search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனுமதியின்றி"

    • அனுமதியின்றி மது விற்ற சுந்தர்ராஜன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
    • 5 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என மலையம்பாளையம் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது கணபதிபாளையம்-மன்னாதம்பாளையம் சாலையில் அனுமதியின்றி மது விற்றுக் கொண்டிருந்த ஈரோடு முத்தையம்பாளையம் பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜன் (வயது 44) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 5 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லாரியை சோதனை செய்ததில் அனுமதிச்சீட்டு இல்லாமல் கருங்கல் எடுத்து சென்றது தெரியவந்தது
    • பிடிபட்ட லாரியை புவியியல் மற்றும் சுரங்க துறையினர், பங்களாப்புதூர் போலீசில் ஒப்படைத்தனர்

    டி.என்.பாளையம்,

    சத்தியமங்கலம்-அத்தாணி சாலையில் டி.என்.பாளையம் தனியார் கல்லூரி அருகே வன ச்சாலை ரோட்டில் புவியியல் மற்றும் சுரங்க துறை சார்பில் உதவி புவியியலாளர் லட்சுமி ராம்பிரசாத் தலைமையில் கனிம திருட்டு குறித்து வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அவ்வழியாக வந்த லாரியை சோதனை செய்ததில் அனுமதிச்சீட்டு இல்லாமல் கருங்கல் எடுத்து சென்றது தெரியவந்தது. லாரியை ஓட்டி வந்த டிரைவர் மனோஜிடம் விசாரணை செய்ததில் டி.என்.பாளையத்தில் உள்ள தனியார் கிரஷரில் 3 யூனிட் சாதாரண கருங்கல் எடுத்து வந்தது தெரிந்தது.

    இதையடுத்து அதிகாரிகள் டிரைவர் மனோஜிடம் மேலும் விசாரணை செய்ய முயன்றபோது அவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதையடுத்து பிடிபட்ட லாரியை புவியியல் மற்றும் சுரங்க துறையினர், பங்களாப்புதூர் போலீசில் ஒப்படைத்தனர்.

    இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • 3 டெம்போக்கள் பறிமுதல்
    • மணல் அள்ளிக் கொண்டிருந்தவர்கள் டெம்போக்கள் மற்றும் ஜே.சி.பி. எந்திரத்தை விட்டு விட்டு தப்பியோடினர்.

    குளச்சல்:

    மணவாளக்குறிச்சி ஐ.ஆர்.இ.எல். மணல் ஆலை நிறுவனத்திற்கு சொந்தமான வெட்டுமடை பகுதியில் அனுமதியின்றி கனிம வளம் மண்கள் திருடி செல்வதாக புகார் எழுந்தது. இந்நிலையில் சம்ப வத்தன்று மணல் ஆலை மேற்பார்வையாளர் சிவசங்கர் (வயது 50) மற்றும் ஊழியர்களுடன் வெட்டு மடை கடற்கரை பகுதியில் தீவிர ரோந்து சென்றார். அப்போது 3 டெம்போக்களில் ஒரு ஜே.சி.பி. எந்திரம் மூலம் மர்ம நபர்கள் மணல் அள்ளிக்கொண்டிருந்தனர்.

    இவர்களை பார்த்ததும் மணல் அள்ளிக் கொண்டிருந்தவர்கள் டெம்போக்கள் மற்றும் ஜே.சி.பி. எந்திரத்தை விட்டு விட்டு தப்பியோடினர். இதுகுறித்து சிவசங்கர் குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 டெம்போக்கள் மற்றும் ஜே.சி.பி. எந்திரத்தை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். மேலும் ஜே.சி.பி. டிரைவர் காரங்காடு பகுதியை சேர்ந்த நிஷாந்த் (வயது 28) என்பவரை கைது செய்தனர்.

    • ஒருவர் கைது; 2 டிரைவர்களுக்கு வலைவீச்சு
    • ஜே.சி.பி. மூலம் டெம்போவில் கனிமவள கற்கள்

    நாகர்கோவில் : குளச்சல் அருகே ரீத்தாபுரம் பேரூராட்சி கரையாகுளம் பகுதியில் ரீத்தாபுரம் கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. இங்கு கிராம நிர்வாக அலுவலராக கலைச்செல்வன் (வயது 31) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.நேற்று மதியம் இந்த கிராம நிர்வாக அலுவலக எல்லைக்குட்பட்ட குளவிளை முண்டன்பிலா விளையில் அனுமதியின்றி கனிமவள கற்கள் டெம்போவில் ஏற்றி செல்லப்படுவதாக கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வனுக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அப்போது அங்கு ஜே.சி.பி. மூலம் டெம்போவில் கனிமவள கற்கள் ஏற்றிக்கொண்டிருந்தனர். அதை கண்டதும் அவர் டெம்போவில் கற்கள் ஏற்றுவதை தடுத்தார். அப்போது அங்கு நின்ற ஆனக்குழியை சேர்ந்த விஜயகுமார் (50) என்பவர் கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வனை பிடித்து தள்ளிவிட்டார். அதே நேரத்தில் டெம்போ டிரைவர் வேகமாக ஓட்டி தப்பி சென்று விட்டார். இந்த சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வன் குளச்சல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் விஜயகுமார் மற்றும் ஜே.சி.பி. டிரைவர், டெம்போ டிரைவர் ஆகியோர் மீது அரசு பணி செய்யவிடாமல் தடுத்தது, மிரட்டல் விடுத்தது உள்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களில் விஜயகுமாரை கைது செய்து, ஜே.சி.பி.யையும் பறிமுதல் செய்தனர். தப்பி சென்ற ஜே.சி.பி. மற்றும் டெம்போ டிரைவர்களை தேடி வருகின்றனர்.

