search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூ"

    • கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக சாமந்தி பூக்கள் விளைச்சல் அதிக ரித்துள்ளது. இதன் காரண மாக சேலம் மார்க்கெட்டுக்கு சாமந்தி பூக்கள் வரத்து அதிகரித்துள்ளது. 
    • பூக்கள் வரத்து அதிகரித்து உள்ளதால், போதிய அளவு விலை கிடைக்கவில்லை. ஒரு கிலோ பூக்கள் அதிக பட்சமாக ரூ.100- க்கு விலையில் செல்கிறது.

    அன்னதானப்பட்டி:

    சேலம் மாவட்டத்தில் செட்டிச்சாவடி, கன்னங்குறிச்சி, வீராணம்,

    வலசையூர், ஓமலூர், தீவட்டிப்பட்டி, காடை யாம்பட்டி, வாழப்பாடி, ஆத்தூர், மேட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாமந்தி பூக்கள் விளைவிக்கப்படுகிறது. இங்கு அறுவடைக்கு செய்யப்படும் பூக்கள் சேலம் மாநகர் மற்றும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக சாமந்தி பூக்கள் விளைச்சல் அதிக

    ரித்துள்ளது. இதன் காரண மாக சேலம் மார்க்கெட்டுக்கு சாமந்தி பூக்கள் வரத்து அதிகரித்துள்ளது. 

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில், சேலம் மார்க்கெட்டுக்கு வழக்கத்தைவிட அதிகளவில் சாமந்தி பூக்களை விற்பனைக்கு அனுப்பி வைத்து வருகிறோம். பூக்கள் வரத்து அதிகரித்து உள்ளதால், போதிய அளவு விலை கிடைக்கவில்லை. ஒரு கிலோ பூக்கள் அதிக பட்சமாக ரூ.100- க்கு விலையில் செல்கிறது. உரிய விலை கிடைக்காததால் விவசாயிகளுக்கு ஆயிரக்கணக்கில் பணம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது, என்றார்.

    • கடந்த வாரங்களில் அடுத்தடுத்து முகூர்த்த நாட்கள் வந்ததால் பூக்களின் தேவை அதிகரித்து இருந்தது. இந்த நிலையில் தற்போது முகூர்த்த தினங்கள், திருவிழா இல்லாததால் பூக்களின் தேவை குறைந்துள்ளது.
    • இன்று சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட் விலை நிலவரம்  (1 கிலோ கணக்கில்) ரூ.2400, ரூ.2600, ரூ.2800 என்ற விலையில் விற்கப்பட்டது.

    அன்னதானப்பட்டி:

    சேலம் பழைய பஸ் நிலையத்தில் வ.உ.சி. பூ மார்க்கெட் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டுக்கு பனமரத்துப்பட்டி, கம்மாளப்பட்டி, ஜல்லூத்துப்பட்டி, ஓமலூர்,

    காடையாம்பட்டி, தீவட்டிப்பட்டி, கன்னங்கு றிச்சி, வாழப்பாடி,பேளூர், வீராணம், டி.பெருமா பாளையம் உள்ளிட்ட சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    பெங்களூரு, சென்னை, கோவை மற்றும் தமிழகத்தின் பல்வேறு நகரங்கள் மற்றும் மாவட்டங்களுக்கும் இங்கிருந்து பூக்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. திருமண முகூர்த்த தினங்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பூக்களின் விலை அதிக ரிப்பது வழக்கம். கடந்த வாரங்களில் அடுத்தடுத்து முகூர்த்த நாட்கள் வந்ததால் பூக்களின் தேவை அதிகரித்து இருந்தது. இந்த நிலையில் தற்போது முகூர்த்த தினங்கள், திருவிழா இல்லாததால் பூக்களின் தேவை குறைந்துள்ளது.இன்று சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட் விலை நிலவரம்  (1 கிலோ கணக்கில்) வருமாறு:-

    குண்டுமல்லிகை-ரூ.1400, முல்லை- ரூ. 800, ஜாதிமல்லிகை-ரூ.400, காக்கட்டான்ரூ-.320, கலர் காக்கட்டான்- ரூ.280, மலைக்காக்கட்டான்-ரூ.280, அரளி-ரூ. 280, வெள்ளை அரளி-ரூ.280,

