என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேகத்தடை"

    • திருப்பூர் செல்வதற்கான மாற்று வழித்தடம் என்பதால் வாகன ஓட்டிகள் அதிக அளவில் இந்த வழித்தடத்தை பயன்படுத்துகின்றனர்.
    • வேகத்தடை அமைப்பதற்கான பணிகள் தொடங்கவில்லை. இதனால் விபத்துக்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

    வீரபாண்டி:

    திருப்பூரில் இருந்து பல்லடம் செல்லும் சாலையில் நொச்சிபாளையம் செல்லும் சாலை ஏ.பி. நகர்., நொச்சிபாளையம், அவரப்பாளையம்,அல்லாளபுரம் ,உகாயனூர் வழியாக பொங்கலூர் செல்கிறது. இப்பகுதியில் பனியன் நிறுவனங்கள். தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்புகள் உள்ளிட்டவை அதிக அளவில் உள்ளன. திருப்பூர் செல்வதற்கான மாற்று வழித்தடம் என்பதால் வாகன ஓட்டிகள் அதிக அளவில் இந்த வழித்தடத்தை பயன்படுத்துகின்றனர். போக்குவரத்து நிறைந்த இந்த சாலையில் தினந்தோறும் விபத்துகள் அதிகரித்து வருவதால் ஏபி நகர்,தெற்கு வட்டாரப் போக்குவரத்து வாகன ஆய்வு செய்ய செல்லும் இடம், .நொச்சிப்பாளையம் ஆகிய மூன்று இடங்களிலும் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டது. கோரிக்கையை ஏற்று நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் வேகத்தடை அமைக்க முன் வந்தனர். இதற்காக 3 இடங்களிலும் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு நான்கு மாதங்களுக்கு மேல் ஆகின்றன. ஜல்லிக்கற்களும் இறுகி விட்டன. ஆனால் வேகத்தடை அமைப்பதற்கான பணிகள் தொடங்கவில்லை. இதனால் விபத்துக்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. எனவே இந்த 3 இடங்களிலும் வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • தேவையில்லாத இடங்களில் வேகத்தடை; அரசு பணம் வீணடிப்பு செய்யப்பட்டுள்ளது.
    • நுகர்வோர் நல சங்கம் சார்பில் காலாண்டு கூட்டம் நடந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நுகர்வோர் நல சங்கம் சார்பில் காலாண்டு கூட்டம் நடந்தது. ராமநாதபுரம் உதவி கலெக்டர் (பயிற்சி) நாராயணசாமி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    கீழக்கரை நகராட்சி துறை, மின்சாரத் துறை, வட்டார போக்குவரத்து துறை, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், துணை பதிவாளர், முதன்மை கல்வி துறை மற்றும் அரசு மருத்துவமனை உள்பட பல்வேறு துறைகளை சார்ந்த 22 கோரிக்கைகளை வலியுறுத்தி கீழக்கரை நுகர்வோர் நல சங்கத்தின் செயலாளர் செய்யது இபுராகீம் கலந்து கொண்டு பேசினார்.

    கீழக்கரை 21 வார்டு பகுதியில் மொத்தம் 105 வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலத்தில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நோய் பரவும் அபாயம் ஏற்படுவதுடன் முதியோர், மாணவ-மாணவிகள், வாகன ஓட்டுநர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

    விபத்தும் ஏற்படுகிறது. வேகத்தடை அமைக்க அரசு பணம் வீணடிக்கப்படுகிறது. ஆகவே கீழக்கரை நகராட்சி பொறியாளர் ஆய்வு செய்து தேவையில்லாத இடங்களில் உள்ள வேகத்தடைகளை அகற்ற வேண்டும்.

