என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இடமாற்றம்"
- வாரச்சந்தை கூடும் இடத்தை மாற்ற வர்த்தக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
- தேவிபட்டினம் ரோடு, மகர் நோன்பு பொட்டல் போன்ற இடங்களில் வாரச்சந்தை அமைக்கலாம்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட தொழில் வர்த்தக சங்க தலைவர் அஸ்மாபாக் அன்வர்தீன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரத்தில் புதிய பஸ் நிலையத்தை விரி வாக்கம் செய்து புனர மைக்கும் நிலையில் வாரச் சந்தை கூடும் இடத்தை தற்காலிகமாக பட்டினம் காத்தான் பகுதிக்கு நகராட்சி மாற்றியுள்ளது.
ராமநாதபுரம் நகரில் செயல்பட வேண்டிய வாரச் சந்தை தற்போது நகர் எல்லையை தாண்டி இருப்பதால் பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும், வணிகர்களுக்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாக மும், நகராட்சியும் பொது மக்களிடம் கருத்து கேட்டு மாற்று இடத்தை தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவிபட்டினம் ரோடு, மகர் நோன்பு பொட்டல் போன்ற இடங்க ளில் வாரச்சந்தை அமைக்க லாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காத்திருப்பு பட்டியலில் இருந்த மகாலட்சுமி குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.
- மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு உத்தரவில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகரில் பணியாற்றும் 4 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை பணியிடம் மாற்றம் செய்து மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த ஆனந்த் சிறப்பு நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டராகவும், சிறப்பு நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்த செந்தில் பிரபு நல்லூர் போலீஸ் நிலையத்தின் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராகவும், காத்திருப்பு பட்டியலில் இருந்த விநாயகம் வீரபாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், அதேபோல் காத்திருப்பு பட்டியலில் இருந்த மகாலட்சுமி குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
- பெரம்பலூர் மாவட்டம் ஸ்ரீதேவிமங்களம்-தெரணிபாளையம் மின் பிரிவு அலுவலகங்களுக்கு உட்பட்ட மின் இணைப்புகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது
- பெரம்பலூர் செயற்பொறியாளர் அறிவிப்பு
பெரம்பலூர்,
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் மின் பகிர்மான வட்டம், பெரம்பலூர் கோட்டம், சிறுவாச்சூர் உபகோட்டம் பாடாலூர் பிரிவுக்குட்பட்ட ஸ்ரீதேவிமங்களம் மின் பகிர்மானத்தில் உள்ள மின் இணைப்புகளை திருச்சி பெருநகரம் மின்பகிர்மான வட்டம், ஸ்ரீரங்கம் கோட்டம், சமயபுரம் உப கோட்டம், சிறுகனூர் பிரிவிற்கும், இதேபோல் தெரணிபாளையம் மின் பகிர்மானத்தில் உள்ள மின் இணைப்புகளை லால்குடி கோட்டம், கல்லக்குடி உபகோட்டம் புள்ளம்பாடி பிரிவிற்கும் மின்வட்ட சீரமைப்பு காரணமாக வருவாய் கிராமம் உள்ள மாவட்டத்தில் இணைக்க வேண்டியுள்ளது. எனவே திருச்சி மாவட்டத்தில் உள்ள திருச்சி பெருநகரம் மின்பகிர்மான வட்டம், ஸ்ரீரங்கம் கோட்டம், சமயபுரம் உபகோட்டம், சிறுகனூர் பிரிவிற்கு ஸ்ரீதேவிமங்களம் மின்பகிர்மானத்தில் உள்ள மின் இணைப்புகளையும், தெரணிபாளையம் மின் பகிர்மானத்தில் உள்ள மின் இணைப்புகளை புள்ளம்பாடி பிரிவிற்கும் நேற்று முன்தினம் முதல் மாற்றம் செயப்பட்டுள்ளது. எனவே மின்சாரம் சம்பந்தமான அனைத்திற்கும் ஸ்ரீதேவிமங்களம் மின் பகிர்மானத்தில் உள்ள மின் பயனாளிகள் சிறுகனூர் பிரிவு அலுவலகத்தையும், தெரணிபாளையம் மின் பகிர்மான மின் பயனாளிகள் புள்ளம்பாடி பிரிவு அலுவலகத்தை அணுக வேண்டும், என்று பெரம்பலூர் செயற்பொறியாளர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.
