search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெருக்கடி"

    • தையல் தொழிலாளர்கள் பள்ளிக்கு நேரடியாக சென்று மாணவர்களின் அளவை எடுத்து சீருடை தைக்க வேண்டும்.
    • கேன்வாஸ், பட்டன் காஜாவுக்கே ரூ.20 செலவாகும்.

    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பெண்கள் தையல் தொழிலாளர் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு 1680க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடைகளை தைத்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்காக சட்டைக்கு ரூ.22, கால்சட்டைக்கு ரூ.42 கூலி வழங்கப்படுகிறது. பெரும்பாலான சீருடைகள் மாணவர்கள் அணியும் நிலையில் இல்லை என்றும், தரமாக தைக்கப்படவில்லை என்றும் புகார் வந்ததையடுத்து சமூக நலத்துறை அலுவலர் சியாமளா தேவி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தார்.

    அதன்படி தையல் தொழிலாளர்கள் பள்ளிக்கு நேரடியாக சென்று மாணவர்களின் அளவை எடுத்து சீருடை தைக்க வேண்டும். கேன்வாஸ் வைத்து தரமான பட்டன் காஜா வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட உத்தரவுகளை பிறப்பித்தார்.

    ஆனால் கேன்வாஸ், பட்டன் காஜாவுக்கே ரூ.20 செலவாகும். இந்த தொழிலை நம்பி ஏராளமான மாற்றுத் திறனாளிகள், விதவைகள் உள்ள நிலையில் அவர்களுக்கு இது கூடுதல் சுமையாக இருக்கும் என்று தெரிவித்தனர்.

    எனவே இந்த உத்தரவுகளை திரும்ப பெறுமாறு வலியுறுத்தினர். ஆனால் அதற்கு ஷியாமளா தேவி மறுத்ததுடன் சங்கத்தை பூட்டி விட்டார். உங்களுக்கு வேலை கிடைக்காது என்று தெரிவித்தார். இதனால் தையல் தொழிலாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் முருகேஸ்வரி தலைமையில் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

    பெரியகுளம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து தொழிலாளர்களின் கோரிக்கையை மனுவாக எழுதி கொடுத்தால் அது குறித்து அதிகாரிகளிடம் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக ஷியாமளா தேவி உறுதியளித்தார். இதனால் போராட்டம் முடிவுக்கு வந்தது.

    • சின்னச் சின்ன மகிழ்ச்சியை கூட பொறுமையாக அனுபவிக்க முடிவதில்லை.
    • தேநீர் பருகுவது, காலை உணவை சாப்பிடுவது எல்லாமே அவசர கதியில் முடிந்து விடுகிறது.

    இன்றைய காலகட்டத்தில் திருமணத்திற்கு பிறகு பெண்களும் வேலைக்கு சென்றால்தான் செலவுகளை சமாளிக்க முடியும் என்ற நெருக்கடி பல குடும்பங்களில் நிலவுகிறது. அதனால் பெண்களும் வேலைக்கு செல்வதற்கு தங்களை தயார்படுத்திக்கொள்கிறார்கள்.

    குடும்பம், வேலை என இரட்டை குதிரையில் செய்யும் சவாரியால் தங்களின் தனித்துவத்தையும், மகிழ்ச்சியான வாழ்க்கையையும் தொலைத்துக்கொண்டிருக்கும் பெண்கள் பெருகிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களால் சின்னச் சின்ன மகிழ்ச்சியை கூட பொறுமையாக அனுபவிக்க முடிவதில்லை.

    காலையில் எழுந்ததுமே பரபரப்பாக செயல்பட்டால்தான் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு அலுவலக பணிக்கு செல்ல முடியும் என்ற நெருக்கடிக்கு ஆளாகிறார்கள். தேநீர் பருகுவது, காலை உணவை சாப்பிடுவது எல்லாமே அவசர கதியில் முடிந்து விடுகிறது.

    கடிகாரத்தின் சுழற்சிக்கு ஈடு கொடுத்து வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அலுவலகத்திற்கு செல்ல புறப்பட வேண்டிய நேரம் நெருங்க, நெருங்க ஒருவித படபடப்பு உடலையும், உள்ளத்தையும் ஆட்டிப்படைக்க தொடங்கிவிடும். வீட்டு வேலைகளுக்கு மத்தியில் குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப தயார்படுத்த வேண்டியிருக்கும். நிறைய குழந்தைகளை படுக்கையை விட்டு எழுப்புவதே சவாலான வேலையாக அமைந்துவிடும்.

