என் மலர்
நீங்கள் தேடியது "கல்லூரி மாணவி மாயம்"
- கடைக்கு செல்வதாக கூறி சென்ற கல்லூரி மாணவி திடீரென மாயமானார்.
- புகாரின் பேரில் சின்னமனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தேனி:
சின்னமனூர் கே.கே.குளம் பழனியாண்டி சேர்வை தெருவை சேர்ந்த ராஜா மகள் சிவரஞ்சனாதேவி (வயது19).
இவர் கல்லூரியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று அருகில் உள்ள கடைக்கு செல்வதாக கூறி சென்ற அவர் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது தந்தை சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் அவரைதேடி வருகின்றனர்.
- சம்பவத்தன்று மாணவி திடீரென மாயமானார்.
- அவரை உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்துள்ள எலவம்பட்டி பகுதியை சேர்ந்தவர் 19 வயது கல்லூரி மாணவி. இவர் சம்பவத்தன்று மாணவி திடீரென மாயமானார். இதனால் அவரை உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.
இது குறித்து அவரது தந்தை ஊத்தங்கரை போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
- கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று விடுமுறை என்பதால் வீட்டில் அவர் திடீரென மாயமானார்.
- நண்பர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் தேவதானப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
தேனி:
தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி தெற்கு காலனியை சேர்ந்தவர் சுதா (வயது18). இவர் நிலக்கோட்டையில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்தார்.
அப்போது அவர் திடீரென மாயமானார். அக்கம் பக்கம் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் தேவதானப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
- அவரது பெற்றோர், உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
- இது குறித்து ஏரியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள ராம கொண்ட அள்ளி கிராம பகுதியை சேர்ந்த 20 வயது மாணவி. இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
சம்பத்தன்று வீட்டில் இருந்த அபிநயா திடீரென காணவில்லை. அவரது பெற்றோர், உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து ஏரியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலசொக்கநாதபுரம்:
போடி அருகே நந்தவனம் 3வது தெருவை சேர்ந்தவர் செல்வக்குமார் மகள் கார்த்தியாயினி (வயது20). இவர் போடி தனியார் கல்லூரியில் இளநிலை 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் சம்பவத்தன்று கல்லூரி சென்று விட்டு வருவதாக கூறி சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் செல்வக்குமார் போடி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.
- நாமக்கல்லில் 2 குழந்தைகளின் தாய், கல்லூரி மாணவி மாயமானார்கள்.
- நாமக்கல் நகர போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாமக்கல்:
நாமக்கல்லில் 2 குழந்தை களின் தாய், கல்லூரி மாணவி மாயமானார்கள்.
கல்லூரி மாணவி
நாமக்கல் தாதம்பட்டி மேடு பகுதியை சேர்ந்தவர் சந்திரகுமார். இவரது மகள் மேனகா (வயது 18). இவர் ராமலிங்கம் அரசு கல்லூரியில் 3-ம் ஆண்டு மைக்ரோ பயாலஜி படித்து வருகிறார்.
கடந்த 15-ந் தேதி கல்லூ ரிக்கு சென்ற மேனகா, அதன் பிறகு வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உறவினர்கள் அக்கம் பக்கம் தேடினர். ஆனால் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இது குறித்து சந்திரகுமார் நாமக்கல் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகிறார்கள்.
2 குழந்தைகளின் தாய்
இதேபோல், நாமக்கல் கொசவம்பட்டியை சேர்ந்தவர் சிவப்பிரகாசம். இவரது மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி சிவப்பிரகாசம் நாமக்கல்லுக்கு சென்று விட்டு வீடு திரும்பினார்.
அப்போது வீட்டில் குழந்தைகள் மட்டும் இருந்த னர். ஆனால் மனைவி ஜெயந்தி வீட்டில் இல்லை. அதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அக்கம் பக்கத்தினர் மற்றும் உற வினர் வீடுகளில் தேடினார். ஆனால் ஜெயந்தை குறித்து எந்த தகவலும் கிடைக்காததால், நாமக்கல் நகர போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- 40 வயது நபருடன் அந்த மாணவி மாயமாகி இருப்பது தெரியவந்தது.
- மாணவியின் பெற்றோர் பெருந்துறை போலீசில் புகார் செய்தனர்.
பெருந்துறை:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியை சேர்ந்த 19 வயது மாணவி தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று கோவிலுக்கு சென்று வருவதாக வீட்டிலிருந்து வெளியே சென்ற மாணவி அதன் பிறகு வீடு திரும்பவில்லை.
மாணவியை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். எனினும் மாணவி குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் 40 வயது நபருடன் அந்த மாணவி மாயமாகி இருப்பது தெரியவந்தது. அந்த நபருக்கு திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளனர். அந்த நபர் மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி அவரை அழைத்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் பெருந்துறை போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திண்டுக்கல் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
- சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்று வருவதாக வீட்டில் கூறி சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே உள்ள சிலுக்குவார்பட்டியை சேர்ந்த பீட்டர் மகள் மைதிலி ஆண்ட்ரியா (வயது 19). இவர் திண்டுக்கல் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்று வருவதாக வீட்டில் கூறி சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜிடம் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.
- சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்று மாணவி மாயமானார்.
- புகாரின்பேரில் போலீசார் மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டி ஆசாரி மார் தெருவைச் சேர்ந்த அய்யப்பன் மகள் பரமே ஸ்வரி (வயது 18).
தேனியில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்று மாணவி மாயமானார். இது குறித்து அவரது தாய் சித்ரா கொடுத்த புகாரின் பேரில் உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற மாணவி மாயமானார்.
- புகாரின்பேரில் மாயமான கல்லூரி மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.
தேவதானப்பட்டி:
தேவதானப்பட்டி ஸ்ரீராம் நகர் மேற்கு தெருவைச் சேர்ந்த முருகன் மகள் கனிமொழி (வயது 19). தந்தை இறந்து விட்ட நிலையில் குணா என்பவரது பராமரிப்பில் இருந்து வந்தார். இவர் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற மாணவி மாயமானார். பல இடங்க ளில் தேடியும் கிடைக்காத தால் தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
- சம்பவத்தன்று தனது தோழியை பார்த்து விட்டு வருவதாக கூறிச்சென்ற மாணவி மாயமானார்.
- மாணவியின் சகோதரருக்கு போன் செய்து உனது தங்கையை நான் திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் என கூறி விட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே உள்ள ராமராஜபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் மகள் தேவதர்ஷினி (வயது 19). மதுரையில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று தனது தோழியை பார்த்து விட்டு வருவதாக கூறிச்சென்ற மாணவி மாயமானார். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதனிடையே காட்டூரைச் சேர்ந்த விக்னேஸ்குமார் என்ற வாலிபர் மாணவியின் சகோதரர் பாலக்குமாருக்கு போன் செய்து உனது தங்கையை நான் திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் என கூறி விட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.
இது குறித்து விளாம்பட்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
- சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்து கடைக்கு செல்வதாக தனது பெற்றோரிடம் கூறிவிட்டு வெளியில் சென்ற மாணவி மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.
- அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தனது மகளை எங்கும் தேடியும் கிடைக்கவில்லை.
கடலூர்:
கடலூர் அருகே திருமாணிக்குழி சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.ஏ. படித்து வருகிறார்.
சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்து கடைக்கு செல்வதாக தனது பெற்றோரிடம் கூறிவிட்டு வெளியில் சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தனது மகளை எங்கும் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.