search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணியிடம்"

    • தேர்வுக்கான முடிவு அக்டோபர் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • தேர்வுக்கான காலிப் பணியிடங்கள் தற்போது 6,724ஆக உள்ளது.

    டி.என்.பி.எஸ்.சி. சார்பில், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர், வனப்பாதுகாவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் அடங்கிய குரூப் - 4 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது.

    இந்த அறிவிப்பின் மூலம் 6 ஆயிரத்து 244 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது. இத்தேர்வை சுமார் 18 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதியுள்ளனர். இத்தேர்வுக்கான முடிவு அக்டோபர் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    குரூப் 4 தேர்வு காலிப் பணியிடங்களை அதிகரிப்பதற்கான கணக்கெடுப்பு நடைபெற்று வருவதாகவும், அக்டோபர் மாதத்தின் முதல் அல்லது 2வது வாரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

    காலிப் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரி வந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    20 லட்சம் பேர் எழுதியுள்ள இத்தேர்வுக்கான காலிப் பணியிடங்கள் தற்போது 6,724ஆக உள்ளது. முன்னதாக, இத்தேர்வுக்கு கூடுதல் பணியிடம் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் வெப்ப அலையால் அவதிப்படும் வேர்ஹவுஸ் தொழிலார்களின் பணிச்சூழல் இன்னும் மோசமானதாக உள்ளது.
    • இடைவேளை எடுத்துக்கொள்ள மாட்டோம் என்று தினமும் உறுதிமொழி எடுக்க நிர்பந்திக்கப்படுகிறோம் என்று தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    பன்னாட்டு ரீடெயில் வர்த்தக நிறுவனமான அமேசான் இந்தியா நெடுகிலும் வலுவான கட்டமைப்பை ஏற்படுத்தி வைத்துள்ளது. ஆன்லைன் ஆர்டர் டெலிவரியில் இந்தியாவில் தொடங்கப்பட்ட பிளிப்கார்ட் நிறுவனத்துக்கும் அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்ட அமேசான் நிறுவனத்துக்கும் இடையில் கடுமயான போட்டி நிலவி வருகிறது.

    இன்றைய டிஜிட்டல் உலகத்தில் பொருட்களுக்கான தேவை மனிதர்களிடம் அதிகரித்துள்ளதால் இந்த வகை நிறுவனங்களின் தேவையும் மக்களிடம் திணிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் கட்டமைப்பு ஒருபுறம் வலுவடைந்திருந்தாலும் மறுபுறம் நாடு முழுவதிலும் சிதறிக் கிடக்கும் அதன் தொழிலாளர்களுக்கு முறையான உரிமைகள் கிடைக்கிறதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. பணிச்சுமை என்பதையும் தாண்டி பணியாளர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படும் அவல நிலையே தற்போது நிலவி வருகிறது.

     

    படித்த படிப்புக்கு உரிய வேலை கிடைக்காததால் பட்டதாரிகளே அதிகம் டெலிவரி வேலைகளிலும் வேர்ஹவுஸ் குடோன் வேலைகளிலும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நிறுவனத்தின் லாபத்தை அதிகரிக்க தொழிலாளர்களுக்கு வரம்பு மீறிய அழுத்தம் அளிக்கப்படுவதற்காக அமேசான் நிறுவனதின் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் வெப்ப அலையால் அவதிப்படும் வேர்ஹவுஸ் தொழிலார்களின் பணிச்சூழல் இன்னும் மோசமானதாக உள்ளது. ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்ட டார்கெட்டை எட்டாமல் யாரும் கழிவறைக்கு செல்ல மாட்டோம், தண்ணீர் குடிக்க செல்ல மாட்டோம், இடைவேளை எடுத்துக்கொள்ள மாட்டோம் என்று தினமும் உறுதிமொழி எடுக்க நிர்பந்திக்கப்படுகிறோம் என்று தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    குடோனில் சுமார் 50 டிகிரி வரை அதிகரிக்கும் வெப்ப நிலையில் பெரிய பெரிய லாரிகளில் வந்திறங்கும் பொருட்களை இறக்கி வைப்பது உள்ளிட்டவை இந்த இரக்கமற்ற டார்கெட்டில் அடங்கும். ரூ.10,088 சமபலத்துக்கு தினமும் 10 மணிநேரம் இவர்களை வேலை வாங்குகின்றனர் என்று கூறப்படுகிறது.

