என் மலர்
நீங்கள் தேடியது "நடைபாதை"
- குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு பாதசாரிகள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.
- விக்டோரியா ரோட்டில் எந்த நேரமும் வாகனங்கள் மின்னல் வேகத்தில் சென்ற வண்ணம் இருக்கும்.
பெங்களூரு:
பெங்களூருவில் பாதசாரிகள் நடந்து செல்வதற்கு வசதியாக சாலையோரங்களில் நடைபாதைகள் அமைக்கப்பட்டு உள்ளது. சாலையின் இருபுறங்களிலும் பாதசாரிகள் நடந்து செல்வதற்காக இந்த நடைபாதை அமைக்கப்படுகிறது. நகரின் முக்கியமான சாலைகளில் உள்ள நடைபாதைகளில் செடிகள் வைத்தும், தொட்டிகள் வைத்தும், இரும்பால் ஆன தூண்கள் வைத்தும் மாநகராட்சியால் அழகு படுத்தப்படுகிறது.
ஆனால் நகரில் பல பகுதிகளில் நடைபாதையின் மேலே போடப்பட்டு இருக்கும் சிமெண்டு சிலாப்புகள் உடைந்து பாதசாரிகள் நடந்து செல்ல முடியாதபடி உள்ளது. விக்டோரியா லே-அவுட், 1-வது கிராசில் அமைக்கப்பட்டு இருந்த நடைபாதையே மாயமாகி இருக்கிறது. நடைபாதையையொட்டி ஒருபுறத்தில் செடிகள் முளைத்து நிற்பதுடன், அங்கு குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு பாதசாரிகள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.
இன்னும் சிறிது தூரத்தில் நடைபாதையே தெரியாத அளவிற்கு அதன்மீது கட்டிட கழிவுகள், மண் குவியல் கிடக்கிறது. நடைபாதையில் கழிவுகள் கிடப்பதால், அசுத்தமாகவும் காட்சி அளிக்கிறது. இதனால் நடைபாதையில் நடந்து செல்ல முடியாமல் பாதசாரிகள் சாலையில் இறங்கி செல்கிறார்கள். விக்டோரியா ரோட்டில் எந்த நேரமும் வாகனங்கள் மின்னல் வேகத்தில் சென்ற வண்ணம் இருக்கும்.
பாதசாரிகள் கொஞ்சம் கவனக்குறைவாக சென்றாலும், அவர்கள் மீது வாகனங்கள் மோதி விட வாய்ப்புள்ளது. எனவே பாதசாரிகள் நடந்து செல்வதற்கு வசதியாக அங்கு நடைபாதை அமைக்க வேண்டும் என்றும், ஏதேனும் விபத்துகள் ஏற்படுவதற்கு முன்பாக நடைபாதை அமைக்கும் பணியை மாநகராட்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பேரூராட்சி நிர்வாகம் “திடீர்” நடவடிக்கை
- கன்னியா குமரி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வருகிற 28-ந்தேதி சீசன் கடைகள் ஏலம் விடப்படுகிறது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் தற்போது சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் தொடங்கி உள்ளது.
இந்த சீசனை முன்னிட்டு கன்னியாகுமரி கடற்கரை சாலை மெயின் ரோடு போன்ற பகுதிகளில் நடை பாதைகளை ஆக்கிரமித்து தள்ளுவண்டி மற்றும் உருட்டு வண்டி கடைகள் அமைக்கப்பட்டுஉள்ளன.இதற்கிடையில் கன்னியா குமரி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வருகிற 28-ந்தேதி சீசன் கடைகள் ஏலம் விடப்படுகிறது.
இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி கடற்கரை சாலை, காந்தி மண்டபம் பஜார், மெயின் ரோடு, பழைய பஸ் நிலைய ரவுண் டானா சந்திப்பு, போன்ற பகுதி களில் நடைபாதை களை ஆக்கிரமித்து வைக் கப்பட்டிருந்த 150-க்கும் மேற்பட்ட தள்ளுவண்டி மற்றும் உருட்டு வண்டி கடைகளை பேரூராட்சி ஊழியர்கள் இன்று காலை அதிரடியாக அகற்றினார்கள்.
கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன் தலைமையில் பேரூராட்சி சுகாதார அதிகாரி முருகன் சுகாதார மேற்பார்வை யாளர் பிரதீஸ் ஆகியோர் முன்னிலையில் இந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றும் பணி நடந்தது. இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.
