என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கும்பாபிஷேக விழா"

    • முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
    • கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகங்கள் நடந்தன.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி பழையபேட்டை தர்மராஜா கோவில் சாலையில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.

    இதையொட்டி கடந்த 26-ந் தேதி விக்னேஸ்வர பூஜை, கோபூஜை, கொடி ஏற்றுதல், முதல் கால பூஜை, தீபாராதனை நடந்தது. அன்ற மாலை கணபதி பூஜை, இரண்டாம் காலயாக பூஜை ஆகியவை நடந்தது.

    27-ந் தேதி காலை கணபதி பூஜை, கலச பூஜை, விசேஷ மந்த்ர ஹோமங்கள்ஆகியவையும், மதியம் மூன்றாம் கால யாகம் நடந்தது.நேற்று நவகிரக ஹோமங்கள், 5-ம் கால பூஜைகள் நடந்தது- தொடர்ந்து கலச புறப்படுதல், முத்து மாரியம்மன் கோவில் கோபுரத்தில் உள்ள கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகங்கள் நடந்தன. தொடர்ந்து சாமிக்குஅபிஷேகம், அலங்காரம் நடந்தது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • மாலை 6 மணிக்கு அனைத்து தெய்வங்களுக்கும் விமர்சன கண் திறப்பு விழா நடக்கிறது.இதைத் தொடர்ந்து தீபாராதனை நடைபெறுகிறது
    • காலை 9.30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. மதியம் 12.30 மணிக்கு அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு தீபாராதனையும் அதை தொடர்ந்து சமபந்தி விருந்தும் நடக்கிறது

    நாகர்கோவில் :

    சாமிதோப்பு அருகே செட்டிவிளை முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று (5-ந்தேதி) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.

    இன்று மாலை 6 மணிக்கு அனைத்து தெய்வங்களுக்கும் விமர்சன கண் திறப்பு விழா நடக்கிறது.இதைத் தொடர்ந்து தீபாராதனை நடைபெறுகிறது. பின்னர் அன்னதானம் வழங்கப்படுகிறது. நாளை (6-ந்தேதி) காலை 5 மணிக்கு மங்கள வாத்தியம், 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், தீபாராதனை நடக்கிறது. பின்னர் காலை உணவு வழங்கப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து நவகிரக சாந்தி சுதர்சன ஹோமம், தீபாராதனை நடைபெறுகிறது. மதியம் 12.30 மணிக்கு சமபந்தி விருந்து நடக்கிறது. மாலை 6 மணிக்கு வாஸ்து பூஜை, வாஸ்து ஹோமம் நடக்கிறது. இரவு 8 மணிக்கு அன்னதானம் வழங்கப்ப டும்.

    நாளை மறுநாள் (7-ந் தேதி) காலை 6 மணிக்கு மங்கள இசை, 6.30 மணிக்கு திருமுறை பாராயணம், 7 மணிக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. காலை 7.30 மணிக்கு யாகசாலை பூஜைகள் நடக்கிறது.

    காலை 9.30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. மதியம் 12.30 மணிக்கு அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு தீபாராதனையும் அதை தொடர்ந்து சமபந்தி விருந்தும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஊர் பொது மக்கள் செய்து வருகின்றனர்.

    • முதல் கால யாக பூஜை, சிலைகள் பிரிதிஷ்டை, இடர்களை தீர்க்கும் நாயகிக்கு இரண்டாம் கால பூஜை ஆகிய பூஜைகள் செய்யப்பட்டது.
    • பெண்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் தீர்த்த குடம் மற்றும் முளைப்பாலிகையை ஊர்வலமாக எடுத்து வந்து வழிப்பட்டனர்.

    பென்னாகரம்,

    தர்மபுரி மாவட்டம் பென்னா கரம் அருகே பெரும்பாலை பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஆலமரத்தூர் கிராமத்தில் வீரமாத்தியம்மன் அம்மன் கோவில்

    மகா கும்பாபிஷேகம்

    மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

    இதில் அம்மனுக்கு முகூர்த்த கால் நடுதல், முலைப்பாடி போடுதல், மகா கணபதி யாகம், புண்ணிய தீர்த்தம் , பம்பை மேளம் முழுங்க சிறப்பு அபிஷேக பூஜை , வாஸ்து சாந்தி பூஜை, கும்ப அலங்காரம்,யாகசாலை பூஜை, அம்மனுக்கு முதல் கால பூஜை, துவர பூஜை, வேதிகார்ச்சனை, முதல் கால யாக பூஜை, சிலைகள் பிரிதிஷ்டை, இடர்களை தீர்க்கும் நாயகிக்கு இரண்டாம் கால பூஜை ஆகிய பூஜைகள் செய்யப்பட்டது.