    மஞ்சள் அரளி- ரூ.280, செவ்வ ரளி-ரூ. 320, ஐ.செவ்வரளி-ரூ.320, நந்தியாவட்டம்- ரூ.280, சி.நந்திவட்டம்-ரூ.280, சம்மங்கி -ரூ.50, சாதா சம்மங்கி-ரூ.50 என்கிற விலையில் விற்கப்பட்டு வருகிறது. கடந்த வாரங்களில் முகூர்த்த தினங்கள், பண்டிகை நாட்கள் சீசன் காரணமாக குண்டு மல்லிகை ஒரு கிலோ ரூ.2400, ரூ.2600, ரூ.2800 என்ற விலையில் விற்கப்பட்டது. ஆனால் தற்போது சீசன் இல்லாததால் பூக்களின் விலை சரிபாதி யாக சரிந்துள்ளது. வரும்

    நாட்களில் முகூர்த்த

    தினங்கள் மற்றும் பண்டிகை நாட்கள் வரும் போது மீண்டும் பூக்கள் விற்பனை சூடுபிடிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • பரமத்தி வேலூர் பகுதியில் பூக்களின் வரத்து குறைவாலும், ஐப்பசி மாத வளர்பிறையை முன்னிட்டு கோவில் மற்றும் திருமண விசேஷங்கள் இருப்பதால் பூக்களின் விலை‌ உயர்வடைந்துள்ளது.
    • பச்சை முல்லை ரூ.1000-க்கும், செவ்வந்திப்பூ ரூ.250-க்கும் வியாபாரிகள் வாங்கிச் சென்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுக்கா ஆனங்கூர், பாகம்பாளையம், பெரியமருதூர், சின்ன மருதூர், தண்ணீர் பந்தல், நகப்பாளையம், செல்லப்பம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில், மல்லிகை, சம்பங்கி, செவந்தி, அரளி, முல்லை, ரோஜா உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டு உள்ளது. இங்கு விளையும் பூக்களை கூலி ஆட்கள் மூலம் பறித்து விவசாயிகள் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும் பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் பூ ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    பூ வியாபாரிகள் வாங்கிய உதிரிபூக்களை பல்வேறு ரகமான மாலைகளாகவும், தோரணங்களாகவும் கட்டி விற்பனை செய்து வரு கின்றனர். அதேபோல் சில வியாபாரிகள் பிளாஸ்டிக் கவரில் போட்டு பாக்கெட்டுகளாக உள்ளூர் பகுதிகளுக்கு கொண்டு சென்று உதிரிப்பூக்களை விற்பனை செய்து வருகின்றனர். கடந்த வாரம் மல்லிகை ரூ.400-க்கும், சம்பங்கி கிலோ ரூ.50-க்கும், அரளி கிலோ ரூ.120-க்கும், ரோஜா கிலோ ரூ.150-க்கும், முல்லைப் பூ ரூ.400-க்கும், பச்சை முல்லை 400-க்கும், செவ்வந்திப்பூ ரூ.150-க்கும் வியாபாரிகள் வாங்கிச் சென்றனர்.

    நேற்று மல்லிகை கிலோ ரூ.1000-க்கும், சம்பங்கி கிலோ ரூ150-க்கும், அரளி கிலோ ரூ.180-க்கும், ரோஜா கிலோ ரூ.250-க்கும், முல்லைப் பூ கிலோ ரூ.1000-க்கும், பச்சை முல்லை ரூ.1000-க்கும், செவ்வந்திப்பூ ரூ.250-க்கும் வியாபாரிகள் வாங்கிச் சென்றனர். பூக்களின் வரத்து குறைவாலும், ஐப்பசி மாத வளர்பிறையை முன்னிட்டு கோவில் மற்றும் திருமண விசேஷங்கள் இருப்பதால் பூக்களின் விலை‌ உயர்வடைந்துள்ளது.

    • திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று காலை முதலே குவிந்தனர்.
    • இன்று வார விடுமுறை என்பதால் பொதுமக்கள் அதிகளவில் வந்து குவிந்தனர்.

    திருப்பூர் :

    நாளை மறுநாள் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை நாட்கள் வர இருப்பதால் திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று காலை முதலே திருப்பூர் பூ மார்கெட்டில் பூக்கள் மற்றும் பழங்கள், தோரணங்களை வாங்கிச் செல்ல குவிந்தனர்.