- தேவசம்போர்டு நிர்வாகத்துடன் இணைந்து பேரூராட்சி நிர்வாகம் “திடீர்” நடவடிக்கை
- இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் தற்போது சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் களைகட்டிஉள்ளது. இந்த சீசனை முன்னிட்டு கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறைகடற்கரை பகுதி, காந்தி மண்டபம் பஜார், கடற்கரைசாலை, மெயின் ரோடு, சன்னதி தெரு போன்ற பகுதிகளில் நடைபாதைகளைஆக்கிர மித்து தள்ளுவண்டிமற்றும் உருட்டு வண்டி கடைகள் வைக்கப்பட்டு உள்ளன.
இதனால் இந்த பகுதிகளில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதி, காந்தி மண்டபம் பஜார், கடற்கரைசாலை, காந்தி மண்டபம்பஜார், மெயின் ரோடு, பழையபஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு போன்ற பகுதிகளில் நடைபாதைகளை ஆக்கிர மித்து வைக்கப்பட்டிருந்த 150- க்கும் மேற்பட்ட தள்ளுவண்டி மற்றும் உருட்டு வண்டி கடைகளை பேரூராட்சி ஊழியர்கள் இன்று காலை அதிரடியாக அகற்றினார்கள்.
கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன் தலை மையில் அகஸ்தீஸ்வ ரம் தாசில்தார் ராஜேஷ் பேரூராட்சி சுகாதார அதிகாரி முருகன் சுகாதார மேற்பார்வையாளர் பிரதீஸ் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த்ஆகியோர்முன்னிலையில்இந்தஆக்கிரமிப்புகடைகள் அகற்றும் பணி நடந்தது. இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில்பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா உத்தரவின்பேரில் கன்னியாகுமரிபோலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் ஏராளமான போலீசார்பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர். பலத்தபோலீஸ் பாது காப்புடன் இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.
- மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்கு தகவல்
- 1 மாதம் ஆகியும் போலீசார் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கன்னியாகுமரி:
மார்த்தாண்டம் சாங்கோ மெடிக்கல் பின்புறம் சிறிய நடைபாதை உள்ளது. இந்த நடைபாதையில் காலை மற்றும் மாலை வேளைகளில் அதிக நெருக்கடியாக இருக்கும். அப்பகுதியில் ஏராளமான கடைகள் மற்றும் வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் மோட்டர் சைக்கிளும் செல்கிறது.ஆகையால் காலை மற்றும் மாலை நேரங்களில் இப்பகுதி மிகுந்த நெருக்கடியாக இருக்கும்.
இந்த நெருக்கடியான நடைபாதையில் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக ஒரு மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த வாகனம் அருகில் ஏதேனும் வீட்டில் உள்ளவர்களுக்கு சொந்தமானதா? இல்லை பழுதானதால் அங்கு நிறுத்தி சென்று விட்டார்களா? இல்லை திருட்டு வாகனமா என்பது தெரியவில்லை.
போக்குவரத்துக்கு இடையூறாக சில மாதங்களாக அதே இடத்தில் நின்றதால் இது பற்றி அருகில் உள்ளவர்கள் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.ஆனால் 1 மாதம் ஆகியும் போலீசார் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த மோட்டார் சைக்கிளால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கும், இருசக்கர வாகனத்தில் செல்வதற்கும் மிகுந்த சிரமமாக உள்ளது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
- நடைபாதையை சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இந்த நடைபாதையை சரி செய்ய வேண்டும்
கோத்தகிரி,
கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட கல்பனா காட்டேஜ் பகுதியில் உள்ள 5-வது வார்டில் சுமார் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் தினசரி உபயோகித்து வரும் நடை பாதை கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் சேதமடைந்தது. இதனை பற்றி சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. பகல் மற்றும் இரவு நேரங்களில் இந்த நடைபாதையில் நடக்கும் பாதசாரிகள் சேதமடைந்த இந்த நடைபாதையின் குழியில் விழுந்து ஏதேனும் பெரும் விபத்து ஏற்படும் முன்னர் இந்த நடைபாதையை சரி செய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வணிக வளாக கடைகள் கட்டப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது.
- பொதுமக்கள் வந்து செல்லும் பகுதி என்பதால் எந்த நேரமும் பரபரப்பாக காணப்படும்.