    • வீட்டில் ஒற்றை குழல் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்து இருந்தது தெரிய வந்தது.
    • கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பெரியசாமியை கைது செய்தனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் அடுத்த அத்தியூர் கேர்மாளம் பகுதியை சேர்ந்த பெரியசாமி (49) என்பவர் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கியை பதுக்கி வைத்து பயன்படுத்தி வரு வதாக கடம்பூர் தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் கடம்பூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரவி தலை மையிலான போலீசார் கடம்பூர் அடுத்த அத்தியூர் கேர்மாளம் பகுதிக்கு சென்று பெரியசாமி என்பவரின் வீட்டை சோதனை செய்தனர்.

    இதில் சட்ட விரோதமாக வீட்டில் ஒற்றை குழல் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்து இருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து உடனடி யாக கடம்பூர் போலீசார் நாட்டு துப்பாக்கி மற்றும் தோட்டா வுக்கு பயன்படுத்திய மருந்து ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பெரியசாமியை கைது செய்தனர். அவரை கோபிசெட்டிபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறையில் அடைத்த னர்.

    • ஒருவர் மோட்டார் சைக்கிள் உடன் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தார்.
    • 34 மது பாட்டில்களும் ,மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டன.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பனை நடைபெறுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தர வின் பெயரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணிகளிலும், சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி ஈரோடு தாலுகா போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமை யிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கருக்கம் பாளை யம் வாய்க்கால் கரை பகுதி அருகே ஒருவர் மோட்டார் சைக்கிள் உடன் சந்தேக ப்படும்படி நின்று கொண்டிருந்தார்.

    மோட்டார் சைக்கிளில் சோதனை செய்தபோது சீட்டுக்கு அடியில் 34 மது பாட்டில்கள் அனுமதி இன்றி விற்பனைக்கு வைக்கப்பட்டது தெரிய வந்தது. விசாரணையில் அவர் ஈரோடு 46 புதூர், சின்ன கருக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கணேசன் (59) என தெரிய வந்தது.

    இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து கணேசனை கைது செய்தனர். அவரிடமி ருந்து 34 மது பாட்டில்களும் ,மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதேப்போல் தாளவாடி போலீசார் தாளவாடி அடுத்த மல்லன்குழி பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒருவர் மோட்டார் சைக்கி ளில் வந்து கொண்டிருந்தார். அவரை நிறுத்தி மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கர்நாடக மதுபாட்டில்கள் விற்பனைக்கு வைத்திருப்பது தெரிய வந்தது.

    மொத்தம் 12 பாக்கெட் மதுவை போலீசார் கைப்பற்றினர். விசாரணை யில் அவர் தாளவாடி அடுத்த மாரியபுரம் பகுதியை சேர்ந்த ஜெயகி ரியாஸ் (67) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் மது பாட்டில்கள், மோட்டர் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதேபோல் அம்மா பேட்டை சிறப்பு இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அம்மாபேட்டை அடுத்த மூலுயனூர் ராம்ராஜ் தோட்டம் அருகே ஒருவர் சந்தேகம்படும்படி நின்று கொண்டிருந்தார். அவரை சோதனை செய்ததில் 59 மது பாட்டில்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

    விசாரணையில் அவர் அனுமதி இன்றி மது விற்பனை யில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.இதேப்போல் கடத்தூர் ஈரோடு டவுன் போன்ற பகுதிகளிலும் அனுமதி இன்றி மது விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    ஒரே நாளில் அனுமதி இன்றி மது விற்பனையில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 124 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    • புளியம்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
    • கவியரசன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

    அப்போது புளியம்பட்டி-மேட்டுப்பாளையம் ரோடு ஜே.ஜே.நகர் அருகே மாதம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் சோதனை செய்த போது கடையில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் புகையிலை 18 பாக்கெட்டுகள் மற்றும் விமல் பான் மசாலா 9 பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.

    இது குறித்து விசாரித்த போது அதே பகுதியை சேர்ந்த கவியரசன்(21) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    • பவானி போலீசார் இரவு ரோந்து பணி மேற்கொண்டனர்.
    • டிப்பர் லாரியில் கிராவல் மண் அனுமதியின்றி விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தது.