    கீழக்கரையில் இருந்து ராமநாதபுரம் செல்லும் இ.சி.ஆர். ரோடு சேதம் அடைந்துள்ளது. குறிப்பாக கண்ணாடி அப்பா பள்ளிக்கூடத்தில் இருந்து தோணி பாலம் வரை, பூங்காவில் இருந்து அமிர்தா பள்ளிக்கூடம் வரை சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    கீழக்கரை புதிய பஸ் நிலையத்திற்கு திருநெல்வேலி, சாயல்குடி, நாகூர், பட்டுக்கோட்டை பஸ்கள் பேருந்து நிலையத்திற்கு வருவதில்லை. இதனால் பயணிகள் பெரிதும் அவதியடைகின்றனர். இதை கண்காணிக்க போக்குவரத்து ஆய்வாளர் ஒருவரை நியமிக்கவும், தாலுகா அலுவலகத்தில் புறநகர் பஸ்களை நிறுத்தி செல்லவும், அங்கு வேகத்தடை அமைக்கவும் வலியுறுத்தப்பட்டது.

    நுகர்வோர் நலச்சங்க கோரிக்கைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கூடுதல் கலெக்டர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்தனர். இதில் மாவட்டத்தில் உள்ள நுகர்வோர் நல சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • வாகன ஓட்டிகளின் பயன்பாட்டிற்கு வந்தது
    • வேகத்தடை பணிகள் 3 மாதங்களுக்கு மேல் நிறைவு செய்யப்படாமல் இருந்து வந்தது

    கோத்தகிரி,

    கோத்தகிரி மேல்தட்டப்பள்ளம் பகுதியில் அமைக்கப்பட்ட வேகத்தடை பணிகள் 3 மாதங்களுக்கு மேல் நிறைவு செய்யப்படாமல் இருந்து வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதுகுறித்த செய்தி கடந்த 30-ந் தேதி அன்று மாலை மலரில் வெளியானது. இதனையடுத்து தட்டப்பள்ளம் பகுதியில் போடப்பட்ட வேகத்தடைக்கான பணி முழுவதுமாக முடிக்கபட்டு வாகன ஓட்டிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் வாகன ஓட்டிகள் மாலை மலர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.

    • தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன.
    • பிளாஸ்டிக்கிலான வேகத்தடை சிறிது, சிறிதாக உடைந்து போனது.

    பல்லடம் :

    பல்லடம் பஸ் நிலையத்தில் உடுமலை, பொள்ளாச்சி, மதுரை, கோவை, திருச்சி, போன்ற ஊர்களுக்கு செல்ல தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. தினமும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கல்வி, வேலை உள்ளிட்ட பணிகளுக்காக பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இந்தநிலையில் பல்லடம் பஸ் நிலையத்திற்குள் அமைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக்கிலான வேகத்தடை சிறிது, சிறிதாக உடைந்து போனது. தற்போது வேகத்தடை இல்லாததால் அதி வேகத்தில் இயக்கப்படும் பஸ்களால் விபத்துக்கள் ஏற்படுகிறது.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு பல்லடம் பஸ் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. எனவே பஸ் நிலையத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆனைக்கல்பாளையம் பகுதியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    மொடக்குறிச்சி:

    ஈரோடு அருகே உள்ள சோலார் அடுத்த புறவழி ச்சாலை பகுதியான ஆனை க்கல்பாளையம், 46 புதூர் பிரிவு சாலை, முத்து கவுண்டன் பாளையம் ரிங் ரோடு, பரிசல் துறை 4 ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கனவே வேகத்தடை அமைக்கப்பட்டு இருந்தது.

    இதனால் அந்த வழியாக பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அச்சமின்றி சென்று வந்தனர்.

    சில மாதங்களுக்கு முன்பு புறவழிச் சாலை பகுதியில் உள்ள அனைத்து வேக த்தடைகளும் ஜே.சி.பி. எந்திரத்தின் மூலம் அகற்ற ப்பட்டது.

    இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர். மேலும் அப்பகுதியில் விபத்து அபாயம் அதிகரித்து வந்தது.

    ஒரு சில விபத்துகளும் இந்த பகுதியில் நடப்பதாக பொதுமக்கள் புகார் கூறி வந்தனர்.

    மேலும் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வேகத்தடை இல்லாததால் வேகமாக சென்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் சாலைகளை கடக்க முடியாமல் பொது மக்கள் தவித்து வந்தனர்.