- காந்திநகர் தபால் வளாகத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வந்தது.
- வளையங்காடு பஸ் ஸ்டாப் அருகில், நம்பர், 14, சாய்பாபா நகர், வளையங்காடு என்ற முகவரியில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர், ஆக.2-
குமார்நகர் தபால் நிலையம், நிர்வாக காரணங்களுக்காக, காந்திநகர் தபால் வளாகத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வந்தது.
தற்போது, இடமாற்றம் செய்யப்பட்டு, வளையங்காடு பஸ் ஸ்டாப் அருகில், நம்பர், 14, சாய்பாபா நகர், வளையங்காடு என்ற முகவரியில் இன்று (2ம் தேதி) முதல் செயல்படும். புதிய முகவரியில் மக்கள் தபால் சேவையை பெறலாம்.
என திருப்பூர் தபால் கோட்ட கண்காணிப்பாளர் விஜயதனசேகர் தெரிவித்துள்ளார்.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் 12 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
- புதிய பணியிடத்தில் உடனடியாக பணியேற்க வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதா–வது:-
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக துணை ஆய்வுக்குழு அலுவலராக பணியாற் றிய மார்டின் ராஜன் கலெக்டர் அலுவலக மேலாளர் (பொது) பணியிடத்திற்கும், தொண்டி தனி வட்டாட்சியர் அலகு 2-ல் பணியாற்றிய ஸ்ரீதரன் ராமநாதபுரம் வட்டாட்சியராகவும், முதுகு ளத்தூர் தனி வட்டாட்சியராக பணியாற்றிய தென்னரசு ஆர்.எஸ்.மங்கலம் வட்டாட்சியராகவும்,
பரமக்குடி தனித்துணை வட்டாட்சியர் அலுவலக பணியாற்றிய காதர் மைதீன் தனி வட்டாட்சியராக ஆதிதிராவிடர் நலப்பிரிவிற் கும், பரமக்குடி தனி வட்டாட்சியராக பணியாற் றிய சடையாண்டி முதுகுளத்தூர் வட்டாட்சியராகவும், முதுகுளத்தூர் தேர்தல் தனி துணை வட்டாட்சியர் சாந்தி ஆதிதிராவிடர் நலப்பிரிவிற்கும், ஆர்.எஸ்.மங்கலம் வட்டாட்சியர் சிரோன் மணி, தனி வட் டாட்சியர் அலகு-2 பிரிவிற்கும்,
ராமநாதபுரம் தனி வட்டாட்சியர் ஜமால் முகம்மது ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக துணை ஆய்வுக் குழு அலுவலராக வும், கடலாடி முன்னாள் வட்டாட்சியர் பரமசிவம் ராம–நாதபுரம் உதவி மேலாளர் டாஸ்மாக் லிமிடெட் பிரி–விற்கும், முன்னாள் மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர் முக உதவியாளர் தனி வட் டாட்சியராக அலகு 4-ல் பணியாற்றிய முருகவேலு ராமநாதபுரம் உதவி ஆணையர் (ஆயம்) அலுவலக மேலாளராகவும், பரமக் குடி தனி வட்டாட்சியர் (கோவில் நிலங்கள்) இந்து அறநிலையத்துறை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் கழக தலைமை உதவியாளராக பணியாற்றிய சத்திய பாமா பரமக்குடி தனி வட்டாட்சியர் (இந்து அற–நிலையத்துறை) நியமிக் கப்பட்டுள்ளனர். இந்த உத்த–ரவு உடனடியாக அமுலுக்கு வருகிறது.
