search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்கள் மறியல்"

    • கடந்த 3 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது.
    • காக்களூர் தொழிற்பேட்டையில் 350-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் இன்னும் தண்ணீர் வடியாமல் உள்ளது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டு உள்ளது.

    திருவள்ளூரை அடுத்த பாப்பரம்பாக்கம் அருகே உள்ள புதுவள்ளூர் பகுதியில் கடந்த 3 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொது மக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.

    மழை நின்றும் மின் இணைப்பு வழங்காததால் ஆத்திரம் அடைந்த புது வள்ளூர் பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு ஸ்ரீபெரும்புதூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் சமாதானம் பேசி கலைந்து போகச்செய்தனர்.

    திருவள்ளூர் அடுத்த காக்களூர் தொழிற்பேட்டையில் 350-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 6 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த தொழிற்பேட்டையில் உள்ள நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு காக்களூரில் உள்ள துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    புயல் காரணமாக கடந்த மூன்று நாட்களாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது. இதனால் தொழிற்சாலை நிர்வாகத்தினர் உற்பத்தி செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். இந்தநிலையில் மழை நின்ற பின்னரும் மின்சாரம் வழங்காததை கண்டித்து தொழிற்சாலை நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்கள் காக்களூர் துணை மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் மின்வாரிய அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.

    • குடிநீர், மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்பட்டு வந்தனர்.
    • சாலையின் இரு புறங்களிலும் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன.

    ஸ்ரீபெரும்புதூர்:

    படப்பை அருகே உள்ள செரப்பணஞ்சேரி ஊராட்சிக்குட்பட்ட நாவலூர் அரசு குடிசை மாற்று வாரியகுடியிருப்பில் 2800 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். பனப்பாக்கம் பகுதியில் இருந்து நாவலூர் குடியிருப்பு பகுதிக்கு செல்லும் சாலை பயன்படுத்த முடியாத அளவுக்கு குண்டும் குழியுமாக சேதம் அடைந்து உள்ளது.

    மேலும் குடிநீர், மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்பட்டு வந்தனர். இதுபற்றி அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 500-க்கும் மேற்பட்டோர் இன்று காலை திடீரென வண்டலூர்-வாலாஜாபாத் நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சாலையின் இரு புறங்களிலும் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஒரகடம் போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • நீர்நிலை ஆக்கிரமிப்பை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
    • ஒரு மணிநேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த உத்தண்டி கண்டிகை பகுதியில் தனியார் கண்டெய்னர் யார்டு முனையம் செயல்பட்டு வருகிறது. இப்பகுதிக்கு பொன்னேரி-மீஞ்சூர் டி.எச். சாலையில் இருந்து ½ கிலோ மீட்டர் தூரம் லாரிகள் செல்வதற்கு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்தநிலையில் சாலையின் குறுக்கே மழை நீர் கால்வாய் செல்வதால் அது அடைபட்டு அருகில் உள்ள பல ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்படும் எனவும் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை தடுக்க வேண்டும் என்றும் கூறி அப்பகுதி கிராமமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே இது தொடர்பாக விசாரிக்க அதே பகுதியை சேர்ந்த 2 பேரை மீஞ்சூர் போலீசார் அழைத்து சென்றதாக தெரிகிறது. நீண்ட நேரமாகியும் அவர்கள் திரும்பி வராததால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் உத்தண்டி கண்டிகை அருகே பொன்னேரி-மீஞ்சூர் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் நீர்நிலை ஆக்கிரமிப்பை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    தகவல் அறிந்ததும் மீஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காளிராஜ் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

    • குண்டும் குழியுமான சாலையால் மாணவ-மாணவிகளும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
    • கிராமமக்கள் உடனடியாக மறியல் போராட்டத்தை கைவிட மறுத்து தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    பொன்னேரி:

    சோழவரம் அடுத்த அத்திப்பேடு பகுதியில் இருந்து இருளிப்பட்டு வரை உள்ள 2 கிலோ மீட்டர் சாலை கடந்த 20 ஆண்டுகளாக சீரமைக்கப் படாமல் உள்ளது.