    பிரம்மஸ்ரீ ஸ்ரீ வித்யா உபாசகர் கார்த்திகேயன் ஆச்சாரியார் மற்றும் சுகவனேஷ்வரன் சிவம் ஆச்சாரியார் இந்த சிறப்பு பூஜைகளை செய்தனர்.

    முதல் நாளன்று நாகாவதி ஆற்று படுக்கையில் இருந்து பெண்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் தீர்த்த குடம் மற்றும் முளைப்பாலிகையை ஊர்வலமாக எடுத்து வந்து வழிப்பட்டனர்.

    பின்னர் ஆலமரத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வீரமாத்தியம்மன் கோவிலுக்கு பரிவார தெய்வங்களுக்கு பு ணராவர்த்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

    இதில் கோவில் தர்மகர்த்தா மற்றும் ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • சாமிதோப்பு அருகே செட்டிவிளை முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடந்தது .
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி:

    சாமிதோப்பு அருகே செட்டிவிளை முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடந்தது . இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • கும்பாபிஷேக விழா கணபதி பூஜையுடன் தொடக்கியது.
    • அம்மனுக்கு சிறப்பு பால் அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது.

    தருமபுரி,

    தருமபுரி அடுத்த செம்மாண்ட குப்பம் ஊராட்சி குண்ட லப்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ சீலக்காரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கணபதி பூஜையுடன் தொடக்கியது.

    இந்த விழாவையொட்டி ஏராளமான பெண்கள் பங்கேற்ற பால்குட ஊர்வலம் நடைபெற்றது. மேளதாளங்கள் முழங்க முக்கிய விதிகள் வழியாக நடைபெற்ற இந்த ஊர்வலம் கோவிலை வந்தடைந்தது. அங்கு அம்மனுக்கு சிறப்பு பால் அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து யாக சாலை பூஜைகளும், வாஸ்து பூஜைகளும் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு அஷ்டபந்தனம் சாற்றப்பட்டு சிறப்பு பூர்ணாகுதி நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நாளான நேற்று காலை யாகசாலையில் இருந்து மேளதாளங்கள் முழங்க புனித நீர் குடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோபுர கலசத்துக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து சீலக்காரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவையொட்டி பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் மற்றும் அன்ன தானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் தான்தோன்றி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நாளை மறுநாள் நடக்கிறது.
    • இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் தான்தோன்றி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு நடக்கிறது. இதையொட்டி கிராம சாந்தி பூஜையுடன் விழா தொடங்கியது.

    இதை தொடர்ந்து கணபதி பூஜை நடந்தது. இதையடுத்து நேற்று பவானி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

    விழாவையொட்டி இன்று (புதன்கிழமை) யாக சாலை தொடக்க நிகழ்ச்சி நடந்தது. நாளை (வியாழக்கிழமை) 2-ம் கால யாக பூஜை, சுவாமிகளுக்கு அஷ்ட பந்தன மருந்து சான்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து கலச ங்கள் யாக சாலையில் இருந்து புறப்படுதல் நிகழ்ச்சி நடக்கிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேக விழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து பக்தர்க ளுக்கு அன்னதானம் வழங்க ப்படுகிறது.

    அன்று காலை 10 மணிக்கு மகா அபிஷே கமும், கோதரிசனமும், தச தரிசனமும், மகாதீப ஆராதனையும் நடைபெற உள்ளது. மாலை 6 மணிக்கு தான்தோன்றியம்மன் உற்சவர் திருவீதி உலா நடை பெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • மொடச்சூர் தான்தோன்றி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது.
    • அதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் தான்தோன்றி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு  நடைபெற்றது.