இந்த உத்தரவு குறித்து விடுப்பு விண்ணப்பமோ, முறையீடோ ஏற்றுக் கொள் ளப்படமாட்டாது. பணி நியமனம் பெற்றவர் புதிய பணியிடத்தில் உடனடியாக பணியேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- 10 பேர் இணை இயக்குனர்களாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
- சுல்தானா சென்னை நகராட்சிகளின் நிர்வாக இயக்குனரக இணை இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர்:
தமிழகத்தில் நகராட்சிகளின் நிர்வாக இயக்குனரகத்தில் 10 பேர் இணை இயக்குனர்களாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி திருப்பூர் மாநகராட்சி துணை ஆணையாளராக இருந்த சுல்தானா சென்னை நகராட்சிகளின் நிர்வாக இயக்குனரக இணை இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- அருங்காட்சியக கமிஷனர் சுகந்தி உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சிறப்பு செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
- ஒழுங்கு நடவடிக்கை கமிஷனர் உமாசங்கர், தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புதிய முயற்சிகள் நிறுவன இயக்குனராக மாற்றப்பட்டார்.
சென்னை:
தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கமிஷனராக இருந்த தாரேஸ் அகமது சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அவர் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கமிஷனராக முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார். சமூக பாதுகாப்பு திட்ட கமிஷனர் வெங்கடாச்சலம் நில சீர்திருத்த கமிஷனராக மாற்றப்படுகிறார். அவர் நில சீர்திருத்த இயக்குனர் மற்றும் நகர்ப்புற நில உச்சவரம்பு மற்றும் நகர்ப்புற நிலவரி அலுவல் சாரா இயக்குனராகவும் முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார்.
தமிழ்நாடு பண்டகசாலை கழக மேலாண் இயக்குனர் சிவஞானம் பொது மற்றும் மறுவாழ்வு துறையின் கூடுதல் செயலாளராக மாற்றப்படுகிறார். பொது மற்றும் மறுவாழ்வு துறை சிறப்பு செயலாளர் கலையரசி வருவாய் நிர்வாக கூடுதல் கமிஷனராக நியமிக்கப்படுகிறார். அறிவியல் நகர தலைவர் மலர்விழி நீர்வளத்துறை கூடுதல் செயலாளராக நியமிக்கப்படுகிறார். அருங்காட்சியக கமிஷனர் சுகந்தி உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சிறப்பு செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புதிய முயற்சிகள் நிறுவன இயக்குனர் சந்திரகலா ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்ட இயக்குனராக நியமிக்கப்படுகிறார். ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்ட இயக்குனரும், சமூக நல கமிஷனராக முழு கூடுதல் பொறுப்பு வகித்த அமுதவள்ளி சமூக நல கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார். சமூக நலன் மற்றும் பெண்கள் அதிகாரம் அளித்தல் துறையின் கமிஷனராக ஜெயகாந்தன் மாற்றப்பட்டதாக பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து செய்யப்படுகிறது.
ஒழுங்கு நடவடிக்கை கமிஷனர் உமாசங்கர், தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புதிய முயற்சிகள் நிறுவன இயக்குனராக மாற்றப்பட்டார். நீர்வளத்துறை கூடுதல் செயலாளராக இருந்த மகேஸ்வரி ரவிக்குமார் விடுமுறை நிறைவடைந்ததைத்தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் செயல் இயக்குனர் சிம்ரஞ்சித் சிங் கஹ்லோன் நகராட்சி நிர்வாக துணை இயக்குனராக மாற்றப்பட்டு இருக்கிறார். புவியியல் மற்றும் சுரங்கத்துறை கமிஷனர் ஜெயகாந்தன் ஊரக மேம்பாடு மற்றும் ஊராட்சித்துறை சிறப்பு செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார். வாழ்ந்து காட்டுவோம் திட்ட தலைமை செயல் அதிகாரி பத்மஜா பொதுத்துறை துணை செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதல் செயலாளர் கஜலட்சுமி தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைகள் கழகத்தின் மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்படுகிறார். உயர்கல்வித்துறை கூடுதல் செயலாளர் பழனிச்சாமி தமிழ்நாடு பண்டகசாலை கழகத்தின் மேலாண்மை இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். நகராட்சி நிர்வாக கூடுதல் இயக்குனர் லலிதா சென்னை மாநகராட்சியின் கூடுதல் கமிஷனராக (வருவாய் மற்றும் நிதி) மாற்றப்பட்டு உள்ளார்.
