என் மலர்
நீங்கள் தேடியது "தவறி விழுந்து பலி"
- சம்பவத்தன்று சென்னியப்பன் வீட்டின் வாசலில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
- தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சென்னியப்பன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை அடுத்த அலிங்கியம், அர்ஜுன காலனி பகுதியை சேர்ந்தவர் சென்னியப்பன் (48).
இவர் சம்பவத்தன்று வீட்டின் வாசலில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சை க்காக சென்னியப்பன் கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சென்னியப்பன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து நம்பியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
காவேரிப்பாக்கம்:
காவேரிப்பாக்கத்தை அடுத்த முசிறி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 50), மரம் வெட்டும் கூலி தொழிலாளி.
இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக மரத்திலிருந்து தவறி கீழே விழுந்தார். இதில் ராஜேந்திரன் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை அப்பகுதியினர் மீட்டு வாலாஜா அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம் பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து காவேரிப்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தேங்காய் அறுக்கும் பணியின் போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
காவேரிப்பாக்கம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வ.உ.சி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் (வயது 42), தென்னை மரம் ஏறும் கூலி தொழிலாளி. இவர்ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே அத்திப்பட்டு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கடந்த 3 நாட்களாக தென்னை மரம் சீரமைப்பு பணி மற்றும் தேங்காய் அறுக்கும் வேலையை செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இவர் தென்னை மரத்தில் ஏறி தேங்காய் அறுத்துக் கொண்டிருந்தபோது கால் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியி லேயே செந்தில் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து செந்திலின் மனைவி சங்கீதா (36) காவேரிப் பாக்கம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கண் தெரியாத நிலையில் பரிதாபம்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மூக்கனூர் ஊராட்சி புதூர் அடுத்த அனுபவத்து வட்டம் பகுதியை சேர்ந்தவர் சின்ன பாப்பா (வயது 60) இவர் வயது முதிர்ந்து காரணமாக கண்பார்வை இல்லாமல் உள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத போது சின்ன பாப்பா வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார்.
அப்போது கண் பார்வை தெரியாத நிலையில் அவர் வீட்டின் பின்புறத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து இறந்து கிடந்தார். இதை அறிந்த இவரது குடும்பத்தினர் நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் பொறுப்பு கலைமணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் கிணற்றில் கிடந்த மூதாட்டி உடலை மீட்டனர்.
மேலும் இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து சின்ன பாப்பாவின் மருமகள் மனோன்மணி ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குடிபோதையில் கிணற்றுக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி விட்டார்.
- சென்னிமலை தீயணைப்பு துறையினர் உடனடியாக அங்கு சென்று உடலை தேடி மீட்டனர்.
சென்னிமலை:
சென்னிமலை அருகே மேலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (26). இவர் ஆட்டோ ஆக்டிங் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 5 வருடங்களுக்கு முன்பு விவாகரத்து ஆகியுள்ளது.
தற்போது வெங்கடேஷ் தாயாருடன் தனியாக வசித்து வருகிறார்.
குடிப்பழ க்கத்துக்கு அடிமையான அவர் சம்பவத்தன்று குடிபோதையில் மேலப்பாளையம் பகுதியில் ஊருக்கு பொதுவான கிணற்றுக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி விட்டார்.
இந்த கிணறு சுமார் 100 அடி ஆழம் உடையது. அதில் சுமார் 60 அடி தண்ணீரும் உள்ளது.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சென்னிமலை தீயணைப்பு துறையினர் உடனடியாக அங்கு சென்று உடலை தேடி மீட்டனர்.
இச்சம்பவம் குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- விருத்தாசலம் தர்மநல்லூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் தமிழ்வாணன்
- பஸ்சில் பின்பக்க படியில் நின்று பயணம் செய்தார்.
கடலூர்:
விருத்தாசலம் தாலுக்கா தர்மநல்லூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் தமிழ்வாணன் (வயது 25). இவர் தனியார் பஸ்சில் கிளீனராக பணிபுரிந்து வந்தார். இவர் அதே பஸ்சில் பின்பக்க படியில் நின்று பயணம் செய்தார். அப்போது எறும்பூர் பணஞ்சாலை அருகே வளைவில் பஸ் திரும்பிய போது தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தமிழ்வா ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சாகில் (வயது 23). எம்.பி.ஏ. படித்து முடித்து அடுத்த வாரம் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல இருந்தார்.
- தூசூர் ஏரி சாலை சந்திப்பில் வேகமாக திரும்பும் போது பஸ்சுக்குள் நின்று கொண்டிருந்த சாகில் தவறி பஸ்சில் இருந்து வெளியே விழுந்தார்.
நாமக்கல்:
நாமக்கல் பிடில்முத்து தெரு வை சேர்ந்தர் பாதுஷா. இவரது மகன் சாகில் (வயது 23). எம்.பி.ஏ. படித்து முடித்து அடுத்த வாரம் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல இருந்தார்.
