search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலாளி"

    • ஒருவர் வீட்டில் தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்தார்.
    • அப்போது எதிர்பாரத விதமாக தவறி விழுந்தார்.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே பெருங்குடி மேலத்தெருவை சேர்ந்தவர் பக்கிரிசாமி (வயது54). விவசாய கூலித்தொழிலாளியான இவர் நேற்று திருவாரூர் சாமி மடத்தெருவில் உள்ள ஒருவர் வீட்டில் தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்தார்.

    பின்னர் மரத்தை விட்டு இறங்கிய போது அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

    உடனே அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு வந்து பக்கிரிசாமியை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் பக்கிரிசாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து திருவாரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நடைபயிற்சிக்கு சென்றவர்கள் ஒரு மரத்தில் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்
    • வறுவேல் அந்தோணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    என்.ஜி.ஓ.காலனி :

    சுசீந்திரம் போலீஸ் சரகத்துக்குட்பட்ட சொத்த விளை பகுதியைச் சேர்ந்தவர் வறுவேல் அந்தோணி (வயது 65), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ஜெசி லெட். இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அதன்பிறகு வறுவேல் அந்தோணி தனியாக வசித்து வந்தார்.

    அவரது 3 மகன்களும் வெளிநாட்டில் வேலையில் உள்ளனர். மகள் திருமணமாகி புத்தளம் பகுதியில் வசித்து வருகிறார். வறுவேல் அந்தோணிக்கு மது பழக்கம் இருந்து வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி அவர் காயம் அடைந்தார்.

    இதன் காரணமாகவும் மனைவி இறந்த சோகத்திலும் வறுவேல் அந்தோணி இருந்து வந்தார். நேற்று வீட்டில் இருந்து சென்ற அவர் இரவு வீட்டுக்கு வரவில்லை. இந்த நிலையில் இன்று காலை சொத்தவிளை கடற்கரை சாலையில் நடைபயிற்சிக்கு சென்றவர்கள், அங்குள்ள ஒரு மரத்தில் வறுவேல் அந்தோணி தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த னர். இதுகுறித்து சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுப்பையா மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்தனர். அவர்கள், வறுவேல் அந்தோணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில் வறுவேல் அந்தோணி தூக்குப் போட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    • கிணற்றின் அருகே வந்த போது திடீரென கால் தவறி கிணற்றுக்குள் விழுந்தார்.
    • தீயணைப்பு படையினர் சுமார் ½ மணி நேர போராட்டத்திற்கு பிறகு அருளை உயிருடன் மீட்டனர்

    கன்னியாகுமரி : 

    தக்கலை அருகே உள்ள முத்தலக்குறிச்சி போப் நகர் பகுதியில் வசிப்பவர் அருள். இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

    மது குடிக்கும் பழக்கம் உடைய அருள், நேற்று வழக்கம்போல் மது அருந்தி விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அந்த பகுதியில் உள்ள கிணற்றின் அருகே வந்த போது திடீரென கால் தவறி கிணற்றுக்குள் விழுந்தார்.

    இது குறித்து தெரியவந்ததும் பொதுமக்கள் மற்றும் பஞ்சாயத்து தலைவர் சிம்சன், தக்கலை போலீஸ் நிலையத்துக்கும் தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் அவர்கள் சம்பவ இடம் விரைந்து வந்தனர். தீயணைப்பு படையினர் சுமார் ½ மணி நேர போராட்டத்திற்கு பிறகு கிணற்றுக்குள் இருந்து அருளை உயிருடன் மீட்டனர். கிணற்றில் விழுந்த தொழிலாளியை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினரையும், தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியனையும் ஊர் மக்கள் பாராட்டினர்.

    • வாழப்பாடி அடுத்த சிட்டாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தி என்பவருக்கும், 16 ஆண்டுக்கு முன் திருமணமாகி, 12 வயதில் மகன் உள்ளான்.
    • மனைவி வர மறுத்ததால் மதுபோதையில் இருந்த தங்கராஜ் மனமுடைந்து, பூச்சிக்கொல்லி விஷத்தை குடித்துள்ளார்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அடுத்த

    நடுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழி லாளி தங்கராஜ் (வயது 38). இவருக்கும் வாழப்பாடி அடுத்த சிட்டாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தி என்பவருக்கும், 16 ஆண்டுக்கு முன் திருமணமாகி, 12 வயதில் மகன் உள்ளான்.