    கும்பாபிஷேக விழா 6-ந் தேதி கிராம சாந்தியுடன் தொடங்கியது. 7-ந் தேதி கணபதி பூஜையும், 8-ந் தேதி பவானி நதியில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 9-ந் தேதி யாகசாலை தொடக்க நிகழ்ச்சி நடந்தது.

    தொடர்ந்து 10-ந் தேதி 2-ம் கால யாக பூஜையும், சுவாமிகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சியும், கலசங்கள் யாகசாலையில் இருந்து புறப்படுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் இன்று காலை 7 மணிக்கு நடந்தது.

    அதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 10 மணிக்கு மகா அபிஷேகமும், கோ தரிசனமும், தச தரிசனமும், மகாதீப ஆராதனையும் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு தான்தோன்றியம்மன் உற்சவர் திருவீதி உலா நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். கொட்டும் மழையிலும் ஏராளமான பக்தர்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து சென்றனர்.

    • கோவிலின் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.
    • அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அருகே கனகமுட்லு கிராமத்தில், மகா கணபதி, சன்யாசி மாரியம்மன், மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி கடந்த 9&ந் தேதி மாலை கணபதி பூஜை, கணபதி ஹோமம், கோ பூஜை, கொடி ஏற்றுதல், காப்பு கட்டுதல், தீபாராதனை ஆகியவை நடந்தன.

    10-ந் தேதி மாலை யாகசாலை பிரவேசம், முதல்கால யாக பூஜை நடந்தன. நேற்று காலை 2-ம் கால யாக பூஜை, கடம்புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மாரியம்மன், சன்யாசி மாரியம்மன், மகா கணபதி கோவில் கோபுரத்திற்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடந்தது.

    தொடர்ந்து மகா அபிஷேகம், தீபாராதனை, தீர்த்தப்பிரசாதம் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • கோவிலுக்கு பால் கூட ஊர்வலம் தீர்த்தகுட ஊர்வலம் நடைபெற்றது.
    • புனித நீரானது கோவிலை சுற்றி காத்திருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் நத்தஅள்ளி கிராமத்தில் உள்ள விநாய கர்,மாரியம்மன்,தேவி ,பெருமாள் மூலவர் பூதேவி மேத திருக்கோவில் திருப்பணிகள் நடைபெற்று திருக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்வதற்கு பெரியோர்களால் முடிவெடுக்கப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

    முதல் நிகழ்வாக கோவிலுக்கு பால் கூட ஊர்வலம் தீர்த்தகுட ஊர்வலம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கோவிலில் முதல் கால யாக பூஜை மற்றும் இரண்டாம் கால யாக பூஜைகள் நடைபெற்று வந்தன. யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட தீர்த்த குடங்கள் ஊர்வலமாக கோவிலை சுற்றி வரப்பட்டு கோவில் விமான கோபுரங்களுக்கு கொண்டுவரப்பட்டது.

    வேத மந்திரங்கள் முழங்க மங்கள இசை உடன் ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட திருத்தக்குடங்கள் கலசங்களுக்கு ஊற்றப்பட்டது. கருவறையில் உள்ள விநாயகர், மாரியம்மன், வைகுண்ட பெருமாள் உள்ளிட்ட தெய்வங்களுக்கு புனித நீரானது ஊற்றபட்டது. பூஜைகள் நிறைவடைந்த பின் புனித நீரானது கோவிலை சுற்றி காத்திருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. கோவில் கும்பாபிஷேகத்தில் தொடர்ந்து 48 நாள் மண்டல பூஜை நடைபெறுகிறது‌. கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    கோவில் கும்பாபிஷேக விழா நிகழ்வுகள் அனைத்தையும் விழா குழுவினர், ஊர் பெரியோர் ஒன்றிணைந்து செய்திருந்தனர்.

    • காட்டூர், பண்ணாரி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கணபதி பூஜையுடன் துவங்கியது.
    • நேற்றுமுன்தினம் காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலம் மேள தாளங்களுடன் நடைபெற்றது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் காட்டூர், பண்ணாரி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கணபதி பூஜையுடன் துவங்கியது. நேற்றுமுன்தினம் காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலம் மேள தாளங்களுடன் நடைபெற்றது. இதையடுத்து கும்பாபிஷேக விழா இன்று காலை 8 மணியளவில் நடைபெற்றது. லோகானந் சாஸ்திரிகள் குழுவினர் யாகசாலை பூஜைகள் மற்றும் கும்பாபிஷேக விழாவை நடத்தினர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • தளவாய்பட்டி கிராமம் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ஸ்ரீ மகா வாராகி அம்மன் புதிய ஆலயம் விநாயகர், பைரவர் பரிவாரத்துடன் அமைக்கப்பட்டு உள்ளது.
    • இக் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு தீர்த்த பாலிகை அழைத்தல், கோபுர பதுமை கண் திறப்புடன் தொடங்கியது.