    பெற்றோரின் அவசரம் புரியாமல் குழந்தைகள் அடம்பிடிக்கும். எத்தனை முறை உரக்க கத்தினாலும் கூட படுக்கையில் இருந்து எழுவதற்கு மனம் இல்லாமல் சோம்பல் முறித்துக்கொண்டு சலிப்பாக குரல் கொடுக்கும். 'கையைப் பிடித்துக் கொண்டு அம்மா இன்னைக்கு ஆபீசுக்கு போக வேணாம்மா என்று அழும்' குழந்தைகளும் இருக்கிறார்கள்.

    ஆசிரியர்-பெற்றோர் சந்திப்பு கூட்டம் நடக்கும்போதெல்லாம் பள்ளிக்கூடத்திற்கு செல்ல முடியாத நிலைமை ஏற்படும். 'எப்படியாவது அலுவலகத்திற்கு லீவு போட்டுவிட்டு வாம்மா' என்று குழந்தைகள் கோரிக்கை விடுக்கும். கண்டிப்பா வாரேன் என்ற பொய்யான வாக்குறுதியை அளித்துவிட்டு வேகமாக சமையலறை வேலையை கவனிக்க வேண்டும்.

    கணவர் குளித்துவிட்டு வருவதற்குள் டிபன் தயாராக இருக்க வேண்டும். அவர் சாப்பிட்டு முடிப்பதற்குள் குழந்தை பள்ளிக்கூடம் செல்ல தயாராக இருக்க வேண்டும். இருவரையும் அனுப்பிவிட்டு அவசரமாக சாப்பிட்டு முடித்து, கூந்தலை சீவுவதற்குகூட நேரமில்லாமல் விரலால் கோதிவிட்டு 'கிளிப்'போட்டு வேகவேகமாய் வேலைக்கு கிளம்பும் பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

    வீட்டில் இருந்து ஓடோடி சென்று பஸ்சை பிடித்தாலும் கூட்ட நெரிசலால் கால்கடுக்க நிற்க வேண்டி இருக்கும். அலுவலக நேரத்தில் உட்கார்ந்து செல்வதற்கு ஒரு நாளும் இடம் கிடைப்பதில்லை என்று உள்ளுணர்வு விமர்சிக்கும். கூட்ட நெரிசலை சமாளித்து பஸ்சை விட்டு இறங்கி அலுவலகம் சென்றால் அங்கு வேலைகள் மலைக்க வைப்பதாக இருக்கும்.

    முதன் முதலில் வேலைக்கு செல்லும்போது இருந்த மகிழ்ச்சி, நாட்கள் செல்ல செல்ல மறைந்து விடும். குழந்தைகளை பிரிந்திருக்கும் கவலை இளம் தாய்மார்களை ஆட்கொள்ளும். மனதில் பாறாங்கல்லை வைத்து அழுத்துவது போன்ற உணர்வு ஏற்படும். குழந்தைகளின் மன ஓட்டத்திற்கு ஈடுகொடுத்து செயல்பட வேண்டியிருக்கும். 'உனக்காகத்தான் சம்பாதிக்கிறேன்? என்று சொன்னால் அவர்களுக்கு புரியுமா? இந்தப் பருவத்தில் அம்மாவின் அரவணைப்புதான் குழந்தைக்கு தேவை. வீட்டின் வளர்ப்பு பிராணிகளுக்கு கிடைக்கக்கூடிய அன்பு கூட தங்களுக்கு கிடைப்பதில்லை என்ற மனநிலையில் குழந்தைகள் இருப்பது கூட பல அம்மாக்களுக்கு தெரியாது.