உடுமலை :
உடுமலை நகராட்சியின் சார்பில் நகரின் முக்கிய பகுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வணிக வளாக கடைகள் கட்டப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது. அதில் மத்திய பஸ் நிலையத்தில் கட்டப்பட்டு உள்ள கடைகளும் அடங்கும். பேருந்து நிலையம் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வந்து செல்லும் பகுதி என்பதால் எந்த நேரமும் பரபரப்பாக காணப்படும். இதை சாதகமாகக் கொண்டு கடைகளை ஏலம் எடுத்த உரிமையாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு வியாபாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சூழலில் மூணாறுக்கு செல்லும் பேருந்து நிற்கும் பகுதியில் அமைக்கப்பட்டு ள்ள வணிக வளாக கடைகள் பொதுமக்கள் நடந்து செல்லும் பாதையை ஆக்கிரமிப்பு செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் பஸ் நிலையத்தின் உள்பகுதியில் இருந்து வெளிப்பகுதிக்கு செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்:- பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதியில் நகராட்சி சார்பில் கட்டப்பட்டு உள்ள வணிக வளாகக் கடைகள் பொதுமக்களுக்கு பெரிது உதவிகரமாக உள்ளது.
குறிப்பாக பஸ்சுக்காக காத்திருக்கும் கிராமப்புற மக்கள் அதிக அளவில் பயன் அடைந்து வருகின்ற னர்.பொதுமக்களை கவர்ந்து விற்பனையை அதிகப்படுத்தி லாபம் ஈட்டும் நோக்கில் ஒரு சிலகடை உரிமையாளர்கள் கடைக்கு முன்புற பகுதியை ஆக்கிரமிப்பு செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் பஸ் நிலையத்தில் இருந்து வெளிப்புறப் பகுதிக்கு செல்ல முடியாமல் சுற்றிச் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. குறிப்பாக காலை மற்றும் மாலை வேலைகளில் பொதுமக்கள் பாதையை பயன்படுத்த முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இது குறித்து அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. எனவே உடுமலை பஸ் நிலைய பகுதியில் பொதுமக்கள் செல்லும் பாதையை ஆக்கிரமித்து விற்பனையில் ஈடுபட்டு வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் கடைகளில் விற்பனையை ஒழுங்குபடுத்துவதற்கு முன் வர வேண்டும் என்று தெரிவித்தனர்.
- நடைபாதை அமைத்தல் என்பது போன்ற பல்வேறு பணிகள் நடைபெற்றன.
- மக்களுக்கு பொழுதுபோக்கு இடமாக மட்டுமில்லாமல் பயனுள்ள இடமாக சிவகங்கை பூங்கா திகழும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகிறது.
அந்த வகையில் தஞ்சாவூரில் புகழ்பெற்ற சிவகங்கை பூங்காவில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பராமரிப்பு பணிகள் தொடங்கியது.
தற்போது பெரும்பாலான பணிகள் முடிவடைந்து விட்டன.
இந்த நிலையில் சிவகங்கை பூங்காவில் நடைபெறும் பணிகளை இன்று மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்ப தாவது :-
தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா பாரம்பரியமிக்கது. தஞ்சாவூரில் உள்ள சுற்றுலா தலங்களில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பராமரிப்பு பணிகள் தொடங்கின. இதில் தமிழ் அன்னை செயற்கை நீரூற்று புதுப்பித்தல், குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் அமைத்தல், மான்கள் இருந்த இடத்தில் சுற்று சுவர், நடைபாதை அமைத்தல் என்பது போன்ற பல்வேறு பணிகள் நடைபெற்றன.
இன்னும் தாவரவியல் பூங்கா அமைக்கப்படவில்லை. இதேபோல் சேர்கள் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. மீதமுள்ள பணிகள் விரைவில் முடிவடைந்து விடும்.
அனைத்து பணிகளும் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டன. பழமை மாறாமல் புதுப்பொலிவுடன் சிவகங்கை பூங்கா மாறி உள்ளது.
அதிகபட்சமாக இன்னும் 2 அல்லது 3 மாதங்களுக்குள் சிவகங்கை பூங்கா திறக்கப்படும். அதன் பிறகு மக்களுக்கு பொழுதுபோக்கும் இடமாக மட்டுமில்லாமல் பயனுள்ள இடமாக சிவகங்கை பூங்கா திகழும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது மாநகர் நல அலுவலர் சுபாஷ் காந்தி, செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியாளர் கார்த்திகேயன், மண்டல குழு தலைவர் மேத்தா, கவுன்சிலர் கோபால், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
- நடைபாதை முறையான பராமரிப்பு இல்லாததால் அடித்தளம் மற்றும் பக்கவாட்டு கைப்பிடி சேதம் அடைந்தது.
- பஸ் நிலையத்திற்குள் சென்று வர வேண்டிய சூழ்நிலை உள்ளது.
