என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சுற்றுச்சுவர்"
- இடிந்து விழும் நிலையில் சுற்றுச்சுவர்
- நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
ேசாழவந்தான்
மதுரை மாவட்டம் சோழ வந்தானில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட கிரா மங்களில் இருந்து பொது மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.
ஆனால் இந்த மருத்துவ மனை முன் நுழை வாயில் பகுதியில் உள்ள மரம் வளர்ச்சியடைந்து விரி வடைந்து சுற்றுச்சுவர் மீது சாய்ந்துள்ளது. இதனால் சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனைக்கு அதிகப்படியான பொது மக்கள் மற்றும் நோயாளிகள் தினசரி வந்து செல்வதால் எந்நேரமும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ள தாக பொது மக்கள் அச்சப்படுகின்றனர்.
மேலும் இந்த சுற்றுச்சவருக்கு அருகிலேயே மருத்துவ மனைக்கு வருபவர்கள் வாகனங்களை நிறுத்து வதால் எந்த நேரத்திலும் சுற்றுச்சுவர் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
மேலும் அவசர சிகிச் சைக்கு வரும் வாகனங்களும் இந்த வழியாக வருவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளா கின்றனர். ஆகையால் பொதுமக்களின நலன் கருதி பழைய சுற்று சுவரை இடித்து விட்டு புதிய சுற்றுச்சுவர் கட்டித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் உடுமலை அருகே எலையமுத்தூர் சாலையில் செயல்பட்டு வருகிறது.
- மத்திய மாநில அரசு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு, மாதாந்திர உதவித் தொகையும் வழங்கப்படுவதால் ஏராளமான மாணவர்கள் ஆர்வத்தோடு சேர்ந்து படித்து வருகின்றனர்.
உடுமலை,அக்.17-
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் உடுமலை அருகே எலையமுத்தூர் சாலையில் செயல்பட்டு வருகிறது. இங்கு மின்சார பணியாளர், பொருத்துநர், கம்மியார், மோட்டார் வாகனம், கம்பியாள், பற்ற வைப்பவர் உள்ளிட்ட பிரிவுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில் நடப்பாண்டில் புதிதாக இன்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் - டிஜிட்டல் மேணுபேக்ச்சரிங் டெக்னீசியன், மேணுபேக்ச்சரிங் பிராசஸ் கண்ட்ரோல் - ஆட்டோமேஷன், அட்வான்ஸ் சி.என்.சி மெஷின் - டெக்னீசியன் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டது.
அதுமட்டுமின்றி அரசு உதவிகளுடன் பயிற்சியின்போது தொழில் நிறுவனங்களில் உதவித்தொகையுடன் பயிற்சி, பயிற்சி முடித்தவுடன் மத்திய மாநில அரசு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு, மாதாந்திர உதவித் தொகையும் வழங்கப்படுவதால் ஏராளமான மாணவர்கள் ஆர்வத்தோடு சேர்ந்து படித்து வருகின்றனர். ஆனால் இந்தத் தொழில் பயிற்சி நிலையத்தை சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் கட்டப்படவில்லை. இதனால் போதை ஆசாமிகள் அத்து மீறலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் குடிபோதையில் பாட்டில்களை உடைத்து தொழில் பயிற்சி நிலைய வளாகத்தில் பரவலாக வீசியும் வருகின்றனர். இதனால் மாணவர்களுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது.பல லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த கட்டிடம் காம்பவுண்ட் சுவர் இல்லாத காரணத்தினால் பாதுகாப்பற்று திறந்த வெளியாக உள்ளது. நுழைவு வாயிலிலை கட்டி அதற்கு கேட் போட்டு பூட்டி வைத்து உள்ளனர்.
எனவே உடுமலை எலையமுத்துர் சாலையில் செயல்பட்டு வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்
- 4 -ம் நூற்றாண்டை சேர்ந்த பிராமி தமிழ் கல்வெட்டும் பழங்கால வெண்கோட்டுரு ஓவியங்களும் உள்ளன.
- இந்த நினைவுச் சின்னத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் எழுப்பி வருகின்றனர்.