    எனவே இந்த பகுதியில் மீண்டும் வேகத்தடை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

    இந்நிலையில்  ஆனைக்கல்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் திடீ ரென சாலை மறியலில் ஈடு பட்டனர்.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் சரஸ்வதி எம்.எல்.ஏ., மொட க்குறிச்சி இன்ஸ்பெக்டர் தீபா மற்றும் போலீசார் சம்பவ இடத்து க்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடு பட்டனர்.

    இதில் சரஸ்வதி எம்.எல்.ஏ. அதிகாரிகளிடம் பேசி முக்கிய இடங்களில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். இதை யடுத்து அதிகாரிகள் விரை வில் வேகத்தடை அமைத்து தருவதாக உறுதியளித்தனர்.

    இதனை அடுத்து போரா ட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் அங்கு இருந்து கலை ந்து சென்றனர்.

    • விபத்தை தடுக்கும் நோக்கில், வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
    • வேகத்தடைகளுக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    கோவை,

    கோவை மாநகரில் ரேஸ்கோர்ஸ் முக்கிய பகுதியாகும். இங்கு நடைபயிற்சி மற்றும் ஓட்டப் பயிற்சி, சைக்கிளிங் என உடற்பயிற்சிக்காக தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கிறார்கள். இதன்காரணமாக ரேஸ்கோர்ஸ் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மேம்படுத்தப்பட்டு புதுப்பொலிவு பெற்று திகழ்கிறது.

    இங்கு இளைஞர்களுக்கு ஜிம், குழந்தைகளுக்கு விளையாட்டு பூங்கா மற்றும் கண்கவர் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ரேஸ்கோர்ஸ் எப்பொழுதும் பரபரப்பாகவே காணப்படுகிறது.

    ரேஸ்கோர்ஸ் சாலையும் புதுப்பிக்கப்பட்டு வாகனங்கள் தங்கு தடையின்றி செல்ல வழி வகை செய்யப்பட்டுள்ளது. இதனால் இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள் சீறிப்பாய்ந்து செல்கின்றன. இவ்வாறு வாகனங்கள் வேகமாக செல்வதால் விபத்துகளும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. சில இடங்களில் பாதசாரிகள் ரோட்டை கடக்க முடியாமல் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள்.

    ேவகமாக செல்லும் வாகனங்களுக்கு கடிவாளம் போடும் வகையிலும், விபத்துகளை தடுக்கும் வகையிலும் முக்கிய இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும் என போலீசாருக்கு பொது மக்கள் கோரிக்கை விடுத்த னர். இதையடுத்து போலீசார் வேகத்தடை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்தனர். அதன்படி ரேஸ்கோர்சை சுற்றியுள்ள சாலையில் 5 இடங்களில் நேற்று நெடுஞ்சாலை துறையினர் வேகத்தடை அமைத்தனர்.வேகத்தடைகளுக்கு பொதுமக்களும், நடை பயிற்சி மேற்கொள்பவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறியதாவது:-

    இந்த சாலையில் காலை முதல் இரவு வரை அதிகமான வாகனங்கள் செல்கின்றன. மேலும் வாகனங்கள் அனைத்தும் அதிவேகமாக செல்வதால் தினமும் விபத்துகள் நடைபெற்று வந்தது.

    வேகத்தடை அமைக்கப்பட்டதால் இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் வேகத்தை குறைத்து செல்கின்றன. மேலும் எண்ணற்ற விபத்துக்கள் தவிர்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்.

    • 1500க்கும் மேற்பட்டமாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
    • பள்ளி முன்பு வேகத்தடை இல்லாததால் அடிக்கடி விபத்துக்கள் நிகழ்ந்து வந்தன.

