என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தனியார் நிறுவன ஊழியர்"
- அப்துல் ரஹிமான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கரு ங்கல்பாளையம் கமலா நகரை சேர்ந்தவர் பாபு. இவரது மகன் அப்துல் ரஹிமான் (வயது 29). இவர் ஒரு தனியார் கம்பெனியில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பாஷீரா (22).
இந்நிலையில் சம்பவத்தன்று அப்துல் ரஹிமான் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று வீடு திரும்பினார்.
பின்னர் மீண்டும் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் பாஷீரா தனது கணவரை ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக ஒரு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்து வமனைக்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த அப்துல் ரஹிமான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் இதுகுறித்து அவரது மனைவி பாஷிரா கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிள்கள் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
- நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி அருகே உள்ள நாலூர் பகுதியை சேர்ந்தவர் போஸ். இவரது மகன் அய்யனார் (வயது30). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவருக்கு திருமணமாகி சவுந்தர்யா (23) என்ற மனைவியும், 1 வயது பெண் குழந்தையும் உள்ளனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று அய்யனார் காரியாபட்டிக்கு சென்று விட்டு இரவில் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டார். காரியாபட்டி-இலுப்பை குளம் ரோட்டில் உள்ள எஸ்.மறைக்குளம் தொங்குட்டி ஊரணி அருகே வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது. இதில் அய்யனார் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அய்ய னார் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை ஆய்வு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாக னத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.
- பலியான சிமியோனுக்கு திருமணமாகி மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் புதுக்குடியிருப்பை சேர்ந்தவர் சிமியோன் (வயது 46). இவர் கன்னியாகுமரியில் உள்ள ஒரு கிறிஸ்தவ நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
இவர் கடந்த 4-ந் தேதி வேலைக்கு செல்வதற்காக சுசீந்திரம் புறவழி சாலையில் காக்குமூர் சந்திப்பில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சிமியோனை அக்கம் பக்கத்தினர் மீட்டு வடசேரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனு மதித்தனர்.
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த சிமியோன் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார்.
இதுதொடர்பாக சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிமியோன் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை ஆய்வு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாக னத்தை தீவிரமாக தேடி வருகின்றனர். பலியான சிமியோனுக்கு திருமணமாகி மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.
- முன்பக்க கதவை உடைத்து கைவரிசை
- கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடயங்களை சேகரித்தனர்.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள தோவாளை கமல்நகர் ரோஜா தெருவை சேர்ந்தவர் பாக்கிய சுப்பிரமணியம். இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அய்யம்மாள். இவர்தனது குழந்தையுடன் தோவாளையில் வசித்து வருகிறார்.
வீட்டின் மேல் மாடியில் அய்யம்மாளும் கீழ் பகுதியில் அவரது சகோதரி தயாவும் வசித்து வருகிறார்கள். தயாவின் கணவர் முருகானந்தம் மத்திய போலீஸ் படையில் வேலை செய்து வருகிறார்.
கணவர் சென்னையில் வேலை பார்ப்பதால் அய்யம்மாள் தனது குழந்தையுடன் தினசரி இரவில், சகோதரி தயா வீட்டில் படுத்து உறங்குவது வழக்கம். அதன்படி நேற்று இரவும் வீட்டை பூட்டி விட்டு தயா வீட்டிற்கு அய்யம்மாள் வந்து விட்டார்.
இன்று அதிகாலை அவர் தனது வீட்டிற்கு சென்று பார்த்த போது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அய்யம்மாள் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிகள் சிதறி கிடந்தது.
இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பீரோவில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் மற்றும் 12 பவுன் நகை கொள்ளை போய் இருப்பதாக போலீசாரிடம் அய்யம்மாள் தெரிவித்தார்.
அதன் பேரில் டவுன் துணை சூப்பிரண்டு நவீன்குமார் ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடயங்களை சேகரித்தனர். ஆள் நடமாட்டம் உள்ள குடியிருப்பு நிறைந்த பகுதியில் கொள்ளை சம்பவம் நடந்திருப்பது அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
- 4 அடி உயரம் 2½ அகலம் உள்ள வள்ளலாரின் உருவப்படம் அனைத்தும் சிறு சிறு பேப்பர் துண்டு களால் ஆனது.
- மொசைக் ஆர்ட் என்ற கலை வடி வத்தில் லூகாஸ் வள்ளலார் படத்தை உருவாக்கி உள்ளார்.
ஓசூர்,
வள்ளலாரின் பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் ஓசூரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் லூகாஸ் என்பவர் 5,000 சிறு சிறு பேப்பர் துண்டுகளை கொண்டு மொசைக் ஆர்ட்டில் வள்ளலாரின் உருவப்படத்தை வடிவ மைத்துள்ளார். திருவருட்பிரகாச வள்ள லார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார்,
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள மருதூர் கிராமத்தில் 1823 ஆண்டு அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி பிறந்தார். இவர் ஒரு ஆன்மீகவாதி, சத்திய ஞான சபையை நிறுவியவர், வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என பாடியவர், வள்ளலாரின் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 5- ந் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் வள்ளலாரின் 200-வது பிறந்த நாளை நினைவு கூறும் வகையிலும், அவ ருக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், ஓசூர் அருகே சின்ன எலசகிரி பகுதியில் வசித்து வரும் லூகாஸ் (33) என்ற தனியார் நிறுவன ஊழியர் 5,000 சிறு சிறு பேப்பர் துண்டுகளை கொண்டு மொசைக் ஆர்ட்டில் வள்ளலாரின் உருவப்படத்தை வடிவ மைத்துள்ளார். கடந்த ஒரு மாத காலமாக கடின உழைப்பால் இந்த உருவப்படத்தை அவர் உருவாக்கியுள்ளார்.
4 அடி உயரம் 2½ அகலம் உள்ள வள்ளலாரின் உருவப்படம் அனைத்தும் சிறு சிறு பேப்பர் துண்டு களால் ஆனது. மொசைக் ஆர்ட் என்ற கலை வடி வத்தில் லூகாஸ் வள்ளலார் படத்தை உருவாக்கி உள்ளார். நிறுவனத்தின் பணிகள் முடிந்த பின்னர் தனக்கு நேரம் கிடைக்கும்போது இந்த படத்தை உருவாக்கியதாக அவர் கூறினார்.
கோவை:
கோவை துடியலூர் அடுத்த டி.வி.எஸ் நகர் ரோடு, ராமகிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் ஸ்டீபன்(40). தனியார் நிறுவன மேலாளர். இவர் சம்பவத்தன்று தனது குடும்பத்துடன் பாலக்காட்டில் உள்ள தியான மையத்திற்கு சென்றார்.
பின்னர் நேற்று வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த டி.வி மற்றும் லேப்டாப்பை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஸ்டீபன் துடியலூர் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தியான மையத்திற்கு சென்ற தனியார் நிறுவன மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த திருடர்களை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்