என் மலர்
நீங்கள் தேடியது "slug 230494"
- அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- சுகாதாரப் பணிகள் பூச்சியில் வல்லுனர் சேகர் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
பரமத்திவேலூர்:
பரமத்தி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பரமத்தி பேரூராட்சி தலைவர் மணி தலைமை தாங்கினார். பரமத்தி பேரூராட்சி துணைத் தலைவர் ரமேஷ் பாபு மற்றும் கவுன்சிலர் நாச்சிமுத்து, பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாமக்கல் மாவட்ட சுகாதாரப் பணிகள் பூச்சியில் வல்லுனர் சேகர் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மேகலா ஆல் பென்டசோல் மாத்திரை எப்படி சாப்பிடுவது, குடல் புழுக்களின் தன்மை, குடற்புழு நீக்க நாள் மற்றும் மாணவர்களுக்கு தன் சுத்தம் போன்றது பற்றி விளக்கமாக கூறினார்.
பரமத்தி வட்டாரத்துக் குட்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளியில் பயிலும் 14 ஆயிரத்து 112 மாணவ, மாணவியருக்கும், அங்கன்வாடியில் 3561 குழந்தைகளுக்கும் என 17,673 பேருக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டது.
பரமத்தி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சுதமதி கைகளை கழுவும் முறைகளை பற்றி கூற கிராம சுகாதார செவிலியர் சிந்தாமணி செய்து காண்பித்தார். இந்நிகழ்ச்சியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மணிவண்ணன், சுகாதார ஆய்வாளர்கள் குமார், ராஜ்குமார், பெரியசாமி, அருண் ,தனபால் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
- ரத்த சோகை தடுப்பு மற்றும் குடற்புழுவினால் உண்டாகும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகியன தடுக்கப்படுகிறது.
- ஆரோக்கியமான சமுதாயம் உருவாக வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள செம்மிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் விழா நடைபெற்றது. பல்லடம் வட்டார மருத்துவ அலுவலர் சுடர்விழி தலைமை வகித்தார்.
இதில் திருப்பூர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ஜெகதீஷ் குமார் கலந்துகொண்டு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், தேசிய குடற்புழு நீக்க நாள் நடத்தப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 1 வயது முதல் 19 வயது வரை உள்ள சுமார் 5.7 லட்சம் குழந்தைகள் மற்றும் 20 - 30 வயது உள்ள 2.4 லட்சம் பெண்களுக்கு (கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் பெண்கள் தவிர) குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டது. விடுபட்ட குழந்தைகளுக்கு மற்றும் பெண்களுக்கு 16-9-2022 அன்று குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் ரத்த சோகை தடுப்பு மற்றும் குடற்புழுவினால் உண்டாகும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகியன தடுக்கப்பட்டு ஆரோக்கியமான சமுதாயம் உருவாக வழிவகை செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்ததார்.நிகழ்ச்சியில் மாவட்ட தாய் சேய் நல அலுவலர் புனிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- குலசேகரத்தில் 1¼ கிலோ கஞ்சா பறிமுதல்
- தப்பியோடிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி:
புதுக்கடை அருகே அனந்தமங்கலம் பகுதியில் பள்ளி கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை சிலர் விற்பதாக புதுக்கடை போலீ சாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை யடுத்து புதுக்கடை சப்-இன்ஸ்பெக் டர் சேகர் தலைமையில் போலீசார் ரகசியமாக கண்காணித்தனர்.
அப்போது சந்தேகத் துக்கிடமாக ஒரு மோட்டார் சைக்கிள் அருகில் 5 வாலிபர்கள் நின்றனர். அவர்களை சுற்றி வளைத்தபோது, போலீசை கண்டதும் 3 வாலிபர்கள் தப்பியோடினார்கள். பிடி பட்ட 2 பேர் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.
விசாரணையில் பிடிபட்டவர்கள் புதுக்கடை அருகே மூன்று மாவு பகுதியைச் சேர்ந்த அகின் (வயது 23), பைங்குளம் பகுதி பிலாக்க விளையைச் சேர்ந்த அஜின் (28) என தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். தொடர் விசாரணையில் தப்பியோடியவர்கள் ராஜா (22), பிரதீப் (22), ஜாண் (21) என தெரிய வந்தது.
மேலும் பிடிபட்டவர்களி டம் இருந்து 120 கிராம் கஞ்சா, மேலும் நான்கு போதை மாத்திரைகள், கஞ்சா புகைக்க பயன்ப டுத்தும் குழல், 3 செல்போன்கள், மோட்டார் சைக்கிள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. தப்பியோடிய 3 பேரை போலீசார் தேடி வருகின்ற னர்.
