search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வளர்ச்சி பணி"

    • ஊராட்சி ஒன்றிய வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காஜாமைதீன் பத்தே நவாஸ், சூரியகுமாரி, உள்பட பலர் உடனிருந்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்டப்பட்ட பெரிய வள்ளிக்குளம் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.6.09 லட்சம் மதிப்பில் 116-வது காலனியில் பேவர்பிளாக் அமைக்கும் பணிகளையும், ரூ.6.18 லட்சம் மதிப்பில் பள்ளி மாணவிகளுக்கான கழிவறை கட்டிடம் கட்டப்பட்டு வரும் பணி களையும், பெரிய வள்ளி குளம் கிராமத்தில் ரூ.8.47 லட்சம் மதிப்பில் ராமசாமி புரம் ஊரணியில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணியி னையும், ரூ.6.09 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணிகளை கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட் டார்.

    பாலவநத்தம் கிரா மத்தில், தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் ரூ.1.57 லட்சம் மதிப்பில் சமுதாய கழிவறை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பணியினையும், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் ரூ.2.40 லட்சம் மதிப்பில் வீடுகட்டும் பணியினையும், மலைப் பட்டி கிராமத்தில், 2020-23 பாரளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பில் ஊரணிக்கு வடக்கு திசையில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணி யினையும், ரூ.12.80 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு வரும் பணியினையும் கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் நடைபெற்று வரும் பணிகளை விரை வாகவும், தரமாகவும் முடிக்கு மாறு சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காஜாமைதீன் பத்தே நவாஸ், சூரியகுமாரி, உள்பட பலர் உடனிருந்தனர்.

    • தொடக்கப் பள்ளியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.7.20 லட்சம் மதிப்பீட்டில் சமையல் கூடம் அமைக்கப்படுகிறது.
    • ரூ.16.03 லட்சம் மதிப்பீட்டில் வாரச்சந்தை வளாகம் சீரமைப்பு என பணிகள் நடைபெற்று வருகிறது.

    திருப்பூர்:

    அவிநாசி ஒன்றியம், பழங்கரை ஊராட்சி பச்சாபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.7.20 லட்சம் மதிப்பீட்டில் சமையல் கூடம் அமைத்தல், அவிநாசி பேரூராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் விரிவான பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.30.10 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    மேலும், பழங்கரை ஊராட்சியில் ரூ.4.95 லட்சம் மதிப்பீட்டில் பெரியாயிபாளையம் சாலை முதல் காமராஜா் நகா் 7-ஆவது வீதி வரை கான்கிரீட் சாலை, ரூ.16.03 லட்சம் மதிப்பீட்டில் வாரச்சந்தை வளாகம் சீரமைப்பு என ரூ.58.28 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    மேற்கண்டப் பணிகளை ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் பஆய்வு செய்தாா். மேலும், வளா்ச்சித் திட்டப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். ஆய்வின்போது, அவிநாசி வட்டாட்சியா் சுந்தரம், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரமேஷ், விஜயகுமாா், உதவி பொறியாளா்கள் செந்தில்குமாா், மனோஜ்குமாா் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

    • சிவகாசி பகுதிகளில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • வட்டாட்சியர் லோகநாதன் உள்பட பலர் உடனிருந்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகள் குறித்து கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சிவகாசி ஊராட்சி ஒன்றியம், காரிசேரி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.7.43 லட்சம் மதிப்பில் மத்திய சேனை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சமையல்கூடம் கட்டப்பட்டு வருவதையும், காரிசேரி கிராமத்தில் ரூ.60 ஆயிரம் மதிப்பில் உறிஞ்சுகுழிகள் அமைக்கப்பட்டுள்ள பணிகளையும், 15-வது மானிய நிதிக்குழுவின் கீழ் ரூ.65 ஆயிரம் மதிப்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புனரமைக்கப்பட்டுள்ள சமையல் கூடத்தினையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    மேலும் மேலஆமத்தூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.14.5 லட்சம் மதிப்பில் சேர்வைக்காரன்பட்டி கண்மாய் வரத்துக்கால்வாய் தூர்வாரப்பட்டு வரும் பணிகளையும், சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.31.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் வகுப் பறை கட்டிடங்களையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்குமாறு சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின் போது, திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) தண்டபாணி, வட்டாட்சியர் லோகநாதன் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • நபார்டு 2022-2023 திட்டத்தின் கீழ் தார் சாலை அமைக்க பூமிபூஜை நடைபெற்றது.
    • பேரூராட்சி தலைவர் கண்ணம்மாள் தலைமை தாங்கினார்.