விழுப்புரம்:
செஞ்சியை அடுத்த நெகனூர் பட்டி கிராமத்தில் குன்றின் மீதுள்ள அடுக்குப் பாறையில் சமணப்படுக்கையும் 4 -ம் நூற்றாண்டை சேர்ந்த பிராமி தமிழ் கல்வெட்டும் பழங்கால வெண்கோட்டுரு ஓவியங்களும் உள்ளன. இந்த பாறைகளின் அருகே வெடிவைத்து கல் உடைத்ததில் பாறையில் விரிசல் ஏற்பட்டது.இது குறித்து கடந்த 2020 -ம் ஆண்டு விழுப்புரம் எம்.பி.ரவிக்குமார் தமிழ்நாடு தொல்லியல் துறையின் கவனத்திற்கு கொண்டு சென்றார். தொல்லியல் துறை ஆணையர் உதயச்சந்திரன் நெகனூர்பட்டி மற்றும் தொண்டூர் கிராமத்தில் உள்ள கிராமிய கல்வெட்டு களை பாதுகாக்கப்பட்ட வரலாற்று நினைவு சின்னமாக அறிவித்தார். தற்போது இந்த நினைவுச் சின்னத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் சின்னம் உள்ள இடத்திலிருந்து 300மீட்டர் தூரத்துக்கு எந்த கட்டுமானமும் வெடி வைத்தலும் செய்யக்கூடாது. ஆனால் 87 மீட்டர் தூரத்தில் பாறைகளை வெடிவைத்து உடைத்து வருகின்றனர். இதையடுத்து நேற்று தமிழ்நாடு தொல்லியல் துறை சென்னை அலுவ லகத்தை சேர்ந்த உதவி பொறியாளர் ராஜேஷ் இந்த இடத்தை நேரில் வந்து பார்வையிட்டார் பின்னர் அவர் இது குறித்து செஞ்சி தாசில்தாரிடமும், போலீசிலும் அவர் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தாசில்தார் கார்த்திகேயன், வருவாய் ஆய்வாளர் ஜமீனா, கிராம நிர்வாக அலுவலர் தேன்மொழி ஆகியோர் சம்பவ இடத்தை பார்வை யிட்டனர். யாரேனும் வெடி வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- கமுதி அடுத்துள்ள பேரை யூரில் சேதமடைந்த அரசு பள்ளி சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும்.
- சேதமடைந்த சுற்றுச் சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள பேரை யூரில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளி வளாகத்தில் கால்நடைகள் மேய்ச்சலுக்காக சுற்றி திரிந்ததாலும், சமூக விரோதிகள் பயன்படுத்த தொடங்கியதாலும் பாதுகாப்பு கருதி 10 ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுச்சுவர் அமைக்கப் பட்டது.இந்த நிலையில் தற்போது பள்ளியின் சுற்றுச்சுவர் சேதமடைந்து ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. இதையொட்டி பேரையூர் வழியாக செல்லும் குண்டாறு கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் இருந்து பிரிந்து செல்லும் சாலையோர கால்வாய்கள் மூலம் பள்ளி வளாகத் திற்குள் மழை நீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் மழைக்காலங்க ளில் வரத்துக்கால்வாய்க ளில் தேங்கும் மழைநீர் மூலம் விஷ ஜந்துக்கள் பள்ளிக்குள் நுழையும் ஆபத்து உள்ளது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் சுற்றுச்சுவர் இடிந்து உள்ள தால் சமூக விரோதிகள் பள்ளி வளாகத்தை பயன் படுத்த தொடங்கலாம்.
எனவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சேதமடைந்த சுற்றுச் சுவரை சீரமைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- அந்த வழியாக யாரும் செல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை.
- சத்யா விளையாட்டு மைதானத்தில் நடைபயிற்சி மேற்கொள்ளும் பாதையில் விழுந்தது.
தஞ்சாவூர்:
தஞ்சையில் நேற்று மாலை பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இடைவிடாது பெய்த கன மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடின.
தொடர்ந்து பலத்த காற்று வீசிக்கொண்டிருந்ததால் தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரி பின்புறம் உள்ள மகளிர் விடுதியில் இருந்த மரம் ஒன்று முறிந்து சுற்று சுவர் மீது விழுந்து சத்யா விளையாட்டு மைதானத்தில் நடைபயிற்சி மேற்கொள்ளும் பாதையில் விழுந்தன. இதில் விடுதி சுற்று சுவரின் ஒரு பகுதி சேதமடைந்தது .
அப்போது அந்த வழியாக யாரும் செல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை . இதனை தொடர்ந்து விழுந்த மரத்தின் கிளைகள் வெட்டி அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது
- இளையான்குடி மேல்நிலை பள்ளிக்கு விரைவில் சுற்றுச்சுவர் அமைக்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.