குலசேகரம் சந்தை பகுதியில் நேற்று மாலை தனிப்படை போலீசார் குலசேகரம் போலீசாருடன் இணைந்து சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது சந்தேகம் படும்படி ஒரு வாலிபர் கையில் பையை வைத்துக்கொண்டு பஸ் ஏறுவதற்க்கு காத்து இருந் தார்.
போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தபோது பையில் 1 கிலோ 300 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது உடனே அந்த வாலிபரை குலசேகரம் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்தபோது குலசேகரம் வெண்டலிகோடு, மெய்தி ருத்திவிளை, பகுதியை சேர்ந்த மோனிஷ் (26) என்பதும் பட்டதாரி வாலிபர் என்றும் தெரியவந்தது.
கேரளா எல்லையான ஆறுகாணி பகுதியில் உள்ள ஒரு வாலிபரிடம் இருந்து கஞ்சா வாங்கி வந்து குலசேகரம் மார்த்தாண்டம் பகுதியில் விற்பனை செய்து வந்ததாகவும் விசாரனையில் தெரிய வந்தது. இவரிடம் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறார்கள்.
குளச்சல் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செந்தில்குமார் தலைமையிலான போலீ சார் நேற்று குளச்சல் பகுதியில் தீவிர ரோந்து சென்றனர். லட்சுமிபுரம் தனியார் கல்லூரி அருகில் செல்லும்போது அங்கு 2 இளைஞர்கள் பைக்கை நிறுத்தி விட்டு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தனர்.
அவர்களை பிடித்து விசாரணை நடத்தியபோது ஒருவர் பள்ளம் அன்னை நகரை சேர்ந்த காட்சன் (18) என்பதும் தெரிய வந்தது. மற்றொருவர் வாணியக்குடியை சேர்ந்த மீன்பிடித் தொழிலாளி ஆரோக்கிய தினேஷ் (22) என்பதும், இவர்கள் இருவரும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்க முயற்சித்ததும் விசார ணையில் தெரிந்தது.
உடனே போலீசார் மோட்டார் சைக்கிளில் மறைத்து வைத்திருந்த 150 கிராம் கஞ்சா பொட்ட லத்தை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்த னர்.
- கடலூரில் பரபரப்பு மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்ற பெண் மருத்துவமனையில் அனுமதி.
- சூர்யா மற்றும் அவரது நண்பர் 2 பேரும் சத்யா வீட்டுக்குள் நுழைந்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
கடலூர்:
கடலூர் குண்டு உப்பலவாடியை சேர்ந்தவர் சத்யா (வயது 25). சம்பவத்தன்று அந்த பகுதியில் சைக்கிளில் சத்யா சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சூர்யா என்பவர் சத்யாவை வழிமறித்து மொபைல் எண்ணை கேட்டார். அப்போது சத்யா மொபைல் நம்பர் தர மறுத்ததால் தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. அதிர்ச்சி அடைந்த சத்யா தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து சத்யாவின் தாய் சூர்யாவின் மனைவியிடம் சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். இதனை அறிந்த சூர்யா மற்றும் அவரது நண்பர் 2 பேரும் சத்யா வீட்டுக்குள் நுழைந்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் ஏற்பட்ட சத்யா மாத்திரை சாப்பிட்டு விட்டதால் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த கடலூர் தேவனாம்பட்டினம் போலீசார் சூர்யா, காத்தமுத்து என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நோய் குணமாகததால் வாழ்க்கையில் விரக்தியடைந்த முதியவர் விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு சூரம்பட்டி என்.ஜி.ஜி.ஓ காலனி 6-வது வீதியை சேர்ந்தவர் பொன்னரசு (60). இவா் கடந்த 10 ஆண்டுகளாக மன சோர்வு நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார்.
நோய் குணமாகததால் வாழ்க்கையில் விரக்தியடைந்த பொன்னரசு சம்பவத்தன்று சல்பாஸ் மாத்திரையை (விஷ மாத்திரையை) சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் பொன்னரசை மீட்டு சிகிச்சைக்காக கருங்கல்பா–ளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனை–யில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வயிற்றுப் புற்று நோயால் அவதிப்பட்ட பெண் அதிக மாத்திரைகள் தின்று தற்கொலை செய்து கொண்டார்.
- கே.புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைபாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மதுரை
மதுரை கே.புதூர் கற்பகா நகர், சூசை மனைவி ஜோஸ்பின்கிளாரா (வயது 52). இவருக்கு வயிற்று புற்றுநோய் இருந்தாக கூறப்படுகிறது. இதற்காக அவர் பல ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தார்.
இருந்தபோதிலும் நோய் குணமாகவில்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த ஜோஸ்பின் கிளாரா சம்பவத்தன்று காலை வீட்டில் அதிகப்படியான மாத்திரைகள் தின்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
இதில் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்த போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக கே.புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைபாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.