சென்னை மாநகராட்சியின் துணை கமிஷனராக (வருவாய் மற்றும் நிதி) ஆனந்த் மோகனை நியமித்த அரசாணை ரத்து செய்யப்படுகிறது. அவர் நாகர்கோவில் மாநகராட்சி கமிஷனராக தொடர்ந்து செயல்படுவார். திருவள்ளூர் கூடுதல் கலெக்டர் ரிஷப் திருவண்ணாமலை கூடுதல் கலெக்டராக மாற்றப்பட்டார். தஞ்சை மாவட்ட கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா திருவள்ளூர் மாவட்ட கூடுதல் கலெக்டராக மாற்றப்பட்டார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கடந்த மாதம் 26ந்தேதி, பி.டி.ஓ.,க்கள் இடமாறுதல் உத்தரவு வெளியானது.
- பணியிட மாறுதல் செய்யப்பட்டவர்களில், 6 பேருக்கு மீண்டும் இடமாறுதல் வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூர்
கடந்த வாரம், 23 பி.டி.ஓ.,க்கள் இடமாறுதல் செய்யப்பட்ட நிலையில், அவர்களில் 6 பேருக்கு மீண்டும் இடமாறுதல் வழங்கப்பட்டுள்ளது.
ஊரக வளர்ச்சித்துறையில் கடந்த மாதம் 26ந்தேதி, பி.டி.ஓ.,க்கள் இடமாறுதல் உத்தரவு வெளியானது. மொத்தம் 23 பி.டி.ஓ.,க்கள் இடமாறுதல் செய்யப்பட்டனர். இந்நிலையில் பணியிட மாறுதல் செய்யப்பட்டவர்களில், 6 பேருக்கு மீண்டும் இடமாறுதல் வழங்கப்பட்டுள்ளது.
பல்லடம் பி.டி.ஓ., ரமேஷ், அவிநாசி ஒன்றியத்துக்கும், அங்கிருந்த லீலாவதி காங்கயத்துக்கும் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். குடிமங்கலத்துக்கு இடமாறுதல் செய்யப்பட்ட பியூலா எப்சிபாய் பல்லடத்துக்கும் பல்லடத்துக்கு மாற்றப்பட்டிருந்த பிரியா கலெக்டர் அலுவலக (வளர்ச்சி) மேலாளராகவும் மாற்றப்பட்டுள்ளார்.
கலெக்டர் அலுவலக வளர்ச்சி பிரிவு மேலாளர் மகேந்திரன் குடிமங்கலம் பி.டி.ஓ.,வாகவும், காங்கயம் பி.டி.ஓ., ராகவேந்திரன் வெள்ளகோவிலுக்கும் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ளார்.
- திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் சத்யபிரியா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
- மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி:
திருச்சி மாநகரத்தில் செயல்படும் ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழில் நடப்பதாக புகார்கள் வருகின்றன. அவ்வப்போது விபச்சார தடுப்பு பிரிவு போலீசாரும் மேற்கண்ட மையங்களில் அதிரடி சோதனை நடத்தி அப்பாவி பெண்களை மீட்டு வருகின்றனர். இந்நிலையில் பாலியல் தொழிலை தடுக்க தவறியதாக, திருச்சி மாநகர விபச்சார தடுப்பு பிரிவு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் ராஜ்மோகன், பால சரஸ்வதி, ஏட்டு அசாலி ஆகிய மூவரையும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து, திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் சத்யபிரியா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு கலெக்டர் அலுவலக சாலையில் மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் வெளி மாநில அழகி உட்பட 3 பேர் மீட்கப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
- நாமக்கல் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவசுப்பிரமணியன், திருச்சி மாவட்டம் லால்குடி வருவாய் கோட்டாட்சிய ராகவும், முசிறி வருவாய் கோட்டாட்சியர் மாதவன், நாமக்கல் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவி யாளராகவும் நியமிக்கப் பட்டுள்ளனர்.