    பவானி:

    பவானி மேட்டூர் மெயின் ரோட்டில் பவானி சப்-இன்ஸ்பெ க்டர் ரகுநாதன் மற்றும் போலீசார் இரவு ரோந்து பணி மேற்கொ ண்டனர். அப்போது ஈரோடு மெயின் ரோடு செல்லியாண்டியம்மன் கோவில் ஆர்ச் பகுதியில் வாகனங்களை நிறுத்தி சோதனை மேற்கொண்ட னர்.

    அப்போது அவ்வழியே வந்த டிப்பர் லாரி ஒன்றை நிறுத்தி சோதனை மேற்கொ ண்டனர். டிப்பர் லாரியில் 3 யூனிட் கிராவல் மண் அனுமதியின்றி விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து போலீசார் லாரி டிரைவர் தளவாய்பேட்டை பகுதியை சேர்ந்த மோகன்ராஜை (40) கைது செய்தனர்.

    மேலும் இச்சம்பவத்தில் தலைமறைவாக உள்ள அந்தியூரை சேர்ந்த லாரி உரிமையாளர் ரமேஷ் மற்றும் இடத்தின் உரிமை யாளர் பெரியசாமி ஆகிய 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.  

    • சந்தேகப்படும்படி ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
    • சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வனை கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் முழுவதும் அனுமதியின்றி மது விற்பனை நடைபெறுகிறதா? என போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இந்நிலையில் சத்தியமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது சத்தியமங்கலம் அடுத்த புதூர் என்ற இடத்தில் சந்தேகப்படும்படி ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரித்ததில் அவர் அதே பகுதியை சேர்ந்த செல்வன் (43) என்பதும்,

    அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து 23 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வனை கைது செய்தனர்.

    • அனுமதியின்றி மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருப்பதும் தெரிய வந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து நாகராஜனை கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பனை நடைபெறுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் சிறுவலூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குருசாமி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர்.

    கெட்டிசெவியூர், சாந்தகடை பகுதி அருகே ஒருவர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தார்.

    அவரை பிடித்து விசாரித்த போது அவர் நம்பியூர் சூரியம்பாளையம் பகுதியை சேர்ந்த நாகராஜன் (34) என்பதும் அனுமதியின்றி அரசு மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்பனைக்கு வைத்திருப்பதும் தெரிய வந்தது.

    இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நாகராஜனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 14 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் கருங்கல்பாளையம், கொடுமுடி, கடம்பூர் பகுதிகளிலும் அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • அனுமதியின்றி பறக்கும் பாலத்தில் வாகன பேரணி நடத்திய பா.ஜ.க.வினர் 100 வாகனங்கள் மீது போலீசார் அபராதம் விதித்தனர்.
    • அனுமதியின்றி பறக்கும் பாலத்தில் வாகன பேரணி நடத்திய பா.ஜ.க.வினர் 100 வாகனங்கள் மீது போலீசார் அபராதம் விதித்தனர்.

    மதுரை

    மதுரை-நத்தம் சாைலயில் 7 கி.மீ. தூரத்துக்கு பறக்கும்பாலம் கட்டப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார். அதன் பிறகு பா.ஜ.க. நிர்வாகிகள் பறக்கும் பாலத்தில் வாகன பேரணி நடத்த முடிவு செய்தனர்.

    இதற்காக பா.ஜ.க. சார்பில் போலீசாரிடம் மனு கொடுக்கப்பட்டது. இந்த பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்து விட்டனர். இதையும் மீறி பா.ஜ.க. நிர்வாகிகள் வாகன பேரணியாக சென்றனர். இதையடுத்து மதுரை மாநகர போக்குவரத்து போலீசார், விதிமீறலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு தலா ரூ.1,500 வீதம் அபராதம் விதித்தனர்.

    • பிச்சப்பாளி மேடு பகுதிக்கு அதிகாரிகள் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
    • அங்கு பாறைகளை வெடி வைத்து தகர்க்கப்பட்டது தெரியவந்தது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பிச்சப்பாளி மேடு என்ற இடத்தில் அனுமதியின்றி பாறைகளை வெடிவைத்து தகர்ப்பதாக அந்தியூர் கிராம நிர்வாக அலுவலர் பிரகாசுக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் பிச்சப்பாளி மேடு பகுதிக்கு அதிகாரிகள் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது அங்கு சிலர் பாறைகளை வெடி வைத்து தகர்க்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து இது சம்பந்தமாக அந்தியூர் கிராம நிர்வாக அலுவலர் பிரகாஷ் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, பெருமா பாளையத்தைச் சேர்ந்த சின்னப்பன், தவிட்டுப்பாளையத்தை சேர்ந்த நடராஜ் ஆகிய 3 பேர் அனுமதியின்றி பாறைகளை வெடி வைத்து தகர்த்தியது தெரிய வந்தது.

    இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 3 பேரை கைது செய்தனர் தொடர்ந்து 3 பேரையும் பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×