    காலையில் எழுந்தால் அலுவலகத்தில் போய் செய்ய வேண்டிய வேலைகள் மட்டுமே மனதில் ஓடிக் கொண்டிருக்கும். மாலையில் வீடு திரும்பும் போது மனம் முழுவதும் வீட்டு வேலை மீது இருக்கும். குழந்தை ஒழுங்காக பள்ளிக்கு சென்று வீடு திரும்பியதா? வீட்டுப்பாடம் படித்ததா? இரவு என்ன உணவு சமைக்க வேண்டும்? காலையில் பாதியில் போட்டுவிட்டு வந்த வேலைகளை முடிக்க வேண்டும். வீட்டிற்கு போவதற்குள் காய்கறி வாங்கிச் செல்ல வேண்டும். இப்படி பல சிந்தனைகள் மனதில் ஓடிக் கொண்டிருக்கும்.

    வீட்டிற்கு வந்தவுடன் எதை முதலில் செய்வது, எதை அடுத்து செய்வது என்ற குழப்பம் சிலருக்கு ஏற்படும். முடிந்தவரை முக்கியமான வேலைகளை செய்த பின்னர் மற்றதை ஒதுக்கி வைத்துவிட்டு மறு நாளைக்கு வேண்டிய விஷயங்களை செய்து முடித்துவிட்டு தூங்குவதற்குள் மனமும், உடலும் சோர்வடைந்துவிடும். கால்வலி, உடல் வலியைக் கூட உணர முடியாமல் தூங்கிப் போய்விடுவார்கள்.

    மறுநாள் காலையில் எழுந்ததும் பரபரப்பு தொற்றிக்கொள்ளும். இப்படிப்பட்ட மன நிலையில் இருப்பவர்கள் குழந்தைகளை பக்குவமாக கையாள பழகிக்கொண்டாலே நிதானமாக எல்லா வேலைகளையும் முடித்துவிடலாம். தங்களையும் தயார்படுத்திக்கொள்ளலாம்.

    சின்னச்சின்ன வேலைகளை குழந்தைகளையே செய்வதற்கு பழக்கப்படுத்த வேண்டும். அடம்பிடிக்கும் குழந்தைகளிடம் வேலையை முடித்தால் பரிசு பொருள் வாங்கித்தருவதாகவோ, அவர்கள் விரும்பியதை செய்து கொடுப்பதாகவோ வாக்குறுதி கொடுத்து அவர்களாகவே பள்ளிக்கு தயாராகிவிடும் சூழலை உருவாக்க வேண்டும். மாலையில் வேலை முடித்து வீடு திரும்பும்போது குழந்தைகளுக்கு கொடுத்த வாக்குறுதியை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும். அப்படி செய்து வந்தால் தாயார் மீது நம்பிக்கை கொண்டு அடம் பிடிக்காமல் தங்களுடைய வேலைகளை தாங்களே செய்து கொள்வதற்கு குழந்தைகள் பழகிவிடுவார்கள்.

    அடம்பிடிக்கும் குழந்தைகளிடம் வேலையை முடித்தால் பரிசு பொருள் வாங்கித்தருவதாகவோ, அவர்கள் விரும்பியதை செய்து கொடுப்பதாகவோ வாக்குறுதி கொடுத்து அவர்களாகவே பள்ளிக்கு தயாராகிவிடும் சூழலை உருவாக்க வேண்டும். மாலையில் வேலை முடித்து வீடு திரும்பும்போது குழந்தைகளுக்கு கொடுத்த வாக்குறுதியை கண்டிப்பாக நிறைவேற்றி விட வேண்டும்.

    • பேரூராட்சி செயல் அலுவலரிடம் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் வலியுறுத்தல்
    • அரசு போக்குவரத்து கழக பஸ்களை நிறுத்துவதற்காக ரூ. 1 ½ லட்சம் செலவில் பஸ் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது.

    கன்னியாகுமரி :

    கொட்டாரம் பேரூர் தி.மு.க. செயலாளர் வைகுண்ட பெருமாள் தலை மையில் கொட்டாரம் பேரூர் புதிய காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுள்ள செந்தில்குமார், கிழக்கு மாவட்ட பொதுச்செ யலாளர்கள் ராமச்சந்திரன், மாவட்ட துணைத்தலை வர்வின்சென்ட்,

    கொட்டாரம் பேரூராட்சி வார்டுகவுன்சிலர்கள் இந்தி ராமேரி, கிறிஸ்டோபர் சந்திரமோகன், பேரூர் துணைத் தலைவர் பாபு ஆகியோர்கொட்டாரம் பேரூராட்சி செயல்அலு வலர் ராஜநம்பி கிரு ஷ்ணனை நேற்று நேரில்சந்தி த்து ஒரு மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரி-நாகர்கோவில்தேசிய நெடுஞ்சாலையில் கன்னியாகுமரியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது கொட்டாரம்.அகஸ்தீஸ்வரம்வட்டா ரத்தின்தலை நகரமாக இந்தகொட்டாரம்ச ந்திப்பு விளங்கி வருகிறது.