    குண்டடம் :

    குண்டடம் ருத்ராவதி பேரூராட்சிக்குட்பட்ட 2-வது வார்டு கத்தாங்கண்ணி ஆதிதிராவிடர் காலனி முதல் பேரூராட்சி எல்லை வரை உள்ள மண் சாலையை தார் சாலையாக மாற்ற நபார்டு 2022-2023 திட்டத்தின் கீழ் தார் சாலை அமைக்க பூமிபூஜை நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் கண்ணம்மாள் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் மீனாகவுரி முன்னிலை வகித்தார். தார்ச்சாலை அமைக்கும் பணிகளை பேரூராட்சி துணைத்தலைவர் மோகன்ராஜ் தொடங்கி வைத்தார். இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள், ஒப்பந்ததாரர்கள் உள்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • சாத்தூர் யூனியனில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • ரூ.3.58 லட்சம் மதிப்பில் சுற்று கம்பி வேலி அமைத்தல் மற்றும் நீர் ஆதாரம் அமைத்தல் பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெங்கடாசலபுரம் மற்றும் சடையம்பட்டி ஊராட்சி களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் நடை பெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வெங்கடாசலபுரம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சித் திட்டம் மூலம் ரூ.5.61 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் கதிரடிக்கும் தள பணிகளையும், கே.கே.நகர் பகுதியில் ரூ.11.56 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தையும் கலெக்டர் பார்வையிட்டார். சடையம்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சித் திட்டம் மூலம் ரூ.3.58 லட்சம் மதிப்பில் சுற்று கம்பி வேலி அமைத்தல் மற்றும் நீர் ஆதாரம் அமைத்தல் பணிகளையும் கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது, சாத்தூர் கோட்டாட்சியர் அனிதா, உதவி செயற்பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • பல்வேறு திட்ட பணிகள் குறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் தாரேஸ் அகமது ஆய்வு செய்தார்.
    • ரூ.46.57 லட்சம் மதிப்பீட்டில் 1,200 மீட்டர் சாலை அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், தில்லையேந்தல் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகள் குறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் தாரேஸ் அகமது, கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சாலை, குடிநீர், தெருவிளக்கு வசதி, முதியோர் உதவித்தொகை மற்றும் அடிப்படை வசதி குறித்து ஆய்வு செய்ததுடன் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆணையர் தாரேஸ் அகமது பொதுமக்களிடம் வீடு, வீடாக சென்று கேட்டறிந்தார்.

    முன்னதாக மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பார்த்திபனூர் பகுதியில் பயனாளிகளுக்கு நடமாடும் வாகனம் மூலம் சிகிச்சைகள் மற்றும் மருந்து, மாத்திரைகள் அளிக்கப்படுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பரமக்குடி ஊராட்சி ஒன்றியம் அரியனேந்தல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய பொது நிதி திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பீட்டில் மாசு நீர் சுத்திகரிப்பு பணி நடைபெற்று வருவதையும், அரியனேந்தல் ஆதிதிராவிடர் காலனியில் 15-வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் மகளிர் சுகாதார வளாகம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதையும், இந்திரா நகர் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சத்து 41 ஆயிரம் மதிப்பீட்டில் செங்குத்து உறிஞ்சிக்குழி பணிகள் நடைபெறுவதையும் பார்வையிட்டார்.

    நெல்மடுவலூர் ஊராட்சியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வட்டார பொது சுகாதார மையத்தின் கட்டுமான பணிகளையும், போகலூர் ஊராட்சி ஒன்றியம், பூவிளத்தூர் கிராமத்தில் தமிழ்நாடு கிராம சாலைகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் ரூ.46.57 லட்சம் மதிப்பீட்டில் 1,200 மீட்டர் தொலைவில் வணங்கானேந்தல் வழியாக பூவிளத்தூர் வரை சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரவீன் குமார், பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பரமசிவன், உதவி இயக்குநர் (தணிக்கை) அருள் சேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரமோகன், ரவி, போகலூர் செயற்பொ றியாளர் சுந்தரேசன், உதவி செயற்பொறியாளர்கள் அழகேசன், கல்யாண சுந்தரம், தில்லையேந்தல் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • வடிகால் வசதி ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டும்பணி மற்றும் பல்வேறு வளர்ச்சி பணிகளை நாகை மாவட்டதுணை ஆட்சியர் பிரிதிவிராஜ் ஆய்வு செய்தார்.
    • பணிகளை தரமாகவும் விரைவாகவும் முடிக்க அறிவுறுத்தினார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கோடியக்காடு ஊராட்சியில் சாலை பணிகள் வடிகால் வசதி ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டும்பணி மற்றும் பல்வேறு வளர்ச்சி பணிகளை நாகை மாவட்டதுணை ஆட்சியர் பிரிதிவிராஜ் ஆய்வு செய்தார். பணிகளை தரமாகவும் விரைவாகவும் முடிக்க அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது ஊராட்சி ஒன்றிய ஆணையர் (ஊராட்சி) பாஸ்கர், ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி, வார்டு உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