    தங்கராஜிற்கு குடிப்ப ழக்கம் ஏற்பட்டதால், கண வன் –மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதற்கிடையே, தீபாவளி பண்டிகை தருணத்தில், நடுப்பட்டியில் இருந்து சிட்டாம்பட்டியிலுள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு ஆனந்தி சென்றுள்ளார். ஒரு வாரம் கடந்தும் இவர் தனது கணவர் வீட்டிற்கு திரும்பவில்லை.

    இந்நிலையில், நேற்று மாலை, சிட்டாம்பட்டி யிலுள்ள மாமனார் வீட்டிற்கு சென்ற தங்கராஜ், தனது மனைவியை தன்னுடன் வீட்டிற்கு வரு மாறு அழைத்துள்ளார். மனைவி வர மறுத்ததால் மதுபோதையில் இருந்த தங்கராஜ் மனமுடைந்து, பூச்சிக்கொல்லி விஷத்தை குடித்துள்ளார்.

    மயங்கிக்கிடந்த இவரை மீட்ட உறவினர்கள், சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாப மாக உயிரிழந்தார். இது குறித்து வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனியார் நிறுவனத்தில் தங்கி கடந்த 3 மாதங்களாக தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கோவை 

    கோவை துடியலூரை அடுத்த நல்லம்பாளையத்தை சேர்ந்தவர் ஜகுகாரியா (வயது 42).

    இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் தங்கி கடந்த 3 மாதங்களாக தொழிலாளியாக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று ஜகுகாரியா அளவுக்க அதிகமாக மதுகுடித்ததாக தெரிகிறது. பின்ர் அவர் கைகளை கழுவுவதற்காக அருகில் உள்ள வரண்ட கிணறு அருகே சென்றார்.

    அப்போது திடீரென எதிர்பாராத விதமாக அவர் தவறி அந்த கினற்றில் விழுந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வடமாநில தொழிலாளி கொலை செய்யப்பட்டார்.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னவன் சம்பவ இடத்திற்கு சென்று கொலை குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சொக்கலிங்காபுரம் பகுதியில் ஏராளமான வடமாநில இளைஞர்கள் வீடு எடுத்து தங்கி உள்ளனர். இவர்கள் இங்குள்ள மில் மற்றும் தனியார் நிறுவனங்களிலும், சாலை அமைத்தல், கட்டிட வேலைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை சொக்கலிங்காபுரம் பகுதியில் வடமாநில இளைஞர்களிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இருபிரிவாக அவர்கள் கம்பு, கல் போன்றவற்றால் சரமாரியாக ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

    இதில் கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்ட 28 வயது மதிக்கத்தக்க வடமாநில தொழிலாளி படுகாயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ராஜபாளையம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னவன் சம்பவ இடத்திற்கு சென்று கொலை குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கள்ளக்காதலால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு பிரிந்தனர்.
    • பாபு கோபித்து கொண்டு வீட்டிற்குள் சென்றார்.

    கோவை

    கோவை மாவட்டம் காரமடை சாஸ்திரி நகரை சேர்ந்தவர் பாபு (வயது 42). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி கணவன்-மனைவி ஒன்றாக வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் பாபுவிற்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளகாதலாக மாறியதாக தெரிகிறது. இது நாளடைவில் அவரது மனைவிக்கு தெரியவந்தது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இதனால் இவரது மனைவி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பாபுவை பிரிந்து தனியாக சென்றார். சம்பவத்தன்று அவரது மனைவி, பாபுவின் வீட்டின் அருகே சென்றார். அப்போது பாபுவிற்கும் அவரது மனைவிக்கும் திடீரென தகராறு ஏற்பட்டது.

    இதனை பார்த்த பாபுவின் தாயார் அங்கு வந்து அவர்களை சமாதானம் செய்தார். அப்போது பாபு கோபித்து கொண்டு வீட்டிற்குள் சென்றார். அதன்பின்னர் அவர் வெகு நேரமாக கதவை திறக்கவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த அவரது தாயார் வீட்டின் கதவை தட்டினார். ஆனால் அவர் கதவை திறக்கவில்லை. உடனே கதவை உடைத்து உள்ளே சென்றார். அங்கு பாபு தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து காரமடை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மக்கள் குறைதீர்ப்பு முகாம் கூட்டம் இன்று மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமையில் நடந்தது.
    • 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ஒலிபெருக்கியுடன் கலெக்டர் அலுவலக த்துக்குள் நுழைய முயன்றார்.