    கொட்டாரம்சந்திப்பு வழியாகதினமும்ஆ யிரக்கணக்கான பஸ், கார், வேன், லாரி டெம்போபோன்ற கனரக வாகனங்களும் மற்றும் இருசக்கர வாகனங்களும் கடந்து செல்கின்றன.

    கன்னியாகுமரி-நாகர்கோவில் தேசியநெ டுஞ்சாலையும் அகஸ்தீ ஸ்வரம் மற்றும் வட்டக்கோட்டைரோடும்சந் திக்கும்இடத்தில்கொட்டா ரம் பஸ் நிலையம்அமைந்து உள்ளது. இதனால் இந்த பஸ் நிலையம் கடும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக திகழ்கிறது. இதனால் அடிக்கடி விபத் துக்கள் நிகழ்கிறது.

    அது மட்டுமின்றி இந்த பஸ் நிலையம் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி ஒருபுறமும்அரசு தொடக்கப்பள்ளி மறுபுறமும் அமைந்துஉள்ள தால் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மாணவ-மாணவிகள் இந்த பஸ் நிலையத்தை கடந்து செல்வதால் ஆபத்துடன் பயணிக்கும் நிலைமை இருந்துவருகிறது.

    இந்த நிலையில் கடந்த 1996-ம் ஆண்டுஇந்த போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக கொட்டாரம் பேரூராட்சி அலுவலகம் அருகே அரசு போக்குவரத்து கழக பஸ் களை நிறுத்துவதற்காக ரூ. 1 ½ லட்சம் செலவில் பஸ் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது.

    ஆனால் இந்த பயணிகள் நிழற்குடை கட்டி 15 ஆண்டுகள் ஆன பிறகும் இதுவரை பயன்பாட்டுக்கு வரவில்லை.இதனால் இந்த பயணிகள்நிழற்குடைபயன் படுத்தப்படாமல்பாழ டைந்து வருகிறது.

    போக்குவரத்து நெருக்கடி மிகுந்த கொட்டாரம் பஸ் நிலையத்தை கொட்டாரம் பேரூராட்சி அலுவலகம் அருகே கட்டப்பட்டு 15 ஆண்டுகளாக பயன்பாடு இல்லாமல் கிடக்கும் பயணிகள் நிழற்குடை அமைந்துள்ள இடத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

      நாகர்கோவில்:

      கோட்டார் போலீஸ் நிலையம் முதல் சவேரியார் கோவில் ஆலயம் செல்லும் சாலையில் பாதாள சாக்கடை பணிகளுக்காக நேற்று முதல் போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது. இதையடுத்து கோட்டார் சாலையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு சாலை மூடப்பட்டு உள்ளது.

      இதேபோல் சவேரியார் ஆலயம் பகுதியிலும் சாலைகள் தடுப்பு வேலிகளால் மூடப்பட்டு உள்ளது. இதனால் பஸ் போக்குவரத்து மாற்றி விடப்பட்டு உள்ளது. வடசேரியில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் அனைத்து பஸ்களும் வேப்பமூடு பொதுப்பணித்துறை சாலை, செட்டிகுளம், சவேரியார் ஆலயம் வழியாக திருப்பி விடப்பட்டு உள்ளது.

      கன்னியாகுமரியில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் பீச் ரோட்டில் இருந்து ஆயுதப்படை மைதானம் சாலை, ராமன்புதூர் வழியாக செட்டி குளத்திற்கு வருகிறது. பஸ் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டுள்ளதால் செட்டிகுளம், பீச் ரோடு பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வாக னங்கள் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றன.

      போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே நின்று வாகனங்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பள்ளி செல்லும் மாணவ மாணவிகளும் கடும் அவ திக்கு ஆளாகி உள்ளனர்.வாகனங்கள் சுற்றி செல்ல வேண்டியதால் பள்ளி வாகனங்கள் அதிகாலையிலேயே மாணவ மாணவிகளை ஏற்றி பள்ளிக்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பாதாள சாக்கடை வேலை நடைபெறும் பகுதியிலும் பள்ளி ஒன்று உள்ளது. இந்த மாணவ மாணவிகளும் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

      நேற்று தொடங்கிய வேலை 5 நாட்களில் முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நேற்று வேலை தொடங்கி சிறிது நேரம் மட்டுமே பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சவேரியார் ஆலய சந்திப்பு பகுதியில் ஜே.சி.பி. எந்திரம் மூலமாக ஒரு குழி மட்டுமே தோண்டப்பட்டுள்ளது. இன்னும் 4 நாட்களில் பணிகள் முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ள நிலையில் வேலை மந்தமான நிலையிலேயே நடந்து வருகிறது.

      பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளின் நலன் கருதி அந்த சாலையில் பாதாள சாக்கடை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இரவு பகலாக அந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

      இந்த விவகாரத்தில் மேயர் மகேஷ் பார்வையிட்டு பணியை துரிதமாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

      • பாதாள சாக்கடை பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில் மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்
      • வாகன ஓட்டிகள் கோட்டார் பகுதியில் உள்ள குறுக்கு சாலைகள் வழியாக சென்றதால் ஆங்காங்கே போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவித்தனர்.

      நாகர்கோவில்:

      நாகர்கோவில் மாநகரப் பகுதியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மற்றும் குடிநீர் திட்ட பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டு பைப் லைன்கள் அமைக்கப் பட்டு வருகிறது.

      தற்பொழுது பாதாள சாக்கடை பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில் மீதமுள்ள பணி களை விரைந்து முடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். தற்பொழுது பிரதான சாலைகளில் பாதாள சாக்கடைக்கான பைப் லைன்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

      கோட்டார் போலீஸ் நிலையம் முதல் சவேரியார் ஆலய சந்திப்பு வரை உள்ள சாலையில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக குழாய்கள் அமைக்கும் பணி இன்று தொடங்கியது. ஜே.சி.பி. இயந்திரங்கள் மூலமாக சாலைகள் தோண்டப்பட்டு குழாய்கள் அமைக்க நடவ டிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது. இதையடுத்து இந்த சாலையில் இன்று காலை முதல் பஸ் போக்குவரத்து மாற்றி விடப்பட்டு இருந்தது.

      கோட்டார் போலீஸ் நிலையம் பகுதியில் சாலை கள் தடுப்பு வேலிகளால் மூடப்பட்டு இருந்தது. இதே போல் சவேரியார் ஆலய பகுதியிலும் சாலைகள் தடுப்பு வேலிகளால் மூடப் பட்டு பணிகள் நடை பெற்றது. இருப்பினும் இரு சக்கர வாகன ஓட்டிகள் அந்த சாலையின் வழியாக நுழைந்து சென்றனர்.வாகன ஓட்டிகள் கோட் டார் பகுதியில் உள்ள குறுக்கு சாலைகள் வழி யாக சென்றதால் ஆங்காங்கே போக்குவரத்து நெருக்க டியில் சிக்கி தவித்தனர்.

      வடசேரி பஸ் நிலை யத்தில் இருந்து கன்னியா குமரிக்கு செல்லும் அனைத்து பஸ்களும் வேப்பமூடு சந்திப்பு, பொதுப்பணித்துறை சாலை, செட்டிகுளம் சந்திப்பு, சவேரியார் ஆலய சந்திப்பு வழியாக கோட்டார் சென்றது.

      இதேபோல் கன்னியா குமரியில் இருந்து வந்த அனைத்து வாகனங்களும் பீச் ரோடு சந்திப்பிலிருந்து ராமன்புதூர் சந்திப்பு வழியாக இயக்கப்பட்டது.மேலும் கலெக்டர் அலு வலக சந்திப்பில் இருந்து கன்னியாகுமரிக்கு செல் லும் வாகனங்கள் அனைத்தும் செட்டிகுளம் சந்திப்பில் இருந்து சவேரி யார் ஆலய சந்திப்பு வழி யாக இயக்கப்பட்டது.