     

    இதில் பெண் தொழிலாளர்களின் பாடு அதிக திண்டாட்டமாக உள்ளது. உரிய கழிவறை வசதிகள் இல்லாதது, அதிக உடல் உழைப்பு வேளைகளில் ஈடுபடுத்தப்படுவது உள்ளிட்டவை அவர்களுக்கு கொடுங்கனவாக மாறியுள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள அமேசான் தளங்களிலும் இதே நிலையே உள்ளது என்று கூறப்படுகிறது. கடந்த வாரம் மிகவும் பளு வாய்ந்த பெட்டிகளை தூக்க சொல்கிறார்கள் என வேலையின்போது வீடியோ வெளியிட அமெரிக்க ஊழியர் பணி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • பதவி உயர்வு மூலம் 44 அரசு பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்கள் நியமிக்க அரசு உத்தரவிட்டது.
    • 44 மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு மாதிரி பள்ளி உட்பட 71 அரசு மேல்நிலை பள்ளிகள் உள்ளன. இங்கு 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பிளஸ்-1 வகுப்பிலும், 14ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பிளஸ்-2 வகுப்பிலும் படித்து வருகின்றனர்.

    கடந்த 2021-2022 கல்வியாண்டில் பிளஸ்-2 தேர்வு முடிவில் 97.20 சதவீதம் பெற்று ராமநாதபுரம் மாவட்டம் மாநில அளவில் 3-வது இடம் பெற்றது. கடந்தாண்டு கல்வியாண்டில் 95.30 சதவீதம் பெற்று மாநில அளவில் 12-ம் இடத்திற்கு பின்னோக்கி சென்றது. தேர்வு விகிதம் குறைந்த தற்கான காரணங்கள் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களிடம், அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    அப்போது சில மாணவர்கள் முறையாக பள்ளிக்கு வராமல் கடைசி நேரத்தில் தேர்விற்கு வந்ததாலும், இது போன்று தலைமையாசிரியர்கள், காலிபணியிடம் உள்ள பள்ளிகளில் தேர்வு விகிதம் குறைந்துள்ளது தெரியவந்தது. இதனை யடுத்து உடனடியாக தலைமையாசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 71 அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் 44 மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தன.

    இதில் தற்போது நடந்த பதவி உயர்வு கலந்தாய்வில் 44 அரசு மேல்நிலைப்பள்ளி களுக்கும் தலைமையாசி ரியர் பணிடங்கள் நிரப்பப் பட்டன. மேலும் மாவட்டத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்ளை பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தற்காலிக ஆசிரியர் நியமிக்க அரசு உத்தர விட்டது. அதன்படி மாவட்டத்தில் 90 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர் என கல்வி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • பள்ளி கல்வித்துறையில் மீண்டும் இயக்குநர் பணியிடம் ஏற்படுத்திய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
    • ஆண்டு முழுவதும் குறைகளும் குழப்பங்களும் உண்டானது.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்டத்தலைவரும், ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான முருகேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ள தாவது:-

    கடந்த ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையில் காலம் காலமாக இருந்து வந்த இயக்குநர் பணியிடத்தை ரத்து செய்துவிட்டு ஆணையர் பணியிடத்தை ஏற்படுத்தி னார்கள். இதற்கு அப்போதே ஆசிரியர் சங்கங்களும், கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இயக்குநர்பணியிடம் இருந்த வரை பள்ளிக் கல்வித்துறையில் அனைத்து செயல்பாடுகளும் சீராக சென்றது, எந்த வித குழப்பமோ, குறைபாடுகளோ ஏற்பட்டதில்லை. ஆனால், ஆணையர் பணியிடம் ஏற்படுத்தப்பட்ட பிறகு பள்ளிக்கல்வித்துறையில் ஆண்டு முழுவதும் குறைகளும் குழப்பங்களும் உண்டானது.

    இதனை கருத்தில் கொண்டே ஆணையர் பணியிடத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் இயக்குநர் பணியிடத்தை ஏற்படுத்த வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பாகவும் முதல்-அமைச்சர், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ஆகி யோரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்து முறையிடப்பட்டது.

    இந்த கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு மீண்டும் இயக்குநர் பணியிடத்தை ஏற்படுத்தி ஆணை பிறப்பித்துள்ளது. இதனால் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மகிழ்ச்சி யடைந்துள்ளனர்.