- 3 துணை கலெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவசுப்பிரமணி யன், திருச்சி மாவட்டம் லால்குடி வருவாய் கோட்டாட்சிய ராகவும், முசிறி வருவாய் கோட்டாட்சியர் மாதவன், நாமக்கல் மாவட்ட கலெக்ட ரின் நேர்முக உதவி யாளராகவும் நியமிக்கப் பட்டுள்ளனர். அதேபோல, நாமக்கல் மாவட்ட கலால் உதவி ஆணையர் செல்வி, திருப்பூர் மாவட்ட தனித்துணை கலெக்டராக வும் (சமூக பாதுகாப்புத் திட்டம்), கோவை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவி யாளர் (நிலம்) பால கிருஷ்ணன், நாமக்கல் மாவட்ட கலால் உதவி ஆணையராகவும் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், நாமக்கல் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) நடேசன், கோவை மாவட்ட மேலாளராக (சில்லரை விற்பனை) தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்திற்கு (தெற்கு) மாற்றப்பட்டுள்ளார்.
- உறவினர்கள், கூலித்தொழிலாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சாப்பிட்டு வந்தனர்.
- மன நோயாளிகள் பிரிவில் மருந்து வழங்கும் இடத்தில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது.
ஈரோடு,
ஈரோடு அரசு மருத்துவமனை பின்புறம் அம்மா உணவகம் கடந்த 7 ஆண்டுகளாக ஈரோடு மாநகராட்சி சார்பில் இயங்கி வந்தது. இங்கு அரசு மருத்துவமனை நோயாளிகள், அவரது உறவினர்கள், கூலித்தொழிலாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சாப்பிட்டு வந்தனர்.
குறைந்த விலையில் நிறைவான சாப்பாடு கிடைப்பதால் இங்கு எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும்.
இந்நிலையில் அரசு மருத்துவமனை பின்புற பகுதியில் பல கோடி மதிப்பில் பல்துறை மருத்துவமனை மைய கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.
இந்நிலையில் இந்த பணிக்காக இடம் தேவைப்பட்டதால் அம்மா உணவக கட்டிடத்தை இடிக்க மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக மாநகராட்சி இடம் முறையாக அனுமதி பெற்றது. இதனைத் தொடர்ந்து அம்மா உணவக கட்டிடம் இடிக்கப்பட்டது.
இதனையடுத்து தற்போது தற்காலிகமாக அரசு மருத்துவமனை மன நோயாளிகள் பிரிவில் மருந்து வழங்கும் இடத்தில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. அங்கு உணவு பரிமாறப்பட்டு வருகிறது.
இந்த இடத்தையும் விரைவில் காலி செய்யுமாறு மருத்துமனை நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. இதனையடுத்து அம்மா உணவகத்திற்கு வேறு இடத்தில் இடம் தேர்வு செய்யப்பட உள்ளது.
- திருச்சி மாவட்டத்தில் 4 உதவி கலெக்டர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்
- தமிழகம் முழுவதும் 25 இடங்களில் உதவி கலெக்டர் இடமாற்றம்
திருச்சி,
திருச்சி உதவி கலெக்டராக பணியாற்றி வரும் கோ. தவச் செல்வத்துக்கு பதிலாக மதுரை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரா.பார்த்திபன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோன்று லால்குடி உதவி கலெக்டர் வைத்தியநாதனுக்கு பதிலாக நாமக்கல் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சிவசுப்பிரமணியனும், முசிறி உதவி கலெக்டர் மாதவனுக்கு பதிலாக சென்னை கன்னியாகுமரி தொழில்நுட்பத் திட்டம் மறு பகிர்மான அலுவலர் (ராஜன்) என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஸ்ரீரங்கத்தில் காலியாக உள்ள உதவி கலெக்டர் பணியிடத்திற்கு கரூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தட்சிணாமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவினை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜயந்த் பிறப்பித்துள்ளார். இதேபோன்று தமிழக முழுவதும் மொத்தம் 25 இடங்களில் உதவி கலெக்டர்கள் மாற்றப்பட்டுள்ளார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்