      பஸ் போக்குவரத்து மாற்றி விடப்பட்டதையடுத்து செட்டிகுளம், வேப்பமூடு பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

      • பள்ளி நேரங்களில் பிரதான சாலைகள் மிகவும் போக்குவரத்து நெருக்கடியகாவும், நெரிசலாகவும் காணப்படுகிறது.
      • கனரக வாகனங்கள் சாலையோரம் நிறுத்தி வைப்பதால் பெரும் இடர்பாடும், விபத்துகளும் நேரிடுகிறது.

      சீர்காழி:

      சீர்காழி நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

      அந்த மனுவில் கூறியுள்ளதாவது, சீர்காழி நகரில் பிரதான பகுதிகளான மணிகூண்டு, அரசுமருத்துவமனைசாலை, தென்பாதி பகுதிகளில் தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் அதிகளவு இயங்கி வருகிறது. மேலும் நகரில் அரசு உதவிபெறும் பள்ளிகள், நகராட்சி பள்ளிகளும் உள்ளன. இந்த பள்ளிகளில் சீர்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதி கிராமங்களை சேர்ந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

      காலை மற்றும் மாலை பள்ளி நேரங்களில் பிரதான சாலைகள் மிகவும் போக்குவரத்து நெருக்கடியகாவும், நெரிசலாகவும் இருப்பதால் உரிய நேரத்தில் பள்ளிக்கு சென்றுவருவது சிரமமாக உள்ளது. பள்ளி நேரங்களிலும் கனரக வாகனங்களும் நகரில் ஆங்காங்கே சென்று வருவதும், சாலையோரம் நிறுத்தி வைப்பதாலும் பெரும் இடர்பாடும், விபத்துக்களும் நேரிடுகிறது. ஆகையால் பள்ளி நேரங்களில் காலை 8 மணி முதல் 9.30 மணிவரையிலும், மாலை 4 மணி முதல் 5.30 மணி வரையிலும் கட்டிட பயன்பாடு மற்றும் இதர வணிக பயன்பாட்டிற்காக வரும் கனர ரக வாகனங்கள் நகர எல்லைக்குள் வருவதை தடை செய்யவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

      • தினமும், 1,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள், கார்கள், இருசக்கர வாகனங்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றன.
      • பராமரிப்புப் பணிகள் செய்யப்படுவதால் மேம்பாலப் பணிகள், பாதாள சாக்கடைப் பணிகள், ஆகியவற்றால் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர்.

      சேலம்:

      சேலம் மாநகரின் முக்கிய சாலைகளில் ஒன்றாக சேலம்-ஆத்தூர் நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையானது, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், சென்னை, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேலத்துடன் இணைக்கிறது. அது மட்டுமின்றி நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகளும் இந்த வழியாக சென்னை செல்வதற்கு பயன்படுத்தி வருகின்றன.

      தினமும், 1,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள், கார்கள், இருசக்கர வாகனங்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றன. ஆனால்,பராமரிப்புப் பணிகள் செய்யப் படுவதால் மேம்பாலப் பணிகள், பாதாள சாக்கடைப் பணிகள்,ஆகியவற்றால் வாகன ஓட்டிகள் போக்கு வரத்து நெருக்கடி யில் சிக்கி தவிக்கின்றனர்.

      அம்மாப்பேட்டை சாலையில் பலமாதங்களாக பாதாள சாக்கடைப் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, சாலை யின் ஒரு பகுதி பல மாதங்களாக சாலையின் மூடப்பட்டுள்ளது. மற்றொரு பகுதியில் மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்படுவதால், எந்நேரமும் போக்குவரத்து நெருக்கடி நிலவுகிறது.

      மழையின்போது, சாலை முழுவதும் குளம்போல மழை நீர் தேங்கிவாகனப் போக்குவரத்து தடைப்பட்டு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிள்ளது.இதேபோல், சாலையின்குறுக்கே உள்ள ரெயில்வே கேட்டுகள் மூடப்படும் போது வாகனங்கள் நெருக்கடியில் சிக்கிவிடுகின்றன. இதிலிருந்து வாகனங்கள் மீண்டு வருவதற்கு ஒரு மணிநேரம் ஆகி விடுகிறது.