    மாநிலத்தலைவர் தியாக ராஜன் அவர்களின் கோரிக்கையை ஏற்று இயக்குநர் பணியிடத்தை மீண்டும் ஏற்படுத்தி உத்தரவு பிறப்பித்த தமிழக முதல்-அமைச்சருக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பாகவும், ஜாக்டோ-ஜியோ சார்பாக வும் நன்றியை தெரிவித்துத் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கல்வியில் பின்தங்கிய மாணவர்கள் கலைப்பாட பிரிவில் சேர ஆர்வம் காட்டுகின்றனர்.
    • மாணவர் சேர்க்கை அதிகரிக்கவும், தேர்ச்சி சதவீதம் உயர்த்தவும், நிரந்தர ஆசிரியர்களை நியமிப்பதே தீர்வாக அமையும் என்றனர்.

    மடத்துக்குளம்:

    கலைப்பாடப்பிரிவு இல்லாத பழைய பள்ளிகளுக்கும் நிரந்தர பணியிடம் உருவாக்கித்தர வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.தரம் உயர்த்தப்படும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு அறிவியல் பாடப்பிரிவு துவங்க மட்டுமே பணியிடம் உருவாக்கி ஆசிரியர்கள் நியமிப்பது வழக்கம்.சேர்க்கை அதிகரிக்க அந்தந்த பள்ளி பெற்றோர் ஆசிரியர் குழுவின் (பி.டி.ஏ.,) ஒப்புதலோடு தலைமையாசிரியர்கள் முயற்சியால், கலைப்பா டப்பிரிவு உருவாக்கப்படும். இதற்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமித்து தன்னார்வலர்கள் மூலம் ஊதியம் வழங்கப்படும்.மாதந்தோறும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டதால் கடந்த காலங்களில் சில பள்ளிகளில், தற்காலிகமாக உருவாக்கப்பட்ட கலைப்பாடப்பிரிவுகள் மூடப்பட்டன.

    இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் சமீபத்தில் தரம் உயர்த்தப்படும் பள்ளிகளுக்கு அறிவியல், கலைப்பாடப்பிரிவுகளுக்கு பிரத்யேகமாக 9 நிரந்தர பணியிடங்கள் உருவாக்கித் தரப்படுகிறது.ஆனால் பல ஆண்டுகளாக செயல்படும் பள்ளிகளில், கலைப்பாடப்பிரிவில் நிரந்தர பணியிடம் உருவாக்கித் தருவதில் இழுபறி நீடிக்கிறது.

    சேர்க்கை அதிகமுள்ள இப்பாடப்பிரிவுகளுக்கு, நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்க பரிந்துரைத்தாலும், கல்வித்துறை மவுனம் சாதிப்பதாக பலரும் புலம்புகின்றனர்.அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் கூறுகையில், பி.டி.ஏ., மூலம் உருவாக்கப்பட்ட கலைப்பாடப்பிரிவுகள், அதில் சேர்ந்துள்ள மாணவர்களின் விபரங்கள் திரட்டி நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

    கல்வியில் பின்தங்கிய மாணவர்கள் கலைப்பாட பிரிவில் சேர ஆர்வம் காட்டுகின்றனர். பழைய பள்ளிகளில் கலைப்பாடப்பிரிவு உருவாக்கி தரப்படவில்லை. மாணவர் சேர்க்கை அதிகரிக்கவும், தேர்ச்சி சதவீதம் உயர்த்தவும், நிரந்தர ஆசிரியர்களை நியமிப்பதே தீர்வாக அமையும் என்றனர்.அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. மாணவ, மாணவிகளுக்கு தேவையான நோட்டு புத்தகம் உள்ளிட்ட கல்வி சம்மந்தப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்வதுடன், பள்ளிகளில் அவர்களுக்கு கழிப்பிட வசதி, குடிநீர், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டிய அவசியத்தையும் உணர்ந்துள்ளது.

    ஆனால் இப்பணிகளை மேற்கொள்ள அரசின் சார்பில் நிதி ஒதுக்கீடு போதிய அளவில் இல்லை என்ற சூழலில் தன்னார்வல அமைப்பினர், நலன் விரும்பிகளிடம் இருந்து நன்கொடை பெறப்பட்டு பள்ளியின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படுகிறது. இதைத்தான் அரசும் ஊக்கு விக்கிறது.

