search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளையான்குடி மேல்நிலை பள்ளிக்கு விரைவில் சுற்றுச்சுவர்: அமைச்சர் பெரியகருப்பன்
    X

    இளையன்குடி மேல்நிலைப்பள்ளியின் பவள மலரை அமைச்சர் பெரியகருப்பன் வெளியிட்டார். அருகில் தமிழரசி எம்.எல்.ஏ., கலெக்டர் ஆஷா அஜீத் உள்ளனர்.

    இளையான்குடி மேல்நிலை பள்ளிக்கு விரைவில் சுற்றுச்சுவர்: அமைச்சர் பெரியகருப்பன்

    • இளையான்குடி மேல்நிலை பள்ளிக்கு விரைவில் சுற்றுச்சுவர் அமைக்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.
    • மன்னர் சண்முகராஜா சுமார் 14 1/2 ஏக்கர் நிலத்தை கல்விப் பணிக்காக தானமாக வழங்கினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பவள விழா நடந்தது. கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ. தமிழரசி முன்னிலை வகித்தார். விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு பேசிய தாவது:-

    இளையான்குடி மேல்நிலைப் பள்ளியை பொருத்த வரையில் கடந்த 1947-ல் இளையான்குடி முஸ்லிம் உயர்நிலைப்பள்ளி என்ற பெயருடன் தொடங்கப்பட்டு, கே.எம்.கே அப்துல் கரீம் முதல் தாளாளராக இருந்து பள்ளியை வழிநடத்த தொடங்கினார். அச்சமயம், சிவகங்கை மன்னர் சண்முகராஜா சுமார் 14 1/2 ஏக்கர் நிலத்தை கல்விப் பணிக்காக தானமாக வழங்கினார்.

    மேலும் அரசுடன் இணைந்து மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கி, அரசிற்கு உறுதுணையாக இருந்து வரும் கொடை யாளர்களுக்கும் இத்தருணத்தில் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது 75-வது ஆண்டு பவள விழா காணும் இப்பள்ளி, நூற்றாண்டு நோக்கி சிறப்பாக பயணிக்க வேண்டும்.

    மேலும் இப்பள்ளியில் கூடுதலாக அடிப்படை வசதிகளை மேம்படுத்து வதற்கான சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கையும் விரைவில் நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில், இளையான்குடி பேரூராட்சி தலைவர் நஜூமுதீன், இளையான்குடி முஸ்லீம் கல்விச்சங்கத் தலைவர் கஸ்னவி, மேல்நிலைப்பள்ளி தாளாளர் முசாபர் அப்துல் ரகுமான், சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலர் உதயக்குமார், பள்ளி தலைமையாசிரியர் முகமமது இல்யாஸ், மானா மதுரை நகர் மன்றத்தலைவர் மாரியப்பன் கென்னடி, வட்டாட்சியர் கோபிநாத், பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாத், மாவட்ட ஊராட்சி உறுப்பி னர் ஆரோக்கிய சாந்தா மேரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×