- மன்னர் சண்முகராஜா சுமார் 14 1/2 ஏக்கர் நிலத்தை கல்விப் பணிக்காக தானமாக வழங்கினார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பவள விழா நடந்தது. கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ. தமிழரசி முன்னிலை வகித்தார். விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு பேசிய தாவது:-
இளையான்குடி மேல்நிலைப் பள்ளியை பொருத்த வரையில் கடந்த 1947-ல் இளையான்குடி முஸ்லிம் உயர்நிலைப்பள்ளி என்ற பெயருடன் தொடங்கப்பட்டு, கே.எம்.கே அப்துல் கரீம் முதல் தாளாளராக இருந்து பள்ளியை வழிநடத்த தொடங்கினார். அச்சமயம், சிவகங்கை மன்னர் சண்முகராஜா சுமார் 14 1/2 ஏக்கர் நிலத்தை கல்விப் பணிக்காக தானமாக வழங்கினார்.
மேலும் அரசுடன் இணைந்து மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கி, அரசிற்கு உறுதுணையாக இருந்து வரும் கொடை யாளர்களுக்கும் இத்தருணத்தில் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது 75-வது ஆண்டு பவள விழா காணும் இப்பள்ளி, நூற்றாண்டு நோக்கி சிறப்பாக பயணிக்க வேண்டும்.
மேலும் இப்பள்ளியில் கூடுதலாக அடிப்படை வசதிகளை மேம்படுத்து வதற்கான சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கையும் விரைவில் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், இளையான்குடி பேரூராட்சி தலைவர் நஜூமுதீன், இளையான்குடி முஸ்லீம் கல்விச்சங்கத் தலைவர் கஸ்னவி, மேல்நிலைப்பள்ளி தாளாளர் முசாபர் அப்துல் ரகுமான், சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலர் உதயக்குமார், பள்ளி தலைமையாசிரியர் முகமமது இல்யாஸ், மானா மதுரை நகர் மன்றத்தலைவர் மாரியப்பன் கென்னடி, வட்டாட்சியர் கோபிநாத், பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாத், மாவட்ட ஊராட்சி உறுப்பி னர் ஆரோக்கிய சாந்தா மேரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ரூ.12 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டது.
- நாகூரில், ரூ.33.20 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகளை ஷா நவாஸ் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் நகராட்சி வார்டு எண் 4, நாகூர் பட்டினச்சேரியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூபாய் 12 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டது.
அதை, தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கெளதமன், நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, துணைத் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில், முகம்மது ஷா நவாஸ் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.
தொடர்ந்து அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்க ப்பட்டன. அதுபோல், நாகூர் மியான் தெரு நகராட்சி இஸ்லாம் நடுநிலைப் பள்ளியில் ரூ.6.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சுற்றுச்சுவர், வார்டு எண் 02 நாகூர் செய்யது பள்ளி குளத்தில் ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சுற்றுச்சுவர் ஆகிய திட்டப்பணிகள் உள்பட நாகூரில் ரூ.33.20 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகளை ஷா நவாஸ் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் நகர்மன்ற உறுப்பினர்கள் அஞ்சலி தேவி நாகரெத்தினம், பதுரு நிஷா மற்றும் நகராட்சி செயற் பொறியாளர் ஆகியோர் பங்கேற்றனர்.
- கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தொடங்கிய இந்த பணி இன்னும் முடியவில்லை.
- சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
வண்டலூர்:
காட்டாங்கொளத்தூர் அருகே உள்ள கீரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தைச் சுற்றி சுவர் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தொடங்கிய இந்த பணி இன்னும் முடியவில்லை. இதனால் அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகள் விளையாடும்போது அந்த பள்ளங்களில் தவறி விழும் நிலை அடிக்கடி நடந்து வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமி ஒருவர் அந்த பள்ளத்தில் விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. எனவே அங்கன்வாடி சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- ரூ.4 லட்சம் மதிப்பில் மயானத்திற்கு சுற்றுச்சுவர் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
- திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ., கே. என்.விஜயகுமார் தொடங்கி வைத்தார்.
திருப்பூர் :
திருப்பூர் தொரவலூர் ஊராட்சி கந்தாம்பாளையம் கிராமத்தில் திருப்பூர் வடக்குதொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு யிலிருந்து ரூ.4 லட்சம் மதிப்பில் மயானத்திற்கு சுற்றுச்சுவர் அமைப்பதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இதனை திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ., கே. என்.விஜயகுமார் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய தலைவர் சொர்ணம்மாள் பழனிச்சாமி, ஒன்றிய கவுன்சிலர் ஐஸ்வர்ய மகாராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க உயரமான சுற்றுச்சுவர் கட்டப்படுகிறது.