உடுமலை :
உடுமலையின் மையப்ப குதியில் மத்திய பஸ் நிலையம் உள்ளது. இங்கு இருந்து சுற்றுப்புற கிராமங்கள் வெளி மாவட்டங்களுக்கு நாள்தோறும் ஏராளமான பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி வெளி மாநிலத்தில் இருந்து வருகை தருகின்ற பஸ்களும் பஸ் நிலையத்திற்குள் வந்து செல்கின்றது. இதன் காரணமாக காலை முதல் மாலை வரையிலும் பஸ் நிலையம் பரபரப்பு காணப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பொதுமக்கள் பஸ் நிலையத்திற்குள் பாதுகாப்பாக வந்து செல்வதற்கு ஏதுவாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபாதை அமைக்கப்பட்டது. பஸ் நிலையத்தின் நுழைவுப் பகுதியில் இருந்து எல்லை முடியும் வரையிலும் பக்கவாட்டு கைப்பிடியுடன் கூடிய நடைபாதை அமைக்கப்பட்டது. சிறிது காலம் பயன்பாட்டில் இருந்து வந்த நடைபாதை முறையான பராமரிப்பு இல்லாததால் அடித்தளம் மற்றும் பக்கவாட்டு கைப்பிடி சேதம் அடைந்தது. இதனால் பொதுமக்கள் நடைபாதையை ஒட்டியவாறு பஸ் நிலையத்திற்குள் சென்று வர வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் போது விபத்துகள் ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இது குறித்து அதிகாரிகளும் கண்டு கொள்வதி ல்லை.இதனால் நடைபாதை அமைக்க ப்பட்டதற்கான நோக்கமும் அதற்கான நிதியும் வீணாகி வருகிறது. பொதும க்களுக்காக தொடங்க ப்படுகின்ற எந்த ஒரு திட்டமும் தக்க தருணத்தில் முறையாக சீரமைத்து பயன்பாட்டில் வைத்திருப்பது வேண்டியது சம்பந்தப்பட்ட நிர்வாகத்தின் கடமையாகும். ஆனால் தொடரும் அலட்சியம் காரணமாக ஏதும் அறியாத அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுவது வேதனை அளிக்கிறது.
எனவே சம்பந்த ப்பட்ட நிர்வாகம் உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதையை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்விடுத்து உள்ளனர்.
- பல்லடம் முதல் குண்டடம் வரை 4 வழிச்சாலையாக மாற்றும் பணி தொடங்கப்பட்டு நிறைவடைந்துவிட்டன.
- ஒத்தக்கடை பகுதியில் மழைநீா் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
குண்டடம் :
குண்டடம் அருகே 4 வழிச் சாலைப் பணிகள் முடிவடைந்து சில மாதங்களே ஆகும் நிலையில் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதையில் கற்கள் பெயா்ந்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனா்.
கோவை-மதுரை நெடுஞ்சாலையில் பல்லடம் முதல் குண்டடம் வரை 4 வழிச்சாலையாக மாற்றும் பணி தொடங்கப்பட்டு வே.கள்ளிப்பாளையம் முதல் குண்டடம் வரை பணிகள் நிறைவடைந்துவிட்டன. இதில் மேட்டுக்கடையை அடுத்துள்ள ஒத்தக்கடை பகுதியில் மழைநீா் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாய்க்கும், தாா் சாலைக்கும் இடையில் உள்ள பகுதியில் நடைபாதையில் பாா்க்கிங் டைல்ஸ் எனப்படும் கற்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
அண்மையில் பெய்த மழையில் இங்கு பதிக்கப்பட்டுள்ள கற்கள் அரிக்கப்பட்டு சேதமாகியுள்ளன. பதிக்கப்பட்ட சில நாள்களிலேயே இவ்வாறு ஆகியுள்ளதால் இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு முறையாக டைல்ஸ் கற்கள் பதிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
- நூற்றுக்கு நூறு பணிகளை நிறைவேற்ற வேண்டும்.
- ஆய்வில் மொத்தம் 121 மனுக்கள் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சட்டப்பேரவை மனுக்கள் குழுவினர் இன்று காலை ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழக அரசின் தலைமை கொறடாவும், சட்டப்பேரவை மனுக்கள் குழுத் தலைவருமான கோவி. செழியன் தலைமையிலான இக்குழுவினர் தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் அருகே உள்ள காடவராயன்குளம், வடிகால் வாய்க்கால், சமுத்திரம் ஏரியை ஆய்வு செய்தனர்.
பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-
தஞ்சாவூர் மாவட்டத்தில் பொதுமக்களிடம் பெறப்பட்ட பொது நலன் குறித்த மனுக்கள் மீது சட்டப்பேரவை மனுக்கள் குழு 9 இடங்களில் கள ஆய்வு மேற்கொள்கிறது.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியரகத்தில் பிற்பகலில் மனுதாரர்கள், அரசு அலுவலர்களுடன் கலந்தாய்வு நடை பெறவுள்ளது.