    கோவை

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் கூட்டம் இன்று மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமையில் நடந்தது.

    பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தங்களது கோரிக்கைகள் சம்பந்தமான மனுக்களை கலெக்டரை நேரில் சந்தித்து அளித்தனர். இதனையொட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்நிலையில், 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ஒலிபெருக்கியுடன் கலெக்டர் அலுவலக த்துக்குள் நுழைய முயன்றார்.

    அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி ஒலிபெருக்கியை பறித்தனர். இதனால் கலெக்டர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் வேடப்பட்டி சத்யா நகரை சேர்ந்த ஜெகநாதன்(வயது55) என்பதும், ஆடு மேய்க்கும் தொழிலாளி என்பதும் தெரியவந்தது.

    அவர் தனது வீட்டில் 15 ஆடுகளை வைத்து வளர்த்து வந்துள்ளார். அந்த ஆடுகளில் 5 ஆடுகளை கடந்த 2019-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 3 பேர்விஷம் வைத்து கொன்றனர்.

    இதுகுறித்து ஜெகநாதன் வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் தனக்கு இழப்பீடு வழங்க கோரி 2019-ம் ஆண்டு முதல் பல தடவை மனு அளித்தும் இழப்பீடு வழங்காததால் தனது கோரிக்கை கலெக்டருக்கு கேட்கும் வகையில் ஒலிபெருக்கியுடன் வந்ததாக தெரிவித்தார்.

    • சிறுமி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார்.
    • ரவிக்குமார் சாக்லெட் தருவதாக சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி தனது வீட்டிற்கு அழைத்து சென்றார்.

    கோவை:

    கோவை அருகே உள்ள மலுமிச்சம்பட்டியை சேர்ந்த 7 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமி வீட்டின் அருகே சலவை தொழில் செய்து வரும் ரவிக்குமார் (வயது 44) என்பவர் வசித்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

    சம்பவத்தன்று சிறுமி தனது வீட்டு முன்பு விளையாடிக்கொண்டு இருந்தார். இதனை பார்த்த ரவிக்குமார் சாக்லெட் மற்றும் பிஸ்கட் தருவதாக சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி தனது வீட்டிற்கு அழைத்து சென்றார். பின்னர் அவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.

    இதில் வலி தாங்க முடியாமல் சிறுமி சத்தம் போட்டார். இதனால் பயந்த ரவிக்குமார் சிறுமியை வெளியே அனுப்பி வைத்தார்.

    வீட்டிற்கு சென்ற சிறுமியின் ஆடையில் ரத்த கறை இருப்பதை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் என்ன நடந்தது என்று கேட்டனர். அப்போது சிறுமி தனக்கு பக்கத்து வீட்டை சேர்ந்த ரவிக்குமார் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தார். இதனை கேட்டு அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து செட்டிப்பாளையம் போலீசில் புகார் செய்தனர்.

    புகாரின் பேரில் சாக்லெட், பிஸ்கட் கொடுத்து 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற ரவிக்குமாரை கைது செய்தனர்.

    பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.  

    • மர கிளைகள் உடைந்து காணப்பட்டதோடு, சாலையில் மழைநீர் தேக்கம் அடைந்தது.
    • திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பனியன் தொழிலாளியை அனுப்பி வைத்தனர்.

    வீரபாண்டி :

    திருப்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை கருமேகங்கள் சூழ்ந்து, சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. பல்வேறு பகுதிகளில் சூறாவளி காற்றில் பல மர கிளைகள் உடைந்து காணப்பட்டதோடு, சாலையில் மழைநீர் தேக்கம் அடைந்தது. இந்நிலையில் திருப்பூர் முருகம்பாளையம் சுண்டமெடு அம்பேத்கர் நகர் பகுதியில் பலத்த காற்று வீசியது. அப்போது சாலையோரம் இருந்த பனைமரம் பனியன் தொழிலாளியான ரங்கன் (வயது 45) என்பவர் வீட்டின் மீது விழுந்தது. இதில் வீட்டிலிருந்த ரங்கன் பலத்த காயமடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வீரபாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற வீரபாண்டி போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர்.

    ×