    • நாகர்கோவில் மாநகராட்சி 17-வது வார்டுக்குட்பட்ட இடங்களில் மேயர் மகேஷ் அதிகாரிகளுடன் ஆய்வு
    • நாகர்கோவில் மாநகராட்சி 9-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் சாலை சீரமைப்பு பணியை தொடங்கி வைத்தார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சி 17-வது வார்டுக்குட்பட்ட நடுக்காட்டு இசக்கி அம்மன் கோவில் தெரு, பார்வதிபுரம், நெசவாளர் காலனி உள்ளிட்ட இடங்களில் மேயர் மகேஷ் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது வீடுகளில் இருந்து கழிவு நீர் முறையாக வெளியேற்றப்பட வேண்டும். தெருக்களில் குப்பைகளை கொட்ட கூடாது என்று மேயர் வலியுறுத்தினார். மேலும், மோசமான சாலைகள், தெருக்கள் சீரமைக்க தேவையான மதிப்பீடுகள் தயார் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    பின்னர் நாகர்கோவில் மாநகராட்சி 9-வது வார்டுக்குட்பட்ட கிருஷ்ணன் கோவில் சன்னதி தெருவில் ரூ.11 லட்சம் செலவில் பேவர் பிளாக் சாலை சீரமைப்பு பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார் .

    பின்னர் மேயர் மகேஷ் நிருபர்களிடம் கூறுகையில்:-

    நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள 52 வார்டுகளை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக தூய்மைப்பணி மேற்கொண்டு வருகிறோம்.வார்டுகளில் செய்ய வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது. வருகிற 2-ந்தேதி நகர்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு குமரி மாவட்டம் வருகிறார் .அவரிடம் நாகர்கோவில் மாநகராட்சியில் மேற் கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறி நிதி கேட்கப்படும்.குடிநீர் பிரச்சனை உட்பட அடிப்படை பிரச்சி னைகளை தீர்க்கவும் நடவ டிக்கை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.

    நகர் நல அலுவலர் ராம்குமார், மண்டல தலைவர் செல்வகுமார், கவுன்சிலர்கள் கவுசிக் , ராமகிருஷ்ணன், பகுதி செயலாளர் ஷேக் மீரான், மாநகர துணை செயலாளர் வேல் முருகன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் எம்.ஜே.ராஜன், வட்ட செய லாளர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் குறித்த உறுதி மொழியினை எடுத்துக்கொண்டனர்.
    • திருப்பூர் மாவட்ட கலெக்டர், மாநகராட்சி ஆணையாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி மண்டலம் -4 வார்டு எண் 38, பிருந்தாவன் அவென்யூவில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் குறித்த உறுதி மொழியினை திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னைய்யா ஆகியோர் முன்னிலையில் பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் , மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    மேலும் மாநகரில் செயல்படுத்தப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா , நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னைய்யா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    • வளர்ச்சி திட்டப்பணிகளை தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனர் பொன்னையா ஆய்வு செய்தார்.
    • ஆய்வின் போது நகராட்சிகளின் திருப்பூர் மண்டல இயக்குனர், மண்டல பொறியாளர், பல்லடம் நகராட்சி தலைவர், ஆணையாளர், திமுக பொறுப்பாளர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் நகராட்சி பகுதியில், நகராட்சி நிர்வாகத் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனர் பொன்னையா ஆய்வு செய்தார். பல்லடம் வடுகபாளையம் குட்டையை ரூ.3.54. கோடியில் மேம்பாடு செய்து பூங்கா அமைக்கும் பணி, சின்னையா கார்டன் பகுதியில் ரூ.90 லட்சம் மதிப்பிலான பூங்கா மேம்பாட்டு பணி ஆகியவற்றை அவர் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது நகராட்சிகளின் திருப்பூர் மண்டல இயக்குனர் ராஜன், மண்டல பொறியாளர் பாலச்சந்திரன், பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார், ஆணையாளர் விநாயகம், நகர் திமுக பொறுப்பாளர் ராஜேந்திரகுமார், மற்றும் நகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    ×