    திருப்பூர் பூ மார்கெட், தென்னம்பாளையம் கடைவீதிகளில் அதிகளவில் வெளி மாவட்டங்களில் இருந்து மல்லிகை, அரளி, செவ்வந்தி, செண்டுமல்லி, உள்ளிட்ட பூக்கள் வாகங்களில் வந்து இறங்கின. அதனை வாங்க இன்று வார விடுமுறை என்பதால் பொதுமக்கள் அதிகளவில் வந்து குவிந்தனர். அதே போன்று பனியன் கம்பெனியை சேர்ந்தவர்களும், பூக்கள், பூசணிக்காய், தோரணங்களை வாங்கி சென்றனர். சில தினங்களுக்கு முனபு வரை கடும் விலை விழ்ச்சியில் இருந்த பூக்களின் விலை திடிரென்று உயர்வு கண்டுள்ளது. மல்லிகை கிலோ- ரூ. 1000க்கும், செவ்வந்தி, ரூ. 340க்கும், அரளி ரூ. 400க்கும் செண்டுமல்லி ரூ. 150க்கும் வி்ற்பனை ஆனாது. இரண்டு நாளுக்கு முன்பே வியாபாரம் களைக்கட்டியுள்ளதால், பூ வியாபாரிகள், பழக்க டைக்கடை க்காரர்கள், சுவிட் கடைகள், மற்றும் மளிகை கடைகள் என வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    • 1 கிலோ ரூ. 4 ஆயிரத்துக்கு விற்பனை
    • ஓணம் பண்டிகை விற்பனை களை கட்டியது

    கன்னியாகுமரி:

    ஓணம் பண்டிகை நாளை மறுநாள் (8-ந் தேதி) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கடந்த சில நாட்களாக தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விற்பனை களை கட்டியுள்ளது.

    தமிழக மற்றும் கேரள வியாபாரிகள், பொதுமக்கள் சந்தைக்கு படையெடுத்து வந்து பூக்களை வாங்கிச் செல்கின்றனர். அவர்களின் வருகையை கருத்தில் கொண்டு தோவாளை சந்தைக்கு கூடுதல் பூக்கள் வரவழைக்கப்பட்ட போதி லும், பூக்கள் தட்டுப்பாடு நிலவுகிறது.

    அதிலும் குறிப்பாக மல்லிகைப் பூவுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு கிலோ மல்லி கைப்பூ ரூ.4 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. நாளை மறுநாள் நடைெபறும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு மலையாள மொழி மக்கள்அத்தப்பூ கோலமிட்டு கொண்டாட இருப்பதால் பூக்களுக்கு வரும் நாட்களில் மேலும் அதிக கிராக்கி இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    மேலும் தற்போது தோவாளை சந்தையில் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.4 ஆயிரத்திற்கும் பிச்சிப்பூ ஒரு கிலோ ரூ. 2 ஆயிரத்திற்கும், சேலம்அரளி, சம்பங்கி ஆகியவை கிலோ ரூ.400க்கும், கனகரம்பரம் ஒரு கிலோ ரூ. 2 ஆயிரத்திற்கும் விற்கப்ப டுகிறது.

    மற்ற பூக்களும் விலை உயர்ந்து உள்ளது. இன்று மட்டும் 150 டன் பூக்கள் விற்பனையாகியுள்ளது.ஓணம் பண்டிகை விழா நாளில் தோவாளை பூ சந்தையில் பூக்கள் விலை இதை விட அதிகரிக்கும் என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் 200 டன்னுக்கும் மேற்பட்ட பூக்கள்இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டு இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

    • முகூர்த்த தினங்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை அதிகமாக இருக்கும்.
    • காலையிலேயே சந்தைக்கு வந்த பொதுமக்கள் தேவையான பூக்களை வாங்கி சென்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் பல்லடம் ரோட்டில் காட்டன் மார்க்கெட் உள்ளது. இங்கு தினமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் காய்கறி மற்றும் பூ உள்ளிட்ட பொருட்களை வியாபாரம் செய்வது வழக்கம். சந்தையில் மற்ற நாட்களை விட முகூர்த்த தினங்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை அதிகமாக இருக்கும்.

    விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் காட்டன் மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை அதிகமாக இருந்தது. காலையிலேயே சந்தைக்கு வந்த பொதுமக்கள் வீடுகளில் சாமி கும்பிடுவதற்கு தேவையான பூக்களை வாங்கி சென்றனர். இதனால் பூக்களின் விலை சற்று உயர்ந்திருந்தது.

    அதன்படி ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.1000-க்கும், முல்லை ரூ.600, சம்பங்கி ரூ.250, செவ்வந்தி ரூ.160, ஜாதிப்பூ 480 க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    • சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் முகூர்த்த தினங்கள் இல்லாததால் மல்லிகைப்பூ விலை குறைந்து ரூ.௩௫௦-க்கு விற்பனையானது.
    • மல்லிகை விலை கடும் வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் பல்வேறு வகையான பயிர்களை அதிகளவில் பயிரிட்டு அறுவடை செய்து வருகிறார்கள்.

    இதே போல் சத்திய மங்கலம், பு.புளியம்பட்டி, பவானிசாகர், சிக்கரசம் பட்டி, புது வடவள்ளி, ராஜன் நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் பலர் மல்லிகைப்பூ உள்பட பல்வேறு பூக்கள் பயிரிட்டு உள்ளனர்.

    இந்த பகுதிகளில் விளையும் பூக்களை சத்தியமங்கலம் பஸ் நிலையம் அருகே செயல்படும் பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சத்தியமங்கலத்தில் விற்பனை செய்யப்படும் மல்லிகைப் பூக்கள் உள்ளூர் மற்றும் வெளியூர், வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இங்கு விற்பனை செய்யப்படும் பூக்கள் பொதுமக்கள் விரும்பி வாங்குகிறார்கள். இதனால் வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் ஏராளமானோர் இங்கு வந்து பூக்களை அதிகளவில் கொள்முதல் செய்கிறார்கள்.

    மேலும் இந்த பகுதிகளில் விளையும் மல்லிகைப் பூக்கள் சிங்கப்பூர், துபாய், சார்ஜா உள்பட பல வெளி நாடுகளுக்கு நறுமணப் பொருட்கள் தயாரிக்க ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இதனால் இங்கு மல்லிகைப்பூ சாதாரண நாட்களில் ரூ.500 வரையும் முகூர்த்தம் மற்றும் விழாக் காலங்களில் ரூ.3 ஆயிரம் வரையும் வியாபாரிகள் கொள்முதல் செய்கிறார்கள். கேரளா மாநிலத்தில் நடக்கும் விஷேச நாட்களில் விலை மேலும் உயர்ந்து காணப்படும்.

    இந்த நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு முகூர்த்த நாட்கள் தொடர்ச்சியாக வந்தது. இதனால் மல்லிகைப்பூக்கள் தேவை அதிகரித்தது. இதன் காரணமாக மல்லிகைப் பூ ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக முகூர்த்த நாட்கள் இல்லாததால் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ விலை குறைந்தது. கடந்த ஒரு மாதமாக 1 கிலோ மல்லிகைப்பூ ரூ.2 ஆயிரத்துக்கு மேல் விற்பனையானது.

    ஆனால் முகூர்த்தம் மற்றும் விஷேச நாட்கள் இல்லாததால் வியாபாரிகள் ஒரு சிலர் மட்டுமே வந்திருந்தனர்.

    இதனால் நேற்று 1 கிலோ மல்லிகை ரூ.350-க்கு விற்பனை செய்யப்பட்டது. மல்லிகை விலை கடும் வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

    சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டி பூக்கள் விலை நிலவரம் வருமாறு:

    மல்லிகை ரூ.350, முல்லை ரூ.100, காக்கடா ரூ.75, செண்டு மல்லி ரூ.28, கனகாம்பரம் ரூ.550, சம்பங்கி ரூ.10, அரளி ரூ.50, செவ்வந்தி ரூ.120 விற்பனையானது.

    • இரு பட்டங்களில் மானாவாரியில் சாகுபடி செய்யலாம்.
    • மழைக்காலத்தில் அறுவடை மேற்கொள்வது மற்றும் பூக்களைக் காய வைப்பது கடினமான பணியாகும்.