    இதனால் அந்த சாலை குண்டு குழியுமாக மாறி போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது. அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளங்களில் விழுந்து செல்லும் நிலை நீடித்து வருகிறது.

    குண்டும் குழியுமான சாலையால் மாணவ-மாணவிகளும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மழைகாலங்களில் நிலைமை படுமோசமாகி விடுகிறது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள், பள்ளி மாணவ-மாணவிகள் உட்பட சுமார் 500-க்கும் மேற்பட்டோர் சாலை அமைக்க கோரி இன்று காலை சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை அத்திப்பேடு சர்வீஸ் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ., ஆவடி உதவி கமிஷனர் குமரேசன்,சோழவரம் இன்ஸ்பெக்டர், ராதாகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமகிருஷ்ணன், முரளி ஆகியோர் விரைந்து வந்து கிராமமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    எனினும் கிராமமக்கள் உடனடியாக மறியல் போராட்டத்தை கைவிட மறுத்து தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன. இதனால் அப்பகுதியில் பரபரப்பான நிலை நீடித்து வருகிறது

    • 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
    • போலீசார் பேச்சுவார்த்தை

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த தக்கோலம் அருந்ததிபாளையத்தில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இப்பகுதியில் வசிக்கும் ஒருவர் தனது வீட்டுமனை யில் செல்போன் டவர் அமைக்க தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் போட்டுள்ளார். இதனால் ஊழியர்கள் டவர் அமைக்கும் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கியதாக கூறப்படுகிறது.

    செல்போன் டவர் அமைப்பதால் குழந்தை முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுவார்கள் எனக்கூறி அப்பகுதியை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர், தாசில்தார், பேரூராட்சி நிர்வாகம் மற்றும் போலீசாரிடம் கடந்த மாதம் மனு அளித்துள்ளனர்.

    சாலை மறியல்

    அந்த மனுவின் மீது எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் ஊழியர்கள் இரவோடு இரவாக டவர் அமைக்கும் பணியை தொடங்கி உள்ளனர்.

    இதனால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இன்று காலை தக்கோலம்-பேரம்பாக்கம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    அரசு, தனியார், தொழிற்சாலை, பள்ளி, கல்லூரி வாகனங்கள் செல்ல முடியாமல் அவதிப்பட்டன. காலை நேரம் என்பதால் இருபுறமும் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றது.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரக்கோணம் போலீஸ் ஏஎஸ்பி அசோக் கீரிஷ் மறியலில் ஈடுபட்ட வர்களுடன் சமரச பேச்சு வார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இந்த சாலை மறியலால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • இளைஞர் மேம்பாட்டு நிதி ஒரு லட்சத்து 90 ஆயிரத்தை முறையாக பயன்படுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.
    • இளைஞர் மேம்பாட்டு நிதி ஒரு லட்சத்து 90 ஆயிரத்தை முறையாக பயன்படுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.

    திருத்தணி:

    திருத்தணி அடுத்த தும்பிக்குளம் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் நிர்மலா. இவரது கணவர் கோபி. இந்த கிராமத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தை சீரமைக்க வேண்டும் என்று புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    மேலும் இளைஞர் மேம்பாட்டு நிதி ஒரு லட்சத்து 90 ஆயிரத்தை முறையாக பயன்படுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.

    இது குறித்து கிராம மக்கள் ஊராட்சி மன்றத் தலைவர் நிர்மலாவிடம் கேட்டபோது அவர் பதில் அளிக்காமல் அவரது கணவர் கோபி விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது. மேலும் பஸ் வசதி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து பொதுமக்கள் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ஊராட்சி தலைவராக உள்ள நிர்மலாவிற்கு பதிலாக அவரது கணவர் கோபி செயல்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளாததை கண்டித்தும் அப்பகுதியை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்டோர் திருத்தணி-நல்லாட்டூர் சாலையில் இன்று காலை திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் திருத்தணி இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர். இதனால் அப்பகுதி சிறி்து நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    • 34 ஏக்கர் நிலத்தை 5-வது சிப்காட் அமைக்க அரசு கையகப்படுத்தி வருகிறது. 34 ஏக்கர் நிலத்தை 5-வது சிப்காட் அமைக்க அரசு கையகப்படுத்தி வருகிறது.
    • பெண்கள் உள்பட 60 பேரை போலீசார் கைது செய்தனர்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகாவிற்கு உட்பட்ட உத்தனப்பள்ளி, அயர்னப்பள்ளி, நாகமங்கலம் ஆகிய 3 ஊராட்சிகளில் மொத்தம் 3 ஆயிரத்து 34 ஏக்கர் நிலத்தை 5-வது சிப்காட் அமைக்க அரசு கையகப்படுத்தி வருகிறது.