      ரெயில்வேகேட் மூடப்படும் போது, மாற்றுப்பாதையில் செல்லும் வாகனங்கள் ஆங்காங்கே நடைபெற்று வரும் பாதாள சாக்கடைப் பணிகள் காரணமாக, திக்கி திணறி சேலம் மாநகரைச் சுற்றி வந்து புதிய பேருந்து நிலையத்துக்கு வர வேண்டியுள்ளது.

      எனவே, நெடுஞ்சா லைத்துறை, மாநகராட்சி காவல்துறை, ஆகியவற்றை மாவட்டநிர்வாகம் ஒருங்கிணைத்து, உரிய மாற்றுப் பாதையை ஏற்படுத்தி, சீரான போக்குவரத்து வசதியை ஏற்படுத்த வேண்டும்.

      இதேபோல், அம்மாப்பேட்டை-உடையாப்பட்டி சாலை குறுகலாகவும், குண்டும் குழியுமாக இருப்பதால் விபத்து ஏற்படுகிறது. அதையும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்கின்றனர் மக்கள். 

      • கலெக்டர் அலுவலக சாலை பழைய ரவுண்டானா அகற்றும் பணி தீவிரம்
      • ரவுண்டானாவில் உள்ள பொன்விழா ஆண்டு ஸ்தூபியை மாற்றுவதற்கான பணியும் தீவிரம்.

      நாகர்கோவில்:

      நாகர்கோவில் கலெக்டர் அலுவலக சாலையில் கடுமையான போக்கு வரத்து நெருக்கடி ஏட்டதையடுத்து சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

      தற்பொழுது சாலை விரிவாக்க பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து கலெக்டர் அலுவலகம் முதல் டெரிக் ஜங்சன் வரை இருவழி சாலையாக மாற்றப்பட்டு உள்ளது. இதையடுத்து கலெக்டர் அலுவலக ரவுண்டானாவை புதுப்பித்து அந்த பகுதியில் உள்ள கழிவுநீரோடை களை சீரமைக்க ரூ. 1.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

      இதற்கான டெண்டரை நாகர்கோவிலை சேர்ந்த ஆர்.பி.ஆர். நிறுவனத்தினர் எடுத்திருந்தனர். டெண்டர் பிறப்பிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் பணிகள் தொடங்கப்படாமல் இரு ந்தது. அந்த பகுதியில் உள்ள மின் இணைப்புகள் மற்றும் கேபிள் ஒயர்கள் மாற்றப்படாமல் இருந்த தால் பணிகள் தொடங்கு வதில் தாமதம் ஏற்பட்டது.

      இதனைத் தொடர்ந்து கலெக்டர் அரவிந்த் மேற்கொண்ட நடவடி க்கையின் காரணமாக கலெக்டர் அலுவலக சுற்று சுவர் இடித்து உள்புறமாக கட்டப்பட்டது. மேலும் அந்தப் பகுதியில் இருந்த மின் கம்பமும் மாற்றப்பட்டது.

      ஆனால் தொலைபேசி இணைப்புக்கான கேபிள்கள் மாற்றப்படாமல் இருந்தது. இந்த நிலையில் இன்று காலை ரவுண்டானா மற்றும் கழிவுநீர் ஓடை அமைப்ப தற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டது.

      அப்போது அந்த பகுதியில் கிடந்த தொலைபேசி கேபிள் வயர்கள் சேதமடைந்தது. இதனால் கலெக்டர் அலுவலகத்திற்குள் இன்டர்நெட் சேவை பாதிக்க ப்பட்டது. இதையடுத்து தொலைதொடப்பு துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து அதை சரி செய்வதற்கான நடவடிக்கை களை மேற்கொண்டனர்.

      இந்த நிலையில் பழைய ரவுண்டானாவை அகற்று வதற்கான பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகி றது. ரவுண்டானாவின் தடுப்பு சுவர்கள் இடித்து அகற்றப்பட்டு உள்ளது. ரவுண்டானாவில் உள்ள பொன்விழா ஆண்டு ஸ்தூ பியை மாற்றுவதற்கான பணியையும் மேற்கொண்டு உள்ளனர்.