    காங்கயம் :

    காங்கயம் தாராபுரம் மெயின்ரோட்டில் நகரின் பிரதான பகுதியான களிமேடு மற்றும் குதிரை பள்ளம் ரோடு பிரிவு அருகே காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 1500க்கும் மேற்பட்டமாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளி முன்பு நிழற்குடை மற்றும் வேகத்தடை அமைக்கப்படாமல் இருந்தது. இதனால் மாணவர்கள், பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்கள் அவதியடைந்தனர். மேலும் பள்ளி முன்பு வேகத்தடை இல்லாததால் அடிக்கடி விபத்துக்கள் நிகழ்ந்து வந்தன. இது குறித்து மாலைமலரில் செய்தி வெளியிடப்பட்டது. இந்தநிலையில் தற்போது அங்கு வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும்ரூ.9லட்சம் செலவில் அழகான விசா லமான முறையில் ஒரு நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. காங்கயம் நகராட்சி மற்றும் காங்கயம் ரோட்டரி டவுன் சங்கம் மூலம் இப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    • கே.ஜி.மில் அருகே அதிவேகமாக வந்த கார், வளைவில் திரும்ப முடியாமல் மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது.
    • சம்பந்தப்பட்ட இடங்களில் வேகத்தடை-டிவைடர் வைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வடவள்ளி,

    கோவை வடவள்ளி - தொண்டாமுத்தூர் ரோட்டில் கே.ஜி.மில் அருகே நேற்று இரவு அதிவேகமாக வந்த கார், வளைவில் திரும்ப முடியாமல் மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது. இதில் மின்கம்பம் சுக்குநூறாக நொறுங்கியது.

    எனவே மின்கம்பியில் பயங்கர தீப்பொறி கிளம்பியது. இதனை பார்த்த பொதுமக்கள் அங்கு வந்து பார்த்தனர். அப்போது காரில் இருந்த 4 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி பிழைத்தனர்.

    அவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொண்டாமுத்தூர் சாலையில் கடந்த வாரம் அதிகாலை கர்நாடக பஸ்- ஜீப் மோதி விபத்து நடந்தது. வடவள்ளி-தொண்டாமுத்தூர் சாலையில் வேகத்தடை இல்லை. எனவே அங்கு அதிவேகமாக வாகனங்கள் இயக்கப்படுகிறது.

    இதனால் போக்குவரத்து அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடங்களில் வேகத்தடை-டிவைடர் வைத்து, வாகன விபத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • அணுகுசாலை ,தேசிய நெடுஞ்சாலை, கிராம இணைப்பு ரோடு என ரோடு சந்திப்பில் தாறுமாறாக வாகனங்கள் கடக்கின்றன.
    • விபத்துகளை தவிர்க்க வாகனங்கள் வேகத்தை குறைத்து செல்லும் வகையில் பிளிங்கிரிங் சிக்னல் அமைக்கப்பட்டிருந்தது.

    உடுமலை:

    கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உடுமலை நகரத்தை கடந்ததும் ராகல்பாவி கிராமத்துக்கான இணைப்பு ரோடு பிரிகிறது. இப்பகுதியில் விபத்துகளை தவிர்க்க வாகனங்கள் வேகத்தை குறைத்து செல்லும் வகையில் பிளிங்கிரிங் சிக்னல் அமைக்கப்பட்டிருந்தது. இதனால் அப்பகுதியில் நெரிசலும் தவிர்க்கப்பட்டது. இந்நிலையில் நான்கு வழிச்சாலைக்கான அணுகுசாலை அமைக்கும் பணி அப்பகுதியில் துவங்கியது.

    பொள்ளாச்சி - திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் இருந்து தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் வகையில், இந்த அணுகுசாலை அமைக்கப்படுகிறது.இதனால் அணுகுசாலை ,தேசிய நெடுஞ்சாலை, கிராம இணைப்பு ரோடு என ரோடு சந்திப்பில் தாறுமாறாக வாகனங்கள் கடப்பதால் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    குறிப்பாக தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வரும் வாகனங்களால் விபத்து அபாயமும் நிலவுகிறது.அணுகுசாலை, நெடுஞ்சாலை இணையும் இடத்தில் பணிகள் நிறைவு பெறாத நிலையில் போக்குவரத்தும் அனுமதிக்கப்பட்டு குழப்பங்கள் அதிகரித்துள்ளது. இப்பிரச்சினைக்கு தீர்வாக ராகல்பாவி சந்திப்பு பகுதியில் மீண்டும் தானியங்கி சிக்னல் அமைக்க வேண்டும். அணுகுசாலை-தேசிய நெடுஞ்சாலை இணையும் இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும். நெரிசல் இல்லாமல் பஸ்களை நிறுத்தவும் தனியிடம் ஒதுக்க வேண்டும். இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுனர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • நீலகிரி மாவட்டத்திற்கு செல்ல மேட்டுப்பாளையம்- கோத்தகிரி சாலை முக்கிய வழித்தடமாக உள்ளது.
    • வேகத்தடைகளை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    கோத்தகிரி,

