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக சாலை பாதுகாப்பு வாரம் விழிப்புணர்வு பேரணி பர்கூரில் நடைபெற்றது.

    சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு பேரணியை பள்ளியின் தலைமை ஆசிரியர் சுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்.

    விழிப்புணர்வு பேரணியில் மாணவ- மாணவிகள் சாலை பாதுகாப்பு விதிகள் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    விழிப்புணர்வு பேரணியின் முடிவில் பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் பார்த்தீபன், மாணவ- மாணவிகளுக்கு சாலை விதிகளை விளக்கினார்.

    நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் குமரேசன் நன்றி கூறினார். விழிப்புணர்வு பேரணியில் ஆசிரிய ஆசிரியைகள், பர்கூர் சிறப்பு இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. பங் கேற்று புதிய வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார். முன்னதாக பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளையும் நட்டார்
    • புதிய வகுப்பறை கட்டிட வசதியை பயன்படுத்தி பாதுகாப்பான முறையில் கல்வியை பெற முடியும். நல்ல முறையில் கல்வி பயின்று நாட்டுக்கும், தமிழ் மண்ணுக்கும், வீட்டு க்கும் பெருமை சேர்க்க வேண்டும்

    நாகர்கோவில் :

    அகஸ்தீஸ்வரம் ஒன்றியம், தேரூர் பேரூராட்சி - தேவகுளம் அரசு நடுநிலைப்பள்ளியில் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறைக் கட்டி டம் மற்றும் சுற்றுச் சுவர் கட்டப்பட்டுள்ளது.

    இதன் திறப்பு விழாவில் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. பங் கேற்று புதிய வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார். முன்னதாக பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளையும் நட்டார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-

    இப்பள்ளியில் படித்த மாணவ-மாணவிகள் தற்போது உயர்ந்த நிலையில் உள்ளார்கள். மாணவர் களின் முன்னேற்றத்திற்கு அடிப்படையாக இருப்பது கல்வியாகும். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து தங்கள் குழந்தைகளை கல்வி பயில செய்வது பெற்றோ ரின் மிக முக்கியமான கடமையாகும்.

    போட்டிகள் நிறைந்த உலகில் முன்னேற்றத்திற்கு வழிகாட்ட கல்வியால் மட்டுமே முடியும். கஷ்டப் பட்டு படித்தவர்கள் இன்றைய உலகில் உயர்ந்த நிலையில் உள்ளார்கள்.

    மாணவர்கள் இந்த புதிய வகுப்பறை கட்டிட வசதியை பயன்படுத்தி பாதுகாப்பான முறையில் கல்வியை பெற முடியும். நல்ல முறையில் கல்வி பயின்று நாட்டுக்கும், தமிழ் மண்ணுக்கும், வீட்டு க்கும் பெருமை சேர்க்க வேண்டும். இங்கு படிக்கும் மாணவர்கள் எதிர்காலத்தில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ.தி.மு.க. செயலா ளர் ஜெஸீம், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் அழகேசன், மருங்கூர் பேரூராட்சி தலைவர் லெட்சுமி ஸ்ரீனிவாசன், ஒன்றிய அவைத்தலைவர் தம்பித்தங்கம், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அருப்புக்கோட்டை அருகே அரசு பள்ளி மாணவ-மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • பள்ளியில் போதிய வசதிகள் செய்யப்படாததால் மாணவ-மாணவிகள் கடும் சிரமமடைந்து வந்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியை அடுத்துள்ள ஆமணக்கு நத்தத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டாரப்பகுதிகளை சேர்ந்த 75 மாணவ-மாணவிகள் படித்து வரு கின்றனர். இந்தப்பள்ளியில் போதிய வசதிகள் செய்யப்படாததால் மாணவ-மாணவிகள் கடும் சிரமமடைந்து வந்தனர்.

    இந்த நிலையில் பள்ளியில் போதிய வகுப்பறைகள் இருந்தும், மரத்தடியில் மாணவ-மாணவிகளை அமர வைத்து பாடம் நடத்துவதாகவும், பள்ளி வளாகத்திலேயே சுகாதாரமற்ற முறையில் சத்துணவு சமைத்து வினியோகிப்பதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக பள்ளி தலைமையாசிரியரிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.

    இதை கண்டித்து இன்று காலை வகுப்புகளை புறக்கணித்த மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோருடன் பள்ளி முன்புள்ள பந்தல்குடி சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

    மறியல் குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மறியலால் அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • 12-ம் வகுப்பு தேர்வு மார்ச் 13-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 3-ந் தேதியும் முடிவடைகிறது
    • 11, 12 மாணவ-மாணவிகளுக்கு செய்முறை நடத்த கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை

    நாகர்கோவில் :

    தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6-ந்தேதி தொடங்கி 20-ந் தேதி முடிவடைகிறது.

    11-ம் வகுப்பு தேர்வு மார்ச் 14-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 5-ந்தேதியும், 12-ம் வகுப்பு தேர்வு மார்ச் 13-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 3-ந் தேதியும் முடிவடைகிறது. இதையடுத்து குமரி மாவட்டத்தில் பொதுத் தேர்வுகளை நடத்துவதற் கான முன்னேற்பாடு பணி களை கல்வித்துறை அதிகா ரிகள் மேற்கொண்டு வரு கிறார்கள்.