      இன்று இரவு ரவுண்டா னாவில் உள்ள ஸ்தூபியை மாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.கழிவு நீர் ஓடை அமைப்பதற்காக அந்த பகுதியில் ஜல்லிகள் கொட்டப்பட்டுள்ளதால் கலெக்டர் அலுவலக சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

      இதனை சமாளிக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்வாரிய ஊழியர்கள், தொலைத் தொடர்பு ஊழியர்களும் இந்த பணி முடிவடைய முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

      • கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
      • விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்ல நீண்ட வரிசை

      கன்னியாகுமரி :

      இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி. இது ஒரு உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

      இங்கு வருடம் முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் வழக்கத்தைவிட அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். இந்த 3 மாத காலமும் இங்கு சீசன் காலமாக கருதப்படுகிறது. இதேபோல ஏப்ரல் மே கோடை விடுமுறை சீசன் காலங்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு படையெ டுப்பார்கள். இந்த ஆண்டு கோடை விடுமுறை சீசன் கடந்த 2 மாதங்களாக களைகட்டியது.

      இந்த கோடை விடுமுறை சீசன் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி சுற்றுலா தலங்களுக்கு மக்கள் படை எடுத்துச் சென்ற வண்ணமாக உள்ளனர்.அந்த அடிப்படையில் கன்னியாகுமரியில் வாரத்தின் கடைசிவிடுமுறை நாளான இன்று ஆயிரக்க ணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

      கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கி லித்துறை கடற்கரை பகுதி யில் இன்று அதிகா லையில் சூரியன் உதயமாகும் காட்சி யை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர். கன்னியாகுமரி கடலில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமான காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். அதன்பிறகு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர்.

      கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 8 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட கியூவில் காத்திருந்தனர்.

      அவர்கள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர். மேலும் கன்னி யாகுமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுது போக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

      இதனால் விடுமுறை நாளான இன்று சுற்றுலா தலங்கள் களை கட்டியது. இந்த சுற்றுலாதலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. கடற்கரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்புபணியில் ஈடுபட்டு வந்தனர்.

      • டாஸ்மாக் கடையினால் கடும்போக்கு வரத்து நெருக்கடி
      • கடையை மூட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

      கன்னியாகுமரி :

      தமிழக அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடை அழகியமண்டபத்தில் செயல்பட்டு வருகிறது.

      இந்த கடையினால் அந்த பகுதியில் கடும்போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. அடிக்கடி குடிமகன்களால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. பல விபத்துக்கள் அடிக்கடி இந்த பகுதியில் ஏற்படுகிறது. மற்றும் குடிமகன்கள் ரோட்டோரம் நின்று மது அருந்தி விட்டு பாட்டில்கள், கப்புகள் அந்த பகுதியில் போடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படு கிறது.

      இந்த டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பல்வேறு கட்சியினர், அமைப்புகள் போராட்டம் நடத்தின. அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், வார்டு கவுன்சிலர்கள் இந்த கடையை அகற்றக்கோரி காட்டாத்துறை ஊராட்சி மன்ற தலைவரிடம் கோரிக்கை மனு கொடுத்த னர்.

      அவர்களின் கோரிக்கையை ஏற்று ஊராட்சி மன்ற, கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழக அரசுக்கும், மாவட்ட கலெக்டருக்கும் கோரிக்கை மனு கொடுத்தனர். இது வரைக்கும் எந்த முடிவும் எடுக்காத காரணத்தினால் காட்டாத்துறை ஊராட்சி மன்ற தலைவர் இசையாஸ் தலைமையில் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

      ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜெபதாஸ், விலவூர் பேரூராட்சி தலைவர் பில்கான், துணைத் தலைவர் ஞானஜெபின், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் சர்மிளாஏஞ்சல், வார்டு உறுப்பினர்கள் செல்வின் ஜெபகுமார், ஜெசிபாத்திமா எல்சி, ஆன்றோ ஜோஸ் எஸ்.டி.பி.ஐ கட்சியை சேர்ந்த ஜாகிர் உசேன் மற்றும் பொதுமக்களும் பலர் கலந்து கொண்டார்.

      ×