    இதற்கு விவசாயிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று காலை விவசாயிகள், பொதுமக்கள், விவசாய சங்க நிர்வாகிகள் ஆடு, மாடுகளுடன் உத்தனப்பள்ளியில் திரண்டனர்.

    அவர்கள் திடீரென கால்நடைகளுடன் ராயக்கோட்டை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி, ராயக்கோட்டை இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் விரைந்து வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது விவசாய நிலங்கள் கையகப்படுத்தும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து பெண்கள் உள்பட 60 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். 

    • பண்ருட்டி அருகே கிராம நிர்வாக அலுவலகத்தை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
    • ஆத்திரம் அடைந்த கிராம மக்கள்,கிராமநிர்வாகஅலுவலர்அலுவலகம்முன்பு திரண்டனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி வேகாக் கொல்லை கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் உள்ளது இந்த கிராம நிர்வாக அலுவலர்அலுவலகத்தை அதே பகுதியில் உள்ள அழகப்ப சமுத்திரம் ஊராட்சிசிறுதொண்டமாதேவிகிராமத்திற்கு மாற்றப்பட உள்ளதாகதகவல் பரவியது. ஆத்திரம் அடைந்த கிராம மக்கள்,கிராமநிர்வாகஅலுவலர்அலுவலகம்முன்பு திரண்டனர். பின்னர்கொள்ளு காரன் குட்டை- குள்ளஞ்சாவடி சாலையில்காட்டு வேகாகொல்லையில்சாலைமறியல்ஈடுபட்டனர்.இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    இது பற்றிய தகவல் அறிந்ததும் பண்ருட்டி தாசில்தார்சிவாகார்த்தி கேயன்,பண்ருட்டிபோலீஸ்இன்ஸ்பெக்டர்சந்திரன் மற்றும்காடாம்புலியூர்போலீசார்சம்பவஇடத்துக்குவிரைந்து சென்றனர்.பொதுமக்களிடம் பேச்சுவார்த்தைநடத்தினர். கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை மாற்று வதாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்பட வில்லை வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனபொதுமக்களிடம் தாசில்தார் விலக்கிகூறினார். இதனை தொடர்ந்து பொதுமக்கள்போராட்டத்தைவிலக்கிக்கொண்டனர் இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    • போக்குவரத்து பாதிப்பு

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாட்டறம்பள்ளி அடுத்த அக்ராவரம் பகுதியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பூபதி என்பவர் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வந்தார்.

    இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மற்றொரு ஊராட்சி செயலாளராக பணி மாற்றம் செய்யப்பட்டார். அருகில் உள்ள மல்லப்பள்ளி ஊராட்சி செயலாளர் ஒருவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.

    கடந்த 2 மாதங்களாக பொறுப்பு அவர் அக்ரா வரம் ஊராட்சி அலுவலகத்திற்கு சரியாக வருவதில்லை இதனால் அப்பகுதியில் உள்ள பணிகள் பாதிப்பு ஏற்பட்டது.

    ஊராட்சி மன்ற தலைவர் தேவேந்திரன் மற்றும் வார்டு உறுப்பினர் பெருமாள் உள்ளிட்ட அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்திற்கு நிரந்தர ஊராட்சி செயலாளரை நியமிக்க கோரி நேற்று காலை புதுப்பேட்டை நாட்டறம்பள்ளி செல்லும் சாலையில் அக்ரா வரம் பஸ் நிறுத்தம் அருகே திடீரென சாலை மறியல் செய்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் மற்றும் நாட்டறம்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது வட்டார வளர்ச்சி அலுவலரிடம் சிலர் நிரந்தரமாக ஊராட்சி செயலாளர் நியமிக்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் அங்கிருந்து பொது மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    ×