    குமரி மாவட்டத்தை பொறுத்தமட்டில் பொதுத் தேர்வுக்கான வினாத்தாள் களை வைப்பதற்கான இடங்களை தேர்வு செய்து உள்ளனர். மேலும் விடைத்தாள்கள் வைக்கும் தேர்வு மையங்களை தேர்வு செய்யும் பணியில் கல்வித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    10-ம் வகுப்பை பொறுத்த மட்டில் வினாத்தாள்களை 8 இடங்களில் வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளது. மாவட்டம் முழுவதும் 112 மையங்களில் 23 ஆயிரத்து 346 மாணவ மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். 11-ம் வகுப்பு பொறுத்தமட்டில் 7 இடங் களில் வினாத்தாள்களை வைக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

    86 மையங்களில் 22454 மாணவ-மாணவி கள் தேர்வு எழுத உள்ளனர். பிளஸ்-2 வை பொறுத்தமட்டில் 7 இடங்களில் வினாத்தாள்கள் வைக்கப்படுகிறது. 86 மையங் களில் 22,235 மாணவ- மாணவிகள் தேர்வு எழுது கிறார்கள். 10, 11, 12-ம் வகுப்பு விடைத்தாள்களை 3 மையங்களில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு அந்த தேர்வு மையங்கள் தேர்வு செய்யப்பட்டு சென்னை கல்வித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    தேர்வு எழுத மாணவ- மாணவிகள் தயாராகி உள்ள நிலையில் செய்முறை தேர்வுகள் அடுத்த மாதம் 1-ந்தேதி தொடங்கி 9-ந்தேதி வரை குமரி மாவட் டத்தில் நடக்கிறது. 11, 12 மாணவ-மாணவிகளுக்கு செய்முறை நடத்த கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    மேலும் பொது தேர்வை கண்காணிக்க முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி தலைமையில் பறக்கும் படை அமைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    • 24 ஆயிரத்து 770 பேர் இத்தேர்வை எழுதினர்.
    • 157 ஆசிரியர்கள் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்று தொடங்கி ஏப்ரல் 5-ந் தேதி வரை நடக்கிறது. தமிழகம் முழுவதும் நேற்று பிளஸ் 2 தேர்வு தொடங்கிய நிலையில் இன்று பிளஸ் 1 தேர்வும் தொடங்கியது.

    அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் 93 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 217 மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 24 ஆயிரத்து 556 மாணவ, மாணவிகள், 214 தனித்தேர்வர் என மொத்தம் 24 ஆயிரத்து 770 பேர் இத்தேர்வை எழுதினர். முதன்மை கண்காணி ப்பாளர், துறை அலுவலர், அறை கண்காணிப்பாளர் என மொத்தம் 1,608 பேர் பிளஸ் 1 பொதுத்தேர்வு பணியில் ஈடுபட்டனர்.கலெக்டர் வினீத், முதன்மை கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி, மாவட்ட கல்வி அலுவலர் தலைமை யில் 157 ஆசிரியர்கள் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் தேர்வு நடைபெறும் மையங்களில் திடீரெனில் சென்று சோதனை நடத்தினர்.

    • சிவகங்கை கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை-பேச்சுப்போட்டி நடக்கிறது.
    • ஒரு கல்லூரியில் இருந்து ஒரு போட்டிக்கு 2 பேர் மட்டுமே பங்கேற்க முடியும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கல்லூரி மாணவர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கத்தில் மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு பரிசு தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டு வருகின்றன.

    இந்த ஆண்டு இப்போட்டிகள் வருகிற 10-ந் தேதி சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகம், மருதுபாண்டியர் நகரில் உள்ள சமுதாயக்கூடத்தில் காலை 9 மணிக்கு தொடங்கி நடை பெற உள்ளன. இப்போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் முதல் பரிசாக ரூ.10ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளன.

    ஒவ்வொரு போட்டியிலும் முதல் பரிசு பெறும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள சிவகங்கை மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனரால் பரிந்துரைக்கப்படுவார்கள். சிவகங்கை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் மட் டுமே இப்போட்டிகளில் பங்கேற்கலாம்.

    ஒரு கல்லூரியில் இருந்து ஒரு போட்டிக்கு 2 பேர் மட்டுமே பங்கேற்க முடியும். போட்டிகளுக்கான தலைப்பு கள் போட்டிகள் தொடங்கும் முன் அறிவிக்கப்படும். மாவட்ட அளவிலான இப்போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் உரிய படிவத்தைப் பூர்த்தி செய்து கல்லூரி முதல்வர் பரிந்துரையுடன், சிவகங்கை மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனரிடம் போட்டிகள் நடைபெறும் நாளன்று நேரில் அளிக்க வேண்டும்.

    கூடுதல் விவரங்களுக்கு சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனரை நேரிலோ அல்லது தொலை பேசி வாயிலாகவோ (04575-241487, 99522 80798) தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×