    இருப்பினும் பெரும்பாலான பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு முழுமையடையவில்லை. சமீபத்தில் அவிநாசி மற்றும் சேவூர் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளிடம் இருந்து மாற்றுச்சான்றிதழ் வாங்க கட்டாயப்படுத்தி பணம் வசூலிக்கப்படுகிறது என்று எழுந்த புகாரையடுத்து இவ்விவகாரத்தில் நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த விவகாரத்தில் மாவட்ட கல்வி அலுவலர் கவனம் செலுத்த வேண்டும். அரசுப்பள்ளிகளில் மாணவ, மாணவிகள் இன்முகத்துடன் வந்து கல்வி பயின்று செல்வதற்குரிய கட்டமைப்பு வசதிகள் உள்ளதா, தங்கள் பிள்ளைகளை மாணவ, மாணவிகள் திருப்தியுடன் அனுப்பி வைக்கின்றனரா என்பதை கள ஆய்வு செய்து உண்மை நிலையை கண்டறிய வேண்டும் என்பதே பெரும்பாலான பெற்றோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • கல்வித்துறையில் மீண்டும் இயக்குநர் பணியிடத்தை ஏற்படுத்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • தினம் தினம் பல குழப்பங்கள் அரங்கேறி வருகிறது.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்ட தலைவரும், ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான முருகேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கல்வித்துறையில் காலம் காலமாக இருந்து வந்த பள்ளிக்கல்வி இயக்குநர் பணியிடத்தை ரத்து செய்துவிட்டு ஐ.ஏ.எஸ். தரத்திலுள்ள ஆணையர் பணியிடம் உருவாக்கப்பட்டது. கல்வித்துறையில் பள்ளிக்கல்வி இயக்குநர் பணியிடம் இருந்த போது பள்ளிக்கல்வி இயக்குநராக பணிபுரிபவர் கல்வித்துறையில் பல்வேறு நிலைகளில் பல ஆண்டுகள் பணிபுரிந்து இருப்பார். இதனால் பள்ளிக்கல்வி இயக்குநர்களுக்கு ஆசிரியர்களின் பணி சம்மந்தமான அனைத்தையும் அறிந்து வைத்திருப்பார். அதேபோல் மாணவர்களின் உளவியல் சம்மந்தமான அனைத்தையும் தெரிந்து வைத்திருப்பார்.

    தமிழ்நாடு கல்வித்து றையில் பள்ளிக்கல்வி இயக்குநர் பணியிடம் இருந்தவரை பள்ளி கல்வித்துறை சிறப்பாக இருந்தது. ஆனால் கல்வித்துறையில் இயக்குநர் பணியிடம் ரத்து செய்யப்பட்டு ஆணையர் பணியிடம் உருவாக்கப்பட்டதில் இருந்து கல்வித்துறையில் பல குழப்பங்கள் தினம் தினம் அரங்கேறி வருகிறது. இதனால் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தல் செயல்களில் ஈடுபடுவதில் பல சிரமங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

    தற்போது பள்ளிக்கல்வி ஆணையர் பணியிடமாற்றம் செய்யப்பட்டு அந்த இடத்திற்கு வேறொரு ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமனம் செய்யப்படாமல் இருப்பது அனைத்து ஆசிரியர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே பள்ளிக் கல்வித்துறையில் உள்ள ஆணையர் பணியிடத்தை முற்றிலுமாக ரத்து செய்துவிட்டு மீண்டும் பள்ளிக்கல்வி இயக்குநர் பணியிடத்தை ஏற்படுத்தி அப்பணியிடத்தில் பள்ளிக்கல்வித்துறையில் அனுபவமிக்க இணை இயக்குநர்களை பள்ளிக்கல்வி இயக்குநர்களாக நியமிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கல்வித்தகுதி ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    • இலவச பயிற்சி வகுப்பு நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்குகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகின்றன.

    தற்போது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் போலீஸ் துறையில் காலியாக உள்ள 615 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு ள்ளது.

    இதற்கான கல்வித்தகுதி ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 1-7-2023 அன்று 20 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

    இந்த தேர்விற்கு 1-6-2023 முதல் 30-6-2023 வரை www.tnusrb.in.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்து தேர்வானது ஆகஸ்டு மாதம் நடைபெற உள்ளது.

    தஞ்சை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக சீருடை பணியாளர் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்குகிறது.

    இந்த பயிற்சி வகுப்பில் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை, தேர்விற்கான பாடத்திட்டம், தேர்விற்கு தயார் செய்யும் விதம், பாடக்குறிப்பு உள்ளிட்ட விளக்க வகுப்பு மற்றும் பயிற்சி வகுப்பு தொடர்ந்து நடைபெறும்.