    உடுமலை,

    உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை, மக்காச்சோளம் மற்றும் காய்கறி பயிர்கள் சாகுபடி செய்வதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். எண்ணெய் வித்துப் பயிர்களான நிலக்கடலை, எள், சூரியகாந்தி ஆகியற்றை சாகுபடி செய்வதில் விவசாயிகளின் ஆர்வம் குறைந்து வருகிறது.கூலி ஆட்கள் பற்றாக்குறை, போதிய விலையின்மை போன்றவை இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில் உடுமலை பகுதியில் ஒருசில இடங்களில் சூரியகாந்தி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    சூரியகாந்தி சாகுபடியை பொறுத்தவரை ஆடிப் பட்டம், கார்த்திகை பட்டம் ஆகிய இரு பட்டங்களில் மானாவாரியில் சாகுபடி செய்யலாம். இதுதவிர இறவை பாசனத்தில் மார்கழி பட்டம் மற்றும் சித்திரை பட்டங்களில் சாகுபடி மேற்கொள்ளலாம். அந்தவகையில் ஆண்டுக்கு 4 பட்டங்களில் சூரியகாந்தி சாகுபடி மேற்கொள்ள முடியும். அதேநேரத்தில் பட்டத்துக்கு தகுந்தாற் போல விதைகளை தேர்வு செய்வது அவசியமாகும். தற்போது வீரிய ஒட்டு ரகங்கள் பல அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் அவை நோய் எதிர்ப்புத் திறன் கொண்டதாகவும், அதிக மகசூல் தரக்கூடியவையாகவும் உள்ளன. ஆனாலும் விதைப்புக்கு முன் விதை நேர்த்தி செய்வது நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கவும், முளைப்புத் திறனை மேம்படுத்தவும் உதவும்.

    மேலும் ஒருங்கிணைந்த ஊட்டச் சத்து மேலாண்மையில் உயிர் உரமாக தழை, மணி, சாம்பல் சத்துக்களை தேவையான அளவில் வழங்குகிறோம். சூரியகாந்தி பூக்களை பொறுத்தவரை மகரந்த சேர்க்கை மிக முக்கிய இடம் பிடிக்கிறது. நன்றாக மணிகள் பிடிப்பதற்கு மகரந்த சேர்க்கை உதவுகிறது.தற்போது தேனீக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் நாமே செயற்கையாக மகரந்த சேர்க்கை செய்யலாம்.அதற்கு பூக்கொண்டைகளை ஒன்றோடொன்று லேசாக தேய்த்து விடுவது நல்ல பலன் தரும். சூரியகாந்தியைப் பொறுத்தவரை 80 முதல் 90 நாட்களில் அறுவடைக்குத் தயாராகி விடும். ஆனால் மணிகள் முற்றும் தருணத்தில் கிளிகளிடமிருந்து பாதுகாப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது.

    கிளிகளுக்கு மிகவும் பிடித்த உணவாக சூரியகாந்தி விதைகள் உள்ளது. எனவே காலை மற்றும் மாலை வேளைகளில் கூட்டம் கூட்டமாக கிளிகள் படையெடுக்கும்.அவற்றை தட்டுகள் மற்றும் தகரங்களில் தட்டி ஓசையெழுப்பி விரட்டுவோம்.மேலும் தற்போது அறுவடைக்குப் போதிய ஆட்கள் கிடைக்காததால் எந்திரங்கள் மூலமே அறுவடை மேற்கொள்ள வேண்டியதுள்ளது.ஒரு ஏக்கருக்கு 750 கிலோ முதல் 900 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.தற்போது செய்துள்ள சாகுபடி இன்னும் 20 நாட்களில் அறுவடைக்குத் தயாராகி விடும்.

    மழைக்காலத்தில் அறுவடை மேற்கொள்வது மற்றும் பூக்களைக் காய வைப்பது கடினமான பணியாகும்.சித்திரைப் பட்டத்தைத் தவற விட்டு சற்று தாமதமாக விதைப்பு செய்ததால் மழையால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    ஏனென்றால் பூக்கள் நன்கு உலர்ந்த பிறகு விதைகளைப் பிரித்தெடுத்து அவற்றை நன்கு உலர்த்தி, சுத்தம் செய்து அதன்பிறகே விற்பனைக்குத் தயார் செய்ய முடியும்.ஈரப்பதம் அதிகமாக இருந்தால் விதைகளில் பூஞ்சாணம் உற்பத்தியாகி இழப்பை ஏற்படுத்தி விடும் என்றனர்.

    ×