    சேலம்:

    சேலம் தளவாய்பட்டி கிராமம் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ஸ்ரீ மகா வாராகி அம்மன் புதிய ஆலயம் விநாயகர், பைரவர் பரிவாரத்துடன் அமைக்கப்பட்டு உள்ளது.

    இக் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு தீர்த்த பாலிகை அழைத்தல், கோபுர பதுமை கண் திறப்புடன் தொடங்கியது.

    இன்று மாலை 5 மணிக்கு வாராகி அம்மனுக்கு 3-ம் கால பூஜை, யாகசாலை பூைஜகள், ஹோமம், தத்வார்வசனை பூைஜ, பூர்ணாஹுதி, தீபாராதனை நடைபெறுகின்றன.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு நலம் காக்கும் நாயகி அன்னை வாராஹிக்கு 4-ம் கால யாகம் ஆரம்பம், காலை 6.30 மணிக்கு யாகசாலை பூைஜகள், 7 மணிக்கு பூர்ணாஹுதி, தீபாராதனை, கலசம் புறப்படுதல் நிகழ்ச்சிகளும், 7.30 மணிக்கு கோபுர கும்பாபிேஷகம், 7.45 மணிக்கு விநாயகர், பைரவர் கும்பாபிஷேகம், காலை 8 மணிக்கு மூலவர் வாராஹி அம்மனுக்கு கும்பாபிேஷகம் பூஜை, தீபாராதனை, தசதானம், தரிசனம், மஹாபிஷேகம், மங்களார்த்தி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தொழில் அதிபர் பிரேம்ராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் செய்து வருகிறார்கள்.

    • தளவாய்பட்டி கிராமம் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ஸ்ரீ மகா வாராகி அம்மன் புதிய ஆலயம் விநாயகர், பைரவர் பரிவாரத்துடன் அமைக்கப்பட்டு உள்ளது.
    • கும்பாபிேஷகம், 7.45 மணிக்கு விநாயகர், பைரவர் கும்பாபிஷேகம், காலை 8 மணிக்கு மூலவர் வாராஹி அம்மனுக்கு கும்பாபிேஷகம் கோலாகலமாக நடைபெற்றது.

    சேலம்:

    சேலம் தளவாய்பட்டி கிராமம் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ஸ்ரீ மகா வாராகி அம்மன் புதிய ஆலயம் விநாயகர், பைரவர் பரிவாரத்துடன் அமைக்கப்பட்டு உள்ளது.

    இக் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா தீர்த்த பாலிகை அழைத்தல், கோபுர பதுமை கண் திறப்புடன் தொடங்கியது.

    கடந்த 10-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு வாராகி அம்மனுக்கு 3-ம் கால பூஜை, யாகசாலை பூைஜகள், ஹோமம், தத்வார்வசனை பூைஜ, பூர்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்றன.

    12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு அன்னை வாராஹிக்கு 4-ம் கால யாக பூஜையும், காலை 6.30 மணிக்கு யாகசாலை பூைஜகளும், 7 மணிக்கு பூர்ணாஹுதி, தீபாராதனை, கலசம் புறப்படுதல் நிகழ்ச்சிகளு நடந்தன. பின்பு 7.30 மணிக்கு கோபுர கும்பாபிேஷகம், 7.45 மணிக்கு விநாயகர், பைரவர் கும்பாபிஷேகம், காலை 8 மணிக்கு மூலவர் வாராஹி அம்மனுக்கு கும்பாபிேஷகம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து பூஜை, தீபாராதனை, தசதானம், தரிசனம், மஹாபிஷேகம், மங்களார்த்தி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தொழில் அதிபர் பிரேம்ராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் செய்திருந்தனர்.

    ×