பரிதாபமாக இறந்தார்
இந்த நிலையில் நேற்று சாகில் அலங்காநத்தம் சென்று விட்டு தனியார் பஸ்சில் நாமக்கல் நோக்கி வந்தார். தூசூர் ஏரி சாலை சந்திப்பில் வேகமாக திரும்பும் போது பஸ்சுக்குள் நின்று கொண்டிருந்த சாகில் தவறி பஸ்சில் இருந்து வெளியே விழுந்தார்.
இதில் பலத்தகாயம் அடைந்த சாகில் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சாகில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
டிரைவர் மீது வழக்கு
இது குறித்து அவரது தந்தை பாதுஷா நாமக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் தனியார் பஸ் டிரைவர் பாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெளிநாடு செல்ல இருந்த நிலையில் இளைஞர் பஸ்சில் இருந்து வெளியே விழுந்து இறந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- வேலைசெய்து கொண்டிருந்த போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளியை அடுத்த கல்நார்சம்பட்டி விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத் (வயது 45), தொழிலாளி.
இவர் அதேப்பகு தியில் புதிதாக கட்டப்படும் வீட்டு மாடியில் சென்ட்ரிங் வேலைசெய்து கொண்டு இருந்தார்.
அப்போது நிலை தடுமாறி மாடியில் இருந்து கீழே தவறி விழுந்து தலையில் காயம் ஏற்பட்டது.
அவரை சிகிச்சைக்காக திருப்பத் தூர் அரசு மருத்துவக் மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி ராதிகா நேற்று நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்- இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருச்சி அருகே மயான கிணற்றில் தவறி விழுந்து வெட்டியான் வேலை பார்த்த தொழிலாளி பலியானார்
- அதிக போதையில் இருந்த அவர், நான் சிறிது நேரம் கழித்து வந்துவிடுவேன் என்று கூறி அனுப்பிவிட்டார். ஆனால் இரவு 7 மணியாகியும் மணியன் வீடு திரும்பவில்லை
திருச்சி:
திருச்சியை அடுத்த போதாவூர் ஆதிதிராவிடர் காலனி கீழமேடு பகுதியை சேர்ந்தவர் மணியன் (வயது 50). கூலி வேலைக்கு செல்லும், போதாவூர் மயானத்தில் வெட்டியானாகவும், துக்க நிகழ்ச்சிகளில் மேளம் அடிக்கும் தொழிலும் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி கமலா என்ற மனைவி உள்ளார். குழந்தைகள் இல்லை.
இந்த நிைலயில் நேற்று முன்தினம் போதாவூர் ஜே.ஜே.காலனியை சேர்ந்த கண்ணியம்மாள் என்பவர் இறந்துவிட்டார். இதையடுத்து மயானத்திற்கு செல்வதாக கூறிச்சென்றனர், அங்கு பணிகளை முடித்துவிட்டு அளவுக்கு அதிகமாக மது அருந்தியுள்ளார்.
நடக்க கூட முடியாத நிலையில் போதையில் திளைத்த அவரை, உறவினரான சுந்தரம் என்பவர் வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். அதற்கு மறுத்த அவர், நான் சிறிது நேரம் கழித்து வந்துவிடுவேன் என்று கூறி அனுப்பிவிட்டார். ஆனால் இரவு 7 மணியாகியும் மணியன் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து காலையில் தேடிப்பார்த்தபோது, மயானத்தில் அருகிலுள்ள கைப்பிடி இல்லாத கிணற்றின் கரையில் மணியனின் செருப்பு கிடந்துள்ளது.
இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதியினர் கிணற்றுக்குள் இறங்கி தேடினர். அப்போது 40 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த மணியன் உடல் இறந்த நிலையில் மீட்கப்பட்டது.
மது போதையில் இருந்த அவர் கிணற்றுக்குள் தவறி விழுந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக சோமரசம்பேட்டை போலீசில் அவரது மனைவி கமலா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- எலி பிடிக்க செல்வதாக கூறி விட்டு கழிவுநீர் கால்வாய் பகுதிக்கு சென்ற ஆறுமுகம் குடிபோதையில் இருந்ததால் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்து இறந்தார்.
- சென்னிமலை போலீசார் ஆறுமுகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சென்னிமலை:
சென்னிமலை டவுன் அம்மாபாளையம் அன்பு நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (33). இவர் மீன்பிடித்தல், எலி பிடித்தல் போன்ற வேலைகள் செய்து வந்தார்.
இவரது மனைவி செல்வி. ஆறுமுகத்திற்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று இரவு ஆறுமுகம் தனது மனைவி செல்வியிடம் எலி பிடிக்க செல்வதாக கூறி விட்டு சென்னிமலையில் உள்ள காட்டூர் வழியாக செல்லும் கழிவுநீர் கால்வாய் பகுதிக்கு சென்றுள்ளார்.
அப்போது ஆறுமுகம் குடிபோதையில் இருந்ததால் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்து இறந்தார்.
இது குறித்து ஆறுமுகத்தின் மனைவி செல்வி கொடுத்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் ஆறுமுகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.