    நீலகிரி மாவட்டத்திற்கு செல்ல மேட்டுப்பாளையம்- கோத்தகிரி சாலை முக்கிய வழித்தடமாக உள்ளது. எனவே இந்த வழியாக செல்லும் பெரும்பாலான சுற்றுலா வாகனங்கள் அசுர வேகத்தில் பயணிக்கின்றன.

    கோத்தகிரி சாலையில் குறிப்பிட்ட சில பகுதிகளில் அபாயகரமான வளைவுகள் உண்டு. எனவே அங்கு செல்லும் உள்ளூர் வாகனங்கள் வாகனங்கள் வேகத்தை குறைத்து கவனத்துடன் செல்லும். ஆனால் வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா வாகனங்கள், அபாய வளைவுகள் இருப்பதை அறியாமல், அதிவேகமாக சென்று திரும்புகின்றன. இதனால் அந்த பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மேட்டுப்பாளையம்- கோத்தகிரி ரோட்டில் நெடுஞ்சாலைத்துறை வேகத்தடைகளை அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • 12 கிலோ மீட்டா் தொலைவுக்கு நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்து மையத் தடுப்பு வைக்கப்பட்டுள்ளது.
    • விபத்துகளை தடுக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலையில் வேகத் தடை அமைக்க வேண்டும்

    திருப்பூர்:

    பல்லடம் வழியாக செல்லும் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்லடம் முதல் காரணம்பேட்டை வரை 12 கிலோ மீட்டா் தொலைவுக்கு நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்து மையத் தடுப்பு வைக்கப்பட்டுள்ளது.

    சாலை விரிவாக்கத்துக்குப் பின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் காளிவேலம்பட்டி பிரிவு அருகே அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. ஒருசில விபத்துகளில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

    எனவே விபத்துகளை தடுக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலையில் காளிவேலம்பட்டி பிரிவு பகுதியில் வேகத் தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

    • தலை, முகம் உள்பட பல பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
    • ஆஸ்பத்திரியில் பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    சேலம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மீன்தொட்டி பஸ்டாப் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணா. இவரது மகன் பிரதீப் கண்ணா (வயது 27),

    இவர் சேலம் குகையில் உள்ள பர்பிகுயின் ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் ஓமலூரில் இருந்து சேலம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

    மோட்டார் சைக்கிள் சேலம் குரங்குச்சாவடி சந்தை அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள வேகத்தடையில் மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கிய போது பிரதீப் கண்ணா நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது தலை, முகம் உள்பட பல பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய படி அவர் கிடந்தார்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் 108 ஆம்புலன்ஸ் குழுவினர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் ஆஸ்பத்திரியில் ப ரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். தொடர்ந்து அவரது உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

    இது குறித்த தகவல் அவரது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம் விரைந்து வந்த அவர்கள் ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த பிரதீப்கண்ணாவின் உடலை பார்த்து கதறி அழுது புரண்டனர். இந்த சம்பவம் ஆஸ்பத்திரி வளாகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    இந்த விபத்து குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்திய போது, விபத்துக்கு காரணமான வேகத்தடையில் வெள்ளை பெயிண்ட் அடிக்காமல் இருந்ததும், இரவு நேரத்தில் பிரதீப் கண்ணா மோட்டார் சைக்கிளில் வந்தபோது வேகத்தடையை கவனிக்காமல் வந்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்து இறந்த சோக சம்பவம் அரங்கேறியதும் தெரியவந்தது.

    இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×