இந்த ஆய்வில் மொத்தம் 121 மனுக்கள் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
அனைத்து மனுதா ரர்களையும் மாவட்ட ஆட்சியரகத்துக்கு வரவழைத்து, அனைத்து துறை அலுவலர்களிடம் விசாரணை நடத்தவுள்ளோம்.
நூற்றுக்கு நூறு பணிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற அடிப்படையில் இக்கள ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
சாலை வசதி, குளக்கரை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், தூர் வாருதல் உள்ளிட்டவை தொடர்பான கோரிக்கைகள் அதிகமாக உள்ளன.சமுத்திரம் ஏரி கரையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடைபாதையுடன் கூடிய மேம்பாட்டு பணி 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது.
இதில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் படகு சவாரி ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வந்துள்ளது.
இது தொடர்பாக முழுமையாக ஆய்வு செய்து முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், சட்டப்பேரவை மனுக்கள் குழுச் செயலர் சீனிவாசன், டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ, மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
- நடை பாதைகள் வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ள தால் பொதுமக்கள் நடந்து செல்ல வழியில்லாமல் அவதியடைந்தனர்.
- ஜவுளிக்கடை ஒன்றின் முன்பு வைக்கப் பட்டிருந்த மெகா ஜென ரேட்டரை அப்புறப்படுத்தி னர்.
கடலூர்:
சிதம்பரத்தில் காவல் துறை சார்பில் நடைபாதை ஆக்கிர மிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. சிதம்பரம் நகரில் 4 வீதிகள் மற்றும் சன்னதிகளில் நடை பாதைகள் வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ள தால் பொதுமக்கள் நடந்து செல்ல வழியில்லாமல் அவதி யடைந்தனர். மேலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு, அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது.
இந்நிலையில் சிதம்பரம் கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி மேற்பார்வையில், போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் பார்த்தீபன், சட்டம்-ஒழுங்கு சப்-இன்ஸ்பெக்டர் பரணிதரன் மற்றும் போலீசார் மேலரத வீதியில் நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி னர். ஜவுளிக்கடை ஒன்றின் முன்பு வைக்கப் பட்டிருந்த மெகா ஜென ரேட்டரை அப்புறப்படுத்தி னர். அதே போன்று நடராஜர் கோயில் பிரதான வாயிலான கீழசன்னதியில் சாலையில் உள்ள ஆக்கிர மிப்புகளையும் அகற்றினர். மேலும் நடைபாதையை ஆக்கிரமித்தால், அபராதம் விதிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
- பாலம் அமைக்கப்பட்ட பிறகும் போக்குவரத்து நெருக்கடி தொடர்ந்தே வருகிறது.
- தனியார் நிறுவன பொருட்களை பறிமுதல் செய்ய நட வடிக்கை எடுக்க வேண்டும்
கன்னியாகுமரி :
குழித்துறை நகராட்சிக்குட்பட்ட மார்த்தாண்டம், நாகர்கோவிலுக்கு அடுத்து, குமரியின் 2-வது பெரிய வர்த்தக நகரமாக விளங்கு கிறது. இங்கு பல்வேறு காரணங்களால் கடுமை யான போக்குவரத்து நெருக் கடி உள்ளது. பாலம் அமைக்கப்பட்ட பிறகும் போக்குவரத்து நெருக்கடி தொடர்ந்தே வருகிறது.
மேலும் பாலத்தின் கீழ்பகுதியில் உள்ள சாலைகளில் தொடர்ந்து கேபிள் அமைக்கும் பணி மற்றும் குடிநீர் பைப்பு களுக்காக தோண்டப்படும் பள்ளங்களால் தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. சாலையோர நடைபாதை வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத அளவில் ஆக்கிரமித்து வைத்துள்ளனர்.
இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் காந்தி மைதானத்தை சுற்றியுள்ள நடைபாதைகளில், பெருங் கடை வியாபாரிகள் தங்களது நிறுவனங்களுக்கு கொண்டு வரப்படுகின்ற பொருட்களை அடுக்கி வைத்துள்ளனர். இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல கூட முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே நடைபாதை களில் இருக்கும் பூக்கடைகள் மற்றும் நடைபாதை கடை களை அப்புறப்படுத்து வதோடு, அங்கு குவித்து வைக்கப்பட்டுள்ள தனியார் நிறுவன பொருட்களை பறிமுதல் செய்ய நட வடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்