    எனவே தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் தங்களது பெயர் மற்றும் கல்வித் தகுதியினை குறிப்பிட்டு 8110919990 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் தகவல் அனுப்பி தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2019 ம் ஆண்டு முதல் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் பணியிடம் காலியாக உள்ளது
    • தேனி மாவட்ட அதிகாரியே கூடுதல் பொறுப்பாக திருப்பூருக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

    திருப்பூர்:

    தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொழிலாளர் முன்னேற்ற கூட்டமைப்பின் மாநில இணை பொதுச் செயலாளர்ஈ.பி.அ.சரவ ணன் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சராக பொறு ப்பேற்றுள்ள மு.பெ.சாமிநாத னிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்து ள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    தமிழ்மொழி வளர்ச்சி க்காக உருவாக்கப்பட்ட துறையானா 'தமிழ் வளர்ச்சித்துறை பல மாதங்களாக எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2019 ம் ஆண்டு முதல் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் பணியிடம் காலியாக உள்ளது.

    திருப்பூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறைக்கு கடந்த 5 ஆண்டுகளாக துணை இயக்குனர் நியமிக்கப்படவில்லை தேனி மாவட்ட அதிகாரியே கூடுதல் பொறுப்பாக திருப்பூருக்கு நியமிக்கப்பட்டுள்ளார். அவர், மாதத்துக்கு இரண்டு மூன்று முறை மட்டுமே திருப்பூர் வந்து செல்கிறார். எனவே திருப்பூர் மாவ ட்டத்தில் காலியாக உள்ள தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் பணியிடத்தை விரைவாக நிரப்ப தீர்வு கண்டு தமிழ் மொழி மென்மேலும் வளர்ந்து சிறக்க தாங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
    • அங்கன்வாடி மையங்களுக்கு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை வழங்க வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட, ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் மே மாதம் விடுமுறை வழங்கும் கோரி காத்திருப்புப் போராட்டத்தை துவங்கி நடத்தி வருகின்றனர்.

    மாவட்டத் தலைவர் பேபி தலைமையில் நடைபெற்று வரும் போராட்டத்தில் சிஐடியு மாவட்ட தலைவர் ரவீந்திரன் உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    இதில் அங்கன்வாடி மையங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும், கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அங்கன்வாடி மையங்களுக்கு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை வழங்க வேண்டும், கேஸ் சிலிண்டர் பில்லுக்கான முழு தொகையை வழங்கிட வேண்டும், 10 வருடம் பணிபுரிந்த பணியாளர்களுக்கு எவ்வித நிபந்தனையும் இன்றி உடனடியாக பதவி உயர்வு வழங்கிட வேண்டும், காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்டோர் இரவு என்று பாராமல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதில் செம்பனார்கோயில் ஒன்றிய பொருளாளர் பானு, குத்தாலம் லதா உள்ளிட்ட பொருப்பாளர்கள் ஏராளமானவர்கள் கலந்துக் கொண்டனர்.

    • சார்பதிவாளர் அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
    • பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு சார் பதிவாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டில் 50 சதவீதம் சார்பதிவாளர் அலுவலக பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் தேவைக்கேற்ப பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தியும், தமிழ்நாட்டில் 150 சார்பதிவாளர்களை பணியிட நீக்கம் செய்ததை திரும்பப் பெற வலியுறுத்தியும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்திட கோரியும், பணி பாதுகாப்பினை உறுதிப்படுத்த வலியுறுத்தியும் 10 அம்ச உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தப் பட்டது.

    இதில் மயிலாடுதுறை மாவட்டம் முழுதும் இருந்து சார் பதிவாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    ஆர்ப்பா ட்டத்திற்கு மாவட்ட தலைவர் பசுபதி தலைமை தாங்கினார்.

    இளையபெருமாள் வெங்கடேஷ் பால சரவணன் முத்துக்குமார் மற்றும் அரசு அலுவலக சங்கத்தினர் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    • விவசாயிகளின் நலன் கருதி அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகர்கோவில்:

    முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாகர்கோவில் கோட்டம் கூட்டுறவுத்துறை துணைப் பதிவாளர் அலுவலகத்தின்கீழ் 34 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. நாகர்கோவில் சரக கள மேலாளர் ஜனவரி 31-ந்தேதி ஓய்வு பெற்றார். இந்நிலையில் 34 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயி கள் குழுக்கடன்கள், தனி நபர் கடன்களுக்காக விண்ணப்பங்களைப் பெற்று அதனை பூர்த்தி செய்து கொடுத்தனர்.