- மின்வாரிய அலுவலர்கள் அளவீடு செய்து கொடுத்தனர்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சுமார் 70 ஆண்டுகள் பழமை யானது. இந்த பள்ளிக்கு தற்போது நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.57 லட்சத்தில் பொதுமக்கள் பங்களிப்புடன் பள்ளியின் சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
பள்ளி சுற்றுச்சுவர் கட்டுவ தற்காக வருவாய்த் துறை அதிகாரிகள் எல்லை அளவீடு செய்யும்போது திருப்பத்தூர்-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மின்சார வாரியத்தால் அமைக்கப்பட்டிருந்த 40 ஆண்டுகள் பழமையான மின்மாற்றி பள்ளியின் எல்லைக்குள் வருவது கண்டறியப்பட்டது.
உடனடியாக அங்கு ஆய்வு செய்த பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, துணைத்தலைவர் இந்தியன் செந்தில், செயல் அதிகாரி தனுஷ்கோடி மற்றும் மின்வாரிய பொறியாளர்கள் அந்த மின்மாற்றியால் பள்ளி மாணவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத வகையில் மின்மாற்றிக்கு தேவையான அளவில் உயரமான சுற்றுச்சுவர் அமைத்து பள்ளியின் காம்பவுண்ட் சுவர் கட்டுவதற்காக அமைப்பை மாற்றி அமைக்க வேண்டி ஆலோசனை வழங்கினார்கள்.
அதனடிப்படையில் மின்வாரிய அலுவலர்கள் அளவீடு செய்து கொடுத்த அளவின்படி டிரான்ஸ் பார்மரை சுற்றி பள்ளி மாணவர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் உயர மாக சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
- 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
- பள்ளியின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
பல்லடம் :
பல்லடம் என்.ஜி.ஆர். ரோட்டில் நகராட்சி நடுநிலைப்பள்ளி (மேற்கு) செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பள்ளியின் மேற்கு புறமாக உள்ள சுற்றுச்சுவர் எந்நேரமும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இது குறித்து பலமுறை அதிகாரிகளுக்கு தெரிவித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வாகன போக்குவரத்து மிகுந்த கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இந்த சுற்றுச் சுவர் பகுதி அமைந்து இருப்பதால் பள்ளியின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சுற்றுச்சுவரை அகற்றிவிட்டு பாதுகாப்பான முறையில் பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மானாமதுரையில் மாரியம்மன் கோவில் சுற்றுச்சுவரை அகற்ற பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
- தினமும் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பர்மா காலனி பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு சந்தன மாரியம்மன் கோவில் அமைக்கப்பட்டது. 18,20,26,27-வது வார்டு களை சேர்ந்த பொதுமக்கள் அதிகளவில் இந்த கோவிலை வழிபட்டு வருகின்றனர்.
ஆடி, பங்குனி முளைப் பாரி உற்சவம் உள்ளிட்ட திருவிழாக்கள் மாரியம்மன் கோவிலில் நடைபெறுவது வழக்கம். இரவு நேரங்களில் கோவில் வளாகத்துக்குள் சமூக விரோதிகள் நுழைந்து அத்துமீறுவதால் இந்த வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் கோவில் வளாகத்தை சுற்றி சுற்றுச்சுவர் எழுப்பினர்.
தினமும் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். இந்த நிலையில் வருவாய்த்துறை நிர்வாகம் இந்த பகுதியில் நில அளவீடு செய்தது. அதைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) சார்பில் கோவில் சுற்றுச்சுவரின் ஒரு பகுதியை அகற்ற நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு இந்த பகுதி பொதுமக்கள், பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுகுறித்து இந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கூறியதாவது:-
பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட சந்தன மாரியம்மன் கோவிலில் தொடர்ந்து திரு விழாக்கள் நடைபெறுகிறது. சுற்றுச்சுவர் அமைக்காமல் இருந்தபோது சமூக விரோதிகள் கோவி லுக்குள் அத்துமீறியதால் கோவில் வளாகத்தில் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு கோவிலின் புனித தன்மை பாது காக்கப்படுகிறது. கோவி லுக்கு பாதுகாப்பாக உள்ள சுற்றுச்சுவரின் ஒரு பகுதியை அகற்றக்கூடாது என வலியுறுத்தி கலெக் மரை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்