    தற்போது தீர்மானத்திற்கு வைக்கப்பட்ட நிலை யில் கடனுதவிகளை வழங்கு வதற்கு அங்கீகரிக்கும் மேலாளர் பணியிடம் நிரப்பப்படாததால் விவசாயிகளுக்கு சுமார் ரூ.5 கோடி வரையிலான பல்வேறு கடன் உதவிகளை வழங்கக்கூடிய இப்பணம் தேக்கத்திலும், விவசாயிகள் பயன் பெற முடியாத நிலை யிலும் உள்ளது.

    இதனால் தனிநபர் கடன், குழுக்கடன் வேண்டி விண்ணப்பித்த விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர். எந்த நோக்கத்திற்காக, விவசாயிகள் விண்ணப் பித்தார்களோ அந்த விவசாய கடனுதவிகளை பெற முடியாமல் தவித்து வருகிறார்கள்.

    விவசாயிகளின் நலன் கருதி, அரசு உரிய நடவடிக்கை எடுத்து கள மேலாளர் பணி இடத்தை காலம் தாழ்த்தாமல் உடனடி யாக நிரப்பவேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    • அகில இந்திய பி.எஸ்.என்.எல். உழைக்கும் பெண்கள் மாநாட்டில் தீர்மானம்
    • லூதியானா பாலியல் துன்புறுத்தல் பிரச்சினையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

    கன்னியாகுமரி:

    அகில இந்திய பி.எஸ்.என்.எல். உழைக்கும் பெண்கள் 2-வது தேசிய மாநாடு கன்னியாகுமரியில் நடைபெற்றது. மாநாட்டில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 200-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். சி.ஐ.டி.யு தேசிய செயலாளர் ஏ.ஆர். சிந்து தலைமை வகித்து மாநாட்டை தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் அபிமன்யு, ஒருங்கிணைப்பாளர் இந்திரா, உதவிப் பொதுச் செயலாளர்செல்லப்பா, டெல்லி பி.எஸ்.என்.எல். கார்ப்பரேட் அலுவலக அதிகாரிகள் அனிதா ஜோஹ்ரி, ஜெகதீஷ் பிரசாத் உள்படபலர் கலந்து கொண்டு பேசினார்கள்.

    பி.எஸ்.என்.எல் புத்தாக்கம், 4 ஜி, 5 ஜி சேவை வழங்க அனுமதித்தல், ஊதிய உயர்வு, அனைத்து அம்சங்களிலும் பாலின சமத்துவத்தை அமுல் படுத்தும் வகையிலான பாலினக்கொள்கை வகுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தப்பட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைத் தாக்குதல்களை நிறுத்து வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    லூதியானா பாலியல் துன்புறுத்தல் பிரச்சினையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், உள்புகார் குழுக்களை சுதந்திரமாகவும் பயனுள்ள வகையிலும் செயல்படுத்துதல், புகார்களின் மீது உட னடி நடவடிக்கை, பணி யிடங்களில் பெண் ஊழி யர்களுக்கு அடிப்படை வசதிகள், பாதுகாப்பு, குழந்தை பராமரிப்பு விடுப்பு, சிறப்பு மருத்துவ விடுப்பு, ஒப்பந்த பெண் தொழிலாளர்களுக்கு வேலை பாதுகாப்பு, குறைந்த பட்ச ஊதியம், சமூக பாதுகாப்பு, பணி யிடங்களில் அடிப்படை வசதிகள் ஆகியவற்றை அளிக்க வேண்டும் என்று பி.எஸ்.என்.எல். நிர்வாகத்தை வலி யுத்துவது உள்பட பல் வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மாநாட்டின் இறுதியில் அகில இந்திய அளவில் புதிய நிர்வாகக்குழு தேர்ந்தெடுக்கப்பட்டது.

    மாநாட்டில் முன்னாள் எம்.எல்.ஏ. லீமாரோஸ், பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் பாபு, ராதாகிருஷ்ணன், பழனிச்சாமி, பா.ராஜு, பெர்லின் ஆலிஸ்மேரி, சுயம்புலிங்கம், ஜார்ஜ், ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×